Sunday, December 10, 2006

ஆண்பெண் சமஉரிம...

ஆண்பெண் சமஉரிம, ஆண்பெண் சமஉரிம அப்படின்றாங்களே. அது ஒரு நல்ல விஷயம்.

இந்த உலகத்துல ஆம்பளயாவது பொம்பளயாவது எல்லாருமே ஈக்வல்தான். அதுல டவுட்டே கடியாது...

ஆனா, எனக்கு ஒரு டவுட்டு. இந்த சமஉரிமைக்கு யார் யாருக்கு வுட்டுத்தரணும்.. சமுதாயத்துல யாருக்கு அதிக உரிம கீது..


பொம்பளைங்களுக்கு சுதந்திரம் இல்ல.. நினச்சா நினச்ச இடத்துக்கு நினச்ச நேரத்துல போ முடியல.. இதல்லாம் ஒரு கண்ட்ரியா அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா.. கரக்டுதான்.

கரக்டுதாங்க இல்லன்ல.. எல்லாமே கரீக்டுதான்..
ஆனா பாருங்க இந்த சமுதாயம் கீதே.. அது பொம்பளைங்கள மட்டும் குடும்பம்ன்ற அமைப்புல கட்டி வச்சுல்ல.. ஆம்பிளையையும் சேத்தேதான் கட்டி வச்சி கீது...
ஆம்பிளைங்களுக்கு மட்டும் இங்க சுதந்திரம் கொடி கட்டி பறக்குதா என்ன..

சுதந்திரம், சந்தோஷம் எல்லாம் மனசுல கீது..
பொண்டாட்டி திட்னாலும் நம்ப நல்லதுக்குதான் சொல்றாங்கோன்னு நினச்சீங்கன்னா அது சந்தோஷம்..
ஆறுமணிக்கு டான்னு வீட்ல நிக்க முடியலன்னாலும் ஆறு அஞ்சிக்கு வூட்டுக்கு போயிட்டு அந்த அஞ்சி நிமிஷம் ஏன் லேட் ஆச்சின்னு பொண்டாட்டிக்கு எக்ஸ்பிளயின் பண்ண நம்மள அலெள பண்றாங்க பாருங்க அதுதான் நம்ப சுதந்திரம்..

இத நீங்க கஷ்டம்னு நினச்சீங்கன்னா, கஷ்டம்தான்.

ஆனா பாருங்க நாட்டுல இரண்டு சைடுலயும் கஷ்டம் கீது.. பொண்டாட்டி கையால அடி வாங்கற ஆம்பிளைங்களும் நிறயவே கீறோம்.. ஆனா அத்த வெளிய சொல்லி ஆணுரிம வேணும்னு கேக்க முடியுமா... இன்னாயா நீ ஆம்பிளை, பொம்பளை கையில அடிவாங்கறியேன்னு பொம்பளைங்களே கேட்டுடுவாங்கோ... அடக்கி வாசிக்க வேண்டி கீது...

ஒத்துக்கறேன்.. ஆண் பெண் சம உரிம வேணும்.. அதாவது வூட்ல பொம்பளைங்களோ, இல்லாட்டி ஆம்பளையோ யாருக்கு இப்பத்திக்கி உரிம ஜாஸ்தியா கீதோ அவங்க யோசிச்சு மத்தவங்களுக்கும் சமமா உரிமய தரணும்... அதுதான் கரிக்டு..

இன்னும் அந்த காலத்தையே எயுதிக்னு.. அப்படி பண்ணிட்டாங்க.. இப்படி பண்ணிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு..... நாம 21ஸ்ட்டு செஞ்சுரில இல்ல இருக்கோம்... நாலு நாளக்கி முன்னாடி சமச்சத ஃப்ரிட்ஜில வச்சு சுட பண்ணி சாப்டுக்னு, டிவி சீரியல் பாத்துக்னு இருக்கோம்.. அடுத்த வேள சாப்பாட்டுக்கு நாம சமச்சாதான் உண்டு..
சும்மா இன்னும் எக்சாம்பிளுக்கு தேவையில்லாம சீதை, கண்ணகி, நளாயினின்னு யார் யாரையோ இழுத்துக்கினு.. ஆமா இவங்கள்ளாம் யாரு...

தெரியாம எக்ஸ்ட்ராவா இரண்டு வார்த்தை வுட்டம்னா டைவார்ஸ்னு சொல்றவங்க இருக்கற நாட்டுல போயி...

தகிரியமா எயுதிட்டேன். நம்ப வூட்டுக்காரம்மா தமிழு பிளாக்கெல்லாம் படிக்க மாட்டாங்க... அல்ட்ரா மாடர்ன்.. தமிழு பிளாக்கெல்லாம் நம்பள மாதிரி பொயக்க தெரியாத புண்ணாக்குங்கதான் படிக்கும்.. எயுதும்... ஒயுங்கா வேலைக்கு போனோமா வந்தமா, பொண்டாட்டி பேச்ச கேட்டோமா வாய்க்கையில முன்னேறினமா, எக்ஸ்ட்ராவா சம்பாதிச்சு வூட்டுக்காரம்மாவ சந்தோஷமா வச்சிருக்கமான்னு இல்லாம.. இங்கல்லாம் வந்து தேவையில்லாம எயுதிக்னு.. ஏதோ இரண்டு மூணு பெண்ணுரிம பதிவ படிச்சமா.. சரி சரின்னு போயிக்னே இருந்தமான்னு இல்லாம... இன்னாமோ ஆணுரிம அது இதுன்னு எயுதிக்னு... இன்னாமோ எயுதனும்னு தோணிச்சு.. எயுதிட்டேன்...

நானும் உங்க சைடுதான்... வாய்க மகளிர் உரிம....

தாங்ஸ்ங்க....

14 comments:

said...

//எக்சாம்பிளுக்கு தேவையில்லாம சீதை, கண்ணகி, நளாயினின்னு யார் யாரையோ இழுத்துக்கினு.. ஆமா இவங்கள்ளாம் யாரு...//
:-))

//தமிழு பிளாக்கெல்லாம் நம்பள மாதிரி பொயக்க தெரியாத புண்ணாக்குங்கதான் படிக்கும்.. எயுதும்...//

இதுக்காகவே மொத்த தமிழ்மணமும் இங்கு வந்து குவியணுமே! :-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் கண்ணபிரான் அவர்களே...

/*********
//தமிழு பிளாக்கெல்லாம் நம்பள மாதிரி பொயக்க தெரியாத புண்ணாக்குங்கதான் படிக்கும்.. எயுதும்...//

இதுக்காகவே மொத்த தமிழ்மணமும் இங்கு வந்து குவியணுமே! :-))
********/

நாம எப்பவுமே நம்பள பத்தி மட்டும்தான் சொல்லிக்கறது.. இதே கருத்து யாருக்காச்சும் இருந்தா கட்டாயம் அவங்களும் சொல்லுவாங்க.. :))))

தாங்ஸ்-------------------------------------------------------------------------------------------------------------
said...

மாமே ஒன் சென்னைத் தமிழ் டாப் டக்கர்ம்மா.. ஒன் பிலீங்க்ஸை நீ கன்டினியூ பண்ணு.. மெய்யாலும் படா சோக்காக் கீது நைனா ஒன் பதிவெல்லாம் படிக்கச் சொல்ல... அப்பால வ்ர்றேன் இப்போ டூட்டிக்குப் போவணும்மா-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் தேவ் அவர்களே..

அப்பப்ப வந்து கண்டுக்னு போங்க...-------------------------------------------------------------------------------------------------------------
said...

நா ஒன்ணும் சொல்லப்பா :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ராமச்சந்திரன் உஷா அவர்களே..

நீங்க எதுவும் சொல்லாம ஸ்மைலி போட்டுட்டு போயிருக்கறதால நம்ப நியாயத்தை புரிஞ்சிக்னீங்கோன்னு எடுத்துக்கறேன்.. :)))

தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

\"சுதந்திரம், சந்தோஷம் எல்லாம் மனசுல கீது..
பொண்டாட்டி திட்னாலும் நம்ப நல்லதுக்குதான் சொல்றாங்கோன்னு நினச்சீங்கன்னா அது சந்தோஷம்..\"

உங்க சந்தோஷத்தை இப்படி தான் காபாத்திக்கிறிங்கன்னு கடைசி பாரா படிக்கும்போது புரிந்தது பிளேடு!-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெல்கம் திவ்யா அவர்களே

ஹி.. ஹி.. அடிச்சாங்கன்னா கூட நம்ப மேல கீற உரிமையிலதான் அடிக்கிறாங்கோன்னு எடுத்துக்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்..

அப்புறம்..ஆஸ்பிட்டல்ல ரமேஷ் நல்லா இருக்கானா ? கேட்டதா சொல்லுங்க.

நம்ம பதிவு கடசில எஞ்சோக கதய கேளு தாய்க்குலமே ரேஞ்சிக்கு பூட்சா..

உடலளளவுல அப்பப்ப நல்லா இல்லன்னாலும் மனசளவுல நான் சந்தோஷமாதாங்க இருக்கேன்...

:))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பொண்டாட்டி கையால அடி வாங்கற ஆம்பிளைங்களும் நிறயவே கீறோம்.. //

இது எல்லாம் யாருக்கு புரியுது...சொன்னா பைத்தியம்பாங்க
:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

உங்க வூட்டுக்காரம்மாவோட மெயில் ஐடி கொடுத்தீங்கன்னா, இத்த அப்டியே ட்ரான்ஸ்லேட் பண்ணி ஒரு ஃபார்வேட் பண்ணிரலாம்.

இன்னா சொல்ற?-------------------------------------------------------------------------------------------------------------
said...

Forgive me for not writing in thamiz.
Your postings are very interesting.
Good Job. Keep writing.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்யாம்,

/*******************
//பொண்டாட்டி கையால அடி வாங்கற ஆம்பிளைங்களும் நிறயவே கீறோம்.. //

இது எல்லாம் யாருக்கு புரியுது...சொன்னா பைத்தியம்பாங்க
:-)

********************/


கரீக்டு ஸ்யாம் அவர்களே..

நம்பளுக்காக குரல் குடுக்கறதுக்கு நீங்களாவது கீறீங்களே..

ரொம்ப தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி அவர்களே

/**********
உங்க வூட்டுக்காரம்மாவோட மெயில் ஐடி கொடுத்தீங்கன்னா, இத்த அப்டியே ட்ரான்ஸ்லேட் பண்ணி ஒரு ஃபார்வேட் பண்ணிரலாம்.
இன்னா சொல்ற?

************/

உங்களுக்கு எம்மேல ஏன் இந்த கொலவெறி..
எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்..
இப்பிடி ஒரு அப்பாவி வாய்க்கையில விளையாட கூடாது நீங்க..
சரியா..

பேஜை கண்டுக்னதுக்கு தாங்ஸ் :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

Anbuselvaraj

Thanks. I understanded your Engleesh.

Thanks for page visiting. :)-------------------------------------------------------------------------------------------------------------