Wednesday, December 27, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 3 ஆண் எப்பிடி அடிமடையனானான் ?

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு


ஆண் எப்பிடி அடிமடையனானான் ?

அதெப்படி அன்புன்றது நல்ல விஷயம்தான அப்படின்னு நீங்க சொல்றீங்களா.

அணுகுண்டு கூட ஒரு நல்ல விஷயம்தாங்க. இல்லாட்டி நாம கூட அத தயாரிச்சு வெச்சுப்பமா.

இந்த லவ்வு கீதே அது கூட ஒரு சேஃப்டி ஆயுதம்தான்.

தனக்கு புடிச்ச ஆணை காலமெல்லாம் தனக்கு வேல செய்ய வைக்கறது எப்படின்னு அந்த காலத்துல பொண்ணுங்க குகை போட்டு யோசிச்சிருக்காங்க. (அந்த காலத்துல ரூம்னா அது குகைதான்).
அப்படி கண்டுபுடிச்சதுதான் லவ்வு.

அத மொத தடவயா அவங்க ஆண்கிட்ட சொன்னப்ப அவன் பேஸ்தடிச்சு போயிட்டான் இன்னாடா இதுன்னு.

லவ்வுன்னா உனக்கு எம்மேலயும் எனக்கு உம்மேலயும் ஒரு இது கீதே அதுதான் லவ்வுன்னு அவங்க சொன்னாங்க.

இவனும் நம்பிட்டான். சரி நமக்குள்ள இது கீதுன்றியே இத்த என்னால பாக்க முடியலியே அப்படின்னு இவன் சொல்ல...

அவங்க அடுத்த கட்ட கண்டுபுடிப்புல இறங்கினாங்க.

இந்தா இந்த கயிற கட்டு, இந்த வளையத்தை விரல்ல மாட்டு, இந்த வளையத்த கால்ல மாட்டு, இந்த சிவப்பு சாந்த என் நெத்தியில வை அப்பிடியின்னு லவ்வ கன்ஃபார்ம் பண்ண அடுத்தடுத்த மேட்டரா எடுத்து வுட்டாங்க.

இப்பிடித்தான்யா ஆரம்பிச்சுச்சு எல்லாமே... ஆரம்பத்துல எல்லாமே நல்லா இருந்த மாதிரிதான் தெரிஞ்சுது.

அப்புறம்தான வந்தது வினையே.

நான் பொம்பள. நீ ஆம்பள. நீ என்ன லவ் பண்ணிட்ட. என்ன வச்சி காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை.

நான் குகையில உக்காந்துக்னு கீறன். நீ போய் எனக்கு வேண்டியத கொண்டு வா.

நீ ஆம்பளயா லட்சணமா போய் ஒரு நாள் முழுக்க வேட்டையாடி கொண்டாந்தினா அத நான் நெருப்புல போட்டு இரண்டு பேருக்குமா சுட்டு தருவன் அப்பிடின்னு சொல்ல நம்ப ஆளும் நம்பிட்டான்.

வெயில்ல மழையில பனியில நம்ப ஆளு கஷ்டப்பட்டு கொண்டு வர்றத அவங்க நெருப்புல போட்டு டிஸ்ட்ரிப்யூட் பண்ண ஆரம்பிச்சாங்க.

இப்படி கிச்சனும் ஹோம் டிபார்ட்மண்டும் அவங்க கையில போயிருச்சு. ஆண் வெறுமனே சம்பாதிக்கிற எந்திரமாயிட்டான்.

எந்திரமாயிட்டாலும் பாவம் மனுசன் இல்லியா அப்பப்ப குரல் வுடுவான்.

ஏன்யா பேசமாட்ட. நான் நம்ம குகைக்காக எவ்ளோ கஷ்டப்படறேன் தெரியுமா? உனக்கு இன்னா ஜாலியா வெளிய போயிடுற.

ஒரு நாள் என்ன மாதிரி வீட்டுக்குள்ளாற இருந்து வேல செஞ்சி பாரு தெரியும்.

அவ்ளோதான் நம்ப ஆளு ஆஃப் ஆயிடுவான்.

ஒரு தடவையாவது இவன் அப்படியா நான் வூட்ல இருந்து அந்த வேலய செஞ்சி பாக்குறன்னு சொல்லியிருந்தான்னா தெரியும்.

அப்பிடியும் தெகிறியமா யாராவது கேட்டா இதல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் உனக்கு எதுக்கு அப்பிடின்னு சொல்லி கிச்சனுக்கு வெளிய நிக்க வெச்சுருவாங்க.

ரொம்ப நாள் வரிக்கும் ஆம்பளைங்க இது ஏதோ பெரிய விஷயம் போலன்னு நினைச்சு ஒதுங்கியே இருந்தாங்க.

அப்பதான்யா வந்தது இந்த பெண்ணுரிம. இதுல ஆணுக்கும் கொஞ்சம் உரிமை கிடைச்சு தெகிறியமா கிச்சனுக்குள்ள நுழைஞ்சாங்க.

அப்பதான் ஒரு உண்ம தெரிஞ்சது. இவ்ளோ நாளா சாப்பாடுன்னு இவங்க போட்டது எல்லாம் ஒண்ணுமே இல்லன்னும் தன்னாலேயெ இதவிட நல்லா சமைக்க முடியும்னு அவனுக்கு தெரிஞ்சது.

பெண் அப்பிடின்னு ஒருத்தி இல்லன்னாலும் தன்னாலயே தனக்கான சாப்பாட்ட செஞ்சிக்க முடியும்ன்ற விழிப்புணர்வு ஆண்களுக்கு இப்பதான் வர ஆரம்பிச்சிருக்கு...

(விழிப்புணர்வு தொடரும்...)

மின்னாடி சேப்டரு பின்னாடி சேப்டரு

5 comments:

said...

கலக்கறீங்க அ.பி...

இந்த மாதிரி தொடர் எழுதறது உங்க வீட்ல தெரியுமா???



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் வெட்டிப்பயல் அவர்களே..

ஹி..ஹி.. வீட்டுக்கு தெரிஞ்சி இப்படி ஒரு தொடர் எயுத முடியுமா..

நாம எயுதறதே வீட்ல தெரியாது..

தெரிஞ்சது இந்த அரைபிளேடோட ஆட்டம் குளோஸ்...

இந்த வலைபதிவும் கோவிந்தாதான்...

ஏதோ இங்கயாவது தெகிறியமா கருத்து சொல்றனேன்னு கண்டுக்காம விட்டுடுங்க..

தயவு செஞ்சி வீட்ல பத்த வைக்க வேண்டாம் என்று அன்போட கேட்டுக்கறேன்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு, அப்போ இந்த க்ருமம் புடிச்ச கண்ணாலமே செஞ்சிக்க வேண்டாம் னு சொல்றியா ?

எதுக்கு கிரிக்கெட் மேட்ச் விளையாட போவானேன், அப்புறம் ட்ரா (சம உரிமை ) ஆயிடுவோம்னு கெஞ்சுவானேன் ??

:)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்ரீகாந்து

கிரிக்கெட் மேட்சுல கட்டாயம் தோப்போம்னு கட்டாயம் தெரிஞ்சும் இண்டியன் டீம் கிரிக்கெட் விளயாடுறதில்லையா...

நான் தோத்துக்னே இருக்கேன் அதனால இனி கிரிக்கட் விளையாட மாட்டேன் சொல்றது நல்லாருக்காது...

வாழ்க்கையோ கிரிக்கெட்டோ அடுத்தடுத்து நம்பள பாத்து வேகமா பந்து வீசப்படும்...

அமைதியா கால்குலேட் பண்ணி அடிச்சி ஆடணும்..

அவசரப்பட்டோம்னா அவுட் ஆயிடுவோம்....

தொடர்ந்து அவங்களாலியும் எவ்ளோ நேரத்துக்கு தான் வேகமா பந்து வீச முடியும்....

நாம தொடர்ந்து கட்டை போட்டு மேட்சை டிரா பண்ணி கப்பை ஷேர் பண்ணிக்கணும்...

இதுதான் வாய்க்கை....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹாய் அரை ப்ளேடு!!!!
என்ன தத்துவம்!!! இன்னா அட்வைசு!!! கலக்குரீங்க!!



-------------------------------------------------------------------------------------------------------------