Thursday, December 28, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 4. விலை பேசப்படும் ஆண்

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

ஆண் யாரால் அடிமடையனானான்.

குடும்பம்ன்ற அமைப்பாலதான் ஆண் அடிமடையனா ஆயிட்டான்.

குடும்ப அமைப்புல யாருக்குடா லாபம்னு பாத்தீங்கன்னா நிச்சயமா ஆணுக்கு இல்லை.

குடும்பம்ன்றது பெண்களால் பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அமைப்பு.

இந்த அமைப்புல ஆண் ஒரு வேலக்காரன் மட்டுமே.

அவன தாஜா பண்ணி வேலை வாங்கறதுக்காக நீதான் குடும்ப தலைவன் அப்பிடின்னு சொல்லிட்டாங்க.
அவனும் அடிமடையனா அதை நம்பிட்டான்.

உண்மையான அதிகாரம் யாருக்கிட்ட இருக்குன்னு குடும்பங்கள உத்து பாருங்க.

சாவிக்கொத்து என்ன ஆண்கள் கையிலயா இருக்கு.

ஆண்பிள்ளதான் வேணும்னு பெண்களே சொல்றாங்களே எதுக்கு. இந்த குடும்ப அமைப்புக்கு அடுத்த வேலைக்காரன் தேவை அதுக்காகத்தான்.

ஆசைக்கு ஒண்ணு.. ஆஸ்திக்கு ஒண்ணு அப்பிடின்னு பயமொழியே இருக்கு.

இதும்படி பொண்ணு மேல மட்டுந்தான் ஆசை. ஆண் ஆஸ்தி சம்பாதிச்சு தர்றதுக்குதான்.

இந்த சமூகம் பெண் பிள்ளைகள் வளர்ப்புல காட்டற அக்கறையில நாலுல ஒரு பங்கு கூட ஆண் பிள்ளைகள் மேல காட்டறதில்லை.

இன்ன இப்பிடி, ஆம்பிளப் பிள்ளயதான படிக்க வைக்கிறாங்க அப்பிடின்றீங்களா...

அந்த காலத்து ஆண் வேட்டையாட வெளிய அனுப்பப்பட்டான். இந்த கால ஆண் முதல்ல படிச்சு தனக்கு ஒரு வேலைய தேடி அது மூலமா குடும்பத்த காப்பாத்தணும்னு நிர்ப்பந்தப் படுத்தப் படுறான்.

பெண்ணுக்கு அப்படி எதுவும் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. படிப்போ வேலையோ எத வேணும்னாலும் அவங்க சாய்ஸ்ல வுட்டுடலாம்.

ஆணுக்கு அப்படியா? அவன் தன்னுடைய சுய முயற்சியால ஜெயிக்கிறான்.

இந்த குடும்ப அமைப்பு ஆண் மீது திணிக்கும் மிக அதிக கொடுமை அடுத்துதான் இருக்கு.

இப்படி ஜெயிச்ச ஆண் திருமணம் என்ற போர்வையில் விலை பேசப்படுகிறான்.

விக்கறவங்க ஒரு பெண். தனது பெண்ணுக்காக இந்த ஆணை வாங்கறவங்க ஒரு பெண்.
வாங்கப்பட்ட ஆணை அடிமையாக்கி வேலை வாங்கறவங்க இன்னொரு பெண்.

வெறும் பொருள் என்ற அளவுல விற்கப்படும் ஆணின் மன உணர்வுகள் மதிக்கப்படுகிறதா.

ஆண் செய்யும் ஆட்சேபங்கள் இந்த திருமண சந்தையில் அடிபட்டு போகின்றன.

யாராவது கோழிய கேட்டுட்டா மொளகாய் அரைப்பார்கள் என்ற பழுமொழிதான் அவனுக்கு கிடைக்கிறது.

இதைவிட கொடுமை வெறும் பொருளாய் மட்டுமே ஆண் புழங்கும் இந்த வியாபாரத்தில் ஆணை குறை சொல்வதுதான்.

தங்கம் வில ஏறுச்சுனா தங்கத்தையா குறை சொல்வீங்க...

வெற்றி பெறாத அல்லது ஓரளவுக்கு வெற்றி பெற்ற ஆண்களை பெண்கள் இந்த சந்தையில் திரும்பியும் பார்ப்பதும் இல்லை.

இந்த வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும். ஆண் பெண்களுடைய சூழ்ச்சியிலிருந்து காப்பாற்ற பட வேண்டும்.

(தொடரும்...)


மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

18 comments:

said...

தலிவா,
போட்டு தாக்கறியே!!!

இப்பதான் எனக்கு நிறைய விஷயம் பிரியுது ;)

நீ கலக்கு நைனா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏப்பா போட்டுத்தாக்குற போயேன்.. இதுல இப்படி ஓரு மேட்டரும் இருக்குன்னு இப்பத்தான் புரியுது. ஒரு முடிவோடத்தான் கிளம்பி இருக்க போல.-------------------------------------------------------------------------------------------------------------
said...

கடைய கடைய ஐஸ்க்ரீமே வருது...

குழில விழுறதுக்கு முன்னாடி கரிக்டா போட்டுத் தாக்குறியே நைனா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

Gud one boss!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

///யாராவது கோழிய கேட்டுட்டா மொளகாய் அரைப்பார்கள் என்ற பழுமொழிதான் அவனுக்கு கிடைக்கிறது.///

:))))

பின்றீங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு :)
மொதோ வாட்டி வந்துருக்கேன். மத்த பதிவெல்லாம் படிச்சுட்டு கமெண்டுறேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் வெட்டிப்பயல் அவர்களே

ஆண் சார்ந்த கோணம் இந்த பிரச்சனையில ரொம்ப கம்மி.. நாமளாவது எழுதுவோம்னுதான்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தோஷ்..

ஏகப்பட்ட மேட்டரு இருக்குங்க...
கால காலமா நம்மள இந்த விஷயத்துல பிரெயின் வாஷ் பண்ணியே வெச்சிருக்காங்க..
இந்த தொடர் ஒரு ஐ ஓப்பனர்தான்...

கண்டுக்னதுக்கு ரொம்ப தாங்ஸ்..
தொடர்ந்து வாங்க..-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜி.. வாங்க..

நாம எல்லாரும் குழின்னு தெரிஞ்சேதான் விழறோம்...
விழுந்தாலும் எப்படி அடிபடாம தப்பிக்கறது.. இந்த குழிக்குள்ள என்னன்ன டேஞ்சர் இருக்குன்னு ஒரு விழிப்புணர்வு வேணுமில்ல..
அதுதான் நம்ம தொடர்..

கண்டுக்னதுக்கு ரொம்ப தாங்ஸ்.. கண்டின்யுஸ்ஸா வாங்க...-------------------------------------------------------------------------------------------------------------
said...

குட்டுன்னு சொன்ன அனானி நண்பருக்கு தாங்ஸ்....-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாம பின்றதா சொல்லிக்ன அனானி நண்பருக்கும் தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அருண்குமார்

மொத வாட்டி வந்து இருக்குற தங்கள் வரவு நல்வரவாகுக...

கண்டுக்னு கமெண்டுங்க..

ரொம்ப தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக மு. கார்த்திகேயன்

தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள்.

இப்புத்தாண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இந்த வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும். ஆண் பெண்களுடைய சூழ்ச்சியிலிருந்து காப்பாற்ற பட வேண்டும்.
//

இப்பவாச்சும் உருப்படனும்னு ஒருத்தர் நினைச்சிங்களே.. :P

அரை, இப்படி புலம்பி தள்ளுறிக..ஏன் அனுபவமா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தூயா

வரதட்சணை கொடுமையில ஆண் பெண் இரண்டு பேருமே பாதிக்கப்படறாங்க.

பெண் மட்டுமே பாதிக்கபடறாங்க அப்படின்ற நினைப்பை மாத்தணும்ன்றதுதான் கட்டுரையோட நோக்கம். பெண்களும் இதை புரிஞ்சிக்கணும்.

ஆமாங்க தூயா கல்யாண சந்தையில அடிபட்ட ஆயிரக்கணக்கான ஆண்கள்ள நானும் ஒருத்தேன். நம்பளையும் ஒருத்தங்க வில கொடுத்து வாங்கி கொடுமை படுத்திட்டிருக்காங்க.

வந்ததுக்கு தாங்ஸ்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வ.ப.ந

எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி செல்லி அவர்களே

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------