Thursday, November 23, 2006

தேங்ஸ் கிவிங் டே - அமெரிக்காவில் அரைபிளேடு...இந்த அமெரிக்காலே நமக்கு ஒண்ணுமே புரியலபா..

புச்சா ஒரு பண்டிகை பேரு சொன்னாங்கப்பா..

தேங்ஸ் கிவிங் டேவாம்..

இன்னாடாது.. தேங்ஸ் சொல்லிக்கிறதுக்கு ஒரு நாளா.. அதுல இன்னா பன்னுவாங்கோ.. எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தாங்ஸ் சொல்லிக்குவாங்களா..

நம்ம தோஸ்த் கிட்ட கேட்டம்பா... அவரு சொன்னாப்ல... இது அமேரிக்கா டிரடிஷனு... இது அவங்க பண்டிகை..

இதுல லீவு வுட்டுக்குனு பேமிலி எல்லாம் ஒண்ணா கூடி வான் கோழிய வறுத்து திம்பாங்க..

இதுக்கு வான்கோழி வறுவல் தினம்னு இன்னொரு பேருகூட கீது அப்படின்னாரு..

இன்னாடா இது... வான்கோழிய வறுத்து திங்க ஒரு பண்டிகை அதுக்கு ஒரு லீவா அப்படின்னு ரோசிக்க சொல்லோ நம்ம தோஸ்துங்க நியூயார்க்ல தேங்ஸ் கிவிங்குக்கு ஒரு பரேடு கீது... வர்றியான்னாங்கோ.. சரி இன்னாதான் கீது பாப்பமோன்னு நானும் ஜாயின் பண்ணிக்கினம்பா..

இந்த பரேடு வருஸா வருஸம் இதே டைம்ல நடக்கும்.. இப்ப எம்பதாவது தடவய நடக்குது.. இன்னிக்கு எப்படியும் முப்பது லட்சம் பேரு இத பாப்பாங்க அப்படின்னு தோஸ்து சொல்ல நானும் தலய ஆட்டிக்கினேம்பா..


ஆனா சும்மா சொல்ல கூடாது நைனா, செம ஜனம்..
வயக்கமா வண்டி போற ரோட்ட சும்மா ரண்டரை மைலுக்கு புட்சி கட்டிட்டு நியூயார்க் போலீஸ் நிக்குது..

எட்டி எட்டி பாத்தாலும் ரோடே தெரில...
இதுக்குள்ள பரேடு ஆரம்பிச்சு பபூன்லாம் வறாங்கோ..
பெரிசா ஒரு பலூன்.. அதுல மேசிஸ் 80வது தேங்க்ஸ் கிவிங்டே பரேடு அப்படின்னு எயுதி கீது..

இம்மாம் சொல்லோ மழ வேற ஆரம்பிச்சிட்சி.. ரொம்ப இல்லேன்னாலும் சவசவன்னு.. இந்த அமேரிக்காகாரங்களுக்கு இன்னா பொறுமபா.. அந்த மழயிலகூட அப்படியே நிக்கிறாங்கோ.. ஒண்ணு ரெண்டு பேரு குட புட்சிக்கினாங்கோ.. அவங்களயே மய ஒண்ணும் பண்ணாதப்போ நம்பள இன்னா பண்ணும் இந்த மய.. நாமெல்லாம் புயல்லய பூந்து புறப்படற ஆளு... இது பிசாத்து மய... நானும் அங்கியே ஸ்டடியா நின்னுக்னேன்...

அடுத்து பெரிய பெரிய பலூனா வருது... அப்புறம் நம்ம சுதந்திர தின ஊர்வலத்துல வருமே அந்த மாதிரி டெகரேட் பண்ண வண்டிங்கோ.. டிஜைன் டிஜைனா டிரஸ் போட்ட புள்ளங்கோ, ஆளுங்கோ..

இதுல நாம பின்னாடி கீறமோ... ஒண்ணுந் தெரில.. எட்டி எட்டி பாக்க வேண்டி இருஞ்சி... கொஞ்ச நேரத்துல கிடச்ச கேப்புல பூந்து மின்னாடி பூட்டேன்... அரைபிளேடா கொக்கா..

நான் மின்னாடி போனதுமே வந்தது பாரு ஒரு பலூன் வான்கோழிய வறுத்து வச்ச மாதிரி... அடுத்து பாண்டு, திரும்பி பொண்ணுங்கோ.. திரும்பி பலூனா வருது..
இன்னா இன்னாமோ பொம்ம பலூனுங்க.. எம்பக்கத்துல ஒரு சின்ன பையன் வேற.. ஒரோர் பொம்ம வரசொல்லயும் கூவிக்கிறான்..
ஒண்ணு வர சொல்ல கார்பீல்டுன்னு கத்தறான்.. அப்பாலிக்கா ஸ்கூபி டூஊஊ.. அம்டி டம்டி.. ஸ்னூப்பி... பிகாச்சு... பொட்டாட்டோ எட்டு.. ஸ்பாஞ்சி பாப்பு.. எல்லா பலூன் பொம்மைக்கும் குரல் கொட்துக்னே வந்தானா.. நம்பளுக்கும் இதான் அது போலன்னு ஏதோ பிரிஞ்ச மாறி இருஞ்சி..

அப்புறம் சொல்லணும்னா நெறய பாண்டு வாத்தியகாரங்களா வராங்கோ.. கொஞ்ச நேரம் நின்னு நல்லா பாண்டு வாசிங்கிறாங்கோ...
அப்புறம் ஸ்கூல்னு பேனர் போட்டு நிறய பொண்ணுங்கோ கையில ஜிகினா தாள வச்சிக்குனு டான்ஸ் போடுதுங்கோ.. இதுக்கு இன்னாமோ பேரு சொன்னாங்கப்பா.. ஆங்... சியர் லீடர்ஸூ...

அப்புறம் நியூயார்க் போலீஸ்காரங்க ஒரு பரேடு உட்டாங்க... துப்பாக்கி வெச்சிக்குனு... குதிர மேலெல்லாம்.. நான் கொஞ்சம் பேக் வாங்கிக்கினேன்... இன்னாதான் சொல்லு நம்மளுக்கு போலீஸ்னா கொஞ்சம்... ஹி.. ஹி...

திரும்பி எல்லாமே திரும்பி திரும்பி வருது... பபூனுங்கோ.. வண்டிங்கோ. பலூனுங்கோ... பாண்டு வாத்தியம்.. சியர் லீடர்ஸு.. டிபரேண்டா டிரஸ்பண்ண ஆளுங்கோ, குயந்தைங்கோ... எல்லாமே நல்லா கீது..

இவ்ளோ மழயிலயும் அவங்கோ போயிக்கினே கீறாங்கோ... இந்த சனங்கோ பாத்து சவுண்டு உட்டுக்கினே கீறாங்கோ... ரொம்ப நல்லா இருஞ்சிப்பா...

அப்பாலிகா வந்தாரு பாரு சாண்டா கிளாஸ் தாத்தா... பெரிய வண்டில.. அவரு வந்தா கிரிஸ்மஸ்ஸெ வந்தா மாரியாமில்ல..

அத்தோட ஷோ முடிஞ்சிகிச்சி... மொத்தமா மூணே மணிநேரந்தான்..

அட அமெரிக்கா மகாசனங்களே... இத்த போய் இத்தினி பெரிசா பேசிக்கினு கீறிங்களே..

நாங்க நடத்துவோம் பாரு எங்க கட்சிங்களுக்கு மாநாடு பரேடு... பத்து மணிநேரம்.. இத விட பத்து மடங்கு ஆளுங்கள நடக்க வுட்டு ஒவ்வொரு அறுவது அடிக்கும் அறுவது அடில கட்அவுட்டு, பேனர்லாம் வச்சி.. அதுக்கு மின்னாடி இதெல்லாம் பிசாத்து... ஒரு தபா வந்து பாருங்கோ... அவ்ளோதான் சொல்லிக்கினேன்..

நீங்க இன்னா சொல்லிக்கிறீங்கோ....

4 comments:

said...

அரை பிளேடு அண்ணாத்தைக்கு முழு நன்றிப்பா!
குளிரிலும் மழையிலும் பொறுமையாக நின்று வர்ணனை வழங்கிய உங்களுக்குச் சிறப்பு நன்றி!!

மெட்ராஸ் தமிழ், நியுயார்க் நகர வீதிகளில் கலக்குதுன்னா சும்மாவா?:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அய்ய.......வெள்ளைக்கார ஊர்லெ எல்லாம் இந்த மாதிர்'சேண்ட்டா பரேடு' வுடறாங்கன்னு
இப்பத்தான் தெரியுமா?

நானும் 20 வருசமா இத்தைப் பார்த்துக்கினுக்கீறேன் தெர்தா?

புட்சிருந்தாச் சரி. அம்புட்டுதேன்.

ஆனா, உங்கூர் ஊர்வலம்?

//நாங்க நடத்துவோம் பாரு எங்க கட்சிங்களுக்கு மாநாடு பரேடு...
பத்து மணிநேரம்.. இத விட பத்து மடங்கு ஆளுங்கள நடக்க
வுட்டு ஒவ்வொரு அறுவது அடிக்கும் அறுவது அடில கட்அவுட்டு,
பேனர்லாம் வச்சி.. அதுக்கு மின்னாடி இதெல்லாம் பிசாத்து... ஒரு
தபா வந்து பாருங்கோ... அவ்ளோதான் சொல்லிக்கினேன்..//

பரேடு நடந்த பத்தாவது நிமிசம்,இது நடந்த அடையாளமெ இல்லாம க்ளீன்
பண்ணிடுறாங்களே, அத்தச் சொல்லாம வுட்டுட்டீரு?-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இன்னாதான் சொல்லு நம்மளுக்கு போலீஸ்னா கொஞ்சம்... ஹி.. ஹி...//

கரீட்டா சொன்ன நைனா :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

\"நாங்க நடத்துவோம் பாரு எங்க கட்சிங்களுக்கு மாநாடு பரேடு... பத்து மணிநேரம்.. இத விட பத்து மடங்கு ஆளுங்கள நடக்க வுட்டு ஒவ்வொரு அறுவது அடிக்கும் அறுவது அடில கட்அவுட்டு, பேனர்லாம் வச்சி.. அதுக்கு மின்னாடி இதெல்லாம் பிசாத்து... ஒரு தபா வந்து பாருங்கோ... அவ்ளோதான் சொல்லிக்கினேன்/"

கரக்ட்டா சொல்லியிருக்கிறீங்க பிளெடு, நம்மூரைப் போல வருமா??[ கஷ்ட பட்டு உங்க சென்னை தமிழ் வாசித்து ரசித்தேன்]-------------------------------------------------------------------------------------------------------------