Wednesday, November 29, 2006

குவார்ட்டர் இல்லாமல் நான் இல்லை

அமெரிக்கா நமக்கு புச்சுப்பா...

இங்க இறங்கனதும் நமக்கு ஒண்ணுமே பிரியலபா..

நாம இங்க வந்து இறங்கனதும்.. நம்ம ஃபிரண்ட கால் பண்ண வேண்டி இருந்திச்சி..

இங்க கீற பப்ளிக் போன பாத்தா அதுல 50 செண்ட் காயின் வேணும்னு எயுதி கீது..

நாம ரொம்ப இன்டலிஜன்ட இல்ல... 1 டாலருக்கு 100 செண்ட் அப்பிடின்னு நமக்கு தெரியாதா இன்னா...

நம்ம கிட்ட கீறதோ நோட்டுங்கதான்... சில்லற கூட 1 டாலர் 5 டாலர் நோட்டுதான்..

50 செண்ட் காயினுக்கு எங்க போறது...

அங்க இருந்த கடயில போயி 1 டாலர் நோட்ட நீட்டி இரண்டு 50 செண்ட் காயின் வேணும்னு கேட்டா.. 50 செண்ட் காயினே இல்லன்றான்...

சரி இந்த கடயிலதான் இல்லண்ணு இன்னொரு கடயில கேட்டா அவனும் இல்லன்றான்...

சரி போன்ல பார்த்தா வெளிநாட்டுக்கு பேச 1 டாலர் போட்டுகிறான்.
சரின்னு கடைக்கு போயி 1 டாலர் நோட்டு காகிதத்த கொடுத்து 1 டாலர் காயின வாங்கிக்குனு வந்துக்னேன்.

அத்த போட்டா 1 டாலர் காயினு மெசினுக்குள்ளாறயே போக மாட்டேங்குது.. நம்ம ஊருல பெரிய ஒரு ரூபா சின்ன ஒரு ரூபா இருக்குமே. அந்த மாறி பெரிய 1 டாலர் காயின கொட்துட்டானா இன்னா...

எவனயாவது கேட்கலாம்னாலும் இவங்க இங்லீஷ் நமக்கு பிரிய மாட்டேங்குது..

அரை மணி நேர அவஸ்தைக்கு பின்னால நம்ம ஊரு ஆளு மாறி ஒருத்தன பார்த்தனா... அப்பாடா சரின்னு ஓடி புடிச்சி அவன கேட்டா.. க்யான்னு திருப்பி கேக்கறான்..

சரி உடு... நம்ப இந்தியா காரனா இருந்தா போதும்... நம்ப இண்டியன் இங்லீஷ் பேசுனா போதும்னு, அவன கேட்டேன்...

அவன் நம்ப உலக மகா டவுட்ட கிளியர் பண்ணான். புண்யவான்.
இங்க 50 செண்ட் காயின்னு ஒண்ணு கிடையவே கிடையாது...
அமெரிக்கால குவார்ட்டருன்னா 25 செண்ட்.

மெசினு 50 செண்ட் கேட்டா இரண்டு குவார்ட்டரு போடனும்னு சொல்லி 1 டாலருக்கு நாலு குவார்ட்டரு குடுத்ததுக்கப்புறம்.. அந்த குவார்ட்டற போட்டு போன பேசி.. போன உசிரு திரும்பி வந்ததுடா சாமி...

இதனால இன்னா சொல்லிக்கிறன்னா, அமெரிக்கால போன்ல இருந்து, துணி தோய்க்கற மெசின்ல இருந்து எல்லாத்துக்கும் குவார்ட்டரு தேவப்படுது... குவார்ட்டரு உட்டாதான் எல்லாமே ஒர்க் ஆகுது...

அதனாலதான் சொல்லிக்கிறேன்... குவார்ட்டரு இல்லாம நான் இல்லை.

10 comments:

பொன்ஸ்~~Poorna said...

//குவார்ட்டரு இல்லாம நான் இல்லை.//
அரைபிளேடு, இதைக் கேட்டு எனக்கும் பயங்கர சிரிப்பு.. முதல் நாள் நானும் இதே மாதிரி சிரி சிரின்னு சிரிச்சிகிட்டிருந்தேன் :)))

-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு said...

தாங்ஸ் பொன்ஸ்

உங்க அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி பட்சேன்... தோடா நம்மள மாதிரியே இங்கயும் ஒரு அப்பாவி அப்படின்னு நினச்சுக்னேன்... நமக்கு கிட்டதட்ட அதே மாதிரி கததான்... இன்னா இந்த குவார்ட்டரு கத படா ஜோக்கா இருக்க சொல்ல.. அத மட்டும் இங்க எயுதிக்னேன்..

-------------------------------------------------------------------------------------------------------------
Anonymous said...

arai ?
i can see 2 blades!!!

sirichu tummy wali thaan..

-------------------------------------------------------------------------------------------------------------
Adiya said...

Mudhan Mudhali parthiean siripu vanthey.. ena arai blade. kalkura.

-------------------------------------------------------------------------------------------------------------
Anonymous said...

machi....eppadi emathitiye machi...asaiva sapadu poduvenu partha saivama kalakitiye

machi...pittsburgh pakkama vanthena namaku oru maila thatti vudu.....unmaiyana quartera nan katuren.

eppadiku
kudikara kuppan

-------------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் சிபி said...

:))

நல்ல அனுபவமய்யா உம்மோடது!

(குவார்ட்டர் முக்கியமானதுதான்)

-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு said...

Wyvern... Welcome

அந்த குவார்ட்டர நாம பாக்கமலா...

அது நம்ம குல தெய்வமில்ல...

-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு said...

நாமக்கல் சிபி தல,

குவார்ட்டரு ரொம்ப ரொம்ப முக்யம்..... :)

-------------------------------------------------------------------------------------------------------------
லதா said...

இந்தாபா அரப்ளேடு, இந்த ஆர்மி, நேவி, ஏர்ஃபோர்ஸ்ல சேர்ந்தால் குயிக்கா குவார்ட்டர்ஸ் குடுப்பாங்கன்னு சொல்வாங்களே அது இன்னாதுபா ?

-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு said...

லதா வெல்கம்

நீங்க சொல்றது கரீக்டு..
மிலிட்டரில சேர்ந்தா
குடியிருக்க குவார்டர்ஸும்
குடிக்க குவார்ட்டரும் தருவாங்க...

நம்ம குவார்ட்டரே வேற.... டப்பு.. துட்டு...

-------------------------------------------------------------------------------------------------------------