Friday, December 15, 2006

குவார்ட்டர் கீதங்கள்

குப்புற கவுந்தடிச்சி
நட்சத்திரம் எண்ணுற என்
அண்ணாத்தே....

மூணாவது ரவுணட்லேயே நீ
மூழ்கி போனாது என்னாத்த..

உழைச்சு வந்த காச
டாஸ்மாக்குல நீயும் தொலைக்கிற...

இருபது நிமிஷமா..
இடுப்பு வேட்டி இல்லாம இருக்கிறியே
நியாயமா..
கேட்டா மூஞ்ச வெச்சிக்கிற பாவமா..


இப்படி நீயும் செஞ்சா எப்படி
வீடு ஒண்ணு இருக்குதே
புள்ள குட்டி இருக்குதே
நினைச்சி நீயும் பாத்தியா...


ரம்முன்ற ஜின்னுன்ற
கலர் கலரா சரக்கு காட்டி
கலாய்க்கிற..

முழுநாளும் வேல செஞ்சு
முப்பது ரூபாவ செலவழிச்சு
இத்த வாங்கி நீ குடிச்சு
மொத்தமாதான் நீயழிஞ்சு
பொண்டாட்டி வயிறெரிஞ்சு
இப்பிடி நீ செஞ்சா..
நல்லாதான் இருக்குதா...

அண்ணாத்த
அடுத்த வேள
அடுப்பெரிய
எதுவுமில்ல வூட்டுல..
அந்தகத தெரியுமா..
சாமிக்குதான் அடுக்குமா..

சொல்லுறத சொல்லிட்டன்
சொந்த புத்தி ஒண்ணு
உனக்கிருந்தா
ஒரு தபாவாவது யோசிச்சி பாரு...

19 comments:

said...

என் கஷ்டம் எழுதிப்பாரு தன்னானே - நீ
உன் பதிவை மறந்து போயிருவே தன்னாலே!-------------------------------------------------------------------------------------------------------------
said...

haha super..rasithaen
shoaka ezudhi kira maa nee-------------------------------------------------------------------------------------------------------------
said...

\"சொல்லுறத சொல்லிட்டன்
சொந்த புத்தி ஒண்ணு
உனக்கிருந்தா
ஒரு தபாவாவது யோசிச்சி பாரு...\"

பிளேடு, நீங்க சொல்ல விரும்பிய புத்திமதியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

யாருபா அது என்னாண்ட வந்து தண்ணி அடிக்காத அது இதுனு அட்வைஸ் பண்ணிகினு கீறது...இத்து நல்லால்ல சொல்டேன் ஆமா :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//சொல்லுறத சொல்லிட்டன்
சொந்த புத்தி ஒண்ணு
உனக்கிருந்தா
ஒரு தபாவாவது யோசிச்சி பாரு...//

இன்னாத்துக்கு யோசிக்கனும்..இன்னாத்துக்கு யோசிக்கனும்னு கேக்கறேன்...
10 ரூவா சரக்க டாஸ்மாக்குல 60 ரூபாக்க்கு விக்கறானே அவன யோசிக்க சொல்லு...
1 ரூபாக்கு முட்டை வாங்கி அத்த சால்னா கடைல 5 ரூபாக்கு விக்கறானே அவன யோசிக்க சொல்லு...
அரசியல்வாதிங்க எல்லாம் ஊரான் காசுல ஜானி வாக்கர் அடிக்கறாங்களே அவனாண்ட போய் யோசிக்க சொல்லு..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சுப்பையா அவர்களே,
முத தபா வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்
வெல்கம். தாங்ஸ்-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் கிட்டு அவர்களே... :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் திவ்யா அவர்களே
:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாட்டாமை ஸ்யாம் அவர்களே

நாலுபேருக்கு நல்லது பண்ணனும்
நாட்டு மக்களுக்கு சரக்கு கம்மி விலையில கிடைக்கணும்ன்ற உங்க ஆதங்கம் பிரியுது...

இதனால ஏழை பாழைங்க கம்மி விலையில சரக்கு கிடச்சா அவங்க ஃபேமிலிக்கு யூஸ்புல்லா இருக்கும்னு சொல்ல வர்றீங்க.. கரீக்டா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாட்டாமைக்கு அட்வைஸா..

நமக்கு அந்த அளவுக்கு தகுதியில்லீங்கோ..

இது நமக்கு தெரிஞ்ச ஒரு அண்ணாத்தைக்கு சொன்னது...-------------------------------------------------------------------------------------------------------------
said...

\'அரை பிளேடு சொன்னது இன்னான்னா...

தாங்ஸ் திவ்யா அவர்களே
:))\"
\'
அரை பிளேடு said...
தாங்ஸ் கிட்டு அவர்களே... :)) \'


பிளேடு, என்ன பதிலெல்லாம் அரசியல் கட்சி கூட்டத்தில் பேசுற எஃபக்ட்ல இருக்குது........-------------------------------------------------------------------------------------------------------------
said...

கரீக்டா கண்டு புடிச்சீங்கோ திவ்யா அவர்களே

இந்த தொண்டனாகிய அரைபிளேடு கட்சி மீட்டிங்கு பல கண்டவன்..
பல மேடைகளுக்கு தரையிலிருந்து விசிலடித்தவன்...

மாநாடு பல கண்டு அத்தனையிலும் பிரியாணி பொட்டலங்கள் பல வெட்டியவன்...


அதனால்தான் எனது நடையில் தலைவர்கள் போல் தமிழ் விளையாடுகிறது...

அத்தினி புகழும் மேட போட்டு மீட்டிங் போட்டு பேசிய தலைவர்களுக்கே..-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னா பிளேட் அட்வைஸ்லாம் அஸால்ட்ட உடுற...

அல்லாரும் கேட்டுக்குங்க. பிளேடு சொன்னா கரீக்டாதான் இருக்கும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி
நம்ப நாட்டுல இந்த மாதிரி அண்ணாத்தைங்க நிறய பேரு இருக்காங்கப்பா..
ஏதோ நாமளும் சொல்றத சொல்லுவோம்னுதான்..
குடி குடியை கெடுக்கும் படிச்சு பாத்துட்டுதான வாங்கறாங்க..-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இருபது நிமிஷமா..
இடுப்பு வேட்டி இல்லாம இருக்கிறியே
நியாயமா..
//

ஆரை பிளேடு.. எப்படிப்பா இப்படி எல்லாம்.. தனியா சேர் போட்டு யோசிப்பீங்களோ-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நாட்டாமைக்கு அட்வைஸா..

நமக்கு அந்த அளவுக்கு தகுதியில்லீங்கோ..
//

தலீவா அனியாயத்துக்கு அடக்கி வாசிக்கறீங்கோ... :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா கீதுப்பா!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நான் புல்லூ... அடிச்சுட்டுதான் படிச்சென் ... உன் கவிதாவ... சீய் ... உன் கவிதைய .... இப்ப கரகீடா வருது ...
நல்லாவே.. சொல்லி இருக்குற அப்பு .... அருமையனா .. பதிவு-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஐயே அரை பிளேடு
உன்னைப் பத்தி என்னமோ நெனச்சேன்..இப்புடிப் பண்ணிட்டியேப்பா.
ஊவூட்டு ஆத்தா, அக்காத்தை, தங்காச்சி இம்மாம்பேரையும் ஊ இஷ்டுகொணாந்து எய்துப்புட்டியே.
நா இன்னாத்தைச் சொல்ல.சிவ்னேன்னு கம்முன்னு இரிக்கேன்.
அப்ப ஏம்பா "பெண் புத்தி பின் புத்தி"ன்னாங்க?-------------------------------------------------------------------------------------------------------------