Tuesday, December 26, 2006

ஆண் ஏன் அடிமடையனானான்?

பின்னாடி சேப்டரு

ஆண் ஏன் அடிமடையனானான்?

"பெண்ணால்" ஒரே வார்த்தை பதில்.

நாம இருக்கறது இருபத்தோராவது நூற்றாண்டுங்க.

இன்னும் இன்னடான்னா பெண்ணுரிம பெண்ணுரிமன்னு நிறைய பேசுறாங்க.

ஐயா, இந்த பெண்ணுரிம அப்பிடின்னா இன்னாங்க..

பெண்ணுக்கு சுதந்திரம் வோணும்.. அதுதான் பெண்ணுரிம..

அப்ப சரி.. அந்த சுதந்திரம் யார்கிட்ட இருந்து..
ஆண்கள் கிட்ட இருந்து...

ஒரு சில சமயம் இதை கேக்கிறப்ப ஆச்சரியமா இருக்குங்க..

யாருகிட்ட எது இல்லியோ அவங்க கிட்ட அத கேட்டா அவங்களால எப்பிடிங்க தர முடியும்.


இன்னிக்கு சமுதாயம் இருக்கிற இருப்புல யாருக்கு உரிம இருக்கு, யாருக்கு இல்லன்னு
எல்லாருக்கும் தெரியும்.

இருந்தும் நாம இப்பிடிதான் பேசறோம்.

இப்ப இருக்கிற சமுதாயத்துல ஆண்கள் நிலமதாங்க ரொம்பவே பாவமா இருக்கு.

ஒரு ஆண் பிறக்கறப்ப அம்மாவுக்கு கட்டுப்படறான். அதுக்கப்புறம் கட்டுன பொண்டாட்டிக்கு கட்டுப்படறான். அப்புறம் மகளுக்கு கட்டுப்படறான்.

இப்படி காலமெல்லாம் கட்டுப்பட்டு குடும்பத்தோட நலனுக்காக கஷ்டப்படற ஆண்கிட்ட உரிமய கொடுன்னா தனக்கே இல்லாத ஒண்ணுக்கு அவன் எங்க போவான்.

இந்த ஃபேமிலி இருக்கே அதெல்லாம் இப்ப ம்யூட்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்ல ஓடுது.
ஃபேமிலி கயிறு பெண்கள எந்த அளவுக்கு கட்டி போட்டிருக்கோ அதே அளவு ஆண்களையும் கட்டி போட்டிருக்கு.

ஆண்கள்தான் நாலு இடம் போறாங்க. வர்றாங்க. பெண்கள் எங்கயும் போறது இல்ல அப்பிடின்னு கும்சா ஒரு ஸ்டேட்மண்ட் வுட்டுடறாங்க.

ஐயா, இந்த சுவிட்சு இருக்குதே சுவிட்சு அது ஓடாதுங்க. ஆனா இந்த சுவிட்சு போட்ட பின்னாடி இந்த கிரைண்டரு ஓடும் பாருங்க ஒரு ஓட்டம். ஆனா இந்த கிரைண்டரு கூட ரொம்ப தூரம் ஓட முடியர்துங்க. இருக்கற இடத்துலயேதான் ஓடும்.

பவர் இல்லாம ஓட முடியாத கிரைண்டரு பெருசா. இல்ல அந்த கிரைண்டரையே ஆட்டி வைக்கிற சுவிட்சு பெருசா ?

நமக்கு இந்த பெண்ணுரிமய பத்தி ரொம்ப தெரியாதுங்க. நாம இந்த கட்டுரைத் தொடர எழுதணும்னு நினைச்சதுக்கு காரணம் ஆணுக்கும் உரிம வேணும்ன்றது பத்தி சொல்லத்தான்.

அகில உலக ஆண்குலமே உங்கள நம்பி எயுத தொடங்கிட்டேன். வூட்டம்மா திட்டுவாங்கன்னு பயப்படாமா தெகிரியமா வந்து அனானிமஸ்ஸாவாவது உங்க கருத்துங்கள சொல்லுங்க.

பெண்குலமே.. தப்புதான். ஆணுரிம கேக்கறது தப்புதான். ஆனா எந்த குரலா இருந்தாலும் ஒடுக்கப்படக்கூடாது. நீங்களும் அந்த டிவி பொட்டிய ஆஃப் பண்ணிட்டு வந்து ஆணுரிம ஏன் கூடாதுன்றத பிளந்து கட்டுங்க. ஏதோ நாமளும் நமக்கு தெரிஞ்சத சொல்றோம்.


கட்டுரை மடத்தனமா இருக்கு அப்பிடின்னு சொல்றீங்களா.. காரணத்துக்கு தலைப்பா இன்னொரு தபா படிக்கவும்.


தாங்ஸ்... தொடரும்...

37 comments:

said...

ஹ்ம்ம்...நா எழுதணும்னு ரொம்ப நாளா நெனச்ச ஒரு விசயம். நீங்க ஆரமிச்சிட்டீங்க. நல்ல எழுதுங்க. என்ன ஒண்ணு நா எழுதினா உங்க லெவெலுக்கு காமெடி வரமாட்டேங்குது..ரொம்ப சீரியஸாப் போயிடும். ஆனா என்ன ஒண்ணு உங்ல இந்தி பரிட்சை அனுபவத்துல இருந்த்த அந்த சுவாரசியம் இதுல இல்லைங்க. அப்படியே நம்ம பக்கத்துக்கும் கொஞ்சம் வந்திட்டு போங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் மதுசூதனன் அவர்களே

உங்க ஆசிர்வாதம். கட்டாயம் நல்லாவே எயுதறேன்.

காமடியா இல்லியா... தலீவா... நாம படு சீரியஸ்ஸா எயுதிக்னு இருக்கோம்..

புது யுகம் படைக்க விரும்புற உங்களை கட்டாயம் படிக்கறேன்.

தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை ஏன் ஆண்களுக்கு மாத்திரம் வழுக்கை விழுது?.

வயசுக்கு வந்த பெண் வீட்டில் கல்யாணம் ஆகாமல் இருந்தால் அந்தப் பெண்ணின் அம்மா சொல்றது என்ன 'என் வயத்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கேன் இத எவன் தலையிலயாவது கட்டினாதான் நிம்மதி'.

நெருப்ப தலையில கட்டுனா வழுக்கை வருமா வராதா?.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அதாம்பா நானும் ரொம்ப நாளா கேட்டுகினு இருக்கேன். யாரும் டவுட்ட கிளியரு பண்ணமாட்டேனுராங்கப்பா.

உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி, ஆனா மத்தளத்துக்கு ரண்டு பக்குனுன்ற மாதிரி அல்ளா இடத்தில அடி மிதி வாங்கி வண்டிய ஓட்டிகினி இருந்தா இந்த உமன்ஸ்கிப் டார்ச்சர் தாங்க முடியல நைனா. உனக்கு நான் சப்போர்ட் குடுக்குறேன் தலிவா. யாராவது எதித்துவந்தா வுட்டு வூடு கட்டிரலாம்.

:))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸயீத் அவர்களே

ஆகா !! வழுக்கைக்கு பின்னாடி இவ்வளவு பெரிய காரணம் இருக்கா...

ஆணினமே.. தியாகத் திருவுருவே...

எவ்வளவு தியாகம் செய்யறோம்..

தாங்ஸ் ஸயீத் அவர்களே-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஒரு ஆண் பிறக்கறப்ப அம்மாவுக்கு கட்டுப்படறான். அதுக்கப்புறம் கட்டுன பொண்டாட்டிக்கு கட்டுப்படறான். அப்புறம் மகளுக்கு கட்டுப்படறான்.

இப்படி காலமெல்லாம் கட்டுப்பட்டு குடும்பத்தோட நலனுக்காக கஷ்டப்படற ஆண்கிட்ட உரிமய கொடுன்னா தனக்கே இல்லாத ஒண்ணுக்கு அவன் எங்க போவான்.//

அதானே! ஆணுக்குத் தெரிஞ்ச ஒண்ணே ஒண்ணு வீட்டுல ஆமாஞ்சாமி போடுறது!

வெளியில் (வேடமாய்) புலியாய் புயலாய் உலவும் அப்பாவி ஆண்களுக்கு வீட்டுக்குள்ளே உரிமை வேண்டும் வேண்டும்!

இன்னிக்கு தேதிக்கு ஆணுரிமை வேண்டும் என்பது காமடியா? இல்லையே..

இது மிக சீரியஸான பதிவு. கூடுதலாக் காமடி பண்ணாம சரியா கீசியிருக்க அரை பிளேடை!-------------------------------------------------------------------------------------------------------------
said...

இது ஒரு நல்ல்ல்ல்ல்ல்ல முயற்சி..

அனானி ஆப்ஷன்ல கருத்து சொல்ற அளவுக்கு பயந்து போய் கெடக்கா நம்ம பொழப்பு :((

இந்த பதிவுக்கு அனானி பின்னூட்டத்தில் ஆதரவு அதிகமாக தெரிவித்து வந்தால் அவசியம் தொடரலாம்! :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாடோடி அவர்களே

மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம நாட்டுல பல ஆண்கள் கஷ்டப்படுறாங்க..

அந்த கண்ணீர் கதைகளை கட்டாயம் நாம தெரிஞ்சுக்கணும்...

ஆணுக்கும் சம நீதி.. அதுக்காகத்தான் நாம இங்க நிக்கறோம்.

சப்போர்ட்டுக்கு தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசுவதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. உங்களுக்கு பாதுகாப்பு தேவையெனில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஹரிஹரன்

தலையாட்டி பொம்மைகளாய் வாழ்ந்தது போதும்.

நமது தலைக்குள்ளும் மூளையுண்டு. அது சிந்திக்கும் என்பதை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஆதரவுக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//தாங்ஸ் மதுசூதனன் அவர்களே

உங்க ஆசிர்வாதம். கட்டாயம் நல்லாவே எயுதறேன்.

காமடியா இல்லியா... தலீவா... நாம படு சீரியஸ்ஸா எயுதிக்னு இருக்கோம்..

புது யுகம் படைக்க விரும்புற உங்களை கட்டாயம் படிக்கறேன்.
//

நம்ம ரேன்ஞ்சுக்கு தேங்ஸே ரொம்ப அதிகம் சாமி.நீங்க என்னடான்னா ஆசிர்வாதம் அது இதுனு. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்க.

அதென்னமோ தெரியலை...நீங்க எதைச் சொன்னாலும் ஒரு சீரியஸ்னஸ் வரமாட்டேங்குது.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தம்பி

நீங்க அனானியா வராம நேரடியா கருத்து சொல்றீங்கன்னா இரண்டு ரீஜன்தான் இருக்க முடியும்...

ஒண்ணு உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகி இருக்காது.

இரண்டு அப்பிடி ஆயிருந்திச்சின்னா நீங்க உங்க சொந்த பேருல எழுதல..

இதுல நீங்க எந்த வகைன்னு நீங்தான் சொல்லணும்...

கிளம்பு என்று இந்த அண்ணன் சொன்னதும் கிளம்பி வந்த என் அன்பு தம்பி...

தம்பியுடையான் படைக்கஞ்சான்..

இனி இந்த அரைபிளேடு எதற்கும் அஞ்சான்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

மொதல்ல சொன்னதே சரிதான் ஆப் ப்ளேடு!

ஆனா கண்ணாலம் கட்டிகினு அவஸ்தைபடற சிட்டிசன்கள பார்த்ததினால சொல்றேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ar bLadu,
wii sommaa kunthikinirntha baaStan santhippulayE, "poNNungka ellaam innaaththukku bLaak eLuthuthunnu" kuuda keettaangkaLaamee wainaa.. aththa ellaam paaththupputtu thaanaa ippadi eLthikinu kiiRa?

aththooda un bEsiSee thappu wainaiaa. peN suthanthiram aaNkittErnthu mattum illai. athththa motholla purnjcikka.. appaala intha aaNurimaiya wallaa saththamaa peesikka..

thamiz.. illa illa.. un baashaila, tamil padthikka.. engkilipiishla eLthinathukku oru saari vaccikkiReen.

varttaa..-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பு பூனைப்படை

சொல்லும் கருத்தில் துணிவிருந்தால் பூனைப்படைகள் தேவையில்லை..

ஆனா எங்கியாச்சும் தனியா மாட்டிக்கணும்னா... ஹி..ஹி..

உங்க அன்புக்காக ஏத்துக்கறேன்.
தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆங்கிலத்தில் எயுதியிருக்கும் அனானிமஸ் அவர்களே

எனக்கு இங்லீஷ் தெரியாததால இன்னா சொல்ல வர்றீங்கன்னு பிரியல...

அனானியா வந்ததால ஆதரவு தெரிவிக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்..

தாங்ஸ்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

Hai Half Blade,

Ennaba, arai bladnu sollittu, 2 bladea comikrienga... auto anuppava..

sivaparkavi-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிவபார்கவி... ஆட்டோ..

பெயரைப் பார்த்தால் பெண் என்று தெரிகிறது...

ஆகா.. ஆட்டோ அனுப்பக்கூடிய அளவுக்கு பெண்கள் முன்னேறியுள்ள நாடல்லவா நமது..

சீக்கிரம் அனுப்புங்க... உங்க புண்ணியத்துல நம்ப பேர்லயும் ஆட்டோ ஓடினா நல்லதுதான்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னாபா அம்புட்டுதானா?
பின்னாடி ஊட்டறதுக்கு யாருமே காணுமே!
ஒருவேளை எல்லாரும் பாதுகாப்பா இருக்காங்களோ! எது எப்படியோ என்னோட ஆதரவு உனுக்கு உண்டு. கயமை செய்யிறதுக்கு ஆளு வேணுமின்னா ஒரு அறிவிப்பை போடு. நாங்க தூக்கி நிறுத்தரோம்.
கவலபடாத சகோதரா-------------------------------------------------------------------------------------------------------------
said...

பாதிக்கப்பட்டவரே

நமக்கு கருத்து தெளிவு கீது.. கயம என்னாத்துக்கு..

(இவ்விடம் நேர்முக மறைமுக சைடுமுக கயமை ஆதரவுகள் ஏற்கப்படும்... ஹி..ஹி..)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை,

வூடு கட்றதுக்கு நானும் நாடோடி கூட சேர்ந்துக்கிறேன். உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடிம்பாங்கெ, ஆனா இந்த ஆம்பளைங்க இருக்காங்களே ட்ரம்ஸ் ஸெட் மாரி; எல்லா பக்கமும் அடிதான். :(

இப்பவாச்சும் ஆணுரிமை கேட்டு கொரலு குடுத்தியே, தேங்ஸ் நைனா :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பவர் இல்லாம ஓட முடியாத கிரைண்டரு பெருசா. இல்ல அந்த கிரைண்டரையே ஆட்டி வைக்கிற சுவிட்சு பெருசா ?//
சற்றே சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நான் அவர்களே

கரீக்டுங்க.. நாம இரண்டும் பக்கம் அடி வாங்கனாலும் சவுண்டு ஏன் உடாம இருக்கறோம்..

இதோ நமக்காக குரல் கொடுக்க நீங்களும் இருக்கீங்க...

ரொம்ப தாங்ஸ்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சீனு

சிந்திக்க மட்டும் இல்லீங்க.. செயல் படவும் வேண்டிய விஷயம்...

கருத்துக்கு தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

படம் போடுறீங்க அரை....

கலயாணம் ஆகாத போதும், அரை பிளேடு கூற்றை நான் ஆமோதிக்கி... ச்சே.. வாய் பிறழுது அரை...

நான் அரை பிளேடு கூற்றை வழிமொழிகிறேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னென்னமோ சொல்லணும்னு தோணுது.. ஆனா என்னென்னமோ வந்து தடுக்குது:-((-------------------------------------------------------------------------------------------------------------
said...

நீங்களும் அந்த டிவி பொட்டிய ஆஃப் பண்ணிட்டு வந்து ஆணுரிம ஏன் கூடாதுன்றத பிளந்து கட்டுங்க//
அது என்னய்யா, நீங்க எல்லாம் டீவி, சீரீயலு பார்க்கிறதே இல்லையா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி..

இது படம் இல்லீங்க பாடம்..
நீங்க பேச்சிலர்.. அதனால பிரியல..

வழிமொழிஞ்சதுக்கு தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சுரேஷ் அவர்களே

//*****
என்னென்னமோ சொல்லணும்னு தோணுது.. ஆனா என்னென்னமோ வந்து தடுக்குது:-((
********//


ஏதோ துக்கம் உங்க தொண்டய அடைக்குதுன்னு நினைக்கிறேன்.

ஒரு டம்ளர் தண்ணிய குடிச்சிட்டு ஆர அமர வந்து சொல்லுங்க...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க உஷா அவர்களே

/******
நீங்க எல்லாம் டீவி, சீரீயலு பார்க்கிறதே இல்லையா?
*****/


பாக்குறோம்.
வேற வழியில்லாம பாக்குறோம். வீட்டுல இன்னா பாக்குறாங்களோ அததான நாமளும் பாக்க முடியும். வூட்டம்மாவ கண்டிச்சு வெளிநடப்பா செய்ய முடியும்.
அடுத்த வேள சாப்பாடு கடிக்கணும் இல்ல...

வந்து உங்க கருத்த சொன்னதுக்கு தாங்ஸ்..

அப்பப்ப வந்து உங்க கருத்த சொல்லுங்க... தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நானும் ரொம்ப நாளா இதுமாதிரியான ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் பிளேடு. நீங்க சொல்கிற மாதிரி பெண்களை பெண்ணுரிமை இயக்கங்கள் ஜல்லி அடிப்பது போல ஆண்கள் அடக்கி வைக்கவில்லை. பொதுவா பொண்களுக்கு இன்னொரு பெண் தான் மாமியாரா, அம்மாவா, பக்கத்துவீட்டு பெண்ணா, சின்ன வீடா இருந்து கொடுமைகளை செய்திகிட்டு இருக்காங்க. ஒரு பெண் கணவனால் கொடுமைபடுத்தப்படுவது மிகவும் குறைந்த எண்ணிக்கையே ஆனால் சமுதாயத்தில் உள்ள மற்ற சகபெண்களால் தான் அதிகமாக கொடுமைகளை அனுபவிக்கின்றனர். பெண்களே நீங்க தவறான இடத்துல வந்து எங்க கிட்ட இல்லாத சுதந்திரத்தை கேக்குறீங்க, நீங்க முதலில் உங்க சக பெண்களுக்கு சுதந்திரம் குடுத்து பழகுங்க. உங்களின் அடுத்த தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

கரீக்டு சந்தோஷ் அவர்களே

நம்ப கட்டுரையோட மெயின் பாயின்ட கரக்டா பிடிச்சீங்க..

பெண்ணும் பெண்ணும் அடிச்சிக்கிறாங்க. ஆனா ஆணோட தல உருளுது.

இததான் நாம நம்ம கட்டுரையில சொல்ல வர்றோம்..

தொடர்ந்து படித்து ஆதரவு வழங்குமாறு அன்போட கேட்டுக்கறேன்.

தாங்ஸ்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னாத்த கருத்து சொல்றது பிளேடு, நம்பள பார்த்தா இளிச்சவாயங்களா தெரியுதோ என்னமோ ?

1000 வருஷம் முன்னாடி கேட்க வேண்டியத கேட்காம கோட்டை விட்டுட்டு, மரியாதைக்குரிய மகளிரணிங்களே இப்போ பொங்காதீங்க. தாங்காதுப்பூ இந்த காதுல பூ..

நாங்களே இங்கே துழாவிக்கிட்டு இருக்கோம், கரீக்டு தானே பிளேடு...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ம்ம்ம்ஹிம் இது வேலைக்காகது...சொல்லிட்டன்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்ரீகாந்து

கரீக்டா சொன்னீங்க.
நம்ப பொழைப்பே சிரிப்பா சிரிக்குது.
யார்க்கு உரிம கிடைக்கணும் யார்கிட்ட இருந்து கிடைக்கணும்ன்றதுல இப்ப உங்களுக்கு ஒரு தெளிவு வந்து இருக்கும்னு நெனைக்கிறேன்.

தொடர்ந்து வந்து ஆதரவு தர கேட்டுக்கறேன்.

தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தூயா. வெல்கம்.

எதிர்கருத்து சொல்ல வந்த உங்களுக்கு தாங்ஸ்.

இந்த கட்டுரையோட நோக்கம் ஆணுரிமயோ பெண்ணுரிமையோ இல்ல. சமஉரிமை மட்டுமே.

உங்க கருத்து எதுவா இருந்தாலும் நீங்க தாராளமா சொல்லலாம்.

அப்பதான் நாம சமஉரிமய அடைய முடியும்.

இன்னொரு பக்கத்து நியாய தர்மத்த பார்க்காம பேசிக்கிட்டே போறதுக்கு நாம பெண்ணுரிம வாதி இல்ல.

சமத்துவவாதி.

சமத்துவ சமுதாயம் மலரணும். ஆண்களுக்கும் அவங்க உரிம கிடைக்கணும். அதுதான் நம்ம நோக்கம் கொள்க கருத்து எல்லாம்.

தாங்ஸ்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட அட அட... நாட்டுக்கு வந்த பெரிய சோதனை... ஆதாமே ஏவாள் சொன்னத தட்டாம பண்ணினார். base-ஏ இப்படி இருக்கும் போது நீங்கல்லாம் ஏன் இப்படி அழுவறீங்க? அய்யோ.... அந்த கட்டய கொஞ்சம் கீழ போடுங்க... நம்மளால அடி தாங்க முடியாது.....

சரி... இப்ப சீரியஸா....

//ஒரு ஆண் பிறக்கறப்ப அம்மாவுக்கு கட்டுப்படறான். அதுக்கப்புறம் கட்டுன பொண்டாட்டிக்கு கட்டுப்படறான். அப்புறம் மகளுக்கு கட்டுப்படறான்.
//

ஒரு பெண் பிறக்கறப்ப குடும்பத்துக்கு அடங்கி இருக்கா. அதுக்கப்புறம் கட்டுன கணவனுக்கு அடங்கி இருக்கா. அப்புறம் மகனுக்கு அடங்கி இருக்கா.

கட்டுபடறதுக்கும் அடங்கி இருக்கறதுக்கும் வித்தியாசம் உங்க எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கறேன்...

ஒரு நாலு பேர பார்த்துட்டு நாப்பது பேர பத்தி பேச கூடாது தல.... என்ன நாஞ்சொல்றது? சரியா??? வரட்டா...-------------------------------------------------------------------------------------------------------------