Monday, December 04, 2006

இந்தி காக்கா கத...


முதல்ல இது பாட்டி வட சுட்ட கத இல்லன்னு தெளிவா சொல்லிக்றேன்..

இது நான் சின்ன வயசுல கேட்ட கத...

தாத்தாவோ பாட்டியோ சொன்ன கத இல்ல..

ஒரு பெரியவரு மேட போட்டு மீட்டிங் போட்டு சொன்ன கத...

இந்த பெரியவருக்கு தெரிஞ்ச இன்னோரு பெரியவரு இருந்தாராம்.

அவருக்கு ஒரு பெரிய வருத்தமாம்..

அதாவது... நம்ப இந்தியாவுல இந்திய ராஸ்ட்ர பாஷா ன்னு சொல்லி நேசனல் லாங்குவேஜி ஆக்கிட்டாங்களாம்...

ஆனா தமில அப்படி ஆக்கலியாம்...

இதனால இவரு அவிங்க கிட்ட போயி..

ஏம்பா, தமிழுக்கு என்னாப்பா.. குறைச்ச.. அத ஏன் நீங்க நேசனல் லாங்குவேஜி ஆக்கலன்னு கேட்டாராம்...

அதுக்கு அவங்க சொன்னாங்களாம்.. பாருங்க பெரியவரே.. இந்தி எல்லா எட்துலயும் கீது..

தமிழ் தமிழ்நாட்ல மட்டும்தான் கீது.. அதனாலதான் நாங்க அத நேஷனல் லாங்குவேஜி ஆக்கல அப்படின்னு சொன்னாங்களாம்..

அதுக்கு இவரு பதிலுக்கு கேட்டாராம் பாரு ஒரு கேள்வி....

"அப்பிடின்னா எல்லா எடத்திலியும் இருக்குற காக்காவ தேசிய பறவய ஆக்க வேண்டியதுதான.. ஏம்பா நீங்க மயில தேசிய பறவ ஆக்குனீங்கன்னு "

எனக்கு அப்பிடியே புல்லரிச்சு போச்சு...
தட்னேன் பாரு கைய...

நம்ப சின்ன புத்திக்கு இந்த கத சரியா தப்பான்னு சொல்ல தெரியல..
ஆனா எப்போவுமே பெரிய மன்சங்க சொன்னா சரியதான் இருக்கும்..

நீங்க என்னா சொல்றீங்கோ....


9 comments:

said...

/அப்பிடின்னா எல்லா எடத்திலியும் இருக்குற காக்காவ தேசிய பறவய ஆக்க வேண்டியதுதான.. ஏம்பா நீங்க மயில தேசிய பறவ ஆக்குனீங்கன்னு //

கலக்கலான பதில்பா அரை பிளேடு..

//தட்னேன் பாரு கைய...
//

ROTFL..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் கார்த்திகேயன்..
எல்லா புகழும் மேடையில பேசுன அந்த பெரியவருக்கே..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பெர்ய மன்சன் பெர்ய மன்சன் தான்..ரொம்ப கரீட்டா கேட்டாரு பாரு கேய்விய... :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்கல்ஸ் பிளேடு........அதிலேயும்

\"அப்பிடின்னா எல்லா எடத்திலியும் இருக்குற காக்காவ தேசிய பறவய ஆக்க வேண்டியதுதான.. ஏம்பா நீங்க மயில தேசிய பறவ ஆக்குனீங்கன்னு "\"

இது சூப்பரோ, சூப்பர்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அப்பிடின்னா எல்லா எடத்திலியும் இருக்குற காக்காவ தேசிய பறவய ஆக்க வேண்டியதுதான.. ஏம்பா நீங்க மயில தேசிய பறவ ஆக்குனீங்கன்னு "
//

லாஜிக்கலான கேள்விதான்.

:))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அருமையான லாஜிக்!
LOL!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்படினா.....

எல்லா எடத்துலெயும் இக்கிற குவார்ட்டற இன்னபா ஆக்குறது....

குவார்ட்டற தேசிய தீர்த்தம் ஆக்கேலேனலும் பருவாயில்ல

என் கண்ணுக்கு மட்டும் எல்லா எடத்துலெயும் தெரியுற பாவனாவ என்னோட சுண்டைக்கா தேசத்து மகாராணி அக்கிடுங்கப்பா



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்யாம், திவ்யா, நாமக்கல் சிபி, தமிழ்ப்பிரியன்

எல்லாருக்கும் தாங்ஸ்.

நம்ப தமிழ் இப்போ செம்மொழியாயிடுச்சின்னு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

Wyvern

//எல்லா எடத்துலெயும் இக்கிற குவார்ட்டற இன்னபா ஆக்குறது....
//

அரவுண்டு த வேர்ல்டு எல்லா கண்டிரியிலயும் அனவுன்ஸ் பண்ணாத நேஷனல் லிக்வுடு குவார்ட்டர்தான், இன்னாபா.. இப்பிடி பிரியாத மாறி கேள்வி கேக்கற..


//என் கண்ணுக்கு மட்டும் எல்லா எடத்துலெயும் தெரியுற பாவனாவ என்னோட சுண்டைக்கா தேசத்து மகாராணி அக்கிடுங்கப்பா//

ஹி.. ஹி... வழிமொழியுறேன்...



-------------------------------------------------------------------------------------------------------------