Sunday, December 31, 2006

தேன்கூடு போட்டி - அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்



தேன்கூடு போட்டியில் குறும்பான தலைப்பில் பொருந்தும் என்று நான் குறும்பாக எழுதிய நாடக வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு, அதுவும் முதல் பரிசு. நம்ப முடியாமல் நான்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

பதிவுலகிற்கு மிகப்புதியவன் நான்.. எனது முதல் பதிவு நவம்பர் மாதம் இடையில்தான் துவங்கியது. உங்கள் அனைவரின் ஆதரவும் தொடர்ச்சியான பின்னூட்டங்களுமே என்னை தொடர்ச்சியாக எழுத தூண்டியது.

வலையில் எனது எழுத்துக்கள் சென்னை செந்தமிழிலேயே வந்திருக்கின்றன.

ஆனால் எனது
கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை தமிழில் நானறிந்த பேச்சுக் கூறுகளை உள்ளடக்கியது. அதன் மூன்று பகுதிகளையும் தனித்தனியாக தொடர்ந்து பதிவிட்டேன். முதலில் போட்டிக்கு என்று எழுதவில்லை. பின்னர் கதையில் இருந்த குறும்பின் தன்மை நோக்கி ஏன் இதனை குறும்பு போட்டியில் இடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற தொகுத்து ஒரே பதிவாக இட்டு போட்டியில் இணைத்தேன்.

இன்று இப்படைப்பு தெரிவு செய்யப்பட்டு வென்று இருக்கிறது.

எனது படைப்பை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலாக தொடர்ந்து படித்து ஆதரவு தந்தும் பின்னூட்டம் இட்டு பாராட்டியும் வந்த அனைவருக்கும் வாக்களித்த வாசகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சகபதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அனைத்து போட்டி பதிவுகளையும் வாசித்தேன். மகிழ்ந்தேன்.

வலையுலகில் இத்தகு போட்டி நிகழ்வுகள் எழுதும் ஆர்வம் உடையோர்க்கு உறுதுணையான தூண்டுகோல்கள். தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கு எனது சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது மற்றுமொரு போட்டி படைப்பான
ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. விற்கும் பெருமளவு ஆதரவு. தங்களின் அன்பில் நனைந்து திக்குமுக்காடிவிட்டேன்.

இந்த அங்கீகாரம் மகிழ்வை தரும் அதே வேளையில் இனி சற்று கவனம் பெறுவேன் என்பதால் பதிவில் வழக்கம் போல் கிறுக்கித் தள்ளாமல் அதே நேரத்தில் நமக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த சென்னை செந்தமிழையும் கைவிடாது தொடர்வேன்.


வெற்றி பெற்ற பதிவுகள்.

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரை பிளேடு

குறும்பு - நாமக்கல் சிபி

குறும்பெல்லாம் குறும்பா? - எஸ்.கே.

நந்தன் - ராம்

வாழ்த்துக்கள் நாமக்கல் சிபி, எஸ்.கே., ராம்.



போட்டி முடிவுகளை காண...

டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள்



வலையில் நமது பதிவுகள் பெருமளவில் நமது நிகழ்வுகளை பதிவு செய்வனவாய் அமைகின்றன. நமது வாழ்வின் நிகழ்வுகள் பிறர்க்கு படிப்பினை என்றாலும் இலக்கியத் தரத்திற்கு நிகழ்வுகளைத் தாண்டி கற்பனைகள் அவசியமாகிறது. கனவுகள் கற்பனையின் ஊற்று.. கனவுகளின் உலகம் தனியுலகம். கண்மூடிக் காணும் கனவுகளாகட்டும். அல்லது கண்திறந்து காணும் கனவுகளாகட்டும். கனவுகள் கால நேர வர்த்தமானங்களில் கட்டுப்படுவன அல்ல. விதிமுறைகளில் சிக்கித் தவிப்பன அல்ல. ஆழ்மனதின் அழகான வெளிப்பாடுகள். கனவுகளில் பேதங்களற்ற பிரிவினைகளற்ற சமுதாயங்களை காணலாம். வளமான வாழ்க்கையை காணலாம். கனவுகளில் நமது குறிக்கோள்களும் அதனை அடையும் பாதைகளையும் காணலாம். தினசரி நிகழ்வுகளிலிருந்து நம்மை பிரித்து ஆட்கொள்ளும் நித்திரையில் வரும் கனவுகள் போல் வலைத்தளத்தில் நமது நிகழ்வுகளை பதிவிடும் நாம் நமது கனவுகளையும் பதிவிடுவோம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
அரை பிளேடு.



ஒரு வருஷம் ஓடி போச்சி

ஒரு வருஷம் ஓடி போச்சி..
புது வருஷம் கூடியாச்சி..

பாட்டில் ஒண்ண கையில எடுத்து
பாட்டம்ஸ் அப் சொல்லுற அண்ணாச்சி.

உன்னோட போன வருஷ
ரெசலுயூசன் என்னாச்சி...

இனி சரக்கு கிளாஸை
கையால தொட மாட்டேன்னு சொன்ன...
ஆகான்னு நினைக்க சொல்ல..
பாட்டிலோட முழுங்குன...

சிகரெட்டை விட்டுடறேன்னு சொன்ன..
புகைய விட்டுக்குனேதான் இருக்குற...

இன்னொரு வருஷம்..
அதே ரெசலுயூசன்.. அதே ஆளு....

டிஸ்கொத்தேக்கு போகுற..
டான்ஸ் ஆடி கொண்டாடுற...

கேட்டா புதுவருசத்தை
கொண்டாடுறோம்னு சொல்லுற...

ஆட்டம் போட்டாதான்
அடுத்த ஆண்டு வருமா...

சிகரெட்டோ தம்மோ
ஹெல்துதான் தருமா...

யோசிச்சி நீயும் பாரு..
இனிவாழ்க்கை டாப் கியரு...

விஷ் யூ ஹேப்பி நியூ இயரு.

Friday, December 29, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 5. வரதட்சணை வாங்குவது யார் ?


கல்யாண சந்தையில ஆண்கள் ஆடுமாடுகள் போல் விற்கப்படுகிறார்கள்.
இது ஆண் மீதான பெண்களின் அடக்கு முறை இல்லையா ?

ஆண்களை சுரண்டறதுக்குன்னே பெண்கள் இந்த வரதட்சணை முறையை கண்டுபிடிச்சிருக்காங்க.

வரதட்சணை கொடுமை. இது முற்றிலும் ஒழியணும்னு சொல்றோம்.
ஆனா இது இன்னும் ஒழியல...

காரணம் யார் ?

பெண்கள்.

பெண்களுக்கு இயற்கையாவே நகை மேல ஆச.

வரதட்சணைன்ற பேர்ல இங்க நடக்குற கூத்து நகைய வெச்சு இல்ல நடக்குது.

பெண்ணை பெத்த பெண் விளம்பரம் குடுக்கறப்பவே இத்தினி பவுன் நகை போடறோம்.

(இந்த விளம்பரம்லாம் பேப்பர்ல வராதுங்கோ.. நம்ப தகுந்த வட்டாரம் மூலமா விஷயத்த கசிய விடுவாங்க. இருக்கறாங்களே இதுக்குன்னே அரட்டை கோஷ்டிங்க. )
அதுக்கு தகுந்த மாதிரி நல்ல மாப்பிள்ளை (!!!!!) பாருங்கன்னு சொல்லிதான மாப்பிள்ளை தேடறாங்க.

இதப்பார்த்த ஆண்பிள்ளையை பெற்றெடுத்த பெண் இது நல்ல டீலா இருக்கேன்னு பாக்குறாங்க.
நூறு சவரன் போட்டு ஒரு பெண் வர்றான்னா உடனே சரின்னிடறாங்க...

அந்த பொண்ணு படிச்சிருக்கணும் அழகா இருக்கணும்னு ஆண் புலம்பறத எல்லாம் கேட்காம கல்யாணத்தை பண்ணிடறாங்க.

நெறய சவரன் கைவசம் இருக்குன்றத தவிர வேற எந்த தகுதியும் இல்லாத பொண்ணுங்களுக்கு ஈஸியா ஒரு இளிச்சவாயன் கிடைச்சுடறான்.

நான் தெரியாமதான் கேட்குறேன்..

பொண்ணு பத்து சரவன் போட்டுக்னு வந்தா இன்னா நூறு சவரன் போட்டுக்னு வந்தா இன்னா.
இதனால ஆணுக்கு இன்னா பிரயோசனம்.

அவங்க மாட்டிக்னு வருவாங்களாம்.
பத்திரமா எடுத்து பூட்டி வெச்சு கல்யாணம் காச்சின்னா திரும்பி எடுத்து மாட்டிப்பாங்களாம்.

எவனாவது ஆயிரத்துல ஒருத்தன் கேடு கெட்டவன் இந்த நகையை புடுங்கி தொலைச்சுட்டான்னா... ஐயயோ ஆண்களே மோசம்..
வரதட்சணைன்ற பேர்ல நகையை வாங்கி குடிச்சு தொலையறாங்கன்னு பெண்கள் அமைப்புங்க மொத்தமா கோணியில கல்ல கட்டி அடிக்கிறாங்க.

நல்லா கவனிச்சு பாருங்க.

எங்க ஆயா 25 பவுனு போட்டுக்னு வந்தாங்க.
எங்கம்மா கல்யாணம் ஆனப்ப 50 பவுனு போட்டுக்னு வந்தாங்க.
இப்ப எனக்கு 100 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி கொடுக்கறாங்கன்னு ஒரு பொண்ணு சொன்னா, நல்லா கவனிச்சு பாருங்க.

அந்த பழைய நகையேதான் பத்திரமா பொட்டிக்குள்ள இருந்து கைமாறி வந்து இருக்கு.

இதுல இது பத்தும் பத்தாதுக்கு அந்த குடும்பத்து தாத்தா அப்பா வோட உழைப்பு உறிஞ்சப்பட்டு நகையா மாறி இருக்கு.

பொண்ணுங்களுக்கு நகை மேல இருக்கற பைத்தியம் குறையாத வரிக்கும் வரதட்சணை அப்படின்ற கொடுமை தொடர்ந்து ஆண்கள் மேல ஏவப்படும்.

தன்னோட பொண்ணு வசதியா இருக்கணும்னு சகலமும் தேஞ்சி ஓடா போற தகப்பன் ஒரு ஆண்தானே.
இந்த பெண்களோட பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாம தூக்குல தொங்குன தகப்பன்மாரு எத்தனை பேரு.

இன்னாமோ வரதட்சணை கொடுமைய ஆண்கள் ஏவறதா பில்டு அப் கொடுக்கறீங்களே.
வரதட்சணை அதிகமா வேணும்னு பொண்ண பெத்தவன கேக்கறது ஒரு பெண்தான்.

கடனோ உடனோ வாங்கியாவது பொண்ண நல்ல இடமா கொடுக்கனும்னு பின்னாடி இருந்து பில்டப் கொடுக்கறது ஒரு பெண்தான்.
மடையனான ஆண்தான் இதகேட்டு கடன் வாங்கி அதை கட்டறதுக்குன்னே தன் ஆயுச முடிச்சிக்கிறான்.

இத்த விட கொடுமை இரண்டு பொண்ணு இருந்தா அவளுக்கு மட்டும் 50 பவுனு எனக்கு 40 தானான்னு இரண்டு பொண்ணுமா சேர்ந்து பெத்தவன பிடுங்கி எடுப்பாங்க பாருங்க.

கேட்டாங்களோ கேக்கலியோ, எங்க மாமியாரு கேட்டாங்க. எம் புருசன் வண்டி கேட்டாருன்னு சும்மாவா அவங்களா கிளப்பி விடுற பொண்ணுங்க எத்தினி பேரு இருக்காங்க தெரியுமா.

காலம் மாறிடுச்சிங்க. இன்னும் கூட ஆணை அடிமடையனாக்கி வரதட்சணைக்கு அவந்தான் காரணம்னு சொல்லிக்னு இருக்கவங்கள நினச்சா...

எப்ப மாற போறீங்க நீங்க எல்லாம்.


--------


ஆடு வாங்க
மாடு வாங்க
லோன் கொடுக்கும் அரசாங்கம்
ஏழை பெண்கள்
தங்களுக்கு கணவன் வாங்க
லோன் கொடுக்குமா ?


இப்படி பெண் ஒருவர் எழுதியதா புதுக்கவிஜ ஒண்ணு படிச்சேன்.

என்னதான் இந்த பெண் வரதட்சணை கொடுமையில் பாதிக்கப்பட்டதாக சொல்லி கவிதை எழுதியிருந்தாலும் இதுல ஆணடிமைத்தனம் அப்பட்டமா தெரியறத கவனிச்சீங்கன்னா தெரியும்.

ஆணையும் ஆடுமாடு மாதிரி லோன் போட்டு வாங்கலாம்ன்ற கருத்து ஆண் இனத்துக்கே இழுக்கு இல்லையா. ஆண் என்ன ஆடா மாடா இவங்க லோன் போட்டு வாங்க.

கொஞ்சமாவது கருணை காட்டுங்க. எங்களையும் மனுசங்களா நடத்துங்க.

(தொடரும்...)

Thursday, December 28, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 4. விலை பேசப்படும் ஆண்

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

ஆண் யாரால் அடிமடையனானான்.

குடும்பம்ன்ற அமைப்பாலதான் ஆண் அடிமடையனா ஆயிட்டான்.

குடும்ப அமைப்புல யாருக்குடா லாபம்னு பாத்தீங்கன்னா நிச்சயமா ஆணுக்கு இல்லை.

குடும்பம்ன்றது பெண்களால் பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அமைப்பு.

இந்த அமைப்புல ஆண் ஒரு வேலக்காரன் மட்டுமே.

அவன தாஜா பண்ணி வேலை வாங்கறதுக்காக நீதான் குடும்ப தலைவன் அப்பிடின்னு சொல்லிட்டாங்க.
அவனும் அடிமடையனா அதை நம்பிட்டான்.

உண்மையான அதிகாரம் யாருக்கிட்ட இருக்குன்னு குடும்பங்கள உத்து பாருங்க.

சாவிக்கொத்து என்ன ஆண்கள் கையிலயா இருக்கு.

ஆண்பிள்ளதான் வேணும்னு பெண்களே சொல்றாங்களே எதுக்கு. இந்த குடும்ப அமைப்புக்கு அடுத்த வேலைக்காரன் தேவை அதுக்காகத்தான்.

ஆசைக்கு ஒண்ணு.. ஆஸ்திக்கு ஒண்ணு அப்பிடின்னு பயமொழியே இருக்கு.

இதும்படி பொண்ணு மேல மட்டுந்தான் ஆசை. ஆண் ஆஸ்தி சம்பாதிச்சு தர்றதுக்குதான்.

இந்த சமூகம் பெண் பிள்ளைகள் வளர்ப்புல காட்டற அக்கறையில நாலுல ஒரு பங்கு கூட ஆண் பிள்ளைகள் மேல காட்டறதில்லை.

இன்ன இப்பிடி, ஆம்பிளப் பிள்ளயதான படிக்க வைக்கிறாங்க அப்பிடின்றீங்களா...

அந்த காலத்து ஆண் வேட்டையாட வெளிய அனுப்பப்பட்டான். இந்த கால ஆண் முதல்ல படிச்சு தனக்கு ஒரு வேலைய தேடி அது மூலமா குடும்பத்த காப்பாத்தணும்னு நிர்ப்பந்தப் படுத்தப் படுறான்.

பெண்ணுக்கு அப்படி எதுவும் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. படிப்போ வேலையோ எத வேணும்னாலும் அவங்க சாய்ஸ்ல வுட்டுடலாம்.

ஆணுக்கு அப்படியா? அவன் தன்னுடைய சுய முயற்சியால ஜெயிக்கிறான்.

இந்த குடும்ப அமைப்பு ஆண் மீது திணிக்கும் மிக அதிக கொடுமை அடுத்துதான் இருக்கு.

இப்படி ஜெயிச்ச ஆண் திருமணம் என்ற போர்வையில் விலை பேசப்படுகிறான்.

விக்கறவங்க ஒரு பெண். தனது பெண்ணுக்காக இந்த ஆணை வாங்கறவங்க ஒரு பெண்.
வாங்கப்பட்ட ஆணை அடிமையாக்கி வேலை வாங்கறவங்க இன்னொரு பெண்.

வெறும் பொருள் என்ற அளவுல விற்கப்படும் ஆணின் மன உணர்வுகள் மதிக்கப்படுகிறதா.

ஆண் செய்யும் ஆட்சேபங்கள் இந்த திருமண சந்தையில் அடிபட்டு போகின்றன.

யாராவது கோழிய கேட்டுட்டா மொளகாய் அரைப்பார்கள் என்ற பழுமொழிதான் அவனுக்கு கிடைக்கிறது.

இதைவிட கொடுமை வெறும் பொருளாய் மட்டுமே ஆண் புழங்கும் இந்த வியாபாரத்தில் ஆணை குறை சொல்வதுதான்.

தங்கம் வில ஏறுச்சுனா தங்கத்தையா குறை சொல்வீங்க...

வெற்றி பெறாத அல்லது ஓரளவுக்கு வெற்றி பெற்ற ஆண்களை பெண்கள் இந்த சந்தையில் திரும்பியும் பார்ப்பதும் இல்லை.

இந்த வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும். ஆண் பெண்களுடைய சூழ்ச்சியிலிருந்து காப்பாற்ற பட வேண்டும்.

(தொடரும்...)


மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

Wednesday, December 27, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 3 ஆண் எப்பிடி அடிமடையனானான் ?

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு


ஆண் எப்பிடி அடிமடையனானான் ?

அதெப்படி அன்புன்றது நல்ல விஷயம்தான அப்படின்னு நீங்க சொல்றீங்களா.

அணுகுண்டு கூட ஒரு நல்ல விஷயம்தாங்க. இல்லாட்டி நாம கூட அத தயாரிச்சு வெச்சுப்பமா.

இந்த லவ்வு கீதே அது கூட ஒரு சேஃப்டி ஆயுதம்தான்.

தனக்கு புடிச்ச ஆணை காலமெல்லாம் தனக்கு வேல செய்ய வைக்கறது எப்படின்னு அந்த காலத்துல பொண்ணுங்க குகை போட்டு யோசிச்சிருக்காங்க. (அந்த காலத்துல ரூம்னா அது குகைதான்).
அப்படி கண்டுபுடிச்சதுதான் லவ்வு.

அத மொத தடவயா அவங்க ஆண்கிட்ட சொன்னப்ப அவன் பேஸ்தடிச்சு போயிட்டான் இன்னாடா இதுன்னு.

லவ்வுன்னா உனக்கு எம்மேலயும் எனக்கு உம்மேலயும் ஒரு இது கீதே அதுதான் லவ்வுன்னு அவங்க சொன்னாங்க.

இவனும் நம்பிட்டான். சரி நமக்குள்ள இது கீதுன்றியே இத்த என்னால பாக்க முடியலியே அப்படின்னு இவன் சொல்ல...

அவங்க அடுத்த கட்ட கண்டுபுடிப்புல இறங்கினாங்க.

இந்தா இந்த கயிற கட்டு, இந்த வளையத்தை விரல்ல மாட்டு, இந்த வளையத்த கால்ல மாட்டு, இந்த சிவப்பு சாந்த என் நெத்தியில வை அப்பிடியின்னு லவ்வ கன்ஃபார்ம் பண்ண அடுத்தடுத்த மேட்டரா எடுத்து வுட்டாங்க.

இப்பிடித்தான்யா ஆரம்பிச்சுச்சு எல்லாமே... ஆரம்பத்துல எல்லாமே நல்லா இருந்த மாதிரிதான் தெரிஞ்சுது.

அப்புறம்தான வந்தது வினையே.

நான் பொம்பள. நீ ஆம்பள. நீ என்ன லவ் பண்ணிட்ட. என்ன வச்சி காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை.

நான் குகையில உக்காந்துக்னு கீறன். நீ போய் எனக்கு வேண்டியத கொண்டு வா.

நீ ஆம்பளயா லட்சணமா போய் ஒரு நாள் முழுக்க வேட்டையாடி கொண்டாந்தினா அத நான் நெருப்புல போட்டு இரண்டு பேருக்குமா சுட்டு தருவன் அப்பிடின்னு சொல்ல நம்ப ஆளும் நம்பிட்டான்.

வெயில்ல மழையில பனியில நம்ப ஆளு கஷ்டப்பட்டு கொண்டு வர்றத அவங்க நெருப்புல போட்டு டிஸ்ட்ரிப்யூட் பண்ண ஆரம்பிச்சாங்க.

இப்படி கிச்சனும் ஹோம் டிபார்ட்மண்டும் அவங்க கையில போயிருச்சு. ஆண் வெறுமனே சம்பாதிக்கிற எந்திரமாயிட்டான்.

எந்திரமாயிட்டாலும் பாவம் மனுசன் இல்லியா அப்பப்ப குரல் வுடுவான்.

ஏன்யா பேசமாட்ட. நான் நம்ம குகைக்காக எவ்ளோ கஷ்டப்படறேன் தெரியுமா? உனக்கு இன்னா ஜாலியா வெளிய போயிடுற.

ஒரு நாள் என்ன மாதிரி வீட்டுக்குள்ளாற இருந்து வேல செஞ்சி பாரு தெரியும்.

அவ்ளோதான் நம்ப ஆளு ஆஃப் ஆயிடுவான்.

ஒரு தடவையாவது இவன் அப்படியா நான் வூட்ல இருந்து அந்த வேலய செஞ்சி பாக்குறன்னு சொல்லியிருந்தான்னா தெரியும்.

அப்பிடியும் தெகிறியமா யாராவது கேட்டா இதல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் உனக்கு எதுக்கு அப்பிடின்னு சொல்லி கிச்சனுக்கு வெளிய நிக்க வெச்சுருவாங்க.

ரொம்ப நாள் வரிக்கும் ஆம்பளைங்க இது ஏதோ பெரிய விஷயம் போலன்னு நினைச்சு ஒதுங்கியே இருந்தாங்க.

அப்பதான்யா வந்தது இந்த பெண்ணுரிம. இதுல ஆணுக்கும் கொஞ்சம் உரிமை கிடைச்சு தெகிறியமா கிச்சனுக்குள்ள நுழைஞ்சாங்க.

அப்பதான் ஒரு உண்ம தெரிஞ்சது. இவ்ளோ நாளா சாப்பாடுன்னு இவங்க போட்டது எல்லாம் ஒண்ணுமே இல்லன்னும் தன்னாலேயெ இதவிட நல்லா சமைக்க முடியும்னு அவனுக்கு தெரிஞ்சது.

பெண் அப்பிடின்னு ஒருத்தி இல்லன்னாலும் தன்னாலயே தனக்கான சாப்பாட்ட செஞ்சிக்க முடியும்ன்ற விழிப்புணர்வு ஆண்களுக்கு இப்பதான் வர ஆரம்பிச்சிருக்கு...

(விழிப்புணர்வு தொடரும்...)

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

ஆ. ஏ. அ. ஆனான் - 2. ஆண் எப்போது அடிமடையனானான் ?

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு
ஆண் எப்போது அடிமடையனானான் ?

இது ரொம்ப இம்பார்ட்டண்டான கேள்வி.

இதுக்கு நாம அவய்லபிள் ஹிஸ்டரிய பார்க்கலாம்.

பெண் எப்ப ஆணோட வாழ்க்ககையில வந்தாளோ அப்பவே ஆண் அடி மடையனாயிட்டான்.

ஆதாம் ஏவாள எடுத்துக்குங்க. ஆப்பிளு துன்னாத அப்பிடின்னு கடவுளே சொல்லிட்டு பூடறாரு.
இருந்தாலும் இருக்கற ஒரே பொண்ணுக்காக தன்னோட கருத்து கொள்கை கடவுளு எல்லாத்ததையும் தூக்கி போட்டுட்டான் உலகத்தோட முதல் ஆண். அங்க ஆரம்பிச்சதுங்க ஆண் அடிமைத்தனம்...

கிரேக்கத்துல ஹெலன் அப்பிடின்னு ஒரு பொண்ணு.. அதுக்காக அறிவில்லாம அடிச்சிக்கிட்டாங்க பாருங்க நம்ப ஆண்மக்கள்...

கிளியோபாட்ரா அப்பிடின்னு இன்னொரு பொண்ணு... இது எகிப்துல. அரசனாயிருக்க வேண்டிய ஆண்டனிய அடிமையாக்கிய புண்ணியவதி...

சரி நம்ம ஊரு கத இன்னாடா சொல்லுதுன்னு பாத்தா பாஞ்சாலின்னு ஒரு பொண்ணு. அது தேவையில்லாம சிரிச்சு அப்பால அவமானப்பட்டு கூந்தல முடிய மாட்டேன்னு சொல்லுதுன்னு அஞ்சி பேரு அடி மடையனாகி வெட்டி மடிஞ்சி, ஒரு ஒட்டு மொத்த கண்ட்ரியே குளோஸ் ஆயிருச்சி.

அம்பிகாபதி, மஜ்னு, சலீம், ரோமியா பொண்ண நம்பி டிராஜிடியா முடிஞ்ச ஆண்களோட கத எத்தினி எத்தினி.

இவ்ளோ சிச்சுவேஷனையும் நாம ஆராய்ஞ்சி பாத்தம்னா ஒரு மேட்டரு தெரிய வரும்.
எல்லா பொண்ணுங்களும் ஆண்கள எப்பிடி அடிமடையனாக்குனாங்க...

அதுக்கு அவங்க கண்டு பிடிச்ச பயங்கரமான ஆயுதம் ஒண்ணுதான் எல்லாத்துக்கும் காரணம்.
இது இன்னாபா ஆயுதம் அப்பிடின்றீங்களா...

அந்த ஆயுதம் பேரு காதல்...
தமிழ்ல சொல்லணும்னா லவ்வு...

மனித குல ஹிஸ்டரில கண்டு பிடிக்கப்பட்ட வெரி டேஞ்சரஸ் ஆயுதம் இந்த லவ்வுதான்... ஆட்டம் பாம்லாம் அதுக்கு அப்பாலதான்.

ஆட்டம் பாம் ஆயுதம் அஞ்சி செகண்டுல சாவு... ஆனா இந்த லவ்வு ஆயுதம் இருக்கே இது ஆயுசு முழுக்க சாகடிக்கும்.

இந்த லவ்வால ஆண்கள் படற கஷ்டம் இருக்கே.. அப்பப்பா.. இது முழுக்க முழுக்க ஆண்களை அடிமைப்படுத்த புத்திசாலி பெண்களால் கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு.

இந்த லவ்வு கறுப்பா சிவப்பா... பச்சையா மஞ்சளா... அது இன்னான்னு இது வரிக்கும் யாரும் கண்ணால பாத்தது கடியாது..

ஆனா ஒரு பொண்ணு ஒரு ஆணை பாத்து எனக்கு உம்மேல லவ்வாயிடுச்சி அப்பிடின்னு சொல்லுதுன்னு வையுங்க...
அடுத்த நிமிஷம் அவன் தன்னோட டோட்டல் மூளையையும் கழட்டி வெச்சுடறான்...

இந்த இடத்துலதான் ஆண் டோட்டலா தோத்து போறான்....

நாம ஆணுரிமைக்கு போராடணும்னா இந்த பயங்கர ஆயுதத்த எதிர்த்து போராட வேண்டிய கட்டதுத்துல இருக்கோம்.

லவ்வு நல்ல விஷயந்தான அப்பிடின்னு நீங்க சொல்றவறா இருந்தா...
இந்த லவ்வுன்ற விஷயம் எப்பிடியெல்லாம் ஆண அடிமடையனாக்குதுன்றத அடுத்தடுத்த சேப்டர்ல பார்க்கலாம்.



மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

Tuesday, December 26, 2006

ஆண் ஏன் அடிமடையனானான்?

பின்னாடி சேப்டரு

ஆண் ஏன் அடிமடையனானான்?

"பெண்ணால்" ஒரே வார்த்தை பதில்.

நாம இருக்கறது இருபத்தோராவது நூற்றாண்டுங்க.

இன்னும் இன்னடான்னா பெண்ணுரிம பெண்ணுரிமன்னு நிறைய பேசுறாங்க.

ஐயா, இந்த பெண்ணுரிம அப்பிடின்னா இன்னாங்க..

பெண்ணுக்கு சுதந்திரம் வோணும்.. அதுதான் பெண்ணுரிம..

அப்ப சரி.. அந்த சுதந்திரம் யார்கிட்ட இருந்து..
ஆண்கள் கிட்ட இருந்து...

ஒரு சில சமயம் இதை கேக்கிறப்ப ஆச்சரியமா இருக்குங்க..

யாருகிட்ட எது இல்லியோ அவங்க கிட்ட அத கேட்டா அவங்களால எப்பிடிங்க தர முடியும்.


இன்னிக்கு சமுதாயம் இருக்கிற இருப்புல யாருக்கு உரிம இருக்கு, யாருக்கு இல்லன்னு
எல்லாருக்கும் தெரியும்.

இருந்தும் நாம இப்பிடிதான் பேசறோம்.

இப்ப இருக்கிற சமுதாயத்துல ஆண்கள் நிலமதாங்க ரொம்பவே பாவமா இருக்கு.

ஒரு ஆண் பிறக்கறப்ப அம்மாவுக்கு கட்டுப்படறான். அதுக்கப்புறம் கட்டுன பொண்டாட்டிக்கு கட்டுப்படறான். அப்புறம் மகளுக்கு கட்டுப்படறான்.

இப்படி காலமெல்லாம் கட்டுப்பட்டு குடும்பத்தோட நலனுக்காக கஷ்டப்படற ஆண்கிட்ட உரிமய கொடுன்னா தனக்கே இல்லாத ஒண்ணுக்கு அவன் எங்க போவான்.

இந்த ஃபேமிலி இருக்கே அதெல்லாம் இப்ப ம்யூட்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்ல ஓடுது.
ஃபேமிலி கயிறு பெண்கள எந்த அளவுக்கு கட்டி போட்டிருக்கோ அதே அளவு ஆண்களையும் கட்டி போட்டிருக்கு.

ஆண்கள்தான் நாலு இடம் போறாங்க. வர்றாங்க. பெண்கள் எங்கயும் போறது இல்ல அப்பிடின்னு கும்சா ஒரு ஸ்டேட்மண்ட் வுட்டுடறாங்க.

ஐயா, இந்த சுவிட்சு இருக்குதே சுவிட்சு அது ஓடாதுங்க. ஆனா இந்த சுவிட்சு போட்ட பின்னாடி இந்த கிரைண்டரு ஓடும் பாருங்க ஒரு ஓட்டம். ஆனா இந்த கிரைண்டரு கூட ரொம்ப தூரம் ஓட முடியர்துங்க. இருக்கற இடத்துலயேதான் ஓடும்.

பவர் இல்லாம ஓட முடியாத கிரைண்டரு பெருசா. இல்ல அந்த கிரைண்டரையே ஆட்டி வைக்கிற சுவிட்சு பெருசா ?

நமக்கு இந்த பெண்ணுரிமய பத்தி ரொம்ப தெரியாதுங்க. நாம இந்த கட்டுரைத் தொடர எழுதணும்னு நினைச்சதுக்கு காரணம் ஆணுக்கும் உரிம வேணும்ன்றது பத்தி சொல்லத்தான்.

அகில உலக ஆண்குலமே உங்கள நம்பி எயுத தொடங்கிட்டேன். வூட்டம்மா திட்டுவாங்கன்னு பயப்படாமா தெகிரியமா வந்து அனானிமஸ்ஸாவாவது உங்க கருத்துங்கள சொல்லுங்க.

பெண்குலமே.. தப்புதான். ஆணுரிம கேக்கறது தப்புதான். ஆனா எந்த குரலா இருந்தாலும் ஒடுக்கப்படக்கூடாது. நீங்களும் அந்த டிவி பொட்டிய ஆஃப் பண்ணிட்டு வந்து ஆணுரிம ஏன் கூடாதுன்றத பிளந்து கட்டுங்க. ஏதோ நாமளும் நமக்கு தெரிஞ்சத சொல்றோம்.


கட்டுரை மடத்தனமா இருக்கு அப்பிடின்னு சொல்றீங்களா.. காரணத்துக்கு தலைப்பா இன்னொரு தபா படிக்கவும்.


தாங்ஸ்... தொடரும்...

Thursday, December 21, 2006

பாஸ்டன் வலைபதிவர் சந்திப்பில் அரைபிளேடு



நாம வலைபதிவுக்கு புச்சுபா. எயுத ஆரம்பிச்சு ஒரு மாசம் மேல ஆவுது.
நாம எயுதுறது தமிலுதானான்னு நமக்கு இன்னிக்கு வரிக்கும் ஒரு டவுட்டு கீது.

இந்த சிச்சுவேஷன்ல வலைபதிவர்ங்க பாஸ்டன்ல சந்திக்கிறாங்கோ அப்படின்ற தகவலு தெரிஞ்சதும், போனா இன்னான்னு தோணிச்சி. நாம இதுவரைக்கும் எயுதறமே தவிர இது வரைக்கும் எயுதுற மத்தவங்க யாரையும் தெரியாது.

நாமளும் வர்றதா கீறோம் அப்பிடின்னு ஒரு மெயிலு தட்டி வுட்டேன்.

நம்பளையும் வாங்க வாங்கன்னு, வெல்கம்னு பாஸ்டன் பாலா (யாருப்பா அது) கிட்ட இருந்து மெயிலு, நான் உங்கள கூட்டிட்டு போறேன்னு கண்ணபிரான் ரவிஷங்கர் (ஆன்மிக பதிவு, நமக்கு சம்பந்தமே இல்ல) சொல்ல நாம குஷாலா ரெடியாயிட்டோம்.

நம்பள வழியில பிக்கப் பண்ணி ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு போன கண்ணபிரான் ரவிஷங்கருக்கு ஸ்பெஷல் தாங்ஸ்.

கொஞ்சம் லேட்டாதான் போயி சேந்தோம். மணி மூணு.

இப்பதான் மத்த மக்களையெல்லாம் முதல் தடவையா பாக்குறேன்.
அறிமுகம்லாம் முடிஞ்சது. நாமதான் அரைபிளேடு, வலைபதிவுல இப்பதான் கிறுக்க ஆரம்பிச்சி கீறோம்னு சொல்லிக்னு அமைதியா ஒரு மூலையா உட்காந்துக்னேன்.

எல்லாரும் அவங்க அவங்க கருத்துங்களை பேச ஆரம்பிச்சாங்க. நாம அமைதியா கேட்டுக்கறோம். அப்பப்ப ஒண்ணு இரண்டு கொஸ்டினு உட்டுக்கறோம்.

அப்பப்போ வந்த ஸ்னாக்ஸ், சூப், காபி, சமோசா, சிப்ஸ் எல்லாம் உள்ள இறங்குது. விருந்தோம்பல்னா இது. தாங்ஸ் பாலா.

நிறைய பேசினோம். பேசிக்கினே இருந்தோம்.
எம் மூளைக்கு எட்டனது எனக்கு நியாபகம் இருக்கறத இங்க குடுக்கறேன்.


டிஸ்கஸ் செய்யப்பட்ட கொஸ்டினுங்க இன்னான்னா...

1. நாம இங்க எதுக்காக எயுதிக்னுகீறோம்.
2. எதைப்பத்தியெல்லாம் எயுதறோம்.
3. நாம எயுதறது எல்லாம் இலக்கிய தரத்தோட இருக்குதா. இல்ல எல்லாரும் சும்மா டயரி மாதிரி எயுதறமா.
4. நாம எயுதறத யாரு படிக்கிறாங்க
5. நாம யாரையெல்லாம் புடிச்சிருக்குன்னு படிக்கிறோம்
6. நாம இப்படி எயுதற வலைபதிவுகளோட எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
7. தோணறது எல்லாம் எயுதறமே. எடிட் பண்றமா இல்லியா. எடிட் பண்றம்னா ஏன் பண்றோம்.
நான் இத மட்டும் தான் எயுதுவேன். இத எயுத மாட்டேன்னு நமக்கு நாமே ஏன் லிமிட் வெச்சிக்கிறோம்.
8. நாம எயுதறத நிறைய பேர எப்பிடி படிக்க வெக்கிறது. (எப்பிடின்னு தெரியணும்னா வெட்டி அவர்களின் பதிவை படிக்கவும்)
8. A. திரட்டிகள் என்னென்ன... தமிழ்மணம், தேன்கூடு, கில்லி.
9. வலையுலகத்துல பெண்கள், பெண்ணுரிம எவ்வளவு தூரம் இருக்கு.
10. நாம எழுதறது வீட்ல இருக்கறவங்களுக்கு இடைஞ்சலா இருக்கா.
10.A. வலைபதிவர்கள் அதுவும் சின்ன வயசு வலைபதிவர்கள் ஏன் ஆன்மிகம் எழுதணும். ஏன் இந்த விரக்தி. (குறிப்பா கல்யாணம் ஆன வலைப்பதிவர்கள்தான் ஆன்மீகம் எழுதறாங்க. ஏன்?)


11. தமிழ் சினிமா எந்த அளவுக்கு இருக்கு.
12. கமல், எஸ்பிபி, மணிரத்னம் போன்ற தனிப்பட்ட சாதனையாளர்களோட சாதனை என்னஎன்ன.
13. தமிழ் பத்திரிகையில சினிமா விமர்சனம் எந்த அளவுக்கு இருக்கு.
14. மத்த மொழி திரைப்படங்கள் குறிப்பா மலையாளம், கன்னடம் அளவுக்கு கலைப்படங்கள் தமிழ்ல ஏன் வரலை.


15. தமிழ் பத்திரிகைகள் எந்த அளவுக்கு இருக்கு
16. பிடிச்ச எழுத்தாளர்ங்க யார் யாரு.. சுஜாதா, ஜெயகாந்தன், ராஜேஷ்குமாரு... யாரை படிப்பீங்க..
(நான் ராஜேஷ் குமாருன்னம்பா. அவருதான் நமக்கு பிரியர மாதிரி எயுதற ஒரே எயுத்தாளர்)
17. சினிமா விமர்சனம் தமிழ் பத்திரிகையில எந்த அளவுக்கு இருக்கு.
ஒரு டைம்ஸ், நியூயார்க் பத்திரிகை அளவுக்கு தமிழ் பத்திரிகை இருக்கா.
(நான் படிக்கற ஒரே பத்திரிகை குமுதம். அதுதான் சூப்பருன்னு நான் கருத்து சொல்லிக்னேன்)

18. வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரச்சனைகள், சந்தித்தல், ஒன்றிணைதல்

இன்னும் நிறைய. நமக்கு கேள்விங்க மனசுல நிக்கற அளவுக்கு பதிலுங்க மனசுல நிக்கறதில்லை.

இந்த டிஸ்கஷன்கு நடுவுல டின்னர். ரொம்ப நல்லா இருந்தது. பேச்சு சுவாரசியத்துல நாம சாப்பாடு ஐட்டங்களை அதிகம் கவனிக்கல. (சாரி பாபா).

வள்ளுவரே சொல்லி கீறாராம்பா, காதுக்கு இல்லாட்டிதான் வவுத்துக்குன்னு.

டிஸ்கஸ் பண்ண நெறய மேட்டரு நமக்கு புதுசு. சைலண்டா கேட்டுக்னு இருந்தோம். ரஜினி கமலுன்னு டிஸ்கசன் வந்தப்ப கைதட்டாத குறை.

அடுத்து கிரீஷ் கர்னாடு, அப்புறம் இன்னம் நம்ப வாயிலயே நுழையாத டெக்னிகல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர்ஸ், டைரக்டர்ஸ், சினிமா பேரெல்லாம் வந்தப்ப நாம நெளியாத குறை.

நமக்கு கொஸ்டினு கேக்க மட்டும்தான் தெரியும். பதில் சொல்ல தெரியாது. குறுக்கால குறுக்கால ஒண்ணு இரண்டு கொஸ்டினை போட்டுட்டு சைலண்ட் ஆயிட்டோம்.

நமக்கு எப்பவுமே நாலு பேரு பேசறத கேட்டுக்னே இருந்தா போதும். மேடை போட்டு மைக் போட்டு பேசற மீட்டிங் எவ்ளோத்துக்கு தொண்டனா தரையில உக்காந்து கைதட்டியிருப்போம்.

இது டிஃப்ரண்டு. ஆனா நல்லாதான் இருந்திச்சி.

நல்ல ஒரு டிஸ்கஷனை கொடுத்துக்ன எல்லாருக்கும் பெரிய தாங்ஸ்.

மை ஸ்பெஷல் தேங்ஸ் கோஸ் டு பாஸ்டன் பாலா, அவருடைய திருமதி மற்றும் குழந்தை.
என்னா அறிவான குழந்தை. டிஸ்கஷன் போயிட்டிருந்தப்ப வந்து ஒன், டு, த்ரீ எண்ணி நாங்க லெவன் இருக்கோம்னு கரக்டா சொன்னது.
நான் கூட அதுவரிக்கும் எத்தனை பேருன்னு எண்ணவேயில்லை.

அப்புறமா வெட்டிப்பயல் அவர்களுக்கும் ஸ்பெஷல் தேங்ஸ். அன்னிக்கு நைட்டு அவருதான் நமக்கு ஹோஸ்ட்டு.

காலையில பொட்டியை கட்டி பொடி நடையா பாஸ்டனை பாத்துட்டு திரும்பி வந்து சேர்ந்தேன்.

நம்பளையும் ஒரு வலைபதிவர்னு ஒத்துக்ன எல்லாத்துக்கும் தாங்ஸ்.
நாம நம்பள பொறுத்த வரைக்கும் ஒரு ரீடர் மட்டும்தான். அந்த வகையில நாம படிக்கிற எழுத்துக்கு சொந்த காரங்கள பாக்குறது ஒரு சந்தோஷம்தான்.


யப்பா.. நானும் ஒரு வலைபதிவு சந்திப்பு போயாச்சி..
முழு வலைப்பதிவருக்கான தகுதி இப்ப நம்பளுக்கும் வந்திருச்சி இல்ல..

(வலைப்பதிவு கூட்டங்களுக்கு போனா இன்ன குழுவுல சேந்துட்டாருன்னு சொல்வாங்களாமே...
பாபா நீங்க ஏதாவது ஒரு குழு வெச்சிருந்து நான் அதுல சேந்துட்டனா என்ன :))) )





பாஸ்டன் சந்திப்பு - பாபாவின் பார்வையில்

Wednesday, December 20, 2006

"ஃபுல்"லான கவிதைங்க...


2
யூ ஸீ...
ஷீ ஈஸ் ப்யூட்டிஃபுல்..
ஐ ஸீ...
ஷீ ஸீ..
போத் ஸீ.. ஸீ...
லவ் ஸ்டார்ட்டு
ஆயிடுச்சீ...

வை யூ.. மிடில், மிடில் ஸீ..

-------------------------------------------
3
மை டார்லிங்
திஸ் ஈஸ் பார் யூ..
ஆக்சுவலி எவ்ரிதிங்
ஈஸ் பார் யூ..
திஸ் கிளாஸ்..
திஸ் தண்ணி..

அண்டு மை செல்ஃப்..

வை யூ நோ லாங்கர் ஸீ...

-------------------------------------------
4
யூ ஸீ..
ஷீ ஈஸ் ப்யூட்டிஃபுல்..

பட் ஐ அம் ப்யூட்டிஃபுல்லஸ்ட்...

வை லாஃப்..
நோ லாஃப்..

ஒன்லி லவ்...
லைஃப் லாங்கு லவ்...

-------------------------------------------
5

லவ்
லவ் ஈஸ் லவ்லியஸ்ட்
லவ் ஃபார் லவ்ஸ் ஸேக்கு

பட் டோண்ட் லவ் கேர்ள்..
கேர்ள்ஸ் கம்..
கேர்ள்ஸ் கோ..

லவ் நெவர் கோஸ்..

-------------------------------------------
6
கேர்ள்ஸ் ஆர் ப்ரெட்டி..
ஃபாதர்ஸ் ஆர் ******

லவர் ஃபெயில்ஸ்..
லவ் நெவர் ஃபெயில்ஸ்
லவ்வ்வ்
ந்நெவர் ஃப்பெயில்ஸ்ஸ்.....

-------------------------------------------

ஃபுல் குறிப்பு:

நம்ப தோஸ்த்தோட கவிதைங்க.

சைடுல கீற நம்பருங்க ரவுண்டோட நம்பரு.

இரண்டாவது ரவுண்டுலதான் கவித ஆரம்பிச்சாரு. ரவுண்டு கட்டிட்டாரு.
ஆறாவது ரவுண்டுல ஆள் ஃபிளாட்டு..

இன்னும் இரண்டு ரவுண்டுக்கு கண்டி தம்மு கட்டியிருந்தாருன்னு வையி..
இங்லீஷ்க்கு இன்னொரு ஷேக்ஸ்பியரு கடிச்சிருப்பாரு..

ம்.. இங்லீஷ் கொடுத்து வெச்சது அவ்ளோதான்.

Tuesday, December 19, 2006

மே ஐ ஹெல்ப் யூ கேட்ட விதி



விதி வலியதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அது அன்னிக்கு என்னை பாத்து சிரிச்சுக்னு இருந்தது.

இடம் மும்பை டொமஸ்டிக் ஏர்போர்ட். லோக்கல் ஃபிளைட்டு கிங் பிஷர்ல ஏறி இறங்கியாச்சு. அடுத்து விர்ஜின் அட்லாண்டிக்கை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டு போயி புடிக்கணும்.

மும்பையில இந்த இரண்டு ஏர்போர்ட்டு கொஞ்சம் தூரம். ஏர்போர்ட்லயே அதுக்கான வண்டிங்க இருக்கும் அப்படின்னு சொன்னாங்க.

நானும் சரின்னு ஏர்போர்ட்டை விட்டு வெளிய வர்றேன். வெள்ளையும் சள்ளையுமா சட்டை ஃபேண்ட போட்டுக்குட்டு ஒருத்தன். நானும் ஏர்போர்ட் அத்தாரிட்டின்ன நினைச்சிட்டேன்.

"வேர் யூ ஹாவ் டு கோ சார். "

"இன்டர்நேஷனல் ஏர்போர்ட்" அன்னிக்கு சனி என் நாக்குல உட்காரல. டான்ஸே ஆடிக்கிட்டு இருந்தான்.

"மே ஐ ஹெல்ப் யூ. சார்.. "

நோன்னு சொல்லியிருக்க வேண்டியதுதான.. "யூ ஆர்.." இழுத்தேன்...

"ஏர்போர்ட் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்.. "

என்னோட பேக்கேஜை வாங்கினான் அவன். ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளி வெளியே வேகமாக வந்து.. கையில் எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.. துரத்திக்கொண்டே நான்..

"வேர் யூ ஆர் டேகிங் மை பேக்கேஜ்.. "

ஏர்போர்ட்டுக்கு வெளியே.. "வெயிட் சார்.. அவர் வெஹிக்கிள் வில் கம் ஹியர்.. "

முப்பது செகண்டில் ஒரு ஓட்டை கருப்பு டாக்சி வந்து சற்று தூரம் தள்ளி நின்றது..

"வெயிட்.. வெயிட்.." எனது கத்தலை பொருட் படுத்தாது பேக்கேஜிகளை எடுத்துக் கொண்டு ஓடினான் அவன்.

காரின் டிக்கியில் வைத்து சாத்தினான்.

தொடர்ந்து சென்று பிடித்தேன்..

காரில் இருந்தவனும் இறங்கினான். "டிரான்ஸ்போர்ட சர்வீஸ் சார்." அவன் ஒரு பிரிண்டட் அட்டையை எடுத்தான்.

"சீ திஸ் சார். ஆர்டினரி சர்வீஸ் டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் 500 ருபீஸ். ஏசி கார் 1000 ருபீஸ்"

அடப்பாவிகளா.

"ஐ டோன்ட் நீட் திஸ். கெட் மீ அவுட் ஆஃப் திஸ். "

"க்யா கஹ் ரஹா ஹை சாப். யூ கேம் டு அவர் சர்வீஸ். சீ திஸ் இஸ் மாடரேட் சர்வீஸ். ஆத்தரைஸ்டு. வீ வில் கிவ் யூ ரிசிப்டு ஆல்ஸோ. "

எனக்கு ஃபிளைட் பிடிக்க இன்னும் இரண்டரை மணி நேரம் இருந்தது.

"ஹெள மச்" மீண்டும் நாக்குல சனி.

"500 சார்"

நான் ஒரு 1000 ரூபாய் நோட்டை நீட்ட, வாங்கி பார்த்தவன் மூலையில் கிழிந்திருக்கிறது என்றான். மொதல்ல ஒழுங்கா தானடா இருந்தது.. நீயே கிழிச்சிட்டியா..

"திஸ் வில் கோ.. ட்ரைவ் திஸ் கார் டு போலீஸ் ஸ்டேஷன்.. "

என்ன நினைத்தான் தெரியவில்லை. 500 ரூபாய் பாக்கி கொடுத்தான். கூடவே ஒரு ரிசிப்டும்.

மற்றவன் அதற்குள் மற்றொரு டாக்சியை நிறுத்தி ஏதோ பேசினான். சற்று நேரத்தில் என்னைக் கேட்காமலே என் பெட்டிகள் டாக்சி மாறின. இருவருமாக சேர்ந்து என்னை அந்த காரில் ஏற்றினார்கள். காணாமல் போனார்கள்.

அந்த கார் கிளம்பியது. எனது பெட்டிகள் என்னுடனேயே இருக்கின்றன என்பதே எனக்கு நிம்மதியாக இருந்தது.

அந்த டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். என்னை இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டில் இறக்க சொல்லி விட்டு அவனுக்கு 150 ரூபாய் கொடுத்ததாக அவன் சொன்னான்.

எனக்கு எனது ஃபிளைட்டுக்கு நேரமாகி கொண்டிருந்தது. ஒரு நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு 500 ரூபாய் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

பெட்டிகளோடு பத்திரமாக வந்து இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இறங்கியதும் மூச்சு வந்தது.

அடப்பாவிகளா ஒருத்தன் முகத்துல அப்பாவின்னு எழுதி ஒட்டி இருந்தா எப்படியெல்லாம்டா ஏமாத்துவீங்க...

மொழி தெரியாத, இடம் தெரியாத ஊர்ல ஒருத்தன் மாட்டிக்கிட்டா இப்படியா. ஏதோ சாமி நாம செஞ்ச புண்ணியம் இத்தோட போச்சே..

ஃபிளைட்டுல ஏறி உட்காந்து நான் பாத்த படம் ப்ளஃப் மாஸ்டர். அபிஷேக் பச்சன் மாட்டியவர்களிடம் எல்லாம் கண்ட மேனிக்கு பொய் சொல்லி ஏமாற்றி கொண்டிருந்தார். சினிமாவில் சிரிப்பாக இருந்தது... நிஜத்தில்...

இப்படிக்கு ஏமாந்த அப்பாவி
அரைபிளேடு

Friday, December 15, 2006

குவார்ட்டர் கீதங்கள்

குப்புற கவுந்தடிச்சி
நட்சத்திரம் எண்ணுற என்
அண்ணாத்தே....

மூணாவது ரவுணட்லேயே நீ
மூழ்கி போனாது என்னாத்த..

உழைச்சு வந்த காச
டாஸ்மாக்குல நீயும் தொலைக்கிற...

இருபது நிமிஷமா..
இடுப்பு வேட்டி இல்லாம இருக்கிறியே
நியாயமா..
கேட்டா மூஞ்ச வெச்சிக்கிற பாவமா..


இப்படி நீயும் செஞ்சா எப்படி
வீடு ஒண்ணு இருக்குதே
புள்ள குட்டி இருக்குதே
நினைச்சி நீயும் பாத்தியா...


ரம்முன்ற ஜின்னுன்ற
கலர் கலரா சரக்கு காட்டி
கலாய்க்கிற..

முழுநாளும் வேல செஞ்சு
முப்பது ரூபாவ செலவழிச்சு
இத்த வாங்கி நீ குடிச்சு
மொத்தமாதான் நீயழிஞ்சு
பொண்டாட்டி வயிறெரிஞ்சு
இப்பிடி நீ செஞ்சா..
நல்லாதான் இருக்குதா...

அண்ணாத்த
அடுத்த வேள
அடுப்பெரிய
எதுவுமில்ல வூட்டுல..
அந்தகத தெரியுமா..
சாமிக்குதான் அடுக்குமா..

சொல்லுறத சொல்லிட்டன்
சொந்த புத்தி ஒண்ணு
உனக்கிருந்தா
ஒரு தபாவாவது யோசிச்சி பாரு...

Tuesday, December 12, 2006

சரக்கு - சைடு எஃபக்ட்ஸ்...



இது சொந்த சரக்கு இல்ல. மெயில்ல இங்லீபீஸ்ல வந்த சரக்கு.
கூட நானும் சொந்த சரக்க சேர்த்து ஒரு மிக்ஸ் போட்டு இருக்கேன்.
குடிச்சி பாத்துட்டு.. சாரி.. படிச்சி பாத்துட்டு கருத்து சொல்லவும்...



வந்த சரக்கு

1. எஃபக்ட்: கால் ஈரமா கீதுன்னு ஃபீல் பண்றீங்கோ.

ரீஜன்: கிளாஸை நீங்க சரியா புடிக்கல. சரக்கு கால் மேல கொட்டிடிச்சி.

கரீக்சன்: கிளாஸை நேரா புடிக்கவும், நேரான்னா வாய்ப்பக்கம் மேல வர்ற மாறி.


2.
எஃபக்ட்: உங்களுக்கு நேரா கீற சுவருல ஏகப்பட்ட லைட்டு கீது.

ரீஜன்: அது சுவரு இல்ல. கூரை. நீங்க தரையில கீறீங்கோ.

கரீக்சன்: எயுந்து உக்காரவும்.


3. எஃபக்ட்: எதிர்ல கீறவங்க எல்லாம் மங்கலா தெரியறாங்கோ.

ரீஜன்: காலி கிளாஸை மூஞ்சிக்கு நேரா புட்சிக்னு கீறீங்கோ.

கரீக்சன்: கிளாஸ்ல அடுத்த ரவுண்ட ஃபில் அப் பண்ணவும்.



4.
எஃபக்ட்: தரை நகருது.

ரீஜன்: ஆக்சுவலா உங்கள நாலு பேரு தூக்கிக்னு போறாங்கோ.

கரீக்சன்: எங்க தூக்கிக்னு போறாங்கோன்னு கேட்கவும்.


5. எஃபக்ட்: கூரையில நிலா, நட்சத்திரம் எல்லாம் தெரியுது.

ரீஜன்: உங்கள தூக்கிக்னு வந்தவங்க உங்கள தெருவுல போட்டுட்டு போயிட்டாங்கோ.

கரீக்சன்: இதோட கரீக்சன் நீங்கோ எவ்ளோ தெளிவா கீறிங்கோன்றத பொறுத்தது.


6.
எஃபக்ட்: நீங்க இருக்கற ரூம் ரொம்ப ஆடுது. அதுல இருக்கறவங்க எல்லாம் வெள்ள டிரஸ் போட்டுக்ன இருக்காங்க.

ரீஜன்: நீங்க ஆம்புலன்ஸ்ல இருக்கீங்க.

கரீக்சன்: அமைதியா இருங்கோ. அவங்க, அவங்க கடமய கரீக்டா செய்வாங்கோ.


7. எஃபக்ட்: வீட்ல இருக்கறவங்க எல்லாம் உங்கள வித்தியாசமா பாக்கறாங்க.

ரீஜன்: நீங்க தப்பான வீட்ல இருக்கீங்கோ.

கரீக்சன்: அவங்க கிட்ட உங்க வீட்டுக்கு வழி கேட்கவும்.


சொந்த சரக்கு

8. எஃபக்ட்: உங்க ஃபிரண்டு உங்கள போட்டு அடிக்கிறாரு.

ரீஜன்: ஃபிரண்டுன்னு நினைச்சு போலீஸ்காரரு தோள்ல கைய போட்டுக்னீங்கோ.

கரீக்சன்: கம்னு இருக்கவும். பேசறது தப்பு. சட்டம் தன் கடமய செய்யும்.


9.
எஃபக்ட்: சும்மா ஜில்லுன்னு கீது. அருவில குளிக்கிற மாதிரி.

ரீஜன்: நீங்கோ ஏதோ ஒரு டிரெயினேஜில இருக்கீங்க.

கரீக்சன்: சத்தம் போடவும். அப்பதான் யாராச்சும் ஹெல்ப் பண்ணுவாங்கோ.


10. எஃபக்ட்: உங்க பக்கத்தல பூரி கட்டை, துடைப்ப கட்ட எல்லாம் இருக்கு. உங்க உடம்பு ஃபுல்லா வலி.

ரீஜன்: உங்க பொண்டாட்டி நீங்க குடிச்சத கண்டுபிடிச்சிட்டாங்க.

கரீக்சன்: சாரி. இதுக்கு கரீக்சன் கடியாது.


---------------------------------------------

பி.கு.: எஃபக்ட், ரீஜன், கரீக்சனோட அளவு எத்தினி ரவுண்டுன்றத பொறுத்தது.






Monday, December 11, 2006

அரை பிளேடு போட்டோ ஆல்பம்


குருநாதர் போட்டோதாம்பா. நம்ப குரு ஜெர்மனில ட்ரயினிங்கு எடுத்தவரு.. போட்டோ பாத்தாலே தெரியல...




குருநாதர் தொழில் முற தோஸ்த்துங்களோட...




நம்ப குரு நம்மள மாறி மொக்க கடியாது. படத்த பாத்தா தெரியல..




குருநாதர் சின்ன வயசு போட்டோ..






குருநாதர்தான்.. பள பளான்னு மின்றாருல்ல.. அவ்வளவும் வேர்வ.. உழைப்புதான்.. வேலன்னு வந்துட்டா குரு வெயிலு மழ எதுவும் பாக்க மாட்டாரு.. வேகாத வெயில்லயும் உழச்சு எம்மாம் வேர்வை பாரு..




அப்பாலிகா, குருநாதர் ஃபேமிலி போட்டோ.. இதுதான் நம்ப புரொபைல்ல இருக்கறது....



அவ்வளவுதாம்பா நம்ப போட்டோ ஆல்பம்..

இன்னாது.. இந்த அரைபிளேடோட போட்டோவா..
நாம இங்க புச்சுதான்..
ஆனா பர்ஸ்ட்டு கத்துக்னதே இங்க போட்டோ போட்டா டேஞ்சருன்ற மேட்டருதான்..

அப்பால வூட்டம்மா தப்பி தவறி போட்டோ பாத்து நாமதான் எயுதுறோம்னு கண்டுபுட்சிட்டாங்கன்னா.. இரண்டு நாளக்கி சோறு தண்ணி கடிக்காதுபா...

அதுக்குதான் நாம எப்பவுமே சேஃபா நம்ம போட்டோ போடாம உட்டுடறோம்..

என்னா சொல்றீங்கோ?

Sunday, December 10, 2006

ஆண்பெண் சமஉரிம...

ஆண்பெண் சமஉரிம, ஆண்பெண் சமஉரிம அப்படின்றாங்களே. அது ஒரு நல்ல விஷயம்.

இந்த உலகத்துல ஆம்பளயாவது பொம்பளயாவது எல்லாருமே ஈக்வல்தான். அதுல டவுட்டே கடியாது...

ஆனா, எனக்கு ஒரு டவுட்டு. இந்த சமஉரிமைக்கு யார் யாருக்கு வுட்டுத்தரணும்.. சமுதாயத்துல யாருக்கு அதிக உரிம கீது..


பொம்பளைங்களுக்கு சுதந்திரம் இல்ல.. நினச்சா நினச்ச இடத்துக்கு நினச்ச நேரத்துல போ முடியல.. இதல்லாம் ஒரு கண்ட்ரியா அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா.. கரக்டுதான்.

கரக்டுதாங்க இல்லன்ல.. எல்லாமே கரீக்டுதான்..
ஆனா பாருங்க இந்த சமுதாயம் கீதே.. அது பொம்பளைங்கள மட்டும் குடும்பம்ன்ற அமைப்புல கட்டி வச்சுல்ல.. ஆம்பிளையையும் சேத்தேதான் கட்டி வச்சி கீது...
ஆம்பிளைங்களுக்கு மட்டும் இங்க சுதந்திரம் கொடி கட்டி பறக்குதா என்ன..

சுதந்திரம், சந்தோஷம் எல்லாம் மனசுல கீது..
பொண்டாட்டி திட்னாலும் நம்ப நல்லதுக்குதான் சொல்றாங்கோன்னு நினச்சீங்கன்னா அது சந்தோஷம்..
ஆறுமணிக்கு டான்னு வீட்ல நிக்க முடியலன்னாலும் ஆறு அஞ்சிக்கு வூட்டுக்கு போயிட்டு அந்த அஞ்சி நிமிஷம் ஏன் லேட் ஆச்சின்னு பொண்டாட்டிக்கு எக்ஸ்பிளயின் பண்ண நம்மள அலெள பண்றாங்க பாருங்க அதுதான் நம்ப சுதந்திரம்..

இத நீங்க கஷ்டம்னு நினச்சீங்கன்னா, கஷ்டம்தான்.

ஆனா பாருங்க நாட்டுல இரண்டு சைடுலயும் கஷ்டம் கீது.. பொண்டாட்டி கையால அடி வாங்கற ஆம்பிளைங்களும் நிறயவே கீறோம்.. ஆனா அத்த வெளிய சொல்லி ஆணுரிம வேணும்னு கேக்க முடியுமா... இன்னாயா நீ ஆம்பிளை, பொம்பளை கையில அடிவாங்கறியேன்னு பொம்பளைங்களே கேட்டுடுவாங்கோ... அடக்கி வாசிக்க வேண்டி கீது...

ஒத்துக்கறேன்.. ஆண் பெண் சம உரிம வேணும்.. அதாவது வூட்ல பொம்பளைங்களோ, இல்லாட்டி ஆம்பளையோ யாருக்கு இப்பத்திக்கி உரிம ஜாஸ்தியா கீதோ அவங்க யோசிச்சு மத்தவங்களுக்கும் சமமா உரிமய தரணும்... அதுதான் கரிக்டு..

இன்னும் அந்த காலத்தையே எயுதிக்னு.. அப்படி பண்ணிட்டாங்க.. இப்படி பண்ணிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு..... நாம 21ஸ்ட்டு செஞ்சுரில இல்ல இருக்கோம்... நாலு நாளக்கி முன்னாடி சமச்சத ஃப்ரிட்ஜில வச்சு சுட பண்ணி சாப்டுக்னு, டிவி சீரியல் பாத்துக்னு இருக்கோம்.. அடுத்த வேள சாப்பாட்டுக்கு நாம சமச்சாதான் உண்டு..
சும்மா இன்னும் எக்சாம்பிளுக்கு தேவையில்லாம சீதை, கண்ணகி, நளாயினின்னு யார் யாரையோ இழுத்துக்கினு.. ஆமா இவங்கள்ளாம் யாரு...

தெரியாம எக்ஸ்ட்ராவா இரண்டு வார்த்தை வுட்டம்னா டைவார்ஸ்னு சொல்றவங்க இருக்கற நாட்டுல போயி...

தகிரியமா எயுதிட்டேன். நம்ப வூட்டுக்காரம்மா தமிழு பிளாக்கெல்லாம் படிக்க மாட்டாங்க... அல்ட்ரா மாடர்ன்.. தமிழு பிளாக்கெல்லாம் நம்பள மாதிரி பொயக்க தெரியாத புண்ணாக்குங்கதான் படிக்கும்.. எயுதும்... ஒயுங்கா வேலைக்கு போனோமா வந்தமா, பொண்டாட்டி பேச்ச கேட்டோமா வாய்க்கையில முன்னேறினமா, எக்ஸ்ட்ராவா சம்பாதிச்சு வூட்டுக்காரம்மாவ சந்தோஷமா வச்சிருக்கமான்னு இல்லாம.. இங்கல்லாம் வந்து தேவையில்லாம எயுதிக்னு.. ஏதோ இரண்டு மூணு பெண்ணுரிம பதிவ படிச்சமா.. சரி சரின்னு போயிக்னே இருந்தமான்னு இல்லாம... இன்னாமோ ஆணுரிம அது இதுன்னு எயுதிக்னு... இன்னாமோ எயுதனும்னு தோணிச்சு.. எயுதிட்டேன்...

நானும் உங்க சைடுதான்... வாய்க மகளிர் உரிம....

தாங்ஸ்ங்க....

புள்ளய அடிக்க போறீங்களா..



நமக்கு தெரிஞ்ச ஃபிரண்டோட ஃபிரண்டோட ஃபிரண்டுவோட கத இது..

இருங்க.. இருங்க.. கதிய சொல்லிடுறேன்..

அவருபா.. அமெரிக்கால நல்ல வேல..

அங்கியே கிட்டதட்ட கல்யாணம் புள்ள குட்டின்னு செட்டிலாயிட்டாரு...

இதுல பாரு.. 6 வயசு புள்ள..

அங்கியே பள்ளி கூடம் போவுது...

இவரு இன்னா பண்ணாரு.. ஒருநா கேவாவத்துல புள்ளய போட்டு அடிச்சு பூட்டாரு...

அந்த புள்ள இன்னா பண்ணுச்சாம் தெரியமா..

அமெரிக்கால புள்ளங்களுக்கு மதிப்பு ஜாஸ்தின்னு தான் தெரியமே...

கால் பண்ணுச்சாம்பா ஒரு நம்பர..

எங்கப்பா என்னிய போட்டு அடிக்கிறாருன்னு சொல்லுச்சாம்..

வந்ததாம் பாரு போலீஸ்.. நம்ப ஆள அள்ளி போட்டு உள்ளாற தள்ளி.. விசாரிச்சு.. நம்ப ஆளு கடசில தலையால தண்ணி குடிச்சு வெளியில வந்துட்டாராம்..


வீட்டுக்கு வந்தவரு புள்ளய ஒண்ணும் சொல்லல...

வந்தவரு பேக்கப் பண்ண ஆரம்பிச்சாரு...

ஒரு வாரம் தான்... புள்ளய அள்ளிப்போட்டுக்னு மெட்றாஸ் வந்து இறங்குனாரு...

இந்தியா மண்ண மிதிச்சதும்..

ஏர்போர்ட்லயே வச்சு பையனுக்கு வுயுந்தது பாரு அடி...

இப்போ கூப்ட்றா போலீசை, இப்போ கூப்ட்றா போலீசைன்னு சொல்லி சொல்லி வுயுந்ததாம் பாரு அடி.. அடியா அது.. இடி..

ஒரு வாரமா அடக்கி வெச்ச கோபம் இல்ல...

அதுக்கப்புறம்தான் அவரு அமைதியானாரு..

அடுத்த வாரம் அமெரிக்கா திரும்பினாரு.. பையன அவங்க தாத்தா பாட்டி கிட்ட வுட்டுட்டு..

அதனால மக்களே ஜாக்கிரதையா இருங்க..
அப்பா அம்மா அடிச்சா இந்த நம்பருக்கு கால் பண்ணுன்னு அமெரிக்கால பள்ளிகூடத்துலயே சொல்லி தர்றாங்களாம்.

இன்னாபா ஊரு இது. பெத்த புள்ளய போட்டு அடிக்க அப்பன் ஆத்தாக்கு உரிம இல்லன்னு சொல்லிக்கிட்டு...

நீங்க இன்னா சொல்றீங்கோ..



.................................................................

அடிஜனல் ஸ்டோரி


நம்ப ஊர்ல கிராமத்துல ஒரு அப்பா புள்ள.. விவசாயிங்கோ..
அப்பாக்கு வயசு 65. புள்ளக்கி 40..
65 வயசு அப்பா கோவம் வந்து ஒரு நாள் 40 வயசு புள்ளய முதுகுல ஓங்கி அடிச்சாரு..

பையன் ஓன்னு அழ ஆரம்பிச்சிட்டான்..

அப்பாக்கு ஒண்ணும் புரியல..

இந்த புள்ளய நாம எவ்ளோ காலமா அடிக்கிறோம்... இவ்ளோ காலமா அழாத புள்ள இப்ப போயி இப்பிடி அயுவுதேன்னு..

கேட்டுட்டாரு.. ஏன்பா அடி பலமா பட்டுருச்சான்னு..


புள்ள சொன்னானாம்.. "இல்லபா.. இவ்ளோ நாளா நீங்க அடிச்சீங்கன்னா அடி பலமா வுயும்.. இன்னிக்கி நீங்க அடிச்சது வலிக்கவே இல்ல.. உங்களுக்கு வயசாயி கையில பலம் போயிடுச்சேன்னு நினைச்சு அயுவுறேன்"னு..

இது புள்ள.. இது பாசம்.. நம்ப ஊரு, நம்ப ஊருதான்.. கரீக்டா..



Wednesday, December 06, 2006

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை

காட்சி 1

இரவு நேரம்...
கண்விழித்து பணி செய்கிறான் நமது கதாநாயகன் கல்யாணராமன்.. எட்டு மணி நேரத்தில் வேலை முடியும் என்று ஒப்புக்கொண்ட தன் மேலாலரின் வாக்கை காப்பாற்ற பதினெட்டு மணி நேரம் உழைப்பவன்..



பால்பாண்டி என்டரிங்..

பால்பாண்டி: ஏய் கல்யாணம் என்னடா பண்ற... எனக்கு நைட்டு ஷிப்டு முடிஞ்சிருச்சி.. பகல் 9 மணியாவ போது.. வாடா வீட்டுக்கு போகலாம்..


கல்யாணம்: இரு மச்சி. கிளையண்டு கேட்ட ரிப்போர்ட்டு ஒண்ணு பெண்டிங்ல இருக்கு. முடிச்சிட்டு வந்துர்றேன்..

பால்பாண்டி: கிழிஞ்சது போ.. ரொம்ப மாடு மாதிரி உழைக்காதடா.. அப்புறம் மாடு ஆப் த மன்த் அவார்டு குடுத்துடுவாங்க.. எனக்கு தான் நைட்டு ஷிப்டு, நேத்து காத்தால 9 மணிக்க வந்தவன் நீ.. இன்னிக்கு காத்தால 9 மணியாயிடுச்சி... வீட்டுக்கு போக வேண்டாம்..

பங்கஜ் பாண்டே என்டரிங்..

பங்கஜ்: ஏய் பாண்டி.. ஏய்.. கல்யாண்ம்.. ஹவ் ஆர் யூ..

பால்பாண்டி: கேட்கமாட்டடா.. மூணு மாசமா பெஞ்சில கீற.. எஞ்சாய் பண்ற...

பங்கஜ்: யூ ஸீ ஐ யம் ரிசர்வுடு பார் ஆன் சைட். கோயிங் நெக்ஸ்ட் வீக்கு..


கல்யாணம்: நெக்ஸ்ட் வீக்கா... நானும்தான் இதோ அதோன்னு நாலு வருஷமா உட்காந்துக்கிட்டு இருக்கேன்.. இவன் மும்பையில இருந்து மூணு மாசம் முன்னாடிதான் வந்தான்..

பாண்டி: வுடு மாமு.. எல்லாம் காலா காலத்துல நடக்கும்..

கல்யாணம்: இவன் வேற எதுடா காலாகாலத்துல நடக்குது.. எனக்கு 29 வயசாகுது.. இன்னும் மூணு மாசம் போனா முப்பது ஆயிடும்.. இன்னும் கல்யாணம் கூட நடக்கல..

பாண்டி: இது ஒரு பிரச்சனையா மாமு.. கல்யாணம் பண்ணி வைங்கன்னு வீட்ல கேட்க வேண்டியதுதான..

கல்யாணம்: வெக்கத்த விட்டு கேட்டுட்டேண்டா.. எங்க அண்ணன் ஒருத்தன்.. உனக்குதான் தெரியுமே.. கல்யாணமே வேண்டாம்னு உட்காந்துக்னு இருக்கிறான்.. அவன் இப்படி இருக்கிறப்ப எனக்கு எப்படிடா கல்யாணம் நடக்கும்..

பாண்டி: மேட்டரு இவ்ளோதானா. கவலைய உடு மாமு.. பெரியவங்க கல்யாணம் பண்ணி வெக்கலன்னா இன்னா.. இருக்கவே இருக்கு லவ்வு மேரேஜி..

கல்யாணம்: இன்னாது லவ்வு மேரேஜா..

பாண்டி: இன்னாடா வாய புளக்கற.. ஒரு பொண்ண புடி.. காதலாலேயே அடி.. கல்யாணத்த முடி..

கல்யாணம்: சரி மச்சி. என்னை ஒரு பொண்ணாவது லவ் பண்ணணுமேடா..

பாண்டி: உனக்கு இன்னாடா குறை. சாப்டுவேரு இஞ்சினியரு. கை நிறைய சம்பாதிக்கிற.. ஒரு புடிச்ச பொண்ணா பாத்து லவ்ஸை சொல்லி ஸ்டெப் எடு மாமு..


கல்யாணம்: எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ண புடிச்சிருக்குடா..

பாண்டி: அடப்பாவி சொல்லவேயில்ல. யாருடா அது.. அவ பேரு என்ன

கல்யாணம்: பேரு தெரியாதுடா

பாண்டி: பேரு தெரியாதா.. போச்சிடா அடுத்து அவ யாரு எங்க இருக்கா ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லுவ.. உனக்காக நான் உன் கூட சேந்து அவள தேடி ஊரு ஊரா சுத்தனமா.. தமில் சினிமா நிறைய பாக்காதீங்கடான்னா கேக்கறீங்களா.. சரி அவ எப்படி இருப்பா அதயாவது சொல்லு..

கல்யாணம்: தேவதை மாதிரி இருப்பா.. அவள பாத்த அடுத்த நிமிடம் என் மனசுல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி இருந்தது..

பாண்டி: கல்யாணம் பன்றதுக்கு முன்னாடிதாண்டா ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். கல்யாணம் பண்ணி பாரு அடுத்த நாளே அது பீஸ் போகும்..

கல்யாணம்: சும்மா இருடா.. அவளோடா அந்த அழகான முகம். நாள் முழுக்க பாத்துகிட்டே இருக்கலாம்.. காலேஜ் பஸ் ஸடாண்டுல நான் அவள டெய்லி பாப்பேண்டா.. பஸ் ஸ்டாப்புல பஸ்ல இருந்து அவ இறங்க நான் ஏற அவ புஸ்தகம் ஒண்ணு கீழ விழ நான் எடுத்து கொடுக்க..

பாண்டி: நிறுத்து. நிறுத்து. காலேஜ் பஸ் ஸ்டாண்டா. அப்படின்னா அந்த பொண்ணு அந்த காலேஜி பொண்ணாதான் இருக்கும். இப்ப காலேஜிக்கு பொண்ணுங்க வர்ற நேரம்தான்.. நாம அங்க போறோம்.. நீ அந்த பொண்ணுக்கு ஐ லவ் யூ சொல்ற...

கல்யாணம்: நானா..

பாண்டி: பின்ன உங்க தாத்தாவா. உனக்குதானடா கல்யாணம் ஆகணும்...

கல்யாணம்: எப்பிடிடா முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்றது..

பாண்டி: டேய் வாழ்க்கையில ஒரு சிலத அடையணும்னா ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்.

கல்யாணம்: இப்ப என்னை என்ன பண்ண சொல்ற

பாண்டி: இப்ப கேட்டியே இது கேள்வி. நீ இன்னா பண்ற. ஒரு லட்டரு எயுதுற. அப்புறம் கையில ஒரு ரோஜாப் பூ.. உன் வாய் புல்லா சிரிப்பு.. அப்பிடியே குடுக்குற.. உன் லவ்வ சொல்லிக்கிற

கல்யாணம்: இது சரி வரும்னா சொல்ற

பாண்டி: களத்துல இறங்கு. நான் இருக்கறன். இப்போ நாம நேரா பஸ் ஸடாப்புக்கு போறோம்.

இருவரும் கிளம்புகிறார்கள்.
காட்சி 1 முடிந்தது..






----------------------------------------------------------



காட்சி 2

பஸ் ஸ்டாண்டு டீ கடை
இன்ஸ்பெக்டர் மாதவன் நாயர், கான்ஸ்டபிள் கோவிந்து

மாதவன் நாயர்: கோவிந்தோ, நாம இவ்விட எதுக்கு இரிக்குன்னு நீ அறியுமோ..

கோவிந்து: (மனசுக்குள்) என்னத்த அறியறது.. காலையில கூட்டியாந்து இந்த டீ கடையில நிறுத்திட்ட. ஒரு டீ கூட வாங்கி தரல..
(சத்தமாக) தெரியலியே சார்

மாதவன்: நாம இங்க மப்டியில எதுக்கு நிக்கறோம்னா.. இது லேடீஸ் படிக்கிற காலேஜ்.. இங்க சில ரவுடி பசங்க ஈவ் டீஸிங் பண்றாங்கன்னு நமக்கு தகவல் வந்திருக்கு.. நாம இங்க நிக்கும்.. அந்த ரவடிகளை புடிச்சி லட்டிக்கு லட்டி முட்டியால தட்டும்.. சே.. முட்டிக்கு முட்டி லட்டியால தட்டும்...

கோவிந்து: (மனசுக்குள்) ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்
(சத்தமாக) சரி சார். இவன்கள விட கூடாது சார்..


மாதவன்: இப்படிதான் எங்க தாத்தா மலபார் போலீஸ்ல இருந்தப்ப..

கோவிந்து: நிறுத்துங்க சார், தாங்க முடியல. இந்த கதயெல்லாம் எத்தனை தடவ சொல்வீங்க. காலையிலே அவசர வேல வா அப்படின்னு சொன்னதும்.. நானும் ஏதோ பெரிய கேஸ் மாட்டிக்குச்சு.. லம்பா அள்ளலாம்னு நினைச்சு வந்தா.. சிங்கிள் டீக்கு கூட வக்கு இல்லாம ஒரு மணி நேரமா நின்னுட்டு இருக்கன்..

மாதவன்: அவ்வளவுதான வா நாம சாயா குடிக்கும். ஆனா சாயாக்கு இரண்டு ரூபா நீதான் பே பண்ணும்..

கோவிந்து: பண்ணி தொலயறன்.. பன்னுக்கு காசாவது நீங்க கொடுங்க..

(இருவரும் போதல்..
கல்யாணராமன், பால் பாண்டி எண்டரி.. )

பாண்டி: மாமு இதுதானே உன் ஆளு வர்ற டைமு..

கல்யாணராமன்: ஆமாடா

பாண்டி: ஆமா அவ அழகா இருப்பான்றத தவிர அவள பத்தி வேற ஏதாவது தெரியுமா

கல்யாணராமன்: அவ பேரு சுதான்னு நினைக்கிறேன். அன்னிக்கு கீழ விழுந்த புக்குல சுதான்னு பேரு எழுதியிருந்துச்சு. அப்புறம் கூட வந்த பிரண்டுகிட்ட தெலுங்கிலயே பேசினா..

பாண்டி: தெலுங்கு பொண்ணா.. தெரிஞ்ச தமிழ்ல பேசியே பொண்ண கரெக்ட் பண்றது கஷ்டம். நீ தெலுங்க வச்சி என்ன பண்ண போறியோ..

கல்யாணம்: அங்க பாருடா அவ பஸ்ல இருந்து இறங்கறா...

பாண்டி: மாமு இதுதான் சரியான டைமு.. கப்புனு போய் கபால்னு கடுதாசிய கொடுத்து காதலை சொல்லிடு..

கல்யாணம்: பயமா இருக்குடா..

பாண்டி: தெகிரியமா போ மாமு... தில்லா லவ்வ சொல்லு.. பெஸ்ட் ஆப் லக்..

(கல்யாணம் மெதுவாக சுதாவை நோக்கி முன்னேறுகிறான். )



கல்யாணம்: எக்சூயுஸ் மீ...

சுதா: எஸ்

கல்யாணம்: ஐ ஆம் கல்யாண ராமன். இன்னுங் கூட கல்யாணம் ஆகாத ராமன்

சுதா: மீரு எவரு நாக்கு தெள்ளிதே

கல்யாணம்: (மனசுக்குள்)என்னது நாக்கு தள்ளுதா.. மாமு நேரா மேட்டருக்கு வா.
(சத்தமாக) மிஸ் ஐ லவ் யூ.

சுதா: ஏமி

கல்யாணம்: இதுவா, இது கார்டு, இது ரோஜா பூ. உனக்குத்தான்

சுதா: ஆ...

(சுதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் பாய்ந்து வருகிறார்கள். கல்யாண ராமனுக்கு தர்ம அடி விழுகிறது)

கல்யாணம்: எங்கடா இருந்தீங்க .. இத்தனை பேரும்.. மொத்தமா கிளம்பி வந்து மொத்தி எடுக்கறீங்களே...

(மாதவனும் கோவிந்தும் என்ட்ரி )

மாதவன்: எந்த இங்க கலாட்டா.. எந்த இங்க கலாட்டா..

கல்யாணம்: வாங்க சார். இவங்க பத்தாதுன்னு நீங்க வேற அடிக்க கிளம்பி வந்துட்டீங்களா..

கோவிந்து: நாங்க போலீஸ்..

கல்யாணம்: வாங்க சார் ஒரு நிமிஷம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா, ஒரு அப்பாவியை போட்டு இந்த அடி அடிச்சிட்டாங்க சார்

மாதவன்: நிறுத்து மேன். எல்லாம் எனக்கு தெரியும். யான் நோக்கி. நீ ஈ பெண்குட்டி வழி மறிச்சு வம்பு செய்ந்நு..

சுதா: சார்...

மாதவன்: நீ ஏதும் பறையண்டா அம்மே. ஈயாள் உன் கைய பிடிச்சு இழுத்தில்லோ..

சுதா: அதி காது சார்

மாதவன்: என்ன காத பிடிச்சு இழுத்தோ

கல்யாணம்: இன்னாடாது. ஜெமினி சானலும் சூர்யா சானலும் மாத்தி மாத்தி ஓடுது.. சார் என்னை விடுங்க சார். நான் அப்பாவி

கோவிந்து: அப்ப இது என்னையா கையில

கல்யாணம்: இது லட்டர்.. இது பூ..

மாதவன்: நான் இக்கள்வனை லட்டரும் கையுமாய் பிடிச்சு..

கல்யாணம்: நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..

கோவிந்து: நீ ஒண்ணும் சொல்ல வேணாம்

கல்யாணம்: ஒண்ணு சொல்ல கூடாதா, அப்ப ரெண்டு சொல்லலாமா..

மாதவன்: எனக்கு இந்த ஒண்ணு ரெண்டு எல்லாம் தெரியாது..
எனக்கு தெரிஞ்சது மூணு...

கோவிந்து: என்ன அது

மாதவன்: கடமை கண்ணியம் கட்டுப்பாடு... கோவிந்து ஈயாளை வேன்ல ஏத்து...

கல்யாணம்: சார் சார் என்னை விட்டுடுங்க சார் எனக்கு எதுவும் தெரியாது சார். எல்லாம் என் பிரண்டு சொல்லி தான் சார் செஞ்சேன்..

கோவிந்து: யார் அது

கல்யாணம்: அதோ டீ கடையில நிக்கறான் பாருங்க சார்

கோவிந்து: ஓடறான் சார்.. இருங்க நான் போய் பிடிச்சுட்டு வர்றேன்..

(கோவிந்து பால்பாண்டிய பிடித்து வருதல் )

பால்பாண்டி: டேய் துரோகி.. விடுங்க சார்.. சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டு என்னை வேற மாட்டி விட்டுட்ட

கல்யாணம்: சாரி நண்பா.. போலீஸ் புடிச்சதும் உளறிட்டேன்

பால்பாண்டி: சார் இன்ன நடந்துச்சுன்னா..

மாதவன்: ஸ்டாப். எனிதிங் யூ டெல் போலீஸ் ஸ்டேசன். யூ ஆர் அண்டர் அரஸ்ட்...

கல்யாணம் பால்பாண்டி: சார்ர்...

மாதவன்: மூவ்..

சுதா: சார்...

கோவிந்து: நீ கவல படதம்மா. இவங்களை உள்ள தள்ளறது எங்க பொறுப்பு. நீ இப்ப நேரா எங்க கூட வந்து சாட்சி சொன்னா போதும்..

சுதா: சார்......

மாதவன்: நோக்கம்மா நீ வந்து பறைஞ்சால்தான் யான் ஈயாட்களை உள்ள வைக்கும். நீயும் எங்க கூட வரும்..

பால்பாண்டி: எங்க சார் போறோம்..

மாதவன்: நேராயிட்டு கோர்ட்டு. யான் உங்களை மாஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர் செய்யும்....

(வண்டி கிளம்புகிறது..)

(காட்சி 2 முடிந்தது... )



------------------------------------------------------------


காட்சி 3

(நீதிமன்றத்தில் கல்யாணராமன், பால்பாண்டி, சுதா, மாதவன் நாயர், பப்ளிக் பிராசிக்யூட்டர் பாரிஸ்டர் ரஜினிகாந்த், ஜட்ஜ் மற்றும் பார்வையாளர்கள்)


பாரிஸ்டர்: மைலார்டு. இது நான் பப்ளிக் பிராசிக்யூட்டராகி எடுத்துக்குற முதல் கேஸ்.

ஜட்ஜ்: கங்கிராட்ஸ் பாரிஸ்டர் ரஜினிகாந்த். யூமே புரசீட்

பாரிஸ்டர்: இது ஒரு ஈவ் டீஸிங் கேஸ். இதோ இங்கு அழைத்து வரப்பட்டுள்ள...

பால்பாண்டி: திருத்திக் கொள்ளுங்கள். அழைத்துக் கொண்டு வரவில்லை. இழுத்துக் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.

கல்யாணம்: டேய் சும்மா இருடா..

பாரிஸ்டர்: இந்த வழக்கின் முதல் குற்றவாளி கல்யாணம் என்கிற கல்யாணரான். இரண்டாவது குற்றவாளி பாண்டி என்கின்ற பால்பாண்டி. இவங்க இரண்டு பேருமா சேர்ந்து பயங்கரமான ஒரு குற்றத்தை செஞ்சிருக்காங்க.. என்னன்னு கேக்கறேளா.. அதோ அந்த நிக்குதே பொண்ணு, அதை ஈவ் டீஸிங் செஞ்சிருக்காங்க. யுவர் ஆனர்...

கல்யாணம்: நாங்க அப்படி எதுவும் செய்யல.. இவர் சொல்றத கேக்காதீங்க..

ஜட்ஜ்: ஆர்டர்.. ஆர்டர்..

பாரிஸ்டர்: பண்ணறதல்லாம் பண்ணிட்டு கேட்டா பண்ணலம்பேள். உன்னை மாதிரி எத்தனை அயோக்கிய ராஸ்கல்ஸை பாத்திருக்கேன்டு நோக்கு தெரியுமோ..

பால்பாண்டி: தெரியாது. இப்பத்திக்கு நாங்க உங்கள மட்டும்தான பாத்துட்டிருக்கோம்.

பாரிஸ்டர்: யுவர் ஆனர். நமது இன்ஸ்பெக்டர் மாதவன் நாயரும், கான்ஸ்டபிள் கோவிந்தும் இவாள பயங்கரமான ஆயுதங்களோட பிடிச்சிருக்கா..

கல்யாணம்: ஆயுதமா

பாரிஸ்டர்: ஆமாம். இதோ கல்யாணம் வைத்திருந்த கிரீட்டிங் கார்டு.. ரோஜா பூ.. லவ் லட்டர்... இதை வைத்து கல்யாணமாகிய இவர் இந்த பெண்ணை கலாய்த்திருக்கிறார்.. இதற்கு பாண்டி உடந்தையாயிருந்திருக்கிறார். கல்யாணமாகிய இவர் இந்த பொண்ணுடைய கைய பிடித்து இழுத்திருக்கிறார்.

கல்யாணம்: கைய பிடிச்சனா.. அபாண்டம்.

ஜட்ஜ்: ஆர்டர். ஆர்டர். ஏம்பா உங்களுக்காக வக்கீல் யாராவது வாதாடுகிறாரா..

பால்பாண்டி: வக்கீல்.. என்ன தவறு செய்தோம் வக்கீல் வைப்தற்கு.. எங்களுக்காக நாங்களே வாதாடுகிறோம். யுவர் ஆனர்..

கல்யாணம்: டேய் கொஞ்சம் யோசிடா..

பால்பாண்டி: கவலைப்படாதே நண்பா.. இத்துணை நாளாக சென்னைத் தமிழ் பேசிய நான்.. எப்போது இக்கோர்ட்டின் கூண்டில் ஏறினேனோ அப்போதே நான் பார்த்த தமிழ் சினிமா கோர்ட் காட்சிகள் என்னுள் பொங்கி விட்டது... (ஜட்ஜை பார்த்து) நாங்களே வாதாடலாமா யுவர் ஆனர்

ஜட்ஜ்: பர்மிஜன் கிராண்டட்


பால்பாண்டி: இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது.. அவற்றில் இதுவும் ஒன்று.. இதோ நிற்கிறானே.. எனது நண்பன் கல்யாண ராமன்.. இவன் இன்னும் ஒருமுறை கூட கல்யாணம் ஆகாத ராமன். கல்யாணம் செய்யாமல் காலம் கடத்திய வீட்டினர்... தம்பிக்கு வழிவிட முதலில் தான் கல்யாணம் செய்ய வேண்டுமே என்று கூட சிந்திக்காத தறுதலை அண்ணன்..

கல்யாணம்: டேய்...


பாண்டி: இரு நண்பா... வீட்டினர் செய்யாத வேலையை தானே செய்ய ஓடினான். கன்னி ஒருத்தியை தேடினான். எத்துணைதான் நூல் விட்ட போதும் ஒருத்தியும் கிடைக்கவில்லை.. கல்யாண ராமன் ஓடினான்... ஓடினான்.. வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடினான்.. அவன் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும். ஒருத்தியாவது அவனை திரும்பி பார்த்திருக்க வேண்டும். செய்தார்களா... கல்யாணம் செய்ய விட்டார்களா என் கல்யாணராமனை..

(பாரிஸ்டர் எழுகிறார்)

உனக்கேன் இந்த அக்கறை. யாருக்கும் இல்லாத அக்கறை என்றுதானே கேட்க வருகிறீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன்.. நேரடியாக பாதிக்கப்பட்டேன்.. இக்கல்யாண ராமனின் புலம்பல்களால் நொந்து நூலானவர்களில் நானும் ஒருவன். முடிவெடுத்தேன் கல்யாணராமனுக்கு கல்யாணம் செய்து வைப்பது என.. அது குற்றமா.. காதலிக்க சொன்னேன்... அது குற்றமா.. காதலை குற்றமென்று சொல்கிறதா உங்கள் சட்டம்...

பாரிஸ்டர்: நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர். தூண்டியது தான்தானென பாண்டி ஒப்புக்கொள்கிறார்.. இட் ஈஸ் எ பிரீ பிளான்ட் அஸால்ட் ஆன் திஸ் புவர் கேர்ள்.. இவர்கள் இருவருக்கும் ஈவ் டீஸிங் குற்றத்துக்காக குறைந்த பட்ச தண்டைனயாக ஆயுள் தண்டனை தர வேண்டுகிறேன் யுவர் ஆனர்..

கல்யாணம்: அய்யயேயா அப்படி எல்லாம் இல்லை.. யுவர் ஆனர். ஐ லவ் திஸ் கேர்ள்..

பாரிஸ்டர்: என்னது லவ்வே பண்றியா. இத நான் ஒத்துக்க முடியாது..

பாண்டி: இன்னது. இவர் யார்றா ஒத்துக்க முடியாதுன்றதுக்கு..

கல்யாணம்: சொந்த தம்பிக்கு ஆயுள் தண்டனை வாங்கி தர பாக்குறியே நீயெல்லாம் ஒரு அண்ணனா..

பாண்டி: இன்னாது அண்ணனா.. இந்த வக்கீலு உன் அண்ணனா.. கல்யாணம் பண்ணாம தறுதலயா ஒரு அண்ணன் இருக்காருன்னு நான் டயலாக் விட்டனே அவரு இவருதானா.. சாரி சார்..

பாரிஸ்டர்: பரவாயில்லை தம்பி. எனக்கு கடமைதான் முக்கியம். எனக்கு தெரிஞ்சதெல்லாம் மூணுதான்..

பாண்டி: உங்களுக்குமா.. என்னாது அது..

பாரிஸ்டர்: நீதி, நேர்மை, நியாயம்.. கடமைன்னு வந்துட்டா கூட பிறந்த தம்பின்னு கூட பாக்க மாட்டான் இந்த பாரிஸ்டர் ரஜினி காந்து..

கல்யாணம்: டேய் அண்ணா. தயவு செஞ்சி இந்த பொண்ணையாவது எனக்கு கல்யாணம் பண்ணி வைடா....

பாரிஸ்டர்: சரிடா.. இதுக்கு நான் ஒத்துக்கலாம்டா. அந்த பொண்ணோட அப்பன் ஒத்துக்கணுமே..

ஜட்ஜ்: இவ்ளோ நடந்துருச்சு.. ஒத்துக்காம என்ன பண்றது..

பாரிஸ்டர்: யுவர் ஆனர்

ஜட்ஜ்: நீ சொன்ன அந்த பொண்ணோட அப்பன் நான்தான்யா..

கல்யாணம், பாண்டி, பாரிஸ்டர்: (மூவரும்) அப்பாவா ?????

சுதா: நானா..

ஜட்ஜ்: ஏம்மா.. மீக்கு வாடு நச்சிந்தா..

சுதா: அவுனன்டி நானா.. நேனு பிரேமிச்சுன்னானு..

கல்யாணம்: யே... சக்ஸஸ்.. போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி..

சுதா: மீரு லேதண்டி.. மீரு ஃபிரண்டே நாக்கு இஷ்டம்..

கல்யாணம்: என்னாது

பாண்டி: யூ... யூ.. யூ மீன் யூ லவ் மீ....

சுதா: (வெட்கத்தோடு) அவணன்டி...

பாண்டி: ஐ டூ லவ் யூ

கல்யாணம்: டேய் துரோகி..

பாண்டி: சாரி நண்பா.. என் லைஃப் டைம்ல ஒரு பொண்ணு ஃபர்ஸ்ட் டைம் என்னை பாத்து ஐ லவ் யூ சொல்லியிருக்கு.. எப்படி நண்பா என்னை வேண்டாம்னு சொல்ல சொல்றே...

கல்யாணம்: துரோகி டயலாகா பேசி.. பிகர கவுத்திட்டியேடா..

ஜட்ஜ்: ஏம்மா அப்ப உனக்கு பாண்டிதான் நச்சிந்தா

சுதா: அவுனு நானா..

(ஜட்ஜ் கண்ணாடியை கழட்டி துடைத்துக்கொள்கிறார்)

ஜட்ஜ்: ஆர்டர்.. ஆர்டர்.. இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த இந்த கோர்ட் பால்பாண்டியை நிரபராதி என்று விடுதலை செய்கிறது..

பாண்டி: (மகிழ்ச்சியோடு) ஐயா, தாங்க்ஸ் மாமா..

ஜட்ஜ்: அதே நேரத்தில் பட்ட பகலில் ஒரு பெண்ணை ஈவ் டீஸிங் செய்த குற்றத்திற்காக கல்யாணத்திற்கு இந்த கோர்ட் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையளிக்கிறது.

கல்யாணம்: ஆ....

பாண்டி: (சுதாவை நெருங்கி) டார்லிங் நாம போலாமா..

(இருவருமாக கைகோர்த்து வெளியேறுகிறார்கள்)

கல்யாணம்: பிகரு பல்டியடிச்சிடுச்சி.. பிரண்டு கவுத்துட்டான்.. கடங்கார அண்ணன் தண்டனை வாங்கி கொடுத்துட்டான்.. என்னடா நடக்குது இங்க...

(பெண் போலீஸ் நெருங்கி வந்து)

பெண் போலீஸ்: ஏய் மேன் மூவ்

கல்யாணம்: அக்கா போலீஸ் அக்கா. நீங்க அழகா இருக்கீங்க. உங்க பேரு என்னங்கக்கா..

பெண் போலீஸ்: ம்ம்... ஓமனகுட்டி

கல்யாணம்: ஓமனகுட்டியோ.. என்னை இறுக்கியணைச்சு ஒரு உம்ம தருமோ..

ஓமனகுட்டி: ஒத தரும்...

(கல்யாணராமனுக்கு தரும அடி விழுகிறது).

(முற்றும்)

திரையில் எழுத்துக்கள்

என் இனிய தமிழ் மக்களே..
உங்கள் பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செய்து வையுங்கள்..
இல்லையேல் இந்த கல்யாண ராமனின் கதிதான் அவர்களுக்கும்...

அன்புடன்
அரைபிளேடு


கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி.. பார்ட் 3

மூன்றாம் பகுதி முழுநீள கதையில் இணைக்கப்பட்டு இங்கே உள்ளது

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை

Tuesday, December 05, 2006

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி.. பார்ட் 2

இரண்டாம் பகுதி முழுநீள கதையில் இணைக்கப்பட்டு இங்கே உள்ளது

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை

Monday, December 04, 2006

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி.. பார்ட் 1

முதல் பகுதி முழுநீள கதையில் இணைக்கப்பட்டு இங்கே உள்ளது

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை

இந்தி காக்கா கத...


முதல்ல இது பாட்டி வட சுட்ட கத இல்லன்னு தெளிவா சொல்லிக்றேன்..

இது நான் சின்ன வயசுல கேட்ட கத...

தாத்தாவோ பாட்டியோ சொன்ன கத இல்ல..

ஒரு பெரியவரு மேட போட்டு மீட்டிங் போட்டு சொன்ன கத...

இந்த பெரியவருக்கு தெரிஞ்ச இன்னோரு பெரியவரு இருந்தாராம்.

அவருக்கு ஒரு பெரிய வருத்தமாம்..

அதாவது... நம்ப இந்தியாவுல இந்திய ராஸ்ட்ர பாஷா ன்னு சொல்லி நேசனல் லாங்குவேஜி ஆக்கிட்டாங்களாம்...

ஆனா தமில அப்படி ஆக்கலியாம்...

இதனால இவரு அவிங்க கிட்ட போயி..

ஏம்பா, தமிழுக்கு என்னாப்பா.. குறைச்ச.. அத ஏன் நீங்க நேசனல் லாங்குவேஜி ஆக்கலன்னு கேட்டாராம்...

அதுக்கு அவங்க சொன்னாங்களாம்.. பாருங்க பெரியவரே.. இந்தி எல்லா எட்துலயும் கீது..

தமிழ் தமிழ்நாட்ல மட்டும்தான் கீது.. அதனாலதான் நாங்க அத நேஷனல் லாங்குவேஜி ஆக்கல அப்படின்னு சொன்னாங்களாம்..

அதுக்கு இவரு பதிலுக்கு கேட்டாராம் பாரு ஒரு கேள்வி....

"அப்பிடின்னா எல்லா எடத்திலியும் இருக்குற காக்காவ தேசிய பறவய ஆக்க வேண்டியதுதான.. ஏம்பா நீங்க மயில தேசிய பறவ ஆக்குனீங்கன்னு "

எனக்கு அப்பிடியே புல்லரிச்சு போச்சு...
தட்னேன் பாரு கைய...

நம்ப சின்ன புத்திக்கு இந்த கத சரியா தப்பான்னு சொல்ல தெரியல..
ஆனா எப்போவுமே பெரிய மன்சங்க சொன்னா சரியதான் இருக்கும்..

நீங்க என்னா சொல்றீங்கோ....