Thursday, December 21, 2006

பாஸ்டன் வலைபதிவர் சந்திப்பில் அரைபிளேடு

நாம வலைபதிவுக்கு புச்சுபா. எயுத ஆரம்பிச்சு ஒரு மாசம் மேல ஆவுது.
நாம எயுதுறது தமிலுதானான்னு நமக்கு இன்னிக்கு வரிக்கும் ஒரு டவுட்டு கீது.

இந்த சிச்சுவேஷன்ல வலைபதிவர்ங்க பாஸ்டன்ல சந்திக்கிறாங்கோ அப்படின்ற தகவலு தெரிஞ்சதும், போனா இன்னான்னு தோணிச்சி. நாம இதுவரைக்கும் எயுதறமே தவிர இது வரைக்கும் எயுதுற மத்தவங்க யாரையும் தெரியாது.

நாமளும் வர்றதா கீறோம் அப்பிடின்னு ஒரு மெயிலு தட்டி வுட்டேன்.

நம்பளையும் வாங்க வாங்கன்னு, வெல்கம்னு பாஸ்டன் பாலா (யாருப்பா அது) கிட்ட இருந்து மெயிலு, நான் உங்கள கூட்டிட்டு போறேன்னு கண்ணபிரான் ரவிஷங்கர் (ஆன்மிக பதிவு, நமக்கு சம்பந்தமே இல்ல) சொல்ல நாம குஷாலா ரெடியாயிட்டோம்.

நம்பள வழியில பிக்கப் பண்ணி ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு போன கண்ணபிரான் ரவிஷங்கருக்கு ஸ்பெஷல் தாங்ஸ்.

கொஞ்சம் லேட்டாதான் போயி சேந்தோம். மணி மூணு.

இப்பதான் மத்த மக்களையெல்லாம் முதல் தடவையா பாக்குறேன்.
அறிமுகம்லாம் முடிஞ்சது. நாமதான் அரைபிளேடு, வலைபதிவுல இப்பதான் கிறுக்க ஆரம்பிச்சி கீறோம்னு சொல்லிக்னு அமைதியா ஒரு மூலையா உட்காந்துக்னேன்.

எல்லாரும் அவங்க அவங்க கருத்துங்களை பேச ஆரம்பிச்சாங்க. நாம அமைதியா கேட்டுக்கறோம். அப்பப்ப ஒண்ணு இரண்டு கொஸ்டினு உட்டுக்கறோம்.

அப்பப்போ வந்த ஸ்னாக்ஸ், சூப், காபி, சமோசா, சிப்ஸ் எல்லாம் உள்ள இறங்குது. விருந்தோம்பல்னா இது. தாங்ஸ் பாலா.

நிறைய பேசினோம். பேசிக்கினே இருந்தோம்.
எம் மூளைக்கு எட்டனது எனக்கு நியாபகம் இருக்கறத இங்க குடுக்கறேன்.

டிஸ்கஸ் செய்யப்பட்ட கொஸ்டினுங்க இன்னான்னா...

1. நாம இங்க எதுக்காக எயுதிக்னுகீறோம்.
2. எதைப்பத்தியெல்லாம் எயுதறோம்.
3. நாம எயுதறது எல்லாம் இலக்கிய தரத்தோட இருக்குதா. இல்ல எல்லாரும் சும்மா டயரி மாதிரி எயுதறமா.
4. நாம எயுதறத யாரு படிக்கிறாங்க
5. நாம யாரையெல்லாம் புடிச்சிருக்குன்னு படிக்கிறோம்
6. நாம இப்படி எயுதற வலைபதிவுகளோட எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
7. தோணறது எல்லாம் எயுதறமே. எடிட் பண்றமா இல்லியா. எடிட் பண்றம்னா ஏன் பண்றோம்.
நான் இத மட்டும் தான் எயுதுவேன். இத எயுத மாட்டேன்னு நமக்கு நாமே ஏன் லிமிட் வெச்சிக்கிறோம்.
8. நாம எயுதறத நிறைய பேர எப்பிடி படிக்க வெக்கிறது. (எப்பிடின்னு தெரியணும்னா வெட்டி அவர்களின் பதிவை படிக்கவும்)
8. A. திரட்டிகள் என்னென்ன... தமிழ்மணம், தேன்கூடு, கில்லி.
9. வலையுலகத்துல பெண்கள், பெண்ணுரிம எவ்வளவு தூரம் இருக்கு.
10. நாம எழுதறது வீட்ல இருக்கறவங்களுக்கு இடைஞ்சலா இருக்கா.
10.A. வலைபதிவர்கள் அதுவும் சின்ன வயசு வலைபதிவர்கள் ஏன் ஆன்மிகம் எழுதணும். ஏன் இந்த விரக்தி. (குறிப்பா கல்யாணம் ஆன வலைப்பதிவர்கள்தான் ஆன்மீகம் எழுதறாங்க. ஏன்?)

11. தமிழ் சினிமா எந்த அளவுக்கு இருக்கு.
12. கமல், எஸ்பிபி, மணிரத்னம் போன்ற தனிப்பட்ட சாதனையாளர்களோட சாதனை என்னஎன்ன.
13. தமிழ் பத்திரிகையில சினிமா விமர்சனம் எந்த அளவுக்கு இருக்கு.
14. மத்த மொழி திரைப்படங்கள் குறிப்பா மலையாளம், கன்னடம் அளவுக்கு கலைப்படங்கள் தமிழ்ல ஏன் வரலை.

15. தமிழ் பத்திரிகைகள் எந்த அளவுக்கு இருக்கு
16. பிடிச்ச எழுத்தாளர்ங்க யார் யாரு.. சுஜாதா, ஜெயகாந்தன், ராஜேஷ்குமாரு... யாரை படிப்பீங்க..
(நான் ராஜேஷ் குமாருன்னம்பா. அவருதான் நமக்கு பிரியர மாதிரி எயுதற ஒரே எயுத்தாளர்)
17. சினிமா விமர்சனம் தமிழ் பத்திரிகையில எந்த அளவுக்கு இருக்கு.
ஒரு டைம்ஸ், நியூயார்க் பத்திரிகை அளவுக்கு தமிழ் பத்திரிகை இருக்கா.
(நான் படிக்கற ஒரே பத்திரிகை குமுதம். அதுதான் சூப்பருன்னு நான் கருத்து சொல்லிக்னேன்)

18. வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரச்சனைகள், சந்தித்தல், ஒன்றிணைதல்

இன்னும் நிறைய. நமக்கு கேள்விங்க மனசுல நிக்கற அளவுக்கு பதிலுங்க மனசுல நிக்கறதில்லை.

இந்த டிஸ்கஷன்கு நடுவுல டின்னர். ரொம்ப நல்லா இருந்தது. பேச்சு சுவாரசியத்துல நாம சாப்பாடு ஐட்டங்களை அதிகம் கவனிக்கல. (சாரி பாபா).

வள்ளுவரே சொல்லி கீறாராம்பா, காதுக்கு இல்லாட்டிதான் வவுத்துக்குன்னு.

டிஸ்கஸ் பண்ண நெறய மேட்டரு நமக்கு புதுசு. சைலண்டா கேட்டுக்னு இருந்தோம். ரஜினி கமலுன்னு டிஸ்கசன் வந்தப்ப கைதட்டாத குறை.

அடுத்து கிரீஷ் கர்னாடு, அப்புறம் இன்னம் நம்ப வாயிலயே நுழையாத டெக்னிகல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர்ஸ், டைரக்டர்ஸ், சினிமா பேரெல்லாம் வந்தப்ப நாம நெளியாத குறை.

நமக்கு கொஸ்டினு கேக்க மட்டும்தான் தெரியும். பதில் சொல்ல தெரியாது. குறுக்கால குறுக்கால ஒண்ணு இரண்டு கொஸ்டினை போட்டுட்டு சைலண்ட் ஆயிட்டோம்.

நமக்கு எப்பவுமே நாலு பேரு பேசறத கேட்டுக்னே இருந்தா போதும். மேடை போட்டு மைக் போட்டு பேசற மீட்டிங் எவ்ளோத்துக்கு தொண்டனா தரையில உக்காந்து கைதட்டியிருப்போம்.

இது டிஃப்ரண்டு. ஆனா நல்லாதான் இருந்திச்சி.

நல்ல ஒரு டிஸ்கஷனை கொடுத்துக்ன எல்லாருக்கும் பெரிய தாங்ஸ்.

மை ஸ்பெஷல் தேங்ஸ் கோஸ் டு பாஸ்டன் பாலா, அவருடைய திருமதி மற்றும் குழந்தை.
என்னா அறிவான குழந்தை. டிஸ்கஷன் போயிட்டிருந்தப்ப வந்து ஒன், டு, த்ரீ எண்ணி நாங்க லெவன் இருக்கோம்னு கரக்டா சொன்னது.
நான் கூட அதுவரிக்கும் எத்தனை பேருன்னு எண்ணவேயில்லை.

அப்புறமா வெட்டிப்பயல் அவர்களுக்கும் ஸ்பெஷல் தேங்ஸ். அன்னிக்கு நைட்டு அவருதான் நமக்கு ஹோஸ்ட்டு.

காலையில பொட்டியை கட்டி பொடி நடையா பாஸ்டனை பாத்துட்டு திரும்பி வந்து சேர்ந்தேன்.

நம்பளையும் ஒரு வலைபதிவர்னு ஒத்துக்ன எல்லாத்துக்கும் தாங்ஸ்.
நாம நம்பள பொறுத்த வரைக்கும் ஒரு ரீடர் மட்டும்தான். அந்த வகையில நாம படிக்கிற எழுத்துக்கு சொந்த காரங்கள பாக்குறது ஒரு சந்தோஷம்தான்.

யப்பா.. நானும் ஒரு வலைபதிவு சந்திப்பு போயாச்சி..
முழு வலைப்பதிவருக்கான தகுதி இப்ப நம்பளுக்கும் வந்திருச்சி இல்ல..

(வலைப்பதிவு கூட்டங்களுக்கு போனா இன்ன குழுவுல சேந்துட்டாருன்னு சொல்வாங்களாமே...
பாபா நீங்க ஏதாவது ஒரு குழு வெச்சிருந்து நான் அதுல சேந்துட்டனா என்ன :))) )

பாஸ்டன் சந்திப்பு - பாபாவின் பார்வையில்

33 comments:

said...

இன்னா ப்ளேடு.. இத்தினி மேட்டர்ஸ் பேசுனோமா...

[ஸாரிபா... நமக்கு தெரியாத மேட்டர்ஸ் நெறிய பேசிக்கினாங்களா. அதான் நான் கம்னு எத்தையோ யோசிச்சிகினு இருந்துட்டேன்...]

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜி... எனக்கும் அதே டவுட்டுதான் : )

நெறைய மிஸ் பண்ணிட்டேன்... அடுத்த சந்திப்பிலாவது காதைத் தீட்டி வச்சிறேன்.

அரை பிளேடு... சரி ஷார்ப்பான பதிவு!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னா பிளேடு
மட்ராஸிலேந்து பாஸ்டன் போன்னியா?
நம்பவே முய்யல.
அது சரி நைனா,
பேரில நீ அரை பிளேடு
படத்தில இன்னாது டபுள் பிளேடு?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜி
நமக்கு நெறய மேட்டரு புரியல, பேச்சு எது எது பத்தியெல்லாம் சுத்தி வந்ததோ அத எல்லாம் புடிச்சி குடுத்து இருக்கேன்.

என்ன, எல்லா கேள்விக்கும் ஆழமான கருத்துன்னு சொன்னா நாம நாலு நாள் கருத்தரங்கம்தான் நடத்தணும். ஒரு சில விஷயங்களை ஆழமா அலசினாலும், எல்லா கேள்விக்கும் அதே மாதிரி விடை தேட நேரம் இல்லன்னு தான் நினைக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பாபா, நீங்க ஹோஸ்ட்ன்றதால வந்தவங்களை கவனிக்க உங்களுக்கு சரியா இருந்தது.

நம்பதான் புடிச்சு வைச்ச புள்ளயார் மாதிரி ஒரே இடத்துல உட்காந்து புரியுதோ புரியலையோ எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருந்தமே..

ரொம்ப தாங்ஸ். இது பதிவ ஷார்ப்னு சொன்னதுக்கு. :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சுந்தரி. ஏதோ மெட்றாஸ்க்கு வந்த நல்ல காலம், அமெரிக்காவுக்கு வந்த கெட்ட காலம், நாமளும் அமெரிக்கா வந்துட்டமில்ல.
எல்லாம் கொஞ்ச நாளைக்குதான்.

அப்பாலிகா அந்த பிளேடு போட்டோ, அது எங்க குருநாதர் ஃபேமிலி போட்டோங்க.. பார்க்க அரைபிளேடு போட்டோ ஆல்பம். :))))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//வலைபதிவர்கள் அதுவும் சின்ன வயசு வலைபதிவர்கள் ஏன் ஆன்மிகம் எழுதணும். ஏன் இந்த விரக்தி.//

ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?

//குறிப்பா கல்யாணம் ஆன வலைப்பதிவர்கள்தான் ஆன்மீகம் எழுதறாங்க. ஏன்?//

ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?

இம்மாம் இம்பார்டண்ட் கொஸ்டீன் கேட்டுக்கீறீயே தல!
இப்பிடிக்கா குந்து!

நம்ம சாத்வீகன்-ன்னு ஒரு அருமையான ஆன்மீக எழுத்தாளர் இருக்காரு!! அவர் வந்து உனக்கு சாத்வீகமா பதில் சொல்லுவாரு! :-)))
அது வரைக்கும் ஐ ஆம் தி எஸ்கேப்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கேஆர்எஸ்ஸு அவர்களே

நம்ப சந்திப்புல கிளப்பப்பட்டு ஆன்ஸர் கிடைக்காம கிடப்புல போட பட்ட கொஸ்டீன்ல ஒண்ணுதான் இந்த ஆன்மீக கொஸ்டினு..

உங்க கருத்த தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா அப்பவும் டபாய்ச்சிட்டீங்க..
இப்பவும் டபாய்க்கிறீங்க...

உங்களுக்குன்னு ஒரு கருத்து இருக்கும்ல. அத்த சொல்லுங்க தலீவா...

:)))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னதான் 'மெட்றாஸ்' பாசையில் எழுதினாலும் 'தமில்நாடு' மட்டுமாவது (profile-ல்) மாத்துங்களேன்; ரொம்ப கொடூரமா கீதே! :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அது வந்து தருமி அவர்களே நமது தமிழ் நாடு கவர்ன்மெண்டே இங்லீஷ்ல எயுதறப்ப Tamil Nadu அப்பிடின்னு எயுதுது. Tamizh Nadu ன்னு எயுதறது இல்ல.

அதனாலதான் பாருங்க தமில்நாடு எனக்கு தப்பா தெரியல.

இருந்தாலும் விதண்டாவாதம் பண்ணாம சமத்தா மாத்திடறேன்.

அடுத்தவங்களுக்கு தப்புன்னு தெரிஞ்சி ஒருத்தங்க சொல்றாங்கன்னா அது நியாயமா இருந்தா நாம நம்பள முடிஞ்ச வரிக்கும் மாத்திக்க பாக்கணும்ன்றது நம்ப பாலிசி.

இனி நம்ப நாடு தமிழ் நாடு. ஓகேவா.

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நாம எயுதுறது தமிலுதானான்னு நமக்கு இன்னிக்கு வரிக்கும் ஒரு டவுட்டு கீது//

அல்லாருக்கும் அதே டவுட்டுதாம்பா..

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு, தருமி சும்மா கருணாநிதி மாதிரித்தான் தமிழ் பற்று... இதுக்காக நீங்க மாறவேண்டியதில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாடோடி..

சோ த பெனிபிட் ஆஃப் த டவுட் ஈஸ் கிவன் டு அஸ்.

அதனாலதான் நாம இன்னும் எயுத்தாளனா இருக்கோம். :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அனானி

யாரோ மண்டபத்துல ஏதோ சொன்னாங்கன்னா கொஞ்சம் கேட்டுப்போம். மொத்தமா மாறிடுவோமா என்னா...

நாம் கொடுத்த பெயரில் சொல்குத்தம் இருக்கலாம்...
ஆனால் பொருள்குத்தம் என்னிக்கும் கடியாது...

எனது சொந்த பிளாக்காக இருந்தாலும் குத்தம் குத்தமே..

தருமி நக்கீரராயிட்டாரு..

நீங்க ஆதி அந்தம் தெரியாத அனானியாயிட்டீங்க..

நான் நம்ம பாட்டை கரீக்சன் பண்ணிட்டேன்..

யாருப்பா அங்க.. ஆயிரம் பொற்காசு எங்க....

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//யாருப்பா அங்க.. ஆயிரம் பொற்காசு எங்க....//

அத தருமி வாங்கிகிட்டு போயிட்டாருங்கோ!!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிஸ் பண்ணிடேனே ...... பேசாமா .... நானும் வந்திருக்கலாம் ....

என்ன problem- னா 80,000 ரூபாயாம் ... round trip-புக்கு

சந்திப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சுந்தர்.
இந்தியாவுல இருந்தீங்கன்னா அங்கியும் வலைபதிவு சந்திப்பு அப்பப்போ நடக்குதாமே... நமக்கு அங்க இருந்த வரிக்கும் இதப்பத்தி எல்லாம் தெரியாதுங்க... தெரிஞ்சிருந்தா அங்கியே எவ்ளோ மீட்டிங் அட்டெண்ட் பண்ணியிருப்போம் இல்ல....

தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்ன ஒரு சாத்வீகப் பதிவு! நானும் நெறய மிஸ் பண்ணிட்டேன். இருந்தாலும் நண்பர்களை முதன்முறையாகச் சந்திக்க முடிவதில் மகிழ்ச்சி.

அதும் பாபா முகத்துல கூடுதலா ஒரு பிரகாசம் அன்னிக்கு இருந்தது - அது ஏன்னு அவரே சொல்வாருன்னு எதிர்பார்த்தா மனுஷர் கண்டுக்கவேயில்லை. பாபா - எதும் விசேஷமா? :-)

அரை பிளேடு - என்னதான் இங்கிட்டு குண்டக்க மண்டக்க 'சென்னை மொளி'ல எழுதிருந்தாலும் அன்னிக்கு நீங்க ஒருத்தருதான் முடிஞ்சவரை ஆங்கிலம் கலக்காம நல்ல தமிழ்ல பேசினீங்கங்கறதையும் கவனிச்சேன். ஆசிப் அண்ணாச்சிக்கு இது தெரிஞ்சா சந்தோஷப்படுவாரு. 'பண்ணி'த் தமிழுக்கு மாறிடாம அப்படியே தொடருங்க. வலைப்பதிவுல எந்தக் களுதை மொழிலயோ எழுதிட்டுப் போங்க. பேசும்போது இப்ப மாதிரியே எப்பவும் நல்ல தமிழ்ல பேசுங்க. பாராட்டுகள்.

அப்றம் இது யாருப்பா பின்னூட்டத்துல இன்னொரு சுந்தர் ? 7-UP-போட Fido Dido Cartoon பொம்மைய ப்ரொபைல்ல வச்சுருக்கறது?

ஏற்கனவே மூக்கு சுந்தர்னு நெனச்சுக்கிட்டு எங்கிட்ட நிறையபேரு வந்து விசாரிச்சாங்க. இவரு யாருன்னு தெரிலையே.

பேசாம நான் என்னோட பேர 'அனானி சுந்தர்'னு மாத்திக்கலாமான்னு யோசிக்கறேன். :o

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு,
கரெக்டா கவுனிச்சிச்சு, நச்சுனு எழுதியிருக்கீங்க...

அப்படியே ஒவ்வொன்னா ஞாபகம் வருது...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு. இன்னாபா இப்டி சொல்லீட்ட? இராகவன், இராகவன்னு ஒரு டாப் டக்கர் சூப்பர் ஸ்டார் ஆன்மிகப்பதிவர் இருக்காரே. தெலவாதா? அவுருக்கு இன்னும் கண்ணாலம் ஆகலியேப்பா. ஆன்மிகப்பதிவர்கள்லேயே அவர் தான் நம்பர் ஒன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு யாருன்னு இந்த சாத்வீகமான பதிவைப் பார்த்தாலே தெரியுதே. நல்லா கீதுபா அரைபிளேடு. நான் நென்சுகிறது சர்தானே?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

---பாபா முகத்துல கூடுதலா ஒரு பிரகாசம் அன்னிக்கு இருந்தது ---

உங்களையெல்லாம் பார்த்த சந்தோசமா இருக்கும் : )

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க பாடும் நிலா பாலு சுந்தர் அவர்களே,

இவ்வளவு நல்ல பெரிய பின்னூட்டம். தாங்ஸ்.
ஆனா அன்னிக்கி நீங்க முதல்ல இந்த அளவு கூட பேசலை.

அப்புறமா உங்க டாபிக் வந்ததும்தான், ஆரம்பிச்சீங்க.
நீங்க கவிஞர் தெரிஞ்சதும் ரொம்ப ஆச்சரியம்..

நம்பள மாதிரி இல்லாம நாம பேசறதவிட நம்ப எழுத்து பேசட்டும்னு அமைதியா இருக்கிற ஆள்னு புரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க சொல்றது கரெக்ட்.

நாம பேசறப்போ இங்லீஷ் மிக்ஸ் பண்ண மாட்டோம்.

அது தமிழ்பற்று கடியாது. இங்லீஷ் தெரியாது. அவ்வளவுதான்.

அப்புறம் ஏதோ சாத்து வீங்கு பதிவுன்னு எயிதிகிறீங்களே அது என்னது...

யார் சாத்துனா.. யாருக்கு வீங்குச்சு..

ஒண்ணுமே பிரியலியே...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வெட்டிபயல் அவர்களே,

ரொம்ப தாங்ஸ். நீங்களும் ஒரு பதிவு போடறதா சொன்ன மாதிரி நியாபகம்... போடறீங்கதானே...

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க குமரன்

கல்யாணம் ஆகாத ஆன்மிக பதிவரா..
ஆச்சர்யமா இருக்கே..
காதல் தோல்வியா இருக்குமோ... :))

நீங்களும் ஏதோ சாத்த போறதா சொல்றீங்க.
பிரிபடலியே..

மக்களே, இந்த அரைபிளேடு ஏதோ நமக்கு தோணுண பார்வையில சந்திப்பை புடிச்சி போட்டுட்டேன்...

இதுக்காக நீங்க என்ன சாத்தணும்னு நினைச்சீங்கன்னா உங்க உரிம. ஆனா என் உடம்பு தாங்காது.

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். என்ன சொல்றீங்க...

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பி.

//நீங்க கவிஞர் தெரிஞ்சதும் ரொம்ப ஆச்சரியம்..//

இதுக்கு நீங்க 'அடப் பாவீ.. நீயுமா?'ன்னே கேட்ருக்கலாம்! :-) சுச்சு போட்டா கவிதையால்லாம் எனக்குக் கொட்டாது. அதனால நான் கவிஞன் இல்லை. எப்பவாவது கவுஜ எழுதறது உண்டு. நேரம் கிடைக்கும் போது இங்கிட்டு போய் பாருங்க. http://akavithaikal.blogspot.com

//நம்பள மாதிரி இல்லாம நாம பேசறதவிட நம்ப எழுத்து பேசட்டும்னு அமைதியா இருக்கிற ஆள்னு புரிஞ்சிக்கிட்டேன்.//

நேத்து ராத்திரி செகண்ட் ஷோ விசு படம் எதாச்சும் பாத்தீங்களா? :-)

//அப்புறம் ஏதோ சாத்து வீங்கு பதிவுன்னு எயிதிகிறீங்களே அது என்னது...//

அதுவா... நானில்லைப்பா. அம்புட்டுத்தேன் எனக்குத் தெரியும்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்ன பிளேடு
அன்னிக்கு பாஸ்டன் ச்ந்திப்பில இங்லீசு கலக்காம பேசின்னியாமே
நன்றிப்பா.
மத்த மொழி க்லக்காம தமிழை சுத்தமா க்தைக்க பிளேடு உன் பிளேடை ந்ன்னாத்தாம் பாவிச்சீக்கிறே பிளேடு. படா நன்றிப்பா. ஊவூட்டு பமிலி போட்டோ படா அறுவை.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா எழுதறீங்க..
நல்ல தமிழ்ல எழுதறத விட, இப்படி மெட்றாஸ் தமிழ்ல எழுதறதுதான் கொஞ்சம் கஷ்டம்தான் இல்ல!!

சுவாரசியமா இருக்கு இங்க வலைப்பூ!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

டபுள் பிளேடு பமிலிக்கு
எம் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் சுந்தரி அவர்களே

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

// குமரன் (Kumaran) said...
அரைபிளேடு. இன்னாபா இப்டி சொல்லீட்ட? இராகவன், இராகவன்னு ஒரு டாப் டக்கர் சூப்பர் ஸ்டார் ஆன்மிகப்பதிவர் இருக்காரே. தெலவாதா? அவுருக்கு இன்னும் கண்ணாலம் ஆகலியேப்பா. ஆன்மிகப்பதிவர்கள்லேயே அவர் தான் நம்பர் ஒன். //

என்ன குமரன் இது...அதெப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றீங்க? ;-)

// அரை பிளேடு said...
வாங்க குமரன்

கல்யாணம் ஆகாத ஆன்மிக பதிவரா..
ஆச்சர்யமா இருக்கே..
காதல் தோல்வியா இருக்குமோ... :)) //

அரைபிளேடு நம்மகிட்டயெல்லாம் காதல் தோல்விகளா இருக்குமோன்னு கேக்கனும். :-))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ராகவன்
உங்க தலைய கொஞ்சம் உருட்டிட்டோம்..

நாட்டுல பட்டினத்தாரு, பர்த்ருஹரின்னு பட்டு தெரிஞ்சவங்க பல பேரு.

நீங்க ஒரு ஞானசம்பந்தன், பிரகலாதன், துருவன், மார்க்கண்டேயன் மாதிரி இருப்பீங்க அப்பிடின்னு பார்த்தா இப்பிடி கவுத்திட்டீங்களே..

:))

:)) //

அரைபிளேடு...ரொம்ப எதிர்பாத்துட்டீங்க போல. நான் அருணகிரிக்கடியவன். :-)

-------------------------------------------------------------------------------------------------------------