Wednesday, December 06, 2006

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை

காட்சி 1

இரவு நேரம்...
கண்விழித்து பணி செய்கிறான் நமது கதாநாயகன் கல்யாணராமன்.. எட்டு மணி நேரத்தில் வேலை முடியும் என்று ஒப்புக்கொண்ட தன் மேலாலரின் வாக்கை காப்பாற்ற பதினெட்டு மணி நேரம் உழைப்பவன்..

பால்பாண்டி என்டரிங்..

பால்பாண்டி: ஏய் கல்யாணம் என்னடா பண்ற... எனக்கு நைட்டு ஷிப்டு முடிஞ்சிருச்சி.. பகல் 9 மணியாவ போது.. வாடா வீட்டுக்கு போகலாம்..

கல்யாணம்: இரு மச்சி. கிளையண்டு கேட்ட ரிப்போர்ட்டு ஒண்ணு பெண்டிங்ல இருக்கு. முடிச்சிட்டு வந்துர்றேன்..

பால்பாண்டி: கிழிஞ்சது போ.. ரொம்ப மாடு மாதிரி உழைக்காதடா.. அப்புறம் மாடு ஆப் த மன்த் அவார்டு குடுத்துடுவாங்க.. எனக்கு தான் நைட்டு ஷிப்டு, நேத்து காத்தால 9 மணிக்க வந்தவன் நீ.. இன்னிக்கு காத்தால 9 மணியாயிடுச்சி... வீட்டுக்கு போக வேண்டாம்..

பங்கஜ் பாண்டே என்டரிங்..

பங்கஜ்: ஏய் பாண்டி.. ஏய்.. கல்யாண்ம்.. ஹவ் ஆர் யூ..

பால்பாண்டி: கேட்கமாட்டடா.. மூணு மாசமா பெஞ்சில கீற.. எஞ்சாய் பண்ற...

பங்கஜ்: யூ ஸீ ஐ யம் ரிசர்வுடு பார் ஆன் சைட். கோயிங் நெக்ஸ்ட் வீக்கு..

கல்யாணம்: நெக்ஸ்ட் வீக்கா... நானும்தான் இதோ அதோன்னு நாலு வருஷமா உட்காந்துக்கிட்டு இருக்கேன்.. இவன் மும்பையில இருந்து மூணு மாசம் முன்னாடிதான் வந்தான்..

பாண்டி: வுடு மாமு.. எல்லாம் காலா காலத்துல நடக்கும்..

கல்யாணம்: இவன் வேற எதுடா காலாகாலத்துல நடக்குது.. எனக்கு 29 வயசாகுது.. இன்னும் மூணு மாசம் போனா முப்பது ஆயிடும்.. இன்னும் கல்யாணம் கூட நடக்கல..

பாண்டி: இது ஒரு பிரச்சனையா மாமு.. கல்யாணம் பண்ணி வைங்கன்னு வீட்ல கேட்க வேண்டியதுதான..

கல்யாணம்: வெக்கத்த விட்டு கேட்டுட்டேண்டா.. எங்க அண்ணன் ஒருத்தன்.. உனக்குதான் தெரியுமே.. கல்யாணமே வேண்டாம்னு உட்காந்துக்னு இருக்கிறான்.. அவன் இப்படி இருக்கிறப்ப எனக்கு எப்படிடா கல்யாணம் நடக்கும்..

பாண்டி: மேட்டரு இவ்ளோதானா. கவலைய உடு மாமு.. பெரியவங்க கல்யாணம் பண்ணி வெக்கலன்னா இன்னா.. இருக்கவே இருக்கு லவ்வு மேரேஜி..

கல்யாணம்: இன்னாது லவ்வு மேரேஜா..

பாண்டி: இன்னாடா வாய புளக்கற.. ஒரு பொண்ண புடி.. காதலாலேயே அடி.. கல்யாணத்த முடி..

கல்யாணம்: சரி மச்சி. என்னை ஒரு பொண்ணாவது லவ் பண்ணணுமேடா..

பாண்டி: உனக்கு இன்னாடா குறை. சாப்டுவேரு இஞ்சினியரு. கை நிறைய சம்பாதிக்கிற.. ஒரு புடிச்ச பொண்ணா பாத்து லவ்ஸை சொல்லி ஸ்டெப் எடு மாமு..

கல்யாணம்: எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ண புடிச்சிருக்குடா..

பாண்டி: அடப்பாவி சொல்லவேயில்ல. யாருடா அது.. அவ பேரு என்ன

கல்யாணம்: பேரு தெரியாதுடா

பாண்டி: பேரு தெரியாதா.. போச்சிடா அடுத்து அவ யாரு எங்க இருக்கா ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லுவ.. உனக்காக நான் உன் கூட சேந்து அவள தேடி ஊரு ஊரா சுத்தனமா.. தமில் சினிமா நிறைய பாக்காதீங்கடான்னா கேக்கறீங்களா.. சரி அவ எப்படி இருப்பா அதயாவது சொல்லு..

கல்யாணம்: தேவதை மாதிரி இருப்பா.. அவள பாத்த அடுத்த நிமிடம் என் மனசுல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி இருந்தது..

பாண்டி: கல்யாணம் பன்றதுக்கு முன்னாடிதாண்டா ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். கல்யாணம் பண்ணி பாரு அடுத்த நாளே அது பீஸ் போகும்..

கல்யாணம்: சும்மா இருடா.. அவளோடா அந்த அழகான முகம். நாள் முழுக்க பாத்துகிட்டே இருக்கலாம்.. காலேஜ் பஸ் ஸடாண்டுல நான் அவள டெய்லி பாப்பேண்டா.. பஸ் ஸ்டாப்புல பஸ்ல இருந்து அவ இறங்க நான் ஏற அவ புஸ்தகம் ஒண்ணு கீழ விழ நான் எடுத்து கொடுக்க..

பாண்டி: நிறுத்து. நிறுத்து. காலேஜ் பஸ் ஸ்டாண்டா. அப்படின்னா அந்த பொண்ணு அந்த காலேஜி பொண்ணாதான் இருக்கும். இப்ப காலேஜிக்கு பொண்ணுங்க வர்ற நேரம்தான்.. நாம அங்க போறோம்.. நீ அந்த பொண்ணுக்கு ஐ லவ் யூ சொல்ற...

கல்யாணம்: நானா..

பாண்டி: பின்ன உங்க தாத்தாவா. உனக்குதானடா கல்யாணம் ஆகணும்...

கல்யாணம்: எப்பிடிடா முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்றது..

பாண்டி: டேய் வாழ்க்கையில ஒரு சிலத அடையணும்னா ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்.

கல்யாணம்: இப்ப என்னை என்ன பண்ண சொல்ற

பாண்டி: இப்ப கேட்டியே இது கேள்வி. நீ இன்னா பண்ற. ஒரு லட்டரு எயுதுற. அப்புறம் கையில ஒரு ரோஜாப் பூ.. உன் வாய் புல்லா சிரிப்பு.. அப்பிடியே குடுக்குற.. உன் லவ்வ சொல்லிக்கிற

கல்யாணம்: இது சரி வரும்னா சொல்ற

பாண்டி: களத்துல இறங்கு. நான் இருக்கறன். இப்போ நாம நேரா பஸ் ஸடாப்புக்கு போறோம்.

இருவரும் கிளம்புகிறார்கள்.
காட்சி 1 முடிந்தது..

----------------------------------------------------------

காட்சி 2

பஸ் ஸ்டாண்டு டீ கடை
இன்ஸ்பெக்டர் மாதவன் நாயர், கான்ஸ்டபிள் கோவிந்து

மாதவன் நாயர்: கோவிந்தோ, நாம இவ்விட எதுக்கு இரிக்குன்னு நீ அறியுமோ..

கோவிந்து: (மனசுக்குள்) என்னத்த அறியறது.. காலையில கூட்டியாந்து இந்த டீ கடையில நிறுத்திட்ட. ஒரு டீ கூட வாங்கி தரல..
(சத்தமாக) தெரியலியே சார்

மாதவன்: நாம இங்க மப்டியில எதுக்கு நிக்கறோம்னா.. இது லேடீஸ் படிக்கிற காலேஜ்.. இங்க சில ரவுடி பசங்க ஈவ் டீஸிங் பண்றாங்கன்னு நமக்கு தகவல் வந்திருக்கு.. நாம இங்க நிக்கும்.. அந்த ரவடிகளை புடிச்சி லட்டிக்கு லட்டி முட்டியால தட்டும்.. சே.. முட்டிக்கு முட்டி லட்டியால தட்டும்...

கோவிந்து: (மனசுக்குள்) ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்
(சத்தமாக) சரி சார். இவன்கள விட கூடாது சார்..

மாதவன்: இப்படிதான் எங்க தாத்தா மலபார் போலீஸ்ல இருந்தப்ப..

கோவிந்து: நிறுத்துங்க சார், தாங்க முடியல. இந்த கதயெல்லாம் எத்தனை தடவ சொல்வீங்க. காலையிலே அவசர வேல வா அப்படின்னு சொன்னதும்.. நானும் ஏதோ பெரிய கேஸ் மாட்டிக்குச்சு.. லம்பா அள்ளலாம்னு நினைச்சு வந்தா.. சிங்கிள் டீக்கு கூட வக்கு இல்லாம ஒரு மணி நேரமா நின்னுட்டு இருக்கன்..

மாதவன்: அவ்வளவுதான வா நாம சாயா குடிக்கும். ஆனா சாயாக்கு இரண்டு ரூபா நீதான் பே பண்ணும்..

கோவிந்து: பண்ணி தொலயறன்.. பன்னுக்கு காசாவது நீங்க கொடுங்க..

(இருவரும் போதல்..
கல்யாணராமன், பால் பாண்டி எண்டரி.. )

பாண்டி: மாமு இதுதானே உன் ஆளு வர்ற டைமு..

கல்யாணராமன்: ஆமாடா

பாண்டி: ஆமா அவ அழகா இருப்பான்றத தவிர அவள பத்தி வேற ஏதாவது தெரியுமா

கல்யாணராமன்: அவ பேரு சுதான்னு நினைக்கிறேன். அன்னிக்கு கீழ விழுந்த புக்குல சுதான்னு பேரு எழுதியிருந்துச்சு. அப்புறம் கூட வந்த பிரண்டுகிட்ட தெலுங்கிலயே பேசினா..

பாண்டி: தெலுங்கு பொண்ணா.. தெரிஞ்ச தமிழ்ல பேசியே பொண்ண கரெக்ட் பண்றது கஷ்டம். நீ தெலுங்க வச்சி என்ன பண்ண போறியோ..

கல்யாணம்: அங்க பாருடா அவ பஸ்ல இருந்து இறங்கறா...

பாண்டி: மாமு இதுதான் சரியான டைமு.. கப்புனு போய் கபால்னு கடுதாசிய கொடுத்து காதலை சொல்லிடு..

கல்யாணம்: பயமா இருக்குடா..

பாண்டி: தெகிரியமா போ மாமு... தில்லா லவ்வ சொல்லு.. பெஸ்ட் ஆப் லக்..

(கல்யாணம் மெதுவாக சுதாவை நோக்கி முன்னேறுகிறான். )

கல்யாணம்: எக்சூயுஸ் மீ...

சுதா: எஸ்

கல்யாணம்: ஐ ஆம் கல்யாண ராமன். இன்னுங் கூட கல்யாணம் ஆகாத ராமன்

சுதா: மீரு எவரு நாக்கு தெள்ளிதே

கல்யாணம்: (மனசுக்குள்)என்னது நாக்கு தள்ளுதா.. மாமு நேரா மேட்டருக்கு வா.
(சத்தமாக) மிஸ் ஐ லவ் யூ.

சுதா: ஏமி

கல்யாணம்: இதுவா, இது கார்டு, இது ரோஜா பூ. உனக்குத்தான்

சுதா: ஆ...

(சுதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் பாய்ந்து வருகிறார்கள். கல்யாண ராமனுக்கு தர்ம அடி விழுகிறது)

கல்யாணம்: எங்கடா இருந்தீங்க .. இத்தனை பேரும்.. மொத்தமா கிளம்பி வந்து மொத்தி எடுக்கறீங்களே...

(மாதவனும் கோவிந்தும் என்ட்ரி )

மாதவன்: எந்த இங்க கலாட்டா.. எந்த இங்க கலாட்டா..

கல்யாணம்: வாங்க சார். இவங்க பத்தாதுன்னு நீங்க வேற அடிக்க கிளம்பி வந்துட்டீங்களா..

கோவிந்து: நாங்க போலீஸ்..

கல்யாணம்: வாங்க சார் ஒரு நிமிஷம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா, ஒரு அப்பாவியை போட்டு இந்த அடி அடிச்சிட்டாங்க சார்

மாதவன்: நிறுத்து மேன். எல்லாம் எனக்கு தெரியும். யான் நோக்கி. நீ ஈ பெண்குட்டி வழி மறிச்சு வம்பு செய்ந்நு..

சுதா: சார்...

மாதவன்: நீ ஏதும் பறையண்டா அம்மே. ஈயாள் உன் கைய பிடிச்சு இழுத்தில்லோ..

சுதா: அதி காது சார்

மாதவன்: என்ன காத பிடிச்சு இழுத்தோ

கல்யாணம்: இன்னாடாது. ஜெமினி சானலும் சூர்யா சானலும் மாத்தி மாத்தி ஓடுது.. சார் என்னை விடுங்க சார். நான் அப்பாவி

கோவிந்து: அப்ப இது என்னையா கையில

கல்யாணம்: இது லட்டர்.. இது பூ..

மாதவன்: நான் இக்கள்வனை லட்டரும் கையுமாய் பிடிச்சு..

கல்யாணம்: நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..

கோவிந்து: நீ ஒண்ணும் சொல்ல வேணாம்

கல்யாணம்: ஒண்ணு சொல்ல கூடாதா, அப்ப ரெண்டு சொல்லலாமா..

மாதவன்: எனக்கு இந்த ஒண்ணு ரெண்டு எல்லாம் தெரியாது..
எனக்கு தெரிஞ்சது மூணு...

கோவிந்து: என்ன அது

மாதவன்: கடமை கண்ணியம் கட்டுப்பாடு... கோவிந்து ஈயாளை வேன்ல ஏத்து...

கல்யாணம்: சார் சார் என்னை விட்டுடுங்க சார் எனக்கு எதுவும் தெரியாது சார். எல்லாம் என் பிரண்டு சொல்லி தான் சார் செஞ்சேன்..

கோவிந்து: யார் அது

கல்யாணம்: அதோ டீ கடையில நிக்கறான் பாருங்க சார்

கோவிந்து: ஓடறான் சார்.. இருங்க நான் போய் பிடிச்சுட்டு வர்றேன்..

(கோவிந்து பால்பாண்டிய பிடித்து வருதல் )

பால்பாண்டி: டேய் துரோகி.. விடுங்க சார்.. சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டு என்னை வேற மாட்டி விட்டுட்ட

கல்யாணம்: சாரி நண்பா.. போலீஸ் புடிச்சதும் உளறிட்டேன்

பால்பாண்டி: சார் இன்ன நடந்துச்சுன்னா..

மாதவன்: ஸ்டாப். எனிதிங் யூ டெல் போலீஸ் ஸ்டேசன். யூ ஆர் அண்டர் அரஸ்ட்...

கல்யாணம் பால்பாண்டி: சார்ர்...

மாதவன்: மூவ்..

சுதா: சார்...

கோவிந்து: நீ கவல படதம்மா. இவங்களை உள்ள தள்ளறது எங்க பொறுப்பு. நீ இப்ப நேரா எங்க கூட வந்து சாட்சி சொன்னா போதும்..

சுதா: சார்......

மாதவன்: நோக்கம்மா நீ வந்து பறைஞ்சால்தான் யான் ஈயாட்களை உள்ள வைக்கும். நீயும் எங்க கூட வரும்..

பால்பாண்டி: எங்க சார் போறோம்..

மாதவன்: நேராயிட்டு கோர்ட்டு. யான் உங்களை மாஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர் செய்யும்....

(வண்டி கிளம்புகிறது..)

(காட்சி 2 முடிந்தது... )

------------------------------------------------------------

காட்சி 3

(நீதிமன்றத்தில் கல்யாணராமன், பால்பாண்டி, சுதா, மாதவன் நாயர், பப்ளிக் பிராசிக்யூட்டர் பாரிஸ்டர் ரஜினிகாந்த், ஜட்ஜ் மற்றும் பார்வையாளர்கள்)

பாரிஸ்டர்: மைலார்டு. இது நான் பப்ளிக் பிராசிக்யூட்டராகி எடுத்துக்குற முதல் கேஸ்.

ஜட்ஜ்: கங்கிராட்ஸ் பாரிஸ்டர் ரஜினிகாந்த். யூமே புரசீட்

பாரிஸ்டர்: இது ஒரு ஈவ் டீஸிங் கேஸ். இதோ இங்கு அழைத்து வரப்பட்டுள்ள...

பால்பாண்டி: திருத்திக் கொள்ளுங்கள். அழைத்துக் கொண்டு வரவில்லை. இழுத்துக் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.

கல்யாணம்: டேய் சும்மா இருடா..

பாரிஸ்டர்: இந்த வழக்கின் முதல் குற்றவாளி கல்யாணம் என்கிற கல்யாணரான். இரண்டாவது குற்றவாளி பாண்டி என்கின்ற பால்பாண்டி. இவங்க இரண்டு பேருமா சேர்ந்து பயங்கரமான ஒரு குற்றத்தை செஞ்சிருக்காங்க.. என்னன்னு கேக்கறேளா.. அதோ அந்த நிக்குதே பொண்ணு, அதை ஈவ் டீஸிங் செஞ்சிருக்காங்க. யுவர் ஆனர்...

கல்யாணம்: நாங்க அப்படி எதுவும் செய்யல.. இவர் சொல்றத கேக்காதீங்க..

ஜட்ஜ்: ஆர்டர்.. ஆர்டர்..

பாரிஸ்டர்: பண்ணறதல்லாம் பண்ணிட்டு கேட்டா பண்ணலம்பேள். உன்னை மாதிரி எத்தனை அயோக்கிய ராஸ்கல்ஸை பாத்திருக்கேன்டு நோக்கு தெரியுமோ..

பால்பாண்டி: தெரியாது. இப்பத்திக்கு நாங்க உங்கள மட்டும்தான பாத்துட்டிருக்கோம்.

பாரிஸ்டர்: யுவர் ஆனர். நமது இன்ஸ்பெக்டர் மாதவன் நாயரும், கான்ஸ்டபிள் கோவிந்தும் இவாள பயங்கரமான ஆயுதங்களோட பிடிச்சிருக்கா..

கல்யாணம்: ஆயுதமா

பாரிஸ்டர்: ஆமாம். இதோ கல்யாணம் வைத்திருந்த கிரீட்டிங் கார்டு.. ரோஜா பூ.. லவ் லட்டர்... இதை வைத்து கல்யாணமாகிய இவர் இந்த பெண்ணை கலாய்த்திருக்கிறார்.. இதற்கு பாண்டி உடந்தையாயிருந்திருக்கிறார். கல்யாணமாகிய இவர் இந்த பொண்ணுடைய கைய பிடித்து இழுத்திருக்கிறார்.

கல்யாணம்: கைய பிடிச்சனா.. அபாண்டம்.

ஜட்ஜ்: ஆர்டர். ஆர்டர். ஏம்பா உங்களுக்காக வக்கீல் யாராவது வாதாடுகிறாரா..

பால்பாண்டி: வக்கீல்.. என்ன தவறு செய்தோம் வக்கீல் வைப்தற்கு.. எங்களுக்காக நாங்களே வாதாடுகிறோம். யுவர் ஆனர்..

கல்யாணம்: டேய் கொஞ்சம் யோசிடா..

பால்பாண்டி: கவலைப்படாதே நண்பா.. இத்துணை நாளாக சென்னைத் தமிழ் பேசிய நான்.. எப்போது இக்கோர்ட்டின் கூண்டில் ஏறினேனோ அப்போதே நான் பார்த்த தமிழ் சினிமா கோர்ட் காட்சிகள் என்னுள் பொங்கி விட்டது... (ஜட்ஜை பார்த்து) நாங்களே வாதாடலாமா யுவர் ஆனர்

ஜட்ஜ்: பர்மிஜன் கிராண்டட்

பால்பாண்டி: இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது.. அவற்றில் இதுவும் ஒன்று.. இதோ நிற்கிறானே.. எனது நண்பன் கல்யாண ராமன்.. இவன் இன்னும் ஒருமுறை கூட கல்யாணம் ஆகாத ராமன். கல்யாணம் செய்யாமல் காலம் கடத்திய வீட்டினர்... தம்பிக்கு வழிவிட முதலில் தான் கல்யாணம் செய்ய வேண்டுமே என்று கூட சிந்திக்காத தறுதலை அண்ணன்..

கல்யாணம்: டேய்...

பாண்டி: இரு நண்பா... வீட்டினர் செய்யாத வேலையை தானே செய்ய ஓடினான். கன்னி ஒருத்தியை தேடினான். எத்துணைதான் நூல் விட்ட போதும் ஒருத்தியும் கிடைக்கவில்லை.. கல்யாண ராமன் ஓடினான்... ஓடினான்.. வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடினான்.. அவன் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும். ஒருத்தியாவது அவனை திரும்பி பார்த்திருக்க வேண்டும். செய்தார்களா... கல்யாணம் செய்ய விட்டார்களா என் கல்யாணராமனை..

(பாரிஸ்டர் எழுகிறார்)

உனக்கேன் இந்த அக்கறை. யாருக்கும் இல்லாத அக்கறை என்றுதானே கேட்க வருகிறீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன்.. நேரடியாக பாதிக்கப்பட்டேன்.. இக்கல்யாண ராமனின் புலம்பல்களால் நொந்து நூலானவர்களில் நானும் ஒருவன். முடிவெடுத்தேன் கல்யாணராமனுக்கு கல்யாணம் செய்து வைப்பது என.. அது குற்றமா.. காதலிக்க சொன்னேன்... அது குற்றமா.. காதலை குற்றமென்று சொல்கிறதா உங்கள் சட்டம்...

பாரிஸ்டர்: நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர். தூண்டியது தான்தானென பாண்டி ஒப்புக்கொள்கிறார்.. இட் ஈஸ் எ பிரீ பிளான்ட் அஸால்ட் ஆன் திஸ் புவர் கேர்ள்.. இவர்கள் இருவருக்கும் ஈவ் டீஸிங் குற்றத்துக்காக குறைந்த பட்ச தண்டைனயாக ஆயுள் தண்டனை தர வேண்டுகிறேன் யுவர் ஆனர்..

கல்யாணம்: அய்யயேயா அப்படி எல்லாம் இல்லை.. யுவர் ஆனர். ஐ லவ் திஸ் கேர்ள்..

பாரிஸ்டர்: என்னது லவ்வே பண்றியா. இத நான் ஒத்துக்க முடியாது..

பாண்டி: இன்னது. இவர் யார்றா ஒத்துக்க முடியாதுன்றதுக்கு..

கல்யாணம்: சொந்த தம்பிக்கு ஆயுள் தண்டனை வாங்கி தர பாக்குறியே நீயெல்லாம் ஒரு அண்ணனா..

பாண்டி: இன்னாது அண்ணனா.. இந்த வக்கீலு உன் அண்ணனா.. கல்யாணம் பண்ணாம தறுதலயா ஒரு அண்ணன் இருக்காருன்னு நான் டயலாக் விட்டனே அவரு இவருதானா.. சாரி சார்..

பாரிஸ்டர்: பரவாயில்லை தம்பி. எனக்கு கடமைதான் முக்கியம். எனக்கு தெரிஞ்சதெல்லாம் மூணுதான்..

பாண்டி: உங்களுக்குமா.. என்னாது அது..

பாரிஸ்டர்: நீதி, நேர்மை, நியாயம்.. கடமைன்னு வந்துட்டா கூட பிறந்த தம்பின்னு கூட பாக்க மாட்டான் இந்த பாரிஸ்டர் ரஜினி காந்து..

கல்யாணம்: டேய் அண்ணா. தயவு செஞ்சி இந்த பொண்ணையாவது எனக்கு கல்யாணம் பண்ணி வைடா....

பாரிஸ்டர்: சரிடா.. இதுக்கு நான் ஒத்துக்கலாம்டா. அந்த பொண்ணோட அப்பன் ஒத்துக்கணுமே..

ஜட்ஜ்: இவ்ளோ நடந்துருச்சு.. ஒத்துக்காம என்ன பண்றது..

பாரிஸ்டர்: யுவர் ஆனர்

ஜட்ஜ்: நீ சொன்ன அந்த பொண்ணோட அப்பன் நான்தான்யா..

கல்யாணம், பாண்டி, பாரிஸ்டர்: (மூவரும்) அப்பாவா ?????

சுதா: நானா..

ஜட்ஜ்: ஏம்மா.. மீக்கு வாடு நச்சிந்தா..

சுதா: அவுனன்டி நானா.. நேனு பிரேமிச்சுன்னானு..

கல்யாணம்: யே... சக்ஸஸ்.. போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி..

சுதா: மீரு லேதண்டி.. மீரு ஃபிரண்டே நாக்கு இஷ்டம்..

கல்யாணம்: என்னாது

பாண்டி: யூ... யூ.. யூ மீன் யூ லவ் மீ....

சுதா: (வெட்கத்தோடு) அவணன்டி...

பாண்டி: ஐ டூ லவ் யூ

கல்யாணம்: டேய் துரோகி..

பாண்டி: சாரி நண்பா.. என் லைஃப் டைம்ல ஒரு பொண்ணு ஃபர்ஸ்ட் டைம் என்னை பாத்து ஐ லவ் யூ சொல்லியிருக்கு.. எப்படி நண்பா என்னை வேண்டாம்னு சொல்ல சொல்றே...

கல்யாணம்: துரோகி டயலாகா பேசி.. பிகர கவுத்திட்டியேடா..

ஜட்ஜ்: ஏம்மா அப்ப உனக்கு பாண்டிதான் நச்சிந்தா

சுதா: அவுனு நானா..

(ஜட்ஜ் கண்ணாடியை கழட்டி துடைத்துக்கொள்கிறார்)

ஜட்ஜ்: ஆர்டர்.. ஆர்டர்.. இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த இந்த கோர்ட் பால்பாண்டியை நிரபராதி என்று விடுதலை செய்கிறது..

பாண்டி: (மகிழ்ச்சியோடு) ஐயா, தாங்க்ஸ் மாமா..

ஜட்ஜ்: அதே நேரத்தில் பட்ட பகலில் ஒரு பெண்ணை ஈவ் டீஸிங் செய்த குற்றத்திற்காக கல்யாணத்திற்கு இந்த கோர்ட் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையளிக்கிறது.

கல்யாணம்: ஆ....

பாண்டி: (சுதாவை நெருங்கி) டார்லிங் நாம போலாமா..

(இருவருமாக கைகோர்த்து வெளியேறுகிறார்கள்)

கல்யாணம்: பிகரு பல்டியடிச்சிடுச்சி.. பிரண்டு கவுத்துட்டான்.. கடங்கார அண்ணன் தண்டனை வாங்கி கொடுத்துட்டான்.. என்னடா நடக்குது இங்க...

(பெண் போலீஸ் நெருங்கி வந்து)

பெண் போலீஸ்: ஏய் மேன் மூவ்

கல்யாணம்: அக்கா போலீஸ் அக்கா. நீங்க அழகா இருக்கீங்க. உங்க பேரு என்னங்கக்கா..

பெண் போலீஸ்: ம்ம்... ஓமனகுட்டி

கல்யாணம்: ஓமனகுட்டியோ.. என்னை இறுக்கியணைச்சு ஒரு உம்ம தருமோ..

ஓமனகுட்டி: ஒத தரும்...

(கல்யாணராமனுக்கு தரும அடி விழுகிறது).

(முற்றும்)

திரையில் எழுத்துக்கள்

என் இனிய தமிழ் மக்களே..
உங்கள் பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செய்து வையுங்கள்..
இல்லையேல் இந்த கல்யாண ராமனின் கதிதான் அவர்களுக்கும்...

அன்புடன்
அரைபிளேடு

40 comments:

said...

ஆஹா, ஓஹோ..

எனக்கு இந்த கதையில் ரொம்ப பிடித்தது பின்குறிப்பு தான்...

மை டியர் பேரன்ட்ஸ் நோட் தி பாயின்ட். அரை பிளேடு எல்லாதையும் காலகாலத்துல முழு பிளேடு ஆக்கிவிடுங்க. நல்லா இருப்பீங்க...

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தொடரை தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்த

வெட்டிப்பயல்,
திவ்யா,
சந்தோஷ்,
ஸ்ரீகாந்த்,
Wyvern

ஸ்பெஷல் தாங்ஸ் டு யூ ...

மற்றும் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க...சூப்பரா எழுதறீங்க

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் ஸ்ரீகாந்து அவர்களே...

கதையோட முடிவில இந்த சொசைட்டிக்கு நம்மால ஆன ஒரு மெஸேஜ் சொல்லிட்டேன்..

கண்டுக்னதுக்கு தாங்ஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் செந்தழலாரே...

பிஸியான நட்சத்திர வாரத்திலயும்.. நம்மோட இம்மாம் பெரிய கதய படிச்சி பதில் போட்டதுக்கு ஒரு படா தாங்ஸ் வச்சிக்கிறேன்....

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//உங்கள் பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செய்து வையுங்கள்..
இல்லையேல் இந்த கல்யாண ராமனின் கதிதான் அவர்களுக்கும்...//

ஆதா பிளேடு

இம்மாம் பெரிய கதைய எழுதுனத வுட்டு வூட்ல கேட்டுகினினா அவங்களே பண்ணிவப்பாங்கள.

இப்பவும் கெட்டு போகல வூட்டு அட்ரஸ் குடுத்தின உங்க அப்பாவுக்கு நம்ம வலைபிளவர்களா சேர்ந்து இதை வுங்க வூட்டுக்கு தாபால்ல அனுப்பி வைச்சுடுரோம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாடோடி அவர்களே

முதல்ல எனக்கு நானே வூட்ல சொல்லி கல்யாணம் ஆயிடுச்சின்னு தாழ்மையா சொல்லிக்கிறேன்...

கல்யாணம் கீதே ஆகாத வரைக்கும் இன்னும் ஆவலையேன்னு இருக்கும்..
ஆனதுக்குப்பறம் ஏண்டா ஆச்சுன்னு இருக்கும்...

எவ்ளோ இருந்தாலும் கல்யாணம்ன்றது ஒவ்வொரு மன்சனுக்கும் ரொம்ப முக்யம்... அத நம்ப ஜனங்களுக்கு சொல்லனும்னுட்டு தான் இந்த கதியே இங்க எயுதுனது...

எல்லாம் கால காலத்துல ஆவணும்ல...

பி.கு. இந்த கத இதுல வர்றவங்க யாரும் ஒரிஜினல் இல்ல.. அவ்ளோவும் சும்மா நம்ப மனசுல தோணுணது மட்டுமே... யாரையாவது இது ரெப்ரசன்ட் பண்ணுதுன்னு நீங்க நினச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல.....

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்புறம் நாடோடி அவர்களே

வூட்ல சொல்லி கல்யாணம் பண்ணி வக்க நினச்ச உங்க பெரிய மனசுக்கு ஒரு பெரிய தாங்ஸ்..

இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்தான், வூட்டம்மாவோ சட்டமோ உடாதே.. அதுவும் இல்லாம ஒரு தப்பை மனுசன் வாய்க்கையில ஒரு தபாதான் பண்ணலாம்.. இன்னொரு தபா பண்ணா அவன மாறி முட்டாள் யாருமே இல்லன்னு எங்கயோ படிச்சேன்...

உங்களுக்கு பெரிய தாங்ஸ்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

mm.. parthien rasithen.. pavan k.raman.. namma simbu maathiri pannitinga mmm

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கத படு சோக்காக் கீது நைனா!

அப்பால, உங்க கமெண்டான்ட, அனானிக்கும் கொஞ்சம் எடம் ஒதுக்குபா. இந்த பீட்டா ப்ளாக்கர்ல மாட்டிக்கினவுங்களுக்கு, செல தபா கமெண்டு போட முடியலியாம்.

அப்பால இன்னொரு மேட்டரு, நான் உன்னான்ட ஒரு தபால் அனுப்பிக்கிறேன்பா. கண்டிக்கினு பதில் போடு நைனா.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

welcome adiya....

கண்டுக்னதுக்கு தாங்ஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் ஜியா அவர்களே,

அனானி ஆப்ஜன் எனக்கு தெரியுதே.. உங்களுக்கு தெரியலியா....
இந்த பீட்டா பிளாக்கர் வேற என்ன கண்டுக்கன்னு கூவிக்னே கீது..

அத்தால கஷ்டப்பட்டன்னு இம்மாம் பேரு சொல்றப்ப அத்த கண்டுக்குவனா நானு...

கண்டுக்னதுக்கு தாங்ஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட என்னபா இது

கலக்கீட்டீயே...

உன் கதைலாம் முதல்லயே படிச்சிருந்தா நான் போட்டிக்கே வந்து இருக்க மாட்டேனா பா...

-சதீஷ்
http://tamilblog.info

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப விறுவிறுப்பா இருந்தது கதை. ஒரே மூச்சில படிச்சு முடிச்சிட்டேன். :)

வாழ்த்துக்கள்

கீதா

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சதீஷ் அவர்களே

நம்ம கதய பாராட்டுனதுக்கு தாங்ஸ்.

உங்க கதைய படிச்சேன். ஏகப்பட்ட திருப்பத்தோட படா ஜோரா கீது..

நம்ம கதயில லாஜிக் எதுவும் கடியாதுங்கோ.. சும்மா ஜாலிக்கு எயுதுனது.. போட்டியில போட்டா நெறய பேரு படிப்பாங்கன்னுதான்..

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு

வாங்க கீதா அவர்களே

கொஞ்ச பெரிய கதைதான்.
ஒரே மூச்சில் படித்த உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்...

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு அவர்களே,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஜாலியாக எழுதியிருந்தாலும், மிக professional-ஆக யோசித்து எழுதியிருக்கிறீர்கள். ரசித்து சிரித்தேன்.

அடிச்சு ஆடுங்க!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பாண்டி: கல்யாணம் பன்றதுக்கு முன்னாடிதாண்டா ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். கல்யாணம் பண்ணி பாரு அடுத்த நாளே அது பீஸ் போகும்..//
-- really nice one

Really Nice Story.. Innaikuthan padichen.. ennala series siripu thanga mudiyalla.. officela ellarum oru mathir parthanga..

Thank you mr.araiblade, you made me to laugh after long time.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு காரு,
நேனு இப்புடே இந்த முழு கதையை படிப்பிஸ்தானு. சூப்பரா எழுதிருக்கேள். ஞான் வுழுந்து வுழுந்து சிரிச்சூ. அப்படியே கலக்குங்க வர்ற நாட்கள்ல.
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் sridhar Venkat அவர்களே..

/*****************
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஜாலியாக எழுதியிருந்தாலும், மிக professional-ஆக யோசித்து எழுதியிருக்கிறீர்கள். ரசித்து சிரித்தேன்.
********************/

ரொம்ப நாளா மனசுல இருந்த கதையிது.... பார்த்து பார்த்து ஒரு சீக்குவென்சா வர்ற மாதிரி எழுதியது.

உங்க பாராட்டுக்கு ரொம்ப தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//Thank you mr.araiblade, you made me to laugh after long time.
//

நன்றி அனானி அவர்களே..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கைப்புள்ள

/************
பிளேடு காரு,
நேனு இப்புடே இந்த முழு கதையை படிப்பிஸ்தானு. சூப்பரா எழுதிருக்கேள். ஞான் வுழுந்து வுழுந்து சிரிச்சூ. அப்படியே கலக்குங்க வர்ற நாட்கள்ல.
:)

************/

நம்ப ஸ்டோரில வஸ்துன்ன எல்லா பாஷாவும் கண்டுக்னு நிங்கள் கருத்து சொல்லி. நீங்க ரொம்ப நல்ல பிள்ளையாண்டான்.

ரொம்ப தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Congrats on getting the first prize. The story was really nice.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிக்க நன்றி சிறில் அலெக்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சென்னாகிதே குரு. ஹொசா வருஷ சுபாஷேகளு :-))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ராமச்சந்திரன் உஷா அவர்களே

தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏமண்டி அரைப்ளேட்காரு, உங்க குறும்புக்கு ப்ரைஸ் கிட்டி !
வாழ்த்துகள் பாராட்டுக்கள்!
நகைச்சுவையா பேசிடலாம் எழுதற்து ரொம்ப கஷ்டம்..நீங்க அனாயாசமா இயல்பா எழுதிட்டீங்க.
நிறைய எழுதுங்க புத்தாண்டில்.
ஷைலஜா

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பி.,

சும்மா சொல்லக்கூடாது. நகைச்சுவை இயல்பா வருது உங்களுக்கு. கன்னடத்தையும் நுழைச்சுருந்தீங்கன்னா தென்னகமனைத்தையும் கொண்டுவந்த பெருமை வந்திருக்கும் :-) நாலு சானல் பாத்தாமாதிரி இருக்கு.

சூப்பர் பொங்க.

ரங்கா.

பி.கு. முதல் பரிசு வாங்கியதற்கும் வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தலிவா,
முதல் பரிசு வாங்கியதற்கு பாராட்டுக்கள்!!!

நான் நினைத்த மாதிரியே உங்களுக்கு முதல் பரிசு கிடைத்துவிட்டது மிக்க மகிழ்ச்சி!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிக்க நன்றி ஷைலஜா அவர்களே.

நமக்கு தெரிஞ்சத எழுதினோம்...

ப்ரைஸ் ஈஸ் ஸ்வீட் சர்ப்ரைஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ரங்கா அவர்களே..

நமக்கு கன்னடத்துல ஒரு வார்த்தையும் புரியாது... இல்லாட்டி கன்னடத்துலய ஒண்ணு இரண்டு வார்த்தை டிரை பண்ணியிருக்கலாம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வெட்டிப்பயல் அவர்களே.

ரெகக்னைஸ் ஆவற அளவுக்கு நமக்கு கதை எழுத வர்றது நமக்கே ஆச்சரியமா இருக்கு.

தொடர்ந்த ஆதரவுக்கு ரொம்ப தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சீன போட்டீங்க தல....

ஃபர்ஸ்ட் பாலுலேயே சிக்ஸரா சூப்பர் சூப்பர்...

இன்னும் பல பல விருதுகள் வாங்கி 2007ல் பெரும் பதிவாளனாக வாழ்த்துக்கள்...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி..

உங்க வாழ்த்துக்கு ரொம்ப தாங்ஸ்..

தங்களை போன்றவர்களின் நட்பை இப்பதிவுகள் பெற்றுத்தருகிறது... அஃதே பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றிகள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாடகம் அருமை .
சிக்கிரம் .. உங்களுக்கு திருமணம் ஆக என் வாழ்த்துக்கள்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் சுந்தர் அவர்களே...

நமக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆயிருச்சிங்கோ... !!!!!

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்கீட்டீங்க பாஸ். செம காமெடி.

-பிரபு

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிச்ச்ச்ச்சேபுட்ட தல ~ க‌த‌ ரொம்ப‌ சூப்ப‌ரு...ஜ‌ட்ஜோட‌ தீர்ப்பு சூப்ப‌ரப்பு...

ரொம்ப நிறைவா இருந்திச்சி...

~மாறன்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

good job :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Rombavum nandraka irunthathu, Innaikuthan padichen.. ennala siripu thanga mudiyalla.. officela ellarum oru mathir parthanga, kavalaiillamal sirikka ithupol niraiya ezhuthungal. kavalaikalai marakka seithamaiykku mikka nandri.

-------------------------------------------------------------------------------------------------------------