Tuesday, November 28, 2006
மாவீரன் அரைபிளேடு
நம்மளுக்கு எவ்ளோ தெகிறியம் கீதுன்றது ஊருக்கே தெரிஞ்சதுப்பா..
நம்ப கிட்ட வாலாட்ட ஒருத்தருக்காவது தெகிறியம் கீதுன்றே..
வெளியே சொல்லிக்காம நமக்கும் உள்ளுக்குள்ள பயம் ஒண்ணு கீது...
எம்மாம் பெரிய ஆளா இருந்தாலும் எல்லார்க்கும் எதுக்காச்சும் பயம் இருக்கும்பா...
நம்பளுக்கு இந்த ஆவி... பாவி... இதுக்கல்லாம் பயம் கிடையாது...
(ஆவி அண்ணாச்சி, அம்மணி கேட்குதா)....
நம்பளுக்கு பயம் எல்லாம் எதுலடான்னா... இந்த கரப்பான் பூச்சி கீதே அதுங்கிட்டதான்....
எம்மாம் பெரிய ஆளு தம்மாம் பூச்சிக்கு பயப்பட்றதா...
இனி நமக்காச்சு இந்த கரப்புக்கு ஆச்சுன்னு ஒரு தபா பொங்கி எயுந்துட்டேன்...
ஹிட் டுன்னு ஒண்ணு கடயில விக்குதே அத வாங்கிக்குனு... கரப்பான் வேட்டைக்கு கிளம்பிட்டேன்...
கரப்பான வேட்டையாடு விளையாடு...
ஒரு செட்டப்பா ரெடியாயாச்சு.... மூஞ்சில ஒரு கர்ச்சீப்பு... நாம கரப்பான் வேட்டைக்கு இல்ல... எல்லா வேட்டைக்கும் இதே கெட்டப்புதான்..
ஆபரேஷன் கரப்பான் ஸ்டார்ட்டு...
தேடு... பிடி... மருந்த அடி...
இன்னாடாது.. நாம சும்மா இருக்க சொல்ல இங்க அங்க பறக்கற கரப்பான் நாம மருந்த கையில எடுத்ததும் இந்த ஆட்டம் காட்டுது..
அவ்ளோ ஈஜியா வுட்ருவோமா என்னா...
மூளய போட்டு திங்க் பண்ணதுல கரப்பான் பூச்சி மேலன்னு இல்ல எங்கல்லாம் கரப்பான் வருமோ அங்கல்லாம் மருந்து அடிக்க வேண்டியது தான்..
பெட் ரூம், சமயல் ரூம், பாத்து ரூம் எல்லாத்துலயும் அடிச்சாச்சி...
சுத்தி வந்து பார்த்தா ரெண்டு கரப்பான் மல்லாந்து கைய கால உதறுது...
ஹா.. ஹா.. எங்கிட்டியேவா... இப்ப பார்த்தியா....
இந்த சக்ஸஸை கொண்டாட வேணா...
ஓப்பன் தி பிரியாணி.... வாங்கிக்குனு வந்து வெச்ச பிரியாணி பொட்டலத்த காலி பண்ணிட்டு கவுந்து படுத்தா...
கனவு... கரப்பான் பூச்சியா தொறத்துது...
எயுந்திருக்க முடியல..
கஷ்டப்பட்டு கண்ண தொறக்கிறேன்..
கண்ணெதிர்க்கோ வெள்ள கோட்டு போட்ட கரப்பான் ஒண்ணு.. சே.. இல்லப்பா இது டாக்டரு...
"மிஸ்ட்ரு அரபிளேடு... நல்ல வேள உங்கள டைமுக்கு இங்க கொண்டாந்தாங்கோ.. பொழச்ச... ஏன் கரப்பான் பூச்சி மருந்து கலந்த பிரியாணி சாப்பிட்டு தற்கொல பண்ணிக்க பாத்த".....
அட பாவிகளா... கரப்பான துரத்தற ஆர்வத்துல ஒரு பாட்டிலு மருந்தயும் வீடு ஃபுல்லா தொளிச்சு... ஆர்வக் கோளாறுல பிரியாணி மேலயும் தொளிச்சு...
அதே பிரியாணிய சாப்புட்டு...
விளக்கமா சொல்லி ஒரு வழியா ரிலீஸ் ஆகி..
வீட்டுக்கு வந்தா...
வாங்க மாவீரரேன்னு வாசல்லேயே நிக்குது கரப்பான் ஒண்ணு...
கரப்பான் போச்சோ இல்லியோ.. கரப்பானோட பயம் நமக்கு பூட்சி.. இப்பல்லாம் கரப்பான பாத்தா நம்ம தோஸ்த்த பாக்கற ஃபீலிங்குதான்...
மாவீரர் கரப்பான் வாயுக....
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அரை பிளேடு என் ப்ளாக்கிற்க்கு வருகை தந்தமைக்கு நன்றி,
தப்பா நினைச்சுக்காதீங்க, சென்னை தமிழ் கத்துக்கிட்டு வந்து உங்கள் பதிவை இன்னும் ஒரு முறை படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
:)
மாவீரர் அரை பிளேடு வாழ்க!
அரை பிளேடு தலைமை ரசிகர் மன்றம்,
கோவை கிளை
-------------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் சிபி @15516963 said...
//மாவீரர் அரை பிளேடு வாழ்க!
அரை பிளேடு தலைமை ரசிகர் மன்றம்,
கோவை கிளை
நாமக்கல் சிபி நைனா..
இந்த அரைபிளேடு எல்லா காலத்துலயும் தொண்டந்தான்..
உங்க அன்புக்கு ரொம்ப தாங்ஸ்....
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment