Sunday, December 10, 2006

புள்ளய அடிக்க போறீங்களா..நமக்கு தெரிஞ்ச ஃபிரண்டோட ஃபிரண்டோட ஃபிரண்டுவோட கத இது..

இருங்க.. இருங்க.. கதிய சொல்லிடுறேன்..

அவருபா.. அமெரிக்கால நல்ல வேல..

அங்கியே கிட்டதட்ட கல்யாணம் புள்ள குட்டின்னு செட்டிலாயிட்டாரு...

இதுல பாரு.. 6 வயசு புள்ள..

அங்கியே பள்ளி கூடம் போவுது...

இவரு இன்னா பண்ணாரு.. ஒருநா கேவாவத்துல புள்ளய போட்டு அடிச்சு பூட்டாரு...

அந்த புள்ள இன்னா பண்ணுச்சாம் தெரியமா..

அமெரிக்கால புள்ளங்களுக்கு மதிப்பு ஜாஸ்தின்னு தான் தெரியமே...

கால் பண்ணுச்சாம்பா ஒரு நம்பர..

எங்கப்பா என்னிய போட்டு அடிக்கிறாருன்னு சொல்லுச்சாம்..

வந்ததாம் பாரு போலீஸ்.. நம்ப ஆள அள்ளி போட்டு உள்ளாற தள்ளி.. விசாரிச்சு.. நம்ப ஆளு கடசில தலையால தண்ணி குடிச்சு வெளியில வந்துட்டாராம்..


வீட்டுக்கு வந்தவரு புள்ளய ஒண்ணும் சொல்லல...

வந்தவரு பேக்கப் பண்ண ஆரம்பிச்சாரு...

ஒரு வாரம் தான்... புள்ளய அள்ளிப்போட்டுக்னு மெட்றாஸ் வந்து இறங்குனாரு...

இந்தியா மண்ண மிதிச்சதும்..

ஏர்போர்ட்லயே வச்சு பையனுக்கு வுயுந்தது பாரு அடி...

இப்போ கூப்ட்றா போலீசை, இப்போ கூப்ட்றா போலீசைன்னு சொல்லி சொல்லி வுயுந்ததாம் பாரு அடி.. அடியா அது.. இடி..

ஒரு வாரமா அடக்கி வெச்ச கோபம் இல்ல...

அதுக்கப்புறம்தான் அவரு அமைதியானாரு..

அடுத்த வாரம் அமெரிக்கா திரும்பினாரு.. பையன அவங்க தாத்தா பாட்டி கிட்ட வுட்டுட்டு..

அதனால மக்களே ஜாக்கிரதையா இருங்க..
அப்பா அம்மா அடிச்சா இந்த நம்பருக்கு கால் பண்ணுன்னு அமெரிக்கால பள்ளிகூடத்துலயே சொல்லி தர்றாங்களாம்.

இன்னாபா ஊரு இது. பெத்த புள்ளய போட்டு அடிக்க அப்பன் ஆத்தாக்கு உரிம இல்லன்னு சொல்லிக்கிட்டு...

நீங்க இன்னா சொல்றீங்கோ...................................................................

அடிஜனல் ஸ்டோரி


நம்ப ஊர்ல கிராமத்துல ஒரு அப்பா புள்ள.. விவசாயிங்கோ..
அப்பாக்கு வயசு 65. புள்ளக்கி 40..
65 வயசு அப்பா கோவம் வந்து ஒரு நாள் 40 வயசு புள்ளய முதுகுல ஓங்கி அடிச்சாரு..

பையன் ஓன்னு அழ ஆரம்பிச்சிட்டான்..

அப்பாக்கு ஒண்ணும் புரியல..

இந்த புள்ளய நாம எவ்ளோ காலமா அடிக்கிறோம்... இவ்ளோ காலமா அழாத புள்ள இப்ப போயி இப்பிடி அயுவுதேன்னு..

கேட்டுட்டாரு.. ஏன்பா அடி பலமா பட்டுருச்சான்னு..


புள்ள சொன்னானாம்.. "இல்லபா.. இவ்ளோ நாளா நீங்க அடிச்சீங்கன்னா அடி பலமா வுயும்.. இன்னிக்கி நீங்க அடிச்சது வலிக்கவே இல்ல.. உங்களுக்கு வயசாயி கையில பலம் போயிடுச்சேன்னு நினைச்சு அயுவுறேன்"னு..

இது புள்ள.. இது பாசம்.. நம்ப ஊரு, நம்ப ஊருதான்.. கரீக்டா..13 comments:

said...

ஆமாம் என் sister inlaw குழந்தையை play school போட்ட
அன்னைக்கே அடிக்கறது பத்திய
நினைப்பையே விட்டுட்டா.முத நாளே
அம்மா அப்பா அடிச்சா எங்க கிட்ட
complaint பண்ணுங்கன்னு சொல்லிகுடுத்து இருக்காங்களாம், அங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப வலுவா சொன்னபா...
நம்மூரு நம்மூரூதாங்கோ...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க லட்சுமி அவர்களே

என்னதான் பெத்த புள்ளயா இருந்தாலும் கை நீட்ட கூடாதுன்னு சொல்ற அவங்க பாலிசியும் நல்லாதான் கீது..
தோளுக்கு மேல வளந்தாதான் தோழன்னு இல்லாமா.. பிள்ளன்னு ஒண்ணு இருந்தாலே தோழன்னு இருந்துக்க வேண்டியதுதான்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி
எந்த ஊரு என்றாலும் நம்ப ஊரு போல வருமா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

முற்பகல் செய்யின் ( போன் போட்டது )

பிற்பகல் விளையும் ( பிரிச்சு பேன் பார்த்தது )

:)


கரீக்டா தம்பி...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்ரீகாந்து அவர்களே

நீங்க சொன்னா கரீக்டாதான் இருக்கும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிள்ளையை அடிப்பவர்களை மனிதர்களாக மதிக்கவே கூடாது...ஒழுங்கா பிள்ளையை வளர்க்க தெரியனும்..இல்லேன்ன பார்த்திட்டு இருக்கனும்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

கர்த்து நல்லாத் தாங்கீதுபா. இது தான் உன் கொளுகையுமா?
:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தூயா

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.

ஆண்பிள்ளைய அடிச்சு வளக்கணும் பெண்பிள்ளைய புடிச்சு வளக்கணும்னு சொல்லி பழக்கப்பட்ட சமூகம் நமது.

இது ரொம்ப தப்பு...

பிள்ளைகளை நண்பர்களா மதிச்சு வளக்கணும்.

தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கைப்புள்ள

நாம இங்க கத மட்டும்தான சொன்னோம். கருத்து எதுவும் சொல்லலியே...

கருத்துன்னு கேட்டிங்கன்னா.. புள்ளைங்களை அடிக்கிறது தப்பு.. அன்பா சொல்லிதான் திருத்தனுமே தவிர அடிக்க எல்லாம் கூடாது..


அதுவும் இல்லாம இந்த காலத்து புள்ளிங்க... யப்பா..

எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்கிட்டு அமைதியா இருக்க அவங்க என்ன கைப்புள்ளையா...

தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அதுவும் இல்லாம இந்த காலத்து புள்ளிங்க... யப்பா..

எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்கிட்டு அமைதியா இருக்க அவங்க என்ன கைப்புள்ளையா...//

அதானே.. முளைச்சி மூணு இலை விடாததுங்க எல்லாம் எங்க 'தல' ஆயி‍ட முடியுமா?

அதென்ன அப்பிடி லேசுபட்ட சமாச்சாரமா என்ன?

சின்னதம்பி-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுல ரொம்ப வெறுப்பேத்தற விஷயம் என்ன தெரியுமா? சின்ன வயசுல நம்ம ஊரில வளர்ந்து அடி பட்டுட்டு (அப்பா / அம்மாகிட்டதான்), இங்க வந்து சொந்தப் பிள்ளைய கொஞ்சம் வேகமா தட்டக் கூட முடியாம இருக்கிற மக்கள் தான்.

ரங்கா.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ரங்கா.

எட்டாவது ஃபெயிலான ஒரு பையன அப்பா அடிச்சாராம். அந்த பையன் கேட்டானாம் அப்பா நீ கூடதான எட்டாவது ஃபெயிலான. என்னை போட்டு அடிக்கிறியேன்னு.

அப்பா சொன்னாராம்.. மவனே.. நான் ஃபெயிலான எங்கப்பா என்ன அடிச்சாரு...

இப்ப நீ ஃபெயிலாயிட்டதானால நான் உன்ன அடிக்கிறேன்.. சரியா.. அப்படின்னாராம்...

:)))-------------------------------------------------------------------------------------------------------------