Monday, February 19, 2007

அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்.

1. அமெரிக்காவில் நிகழும் சாலைவிபத்துகளில் குடித்துவிட்டு ஓட்டுபவர்களால் நிகழும் விபத்துகளின் சதவீதம்

a) 20 சதவீதம்
b) 30 சதவீதம்
c) 40 சதவீதம்
d) 50 சதவீதம்

2. ஒரு ஷாட் விஸ்கி என்பது எதற்கு சமம் என்றால்

a) ஒரு பாட்டில் பியர்
b) இரண்டு பாட்டில் பியர்
c) மூன்று பாட்டில் பியர்
d) நான்கு பாட்டில் பியர்

3. மரிஜிவானா என்பதை உட்கொண்டால்

a) நன்கு கார் ஓட்ட முடியும்
b) கார் ஓட்டுதலில் பல தவறுகள் நிகழும்.
c) ஒரு விளைவும் இல்லை.
d) கார் கட்டுப்பாட்டில் இருக்காது.

இந்த கேள்விகளுக்கும் எனது அமெரிக்க சாலைகளில் கார் ஓட்ட தேவையான அடிப்படையான அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

எனக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கு முன் டி.எம்.வி. (டிபார்ட்மெண்ட் ஆப் மோட்டார் வெஹிக்கிள்ஸ்) இல் கேட்கப்பட்ட கேள்விகள் இவை. (விடைகள் அறிந்தவர்கள் பின்னூட்டலாம்.)

இவற்றை முன்கூட்டியே படித்திருந்ததால் எழுத்து தேர்வில் தேறிவிட்டேன். பின்னர் ரோடு டெஸ்ட்.

அமெரிக்காவில் அதிகம் கார் ஓட்டி பழக்கம் இல்லை. இந்தியாவில் கியர் வைத்த கார் ஓட்டிய நமக்கு கியர் இல்லாத அமெரிக்க வண்டிகள் பிஸ்கோத்து என்ற எண்ணம் அதிகமிருந்தது.
அதனால முன்ன பின்ன ஓட்டி பழகாம நேராக போயாச்சு.

ரோடு டெஸ்ட்டுக்கு ஆபிசர் வந்தார்.

"இது உன் கார் ஓட்டும் திறனை கண்டறியும் சோதனை. வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்".

சரி. சரி. நாம இந்தியாவுல ஓட்டாத காரா என்ன.

நண்பர்கள் சொல்லியிருந்தபடி காரின் கண்ணாடியை சரி செய்ய முயன்றேன்.
இன்னாடா காரு இது. கண்ணாடியை அட்ஜஸ்ட் பண்ண சுவிச்சு எங்க இருக்குன்னு தெரியலையே. கஷ்டப்பட்டு கண்டுபிடித்து சரிசெய்தேன்.

சீட் பெல்ட் போட்டுக்கிட்டு "ரெடி ஆபிசர்."

"இப்ப காரை எடுத்து நான் சொல்ற மாதிரி ஓட்டி திரும்பி நாம இங்கே வரணும்"

"சரிங்க ஆபிசர்"

காரை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தேன்.

சிக்னல் போட வலது பக்கம் இருந்த நெம்புகோலை தட்ட கண்ணெதிரே வைப்பர்கள் ஆடின. அருகே ஆபிசர்.

இந்தியாவில் சிக்னலுக்கானது வலது பக்கம். பழக்க தோஷம். நொந்து கொண்டு அசடு வழிந்து இடது பக்க நெம்புகோலை தட்டி சிக்னல் போட்டு வெளியே எடுத்தேன்.

பின்னால் பாதசாரிகள் இருவர். எனக்காக சற்றே விலகி நின்றனர். அமெரிக்கா காரங்க ரொம்ம நல்லவங்கப்பா.

பிறகு வெளியே எடுத்து மெதுவாக ஆபிசர் சொன்னபடி ரோட்டிற்கு வந்து ஓட்ட ஆரம்பித்தேன்.

"வலது பக்கம் திரும்பு" என்றார் ஆபிசர்.

இடது பக்கம் திரும்பி ஒரு பாழடைந்த குடோனுக்குள் நுழைந்தேன் நான்.

"சாரி. சார்". மீண்டும் வழிசல்.

"பரவாயில்லை வண்டியை ரிவர்ஸ் எடுத்து வந்த இடத்துக்கே செலுத்து."

மீண்டும் டி.எம்.வி. நோக்கி வண்டி. "உள்ளே நுழை".

இவ்வளவுதான சிக்னலை இந்த முறை சரியாக போட்டு (!!!) உள்ளே நுழைய தயாரானேன்.

"இடது பக்கமாக நுழைகிறாய். வலது பக்கமாக நுழை."

சே. அமெரிக்காவில் வலது பக்கமாக தானே ஓட்ட வேண்டும்.

அப்பாடா உள்ளே போயாச்சு.

"ரிவர்ஸ் பார்க்கிங் ப்ளீஸ்".

ஐந்து நிமிட தீவிர முயற்சிக்குப்பின் வண்டியை பார்க்கியிருந்தேன்.

ஆபிசரை பார்த்தேன். உள்ளுக்குள் உலகமகா கேள்வி. எனக்கு லைசன்ஸ் உண்டா ? விடை எனக்கே தெரிந்திருந்தது.

படுதீவிரமாக எழுதி கொண்டிருந்தார்.

பிறகு அந்த காகிதத்தை என்னிடம் கொடுத்தார்.

இவருக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கப்படுகிறது. காரணங்களாவன....

1. வண்டியை கிளப்பும் போது கண்ணாடியில் படிந்திருந்த பனிப்படலத்தை நீக்கும் வழியை இவர் அறியவில்லை.
2. வண்டியின் கண்ட்ரோல்கள் எங்கு எங்கு உள்ளன என்பதை அறியவில்லை.
3. வண்டியை ஓட்டி நடைபயணிகளை கொல்ல முயற்சி.
4. ஓட்டும் போது லேன் மாற்றி ஓட்டியமை.
5. வளைவுகளில் மிக மெதுவாக ஓட்டியமை.
6. தடுக்காவிட்டால் இடது பக்கமாக வண்டி ஓட்டியிருப்பார்.
7. ஸ்டாப் சிக்னலில் ஸ்டாப் செய்யவில்லை.
8. பார்க்கிங்கின் போது பக்கத்து வண்டியை இடிக்க முயற்சி.

இவ்வளவு தப்பா. எங்க ஊருல நான் இன்னா சூப்பரா கார் ஓட்டுவேன் தெரியுமா.

இவங்க என்னடான்னா ரைட்டுல ஓட்டணும்னு தப்பு தப்பா ரூல்ஸ் வெச்சிக்னு நம்மள தப்பு சொல்றாங்க.

இப்பத்திக்கு எனக்கு உங்க லைசன்ஸே தேவையில்லைன்னு திரும்பி வந்துட்டேன்.

நம்ம ஊர்ல சரியா ஓட்டிக்கிட்டு இருந்த நான் இந்த ஊருக்கு தகுந்த மாதிரி தப்பு தப்பா ஓட்டி நெறைய பழகணுமாம். ம்ம்ம்.......

46 comments:

said...

அதுதானே! Give way Right of way இப்படி 108 ரூல். என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தான். ஹிஹி

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அண்ணா என்னங்னா இப்படி பயமுறுத்தறிங்க நான் இன்னிக்குதாங்னா லைசென்ஸ் அப்ளை பண்ணியிருக்கேன்.

உங்களுக்காச்சும் காரண காரியங்கள தெளிவா சொல்லியிருக்கானுங்க. இங்க அப்படி கிடையாது அரபில திட்டி பாதி வழில இறக்கி விட்ருவான்
என்ன காரணம்னே தெரியாம அடுத்த டெஸ்டுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இது ரொம்ப அ நியாயம்...என்னொட Driving Licence a ரெண்டு வருசத்திற்க்கு suspend பண்ணிடாங்கனு ரொம்ப சோகத்துலெ இருகேன்....இதுல நிங்க வேற ரவுச கொடுத்துகீட்டு....

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்த ஊர்ல அநியாயம் புடிச்சவங்க...தண்ணி போட்டுட்டு வண்டி ஓட்டுனா அரஸ்ட் பண்ணிடுவாய்ங்களாம்...நம்ம ஊரா இருந்தா ஏட்டய்யாகிட்ட ஒரு நூறு ரூபா குடுத்தா அவரே கோட்டர் வாங்கி தந்து அடிக்க சொல்லி வண்டி ஓட்டிட்டு போக சொல்வார்...நம்ம ஊர்ல போலீசுகாரங்க எவ்வளவு நல்லவங்க :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல வேளை குடோனுக்கு கூட்டி போய் என்னை கொல்ல முயற்சினு இன்னொரு பாயிண்ட் போடாம விட்டாரே :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சின்ன அம்மினி வாங்க.

இந்தியாவிலயும் ஆயிரத்தெட்டு ரூல் இருக்கு. ஆனா புக்குல மட்டும்தான் இருக்கு. யாருக்கும் தெரியறது இல்லை.

ஆனா இங்க 108 ரூல்தான்னாலும் அத்தினியும் தெரிஞ்சாவணும்ன்றாங்க :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தம்பி

ஆக இந்தியா தவிர எல்லா ஊருலயும் டிரைவிங் லைசன்ஸ் கிடைக்கறது கஷ்டம்தான் போல.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

wyvern வாங்க..

அமெரிக்கால இரண்டு தப்புக்கு மேல பண்ணா லைசன்ஸ் சஸ்பெண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ரூல் எல்லாம் தெரியாது. கேட்டாலே பயமா இருக்கே.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்யாம் அதுலயும் பாருங்க ஒரு சில போலீஸ்காரங்க அநியாயத்துக்கு நல்லவங்க. டீ காசுன்னு ஒரு 20 ரூபாய மட்டும் வாங்கிக்னு விட்டுடுவாங்க.

இன்னா இருந்தாலும் காந்தி தாத்தா படம் போட்ட நோட்டுக்கு இருக்கற மரியாதை வாஷிங்டன் லிங்கன் படம் போட்ட நோட்டுங்களுக்கு இருக்கறதில்லை.

நம்ம ஊர்ல நாம காந்தியை மதிக்கறமாதிரி இங்க யாரும் அவங்க ஊர் பெரியவங்கள மதிக்க மாட்டங்கறாங்க. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆனா ஸ்யாம்.

அந்த போலீஸ்காரரு படு தில்லான ஆளு. உயிர் பயமா இல்லாம பக்கத்துல உட்கார்ந்து கிட்டு இருந்தாரு. நம்மள விட மோசமான டிரைவர எல்லாம் பார்த்திருப்பாரு போல. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுக்கெல்லாம்தான் இந்திய மாநிலமாக இருக்கும் நியூ ஜெர்ஸியில் இருக்கணும். சாம்பிள் கேள்விகள் பதிலோட கிடைக்குது. அதைப் படிச்சு எழுது தேர்வை பாசாகலாம். (பிட் எல்லாம் அடிக்க முயற்சி பண்ணலை. ஒரு 50 கேள்வி மக் அடிக்க முடியாதா?!) அப்புறம் நம்ம ஊர் லைசன்ஸைக் காமிச்சா இந்த ஊர் லைசன்ஸ் குடுத்திடறான். அங்கயும் லைசன்ஸ் இல்லைன்னாதான் இந்த ஓட்டற வேலை எல்லாம்.

இது எப்படி இருக்கு! :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தலை,
ஒரு தடவைக்கே இப்படின்னா எப்படிப்பா? என்னைய 5 தடவை இதே இதே மாதிரி சுத்தி சுத்திவிட்டாங்கப்பூ.. தாங்கலை பிளேடு அந்த கருமத்தை வாங்குறதுக்குள்ள வாயில நூரை தள்ளிப்போச்சிப்பா :(.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னும் நிறைய விஷயம் இருக்கு டெஸ்ட்ல...parallel parking, three point turn, uphill downhill parking...next time எல்லாம் practice பண்ணிட்டுப் போங்க...:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
அமெரிக்கால இரண்டு தப்புக்கு மேல பண்ணா லைசன்ஸ் சஸ்பெண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ரூல் எல்லாம் தெரியாது. கேட்டாலே பயமா இருக்கே.//
இல்ல அப்படி இல்ல. ஒவ்வொரு தப்புக்கும் ஒரு பாயிண்டு 14 பாயிண்டு எடுத்தா லைசென்ஸ் காலி (இது மாநிலத்தை பொறுத்து மாறும்.). மற்றபடி தண்ணியை போட்டு ஓட்டி மாட்டின உள்ள புடிச்சி போடுவாங்க அப்பவும் லைசென்ஸ் அம்முட்டுதேன்னு நினைக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

12 பாயிண்ட்டுக்கு மேல போனாதான் சஸ்பென்ஷன். ஒரு டிக்கெட் வந்தா கோர்ட்டுக்கு நேர (கோட் சூட்டெல்லாம் போட்டு) போய் ஐயா தப்பு பண்ணிட்டேன் அப்படின்னா பாயிண்ட் குறைச்சுடுவாங்க, சில சமயம் பாயின்ட் போட மாட்டாங்க.அப்படியே டிக்கெட் கூட குறைச்சுடுவாங்க.
போலிஸ்காரங்க கூட்டு டீயுட்டில செத்து போனவங்க குடும்பத்துக்கு டொனேஷன் கேட்டா ஒரு 20$ வருஷத்துக்கு தந்து டிகால் வாங்கி ஒட்டினீங்க அப்படின்னா ஸ்டாப்பில நிக்காம போறது, 25 மைல் ரோடுல 36 மைல்ல போனா வார்னிங் மாத்திரம் தந்து போகலாம் ரைட் சொல்லிடுவாங்க:))ஒரே ஒரு தடவை, சும்மா அடிக்கடி பண்ணின்னா வம்புதான். இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கு.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

குடித்துவிட்டு ஒட்டி மாட்டிக்கிட்டா.. அப்பரம் கொஞ்சா நாலைக்கு ஒரு மீட்டர் பொருத்தி அதை கிலம்பும் போது வாயால் ஊதவேண்டும் அது ஒகே ஆனாதான் கார் சடாட் ஆகும்.. ஒவ்வரு 20 நிமிடத்துக்கும் இப்படி ஊதவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

---வண்டியை ஓட்டி நடைபயணிகளை கொல்ல முயற்சி.---

எனக்கும் இப்படித்தான் ஆரம்பித்து வைத்தார்கள். முழுமையாகக் கொல்வதற்குக் கற்றுக் கொண்ட தெனாவட்டு தெரிந்தவுடன், உரிமம் வழங்கினார்கள் : )

-------------------------------------------------------------------------------------------------------------
said...

எழுத்துத் தேர்வோடு சரி நமக்கு. சக்கரத்துக்கு பின்னாடி உக்காருவதற்குள் நம்மை ஊருக்கே அனுப்பிவிட்டார்கள். எனது நன்பர்கள் சில பேர் 4-5 முறைக்கு அப்புறம்தான் வாங்கினார்கள். பார்ப்போம் உங்கள் ஸ்கோர்.

//நம்ம ஊர் லைசன்ஸைக் காமிச்சா இந்த ஊர் லைசன்ஸ் குடுத்திடறான்.//

Other country ஓட்டுநர் உரிமம் ஒரு வருஷத்துக்குதான். அதற்குள் ஓட்டி காமித்துவிட வேண்டும்.

இதை விட காமெடி, எனது சகா ஒருவர் (மராட்டியர்) கார் ஸ்டியரிங்கை தொட்டு கூட பார்க்காமல் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தோடு தெனாவட்டாக அமெரிக்காவுக்கு வந்தார். இந்த கதைகள் எல்லாம் பார்த்தவுடன் சமர்த்தாக ஒரு ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து 3 முறை சக்கரத்துக்கு பின்னால் பரீட்சை கொடுத்து வாங்கி விட்டார் license. :-)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடப்பாவி மக்கா. "எல்லாமே ஒழுங்கா இயங்கினா பெரிய பிரச்சினை"ங்கறது தெரியாம நீங்க இங்க ஈஸியா ஓட்டிரலாம்னு நெனச்சீங்களா? சரியாப் போச்சு. நகைச்சுவைக்காக எழுதினதுன்னா ஓகே. ஆனா நெஜமாவே கொஞ்சம் கூட பயிற்சி செய்யாமே நேர Road Test-க்குப் போனது - கொஞ்சம் இல்லை - நெறயவே ஓவர்.

எனக்கு ஆறு வருஷம் மஸ்கட்ல ஒழுங்கா வண்டி ஓட்டி அனுபவமிருந்தாலும், இங்க தேர்வுக்குப் போறதுக்கு முன்னாடி ரெண்டு நாளைக்கு இந்தூர் ஸ்பெஷலான Riversing, Parallel Parking, 3 Point Turn ன்னு எல்லாத்தையும் நல்லா பயிற்சி பண்ணிட்டு அப்றம்தான் போனேன். சிங்கிள் டேக்குல ஓகே பண்ணேன். மஸ்கட்ல ரிவர்ஸ் போம்போது over the shoulder பாத்தா பெயில் - அப்றம் என்னத்துக்கு பின்னாடி பாக்கறதுக்கு மூணு கண்ணாடி வண்டில இருக்குன்னு கடிப்பாரு பயிற்சியாளர். இங்க நல்லாத் திரும்பிப் பாத்து ஓட்டணும். அது மாதிரி குட்டிக் குட்டி வித்தியாசங்கள் இருக்கு. அங்க ஏறி ஒக்காந்ததும் "ம். போலாம்"பார் போலிஸ்கார். நம்மளும் சரின்னு வண்டிய எடுத்தோம்னு வைங்க. பெயில். பெல்ட்ட போட்டுக்கிட்டு அவரையும் பெல்ட் போடச் சொல்லிட்டு கண்ணாடி எல்லாம் ஒழுங்கா இருந்தாலும் இன்னொரு தடவை அஜீஸ் பண்ணிட்டு ரெண்டு பக்கமும் போக்குவரத்தைப் பாத்துட்டு அப்றம்தான் கியர்லயே கை வைக்கணும். எப்படி எப்படியெல்லாம் தந்திரமாக நம்மை மடக்கணுமோ அப்படியெல்லாம் தந்திரம் பண்ணி பெயில் போட்டுடுவாங்க. ஏகப்பட்ட தடவை பெயிலான கஜினி முகம்மதுகள் நெறய பேரு இருக்காங்க. இப்படிக் கஷ்டப் படுத்தறதுக்குக் காரணம் ஒண்ணே ஒண்ணுதான். இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கின உரிமத்தைக் காத்துக்கறதுக்காவது ஒழுங்கா வண்டி ஓட்டுவோம் இல்லையா? எனக்கும் மூணு அட்டெம்ட் ஆச்சு (ரெண்டு மாசம் மொத்தம்).

அந்த அனுபவத்துல இங்க கொஞ்சம் ஓவராவே முன்னெச்சரிக்கையா இருந்ததுல ஆரம்பத்துலயும் முடிக்கும்போதும் ட்ரூப்பரோட தகராறு ஆயிடுச்சு. அவரு வந்து ஒக்காந்து போலாம்னு சொன்னதும் பெல்ட்ட போடுங்கன்னேன். அவரு நான் போடவேண்டியதில்லைன்னு சொல்லிப் பாத்தாரு. நான் நம்மளை ட்ரிக் பண்றாங்கன்னு நெனச்சுக்கி்ட்டு நீங்க போட்டுத்தான் ஆவணும்னு அடம்பிடிக்க இப்ப நீ வண்டிய எடுக்கலைன்னா பெயில்னு அவரு கத்த, சரி தொலையட்டும்னு வண்டிய எடுத்தேன். திரும்ப RMVக்கு வரும்போது வண்டிய நிறுத்துன்னார். நிறுத்தச் சொன்னது ஊனமுற்றோர்/இயலாதோருக்கான நிறுத்துமிடம். நான் இங்க நிறுத்தமுடியாதுன்னு சொல்லிட்டு தள்ளியிருந்த இன்னொரு காலியிடத்துல நிப்பாட்ட அவருக்குப் பயங்கர கோவம். யோவ் நாங்க சொல்றத - அது தப்பாவே இருந்தாலும் - நீ செய்யணும். ஒன்னைய ஏமாத்தறதுக்காக அப்படிச் சொல்லலை - நிறுத்துன்னா நிறுத்தணும்னு கத்தினாரு. ஐயா மன்னிச்சுக்குங்கய்யான்னு சொன்னதும் - சரி தொலை. நீ பாஸ்-னு சொல்லி அனுப்பிட்டாரு.

அதனால ஒழுங்கா ஒரு வாரம் பயிற்சி பண்ணிட்டு போய் ஓட்டி உரிமம் வாங்க வாழ்த்துகள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

////நம்ம ஊர் லைசன்ஸைக் காமிச்சா இந்த ஊர் லைசன்ஸ் குடுத்திடறான்.//

Other country ஓட்டுநர் உரிமம் ஒரு வருஷத்துக்குதான். அதற்குள் ஓட்டி காமித்துவிட வேண்டும்.//

ஸ்ரீதர் வெங்கட், நான் சொல்லறது நம்ம ஊர் லைசன்ஸ் வெச்சு ஓட்டறது பத்தி இல்லை. நிஜமாலே ஓட்டிக் காமிக்காம இந்த ஊர் லைசன்ஸ் தந்ததைத்தான் சொல்லறேன்.

I was given a NJ driving license on completion of written test, just by showing my Indian License. I know for a fact that I am not the only one. I also know that it is NOT in all DMVs that this is possible.

If you need more information let me know!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா எழுதுறீங்க அப்படியே நம்ம பக்கமும் டைம் இருக்கும் போது வாங்க

-------------------------------------------------------------------------------------------------------------
said...

aha!!!
license edukarthula ivalavu prachanaiya??
indiala licence kudukura officerkite oru 100 or 200 kudutha nambaluku vandi ota theriyalena kooda kuduthuduvangale license!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பின்னூட்டமிட்ட இலவசக்கொத்தனார், சந்தோஷ், அனாமிகா, பத்மா அரவிந், பாஸ்டன் பாலா, அரவிந்தன், ஸ்ரீதர் வெங்கட், வற்றாயிருப்பு சுந்தர், கார்த்திக் பிரபு, டுபுக்கு டிசிப்பிள் அனைவருக்கும் நன்றி.

உங்கள் பின்னூட்டங்களின் மூலமாக பல அறியாத செய்திகள் அறிய கிடைத்தன.

வேலைப்பளுவின் காரணமாக பதில் பின்னூட்டம் இடுதலில் தாமதம் மற்றும் தனித்தனி பதில் பின்னூட்டம் இட இயலாமை. பொறுத்தருள்க.

மற்று எனது மறு சாலைத் தேர்வு வெகு விரைவில் வருவதால் அதற்கான ஆயத்தங்களில் மீண்டும் உள்ளேன்.

இரண்டாவது அட்டெம்டில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிவிடுவேன் என்று நம்புகிறேன்.

நன்றிகள் பல.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவச கொத்தனார்ஜி....

நியூ ஜெர்சியில நல்ல திட்டமா இருக்கே. நான் இங்க பக்கத்துலதான் கனக்டிகட்.

அந்த பக்கமா வந்து லைசன்ஸ் வாங்க முடியுமா ?

எங்கிட்ட இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் இண்டர்நேசனல் டிரைவிங் லைசன்ஸ் இரண்டுமே இருக்கு.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சந்தோஷ்

அஞ்சி தடவ சுத்த விட்டாங்களா. பயமுறுத்துறீங்களே.

பார்ப்பம் நமக்கு எத்தனை தடவையோ :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனாமிகா

parallel parking, three point turn, uphill downhill parking

இதெல்லாம் என்னங்க. புரியாத பாஷையிலே என்ன என்னமோ சொல்றீங்க.

எனக்கு தெரிஞ்சு வண்டியை நிறுத்துன்னு சொன்னா இருக்கற ரெண்டு கோட்டுக்குள்ள கொண்டு போய் நிறுத்திடுவேன். அதுதான் பார்க்கிங்.
பின் பக்கமா போனா ரிவர்ஸ் பார்க்.

பேரலல் பார்க்கிங் ஒரு தடவை பழகணும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சந்தோஷ்

நீங்க சொன்னா மாதிரி பாயிண்ட் சிஸ்டம் ஸ்டேட்டுக்கு ஸ்டேட் மாறும்னு நினைக்கிறேன். எனக்கு கனக்டிகட்டுக்கு எப்படி ரூல்னு பார்க்கணும். டிஎம்வி சைட்ல இருக்கும். ஒரு எட்டு பார்த்தா தெரியும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

pazaya edathula enakku kooda three point turnlathaan bush aatchu..

inga.. India licence illaina road test kooda edukka muidyaathu... 3 mnths wait panni 600 dollarukku oru course paditchi test ezuthi, appuramthaan road testukke allow panraan :(((( athunaala innamum passenger seat thaan :(((

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பத்மா அரவிந்த் அவர்களே

நீங்க சொல்வது எந்த ஸ்டேட்டுக்கான விதி என்று தெரியவில்லை.

கனக்டிகட்டுக்கு நான் பார்த்த வரை 10 பாயிண்டுக்களுக்கு மேல் போனால் சஸ்பென்சன்.

நீங்கள் இருக்கும் ஸ்டேட்டில் 12 பாயிண்டிற்குமேல் எனவும் சந்தோஷ் இருக்கும் ஸ்டேட்டில் 14 பாயிண்டிற்கு மேல் எனவும் விதியிருக்கும் என்று நினைக்கிறேன்.

கனக்டிகட்டில் ஜாக்கிரதையாக ஓட்ட வேண்டும். வெறும் பத்து பாயிண்டுகள் அல்லவா. ஆனால் சஸ்பென்சன் 30 நாட்களுக்குதான். முழு கனக்டிகட்டின் விதி கீழே...

If you get six points on your driving record, expect a warning letter from the DMV. Get 10 or more points and your driver's license will be suspended for 30 days. Get another 10 points on your record and you'll lose your license for up to 24 months.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரவிந்தன்

அப்படி ஒரு மீட்டரை நான் பார்த்தில்லை. ஒரு வேளை கனக்டிகட்டில் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பாபா

//எனக்கும் இப்படித்தான் ஆரம்பித்து வைத்தார்கள். முழுமையாகக் கொல்வதற்குக் கற்றுக் கொண்ட தெனாவட்டு தெரிந்தவுடன், உரிமம் வழங்கினார்கள் : ) //

நீங்கள் நன்றாகவே வண்டி ஓட்டுவீர்கள் என்பதை நான் அறிவேன். :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்ரீதர் வெங்கட்

நீங்க சொல்வது போல் நம்ம ஊர் லைசன்ஸ் ஒரு வருடம் செல்லும்.

என்றாலும் இந்த ஊர் லைசன்ஸ் இருந்தால்தான் கார் வாங்கினால் இன்ஷ்யூரன்ஸ் குறைவாக இருக்கும். மற்றும் அடையாள அட்டையாகவும் பயன்படும். அதனால்தான் விடாமல் லைசன்சை முயற்சித்து கொண்டிருக்கிறேன்.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வற்றாயிருப்பு சுந்தர்

உங்கள் அனுபவம் நன்றாக உள்ளது. முதல் முறை லைசன்ஸ் என்பது நல்ல பயிற்சி உள்ளவர்களுக்கே கிடைக்கும்.

இம்முறை நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டே செல்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கார்த்திக் பிரபு

நான் அப்பப்ப உங்க பக்கம் வர்றது உண்டு. கொஞ்ச நாளா பிஸின்றதால அந்த பக்கமா வரலை :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆமாங்க டுபுக்குடிசிப்பிள்

இந்தியாவுல டிரைவிங் லைசன்ஸ் ஓரளவுக்கு ஈஸிதான். குறிப்பா காந்தி கையில இருந்தா.

என்னை ஓட்ட தெரியுமான்னு கேட்டுட்டு நான் தெரியும்னு சொன்னதுக்கே லைசன்ஸ் கொடுத்துட்டாங்க. ஆனா நான் நல்லாதான் ஓட்டுவேன். இந்த ரோடு ரூல்ஸ் அவ்வளவா பழகலையா. அதுதான் பிரச்சனை.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜி...

என்னோட நண்பர் ஒருத்தர்.

கையில இந்தியா கார் டிரைவிங் லைசன்ஸ் கிடையாது. டூ வீலர் லைசன்ஸ்தான்.

வாடகை வண்டி அவர் பேர்ல எடுக்கறப்ப லைசன்ஸ் கேட்டாங்க.

டூ வீலர் லைசன்சை காண்பிச்சு கார் வாங்கிட்டாரு.

நம்ப ஊர்ல பைக்குக்கு லைசன்ஸ்ல MCWR அப்படின்னு போட்டு லைசன்ஸ் கொடுப்பாங்க. Motor Cycle With Gear.

மனுசன் அதை Motor Car with Gear அப்படின்னு டபாய்ச்சிட்டாரு.

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//மற்று எனது மறு சாலைத் தேர்வு வெகு விரைவில் வருவதால் அதற்கான ஆயத்தங்களில் மீண்டும் உள்ளேன்.

இரண்டாவது அட்டெம்டில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிவிடுவேன் என்று நம்புகிறேன்.//

வாழ்த்துக்கள் தலை. நல்லபடியா வாங்கிட்டு வாங்க.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஆக இந்தியா தவிர எல்லா ஊருலயும் டிரைவிங்
லைசன்ஸ் கிடைக்கறது கஷ்டம்தான் போல.//

இந்தியத்தோழி ஒருவர் இந்தியாவில் ட்ரைவிங் டெஸ்ட்டுக்கே போகாமல்
லைசன்ஸ் வாங்கிட்டு வந்துட்டார். இங்கே ஏற்கெனவே லைசன்ஸ் உள்ளவர்கள்
ஆறுமாதம் வரை அதை பயன்படுத்தலாம்ன்னு ஒரு ரூல்ஸ் அப்ப இருந்துச்சு.

ஆள் அரவமற்ற மாலைவேளைகளில் ( மத்த நேரத்துலே மட்டும் கூட்டமா என்ன?)

ஓட்டக் கத்துக்கிட்டு அப்புறம் இங்கத்து லைசன்ஸ் வாங்கிட்டார். இப்ப
ஆஸ்த்ராலியாவுக்கும் தாவிப் போயாச்சு புள்ளி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

டீச்சர்,

//அதை பயன்படுத்தலாம்ன்னு ஒரு ரூல்ஸ் அப்ப இருந்துச்சு.//

ஒரு ரூலா இல்லை ரூல்ஸா? :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹ்ம். மாமாக்கு, 'மால்' கட்டி வாங்க முடியாத்த லைஸென்ஸ் கசக்கத்தான் செய்யும் :)

குடோனுக்கு ஏன்யா போண?

டயருக்கு எலுமிச்சம் பழம் வச்சியா?
வண்டி ஆன் பண்ணப்பரம் புள்ளயார கும்புட்டியா?
பாக்கெட்ல 20டாலர் பில், தெரியர மாதிரி வச்சியா?

ஸீ, தட் இஸ் த மிஸ்டேக் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பரப்பூ...பழய ஞாபகம்...

நமக்கு அபீஸ‌ர் எழுதுனது இது...

1. சொல் பேச்சு கேளாமை.
மை எக்ஸ்ப்லனேஷன்: பேரலல் பார்கிங் பன்ன சொன்ன‌ப்போ, நெறைய எடம் காலியா இர்குதேன்னு பக்கத்து காம்ப்ளெக்ஸ்ல பார்கிங் பன்னது தப்பா?

2. ஓட்டும் பொழுது அங்கும் இங்கும் பார்காமை.
மை எக்ஸ்ப்லனேஷன்: ரோட்ட பாத்தா போதாதா. ரோட்ல அங்கயும் இங்கயும் பாத்தா, எதோ ஃபிகர பாக்கறான்னு ஃபெயில் ஆக்கிடுவான்னு அடக்கி வாசிச்சா...ச்சே...

3. கேள்விக்குறிய ஓட்டும் திறமை.
மை எக்ஸ்ப்லனேஷன்: யாரை நம்பி நான் பொற‌ந்தேன் போங்கடா போங்க...

நன்றி,

~ மாறன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

adada.. unga anubavatha supera ezhudi irukkinga.. irundaalum thappa godown pakkam ponadellam over :)

enna panradhu, indha oore ippidi thaan :(

next time license vaanga advance vaazthukkal :)

aama andha kelvigalukku answer therinjicha?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
டயருக்கு எலுமிச்சம் பழம் வச்சியா?
வண்டி ஆன் பண்ணப்பரம் புள்ளயார கும்புட்டியா?
பாக்கெட்ல 20டாலர் பில், தெரியர மாதிரி வச்சியா?

ஸீ, தட் இஸ் த மிஸ்டேக் :)
//

LOL :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹி ஹி...

அவருக்கு நம்ம விவேக் ஸ்டைல்ல ஒரு ஏழரை போட்டு காட்டியிருந்திங்கனா இப்ப கைல லைசன்ஸ் இருந்திருக்கும். என்ன அண்ணா இப்படி பண்ணிட்டிங்க...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹி ஹி ஹி பாவம் நீங்க...இப்படியா நம்ம அரைபிளேட படுத்துவாங்க...ஆமா நீங்களா எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற பார்க் வேலியை உடைத்தது??

-------------------------------------------------------------------------------------------------------------
said...

I have faced the similar problems, but I had done most of the things right. My mistakes were: I did not reduce the speed when there are limit of 25MPH. Hill parking was wrong. and the last one was while changing lane I did not look @ the Blind spot.

I went the next week and got the license.

-------------------------------------------------------------------------------------------------------------