Tuesday, December 12, 2006

சரக்கு - சைடு எஃபக்ட்ஸ்...

இது சொந்த சரக்கு இல்ல. மெயில்ல இங்லீபீஸ்ல வந்த சரக்கு.
கூட நானும் சொந்த சரக்க சேர்த்து ஒரு மிக்ஸ் போட்டு இருக்கேன்.
குடிச்சி பாத்துட்டு.. சாரி.. படிச்சி பாத்துட்டு கருத்து சொல்லவும்...

வந்த சரக்கு

1. எஃபக்ட்: கால் ஈரமா கீதுன்னு ஃபீல் பண்றீங்கோ.

ரீஜன்: கிளாஸை நீங்க சரியா புடிக்கல. சரக்கு கால் மேல கொட்டிடிச்சி.

கரீக்சன்: கிளாஸை நேரா புடிக்கவும், நேரான்னா வாய்ப்பக்கம் மேல வர்ற மாறி.

2.
எஃபக்ட்: உங்களுக்கு நேரா கீற சுவருல ஏகப்பட்ட லைட்டு கீது.

ரீஜன்: அது சுவரு இல்ல. கூரை. நீங்க தரையில கீறீங்கோ.

கரீக்சன்: எயுந்து உக்காரவும்.

3. எஃபக்ட்: எதிர்ல கீறவங்க எல்லாம் மங்கலா தெரியறாங்கோ.

ரீஜன்: காலி கிளாஸை மூஞ்சிக்கு நேரா புட்சிக்னு கீறீங்கோ.

கரீக்சன்: கிளாஸ்ல அடுத்த ரவுண்ட ஃபில் அப் பண்ணவும்.

4.
எஃபக்ட்: தரை நகருது.

ரீஜன்: ஆக்சுவலா உங்கள நாலு பேரு தூக்கிக்னு போறாங்கோ.

கரீக்சன்: எங்க தூக்கிக்னு போறாங்கோன்னு கேட்கவும்.

5. எஃபக்ட்: கூரையில நிலா, நட்சத்திரம் எல்லாம் தெரியுது.

ரீஜன்: உங்கள தூக்கிக்னு வந்தவங்க உங்கள தெருவுல போட்டுட்டு போயிட்டாங்கோ.

கரீக்சன்: இதோட கரீக்சன் நீங்கோ எவ்ளோ தெளிவா கீறிங்கோன்றத பொறுத்தது.

6.
எஃபக்ட்: நீங்க இருக்கற ரூம் ரொம்ப ஆடுது. அதுல இருக்கறவங்க எல்லாம் வெள்ள டிரஸ் போட்டுக்ன இருக்காங்க.

ரீஜன்: நீங்க ஆம்புலன்ஸ்ல இருக்கீங்க.

கரீக்சன்: அமைதியா இருங்கோ. அவங்க, அவங்க கடமய கரீக்டா செய்வாங்கோ.

7. எஃபக்ட்: வீட்ல இருக்கறவங்க எல்லாம் உங்கள வித்தியாசமா பாக்கறாங்க.

ரீஜன்: நீங்க தப்பான வீட்ல இருக்கீங்கோ.

கரீக்சன்: அவங்க கிட்ட உங்க வீட்டுக்கு வழி கேட்கவும்.

சொந்த சரக்கு

8. எஃபக்ட்: உங்க ஃபிரண்டு உங்கள போட்டு அடிக்கிறாரு.

ரீஜன்: ஃபிரண்டுன்னு நினைச்சு போலீஸ்காரரு தோள்ல கைய போட்டுக்னீங்கோ.

கரீக்சன்: கம்னு இருக்கவும். பேசறது தப்பு. சட்டம் தன் கடமய செய்யும்.

9.
எஃபக்ட்: சும்மா ஜில்லுன்னு கீது. அருவில குளிக்கிற மாதிரி.

ரீஜன்: நீங்கோ ஏதோ ஒரு டிரெயினேஜில இருக்கீங்க.

கரீக்சன்: சத்தம் போடவும். அப்பதான் யாராச்சும் ஹெல்ப் பண்ணுவாங்கோ.

10. எஃபக்ட்: உங்க பக்கத்தல பூரி கட்டை, துடைப்ப கட்ட எல்லாம் இருக்கு. உங்க உடம்பு ஃபுல்லா வலி.

ரீஜன்: உங்க பொண்டாட்டி நீங்க குடிச்சத கண்டுபிடிச்சிட்டாங்க.

கரீக்சன்: சாரி. இதுக்கு கரீக்சன் கடியாது.

---------------------------------------------

பி.கு.: எஃபக்ட், ரீஜன், கரீக்சனோட அளவு எத்தினி ரவுண்டுன்றத பொறுத்தது.

37 comments:

said...

குறிப்பா 4வது எபெக்ட் செம காமெடியா இருக்கு..:-)!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//எஃபக்ட்: உங்க பக்கத்தல பூரி கட்டை, துடைப்ப கட்ட எல்லாம் இருக்கு. உங்க உடம்பு ஃபுல்லா வலி.

ரீஜன்: உங்க பொண்டாட்டி நீங்க குடிச்சத கண்டுபிடிச்சிட்டாங்க.

கரீக்சன்: சாரி. இதுக்கு கரீக்சன் கடியாது.//

கரீக்சன் : இனிமே பொண்டாட்டி ஊருக்கு போனா மட்டும் கவுத்துட்டு கவுந்துருங்கோ :)))

அரை! கலக்குறே மக்கா நல்லாதேன்கீது. இன்னோரு ரவுண்டு ஊத்துறது? !!! ;)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தனமுல்லை

நம்ப பேஜிக்கு விசிட் அடிச்சதுக்கு தாங்ஸ்... :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

///
10. எஃபக்ட்: உங்க பக்கத்தல பூரி கட்டை, துடைப்ப கட்ட எல்லாம் இருக்கு. உங்க உடம்பு ஃபுல்லா வலி.

ரீஜன்: உங்க பொண்டாட்டி நீங்க குடிச்சத கண்டுபிடிச்சிட்டாங்க.

கரீக்சன்: சாரி. இதுக்கு கரீக்சன் கடியாது.
///

இது எல்லாத்தை விட சூப்பர்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜொள்ளுபாண்டி..

/**********
கரீக்சன் : இனிமே பொண்டாட்டி ஊருக்கு போனா மட்டும் கவுத்துட்டு கவுந்துருங்கோ :)))
***********/

நீங்க சொல்றதும் கரீக்டுதான். ஆனா அது ஃப்யூச்சர் கரீக்சன்.
இங்க குட்துகிறது எல்லாமே இம்மீடியட் கரீக்சன்.

பொண்டாட்டி கண்டுபுடிச்சு பூரிக்கட்டையால சாத்துனா இம்மீடியட் கரீக்சன் ஏதும் கடியாது. :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க செந்தில் குமரன்

நம்ப பேஜை கண்டுக்னதுக்கு தேங்ஸ் :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)))))

சென்ஷி

நகைச்சுவையா வாய்விட்டு சிரிக்க முடிந்தது. :-)))

நிஜத்துலேயும் டிரெய்னேஜுக்குள்ள படுத்தவாக்கிலே நட்சத்திரம் எண்ணும் குடிமகனுக்கு ஒரே ஒரு கரீக்சன் : வெறும் லைம் சூஸ் மட்டும் குடி! பொண்டாட்டி புள்ளைங்க வாழ்க்கை + உன் வாழ்க்கையையும் நீ கவுந்து கிடக்கும் டிரெய்னேஜுக்குள்ளேயே இட்டாந்துரும் இந்தக் குடி குடிச்சா!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னா அரை ப்ளேடு!!!
இங்க போடுகிரியே இல்லாமே மெயில்ல வந்ச்சா நம்ப முடியிலியே... ஏதோ உன் அனுபவம்கீறா போல்க்கீதே...
உன்மைய சொல்லிடுங்க தல

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா எஃபெக்ட் கொடுக்கறபா....

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இப்பவே கண்ணக் கட்டுதே!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

செம சிரிப்பு அண்ணாத்தே. வாய் விட்டு சிரிச்சின்னு இருக்கேன்.
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சென்ஷி

கண்டுக்னு ஸ்மைல் பண்ணதுக்கு தாங்ஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஹரிஹரன்

சிரிப்புதான் இந்த பதிவுல மெயின்னாலும், அதுக்குள்றாற அதிகமா குடிக்கறது தப்பு மக்களேன்னு ஒரு மெஸேஜி ஒளிஞ்சிக்னு இருக்குன்னு கண்டு பிடிச்சி சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்..

அளவுக்கு அதிகமா குடிச்சிக்னா லைஃபே ஒரு டிரெயினேஜா பூடும். அதாவது வேஸ்டா பூடும்..

பிரிஞ்சிக்கங்க குடிமக்களே.....

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்ம "குடிமகன்" களுக்கு கோவம் வந்துரப்போவுது அரை பிளேடு. அப்பொறம் உங்களுக்கு ரீசன், கரெக்சன், எஃபெக்ட்ன்னு கொடுத்துறப் போறாங்கோ பாத்து.

:)))))

ஜோக்ஸ் சூப்பர்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

டுபுக்கு டிஸிப்பிள் அவர்களே..

கண்டுக்னதுக்கு தாங்ஸ்..

ஒரு வகையில அனுபவம்தான்.. கூட கீறவங்கோ குடிக்கறாங்க.. நாம கண்டுக்கறோம்..

குடிச்சிட்டு கவுந்துடறவங்கள விட, கூட ஸ்டடியா கீறவங்க ரொம்ப பாவம்பா.. அவங்க லொள்ள எல்லாம் தாங்கிக்னு கரீக்டா வூட்ல கொண்டு வுடனும்ல..

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி..

/***நல்லா எஃபெக்ட் கொடுக்கறபா***/

எஃபக்ட் மட்டும் இல்ல. நல்லா பாருங்க ரீஜன், கரிக்சன்லாம் கூட குடுத்து இருக்கேன். :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கைப்புள்ள தல,

வந்து சிரிச்சிக்னதுக்கு தாங்ஸ்...

அப்பால உங்க புது வூடு நல்லா கீது..
அப்பப்ப வந்து கண்டுக்றன்..:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//சாரி. இதுக்கு கரீக்சன் கடியாது. //

ROTFL....இதுக்கு மட்டும் ஒருத்தன் கரீக்சன் கண்டுபுட்ச்சா அவன் பில் கேட்ஸ விட பெர்ய மால் பார்ட்டி ஆயிடுவான் :-)

ரொம்ப நல்லா இருக்கு அரைபிளேடு.

ஊரோடி பகீ

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சயீது அவர்களே..

/**************************
நம்ம "குடிமகன்" களுக்கு கோவம் வந்துரப்போவுது அரை பிளேடு. அப்பொறம் உங்களுக்கு ரீசன், கரெக்சன், எஃபெக்ட்ன்னு கொடுத்துறப் போறாங்கோ பாத்து.
****************************/

சே.. சே.. நம்ப குடிமகன்கள்லாம் ரொம்ப நல்லவங்க..

இன்னா இரண்டு ரவுண்டு வுட்டா கொஞ்சம் சவுண்டு விடுவாங்கோ..

அவ்ளோதான்.. காத்தால பாத்தீங்கன்னா சமத்து புள்ளய இருப்பாங்கோ..

நம்ப மேல உங்களுக்கு கீற அக்கறய பாத்து நமக்கு புல்லரிச்சிடுச்சி..
ரொம்ப தாங்ஸ் :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இன்னா இரண்டு ரவுண்டு வுட்டா கொஞ்சம் சவுண்டு விடுவாங்கோ..//

அப்பாலிக்கா நாலாவது ரவுண்டுக்கு கம்முனு பட்துக்குவாங்கோ....

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்யாம்

/********************
//சாரி. இதுக்கு கரீக்சன் கடியாது. //
ROTFL....இதுக்கு மட்டும் ஒருத்தன் கரீக்சன் கண்டுபுட்ச்சா அவன் பில் கேட்ஸ விட பெர்ய மால் பார்ட்டி ஆயிடுவான் :-)

**********************/

நாட்ல எவ்ளவோ ஸயின்டிஸ்டுங்கோ இன்னான்னமோ கண்டுபுட்சிக்னு இருக்காங்கோ.. இதுக்கு யாராச்சும் கரீக்சன் கண்டு புட்சாங்கன்னா எவ்ளோ பேருக்கு யூஸ்"ஃபுல்"லா இருக்கும் :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஊரோடி பகீ அவர்களே

நம்ப பேஜை கண்டுக்னதுக்கு தாங்ஸ் :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சரக்கும் சைட் எஃபெக்ட்டும் சூப்பர்ப்பா!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏற்கனவே இதை பாஸ்டன் பாலா பதிவிட்டிருக்கிறார்,

http://etamil.blogspot.com/2006/12/national-repeal-day-lets-celebrate.html

எனினும் ரசித்தேன் நகைச்சுவையை!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Syam said...

//அப்பாலிக்கா நாலாவது ரவுண்டுக்கு கம்முனு பட்துக்குவாங்கோ....
//

கரீக்டா சொன்னீங்கோ ஸ்யாம்

சும்மாவா சொன்னாங்கோ பெரியவங்கோ "நிறைகுடம் தளும்பாதுன்னு" :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாமக்கல் சிபி..

சாரி... வாங்க கவிஞர் கோமேதகன் அவர்களே

//சரக்கும் சைட் எஃபெக்ட்டும் சூப்பர்ப்பா!//

இருக்காதா பின்ன இங்லீஷ் சரக்கு.. நாம டிரான்ஸ்லேஷன் அண்டு அடிஷனல் மிக்ஸ்... :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் திவ்யா அவர்களே

நான் பாஸ்டன் பாலா அவர்களோட பதிவ இப்பதான் கண்டுக்னேன்..

அவரு ஒரிஜினலா ராவா கொடுத்துக்கறாரு

நான் ஏழுல ஒண்ண உட்டுட்டு நாலு புச்சா இன்குளூட் பண்ணி ஒரு மிக்ஸா இந்த சரக்க குட்துகீறேன்..

பாலாவே சொன்னா மாதிரி எல்லா புகயும் ஒரிஜினல் இங்லீஷ் சரக்குக்குதான்..

தாங்ஸ்.... :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு,
பட்டைய கிளப்பற...
எல்லாமே சூப்பர்.

அப்பறம் நீ அங்கங்க பசங்களுக்கு கொடுக்கற அட்வைஸிம் சூப்பர்...

நான் இன்மே ப்ளேடு ஃபேன் :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

எபக்ட்: எவனோ குச்சிட்டு என் சட்டைல சால்னா எடுத்தா மாதிரி இருக்கு...

ரீஜன்: அது உங்க அவுட்புட்.

கரீக்சன்: சாதா வாட்டர் பாக்கெட் ட கச்சி வாய்ல அடிக்கவும்.

யப்பா குட்நைட் பா....

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு சார்...

இந்த எஃபகட் எல்லாம் நேரில் வந்து டெமோ செய்யுங்களேன் :-)

சந்திப்பு வாங்க சார்...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் பாஸ்டன் பாலா அவர்களே

நாம இங்க பதிவுகளுக்கு புதுசு.. நம்மையும் கூப்பிட்ட உங்களுக்கு எப்படி தேங்ஸ் சொல்றதுன்னே தெரியல.. சரி.. சரி.. நேர்ல வந்தே சொல்லிடறேன்.. :)

டெமோ செய்யற ஐடியா எல்லாம் கிடையாது. ஏன்னா செய்ய தெரியாது. :)

எக்ஸ்ப்ளெயின் வேணும்னா செய்யலாம். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்ரீகாந்து அவர்களே

மெயினான ஒரு எஃபக்டுக்கு கரீக்சன் கொடுத்த ஸ்ரீகாந்து வாயுக...

தாங்ஸ் :)))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெல்கம் வெட்டி அவர்களே...

பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்கோ...
நாம இப்பதான் ஆட்டத்தை ஆரம்பிச்சி கீறோம்..

உங்க ஆதரவும் அன்புமே இந்த அரைபிளேடுக்குக்கு போதுமானது...
அப்பாலிகா நாம எங்கயாவது அடவைஸ் சொல்ற மாதிரி தெரிஞ்சா அத சீரியஸா எடுத்துகாதீங்கோ... :))))))

தாங்ஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

haha attagaasam. severe comedy :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் கிட்டு அவர்களே

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Hello Mr.Semi Razor,

Greeting to U.

Chennai tamilla kalakkareenga!!

Yendha Uuuurrr Sondha Uuurr?

Loveish