Thursday, November 30, 2006

ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு..

இது நான் ஒரு தபா ஹிந்தி எக்சாம் எயுதனப்ப நடந்த காமடி..

நம்ப ஹிஸ்டரில நடந்த இம்பார்டன்டான விஷயம்...
ஒன்ஸ் அப்பான் ய டைம்... இன் மத்யமா எக்சாம்....

நம்ப பேரு ஒண்ணா அரை பிளேடா இருக்கலாம், ஆனா நான் ஸ்ட்ரெயிட்டு பார்வார்டு...
காப்பி, பிட்டு எல்லாம் ஒளிச்சி வச்சி எயுத மாட்டேன்..
ஸ்ட்ரெயிட்டா டேபிள் மேல வச்சே எயுதுவேன்... (ஸ்ட்ரெயிட்டு பார்வர்டு.. ஹி.. ஹி).

இந்த இந்தில மத்யமாவ மட்டுமே மூணு தடவ எயுதியும் முடிக்க முடியாம போச்சி..

மேட்டருக்கு வருவோம்...

மூணாவது தடவய நான் எக்சாம் ஹால்ல உக்காந்து கொஸ்டினு பேப்பர பாக்க சொல்லதான்... எனக்கு ஞானோதயம் வந்திச்சு..
இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இந்திய படிக்கணுமான்னு...

நான் தமிலன்..
ஹிந்தி ஒயிக..

இதுக்கு மேல நான் ஹிந்தி பரீட்சை எயுதற மாதிரி இல்லன்னு பேப்பர மடிச்சி உட்காந்துக்னேன்.

இந்த ஹிந்தி பரீட்ச கீதே இத அஞ்சாங் கிளாஸ் பையன்ல இருந்து அறுவது வயசு தாத்தா வரிக்கும் எயுதுவாங்கோ...

பக்கத்துல பார்த்தா ஒரு பையன் படு சீரியஸா எயுதுறான்.. பதிமூணு வயசு இருக்கும்.. பரவாயில்ல... பையன் நல்லாவே படிச்சி இருப்பான் போல கீதுன்னு பார்த்தா.. புடிச்சாரு பாரு சூப்பருவைசரு..

பையன் அட்டையில ஒரு ஃபுல் கட்டுரைய எயுதி கொண்டாந்துக்கிறான் போல...

சூப்பருவைசரு புட்சதும் பையன் உட்டாம் பாரு ஒரு பிட்டு "சார், இது இந்த பரீட்சைக்கு எயுதுனது இல்ல சார். பிராத்மிக் பரீட்சைக்கு எயுதுனது. " அப்படின்னு..

சூப்பர் வைசரு அட்டய வாங்கி புரட்டி பொரட்டி பாத்து முயிக்கிறாரு. அவருக்கு இந்தி தெரியாது போல.

பக்கத்ததுல இருந்த காலேஜ் பொண்ணு ஒண்ணு கிட்ட அட்டய கொடுத்து இது எந்த பரீட்சக்கானது சொல்லுன்னு குடுத்தாரு..

அட பேக்கு...
அந்த பொண்ணும் இது தான் சாக்குன்னு பட்சிச்சி, பட்சிச்சி, அஞ்சி நிமிஷம் பட்சிட்டு...
இது இந்த பரீட்சைது இல்லன்னு சொல்லுது...

இந்த மாங்காவும் அத நம்பி, அந்த பையன்கிட்டயே திருப்பி தர ஒரே காமடி...

அந்த பையன் வேற, என்ன பாத்து "பிட்டு ஏதாவது வேணுமா"ன்னு கேக்கறான்..

நோ, தாங்ஸ் தம்பின்னு சொல்லிக்னேன்.

இப்படியெல்லாம் இந்த பரீட்சய எயுதி நான் கியிக்க போறது ஒண்ணுமில்ல அப்படின்னு நமக்கு ஞானோதயம் வந்து ஒரு மணி நேரம் ஆச்சே...

என்ன அப்பவே ஒயுங்கா படிச்சு இருந்தா, ஹிந்தி படம் பாத்தா பிரியும்..
ஏதாவது ஹிந்தி பொண்ணுகிட்ட கடல போட முடியும்... இதுக்கு மேல இந்த இந்திய வச்சு நாம இன்னா பண்ண போறோம் சொல்லு..

69 comments:

said...

பிராத்மிக், மத்யமா எல்லாம் படிச்சா ஹிந்தி படம் புரியாது! ஹிந்தி பொண்ணுங்ககிட்ட (ஏட்டு ஹிந்தையை வெச்சி) கடலை போடவும் முடியாது!

:))

தொடர்ந்து தூர்தர்ஷன் பாருங்க அரை பிளேடு!-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பிராத்மிக், மத்யமா எல்லாம் படிச்சா ஹிந்தி படம் புரியாது! ஹிந்தி பொண்ணுங்ககிட்ட (ஏட்டு ஹிந்தையை வெச்சி) கடலை போடவும் முடியாது!
//தல,

இந்த தெளிவு அன்னிக்கே இருக்க வேண்டிதான் நாம ஃபர்தரா ஸ்டடீஸை கண்டின்யூ பண்ல...

:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

\"
என்ன அப்பவே ஒயுங்கா படிச்சு இருந்தா, ஹிந்தி படம் பாத்தா பிரியும்..
ஏதாவது ஹிந்தி பொண்ணுகிட்ட கடல போட முடியும்... இதுக்கு மேல இந்த இந்திய வச்சு நாம இன்னா பண்ண போறோம் சொல்லு..\"

பிளேடு , கடலை போடுறதுக்குனே தனி பாஷை இருக்குது உங்களுக்கு தெரியாதா????-------------------------------------------------------------------------------------------------------------
said...

Divya said...

//பிளேடு , கடலை போடுறதுக்குனே தனி பாஷை இருக்குது உங்களுக்கு தெரியாதா???? //


வெல்கம் திவ்யா...

அது எந்த லாங்குவேஜி, நிச்சயமா தமில் கடியாது...

புரிஞ்சி போச்சி...

பீட்டரு லாங்குவேஜிதான...

யூ ஸீ,
ஐயம் பிளேடு, அரை பிளேடு

லிட்டில் வீக் இன் இங்லீஷ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுக்கு தான் நான் இந்தியே படிக்கல...

இந்தி படம் சப்-டைட்டிலோட பார்க்கலாம் ;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

மத்யமாவ மட்டுமே மூணு தடவ எயுதியும் முடிக்க முடியாம போச்சினா இன்னா இப்போ, இல்ல கேட்டுகிறேன் இன்னா இப்போ. அண்ணன் கீறன் கண்ணு கசக்க கூடாது..

dilwaale rakht maine Pyar Kiya our Mere Jeevan Saathi phir keval mujhe dosti karogi uske baath
Mujhse Shaadi Karogi please..

அப்டீனு 5 படத்து பேர எடுத்துவுட்டேனு வை, ப்ரவீன் உத்ராத் எபக்ட் குடுக்கலாம் பா..

:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஸ்ட்ரெயிட்டா டேபிள் மேல வச்சே எயுதுவேன்//

கவுத்துட்டியே பிளேடு.. ஏதோ பெரிய விஷயம்னு பாத்தா..ஹ்ம்ம்..என் ஹிந்தி கதையும் இப்படித்தான்-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெல்கம் வெட்டி

//இதுக்கு தான் நான் இந்தியே படிக்கல...

அட நீங்க நம்ம செட்டு...


//இந்தி படம் சப்-டைட்டிலோட பார்க்கலாம் ;) //இன்னாதான் சப்டைட்டிலோட பாத்தாலும் லாங்குவேஜி தெரிஞ்சி பாத்தா ஒரு இன்வால்வ்மெண்ட் கிடைக்கும் இல்ல..

கஷ்டம் இன்னான்னா பக்கத்துல கீறவங்களா இன்னாச்சி இன்னாச்சின்னு புட்சி கலாச்சி உட்டு அவங்க பேஜாரா பூட்றதுதான்....-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்ரீகாந்து அண்ணாச்சி....

வாங்கோ.. வாங்கோ...

//அண்ணன் கீறன் கண்ணு கசக்க கூடாது..//

ரொம்ப தாங்ஸ் அண்ணாச்சி....
உங்க மன்சு தங்க மனசா கீதே...

நீங்க சொன்னத கப்னு புட்சி கபால்னு மனசுல வச்சிக்னேன்...


ஆமா இந்த ப்ரவீனு, உத்தரா இவங்கள்லாம் யாருபா....
ஆங்.. அடுத்த லெவலு எக்சாம்தான...-------------------------------------------------------------------------------------------------------------
said...

மு.கார்த்திகேயன் said...
//கவுத்துட்டியே பிளேடு.. ஏதோ பெரிய விஷயம்னு பாத்தா..ஹ்ம்ம்..என் ஹிந்தி கதையும் இப்படித்தான்//

வாங்க கார்த்திகேயன்

இங்க நிறய பேரொட கத இப்பிடிதான் இருக்குது...
நீங்களும் நம்ப செட்டா பூட்டிங்க..
அப்பப்ப வந்து கண்டுக்னு போங்க...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ik exam may half-blade raghu thatha dhaan ennakku therium :)

ROTL-------------------------------------------------------------------------------------------------------------
said...

:))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க Adiya

//ik exam may half-blade raghu thatha //

இதுக்கு மீனிங் இன்னான்னா "ஒரு எக்சாம் ஹால்ல ஒரு அரைபிளேடு இருந்தான்"

கரீக்டா சொல்லிக்னீங்க.. கதப்படி எப்பிடி வரணும்னா..

"ஏக் எக்சாம் ஹால் மே ஏக் அரை பிளேடு எக்சாம் லிக்தா தா"...

அதாவது
"ஒரு எக்சாம் ஹால்ல ஒரு அரை பிளேடு எக்சாம் எயுதிக்னு இருந்தான்."

அடாடா.. அட்டம்டு மூணா இருக்கலாம் ஆனா உனக்கு மூள கீதுடா அரபிளேடு.... பட்டசத வச்சி இவ்ளோ எயுத முடியுதே...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக கப்பி பயலார் அவருகளே..

கண்டுக்னதுக்கும் சிரிச்சிக்னதுக்கும் ஒரு தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

லாங்குவேஜ் பிராப்ளமே இல்லாத படமெல்லாம் கூட பார்த்திருப்பீங்களே!

:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அண்ணாத்தே அரைபிளேடு,
அது எப்பிடி அண்ணாத்தே கண்ணுல தண்ணி வர்ற மாதிரி சிரிக்க வக்கிற மேட்டரை பிலிம் ஒன்னியும் காட்டாம ஒரே குஜால்ஸா சொல்லிக்கீறே? சூப்பர் அண்ணாத்தே.

இதை வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல எனமோ ரெகமெண்டேசனாமே அதுல சேக்கலாமான்னு கேக்க சொல்றாங்கபா...நீ இன்னா சொல்லிக்கிற அண்ணாத்தே?-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் சிறில்,

அப்பப்ப வந்து கண்டுக்கங்க...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆவி அண்ணாச்சி வாங்க

//லாங்குவேஜ் பிராப்ளமே இல்லாத படமெல்லாம் கூட பார்த்திருப்பீங்களே!//

எந்த படம் சொல்லிக்கிறீங்க, சார்லி சாப்ளின் ஆக்ட் குடுப்பாரே அதுவா..

ஆங்... பிரிஞ்சிடுச்சி.. அந்த படங்கள சொல்றீங்களா.. ஹி.. ஹி...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கைப்புள்ள...

நான் உங்க ரசிகன்தான்..

//இதை வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல எனமோ ரெகமெண்டேசனாமே அதுல சேக்கலாமான்னு கேக்க சொல்றாங்கபா...நீ இன்னா சொல்லிக்கிற அண்ணாத்தே? //

உங்களுக்கு இல்லாததா தல, தாராளமா போடுங்க...
ரொம்ப தாங்ஸூ.....

பேசிக்கலா பாத்தா நானும் ஒரு வருத்தப்படாத வாலிபன்தான்.. ஹி.. ஹி..

உங்க சங்கத்துல உறுப்பினர் கார்டு இருந்தா குட்து வுடுங்களேன்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆகா நீங்களும் நம்ம கேசுதானா...இந்த எழவு புடிச்ச ஹிந்தில இந்த் மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் படிக்கவே ஆரம்பிக்கல... :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்ம எல்லாம் நம்ம தல ஸ்டைலு தான்...
இங்கவா அப்படினு சொல்றதுக்கு ஹிந்தில என்ன...
இதர் ஆவோ...
அங்க போனு சொல்றதுக்கு?
அங்க போய் நின்னுட்டு இதர் ஆவோ சொன்னா போச்சு :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//உங்களுக்கு இல்லாததா தல, தாராளமா போடுங்க...
ரொம்ப தாங்ஸூ.....

பேசிக்கலா பாத்தா நானும் ஒரு வருத்தப்படாத வாலிபன்தான்.. ஹி.. ஹி..

உங்க சங்கத்துல உறுப்பினர் கார்டு இருந்தா குட்து வுடுங்களேன்...//

அப்படியா. ரொம்ப சந்தோஷம். தாராளமா வந்து சேந்துக்கங்க.

இந்தப் பதிவை சங்கம் பரிந்துரையில சேத்துக்குறேன் அண்த்த.

http://vavaasangam.blogspot.com-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்யாம்.. வெல்கம்...

//இங்கவா அப்படினு சொல்றதுக்கு ஹிந்தில என்ன...
இதர் ஆவோ...
அங்க போனு சொல்றதுக்கு?
அங்க போய் நின்னுட்டு இதர் ஆவோ சொன்னா போச்சு :-)
//


இன்னா, நாம மத்யமா வரிக்கும் மேல்படிப்பு (!!!) படிச்சதால
"உதர் ஜாவோ"
அப்பிடின்னு உதார் உட்ற அளவுக்கு தெரியும்...

:))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

கைப்புள்ள said...
//அப்படியா. ரொம்ப சந்தோஷம். தாராளமா வந்து சேந்துக்கங்க.
இந்தப் பதிவை சங்கம் பரிந்துரையில சேத்துக்குறேன் அண்த்த.//


கைப்பு தலீவா..

ரொம்ப தாங்ஸ் தலீவா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆமாம் பெரிய ஹிந்தி.
வீட்டுல எவ்வளோவோ சொல்லி சேர்த்து விட்டும், தமிழ் வாழ்கன்னு சொல்லி பாதியில் நின்னாச்சு. ஆமாம் பிராத்மிக் எப்படி தேறினீங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அகில் பூங்குன்றன் தலீவா...

வாங்க.. வாங்க...

//ஆமாம் பிராத்மிக் எப்படி தேறினீங்க.


அதுதான் நான் ஸ்ட்ரெயிட் பார்வர்டு... ஸ்ட்ரெயிட்டா டேபிள் மேலயே வச்சு எயுதுவேன்னு சொன்னனே.. கண்டுக்கலியா நீங்க..

பிராத்மிக்.. பிஸ்கோத்து.. ஒன் வர்டு ஆன்சரு..

மத்யமால பக்கம் பக்கமா எயுத சொல்றாங்கப்பா.. மனுசன் எயுதுவானா அத...-------------------------------------------------------------------------------------------------------------
said...

யப்பா சாமிங்களா, நான் இந்த கொசுவர்த்தி எல்லாம் சுத்த ஆரம்பிச்சேன்னா, உங்களால மூச்சு கூட விட முடியாது. அவ்வளவு புகை வரும். ஆமா சொல்லிட்டேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு ரொம்ப நல்லாத்தான் ஹிந்தியை கீசி இருக்கே :))..-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவச கொத்தனார் அவர்களே.. வருக.. வருக..

//யப்பா சாமிங்களா, நான் இந்த கொசுவர்த்தி எல்லாம் சுத்த ஆரம்பிச்சேன்னா, உங்களால மூச்சு கூட விட முடியாது. அவ்வளவு புகை வரும். ஆமா சொல்லிட்டேன். //

இன்னா கொத்ஸூ தலீவா, இது நல்ல விஷயம்தான.. நல்லாவே சுத்தி நாலு கதய எட்து வுட்றது..

நாங்களும் அங்க வந்து பட்சி வூடு கட்டி அடிப்போம்ல....-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தோஷ் தலீவா,

//பிளேடு ரொம்ப நல்லாத்தான் ஹிந்தியை கீசி இருக்கே :))..

நாம எங்க தலீவா இந்திய கீசனோம்..

இந்தி நம்மள புட்சி கீசு கீசுன்னு கீசன கதயதான இங்க எயுதி கீறோம்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

பேரு என்னமோ அரை பிளேடு. ஆனா படத்தில் இருப்பதோ ரெண்டு பிளேடு. அது ஏன்?-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்ம நண்பர் ஒருத்தர் ப்போன் பண்ணி ஓட்டல்ல பாஞ்ச் புரோட்டா பார்சல் வாங்கி வைய்யின்னு சொன்னாரு.

நானும் புத்திசாலித்தனமா பதினஞ்சி புரோட்டா பார்சல் வாங்கி வெச்சேன்.

வந்து பாத்துட்டு எவண்டா பதினஞ்சி புரோட்டா திங்கிறது?

நான் இந்தியில பாஞ்ச் சொன்னா நீ தமிழ்ல பதினஞ்சின்னு ஆர்டர் பண்ணுற! இந்தி தெரியாம துபாயில எப்படிதான் குப்ப கொட்ட போறியோன்னு ஏச்சு வேற!-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவசக்கொத்தனார் said...

//பேரு என்னமோ அரை பிளேடு. ஆனா படத்தில் இருப்பதோ ரெண்டு பிளேடு. அது ஏன்? //

இந்த கேள்விய நம்ப கிட்ட நெறய பேரு கேட்டுட்டாங்கோ..

எல்லாத்துக்கும் அவங்க டவுட்ட கிளியர் பண்ண வேண்டிய நேரம் வந்துட்சி...

அது வந்துப்பா..
நம்ப தொழில் முறை குரு நாதரோட ஃபேமிலி போட்டோ...

நமக்கு குருபக்தி ஜாஸ்திப்பா..
அதனாலதான் அவரு போட்டோவ போட்டுக்னேன்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

// நம்ப தொழில் முறை குரு நாதரோட ஃபேமிலி போட்டோ...

நமக்கு குருபக்தி ஜாஸ்திப்பா..
அதனாலதான் அவரு போட்டோவ போட்டுக்னேன்... //

பிளேடு போட்டு பிளேடு போட்டு மொக்கையாயிடிச்சுன்னா அவ்சரத்துக்கு ஒதவ ஸ்பேர்/backup பிளேடுன்னு நான் நென்ச்சிகினு இர்ந்தேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தம்பி..

//நான் இந்தியில பாஞ்ச் சொன்னா நீ தமிழ்ல பதினஞ்சின்னு ஆர்டர் பண்ணுற! இந்தி தெரியாம துபாயில எப்படிதான் குப்ப கொட்ட போறியோன்னு ஏச்சு வேற! //

அதல்லாம் ஈஜியா கத்துக்கலாம்.. கவலப்படாதீங்க

நான் பத்து வரிக்கும் இந்தி நம்பர் அசால்டா எண்ணுவேன்..

ஆமா பதினஞ்சிக்கு இந்தில என்னா.. பந்தரஹ்.. அப்பிடின்னு நினக்கிறன்..
மத்யமா நின்னு விளையாடுது போங்க...
ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், ச்சே, சாத், ஆட், நெள, தஸ், கியாரஹ், பாரஹ், தேரஹ், செளதஹ், பந்தரஹ்...

அதுக்கு மேல நம்பளுக்கும் தெரியாது... ஹி.. ஹி....-------------------------------------------------------------------------------------------------------------
said...

//"ஏக் எக்சாம் ஹால் மே ஏக் அரை பிளேடு எக்சாம் லிக்தா தா"...
//
பிளேடு, எக்ஸாம் எழுதினவங்க தான் இப்படிச் சொல்லிக்கணும். நீங்க தான் சும்மா வேடிக்கை தானே பார்த்துகிட்டிருந்தீங்க..

ஏக் எக்சாம் ஹால் மே ஏக் அர்பிளேடு தேக்தா தா.. எப்படி?

அப்பால, உன்னோட குரு பக்தியப் பார்த்து எனக்கு கண்ல தண்ணியே வந்திட்டது நைனா..ரொம்ப பீலிங்க்ஸா பூட்சுப்பா.. !!-------------------------------------------------------------------------------------------------------------
said...

லதா வாங்க...

//பிளேடு போட்டு பிளேடு போட்டு மொக்கையாயிடிச்சுன்னா அவ்சரத்துக்கு ஒதவ ஸ்பேர்/backup பிளேடுன்னு நான் நென்ச்சிகினு இர்ந்தேன்.//

குருநாதர ஸ்பேரு ன்னு சொல்றதா..
கன்னத்துல போட்டுக்கிறேன் குரு...

அவரு மெயினுங்க..
அவரு கூட கம்பேரு பண்ணா நான் மய்யாலுமே அரை பிளேடுதான்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க பொன்ஸ்..
நல்லா கீறீங்களா..
உங்க ஆன எல்லாம் செளக்கியமா கீதா...

//ஏக் எக்சாம் ஹால் மே ஏக் அர்பிளேடு தேக்தா தா.. எப்படி?//

கரீக்டா சொன்னீங்கோ.. புட்சிக்கோங்கோ ஒரு இந்தி மாமணி அவார்டு..

//அப்பால, உன்னோட குரு பக்தியப் பார்த்து எனக்கு கண்ல தண்ணியே வந்திட்டது நைனா..ரொம்ப பீலிங்க்ஸா பூட்சுப்பா.. !!

ஆமாங்க..
அவரு பேர எடுத்தாலே நமக்கு ஒரு அடக்கம் வந்துடுங்க..
நாம ஏகலீவன் மாதிரி..
அவரா கத்து குட்தது கம்மி தான்னாலும்..
பாத்தே கத்துக்குனது ஜாஸ்தி...-------------------------------------------------------------------------------------------------------------
said...

லைட்டர்சென்ஸ் காமடி..

தேன்கூடு போட்டிக்கான விமர்சனங்கள் காண:

http://criticseye.blogspot.com/2006/12/2006.html-------------------------------------------------------------------------------------------------------------
said...

மூன்றாவது கண் அவரு பேஜ்ல இன்னா சொல்லி கீறார்னா...


குறும்பாய் எழுதச் சொன்னாலும் சொன்னாங்க, அரை பிளேடு செம ஷார்ப்பா ஒரு பிளேடு போட்டிருக்கார். நல்ல காமெடி போங்க.

ஹிந்தி பரீட்சை எழுதப் போய், 'ச்சீ..ச்சீ..இந்தப் பழம் புளிக்கும்'னு ஹிந்திக்கு 'பைபை' சொன்னதை, சென்னைச் செந்தமிழிலில் கதைத்திருக்கிறார்.

"சூப்பர் வைசரு அட்டய வாங்கி புரட்டி பொரட்டி பாத்து முயிக்கிறாரு. அவருக்கு இந்தி தெரியாது போல"

ஹிந்தி ஒயிக... - ஒரு லைட்டர்சென்ஸ் காமெடி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

மூன்றாவது கண்

விமர்சனத்துக்கு ஒரு தாங்ஸ்பா..

தலைப்ப அப்பிடியே உங்க பதிவுக்கும் வெச்சி கீறீங்களா, இன்னாடாது கமெண்டே இல்லாமா கூட நம்ப பதிவு திரட்டிக்னு கீதேன்னு பார்த்தா உங்க பேரு போட்டு கீது..

அப்பிடியே விசிட்டு அடிச்சு பாத்தா நம்ப ஹிந்தி எதிர்ப்ப (!!!) பாராட்டி நீங்க எயுதிக்கிறத பாத்து புல்லரிச்சி போயிட்டேன்...

உங்க இந்த விமர்சனத்த நம்ப பதிவுல (ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு..) தூக்கிக்னு போய் போட்டுக்னன்.

இன்னொரு தபா தாங்ஸ் வச்சிக்கிறேன்

பொன்ஸ் உங்களுக்கும் தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

எப்பா... பதிவெல்லாம் சூப்பர்ரா கீதுப்பா... கல்குறே போ.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நான் துபைக்கு வந்த புதிதில் 'ஹிந்தி தெரியுமா?' என்று கேட்டவரிடம் ஹிந்தி பாஸ் செய்த மிதப்பில், 'தோடா தோடா' என்று சொல்லி வைக்க 'குச் தக்லீப் ஹை' என்று அவர் கேட்டதும் நான் பேந்த பேந்த விழித்ததும் ஒரே நகைப்பு.

முதலில் ஹிந்தி சேனல் மற்றும் படம் பாருங்கள். அப்புறம் தப்பும் தவறுமாக இருந்தாலும் பேசப்பழகினால் தானாய் வரும். 'செந்தமிழும் நாப் பழக்கம்' என்பார்கள். செந்தமிழ் மட்டுமல்ல எல்லா மொழிகளுமே நாப் பழக்கத்தில் நாளடைவில் வரும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அபி (அரை பிளேடு),

ஹிந்தி பரீட்சை எல்லாம் சர்டிபிகேட்டுக்கு மட்டும் தான். ஒரு ஹிந்தி பிரதேசத்தில அதை வைத்துக்கொண்டு பேசினா எல்லாம் சூப்பரா சிரிப்பாங்க. இன்னும் ஒரு பிரச்சனை - நம்மை யாராவது கெட்ட வார்த்தையில் திட்டினா புரியாது - ஹிந்தி பரீட்சையில அதெல்லாம் கேட்க மாட்டாங்களே! நானும் அப்படி இப்படின்னு பிரவெஷிகா வரைக்கும் முடிச்சுட்டேன் - இருந்தாலும், சண்டீகர், டில்லி, காசியாபாத் - இங்கெல்லாம் போய் இருந்த பிறகுதான் ஹிந்தின்னா என்னன்னு புரிஞ்சுது.

ரங்கா-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க லொடுக்கு அவர்களே
//எப்பா... பதிவெல்லாம் சூப்பர்ரா கீதுப்பா... கல்குறே போ. //

தாங்ஸ்பா..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சுல்தான் சாகேப்..

நீங்க சொன்னா மாதிரி தோடா தோடா தெரிஞ்சிச்சுனா தக்லீப்தான்...

கரீக்டா சொன்னீங்க. எல்லாமே பயக்கத்துல தானா வந்துக்றதுதான..

தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ரங்கா,

கரீக்டுதான்.. எயுத்து மொயி வேற.. பேச்சு மொயி வேற.. நம்ம தமிழ் மாதிரியேதான் போல கீது.. நீங்க சொல்லிக்ன மாறி பாசை தெரியனும்னா நாலு பேருகிட்ட பயகனும் பேசனும்..

சும்மாவா சொல்லிக்கிறாங்கோ பெரியவங்க ஏட்டு சுரக்கா கறிக்கு உதாவாதுன்னு...-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட போங்க பிளேடு..
நம்ம தலீவரு இன்னா சொல்லீகினாறு 'பாபா'வுல..அத்த ஒத்த வார்த்தைல எயுதிமுட்சி காயிதத்த வாத்தியாண்ட குடுத்துட்டு மேட்னிசோ போயிருக்கலாம். அதென்ன ஒத்த வார்த்தன்னு தான்னே கேக்குறே "கதம் கதம்" தான் வேறென்ன!-------------------------------------------------------------------------------------------------------------
said...

கவிப்பிரியன் வாங்க...

//நம்ம தலீவரு இன்னா சொல்லீகினாறு 'பாபா'வுல..அத்த ஒத்த வார்த்தைல எயுதிமுட்சி காயிதத்த வாத்தியாண்ட குடுத்துட்டு மேட்னிசோ போயிருக்கலாம். அதென்ன ஒத்த வார்த்தன்னு தான்னே கேக்குறே "கதம் கதம்" தான் வேறென்ன!//


நான் முதல்லியே பேப்பர மடிச்சி அந்த வாத்தியார கிட்ட குட்தா.

இது எக்சாம் ஹாலு முத ஒரு மணி நேரத்துக்கு நீ வெளிய போவ கூடாதுன்னுட்டாரு..

இது இன்னாபா சட்ட சபையா இன்னா நினச்ச நேரத்துக்கு வெளிநடப்பு செய்றதுக்கு..

ஒரு மணிநேரம் பேந்த பேந்த உட்காந்து இந்த கூத்தல்லாம் பாத்துட்டுதான் வெளிய வந்தேன்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

அன்புள்ள அரைபிளேடு

தங்கள் பதிவு நகைச்சுவையாக உள்ளது.

தங்கள் பதிவில் பின்னூட்டிய பலரும், தாங்கள் உட்பட இந்தி படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். நானும் உடன்படுகிறேன்.

ஆனால் அம்மா ஆடு படிக்க வேண்டிய காலத்திலேயே இந்தி படிக்க துவங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை..

குழந்தைகளிடம் தமிழே முழுதாய் துவங்காத நிலையில் இந்தியை துவங்குவதால் குழந்தைகள் தமிழிலும் இந்தியிலும் அரை குறைகளாக போய் விடும் ஆபத்து இருக்கிறது.


தமிழகத்தில் இன்றும் துவக்க கல்வியும் நடுநிலை கல்வியும் எட்டாத நிலையில் இருக்கும் நிலையில் அரசுப்பள்ளிகளில் அரசே இந்தியை திணிக்க வேண்டும் என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று..

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்க வயது ஒரு தடையில்லை..

நான் தமிழ் மீடியம். ஆங்கிலம் மூன்றாவது வகுப்பில்தான் துவங்கினேன்.
இந்தியை எட்டாம் வகுப்பில் பள்ளிக்கு வெளியில் துவங்கினேன். பிராத்மிக் முதல் பிரவீன் வரை நான்கு ஆண்டுகள் படிப்பு. இந்தியில் கவிதைகள் புரியுமளவுக்கு..

ஓரளவுக்கு இந்தியையும் தமிழையும் வேறுபடுத்தி பார்க்கும் வயதில் இந்தி படித்ததால் எனது தமிழ் எந்த விதத்திலும் தேயவில்லை.

பிஞ்சுகளிடையே தமிழுக்கு பதில் இந்தி என்பது எனக்கு எவ்விதத்திலும் ஒத்துக் கொள்ளக் கூடியது இல்லை.

நன்றி
सात्वीगन‌ / சாத்வீகன்-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு அவர்களுக்கு

தங்கள் பதிவும், எனது பின்னூட்டமும் இங்கு சுட்டப்பட்டுள்ளது

பள்ளிகளில் இந்தி தேவையான ஒன்றா..

நன்றி-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்ம ஆள் (ஒரு ஹிந்திக்காரரிடம்) : சார் தமிழ் தெரிமா?.

(ஆத்திரமடைந்த) ஹிந்திக்காரர் : ம்ம்ம்ம்ம்ம்ம் பேன்...சூ... ஹிந்தி தேரா பாப்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னமா டபாய்க்கிறீங்க, கலக்குங்க!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பிராத்மிக், மத்யமா எல்லாம் படிச்சா ஹிந்தி படம் புரியாது! ஹிந்தி பொண்ணுங்ககிட்ட (ஏட்டு ஹிந்தையை வெச்சி) கடலை போடவும் முடியாது!
//

ஏட்டு ஹிந்தி கடலைக்குதவாது.
(எப்படி பய மொழி)

ஒரு சந்தேகம், அரை பிளேடுன்னு பேர் வச்சிட்டு, படத்தில ரெண்டு பிளேடு வச்சிருக்கீங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸயீத்..

ஜோக்கு நல்லா கீது..
நம்மாளு தெரிமா ன்னு கேட்டது இந்தில தேரி மா அப்படின்னு நினச்சுட்டாங்கன்றீங்க..

அதுக்குதான் லாங்குவேஜி பேச சொல்லோ அதுவும் தெரியாத ஆளு கிட்ட தெரியாத லாங்குவேஜி பேச சொல்லோ பாத்து பேசணும்கிறது.. பாருங்க இந்திகாரரு கெட்டவார்த்தைன்னு நினச்சி பதிலுக்கு திட்டிட்டாரு..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க மாஹிர்..

வந்து கண்டுக்னதுக்கு தாங்ஸ். அப்பப்போ வந்து கண்டுக்கங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ப்ளேடு அண்ணாதே கடலைக்கு உண்டோ வறுக்கும் மொழி ?? அப்புறம் எப்படி சமாளிக்கறீங்க அண்ணாதே ??

நீங்க மத்யமா பெயில் ஆனா நேனு ப்ரமிக்கே பெயிலு ;)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜொள்ளுப்பாண்டி

பொண்ணுங்களுக்ககு தெரியும்னு சொல்லற பசங்களவிட தெரியாதுன்னு சொல்ற பசங்களதான் ரொம்ப புடிக்கும்கிறது தெரியாதா....

எனக்கு இந்தி தெரியாது.. நீ சொல்லி தர்றியான்னு கேட்டா எக்ஸ்ட்ராவா வறுக்கலாம்பா....

இந்த லாஜிக் படி மத்யமா பெயிலான என்ன விட பிராத்மிக்கே பெயிலாயின நீங்கோதான் எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன் வச்சிக்னு இருக்கீங்கோ... :))


நம்ப பேஜை கண்டுக்னதுக்கு தாங்ஸ்-------------------------------------------------------------------------------------------------------------
said...

//என்ன அப்பவே ஒயுங்கா படிச்சு இருந்தா, ஹிந்தி படம் பாத்தா பிரியும்..
ஏதாவது ஹிந்தி பொண்ணுகிட்ட கடல போட முடியும்... //

தங்கத் தமிழச்சிகளின் மனம் நோகும் இந்த வார்த்தைகளை பதிவில் இருந்து நீக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் :)))

நமக்கு ப்ராத்மிக் முடிக்கிறதுக்கு உள்ள தாவு தீந்து போச்சு... அப்புறம் அந்த ட்யூசன் பக்கம் வெயிலுக்குக் கூட ஒதுங்குனது இல்ல!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அருட்பெருங்கோ...

நீங்களும் நம்ப செட்டா...

தங்கத் தமிழச்சிகளின் மனசு நோகற மாதிரி நான் எதுவும் சொல்லலீங்கோ..

தமிழ்ல ஒரு பயமொயி கீது... ஆல இல்லாத ஊருல இலுப்ப பூ சக்கரன்னு...

அந்த மாறி தமிழு பொண்ணுங்க இல்லாத ஊருல, இருக்கிற இந்தி பொண்ணுங்கள வச்சுதான வறுக்க முடியும்... அதுக்குதாம்பா இந்தி.

:))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பர் தலைவா!! :D
i really enjoyed reading it!! :)

நானும் இது மாதிரி அராஜகம் எல்லாம் ப்ராத்மிக் ,மத்யமா எக்சாம்ல எல்லம் பாத்திருக்கேன்!! :D

Rock on!! :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் சீ.வீ.ஆரு. அவருகளே

/****ப்ராத்மிக் ,மத்யமா எக்சாம்ல எல்லம் பாத்திருக்கேன்!! *****/

பாத்து மட்டுந்தான் இருக்கீங்களா..

நாம பண்ணியே இருக்கம்ல.. :))))

வந்து கண்டுக்னதுக்கு தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயி போச்சுங்க. நம்ம ஆபீஸ்ல தமிழ் காரன் வேற எவனும் இல்லையா எவனுக்கும் புரிய வெக்க கூட முடியல. நா மட்டும் தனியா சிரிச்சிகிட்டே இருக்கேன்...இன்னமும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,

ஷோக்கா இந்த(தி)ப் பிராச்சார ஓப்பன் புக் எக்ஸாம் ஸ்டைல ஸ்டைலாச் சொல்லியிருகீங்க!

நான்கூட ப்ரவேஸிகா வரைக்கும் ஓபன் புக் முறையில ப்ரவேசம் பண்ணியிருக்கேன். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் படிச்சும்,பார்த்துப் பார்த்து எழுதியும் எனக்குப் பெரிய யோகம் வரலை ஆனா எனக்கு இந்தி சொல்லித்தந்த சிவயோகம் வாத்தியாருக்குச் சரியான யோகம் சும்மா ஷிப்டு போட்டு இந்தி டியூஷன் எடுத்தாரு!

அரைகுறை இந்தியை வச்சு டெல்லியில பஸ்ஸுல போர்டைப் படிக்கிறேன் பேர்வழின்னு எழுத்துக் கூட்டுமுன்பே பஸ்ஸெல்லாம் கெளம்பிப் பறந்துடும்!

மும்பாயில சிவயோகம் சாரைத் திட்டினேன் பஸ்ஸுல எழுதுனதைப் படிக்கமுடியலைன்னு... அப்புறம்தான் தெரிஞ்சுது அது ஹிந்தியே கிடையாதுன்னு :-))

குவைத்துக்கு வந்து வலிய தமிழ்பேசாத மங்களூர்க்காரங்களோட 2 வருஷம் தங்கியதில் கொஞ்சம் ஹிந்தியனா இருக்கேன்! பொஸ்தகம் படிச்சா ரெண்டுநாளைக்கப்புறமா கொஞ்சமாப் புரியுது:-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் மதுசூதனன் அவர்களே..

அப்பப்ப வந்து கண்டுகங்க :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ik exam may half-blade raghu thatha //
சரியாப்போச்சு போங்க... நான் இதப்படிச்சிட்டு ஏதோ ரகுவோட தாத்தாவும் உங்க கூட எக்ஸாம் ஹாலுக்கு வந்தார்ன்னு எழுதிருக்கறதா நினைச்சிட்டேன்.... :-)

-Valavan
PUNE-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஹரிஹரன்

நமக்கும் இந்திகாரங்க கூட சேர்ந்து இப்ப இந்தி தோடா தோடா மாலூம் ஆவுது.

மும்பையில பஸ்ல பேரு படிச்ச அனுபவம் நமக்கும் உண்டுங்கோ..

அது மராத்தி... ஆனா லிபி அதாவது எயுத்து இந்திக்கு யூஸ் பண்ற அதே தேவநாகரிதான். அதனால மராட்டிய இந்தி மாறியே எயுத்து கூட்டி படிக்க முடியும், ஆனா இன்னா ஒண்ணு சுத்தமா பிரியாது.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வளவன்.

நீங்க நினச்சது கூட ஒரு வகையில கரீட்டுதான்.

என் ஃபிரண்டு ரகுவோட தாத்தா கூட எக்சாம் எயுதினாரு.

இந்தி எக்சாமுக்கு நோ ஏஜி லிமிட், யூ நோ.-------------------------------------------------------------------------------------------------------------