Wednesday, December 27, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 2. ஆண் எப்போது அடிமடையனானான் ?

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு
ஆண் எப்போது அடிமடையனானான் ?

இது ரொம்ப இம்பார்ட்டண்டான கேள்வி.

இதுக்கு நாம அவய்லபிள் ஹிஸ்டரிய பார்க்கலாம்.

பெண் எப்ப ஆணோட வாழ்க்ககையில வந்தாளோ அப்பவே ஆண் அடி மடையனாயிட்டான்.

ஆதாம் ஏவாள எடுத்துக்குங்க. ஆப்பிளு துன்னாத அப்பிடின்னு கடவுளே சொல்லிட்டு பூடறாரு.
இருந்தாலும் இருக்கற ஒரே பொண்ணுக்காக தன்னோட கருத்து கொள்கை கடவுளு எல்லாத்ததையும் தூக்கி போட்டுட்டான் உலகத்தோட முதல் ஆண். அங்க ஆரம்பிச்சதுங்க ஆண் அடிமைத்தனம்...

கிரேக்கத்துல ஹெலன் அப்பிடின்னு ஒரு பொண்ணு.. அதுக்காக அறிவில்லாம அடிச்சிக்கிட்டாங்க பாருங்க நம்ப ஆண்மக்கள்...

கிளியோபாட்ரா அப்பிடின்னு இன்னொரு பொண்ணு... இது எகிப்துல. அரசனாயிருக்க வேண்டிய ஆண்டனிய அடிமையாக்கிய புண்ணியவதி...

சரி நம்ம ஊரு கத இன்னாடா சொல்லுதுன்னு பாத்தா பாஞ்சாலின்னு ஒரு பொண்ணு. அது தேவையில்லாம சிரிச்சு அப்பால அவமானப்பட்டு கூந்தல முடிய மாட்டேன்னு சொல்லுதுன்னு அஞ்சி பேரு அடி மடையனாகி வெட்டி மடிஞ்சி, ஒரு ஒட்டு மொத்த கண்ட்ரியே குளோஸ் ஆயிருச்சி.

அம்பிகாபதி, மஜ்னு, சலீம், ரோமியா பொண்ண நம்பி டிராஜிடியா முடிஞ்ச ஆண்களோட கத எத்தினி எத்தினி.

இவ்ளோ சிச்சுவேஷனையும் நாம ஆராய்ஞ்சி பாத்தம்னா ஒரு மேட்டரு தெரிய வரும்.
எல்லா பொண்ணுங்களும் ஆண்கள எப்பிடி அடிமடையனாக்குனாங்க...

அதுக்கு அவங்க கண்டு பிடிச்ச பயங்கரமான ஆயுதம் ஒண்ணுதான் எல்லாத்துக்கும் காரணம்.
இது இன்னாபா ஆயுதம் அப்பிடின்றீங்களா...

அந்த ஆயுதம் பேரு காதல்...
தமிழ்ல சொல்லணும்னா லவ்வு...

மனித குல ஹிஸ்டரில கண்டு பிடிக்கப்பட்ட வெரி டேஞ்சரஸ் ஆயுதம் இந்த லவ்வுதான்... ஆட்டம் பாம்லாம் அதுக்கு அப்பாலதான்.

ஆட்டம் பாம் ஆயுதம் அஞ்சி செகண்டுல சாவு... ஆனா இந்த லவ்வு ஆயுதம் இருக்கே இது ஆயுசு முழுக்க சாகடிக்கும்.

இந்த லவ்வால ஆண்கள் படற கஷ்டம் இருக்கே.. அப்பப்பா.. இது முழுக்க முழுக்க ஆண்களை அடிமைப்படுத்த புத்திசாலி பெண்களால் கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு.

இந்த லவ்வு கறுப்பா சிவப்பா... பச்சையா மஞ்சளா... அது இன்னான்னு இது வரிக்கும் யாரும் கண்ணால பாத்தது கடியாது..

ஆனா ஒரு பொண்ணு ஒரு ஆணை பாத்து எனக்கு உம்மேல லவ்வாயிடுச்சி அப்பிடின்னு சொல்லுதுன்னு வையுங்க...
அடுத்த நிமிஷம் அவன் தன்னோட டோட்டல் மூளையையும் கழட்டி வெச்சுடறான்...

இந்த இடத்துலதான் ஆண் டோட்டலா தோத்து போறான்....

நாம ஆணுரிமைக்கு போராடணும்னா இந்த பயங்கர ஆயுதத்த எதிர்த்து போராட வேண்டிய கட்டதுத்துல இருக்கோம்.

லவ்வு நல்ல விஷயந்தான அப்பிடின்னு நீங்க சொல்றவறா இருந்தா...
இந்த லவ்வுன்ற விஷயம் எப்பிடியெல்லாம் ஆண அடிமடையனாக்குதுன்றத அடுத்தடுத்த சேப்டர்ல பார்க்கலாம்.மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

38 comments:

said...

அரை,
முதல் பகுதி எழுதியபின்னரும் நீங்கள் அரையாகவே இருக்கின்றீர்களா?
ஏன் என்னை தவிர வேறு எந்த வலையுல பெண்ணும் உங்கள் பக்கத்திற்கு வருவதில்லையா??

அது போக,

அறிவில்லாம வேலைகளை செய்து போட்டு பெண்கள் மேல் பழியை போடுவதை வன்மையா கண்டிக்கிறேன்.

இப்பொழுது வேலையில் அதிகம் எழுதினால் சரிவராது...வீடு வந்த பின்னர் பார்க்கிறேன் உங்கள் வலைப்பூவை ஒரு கை..

நிற்க,

வேறு பெண்களும் வந்தால் நன்றாக இருக்கும்..

அதுவரை நான் கருத்துக்களை வாசிப்பதோடு நிறுத்தவா???

அதற்காக என்னை ஒரு பெண்ணியவாதி என்று நினைக்கவேண்டாம். (சரியான வார்த்தை என்று நினைக்கிறேன்)

ஹி ஹி எங்கள் வீட்டில் ஆண்கள் தான் அதிகம்.. ;) அதனால் நிறைய எழுதினா நாளைக்கு No Shopping!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹாப் பிளேடு கரட்டிக்கா சொன்னேப்பா...

இத வச்சுகினி பொண்ணுங்க பண்ணுர ரவசு தாங்கமுடியல..
இந்த அபலை பையனின் சப்போர்ட்டு உனக்கு எப்போதும் உண்டுப்பா..

லவ் பண்ற சாக்குல -10 டிகிரி குளிருலையும் ஐஸ்கிரிம் கேட்டு நம்மல எல்லாம் கேணையன் ஆக்குவாளுக.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாருங்கள் தூயா

உங்கள மாதிரி நடுநிலையாளர்கள்தான் நாட்டுக்கு தேவை.

உங்க கருத்துக்காக காத்திருக்கிறேன்.

ஆணித்தரமான கருத்துக்களை முன் வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

***********
அறிவில்லாம வேலைகளை செய்து போட்டு பெண்கள் மேல் பழியை போடுவதை வன்மையா கண்டிக்கிறேன்
***************

ஆண் மடையனாயிட்டான்னு முதல்லயே சொல்லியாச்சு. யார் அவன மடையனாக்குனாங்கன்னும் சொல்லியாச்சு. அப்புறம் அவன் எப்படி அறிவோடு வேல செய்வான்.
நீங்க இப்ப கண்டிக்கறதா இருந்தா யார கண்டிக்கணும். யோசிச்சு பாருங்க.

*********
வீடு வந்த பின்னர் பார்க்கிறேன் உங்கள் வலைப்பூவை ஒரு கை..
*********

ஒரு கை பார்ப்பது பெண்களுக்கு கை வந்த கலை. தாராளமா வாங்க. விவாதத்துக்கு நாம ரெடி.

*******
ஏன் என்னை தவிர வேறு எந்த வலையுல பெண்ணும் உங்கள் பக்கத்திற்கு வருவதில்லையா?
*******

ஆதிக்கம் செலுத்தும் பெண்களுக்கு ஒடுக்கப்பட்ட ஆண்களின் குரலுக்கு பதில் சொல்ல கூட நேரமில்லை.

தாங்களாவது வந்தீர்களே. நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஆனா ஒரு பொண்ணு ஒரு ஆணை பாத்து எனக்கு உம்மேல லவ்வாயிடுச்சி அப்பிடின்னு சொல்லுதுன்னு வையுங்க...
அடுத்த நிமிஷம் அவன் தன்னோட டோட்டல் மூளையையும் கழட்டி வெச்சுடறான்...//

அடடா..அரைபிளேடு...அதுக்கு அப்புறம் மூளைக்கு ஏதுப்பா தேவை..?
அதுதான், இருக்கற மூளைய வைச்சி,
ஒரு சூப்பர் மூளைய பிடிச்சாச்சே!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாடோடி

உங்க சப்போர்ட்டுக்கு தாங்ஸ்.

-10 டிகிரில அவங்க ஐஸ்கிரீம் சாப்படறது இருக்கட்டும்.
கம்பெனி குடுன்னு நம்பளயும் சாப்பட சொல்வாங்களே அந்த கொடுமய என்ன சொல்றது..-------------------------------------------------------------------------------------------------------------
said...

அபி, ஐ மீன் அரை பிளேட்,
முன்னுக்கு பின் முரணாய் பேசுறீயியே நைனா! நீதாந்தான் வடிகட்டின புத்திசாலினா லவ்வு சொன்ன பொண்ணு கைல அப்பீட்டு உட்டுட்டூ பொழைக்கிற வழிய பார்த்துப் போயிக்கீழே இரேன். யார்ரு வாணான்னாங்க.
இப்டிக்கு,
நானும் ஒரு பெண்-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தன முல்லை

ஆண் தன்னோட மூளைய விரும்பி கழட்டி வைக்கல.
அப்பிடி கழட்டி வைக்க சொல்லி நிர்ப்பந்த படுத்த படுறான். அதைதான் நாம கண்டிக்கறோம்.

ஆண்கள சாவி கொடுத்தா ஓடுற பொம்மையா பெண்கள் யூஸ் பண்றதுக்கு பேருதான் பெண்ணுரிமயா இல்ல சமஉரிமயா...

ஓர் ஆண் அறிவுள்ள ஜீவனாவாவது பெண்களால நடத்தப்படனும் அப்படின்றதுதான் நம்ப கருத்து...

அதுக்காகதான் குரல் கொடுத்துக்னு இருக்கோம்..

எங்களுக்காகவும் சேத்து சிந்திக்கிற உங்க பெரியமனசுக்கு ரொம்ப தாங்ஸ்..

ஆனா எங்களையும் நாங்க நாங்களா சிந்திக்க வுடுங்கன்றதுதான் நம்ப ரிக்வஸ்ட்டு..

வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒரே உரையில ரெண்டு கத்தி இருக்க முடியாதுங்க!
அதுவும் இல்லாம ஓருடல் ஈருயிர் ஆண் வசனம் சொன்னாமட்டும் பத்தாது இல்லயா!
அதுதான், செயல்ல காட்டறதுக்கு ஒரு சான்ஸ்!!

புரிஞ்சுக்க மாட்டறீங்களே!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ராமச்சந்திரன் உஷா அவர்களே

நாம புத்திசாலின்னு நாம எங்கியுமே சொல்லிக்லை.

ஆனா பாருங்க இயற்கையாவே ஆண்கள் புத்திசாலிங்க.

அதே இயற்கையாவே அவங்க புத்திசாலித்தனம் பெண்கள் மின்னாடி வேல செய்ய முடியாம போது.

அப்பீட்டு உட்டுட்டு போறவன் கோழை.
கஸ்டமோ நஸ்டமோ கடசி வரிக்கும் அதே பொண்ணு கூட அடியும் உதையும் தாங்கிக்னு வெளிய சொல்லாம அமைதியா இருக்கான் பாருங்க அவன் கடம வீரன்.

நாட்டுல இந்த மாதிரி நெறய கடம வீரங்க இருக்கோம். இவங்கள பத்தியோ இவங்க தியாகங்கள பத்தியோ வெளிய தெரியாம போயிடுது.

இவங்களுக்கும் சமஉரிம வேணும்னு கேக்கறதுதான் நம்ம கடம. மனித தர்மம்.

உங்க கருத்துக்கு நன்றி.

சமஉரிமைக்கு உங்க ஆதரவு வேணும்னு வேண்டி கேட்டுக்கறேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நாட்டுல இந்த மாதிரி நெறய கடம வீரங்க இருக்கோம். இவங்கள பத்தியோ இவங்க தியாகங்கள பத்தியோ வெளிய தெரியாம போயிடுது.//

கடம வீரனே! புல்லரிக்குதுபா!-------------------------------------------------------------------------------------------------------------
said...

சந்தன முல்லை அவர்களே

***ஒரே உரையில ரெண்டு கத்தி இருக்க முடியாதுங்க!***

ஆணும் பெண்ணும் எதிரியா என்ன? ஒரே உரை இரண்டு கத்தி. ஒரு காடு இரண்டு சிங்கம்.
ஒண்ணுதான் இருக்க முடியும். இரண்டும் ஒண்ணா இருக்க முடியாது அப்பிடின்னு சொல்ல.

குடும்பங்கறது இரட்டை மாட்டு வண்டிங்க.. இரண்டும் மாடும் இணபிரியாம ஒத்துமையா போனாதான் வண்டி ஓடும்..

ஒரு மாடு இன்னொரு மாட்ட பத்தி கவல படாம வேகவேகமா ஓட முடியாது..

ம்யூட்சுவல் அண்டர்ஸ்டான்டிங் வேணுங்க..

ஆண் எப்பிடி பெண்ணோட கருத்துக்கு மதிப்பு தர்றானோ அதே மாதிரி பெண்ணும் ஆணோட கருத்துக்கு மதிப்பு தரணும் அப்பிடின்றதுதான் நம்ப கருத்து.


************
அதுவும் இல்லாம ஓருடல் ஈருயிர் ஆண் வசனம் சொன்னாமட்டும் பத்தாது இல்லயா!
அதுதான், செயல்ல காட்டறதுக்கு ஒரு சான்ஸ்!!
***********


இது இது. இது தாங்க கட்டுரையோட இந்த பாகத்துல நான் சொல்ல வந்தது. இப்பிடி அன்பா சொல்லி சொல்லியே ஆண அடிமையாக்கிட்டாங்க..

அதனாலதான் அன்பு டேஞ்சரான ஆயுதம் அப்பிடின்னு நாம சொல்லி இருக்கோம்.

தாங்ஸ்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

அன்பு தம்பி

எனது எதிர்கால கடம வீரனே..

வருகைக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,

ஆணுரிமைக்காக இதுவரை எழுப்ப நினைத்த பல அடிமடையர்களாக ஆனவர்களால் ஓங்கி ஒலிக்க முடியாத, குரல்வளை நெறிக்கப்பட்டு உரிமைக்குரல் நசுக்கப்பட்ட ஆணுரிமை வாதத்தினை, நிறுத்தப்பட்ட உரிமை
ஒ(வ)லியை அரைபிளேடு போட்டு கீசி கசிய விடுவதற்கு ஆனந்தக் கண்ணீரோடு இந்த முன்னாள் அடிமடையனின் ஆஆ...ஆதரவு!

ஹிஹி பூரிக்கட்டை ப்ளையிங் அண்ட் பாலிங் ஆன் மை ஹெட் தட்ஸ் வை தட் ஆஆ... சவுண்ட் கமிங்... திஸ் டைப் ஆஃப் ஆண்ரைட்ஸ் டாகிங் நாட் அலௌடாம்... டோண்ட் ஒரி... கீப் ரைட்டிங் அபௌட் ஆண் ரைட்ஸ்.. ஐ ப்ளட்ஜ் மை சொலிடாரிட்டி வித் யூ அரை பிளேடு..-------------------------------------------------------------------------------------------------------------
said...

அன்புள்ள அரைபிளேட்,
நிங்கள் விளையாட்டு எழுதியதாய் நினைத்து நானும் போகிறப் போக்கில் ஒன்று அடித்துவிட்டேன். ஆனால் அதற்கு நீங்கள் அளித்த பதில் விளையாட்டுதனமாய் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. வெறும்பொழுதுபோக்காய் என்றால் தொடர எனக்கு நேரமில்லை. நேரமிருக்கும்பொழுது, கட்டாயம் அந்நேரம் தோன்றுவதைப் போட்டுவிட்டுப் போகிறேன். கொஞ்சம்
சீரியஸ் என்றால், நேற்றிரவு நான் போட்ட ஒரு பதிவு- மைதீன் மீரான், அ,முத்துலிங்கம் 27dec,2006 என்ற பதிவில் கூட தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவதிப்படும் ஆணின் தியாகங்கள் அதிகம் பேசப்படுவதில்லை என்று
சொல்லியிருக்கிறேன்.
ஆணாதிக்கம் இல்லை என்று சொல்ல வரவில்லை, ஆனால் அதே சமயம் தவறுகள் பெண்கள் பக்கமும் உண்டும் என்பதை பலமுறை பதிவுகளில் எழுதியிருக்கிறேன், முடிந்தால், நேரமிருக்கும்பொழுது பழைய பதிவுகளை புரட்டிப் பார்க்கவும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏ.. நீ சொல்லுத பாத்தா எதோ ஒரு முடிவோடத்தான் இருக்க போல...நா இங்கெ சும்மா உக்காந்து பாக்கேன்...அப்பப்போ வந்து ஏதாவது சொல்லுதேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் ஹரிஹரன் அவர்களே

உங்க சப்போர்ட்டுக்கு ரொம்ப தாங்ஸ்.

எப்படிப்பட்ட நிலையில இருந்து சப்போர்ட் குடுக்கறீங்கன்னு தெரிய வர்றப்ப.. அஆ... பீலிங்ஸ்...

அதே நேரத்தில் பறக்கும் ஆட்டுக் கல்லையே பார்த்தவன் இந்த அரை பிளேடு என்தையும், பூரிக்கட்டைகள் நமக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதையும், இதற்கெல்லாம் நாம் அஞ்ச மாட்டோம் என்பதையும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்ஸ்....-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி உஷா அவர்களே

ரொம்ப சீரியஸான பதிவா இல்லதான். ஆனா ஒரு சீரியஸான விஷயத்த கொஞ்சம் லைட்டா சொல்லலாம்னுதான்.

எந்த ஒரு விஷயத்துக்குமே இரண்டு பக்கம் இருக்கும் இல்லையா..

நாம காமடியா சொல்ற விஷயத்துல சீரியஸ்னஸ் இருக்குன்னு கண்டுக்னதுக்கு தாங்ஸ்.

கட்டாயம் தங்கள் சுட்டிய பதிவுகள படிச்சு பாக்கறேன்.

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் மதுசூதனன் அவர்களே

அப்பப்ப வந்து கண்டுக்னு போங்க..-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆமா, பெண்களோட பின்னால லோ..லோன்னு முதல்ல லவ்வுன்னு ஜொள்ளு விட்டுத் திரியிறதே ஆண்கள்தான. பிறகேன் பெண்களை ஏன் பிழை சொல்றீங்க? அப்படீன்ன உங்க அக்கா தங்கச்சி, அம்மா எல்லாரு மே அவர்களும் ஆண்களை அடக்கியதாக எடுத்துக்கொள்லலாமா?

//தமிழ்ல சொல்லணும்னா லவ்வு...//

அத்ன்னாது லவ்வு ன்னு தமிழ்ல சொல்லறதா, அது இங்கிலீசு சொல்லுப்பா.இந்தபதிவையும் பாருங்கோதமிழ்ல சொல்லணும்னா லவ்வு...-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு..
கரெக்ட்..குடும்பங்கறது ஒரு வண்டி மாதிரி! கண்டக்டர், ட்ரைவர் இருக்கணூம். ஆனா ஒரே ஒரு ட்ரைவர்தான் இருக்கணும்.

//ம்யூட்சுவல் அண்டர்ஸ்டான்டிங் வேணுங்க..//

க்ரெக்ட். நான் இல்லேன்னு சொல்லையே! அதுவும் இல்லாம ஆணும் பெண்ணும் எதிரின்லாம் சொல்லல!
பயத்துல ரொம்ப அதிகமா கற்பனை செய்ஞ்சிக்காதீங்க..:-)!

//அதனாலதான் அன்பு டேஞ்சரான ஆயுதம் அப்பிடின்னு நாம சொல்லி இருக்கோம்//-------------------------------------------------------------------------------------------------------------
said...

attagaasam blade pakkiri.

indha aana vargatha sooberaa pcoket la poattu suthinu giraanga namba ponnunga. neenga solraa maari atom bomb laam jujubi. lavvu javvu maari izuthu thirunelveli alwa maari aaiduvaan paavam.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல கேள்விகள் செல்லி அவர்களே...

/***********
ஆமா, பெண்களோட பின்னால லோ..லோன்னு முதல்ல லவ்வுன்னு ஜொள்ளு விட்டுத் திரியிறதே ஆண்கள்தான. பிறகேன் பெண்களை ஏன் பிழை சொல்றீங்க?
*************/


பின்னாடி திரிய விடறதே பெண்கள் தான்..
நமக்காக ஒருத்துன் திரியறான்றதுல ஒரு அல்ப சந்தோஷம் அவங்களுக்கு...


/***********
அக்கா தங்கச்சி, அம்மா எல்லாரு மே அவர்களும் ஆண்களை அடக்கியதாக எடுத்துக்கொள்லலாமா?
*************/


ஆகா எடுத்துட்டாங்கய்யா செண்டிமெண்ட...
ஆண்கள் செண்டிமெண்டா வீக்கு...
இந்த செண்டிமெண்ட் கொஸ்டின்ல எல்லா ஆண்களுமே அம்பேல் ஆயிடுவாங்க..
எவ்வளவு காலமா அக்கா தங்கச்சி செண்டிமெண்ட்ல மாட்டி ஆண் கஷ்டப்படுவான்..

எங்க அக்காங்களும் தங்கச்சிங்களும் எவ்வளவு தூரம் ஆண்கள கஷ்டப்படுத்தறாங்கன்றதயும்
கண்ணால பாத்துட்டுதான எயுதறோம்...

ஆண்கள் பாவங்க...

/***********
அத்ன்னாது லவ்வு ன்னு தமிழ்ல சொல்லறதா, அது இங்கிலீசு சொல்லுப்பா.
*************/


அதாவதுங்க.. மெட்றாஸ் தமிழ்ல அது பேரு லவ்வுங்க..

நல்லா விவரமா கேள்வி கேக்குறீங்க..

நல்லதுதான்..

அப்பப்ப வந்து கேளுங்க.. அப்பதான் நம்ம தரப்பு நியாயத்த நாமளும் சொல்ல முடியும்...

ரொம்ப தாங்ஸ்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

/*அதே நேரத்தில் பறக்கும் ஆட்டுக் கல்லையே பார்த்தவன் இந்த அரை பிளேடு */
...இருந்தாலும் கொரலு வுடுர... பிளேடு,நீ ரொம்ப நல்லவன்பா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் சந்தனமுல்லை அவர்களே

இந்த மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் எல்லாருக்கும் வேணும் அப்பிடின்னு தான் நாம குரலு கொடுத்துக்னு இருக்கோம்..

பெண்ணுரிம பேசி கிளம்பற சிலரு எல்லாத்துக்கும் காரணம் ஆண் தான்னு சொல்லி அவன தூக்கி போட்டு துவம்சம் பண்ணிடறாங்க..

அப்படியில்லன்னு சொல்லவும் உண்ம நிலய விளக்கவும்தான் இந்த கட்டுர.

நன்றி-------------------------------------------------------------------------------------------------------------
said...

தெய்வமே!!!

கலக்கறப்பா... என் ஆதரவு உனக்கு என்னைக்குமிருக்கு :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாருங்கள் கிட்டு அவர்களே

ஆண்களின் தன்மானமும் சுயமரியாதையும் அடகு வைக்கப்பட்டு பெண்களின் ஹேண்ட் பேக்குகளில் பகுங்கி கிடக்கிறது.

அதை மீட்டெடுப்பதே நமது நோக்கம்.

தாங்ஸ்-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்பள நல்லவன்னு கண்டுக்ன அனானி நண்பரே..

ரொம்ப தாங்ஸ்பா.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக வெட்டிப்பயல் அவர்களே

2006 ஆம் ஆண்டில் பதிவர் மனங்களை வென்ற தங்க தலைவனே..

வாழ்த்துக்கள்..

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அப்பப்ப வந்து கேளுங்க.. அப்பதான் நம்ம தரப்பு நியாயத்த நாமளும் சொல்ல முடியும்..//
பரஸ்பர புரிந்துணர்வில்லாம இப்பிடி ஆள் மறி ஆள் நியாயம் கேட்கத்தொடங்கித்தான்
இன்றைய திருமணங்கள் வெகுவிரைவிலேயே விவாக்ரத்திலபோய் முடிகிறது.
பல ஆண்களுடைய வெற்றிக்கு
பெண்கள்- அம்மா, சகோதரிகள், காதலிமார், மனைவிமார், ஏன் மகள்மார் கூட-உறுதுணையா இருந்திருக்கிறதை என் அனுபவத்தில பார்த்திருக்கிறேன்.
நீங்க உங்க கருத்தை சொல்லீட்டீங்க.நான் என் கருத்தைச் சொல்றேன்.தப்பாயிருந்தா மன்னிக்கணும்-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஆனா பாருங்க இயற்கையாவே ஆண்கள் புத்திசாலிங்க.

அதே இயற்கையாவே அவங்க புத்திசாலித்தனம் பெண்கள் மின்னாடி வேல செய்ய முடியாம போது.//

இன்னா தத்துவம் சூப்பர். யாரூடி அவ சிரிக்கிறது? சிரிக்கிறவ அப்பால போயி சிரி. இங்க வேணா. அ.பி தம்பி கோச்சிக்கும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க செல்லி

தப்பா நினைக்க ஒண்ணுமேயில்ல..

கருத்து சுதந்திரம் நம்ப நாட்டுல ஆண் பெண் எல்லோருக்குமே இருக்கு...

ஒரு ஆணோட பார்வையில ஜெண்டர் ஈக்வேஷன் எப்பிடி இருக்குன்றதுதான் இந்த தொடர்...

தொடர்ந்து வந்து கருத்து சொல்லுங்க..

தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க உஷா அவர்களே

நாம அப்பப்போ நம்பள சுயவிமர்சனம் செஞ்சி பாத்துக்கணும். அப்பதான் நாம எங்க தப்பு பண்றோம்ன்றது பிரியும்.

இது ஆண் பெண் இரண்டு பேருக்குமே பொருந்தும்.

நமக்கு கோபம்லாம் வராது.

ஆண் இயற்கையாவே ஈஸியா விமர்சனங்களை எடுத்துக்க கூடியவன்.

பெண்களால ஒரு சின்ன விமர்சனத்தையோ ஒரு சின்ன சிரிப்பையோ கூட தாங்க முடியறதில்லை...

அது ஏன்னுதான் நமக்கு இன்னும் பிரிய மாட்டேங்குது...-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஆண் இயற்கையாவே ஈஸியா விமர்சனங்களை எடுத்துக்க கூடியவன்.

பெண்களால ஒரு சின்ன விமர்சனத்தையோ ஒரு சின்ன சிரிப்பையோ கூட தாங்க முடியறதில்லை//

அடடா, இது அடுத்த கருத்து கணிப்பா? எங்கேயோ போயிட்டீங்க போங்க. ஆனாலும் நீங்க சொல்றது அப்படியே நூத்துக்கு நூத்து ஐம்பது சதவீகிதம் சரீங்க. பாரூங்க, நம்ம தமிழ் இணையத்திலேயே நாங்க பொம்பளைங்க ஒருத்தி மேலே வைக்கிற
விமர்சனத்த இன்னொருத்தி தாங்கிறோமா? சாதி, மதம்ன்னு துப்பறிஞ்சி அசிங்க படுத்திட்டுதான் மறுவேலை. அப்புறம் நக்கல்,
நையாண்டி, மூச், குழாய் அடி சண்டைதான். யார் என்ன எழுதினாங்கன்னு, ஒத்தை வரியை பிடிச்சிக்கிட்டு, அதை வெச்சி
எல்லாரும் பதிவு போட்டுடுவோமில்லே சரிதானுங்களே?-------------------------------------------------------------------------------------------------------------
said...

துளசி, பத்மா அரவிந்த், செல்வநாயகி,ஜெஸிலா, மதுமிதா, மதிகந்தசாமி, மங்கை, கவிதா, பொன்ஸ், ஷ்ரேயா,நிர்மலா,தமிழ் நதி, பிரேமலதா, மதுரா, நிலா, மற்றும் நான் (என் நினைவில் இருந்த பெயர் பட்டியல் இது) யாராவது ஒருவர் அனாவசியமாய் பிறரை வம்புக்கு இழுத்து பதிவு எழுதுகிறார்கள், சினிமா வம்பு தும்பு, காப்பி, பேஸ்ட் வகையறா, ஆபாசம், சாதி சமய
காழ்புணர்ச்சி அக்கப்போர் எழுதுகிறார்கள் என்று யாரையாவது சொல்லுங்கள் பார்ப்போம். டீவி சீரியலில் சொல்வதைப் போல பொம்பளைனா இப்படிதான் என்று வசனம் பேசுவதை நிறுத்துவிட்டு கண்ணை நன்றாக திறந்து உலகைப் பாருங்கள் தம்பி. நன்றி வணக்கம்-------------------------------------------------------------------------------------------------------------
said...

பொன்ஸ் பெயர் விட்டுப்போச்சு. சேர்த்துக்கொள்ளுங்கள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

உஷா அவர்களே...

இத்துணை நல்ல பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் என்று அறியத்தந்தமைக்கு நன்றி...

உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் ஒன்றில் இருந்து ஒன்று முரண்படுவதால்.. இரண்டும் ஒரே பொருளை ஒன்று நேரடியாகவும் ஒன்று மறை முகமாகவும் தருகிறது என்று நினைக்கிறேன்...

விமர்சனத்தை பெண்கள் தாங்க மாட்டேன் என்கிறார்கள் என்ற விமர்சனத்தை தங்களால் தாங்க இயலவில்லை என்று நினைக்கிறேன்..

இணையத்தில் எழுதும் பெண்களை விமர்சிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல... அப்படி எழுதக்கூடிய எழுத்தாளர்களை விமர்சிக்க கூடிய அளவுக்கு எழுத்தாற்றல் நமக்கு இல்லை...

நாம இணையத்துக்கு புதுசு... நீங்க பேசுற இணைய அரசியல் பத்தியெல்லாம் நமக்கு தெரியாது...

நாம ஏதோ நம்ப புலம்பலை இங்கயாவது கொட்டாலாம்னு எழுதிக்னு இருக்கோம்...

அதே நேரத்துல இந்த கட்டுரை ஆண் பெண் இரண்டு பேரையுமே ஏதாவது ஒரு வகையில சிந்திக்க வைக்கும்னு நம்பறோம்...

இறுதி குறிக்கோள் சமஉரிமதானே தவிர.. வேற எதுவும் இல்லை...

இப்படிக்கு
சம உரிம கேக்குற ஒரு அப்பாவி ஆண்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி.
என் வலைப்பதிவைப் பார்த்து உங்க கருத்தையும் சொல்லுங்களேன்-------------------------------------------------------------------------------------------------------------
said...

என் வலைப்பதிவு
http://pirakeshpathi.blogspot.com-------------------------------------------------------------------------------------------------------------