Wednesday, November 22, 2006

எப்பிடிங்கள்ள இருந்து தப்பிக்கறது எப்பிடி...

நாட்ல இன்னா நடக்குதுன்னா நைனா, யாராவது புச்சா எதாவது பலகாரம் செஞ்சாங்கன்னு இல்ல கண்டு புட்சாங்கண்ணு வெச்சிக்கோ அத சாப்டு முடிச்ச கையோட அத எப்படி செய்யிறதுன்னு குமுதம் சினேகிதிக்கோ, இல்ல அவள் விகடனுக்கோ எயிதி வுடுவாங்கோ..

டெக்னாலஜி அட்வான்ஸா பூட்டதுனால இப்பல்லாம் இன்டர்நட்டுல பேஜு போட்டு எயுதிக்கிறாங்கப்பா..
இன்னா இன்னா மேட்டரு நடக்குதுப்பா...ஒருத்தரு சுடத்தண்ணி வெக்கோ கத்தி கொட்கறாரு..
ஒருத்தரு பச்ச தண்ணி வெக்கோ சொல்லி தறாரு..

ஆப்பம், சிக்கனு, ஆம்லெட்டு, அப்பளம், பச்சி, முறுக்கு, தோச, நூடுல்ஸு வெரைட்டி காட்டிட்டாங்கபா...

நம்மளுக்கு தெரிஞ்சது இன்னான்னா இதெல்லாம் பட்சி இத செய்யாம தப்பிக்கிறது எப்படின்றதுதான்...

எங்காளு ஒருத்தரு இப்படிதான் வெந்தய குயம்பு பத்தி புஸ்தகம் பட்சிக்குனு தொடங்குனாருபா...

கட்சிலே என்னா பன்டாருடான்னா வெந்தயம்னு நினச்சு வெள்ளை எள்ளை கொட்டிட்டாரு...

படா பேஜாரா போச்சிப்பா...

அப்பால அது எள்ளுன்னு தெரிஞ்சி போயி...
ஹி.. ஹி.. நான் தெரிஞ்சுதான் வெச்சேன்.. இது வெள்ள எள்ளு குயம்புன்னு ஒப்பேத்திக்கினாருப்பா..

அத்தோட உட்டாரான்னா இல்லப்பா..

வெள்ள எள்ளு குயம்பு வெப்பது எப்படின்னு புஸ்தகத்துக்கு எயுதி போட்டு அதும் பப்ளிஜ் ஆயி... ரெண்டு மாமிங்கோ நல்ல சமய குறிப்புன்னு லட்டர் போட்டு... காமெடிதான் போ..

இதனால இன்னா சொல்ல வரன்னா மகாஜனங்களே..

சமய குறிப்பு எயுதுங்கோ... படிங்கோ... அது உங்க எயுத்துரிம, படிப்புரிம..

ஆனா செஞ்சி பாக்காதீங்கோ.. ஏன்னா தற்கொலயும் கொலயும் சட்ட விரோதம்...

வெல்லம் போட்ட வெள்ள பூண்டு குயம்பு வெப்பது எப்படின்னு பட்சியா.. காமடியா கீதேன்னு சிரிச்சிக்கனும்... அத வுட்டுட்டு நான் இத்த வெச்சிக்கிறேன்னு துன்னு பாத்து சொல்லுன்னு அடுத்தவுங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது..

இன்னா பிரிஞ்சதா...

8 comments:

said...

இதைத்தான் எதிர்பார்த்தேன்.
சூப்பர்.

தங்கள் பதிவு சேர்க்கப்பட்டது.

தமிழ்மணம் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங்க் டெக்னாலஜி-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்றைக்கு நிறையவே சிரிக்க வைத்தனர் தமிழ் மண அன்பர்கள்.

உம்ம பதிவும் அப்படியே. மிக்க நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

புரிஞ்சது நைனா. அதான் 'கூட்டத்துக்கு கொயிந்தா'ன்னு நானும் போட்டுவச்சேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

படா பேஜாரு நைனா! படா ஜோக்கா கீதுப்பா மேட்டரு!
:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

\"ஆனா செஞ்சி பாக்காதீங்கோ.. ஏன்னா தற்கொலயும் கொலயும் சட்ட விரோதம்..."/

ROTFL! asaththal bladu-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு, நான் உங்க ரசிகராயிட்டேங்க. செம சிரிப்பு. இப்ப்டியே காமெடியாவே எழுதிக்கினு இருங்கோ. நெறைய பேரு வருவாங்கோ...பிகில் அட்ச்சி சிரிச்சி ரசிப்பாங்கோ.
:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

சமய குறிப்பு எயுதுங்கோ... படிங்கோ... அது உங்க எயுத்துரிம, படிப்புரிம..

ஆனா செஞ்சி பாக்காதீங்கோ.. ஏன்னா தற்கொலயும் கொலயும் சட்ட விரோதம்...

...
;) ;) ;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//சமய குறிப்பு எயுதுங்கோ... படிங்கோ... அது உங்க எயுத்துரிம, படிப்புரிம..

ஆனா செஞ்சி பாக்காதீங்கோ.. ஏன்னா தற்கொலயும் கொலயும் சட்ட விரோதம்...
//
படா ஷோக்காக் கீது நைனா.. வூட்டமா எதுனா செஞ்சி பார்த்து சாப்பிட்டே ஆகணும்னு பேஜார் பண்ணிக்கீதா? அத்தான் இத்தினி பீலிங்க்ஸா எளுதிக்கீறியா? :))-------------------------------------------------------------------------------------------------------------