ஒரு வருஷம் ஓடி போச்சி..
புது வருஷம் கூடியாச்சி..
பாட்டில் ஒண்ண கையில எடுத்து
பாட்டம்ஸ் அப் சொல்லுற அண்ணாச்சி.
உன்னோட போன வருஷ
ரெசலுயூசன் என்னாச்சி...
இனி சரக்கு கிளாஸை
கையால தொட மாட்டேன்னு சொன்ன...
ஆகான்னு நினைக்க சொல்ல..
பாட்டிலோட முழுங்குன...
சிகரெட்டை விட்டுடறேன்னு சொன்ன..
புகைய விட்டுக்குனேதான் இருக்குற...
இன்னொரு வருஷம்..
அதே ரெசலுயூசன்.. அதே ஆளு....
டிஸ்கொத்தேக்கு போகுற..
டான்ஸ் ஆடி கொண்டாடுற...
கேட்டா புதுவருசத்தை
கொண்டாடுறோம்னு சொல்லுற...
ஆட்டம் போட்டாதான்
அடுத்த ஆண்டு வருமா...
சிகரெட்டோ தம்மோ
ஹெல்துதான் தருமா...
யோசிச்சி நீயும் பாரு..
இனிவாழ்க்கை டாப் கியரு...
விஷ் யூ ஹேப்பி நியூ இயரு.
Sunday, December 31, 2006
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
தம்பி ஹாப்பி நியூ இயரு!
உம் பாட்டு படு சூப்பரு!
-------------------------------------------------------------------------------------------------------------
என்னோட ரெசலூஷன் உங்களுக்கு எப்டி தெரிஞ்சுது?
:)
-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு அவர்களே,
ஆட்டம் போட்டாதான்
அடுத்த ஆண்டு வருமா...
சிகரெட்டோ தம்மோ
ஹெல்துதான் தருமா...
இதை கேட்டாவது
பலர் மனம் திருந்துமா?
நல்ல கருத்துக்களை சுவையாக பகிர்ந்து கொண்ட உங்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
-------------------------------------------------------------------------------------------------------------
அடிவைஸ் பல அள்ளித் தெளிப்பதால்...
அரை பிளேடுக்குத்
தத்துவ பிளேடு என்று வரலாற்றில் புகழப்படுவார்.
-------------------------------------------------------------------------------------------------------------
அரைக்கும்....அரையைகட்டின புண்ணியவதிக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
-------------------------------------------------------------------------------------------------------------
//தம்பி ஹாப்பி நியூ இயரு!
உம் பாட்டு படு சூப்பரு!//
நன்றி வாத்தியாரையா
தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க சிறில்
ஆகா அதெல்லாம் உங்க ரெசலூஷனா. பரவாயில்ல நல்ல ரெசலூஷன்தான்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க நாகூர் முகம்மது இஸ்மாயில் அவர்களே...
வருகைக்கும் வாழ்துத்துக்கும் நன்றி.
தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க ஜி...
தத்துவ பிளேடா...
தத்து பித்து என்று உளறும் நமது உளறல்கள் தத்துவமா என்ன. இவ்ளோ நாளா நமக்கே இது தெரியாம போயிருச்சே...
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தூயா அவர்களே..
தங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப தாங்ஸ்.
தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
அன்பு
அரை பிளேடு அவர்களே,
உங்கள் புத்தாண்டு கவிதை நல்லயிருக்கு...
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மெட்றாஸ்லுல எந்த எரியா கன்னு....
-------------------------------------------------------------------------------------------------------------
கோபிநாத் அவர்களே நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மெட்றாஸ்ல நம்ம ஏரியாவா... திருவொற்றியூர்ல இருந்து திருவான்மியூர் வரிக்கும் பீச்ல இருந்து போரூர் வரிக்கும் வேளச்சேரில இருந்து தாம்பரம் வரிக்கும் எல்லாமே நம்ப ஏரியாதாம்பா... :)))

Post a Comment