Friday, December 29, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 5. வரதட்சணை வாங்குவது யார் ?


கல்யாண சந்தையில ஆண்கள் ஆடுமாடுகள் போல் விற்கப்படுகிறார்கள்.
இது ஆண் மீதான பெண்களின் அடக்கு முறை இல்லையா ?

ஆண்களை சுரண்டறதுக்குன்னே பெண்கள் இந்த வரதட்சணை முறையை கண்டுபிடிச்சிருக்காங்க.

வரதட்சணை கொடுமை. இது முற்றிலும் ஒழியணும்னு சொல்றோம்.
ஆனா இது இன்னும் ஒழியல...

காரணம் யார் ?

பெண்கள்.

பெண்களுக்கு இயற்கையாவே நகை மேல ஆச.

வரதட்சணைன்ற பேர்ல இங்க நடக்குற கூத்து நகைய வெச்சு இல்ல நடக்குது.

பெண்ணை பெத்த பெண் விளம்பரம் குடுக்கறப்பவே இத்தினி பவுன் நகை போடறோம்.

(இந்த விளம்பரம்லாம் பேப்பர்ல வராதுங்கோ.. நம்ப தகுந்த வட்டாரம் மூலமா விஷயத்த கசிய விடுவாங்க. இருக்கறாங்களே இதுக்குன்னே அரட்டை கோஷ்டிங்க. )
அதுக்கு தகுந்த மாதிரி நல்ல மாப்பிள்ளை (!!!!!) பாருங்கன்னு சொல்லிதான மாப்பிள்ளை தேடறாங்க.

இதப்பார்த்த ஆண்பிள்ளையை பெற்றெடுத்த பெண் இது நல்ல டீலா இருக்கேன்னு பாக்குறாங்க.
நூறு சவரன் போட்டு ஒரு பெண் வர்றான்னா உடனே சரின்னிடறாங்க...

அந்த பொண்ணு படிச்சிருக்கணும் அழகா இருக்கணும்னு ஆண் புலம்பறத எல்லாம் கேட்காம கல்யாணத்தை பண்ணிடறாங்க.

நெறய சவரன் கைவசம் இருக்குன்றத தவிர வேற எந்த தகுதியும் இல்லாத பொண்ணுங்களுக்கு ஈஸியா ஒரு இளிச்சவாயன் கிடைச்சுடறான்.

நான் தெரியாமதான் கேட்குறேன்..

பொண்ணு பத்து சரவன் போட்டுக்னு வந்தா இன்னா நூறு சவரன் போட்டுக்னு வந்தா இன்னா.
இதனால ஆணுக்கு இன்னா பிரயோசனம்.

அவங்க மாட்டிக்னு வருவாங்களாம்.
பத்திரமா எடுத்து பூட்டி வெச்சு கல்யாணம் காச்சின்னா திரும்பி எடுத்து மாட்டிப்பாங்களாம்.

எவனாவது ஆயிரத்துல ஒருத்தன் கேடு கெட்டவன் இந்த நகையை புடுங்கி தொலைச்சுட்டான்னா... ஐயயோ ஆண்களே மோசம்..
வரதட்சணைன்ற பேர்ல நகையை வாங்கி குடிச்சு தொலையறாங்கன்னு பெண்கள் அமைப்புங்க மொத்தமா கோணியில கல்ல கட்டி அடிக்கிறாங்க.

நல்லா கவனிச்சு பாருங்க.

எங்க ஆயா 25 பவுனு போட்டுக்னு வந்தாங்க.
எங்கம்மா கல்யாணம் ஆனப்ப 50 பவுனு போட்டுக்னு வந்தாங்க.
இப்ப எனக்கு 100 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி கொடுக்கறாங்கன்னு ஒரு பொண்ணு சொன்னா, நல்லா கவனிச்சு பாருங்க.

அந்த பழைய நகையேதான் பத்திரமா பொட்டிக்குள்ள இருந்து கைமாறி வந்து இருக்கு.

இதுல இது பத்தும் பத்தாதுக்கு அந்த குடும்பத்து தாத்தா அப்பா வோட உழைப்பு உறிஞ்சப்பட்டு நகையா மாறி இருக்கு.

பொண்ணுங்களுக்கு நகை மேல இருக்கற பைத்தியம் குறையாத வரிக்கும் வரதட்சணை அப்படின்ற கொடுமை தொடர்ந்து ஆண்கள் மேல ஏவப்படும்.

தன்னோட பொண்ணு வசதியா இருக்கணும்னு சகலமும் தேஞ்சி ஓடா போற தகப்பன் ஒரு ஆண்தானே.
இந்த பெண்களோட பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாம தூக்குல தொங்குன தகப்பன்மாரு எத்தனை பேரு.

இன்னாமோ வரதட்சணை கொடுமைய ஆண்கள் ஏவறதா பில்டு அப் கொடுக்கறீங்களே.
வரதட்சணை அதிகமா வேணும்னு பொண்ண பெத்தவன கேக்கறது ஒரு பெண்தான்.

கடனோ உடனோ வாங்கியாவது பொண்ண நல்ல இடமா கொடுக்கனும்னு பின்னாடி இருந்து பில்டப் கொடுக்கறது ஒரு பெண்தான்.
மடையனான ஆண்தான் இதகேட்டு கடன் வாங்கி அதை கட்டறதுக்குன்னே தன் ஆயுச முடிச்சிக்கிறான்.

இத்த விட கொடுமை இரண்டு பொண்ணு இருந்தா அவளுக்கு மட்டும் 50 பவுனு எனக்கு 40 தானான்னு இரண்டு பொண்ணுமா சேர்ந்து பெத்தவன பிடுங்கி எடுப்பாங்க பாருங்க.

கேட்டாங்களோ கேக்கலியோ, எங்க மாமியாரு கேட்டாங்க. எம் புருசன் வண்டி கேட்டாருன்னு சும்மாவா அவங்களா கிளப்பி விடுற பொண்ணுங்க எத்தினி பேரு இருக்காங்க தெரியுமா.

காலம் மாறிடுச்சிங்க. இன்னும் கூட ஆணை அடிமடையனாக்கி வரதட்சணைக்கு அவந்தான் காரணம்னு சொல்லிக்னு இருக்கவங்கள நினச்சா...

எப்ப மாற போறீங்க நீங்க எல்லாம்.


--------


ஆடு வாங்க
மாடு வாங்க
லோன் கொடுக்கும் அரசாங்கம்
ஏழை பெண்கள்
தங்களுக்கு கணவன் வாங்க
லோன் கொடுக்குமா ?


இப்படி பெண் ஒருவர் எழுதியதா புதுக்கவிஜ ஒண்ணு படிச்சேன்.

என்னதான் இந்த பெண் வரதட்சணை கொடுமையில் பாதிக்கப்பட்டதாக சொல்லி கவிதை எழுதியிருந்தாலும் இதுல ஆணடிமைத்தனம் அப்பட்டமா தெரியறத கவனிச்சீங்கன்னா தெரியும்.

ஆணையும் ஆடுமாடு மாதிரி லோன் போட்டு வாங்கலாம்ன்ற கருத்து ஆண் இனத்துக்கே இழுக்கு இல்லையா. ஆண் என்ன ஆடா மாடா இவங்க லோன் போட்டு வாங்க.

கொஞ்சமாவது கருணை காட்டுங்க. எங்களையும் மனுசங்களா நடத்துங்க.

(தொடரும்...)

31 comments:

said...

அரை...

ஒரு பயலும்.. ச்சே ஒரு பொண்ணும் பதில் சொல்ல முடியாத பல கேள்விகள கேக்கிறீங்களே.. இத யாராவது ப்ரிண்ட்-அவுட் எடுத்து உங்க வீட்டம்மாக்கிட்ட கொடுத்துட்டாங்கன்னா என்ன பண்ணுவீங்க...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு,
வரதட்சனை கொடுமைக்கு பெண்களும் காரணம்தான் (மாமியார், நாத்தனார்). ஆனால் அங்கே கஷ்டப்படுவது பெண்தான்...

எந்த வீட்லயும் கேஸ் வெடிச்சி மருமகன் சாகறதில்லையே!!!

இந்த வரதட்சனை கொடுமையால பெண்ணினுடைய தந்தைக்கும், சகோதரர்களுக்கும் தான் பிரச்சனை அதிகம். அதுவும் உண்மை...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

yeppa Blade eppadi potu thakuriye naina.. oru mudivoda than kelambi iruke pola.. kalaku.. you have forgotten one important point. Guys who are highly educated and have very good job get very good dowry so even the dowry is not determined by the guys, it is being determined by the gals parents based upon guys qualifications. They will always for a guy who is highly qualified than their gal, why dont they look out for a guy who is jobless and ready to accept their gal with no dowry? Dowry is basically deamand and supply, for guys who are highly qualified the gals parents give more dowry.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி

/**********
இத யாராவது ப்ரிண்ட்-அவுட் எடுத்து உங்க வீட்டம்மாக்கிட்ட கொடுத்துட்டாங்கன்னா என்ன பண்ணுவீங்க...
*********/


நாம நாட்டுல எல்லார மாறியும் வீட்டுக்கு அடங்குன ஆசாமிங்க...

நாந்தான் இப்பிடி எழுதறேன்னு நீங்க எந்த சாமி மேல சத்தியம் பண்ணாலும் வீட்ல நம்ப மாட்டாங்க.

நம்ப எதிர்ப்ப எங்கியாவது பதிஞ்சி வெக்கணும்னு தான் நாம இங்க எயுதிக்னுகிறதே...

இத படிச்சி நாலு பேரு உஷாரானா அதுவே நமக்கு போதும்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வெட்டி அவர்களே

/**********
வரதட்சனை கொடுமைக்கு பெண்களும் காரணம்தான் (மாமியார், நாத்தனார்). ஆனால் அங்கே கஷ்டப்படுவது பெண்தான்...
**********/


கரெக்ட். பெண்களுக்கு கஷ்டம்னு ஒண்ணு வந்தா பெண்களால மட்டுந்தான். ஆண்களால கிடையாது அப்படின்றதுதான் என்னோட பாயிண்ட்.


/**********
எந்த வீட்லயும் கேஸ் வெடிச்சி மருமகன் சாகறதில்லையே!!!
**********/


இது சென்சிடிவ் மேட்டர்..
பத்து இலட்சம் வீட்ல ஏதாவது ஒரு வீட்லதான் இது நடக்குது. சில நேரத்துல மாமியார் வைக்கிற கேஸ் கூட வெடிக்குது.
இது பெண்களால் பெண்களுக்கு எதிரா நடக்கற சதி. ஆண் துணை போகணும்னு நிர்ப்பந்திக்க படறான்.

அப்புறமா மருமகன் சாகறதில்லையேன்னு கேட்டீங்கள்ள. இந்த விஷயத்துல ஆண்கள் கொஞ்சம் உஷார் இல்ல.
உயிர கையில புடிச்சிக்னு ஓடிடறாங்க. நாட்டுல நெறய சாமியாருங்க எதனால இருக்காங்க அப்படின்றீங்க.

இன்னொன்னு ஸ்டாடிக்கலா பார்த்தா தற்கொலை செஞ்சிக்கிற பெண்களை விட ஆண்கள் அதிகம்.
உத்தரத்துல தொங்கற நெறைய அப்பாமாருங்க திடீர் மாரடைப்புல செத்தவங்களாயிடறாங்க.

நாம மின்னாடியே சொன்ன மாறி எல்லா பிரச்சனைக்கும இன்னோரு கோணம் இருக்கு.
அத யாருமே பார்க்க மாட்டேங்குறாங்க.
காரணம் ஏன்னா நம்ம சமுதாயத்தில பெண்ணே பிராதானம்.
அதனால ஆணோட கஷ்ட நஷ்டத்தை பேச யாருமே இல்லை.

கருத்துக்களுக்கு நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தோஷ் அவர்களே

நம்ப அடுத்த சேப்டரோட மேட்டரே அதுதான்...
கரெக்டா சொல்லிக்னீங்க...
அது எப்பிடிங்க நீங்களும் நானும் ஒரே மாதிரி யோசிக்கிறோம்...
எனக்கு தெரிஞ்சு ஆம்பிளைங்க எல்லாம் ஒரெ மாதிரி யோசிக்கிறோம்..

இன்னா ஒண்ணு பொண்ணுங்க மாதிரி எதுன்னாலும் ஊர கூட்டாம உள்ளுக்குள்ளயே புழுங்கிக்கறோம்.

கருத்துக்களுக்கு தாங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்ன கொடுமை சரவணன் இது ?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொடுமை என்று கண்டு சொன்ன அனானி நண்பருக்கு தாங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தம்பி, இது 2005ல எழுதுனது. எங்க அத்தை மனுஷி, என்னை கட்டினவரு ஆம்பிளன்னு படிச்சிட்டு சொல்லுபா

http://nunippul.blogspot.com/2005/11/blog-post_26.html



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி உஷா அவர்களே

படித்தேன். நெகிழ்ந்தேன்.

காலம் மாறி வருவதில் இன்று இளைஞர்கள் பரந்த நோக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்ப்பவர்களாய் அவர்கள் இல்லை.

இத்துணைக்கு பிறகும் மகளிர் அமைப்புகள் பெண்ணியவாதிகள் ஆண்களை கொடுமைக்காரர்களாக சித்தரிப்பதை பொறுக்க முடியாமையால்தான் இக்கட்டுரைப் பகுதி.

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தெரியுதில்லை...சீதனம் கொடுப்பதற்கு மாடாய் உழைப்பவனும் ஆண்...வாங்கி போட்டுக்க பழியை போடுவதும் ஆண்..
ரொம்ப பாவங்க நீங்க...
நீங்க சொல்றது சரிதான்..
மத்த பேச்செல்லாம் எதற்கு? திருமணம் செய்யும் ஆண் "சீதனம் வாங்கினால் தாலி கட்ட மாட்டேன் என்றும்"... கொடுக்கும் தகப்பன் "கொடுக்க மாட்டேன்" என்று "ஆண்பிள்ளை" போல சொல்லி தான் பாருங்களேன்..அதைவிட்டுட்டு..இங்கண வந்து புலம்பிகிட்டு...என்னை கொலைகாரியாக்கிடுவாங்க போல இருக்கு!!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஆண்களை சுரண்டறதுக்குன்னே பெண்கள் இந்த வரதட்சணை முறையை கண்டுபிடிச்சிருக்காங்க//

நீ தாம்யா புரட்சி வீரன்.
:))))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தூயா

அதையேதான் நாங்களும் சொல்றோம். நீங்க நகையெல்லாம் வேண்டாம்னு மொதல்ல சொல்லுங்க... நாட்டுல பிரச்சனையே இருக்காது.

நாம கொஞ்சமா புலம்பனதுக்கே கொலகாரியாயிடுவேன்னு சொல்றீங்களே..

டெய்லி புலம்பலையே கேட்டுக்கிட்டு புலம்பலையே கட்டிகிட்டு வாழ்க்கை நடத்துற ஆண்கள கொஞ்சம் நினைச்சு பாருங்க.. பாவமா தெரியலியா..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்மை புரட்சி வீரனாக அங்கீகரித்த கைப்புள்ள அவர்களுக்கு ரொம்ப தாங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நாந்தான் இப்பிடி எழுதறேன்னு நீங்க எந்த சாமி மேல சத்தியம் பண்ணாலும் வீட்ல நம்ப மாட்டாங்க.
//

அடப்பாவி உங்கவீட்டில இப்படி இருந்துமா பொலம்பிட்டு சுத்திறிங்க...இது நல்லதுக்கில்ல..சொல்லிட்டன்


//அதையேதான் நாங்களும் சொல்றோம். நீங்க நகையெல்லாம் வேண்டாம்னு மொதல்ல சொல்லுங்க... நாட்டுல பிரச்சனையே இருக்காது//

நகை எதற்கு கண்ணாளா நீ போதும் என்று சொல்லும்படி நடந்துகொள்ளுங்களேன் !! என்ன நான் சொல்றது ?;)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தூயா..

/*******************
//நாந்தான் இப்பிடி எழுதறேன்னு நீங்க எந்த சாமி மேல சத்தியம் பண்ணாலும் வீட்ல நம்ப மாட்டாங்க.
//
அடப்பாவி உங்கவீட்டில இப்படி இருந்துமா பொலம்பிட்டு சுத்திறிங்க...இது நல்லதுக்கில்ல..சொல்லிட்டன்
/*******************



அது ஜி எங்க நம்பள வீட்ல போட்டு குடுத்துடுவாரோன்ற பயத்துல சொன்னதுங்க..

எங்க வூட்டுகாரம்மாக்கு மட்டும் இந்த மேட்டரு சின்ன க்ளூவா கிடைச்சா கூட என்னா ஏதுன்னு அரைமணிநேரம் குறுக்கு விசாரணை செஞ்சி உண்மைய நம்ப வாயிலேயே வாங்கிட மாட்டாங்களா..
அப்புறமா நம்ப பாடு அம்போதான்...

அச்சச்சோ உண்மைய உங்க கிட்ட சொல்லிட்டனே... நீங்க வீட்ல போட்டு கொடுத்துட்டா...

(மனசாட்சி: டேய் அரைபிளேடு... தூயாக்கோ ஜிக்கோ வூட்டுக்காரம்மாவ பத்தி ஒண்ணும் தெரியாது. ஏண்டா இப்படி பயப்படற.. நீ வயக்கம் போல தெகிறியமா எயுது.)

அதுதான.. இத பாருங்க தூயா அவர்களே... நான் எதுவும் சொல்லலை.. நீங்க எதுவும் கேக்கலை சரியா...
தாங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்புறம் தூயா.. அவர்களே...
/****நகை எதற்கு கண்ணாளா நீ போதும் என்று சொல்லும்படி நடந்துகொள்ளுங்களேன் !! என்ன நான் சொல்றது ?;)****/

சிரிப்பு வருதுங்க.. இந்த டயலாக் எல்லாம் ஆம்பிளைங்கதான் சொல்வாங்க.. பெண்கள் ஏமாந்து இருக்காங்களா என்ன...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

/*********
காலம் மாறி வருவதில் இன்று இளைஞர்கள் பரந்த நோக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்ப்பவர்களாய் அவர்கள் இல்லை.
*********/


மாத்தி மாத்தி சொல்றீங்களே தல.. கட்டுரைப்படி, நேற்றைய, நாளைய இளைஞர்கள் கூட எதுவுமே எதிர்பார்க்கலை. பெண்கள் மட்டும் தான் எதிர்பார்க்கிறாங்க.. அதாவது, அம்மா வீட்லேர்ந்து நகை வாங்கணும்னு, மாமியாரான பெண், தன் மருமக நகை எடுத்துட்டு வரணும்னு.. etc etc..
அப்படி இருக்கும் போது பின்னூட்டத்தில் மட்டும் இன்றைய இளைஞர்கள் எதையும் எதிர்பார்க்காத பரந்த நோக்குடையவர்களா இருக்காங்கன்னு சொன்னா, நேற்றைய இளைஞர்கள் ஏதோ எதிர்பார்த்தாங்கன்னு தானே அர்த்தம்?

ஒண்ணுமே பிரியலையே.. ஒரே குய்ப்பமா போச்சே தல..

***************

தூயா சொல்வது போல், "உங்க அம்மா வூட்டு நகை வேணாம், நானே செஞ்சு போடறேண்டா செல்லம்"னு உங்க வூட்டுக்காரிட்டயோ, 'அவுங்க வூட்லேர்ந்து நகை கேட்காதே.. நானே உனக்கும் அவளுக்கும் வாங்கித் தரேன்னு' அம்மாகிட்ட சொல்லித் தான் வரதட்சணைங்கிற ஆணடிமைச் சின்னத்தை ஒழிக்க வேண்டியது தானே... ;)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க பொன்ஸ்..

நான் மாத்தி சொல்லலை..

பெண்களால் தங்கள் மீது திணிக்கப்பட்டிருந்து குறுகிய எண்ணங்களிலிருந்து தப்பி ஆண்கள் பரந்த வெளிகளில் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.


இதுதான் அந்த வாக்கியத்துக்கு அர்த்தம்..
அடிமைகளுக்கு சுயசிந்தனை ஏது... கால மாற்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.
ஆண்களுக்கு இந்த விழிப்புணர்வு வந்ததற்கு பெண்ணுரிமைவாதிகளுக்கு அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். நன்றி.

/************
"உங்க அம்மா வூட்டு நகை வேணாம், நானே செஞ்சு போடறேண்டா செல்லம்"னு உங்க வூட்டுக்காரிட்டயோ, 'அவுங்க வூட்லேர்ந்து நகை கேட்காதே.. நானே உனக்கும் அவளுக்கும் வாங்கித் தரேன்னு' அம்மாகிட்ட சொல்லித் தான் வரதட்சணைங்கிற ஆணடிமைச் சின்னத்தை ஒழிக்க வேண்டியது தானே...
**************/

எல்லா பிரச்சனைக்கும் பெண்களோட நகை ஆசைதான் காரணம். அந்த ஆசையை தயவு செஞ்சி உட்டுடுங்கோ அப்பிடின்னு சொன்னதுக்கப்புறம் கூட வூட்டம்மாக்கு நகை வாங்கி கொடு அம்மாக்கு நகை வாங்கிகொடு அப்பிடின்னு சொல்றீங்களே.

இன்னும் எவ்ளோ காலத்துக்கு தான் ஆண்கள் பெண்களுக்கு நகை வாங்கி தர்ற அடிமையாவே இருக்கறது.

உங்க கருத்துங்களுக்கு தாங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
தூயா சொல்வது போல், "உங்க அம்மா வூட்டு நகை வேணாம், நானே செஞ்சு போடறேண்டா செல்லம்"னு உங்க வூட்டுக்காரிட்டயோ, 'அவுங்க வூட்லேர்ந்து நகை கேட்காதே.. நானே உனக்கும் அவளுக்கும் வாங்கித் தரேன்னு' அம்மாகிட்ட சொல்லித் தான் வரதட்சணைங்கிற ஆணடிமைச் சின்னத்தை ஒழிக்க வேண்டியது தானே... ;)//


சொன்னா அப்படியே சும்மா விட்டுடப்போறீங்க. அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, பாட்டி, எதிர்விட்டுகாரம்மா, பக்கத்து வீட்டுகாரம்மா அப்படின்னு பல வடிவங்களில் பசங்களை பின்னிடறீங்களே? எத்தனை பசங்களுக்கு பெண் பார்க்கப் போகும் பொழுது பேச்சு உரிமை இருக்குது. சரின்னு சொல்றது கூட ரூமுக்குள்ள இல்ல வெச்சி சொல்லச்சொல்றீங்க. அது சரி நீங்க ஏன் டாக்டர் பொண்ணுக்கு டாக்டர் பையனே வேணும் software engg பொண்ணுக்கு அதே துறையில் முடிஞ்சா பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவனா தேடுறீங்க. ஒரு டாக்டர் பொண்ணு ஒரு வேலையில்லாத பையனை கல்யாணம் பண்ண வேண்டியது தானே? இல்ல காலம் பூரா கன்னியா இருந்தாலும் இருப்பேன் வரதட்சனை குடுக்க மாட்டேன் அப்படின்னு சொல்ல வேண்டியது தானே? தங்கைக்கு தன்னைவிட அதிகமா வரதட்சணை குடுத்துடாங்களேன்னு அப்பாகிட்ட சண்டை போடுகிற பொண்களை காட்டட்டுமா? இல்ல வீட்டுல நடக்குற ஒவ்வொரு விஷேசத்துக்கும் அம்மா வீட்டுல நிறைய செஞ்சாத்தான் புகுந்த வீட்டுல எனக்கு மரியாதை அப்படின்னு சொல்ற பொண்ணுங்க வேணுமா? உங்க அப்பா கஷ்டப்படுகிறார் நான் வாங்கி தருகிறேன் செல்லாம் அப்படின்னு சொன்னா நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிங்களா எனக்கு எல்லாம் தெரியும் அப்படின்னு சொல்ற ஆல் இன் ஆல் அழகு ராணிகளை காட்டணுமா உங்களுக்கு?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சந்தோஷ் தலீவா...

ரொம்ப தாங்ஸ். தலீவா. நம்ம மனசுக்குள்ள இருக்கறத எல்லாம் சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...

நமக்கு இன்னா பிரச்சனைன்னா ரொம்ப புத்திசாலித்தனமா பேசுவோம். ஆனா பொண்ணுங்க மின்னாடி அவ்ளோ புத்திசாலிதனமும் காணாம பூடும்.
அவங்க கேள்விக்கு கரீக்டா பதில் சொல்லாம முழிப்போம்....

இதனால இவங்கள கேள்வி கேக்க ஆள் இல்லாம போச்சி...

அதனாலதான் இத்தினி கொடுமையும் நமக்கு நடக்குது.....

ரொம்ப தேங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//எத்தனை பசங்களுக்கு பெண் பார்க்கப் போகும் பொழுது பேச்சு உரிமை இருக்குது. //
பேச்சுரிமை இருக்கும் எத்தனை ஆண்கள் பேசி அம்மாவை/ அப்பாவை வரதட்சணையில் இருக்கும் அநியாயத்தைப் பார்க்கச் செய்கிறார்கள்? என் தோழி ஒருத்தி, காதல் கல்யாணம் தான். வரதட்சணை அங்கே கூட கேட்டார்கள். அந்தப் பையன் "எங்க அம்மா கேட்கும் போது கொடுக்கிறது தான் சரி.. இல்லைன்னா உனக்கும் அம்மாவுக்கும் ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்துடும். இன்னிக்கே உன் பக்கம் பேசினால், அம்மா ரொம்ப வருத்தப்பட்டுப் போய்டுவாங்க" என்று சப்பைக் கட்டுக் கட்டி வரதட்சணை கொடுத்துத் தான் அந்தத் திருமணம் நடந்தது. இந்தக் கதையில் வரும் பிரபாகர் கூட தோழி ஒருத்திக்கு மாப்பிள்ளை பார்க்க வந்த அனுபவத்தின் மிச்சங்கள் தான்.

ஆனால் சந்தோஷ், அந்த ஆண்களைப் பற்றிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது எத்தனை முக்கியமோ, அதே போல், "தங்கைக்கு தன்னைவிட அதிகமா வரதட்சணை குடுத்துடாங்களேன்னு அப்பாகிட்ட சண்டை போடுகிற பொண்களை"யும், "ஒவ்வொரு விஷேசத்துக்கும் அம்மா வீட்டுல நிறைய செஞ்சாத்தான் புகுந்த வீட்டுல எனக்கு மரியாதை அப்படின்னு சொல்ற பொண்ணுங்க"ளையும், "உங்க அப்பா கஷ்டப்படுகிறார் நான் வாங்கி தருகிறேன் செல்லாம் அப்படின்னு சொன்னா நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிங்களா எனக்கு எல்லாம் தெரியும் அப்படின்னு சொல்ற ஆல் இன் ஆல் அழகு ராணிகளை"யும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அவசியம் நிச்சயம் இருக்கிறது. அது போன்ற பெண்களைப் பற்றித் தெரிந்தவர்கள், அந்த விவரங்களை எழுதினால் இது போன்ற விழிப்புணர்வு கூடும்.

//இல்ல காலம் பூரா கன்னியா இருந்தாலும் இருப்பேன் வரதட்சனை குடுக்க மாட்டேன் அப்படின்னு சொல்ல வேண்டியது தானே? //
இதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்று தான் சந்தோஷ். "காலேஜ் போனா, ஈவ் டீஸிங் பண்றாங்கம்மா..." என்று ஒரு பெண் சொன்னால், "ஏம்மா காலேஜ் போற, பேசாம சமையல் பண்ணிகிட்டு, கைவேலை ஏதாச்சும் கத்துகிட்டு வீட்லயே இருக்கலாம் தானே!" என்று solution சொல்வது போல் இருக்கிறது. இப்படிப் பட்ட சுலபவழி முடிவுகள், அந்தப் பெண்ணின் இன்றைய வாழ்க்கைக்கு இனிமையானதாக, ஒத்துப் போவதாக இருக்கலாம். 'அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, பாட்டி, எதிர்விட்டுகாரம்மா, பக்கத்து வீட்டுகாரம்மா' எத்தனை பேர் சொன்னாலும், "வரதட்சணை வாங்கித் தான் திருமணம் செய்யவேண்டும் என்றால், எனக்குத் திருமணமே வேண்டாம்" என்று சொல்லும் ஆண்களைப் பார்த்திருக்கிறோம், மதிக்கவும் செய்கிறோம். அந்த ஆண்களின் உற்றார் உறவினரிடம் இது போன்ற காந்தீய சத்தியாகிரகங்கள் வேலை செய்தும் இருக்கிறது.

ஆனால், வீட்டுக்கு வந்து பெண் பார்க்கும் இன்னும் சம்பந்தி ஆகாத குடும்பத்தவரிடம், "வரதட்சணை கொடுத்துத் தான் நான் கல்யாணம் செய்யணும்னா, எனக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம்" என்று ஒரு பெண் சொன்னால், "எனக்கென்ன போச்சு" என்று நல்லா கொடுக்க வசதிப்பட்ட வேற இடத்துல போய் பொண்ணெடுக்க மாட்டாங்களா என்ன? (அந்தக் கதையின் பின்னூட்டங்களில் பலரும் இதே கருத்தைத் தான் சொல்லி இருக்கிறார்கள்). ஆக இந்த விஷயத்தில் சமூக மாற்றம் எங்கிருந்து வர வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்றே நம்புகிறேன்.

// அது சரி நீங்க ஏன் டாக்டர் பொண்ணுக்கு டாக்டர் பையனே வேணும் software engg பொண்ணுக்கு அதே துறையில் முடிஞ்சா பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவனா தேடுறீங்க. ஒரு டாக்டர் பொண்ணு ஒரு வேலையில்லாத பையனை கல்யாணம் பண்ண வேண்டியது தானே? //
சரி.. இது பத்தி அப்படித் தேடுற பொண்ணுங்க பதில் சொல்லுவாங்க....

உஷா மாதிரி நானும் இது ஒரு விளையாட்டுத்தனமான, மாற்றுப்பார்வை என்று நினைத்து தான் இந்தப் பதிவில் பின்னூட்டம் போட்டுகிட்டிருக்கேன். தூயா சொன்ன நகை விஷயத்தைப் பற்றிய பத்தியிலும் அதே காரணத்தால் தான் ஸ்மைலி இருக்கு.

இதைப் பற்றிய என் தனிப்பட்ட கருத்து, நகை தான் ஒரு "ஆணை" வரதட்சணை என்ற கொடுமையில் சிக்க வைக்கிறதென்றால், (அப்படி இல்லாவிட்டாலும் கூட), எந்த ஆணும், அது அப்பாவோ, கணவனோ, எங்களுக்கு நகை வாங்கித் தரவேண்டியதில்லை. எல்லாம் நாங்களே வாங்கிக் கொள்வோம். கல்விக்கான வாய்ப்பை மட்டும் பெண்களுக்குக் கொடுத்தால் போதும். (இதை மட்டும் கேட்கும் நிலையில் தான் இன்றைய பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்கள், காரணங்கள் சொல்ல முடியும்.. :(( ) அதற்கேற்ற வேலை, சம்பளம், சொந்த சம்பாத்தியத்தில் தேவையானால் நகை, என்று அடுத்த கட்டத்திற்குப் போக எங்களுக்கும் தெரியும்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி பொன்ஸ் அவர்களே...

தாங்களே சொன்னது போல் மாற்று பார்வையும் பதியப்பட வேண்டும் என்பதானாலேயே எனது கருத்துக்களை பதிவிடுகிறேன்.

பிரச்சனை எல்லோரிடமும் இருக்கிறது...

குறிப்பிட்ட ஆணை மட்டும் குறை சொல்வதால் புண்ணியமில்லை.

திருமணத்தில் மனங்கள் இணைகின்றன ஒரு சில காம்ப்ரமைஸ்களின் பிறகு.

ஆணோ பெண்ணோ குடும்ப வாழ்க்கை என்பது தொடர்ச்சியான காம்ப்ரமைஸ்கள்தான்.

பி.எஸ்.ஸி. படித்து சுயதொழில் செய்து மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவனை சாஃப்ட்வேரில் வேலை செய்யும் ஒரு பெண் மணப்பாளா....
அவன் எத்துணைதான் அழகனாக இருந்த போதும்.
ஒரே ஒரு உதாரணம் காட்ட முடியுமா...

இந்த அடிப்படையும் முக்கியமுமான கேள்விக்கு "இது பத்தி அப்படித் தேடுற பொண்ணுங்க பதில் சொல்லுவாங்க...." என்று எளிமையாக சொல்லி சென்று விட்டீர்கள்.

ஆனால் அதே நேரத்தில் ப்ளஸ் டூ மட்டுமே படித்த பெண்ணை மணம் புரியும் படித்த ஆண்கள் இருக்கிறார்கள்.

ஆண் திருமணத்தில் பெண்ணின் அழகை பார்க்கிறான். பெண் தான் தேர்ந்தெடுக்கும் ஆண் பொருளாதார அளவில் நன்றாக இருக்கிறானா என்று பார்க்கிறாள்.

இதை யாரும் மறுக்க முடியாது.

பெண் சற்று அழகு குறைவாக இருக்கும்போது பெண்வீட்டார் சவரன்களைக்காட்டி நல்ல நிலையிலுள்ள ஆணை விலை பேசுகிறார்கள் என்பது என் குற்றச்சாட்டு.

காலமெல்லாம் கன்னியாக இருந்தாலும் இருப்பேனே தவிர எளிமையான வாழ்க்கைமுறையுடைய ஆணை மணக்கமாட்டேன். வரதட்சணை கொடுத்தாவது எனக்கு நல்ல இடத்தில் கட்டி கொடுங்கள்
என்று நிற்கும் பெண்களை என்ன சொல்ல....

அப்படி எண்ணும் பெண்களின் எண்ணம் சரியென்றால் ஓரளவுக்கு வசதியான பின்புலமுள்ள பெண்ணாக மட்டும் திருமணம் செய்வேன் என்று ஒரு ஆண் எண்ணுவானால் அவனை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்.

நான் விலைகொடுத்து அந்த ஆணை வாங்கா விட்டால் இன்னொரு பெண் வாங்கிவிடுவாள். அதனால் நான் வாங்குவது தவறு இல்லை என்று சொன்னால் நாம் என்ன சொல்ல முடியும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்கள் கதையை போல் யாரும் வாயை திறந்து வரதட்சணை கேட்பதே இல்லை.

இதுதான் எங்கள் சக்தி. இவ்வளவு தான் எங்களால் செய்ய முடியும் என்று பெண் வீட்டார் முதலிலேயே விஷயத்தை கசிய விடுகிறார்கள்.
இந்த இடம் நாமே கேட்காவிட்டாலும் செய்வார்கள் என்ற புரிதலில் ஆண்வீட்டார் செல்கிறார்கள்.

நீங்கள் உங்கள் கதையில் எழுதியுள்ளது போல் சினிமாட்டிக்காக நடக்கும் விஷயங்கள் இல்லை இவை.

குற்றம் நமது சமூக அமைப்பின் மீது. ஆண்கள் மீதல்ல.

வரதட்சணை வேண்டாம் என்று ஆண் வீட்டார் சொன்னால் அந்த ஆணிடம் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ என்று யோசிக்கும் பெண் வீட்டார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா.

பெண்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்ற தேய்ந்த ரெக்கார்டை மீண்டும் எடுத்து விட்டிருக்கிறீர்கள்.

கல்வி கிடைக்காமல் தீப்பெட்டி சுற்றும் சிறுவர்கள் எத்தனை பேர். ஹோட்டல்களில் கல்வி கிடைக்காத காரணத்தால் டேபிள் துடைத்தாவது தனது குடும்பத்தை காப்பாற்றும் ஆண்கள் எத்துணை பேர்.
என்னமோ ஆண்கள் எல்லோருக்கும் கல்வி மிக எளிதாக கிடைத்துவிடுவது போலவும் பெண்களுக்குதான் அது கிடைக்காதது போலவும் இருக்கிறது உங்கள் வாதம்.

இன்றைய நிலையில் எல்லா குடும்பங்களும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்வதால் ஆணோ பெண்ணோ எல்லோரும் படிக்கிறார்கள்.
ஆணோ பெண்ணோ அவர்களது படிப்பு குடும்பத்தின் பொருளாதார சூழல் மற்றும் அவர்களின் கற்கும் திறன் இரண்டு காரணிகளை மட்டுமே பொறுத்து அமைகிறது.

நானே பார்த்துக் கொள்வேன்... நானே சம்பாதிப்பேன்... என்பது ரீதியான தங்கள் கருத்துக்கள் எனக்கு அதிகப்படியாக தெரிகிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நகைகளை நானே வாங்கிக் கொள்வேன் என்ற தங்கள் வாதம் பெண்களுக்கு பணமும் நகையும் ஒன்றே குறி என்ற எனது வாதத்தை உறுதி செய்கிறது என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.
ஆணை விட பெண்களுக்கே பேராசை அதிகம். இந்த கருத்தை தாங்கள் மறுப்பீர்கள். அது தங்கள் உரிமையும் கூட.

கேள்விகள் சற்று காரமாக இருந்தால் மன்னிக்கவும்...
இது கருத்துக்களின் பரிமாற்றம் மட்டுமே. தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

மாற்றுப்பார்வையை மிக தீவிரமான தளங்களில் கொண்டு செல்லாமல் இயன்ற அளவு எளிமையாகவே கொண்டு செல்கிறேன்.

இங்கு நான் ஏதேனும் தவறாக சொல்லியிருப்பதாக கருதினால் மன்னிக்கவும்.

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தொடர்ந்து தங்கள் கருத்துகளை வேண்டுகிறேன்.

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹாய் அரை ப்ளேடு!!!!
நீங்க சொல்ற கருத்துல எனக்கும் உடன்பாடு உண்டு!!!
பெண்களுக்கு 75% பிரச்சனை பெண்களால தான்!!!
இருந்தாலும் சில இடங்களில் ஆண்களாலும் பிரச்சனை இருக்கு!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பி! பெண்களுக்கு பட்டிலும், நகைகளிலும் மோகம் என்கிறீர்கள். ஆண்களும் பிரேஜ்லெட், விலை உயர்ந்த மோதிரங்கள், கனத்த சங்கிலிகள் என்று மின்னுவதையும், வேறுவகையான ஆடம்பரத்தில் காசை கரி ஆக்குவதையும் என்ன சொல்கிறீர்கள்.இது மனுஷ இயல்பு. எப்பொழுதும் பிறரை குற்றம் சாட்டுவது சுலபம்.என்றுமே எனக்கு ஓரே ஒரு கொள்கைதான்.பிறரை சொல்வதற்கு முன்பு, எந்த விஷயத்திலும் நான் அதை எப்படி கையாள முடியும்/ என்னை மாற்றிக் கொள்ள முடியுமா என்று யோசிப்பேன். முடியும் என்றாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும் :-) உதாரணமாய் லிஸ்ட் போட்டு கறக்க பார்க்கும் குடும்பத்துக்கு வாழப்போக மாட்டேன் என்று கல்யாணம் என்றவுடனே கண்டிஷன் நான் போட்டேனே!

மீண்டும் உங்கள் பார்வைக்கு முன்பு நான் எழுதியது

http://nunippul.blogspot.com/2005/10/blog-post_31.html



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி டுபுக்கு டிசிப்பிள் அவர்களே

சில இடங்களில் ஆண்களால் பிரச்சனை இருக்கிறது என்பது உண்மையே.

கண்ணை மூடிக்கொண்டு வரதட்சணைக்கு ஆண் மட்டுமே 100% காரணம் என முழங்கும் பெண்ணுரிமைவாதிகளுக்காகத்தான் இக்கட்டுரைப்பகுதி.

நன்றிகள்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி உஷா அவர்களே.

தங்கள் கட்டுரையை படித்தேன். தங்களை போல் அனைவரும் எளிமையை வலியுறுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நான் பார்த்த வரை கல்யாணத்திற்கு என்று எடுக்கப்படும் பட்டுப்புடவைகள் தேவையற்றவை.

நமது சம்பிரதாயங்களின் படி கல்யாண பட்டை ஆண் வீட்டார்தான் எடுத்து தர வேண்டும். காலம் மாறிவிட்டதால் இப்போது மணப்பெண்ணை அழைத்து சென்றே அவர்கள் தேர்விற்கே மாப்பிள்ளை வீட்டார் விட்டு விடுகிறார்கள்.

தனக்கான பட்டுப்புடவையை மணமகனின் செலவில் 25000 க்கும் 20000 க்கும் எடுத்த மணப்பெண்களை நானறிவேன்.

இது பெண் ஆண் மீது செலுத்தும் வரிதட்சணை அல்லவா.

கல்யாணத்தில் பெண் 50 சவரன் போட்டு வருகிறாள் என்றால் கல்யாணத்திற்கு அச்சாரமாக ஆண்வீட்டாரும் 10 சவரனாக செய்து போட வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்பது தாங்கள் அறியாததா. கடைசியில் 60 சவரனையும் மாட்டிக்கொண்டு சுற்றி வரப்போவது அந்த பெண்தான்.


ஆண் நகை மாட்டிக்கொள்ளவில்லையா என்கிறீர்களே.

பெண்ணுக்கு எத்தனை சவரன் என்றாலும் ஆணுக்கான நகைகள் ஒரு மோதிரம், ஒரு செயின், ஒரு பிரேஸ்லெட்டோடு முடிந்து விடும்.

அதை கூட அவன் திருமணத்தன்று மட்டும்தான் அணிவான்.

கல்யாணம் போன்ற விஷேசங்களுக்கு செல்லும் போது சர்வபூஷணியாக அனைத்து நகைகளையும் அணிந்து கொள்ளும் பெண் தனக்கு சரிசமமாக(!!) தனது துணைவனும் நகை அணிந்தே தீர வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாலேயே ஆண்களில் பெரும்பாலோர் நகைகளை சுமக்கிறார்கள் என்பது தாங்கள் அறியாததா.

நன்றிகள்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

// பிரச்சனை எல்லோரிடமும் இருக்கிறது...//
ரைட்.. இதை முதலில் ஒப்புக் கொண்டுவிடுகிறேன். ஆனால், இது உங்களின் பதிவுகளில் இல்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டுகிறேன். இந்தத் தொடரின் மாற்றுப்பார்வை "ஆண்களைக் குறை சொல்லாதீர்கள்" என்று இல்லை! "பெண்ணடிமைத்தனத்துக்கு ஆண் காரணமே இல்லை" என்ற குரல் ஒலிப்பதாக தோன்றுகிறது எனக்கு. :(

// பி.எஸ்.ஸி. படித்து சுயதொழில் செய்து மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவனை சாஃப்ட்வேரில் வேலை செய்யும் ஒரு பெண் மணப்பாளா....
அவன் எத்துணைதான் அழகனாக இருந்த போதும்.
ஒரே ஒரு உதாரணம் காட்ட முடியுமா... //
முடியும். இஞ்சினியரிங் படித்து, நல்ல வேலையில் இருக்கும் என் கஸின் ஒருத்தி +2 மட்டுமே படித்த அதிக சம்பளம் இல்லாத, சொத்துபத்து இல்லாத ஒரு பையனை, - நண்பனைக்- காதலித்து, அம்மா அப்பாவுடன் போராடி திருமணம் செய்தது எனக்குத் தெரியும். அடுத்த முறை நீங்கள் இந்தியா வரும்போது சொல்லுங்கள். அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போய்க் காட்டுகிறேன்.

// இந்த அடிப்படையும் முக்கியமுமான கேள்விக்கு "இது பத்தி அப்படித் தேடுற பொண்ணுங்க பதில் சொல்லுவாங்க...." என்று எளிமையாக சொல்லி சென்று விட்டீர்கள்.//
இப்போவும் அதே தான் சொல்லுவேன்.

// ஆனால் அதே நேரத்தில் ப்ளஸ் டூ மட்டுமே படித்த பெண்ணை மணம் புரியும் படித்த ஆண்கள் இருக்கிறார்கள். //
"எனக்கு என்னை விட ரொம்ப ரொம்ப கம்மியா படிச்ச பெண் தான் வேண்டும். அப்போ தான் நான் சொல்றதைக் கேட்டு வீட்ல சும்மா கிடப்பா!" என்ற காரணத்திற்காக +2வுக்கும் குறைவான படிப்பு படித்த பெண்களை மணக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நாம் பேசவில்லை என்று நம்புகிறேன். அப்படி அவர்களைப் பற்றிப் பேசினால், அதே போன்ற பெண்களையும் பார்க்க முடியும். அது போன்ற ஆதிக்க உணர்வுக்கு ஆண் பெண் என்ற பேதங்கள் இல்லை என்பது கண்கூடு. அதே சமயம் ஆணின் இது போன்ற ஆதிக்க உணர்வு நியாயமானது என்று இன்றுவரை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் உணரவேண்டும்.

என் உறவுப் பெண்ணின் அந்தத் திருமணத்தை எதிர்த்த அவளின் அப்பா, அம்மா சொன்ன முக்கிய காரணம், அவள் படிப்பை விட அவன் படிப்பு குறைவு என்பதே. அதே போல் தோழி ஒருத்தியின் அக்கா ஆராய்ச்சி படிப்பு படித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவருடைய திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது.

+2 படித்த பெண்களைத் திருமணம் செய்ய முழுமனதுடன் முன்வரும் ஆண்கள், அவள் தன்னை விடக் குறைந்த படிப்பு படித்திருப்பதாலேயே அப்படி முன்வருகிறார்கள்/சமூகத்தால் அது சரிதான் என்று அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அது தான் உண்மை.

//ஆண் திருமணத்தில் பெண்ணின் அழகை பார்க்கிறான். பெண் தான் தேர்ந்தெடுக்கும் ஆண் பொருளாதார அளவில் நன்றாக இருக்கிறானா என்று பார்க்கிறாள்.
இதை யாரும் மறுக்க முடியாது.//
அப்படியா? அதை மட்டும் தான் இருவரும் பார்க்கிறார்கள் என்கிறீர்களா? வேறு எந்த காரணமும் இருக்காது என்று நம்புகிறீர்களா? என்னைப் பொறுத்தவரை அதை ஒப்ப முடியவில்லை.


// பெண் சற்று அழகு குறைவாக இருக்கும்போது பெண்வீட்டார் சவரன்களைக்காட்டி நல்ல நிலையிலுள்ள ஆணை விலை பேசுகிறார்கள் என்பது என் குற்றச்சாட்டு. //
ஓஒ... அப்படியானால், மிக மிக அழகான என் தோழிக்கு ஏன் வரதட்சணை காரணமாக இன்னும் திருமணம் நடக்கவில்லை?

// அப்படி எண்ணும் பெண்களின் எண்ணம் சரியென்றால் ஓரளவுக்கு வசதியான பின்புலமுள்ள பெண்ணாக மட்டும் திருமணம் செய்வேன் என்று ஒரு ஆண் எண்ணுவானால் அவனை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும். //
ஆக, வரதட்சணை வாங்குவது சரி!ஓகே.. இதை நினைவில் வைத்துக் கொண்டு இந்தத் தொடரைப் படிக்கிறேன்..

//ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்கள் கதையை போல் யாரும் வாயை திறந்து வரதட்சணை கேட்பதே இல்லை.

இதுதான் எங்கள் சக்தி. இவ்வளவு தான் எங்களால் செய்ய முடியும் என்று பெண் வீட்டார் முதலிலேயே விஷயத்தை கசிய விடுகிறார்கள்.
இந்த இடம் நாமே கேட்காவிட்டாலும் செய்வார்கள் என்ற புரிதலில் ஆண்வீட்டார் செல்கிறார்கள்.

நீங்கள் உங்கள் கதையில் எழுதியுள்ளது போல் சினிமாட்டிக்காக நடக்கும் விஷயங்கள் இல்லை இவை. //

அரைபிளேடு, நீங்கள் உங்கள் அளவில் பார்த்த ஆண்களை மட்டுமே வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள்.

ஒரு முறை என் தோழியின் வீட்டில் பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கும் போது உங்களை அழைக்கத் தோன்றுகிறது(அவர்கள் அனுமதிப்பது சந்தேகம் தான்..). நீங்கள் சொல்வது போல், "எங்களால் இவ்வளவு முடியும்" என்று பெண்ணின் பெற்றோர் சொல்வதற்கு முன்னமே/அல்லது அது தெரிந்த பின்னும், பிரபாகர் வீட்டார், "கார் இருக்கா? ஐம்பது சவரனா போடுவீங்களா?.. " என்ற ரீதியில் கேட்டது நடந்தது. இத்தனைக்கும் என் தோழி நன்கு படித்து, நல்லா சம்பாதிக்கும் வேலையில் இருப்பவள். என்னால் இதையெல்லாம் வீடியோ எடுத்துக் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

என் பிற தோழிகள் வீட்டில் வரதட்சணை என்ற வார்த்தையே இல்லாமல் திருமணம் நடந்ததும் உண்டு. இது போன்ற ஒரு நிகழ்ச்சியை முதன்முதல் பார்த்த போது எனக்கேற்பட்ட ஆச்சரியம், அச்சம், வெறுப்பு.. விவரிக்க ஏதும் இல்லை என்பது தான் உண்மை.

அதே போல் இன்னுமொரு தோழிக்கு நிச்சயதார்த்தம் வரை வந்து, பையனின் நடத்தை சரியில்லாததால் நின்று போன அவள் திருமணம் இன்றும் பேரத்தில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறது! :(

// குற்றம் நமது சமூக அமைப்பின் மீது. ஆண்கள் மீதல்ல. //
ஆண்கள் மீது குற்றம் சாட்டவில்லை. சமூக அமைப்பின் குற்றத்தை எப்படிச் சரி செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்? பெண்கள் மட்டுமே திருமணம் வேண்டாம் என்று மறுப்பதன் மூலமா?

// பெண்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்ற தேய்ந்த ரெக்கார்டை மீண்டும் எடுத்து விட்டிருக்கிறீர்கள்.

கல்வி கிடைக்காமல் தீப்பெட்டி சுற்றும் சிறுவர்கள் எத்தனை பேர். ஹோட்டல்களில் கல்வி கிடைக்காத காரணத்தால் டேபிள் துடைத்தாவது தனது குடும்பத்தை காப்பாற்றும் ஆண்கள் எத்துணை பேர்.
என்னமோ ஆண்கள் எல்லோருக்கும் கல்வி மிக எளிதாக கிடைத்துவிடுவது போலவும் பெண்களுக்குதான் அது கிடைக்காதது போலவும் இருக்கிறது உங்கள் வாதம். //
ஒரு வீட்டில் பெண்ணும் ஆணும் படிக்க முடியும் என்றாலும், பெண்ணை அதிகம் படிக்க வைக்காமல், ஆணை உயர்கல்விக்கு அனுப்பும் வீடுகள் எத்தனை காட்ட வேண்டும் உங்களுக்கு?
ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்வி சமம் தான் என்றால், "சம்பாதிக்கிற திமிரு! படிச்ச புள்ளன்னு கர்வம்!" என்று எத்தனை மகன்களை/கணவர்களைத் திட்டிப் பார்த்திருக்கிறீர்கள்?

// நானே பார்த்துக் கொள்வேன்... நானே சம்பாதிப்பேன்... என்பது ரீதியான தங்கள் கருத்துக்கள் எனக்கு அதிகப்படியாக தெரிகிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். //
நல்லது.. அதிகப்படியாகத் தான் உங்களுக்குத் தெரிய வேண்டும். எல்லாருக்கும் அப்படித் தான் தெரியும். ஒரு பெண் அப்படிச் சொல்வதே அதிகப்படியாகத் தெரியும் விதத்தில் தான் நம் சமுக அமைப்பு இருக்கிறது என்று எனக்கும் தெரியும். ஆனால், நம் சமூக அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் அளவுகோலில் இதன் பெயர் சுயமரியாதை/தன் கையே தனக்குதவி என்று நினைப்பது என்பதெல்லாம் இல்லை! வெறும் அதிகப்பிரசங்கித்தனம்.. சபாஷ்!

// நகைகளை நானே வாங்கிக் கொள்வேன் என்ற தங்கள் வாதம் பெண்களுக்கு பணமும் நகையும் ஒன்றே குறி என்ற எனது வாதத்தை உறுதி செய்கிறது என்பதை கவனிக்க வேண்டுகிறேன். //
//சொந்த சம்பாத்தியத்தில் தேவையானால் நகை// என்று சொன்னதாகத் தான் நினைவு. எனக்கு என்ன தேவை என்று நான் முடிவெடுப்பதைப் பற்றித் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அத்துடன் நீங்கள் குறிப்பிடும் மனைவியின் விருப்பத்திற்காக நகை சுமக்கும் பரிதாப புருஷர்கள் போலவே அப்பாவின் (அல்லது கணவனின்) ஆசைக்காக/கௌரவத்தைக் காக்க மட்டுமே, வேண்டா வெறுப்பாக நகை அணிந்து கொள்ளும் (என் போன்ற) பாவப்பட்ட பெண்களும் நிறைய இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

// கேள்விகள் சற்று காரமாக இருந்தால் மன்னிக்கவும்...
இது கருத்துக்களின் பரிமாற்றம் மட்டுமே. தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். //
அதையே நானும் அதே பணிவோடு சொல்லிக் கொள்கிறேன். உங்களின் பதில்களுக்கும் நன்றி...

தீவிரமான இடுகையாக உங்களுடையது இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதே போல், என் முதல் பின்னூட்டமும் உங்களின் பதிவைப் போல் லைட்டாக இருந்ததாகவே நம்புகிறேன். அப்படி உங்களுக்கும் தோன்றியது என்று உங்களின் முதல் பதில் உறுதி செய்வதாக நம்புகிறேன்.

அதன் பின் அதை இன்னும் தீவிரமான தொனிக்கு எடுத்துச் செல்ல நேர்ந்தமைக்கு என் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டு இந்த விவாதத்திலிருந்து இப்போது விடைபெற்றுக் கொள்கிறேன். இனிமேல் இந்த ஜாலியான தொடரின் நடுவில் தீவிர விவாதங்களை நுழைத்து, உங்களையும் உங்கள் வாசகர்களையும் தொல்லை செய்யாமல் இருக்க நிச்சயம் முயல்வேன் ;))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றிகள் பொன்ஸ்

மாற்றுப் பார்வை என்ற அளவிலேயே வரதட்சணையை பற்றி சொல்லியிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.

பார்வைகள் வேறாயிருப்பினும் வரதட்சணை தவறு என்ற புள்ளியில் வேறு கருத்திற்கே இடமில்லை.

வரதட்சணை தேவையான அளவுக்கு பின்னூட்டங்களிலேயே துவைத்து காயப்போட்டு விடப்பட்டதால் வரதட்சணை இத்துடன் இத்தொடரில் இருந்து விடைபெறுகிறது.

விலகி நிற்க வேண்டாம் தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். அது எத்துணை சீரியஸாக இருந்த போதும்.

நாம இதுக்கு மேல ஆஸ் யூசுவல் சீரியஸ்ஸா எயுதாம காமடியாதான் எயுதுவோம் ரிப்ளை பண்ணுவோம்ன்றத சொல்லிக்கிறோம்.

அப்பப்ப வந்து கண்டுக்னு கருத்து சொல்ல சொல்லி உங்கள அன்போட கேட்டுக்கறது - அரைபிளேடு.

தாங்ஸ்.
:))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பொன்ஸ் அவர்களே...

அப்பாலிகா நியாயமான கருத்துங்கள நியாயமா எடுத்து சொல்லிக்னு இருக்கற நீங்க வருத்தம் எதுக்கு தெரிவிக்கனம்ன்றேன்.

நாம இந்த சேப்டர எயுதுன நோக்கமே வரதட்சணை கூடாதுன்னுதான்..

நாம இந்த கட்டுரையே டிஸ்கஷன் அப்பிடின்னு போட்டுதான் எயுதிக்னு இருக்கறோம்... உங்கள மாறி யாராச்சும் வந்து கர்த்து சொல்வாங்க... டிஸ்கஜன் நல்லா நடக்கும்... அதனால வரதட்சணையால கஸ்டப்படற நாலு ஆம்பிளைங்களுக்கு நல்லது நடக்கும் அப்படின்றதுதான் நம்ம எய்ம்...

இப்ப பாருங்க உங்க கருத்துங்கள படிக்கிற பொண்ணுங்க ஒஸ்தியான மாப்பிள்ளைதான் வேணும்னு அடம் பிடிக்காம என்னை மாறி அரை குறைங்களையும் கல்யாணம் பண்ணிக்க ரெடியா வருவாங்க... அப்பாலிகா அவன நகை வேணும் நட்டு வேணும்னு தொந்தரவு பண்ணாம இருப்பாங்க..
அப்பாலிகா நாட்ல இருக்கற வூடுங்கள்ல சண்டையே இருக்காது..
கேக்கவே நல்லா கீது இல்ல..
நாட்டுல இந்த மாதிரி நல்லது நடந்தா சரிதான்.

உங்க கர்த்துங்களுக்கு இன்னொரு தபா தாங்ஸ் வச்சிக்கிறேன்...
:))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அதனால வரதட்சணையால கஸ்டப்படற நாலு ஆம்பிளைங்களுக்கு //

:)))))))))))))))))))) சரிதான் :))

// விலகி நிற்க வேண்டாம் தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். //
விலகியாவது, நிற்கிறதாவது.. நிச்சயம் வந்துடுவோம்.. என்ன சீரியஸா கொண்டு போக எனக்கும் விருப்பமில்லை அப்டீன்னு தான் சொன்னேன்.. :) ஜாலியாவே எழுதுங்க... :)



-------------------------------------------------------------------------------------------------------------