Sunday, December 31, 2006

தேன்கூடு போட்டி - அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்தேன்கூடு போட்டியில் குறும்பான தலைப்பில் பொருந்தும் என்று நான் குறும்பாக எழுதிய நாடக வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு, அதுவும் முதல் பரிசு. நம்ப முடியாமல் நான்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

பதிவுலகிற்கு மிகப்புதியவன் நான்.. எனது முதல் பதிவு நவம்பர் மாதம் இடையில்தான் துவங்கியது. உங்கள் அனைவரின் ஆதரவும் தொடர்ச்சியான பின்னூட்டங்களுமே என்னை தொடர்ச்சியாக எழுத தூண்டியது.

வலையில் எனது எழுத்துக்கள் சென்னை செந்தமிழிலேயே வந்திருக்கின்றன.

ஆனால் எனது
கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை தமிழில் நானறிந்த பேச்சுக் கூறுகளை உள்ளடக்கியது. அதன் மூன்று பகுதிகளையும் தனித்தனியாக தொடர்ந்து பதிவிட்டேன். முதலில் போட்டிக்கு என்று எழுதவில்லை. பின்னர் கதையில் இருந்த குறும்பின் தன்மை நோக்கி ஏன் இதனை குறும்பு போட்டியில் இடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற தொகுத்து ஒரே பதிவாக இட்டு போட்டியில் இணைத்தேன்.

இன்று இப்படைப்பு தெரிவு செய்யப்பட்டு வென்று இருக்கிறது.

எனது படைப்பை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலாக தொடர்ந்து படித்து ஆதரவு தந்தும் பின்னூட்டம் இட்டு பாராட்டியும் வந்த அனைவருக்கும் வாக்களித்த வாசகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சகபதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அனைத்து போட்டி பதிவுகளையும் வாசித்தேன். மகிழ்ந்தேன்.

வலையுலகில் இத்தகு போட்டி நிகழ்வுகள் எழுதும் ஆர்வம் உடையோர்க்கு உறுதுணையான தூண்டுகோல்கள். தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கு எனது சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது மற்றுமொரு போட்டி படைப்பான
ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. விற்கும் பெருமளவு ஆதரவு. தங்களின் அன்பில் நனைந்து திக்குமுக்காடிவிட்டேன்.

இந்த அங்கீகாரம் மகிழ்வை தரும் அதே வேளையில் இனி சற்று கவனம் பெறுவேன் என்பதால் பதிவில் வழக்கம் போல் கிறுக்கித் தள்ளாமல் அதே நேரத்தில் நமக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த சென்னை செந்தமிழையும் கைவிடாது தொடர்வேன்.


வெற்றி பெற்ற பதிவுகள்.

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரை பிளேடு

குறும்பு - நாமக்கல் சிபி

குறும்பெல்லாம் குறும்பா? - எஸ்.கே.

நந்தன் - ராம்

வாழ்த்துக்கள் நாமக்கல் சிபி, எஸ்.கே., ராம்.போட்டி முடிவுகளை காண...

டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள்வலையில் நமது பதிவுகள் பெருமளவில் நமது நிகழ்வுகளை பதிவு செய்வனவாய் அமைகின்றன. நமது வாழ்வின் நிகழ்வுகள் பிறர்க்கு படிப்பினை என்றாலும் இலக்கியத் தரத்திற்கு நிகழ்வுகளைத் தாண்டி கற்பனைகள் அவசியமாகிறது. கனவுகள் கற்பனையின் ஊற்று.. கனவுகளின் உலகம் தனியுலகம். கண்மூடிக் காணும் கனவுகளாகட்டும். அல்லது கண்திறந்து காணும் கனவுகளாகட்டும். கனவுகள் கால நேர வர்த்தமானங்களில் கட்டுப்படுவன அல்ல. விதிமுறைகளில் சிக்கித் தவிப்பன அல்ல. ஆழ்மனதின் அழகான வெளிப்பாடுகள். கனவுகளில் பேதங்களற்ற பிரிவினைகளற்ற சமுதாயங்களை காணலாம். வளமான வாழ்க்கையை காணலாம். கனவுகளில் நமது குறிக்கோள்களும் அதனை அடையும் பாதைகளையும் காணலாம். தினசரி நிகழ்வுகளிலிருந்து நம்மை பிரித்து ஆட்கொள்ளும் நித்திரையில் வரும் கனவுகள் போல் வலைத்தளத்தில் நமது நிகழ்வுகளை பதிவிடும் நாம் நமது கனவுகளையும் பதிவிடுவோம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
அரை பிளேடு.29 comments:

said...

அரை,
வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிகச் சிறப்பான படைப்பிற்குப் பொருத்தமான பரிசே கிடைத்திருக்கிறது, திரு. அ.பி.

புதியவர் என நீங்கள் சொன்னாலும், உங்கள் எழுத்துகள் அப்படி இல்லை!

என் மனமார்ந்த வாழ்த்துகள்!


//ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. "விற்கும்" பெருமளவு ஆதரவு//

என்னங்க! அதுக்குள்ளே புஸ்தகம் எல்லாம் போட்டு நல்லா விற்குது போல!

:))[குறும்பு!]

புத்தாண்டு வாழ்த்துகள்!-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக வெற்றி...

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக எஸ்.கே. அவர்களே..

வாழ்த்துக்கு நன்றிகள் பல.

வலைப்பதிவுக்கு புதியவனே தவிர தமிழுக்கு புதியவன் அல்ல... எனது எழுத்துக்கள் புதியவரை போன்று தோன்றாததற்கு எனது வாசிப்புகளே காரணம்.

விற்கும் என்பதில் தாங்கள் கொண்டு ஆடிய சொல் சிலம்பத்தை ரசித்தேன். நன்றி.

புஸ்தகம் போட்டு விக்கிற அளவுக்கு நாம பெரிய ஆள் இல்லீங்க.. சாதாரண அரை பிளேடு... நமக்கு தெரிஞ்சத கிறுக்கிக்னு போறோம்... அது நாலு பேருக்கு புடிச்சிருக்குன்னும் போது சந்தோஷமா இருக்கு... இந்த மாதிரி அங்கீகாரம் கிடைக்கறப்ப அதுவும் எடுத்த எடுப்புலயேன்றப்ப காத்துல பறக்கற மாதிரி இருக்கு...

தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ராம்...

தங்கள் கதையும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.

தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

எஸ். கே. ஐயா தங்கள் படைப்பிற்கும் எனது வாழ்த்துக்களை மற்றுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். அருமையான கவிதை. நன்றிகள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அதெல்லாம் சரி, அரை பிளேடுன்னு பேரு வெச்சிகிட்டு முழு பிளேடு படம் போட்டு வெச்சிருக்கீங்க!?

:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாழ்த்துக்கள் அரை பிளேடு!!!

உங்க கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததாலே கதை போட்டவுடன் முதல் ஆளாக படித்து பின்னூட்டமிட்டிருந்தேன். புதிய பதிவர்களுக்கு அங்கிகாரம் கிடைப்பதில்லை என்று பலர் நினைத்து கொண்டிருந்ததை (என்னையும் சேர்த்து)அடித்து தவிடு பொடியாக்கிவிட்டீர்...

மிக்க நன்றி!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோவியாரே...

நம்ம போட்டோ ஆல்ப பதிவு பாத்தீங்கன்ன அது ஏன்னு தெரியும்..

இருந்தாலும் உங்களுக்காக ஸ்பெஷலா இன்னொரு தபா சொல்லிக்கிறேன்...

அது நம்ப குரு நாதர் ஃபேமிலி போட்டோங்க... நம்ம குரு பக்திக்கு அடையாளமா நாம அவரு போட்டோவ இங்க போட்டு இருக்கோம்... நம்ப குருநாதர பத்தி எத்தினி தடவ சொல்றதுன்னாலும் நமக்கு அலுக்காது.

ரொம்ப தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை
மனமார்ந்த வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வெட்டிப்பயல் அவர்களே...

நானும் புதுப்பதிவர் என்பதால் கவனிக்கப்பட மாட்டோம் என்றுதான் எண்ணியிருந்தேன்.

அதுவும் தேர்வு ஓட்டு எடுப்பினால் என்று தெரிய வந்த போது நம்மை யாரும் அறிய மாட்டார்கள் அதனால் நமக்கு வாய்ப்பு இருக்காது என்றே நினைத்திருந்தேன்.

போட்டியில் நான் கலந்து கொண்டதன் நோக்கம் கவன ஈர்ப்பு மட்டுமே...

பரிசு நான் முற்றிலும் எதிர்பாராதது.

என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் எனது எண்ணத்தையே தவிடு பொடி ஆக்கியுள்ளார்கள் நமது வலை வாசகர்கள் மற்றும் பதிவர்கள்.

இலக்கிய தரமான பதிவு ஒன்றும் அல்ல. நகைச்சுவை பதிவு என்ற அளவிலேயே இது அனைவரையும் கவர்ந்துள்ளது என்பதால் மிக மகிழ்ச்சியாக உள்ளது.

தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செல்லி அவர்களே.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாழ்த்துக்கள்

பரிசுக்கும் புத்தாண்டுக்கும்...!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சிந்தாநதி அவர்களே..

தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ .பி.
வாழ்த்துக்கள்.
படித்து சிரிக்க நல்ல படைப்புகளைக் கொடுகிறீர்கள்.
இதே போல எப்போதுமே அறுவை நடத்த வாழ்த்துக்கள்.
புத்தாண்டில் நீங்கள் இன்னும் பொலிய வேண்டும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வல்லி சிம்ஹன் அவர்களே..

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாழ்த்துக்கள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு
உண்மையில் நல்ல குறும்பு தான்.
உங்கள் பதிவுகள் சென்னை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
(நானும் சென்னை தான்)

இந்த வருடமும் பல வெற்றிகள் பெற்ற வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றிகள் பாஸ்டன் பாலா அவர்களே.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோபிநாத்

நம்ம லாங்குவேஜி நல்லா இருக்குன்னு சொல்லிக்ன உங்களுக்கு தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்ன அரை... கனவு ன்னு போல்டுல எழுதிருக்கீங்க.. அடுத்தப் போட்டிக்கு தலைப்பா :)...

பின்நவீனத்துவ கனவுன்னு கப்பி ஒரு பதிவு போட்டுருந்தாரு பாருங்க.. சம்பந்தமே இல்லாத பல தொடர்பில்லா சம்பவங்கள்....

மென்மேலும் உங்களுடைய சங்கத் தமிழ் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ஜி.

தேன்கூடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள இப்பக்கத்ததை காணவும்.

டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள்

/***********
தேன்கூடு-தமிழோவியம் போட்டிகள் இத்துடன் நிறைவு பெற்றன. இனி வரும் மாதங்களில் இன்னமும் பல சிறப்பான சுவையான வாய்ப்புகள் பதிவர்களுக்கு வர இருக்கிறது, அவற்றிலும் கலந்து கொண்டு, பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

***********/

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனவுகள் பதிக்கப்பட வேண்டும் என்று எழுதியமை என் தனிப்பட்ட விருப்பத்ததை தெரிவித்தே.

கனவு என்ற சொல் பட்டையாக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிக்கவும். பட்டை தீட்டப்பட்டதை நீக்கி விட்டேன்.

நன்றிகள்.
அரைபிளேடு.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாழ்த்துக்கள் அரைபிளேடு, சிபி, எஸ்கே, ராம்...

இன்னும் கல்யாண ராமனையும் நந்தனையும் படிக்கணும்.. லிஸ்ட்ல படிக்காம விட்டுப்போச்சு :(-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றிகள் பொன்ஸ் அவர்களே.

கல்யாணராமனை படிச்சி பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

Naan Ethirparthathu polave Vetri petrirukkireergal Arai Blade. Vaazthukkal.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப சந்தோஷமாகீது அர.

வாழ்த்துப்பா.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி நாமக்கல் சிபி..தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் ஸயீத் அவர்களே.
வாழ்த்துக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------