Tuesday, January 02, 2007
ஈ-மெயிலில் வந்த உருக்கமான கதை
ஈ-மெயிலில் வந்த உருக்கமான கதை
மொழி பெயர்ப்பு மட்டுமே நமது... இனி மின்னஞ்சல்...
பெண்கள் மிக அருமையானவர்கள். அதே நேரத்தில் ஆண்களும் அவர்களுக்கு நிகராக அருமையானவர்களே. இந்த கதை சற்று பெரியதாக இருந்தாலும் படிக்க வேண்டுகிறேன். மேலும் இதை தாங்கள் அறிந்த அருமையான ஆண்களுக்கு அனுப்ப வேண்டுகிறேன். இனி கதை...
--------------------------------------------------
எங்களுடையது நிச்சயிக்கப்பட்ட திருமணம். பாரம்பரிய முறைப்படி நடந்தது. எங்கள் பெற்றோரே அனைத்தையும் முடிவு செய்தார்கள். எனது ஒரே விருப்பம் பெண் அவளும் வேலைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பதே. எங்கள் புகைப்படங்கள் பரிமாறப்பட்டு ஜாதகங்கள் பரிமாறப்பட்டு பொருந்தி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாங்கள் தொலைபேசியில் அறிமுகமில்லாத இருவர் என்ன பேசுவார்களோ அது போல குறைந்த அளவே பேசினோம்.
அவள் பெங்களூரில் ஒரு கல்லூரியில் வேதியியல் விரிவுரையாளர். திரைப்படங்களை விட கெமிஸ்ட்ரி பாடங்களை பெரிதும் விரும்பக்கூடியவள். எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. எனக்கு விடுமுறை கிடைக்காது என்பதால் விரைவிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பத்தே நாள் விடுமுறை. அனைத்தும் வீட்டினரால் செய்யப்பட்டது. எனக்கு குறுகிய காலமே இருந்தது. கல்யாணம் ஆன இரண்டே நாட்களில் நாங்கள் இந்தியாவை விட்டு பறக்க வேண்டியிருந்தது. நாளை என்ற ஒன்றே இல்லாதது போல் அவள் அழுது கொண்டிருந்தாள். விமானத்தில் அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை.
ஒரு பாரம்பரியமான இந்தியப்பெண் இப்படித்தான் இருப்பாள் என்று அமைதியாக இருந்தேன்.
சீக்கிரம் இது சரியாகி விடும் என்று நம்பினேன். வீட்டிற்கு வந்த பிறகும் அவள் அதிகம் பேசவில்லை. மூலையில் அமர்ந்து தொலைக்காட்சியை வெரித்தபடி இருந்தாள். முதல் இரண்டு நாட்கள் எனக்கு குவிந்து இருந்த வேலைப்பளுவினால் அவளை சற்று கவனிக்க முடியவில்லை.
ஒரு வாரம் இப்படியே கடந்தது. ஒரு நாள் அமைதியாக அவளருகே அமர்ந்து என்ன பிரச்சனை என்று கேட்டேன்.
"என்னை ஏன் இங்க கொண்டு வந்தீங்க?"
"வாட் டூ யூ மீன். என்ன ஆச்சு".
"நான் வீட்டுக்கு போகணும்."
"இதுதான் நம்ப வீடு."
"இல்லை. நான் வீட்டுக்கு போகணும். என்னை திருப்பி அனுப்பிடுங்க."
"இங்க பாரு. எல்லோருக்கும் முதல் தடவை வீட்டை விட்டு வர்றப்ப அப்படித்தான் இருக்கும். எனக்கும் முதல்ல கஷ்டமாதான் இருந்தது. இது சகஜம்தான். தானா சரியாயிடும். நான் என் வேலையில கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். சாரி. நாம இந்த வார கடைசியில வெளிய போகலாம். இங்க இருக்கற என்னோட நண்பர்களையெல்லாம் பார்ப்போம். எல்லாம் சரியாயிடும். என்ன."
"எனக்கு இந்த இடம் பிடிக்கல. என்னோட ஃபேமிலி, ஃபிரண்ட்ஸ், காலேஜ் எல்லாத்தையும் நான் மிஸ் பண்றேன். நான் வீட்டுக்கு போகணும்."
"ஒரு நிமிஷம் யோசிச்சி பாரு. நீ என்ன நினைச்சிருக்க. அப்ப நீ போயிட்டு திரும்ப வரவே போறதில்லையா?"
"ஆமா"
"இது பைத்தியக்காரத்தனமா இருக்கு".
"நீங்க அப்படி நினைச்சீங்கன்னா அப்படித்தான்".
"நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. உன் வாழ்க்கையில வேற யாராச்சும் இருக்காங்களா?. பதில் சொல்ல விருப்பம் இருந்தா மட்டும் சொல்லலாம்"
"இல்லை. நான் வீட்டுக்கு போகணும். இப்ப நீங்க என்ன அனுப்பல 911 போட்டு போலீஸை கூப்பிடுவேன்."
"கொஞ்சம் அமைதி. யோசிச்சி பாரு. நம்ம அப்பா அம்மாவை நினைச்சு பாரு. நமக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கூட ஆகலை. அதுக்குள்ள வீட்டுக்கு போகணும்னு சொல்ற.
கல்யாணம் ஆனா இங்கதான் வரணும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா. என்ன நினைச்சிருக்க. இப்ப நீ திரும்ப போனா நம்ம கல்யாணம் என்ன ஆகறது?"
"நான் உங்கள குறை சொல்லலை. பழி என் மேலயே இருக்கட்டும். இது என்னோட தப்பு. இவ்வளவு நாள் நான் எங்க வீட்டை விட்டு இருந்ததில்லை. நீங்க வேணும்னா இந்தியா வந்துடுங்க".
"எனக்கும் தான் அப்பா அம்மா இருக்காங்க. நீ கேக்கறது ரிடிகுலஸ்."
அவள் மனம் மாறுவதாய் தெரியவில்லை. நான் வீட்டினரை தொலைபேசினேன்.
எனது முடிவு என்று அவர்கள் சொல்லி விட்டார்கள். நான் அவளுக்கு விமானச்சீட்டு வாங்கி அடுத்த நாளே அவள் கைகளில் கொடுத்தேன். இரண்டு நாட்களில் அவள் கிளம்ப வேண்டியிருந்தது. எதுவும் அவளை சமாதானப்படுத்தவில்லை. குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்னை விட்டு பறந்து சென்றாள். என் மனதை தொடுமளவு அவளுடைய அருகாமை இது வரை இருந்ததில்லை என்பதால் எனக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும் நான் தவறு செய்து விட்டதாக என் மனசாட்சி சொல்லிக் கொண்டிருந்தது. எனக்குள்ளே நான் இல்லையென்று மறுத்துக் கொண்டிருந்த போதும் குற்ற உணர்வில் குறுகிக் கிடந்தேன்.
அவளை தொலைபேசியில் அழைத்தேன். அதிகம் பேசவில்லை. தனது பெற்றோரை விட்டு தன்னால் வர இயலாது என்பதை அவள் மீண்டும் தெளிவாக்கினாள்.
அவளது பெற்றோர் என்னிடம் மிக வருந்தினார்கள். ஆனால் அவர்களும் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள்.
எனக்கும் என் வாழ்வில் சில விருப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் எவையும் ஆழமானவை அல்ல. நான் பள்ளியில் படிக்கும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு பெண்ணின் வீட்டு தொலைபேசி எண்ணை கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கிறேன். பிறகு கல்லூரியில் எல்லோரையும் கவர்ந்த ஒரு பெண் என்னிடம் பேசியபோது மிகவே மகிழ்ந்திருக்கிறேன். பிறகு அமெரிக்க கல்லூரி காலத்தின் போது எனது நகரத்தை சேர்ந்த ஒரு பெண். அவளிடம் பேசும்போது வீட்டிலிருப்பதாய் உணர்வேன். அவர்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் மறந்திருக்கிறேன். விலகியிருக்கிறேன். ஆனால் அவர்கள் வேறு. இவள் வேறு. இவள் என் மனைவி. இவளை விட்டு நான் எவ்வாறு விலக முடியும்.
நான் எனது வேலையை விடுவதென முடிவு செய்தேன். வீட்டிற்கு திரும்பினேன். நான் திரும்புகிறேன் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். நான் எனது வீட்டில் மூட்டை முடிச்சுகளை வீசியெறிந்து விட்டு முதல் வேளையாக அவளது கல்லூரிக்கு சென்றேன்.
வாயில் காவலன் விடாத காரணத்தால் வெளியே காத்திருந்தேன். அவளது வகுப்புகள் முடியட்டும் என்று.
தனியே வெளியே வந்தாள். தூக்க முடியாமல் ஒரு பையை தூக்கியபடி பேருந்து நிலையத்தை நோக்கி சென்றபடி.
நான் அவளை பின்தொடர்ந்து மெல்லிய குரலில் கேட்டேன் "உதவலாமா ?"
திரும்பியவள் என்னை பார்த்தாள். அவள் கண்கள் மலர்ந்தன. கட்டியணைக்கும் உரிமையில்லாமல் விலகியே நான் புன்னகைத்தபடி.
அவள் பார்வையில் பல நூறு கேள்விகள்.
"உனக்காகத்தான் உன்னுடைய நகரத்திற்கு வந்திருக்கிறேன். நீ எதையெல்லாம் இழக்க விரும்பவில்லை என்பதை எனக்கு காட்டுவாயா?"
ஒரு வாரம் பறந்தோடியது.
அனைத்து வசதிகளுடன் வீட்டில் ஒரு குழந்தையைப் போல் வளர்க்கப்பட்டிருந்தாள்.
அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது.
காலை அவள் எழுந்திருப்பதற்காக அவளது காப்பி காத்திருந்தது.
அவள் அணிவதற்கான உடைகள் அழகாக தயாராய் வைக்கப்பட்டிருந்தது.
காலை உணவருந்தி கிளம்புவாள். பேருந்தில் ஒரு மணி நேர பயணம். சன்னலோர இருக்கையில் அமர்ந்து புத்தகம் படித்தபடி. பிறகு கல்லூரி. வகுப்புகள். பாடங்கள். மாலையில் அயர்ச்சியாக வீடு திரும்பல். மாலை பேருந்து பயணம் சில சமயம் நின்றபடி கூட தனது பையை தூக்க முடியாமல் தூக்கியபடி. மாலை வீடு திரும்பி ஏதாவது சாப்பிட்டு விட்டு தனது தோழியை பார்க்க கிளம்புவாள். சில நாள் வீட்டில் தொலைக்காட்சியில் பாடல்கள் கேட்டபடி இருப்பாள். தனது தந்தை வந்ததும் அவரோடு சேர்ந்து இரவு உணவு. பிறகு தாயால் தட்டிப் போடப்பட்ட படுக்கை.
வாரக் கடைசி நாட்களும் வித்தியாசமாக இல்லை. வெகு நேரம் கண்விழித்து பின் தூங்கி காலை தாமதமாக எழுந்து சாப்பிட்டு பிறகு தொலைபேசத்தொடங்குவாள். பிறகு மாலை கோவில் மற்றும் அவளது பாட்டு டியூசன். பிறகு இரவு நேர உணவு வெளியில். பின்னர் தாமதித்து வீடு திரும்பல். இதுதான் அவள் வாழ்க்கை முறை. அனைவரும் விரும்பக்கூடியது. மகிழ்வானது. தேவைகள் அதிகம் இல்லாதது.
எனவே நான் அவளது வாழ்க்கையில் ஒரு வில்லனாகத்தான் நுழைந்து இருக்கிறேன்.
நான் அவளை புரிந்து கொண்டதாக சொன்னேன். இதே நகரில் அவளது பெற்றோர்களை விட்டு வேறு ஒரு வீட்டில் இருக்கலாம் என்று தெரிவித்தேன். எனது பெற்றோரோடு இருக்கக் கூடாது என்று அவள் சொன்னதை ஒத்துக் கொண்டேன்.
நாங்கள் ஒரு சிறிய வீட்டிற்கு குடி பெயர்ந்தோம். அவள் எதையும் அறிந்தவளாயில்லை. அனைத்தும் அவளுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. கற்றுக் கொள்ள துவங்கினாள்.
அவளது பொறுப்புகளையும் எனது நிலையையும் அவளுக்கு புரியவைக்க வேண்டி இருந்தது. காலை எழுந்ததும் அவளுக்கு காப்பி தர வேண்டியிருந்தது. சில விதிகளை அவளே ஏற்படுத்தினாள். பிறகு அவற்றை அவளே முறித்தாள்.
என்னைப் பற்றி அவள் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. சில நேரம் சொல்லாமல் கொள்ளாமல் பெற்றோரிடம் சென்று விடுவாள். பிறகு நான் சென்று அழைத்து வர வேண்டியிருக்கும். மெல்ல மெல்ல அவள் திருமண வாழ்வை புரிந்து கொள்ள துவங்கினாள். எனக்கு முன்னெழுந்தாள். சமையலுக்கு முயற்சித்தாள். மெல்ல திரைப்படங்களுக்கு வர, எனது நண்பர்களை சந்திக்க, அவளது கல்லூரிக்கு என்னை அழைக்க, அவளுக்கு நான் சேலையுடுத்தி விட, என்னுடன் நடனமிட, எனக்கு கெமிஸ்ட்ரி சொல்லி தர, அவளது விருப்புகளை பகிர, என்னுடன் கிரிக்கட் விளையாட, என்னை சமயங்களில் அழ விட. வாழ்க்கை மகிழ்ச்சியானது. அவளும் மாறலானாள். ஒரு நாள் அவள் மன்னிப்பு கேட்க.. அது தேவையற்றது என்று நான் சொல்ல.. மெல்லவே அவள் நான் விரும்பும் மனைவியாய் மாறி அமைந்தாள்.
இன்று எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும். இப்போதும் சிலநேரம் குழந்தையாய் அடம் பிடிப்பாள் ஆனால் உரிமையோடு. சில சமயம் அவள் போலீசை கூப்பிட இருந்த தருணங்களை நினைவு கூர்ந்து சிரிப்போம்.
நான் மட்டும் எனது வேலையை விட்டு திரும்பாது இருந்தால் எத்துணை மகிழ்ச்சியான வாழ்க்கையை இழந்திருப்பேன்.
வாழ்க்கை எப்போதும் இது போன்ற கஷ்டங்களை கொண்டதே.
ஒன்று நாம் அதை மாற்ற முயல வேண்டும். அல்லது நாமே மாறி விட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
இது உண்மையான கதையா, அல்லது கதையா???
-------------------------------------------------------------------------------------------------------------
கதை அருமையாக இருந்தது...
-------------------------------------------------------------------------------------------------------------
அருமையான கதை அரை...
அப்டீயே உருகிட்டேன்... இந்த மாதிரி எல்லா கணவனும் இருந்துட்டாங்கன்னா, பெண்ணியம் பற்றி யாருமே பேச மாட்டாங்க. என்ன சொல்றீங்க?
-------------------------------------------------------------------------------------------------------------
ரெம்ப நல்லா இருந்துச்சு 1/2 ப்ளேடு.
-------------------------------------------------------------------------------------------------------------
Nanum etha padichi iruken blade. Good story romba yosika vecha story la ethuvum onnu..

உணர்வுகள் சிதைபடாமல் அருமையாக மொழி பெயர்ப்பு செய்துள்ளீர்கள்.
'செந்தமிழும்' நன்றாகவே வருகிறது உங்களுக்கு.
-------------------------------------------------------------------------------------------------------------
i red this forward some time back .. ஆநா தமிழ்ஆக்கம் super தான் .. hats of half-blade
-------------------------------------------------------------------------------------------------------------
வருக சீனு..
இது உண்மைக் கதையென்று சொல்லப்பட்டு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் உலவிக் கொண்டிருந்த கதை. நெகிழ்ச்சியான கதையாயிருந்ததால் மொழிபெயர்த்திருக்கிறேன். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றிகள் வெட்டியாரே.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க ஜி..
/*****இந்த மாதிரி எல்லா கணவனும் இருந்துட்டாங்கன்னா*****/
ஓக்கேதான்.
ஆனா இதே மாதிரி எல்லா பொண்ணுங்களும் சமையல் செய்ய தெரியாம இருந்துட்டா நம்ப சமஉரிம என்ன ஆவறது.
சமஉரிமன்னா ஆண்கள் சமையல் செய்யறமாதிரி பெண்களும் சமையல் செய்யணும் அப்படின்றதுதான்..
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப நன்றி சிறில் அலெக்ஸ் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க சந்தோஷ்..
அன்பால மனங்களை ஜெயிக்க முடியும். தேவை பொறுமை மட்டுமே என்று சொன்ன கதை.
நீங்களும் அந்த மின்னஞ்சல படிச்சி இருக்கீங்களா :))
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி இன்பா...
செந்தமிழும் நாப்பழக்கம்.
தமிழ் மணத்தில் இணைந்ததால் அரைபிளேடும் தமிழ் முழங்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------
நிறைய விஷயம் இருக்குங்க இந்த கதையில!
பெண்கள் கத்துக்க வேண்டியதும் இருக்கு!
ஆண்கள் கத்துக்க வேண்டியதும் இருக்க்!
மொழிபெயர்ப்பையும் சிதறாமல் செஞ்சிருக்கிங்க!
நன்றி!
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி Adiya
மூலம் எளிமையான வார்த்தைகளில் தெள்ளிய நீரோடை போல் இருந்தது.
தமிழென்னும் கைகளால் வரிக்கு வரி அள்ளியதன்றி நாம் ஏதும் செய்யவில்லை. :)
-------------------------------------------------------------------------------------------------------------
அரை
ரொம்ப அருமையான கதை
உண்மையில் உருகவச்ச கதை தான்.
உங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு அருமை.
-------------------------------------------------------------------------------------------------------------
இப்படியும் ஒரு பெண்ணா?
கதை உருக்கமாயிருந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பா நல்ல பதிவு ! ..
-------------------------------------------------------------------------------------------------------------
இனிய புத்தாண்டு கனிய வாழ்த்துக்கள்.
பதிவை பொருத்த வரை - அனைவரும் சொன்னது போல அருமையான மொழிப்பெயர்ப்பு பிளேடு...
-------------------------------------------------------------------------------------------------------------
கதையை சூப்பரா சொல்லியிருக்கீங்க அரை.
-------------------------------------------------------------------------------------------------------------
ஹலோ அரை பிளேடு.
இதோ இன்னொரு காதல் கதை. மெயிலில் சுத்திக்கிட்டு இருக்கு.
Subject: A LOVE STORY...
A love story
There was a blind girl who used to hate
everyone except her
Boyfriend........she always used to say
that I"ll marry you if i could see !!
suddenly one day some one donated her
eyes.......and then when she saw her
Boyfriend......she was astonished to see
that her Boyfriend was also blind........
Her boyfriend then asked...WILL YOU
MARRY ME NOW ?
she simply refused..........
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
Her Boyfriend went away saying....JUST
TAKE CARE OF MY EYES !!
-------------------------------------------------------------------------------------------------------------
திருமணம் என ஆனதும், நான், நீ என்ற போட்டி மனப்பான்மை இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அல்லது மற்றவரைப் புரிந்து கொண்டு நடந்தால், இல்லறத்தில் மகிழ்வுக்கு குறையுமுண்டோ!
நேற்று விஜய் டிவியில் "ஜில்லுன்னு ஒரு ஜோடி" நிகழ்ச்சி பார்த்தேன்.
அதில் வந்த கிறித்துவத் தம்பதிகளில் அந்தக் கணவர், "மணவாழ்க்கையின் வெற்றிக்கு என்ன காரணம்?" என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் சொன்னார்;
"கணவன்; மனைவி, இவர்கள் இருவரும் இடையில் கடவுளைப் பொதுவில் வைத்து, மனசாட்சியுடன் நடந்தால் அத்திருமணம் கண்டிப்பாக வெற்றி பெறும் " என!
அதை இக்கதையில் பார்க்கிறேன்.
திரு நாடோடியின் கதை ரசிக்கும்படி இருந்தாலும் இயற்கையாய் இல்லை!
ஏனெனில், இரு கண்களையும் உயிரோடிருக்கும் ஒருவர் தானமாகக் கொடுக்க முடியாது!
நல்ல கதைக்கு நன்றி, திரு. அ.பி.
உங்கள் பெயரைத் தெரியும்படி சொன்னால் இன்னும் நலமாயிருக்கும் எனக் கருதுகிறேன்!
-------------------------------------------------------------------------------------------------------------
//Nanum etha padichi iruken blade. Good story romba yosika vecha story la ethuvum onnu..//
புரியுது சந்தோஷ்...புரியுது.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தம்பி
ஆணோ பெண்ணோ கற்று கொள்ளவேண்டியது பரஸ்பர புரிதலையும் விட்டுக் கொடுத்தலையுமே.
-------------------------------------------------------------------------------------------------------------
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபிநாத் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
வருக செல்லி..
//இப்படியும் ஒரு பெண்ணா?//
ஒரே குழந்தையாய் இருந்து வளர்க்கப்படும்போது இப்படி ஒரு பெண்ணோ ஆணோ வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.
இவர்களை புரிந்து கொள்ளவேண்டியதே இவர்களின் துணைவர்கள் செய்ய வேண்டியது.
வருகைக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி நண்பர் சுந்தர் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
வருக ஸ்ரீகாந்த் அவர்களே
தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி ஸயீத் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க நாடோடி...
உங்க கதை நல்லாயிருந்தது. இப்பதான் முதல் தடவையா படிக்கிறேன்.
நடக்க வாய்ப்பே இல்லாத கற்பனை கதைதான். ஆனா அந்த ஆணோட அன்பின் ஆழத்தையும், வெறும் வெளித்தோற்றத்தை வைத்து வெறுக்கும் பெண்ணையும் படம் பிடித்துக் காட்டியிருந்தது.
காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வாங்களே. அது இதுதானா.
நம்ம கருத்து
காதல் இதயத்தில் இருக்கட்டும்.
அன்பு கண்ணில் இருக்கட்டும். புன்னகை இதழில் இருக்கட்டும்.
ஆனால் செயல்கள் சற்று சிந்தனையோடு இருக்கட்டும்.
அன்புள்ள தமிழ் சினிமாக்காரங்களே, நாக்கை வெட்டிக்கிட்ட காதல் வரிசையில இந்த கண் கொடுத்த கதைய எடுத்துடாதீங்கப்பா. நல்ல கதைதான் இருந்தாலும் தியேட்டர்ல தாங்காது.
நல்ல கதைக்கு நன்றி நாடோடி அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி எஸ்.கே. அவர்களே...
தெளிவான ஆழமான தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
//நல்ல கதைக்கு நன்றி, திரு. அ.பி.
உங்கள் பெயரைத் தெரியும்படி சொன்னால் இன்னும் நலமாயிருக்கும் எனக் கருதுகிறேன்!//
இதுக்கு பதிலையே காணோம் :)
-------------------------------------------------------------------------------------------------------------
ஆகா. பேர கேக்கறாங்களே..
இங்க பாருங்க. நாம தெகிரியமா வீட்டுக்கு தெரியாம "ஆண் ஏன் அடிமடையனானான்" அப்பிடின்னு எல்லாம் எயுதினு கீறோம்.
நாம பேரை போட்டு வூட்ல கண்டு புடிச்சிட்டாங்கன்னா நீங்களா வந்து காப்பாத்துவீங்க...
-------------------------------------------------------------------------------------------------------------
i am the exact copy of the heroin.... u made me cry
-------------------------------------------------------------------------------------------------------------
அனானியாக வந்த சகோதரி..
//i am the exact copy of the heroin.... u made me cry //
பெற்றோரின் நிழலில் உலகம் அறியாமல் வளருதல் ஆண் பெண் இருவருக்கும் நிகழகூடிய ஒன்று. தேவை புரிதலும் அன்பும்.
வாழ்க்கை விலகி ஓடுவதல்ல.
அன்பால் வெல்லப்பட வேண்டியது.
வள்ளுவம் சொன்னது போல் அன்பும் அறனும் நிறைந்து தங்கள் இல்வாழ்க்கை பண்பும் பயனும் பெற வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment