Wednesday, January 03, 2007

கல்யாணம் அனுபவஸ்தர்கள் வார்த்தையில்..

கல்யாணம் அனுபவஸ்தர்கள் வார்த்தையில்..

1. கல்யாணம் அப்படின்றது தவணமுறைத்திட்டம் மாதிரி. ஒரு தடவ மாட்டிக்கிட்டா காலம் முழுசும் கடன கட்டிக்கிட்டே இருக்கணும்.

2. கல்யாணம் என்பது ஆணுடைய பேச்சுரிமையை சட்டப்படி முடக்கும் சதி.

3. கல்யாணம்ன்றது கூண்டு மாதிரி. வெளிய இருக்க பறவைங்க எப்படி உள்ள போறது அப்படின்னு பார்க்கும். உள்ள இருக்க பறவைங்க எப்படிடா வெளிய போவோம்னு பார்க்கும்.

4. கல்யாணம்ன்றது நாம எப்படி இருந்தம்னா பொண்டாட்டிக்கு புடிக்கும் அப்படின்னு காலமெல்லாம் தெரிஞ்சிக்கிற முயற்சி.

5. கல்யாணம்ன்றது சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுது. அதே மாதிரிதான் புயல் இடி மழை எல்லாமே.

6. கல்யாணம்ன்றது இரண்டு பேரு ஒருத்தர் இன்னொருத்தரை எப்படி ஏமாத்தறதுன்னு காலமெல்லாம் கண்டுபுடிக்கிற முயற்சி. - Vicki Baum

7. கல்யாணம்ன்றது சிறந்த கண்டுபிடிப்பு. சைக்கிள் ரிப்பேர் கிட் மாதிரியே. - Billy Connolly

8. கல்யாணம்ன்றது சராசரி மனுசனுக்கு அதிக செலவு செஞ்சி அவனோட துணிய துவைச்சு வாங்கற விஷயம். - Burt Reynolds

9. கல்யாண மோதிரம்ன்றது சின்ன சைஸ் கைவிலங்கு.

10. கல்யாணம் பண்ணிக்கங்க. நல்ல பெண்ணா கிடைச்சா நீங்க சந்தோஷமா இருப்பீங்க. இல்லாட்டி உலகத்துக்கு ஒரு தத்துவ ஞானி கிடைப்பார். - சாக்ரடீஸ்.

-----------------------------------------------------------

18 comments:

said...

அ.பி,
பேசாம சன்னியாசியா போயிடுனு சொல்றீங்க ;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வெட்டி...

நாம சன்னியாசியா போயிடுன்னெல்லாம் சொல்லலை.

அடுத்தவங்க அனுபவத்துல இருந்து கத்துக்கிட்டு தெகிரியமா எதிர்த்து நிக்கறாம் பாருங்க அவன்தான் வீரன்.

அந்த வகையில இந்த அரைபிளேடு மாவீரனாக்கும்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
அடுத்தவங்க அனுபவத்துல இருந்து கத்துக்கிட்டு தெகிரியமா எதிர்த்து நிக்கறாம் பாருங்க அவன்தான் வீரன்.

அந்த வகையில இந்த அரைபிளேடு மாவீரனாக்கும்...
//

உங்க வீட்ல இந்த விஷயம் சொல்லப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏன்யா இந்த கொலவெறி உமக்கு....

போருக்கு போகலாம்னு கத்திய தூக்குற வீரன்கிட்ட, 'எலேய்.. அங்குட்டு துப்பாக்கி வச்சிருப்பானுவல'ன்னு பீதிய கெளப்புறீறே...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெட்டி அவர்களே..

/****உங்க வீட்ல இந்த விஷயம் சொல்லப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்:-)
****/


ஹி.. ஹி.. நீங்களும் நானும் தோஸ்த் இல்லியா..

எனக்கு தெரியும்... நீங்க சொல்ல மாட்டீங்க... நீங்க ரொம்ப நல்லவரு.

:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அன்பு ஜி..

தலைகளை பூப்பந்தாய் உருட்ட வந்த என் மாவீரனே...

பீரங்கிகளுக்கே பயப்படாத கட்டபொம்மன் வழி வந்த நீ கேவலம் துப்பாக்கிக்கு பயப்படுவதா.

தூக்கு மேடைகள் நாம் தூங்கும் மேடைகள்.
துப்பாக்கி சத்தம் நம் தாலாட்டு.

துணிந்து செல். வராலாற்றில் தியாகியாய் புகழப்படுவாய்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஹி.. ஹி.. நீங்களும் நானும் தோஸ்த் இல்லியா..

எனக்கு தெரியும்... நீங்க சொல்ல மாட்டீங்க... நீங்க ரொம்ப நல்லவரு.

:))//

இனிமே மாவீரன், தளபதினு தலைவர் படம் பேரா சொல்லிக்கிட்டு திரியாம இருக்குற வரைக்கும் நீங்க பயப்படத்தேவையில்லை என்பதை நேசமுடன் தெரிவித்து கொள்கிறேன் ;)

//தூக்கு மேடைகள் நாம் தூங்கும் மேடைகள்.
துப்பாக்கி சத்தம் நம் தாலாட்டு.

துணிந்து செல். வராலாற்றில் தியாகியாய் புகழப்படுவாய்.//
இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரணகலப்படுத்திடறாங்கப்பா :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

Sour grapes nu solvadai pola irukku.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தியாகி அரை பிளேடு அவர்களே

நன்றிகள்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

Marriage is the only adventure open to the cowardly
Voltaire (1694 - 1778)

என் பங்குக்கு ஒன்னு.என்ன அரை பிளேடு உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதோ?ரொம்ப நொந்துப் போய் எழுதி இருக்கிங்களே!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வெட்டி அவர்களே...

மாவீரனா, தளபதியா, நானா? யார் சொன்னது?

ஹி... ஹி....
(யப்பா தப்பிச்சோம்டா சாமி..)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக srina அவர்களே...

திராட்சைக்காக குள்ள நரிகள் குதித்து பார்த்து திரும்பியிருக்கும். கொடுத்து வைத்தவை. ஆனால் திரும்ப முடியாமல் எமது கால்கள் கட்டப்பட்டு அல்லவா கிடக்கின்றன.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத் அவர்களே..
நமது தியாகத்தை கண்டு கொண்ட உங்களுக்கு தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

இபடியே எழுதினிர் ... உமக்கு எவனும் பொண்னு கொடுக்க மாட்டான் ... சொல்லிபுட்டேன்-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க துர்கா அவர்களே..

நாம நொந்து போய் எல்லாம எழுதலீங்க.. பெரியவங்க சொல்றாங்க.. நாம கண்டுக்கறோம்.. அவ்வளவுதான்.

தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

யோவ் அரை அசத்துறிங்க (வீட்டில் இதுவரை தெரியவில்லை என்பது புரிகிறது..நீர் திருந்தமாட்டீர்லே ) ;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சுந்தர் அவர்களே...

/*********
இபடியே எழுதினிர் ... உமக்கு எவனும் பொண்னு கொடுக்க மாட்டான்
***********/

ஏற்கனவே என்னை எங்க வீட்டுல பையனா தூக்கி குடுத்துட்டாங்க...

அட.. கல்யாணம் ஆயிருச்சிங்க..

(பொண்ணு கொடுக்கறது மாதிரி... ஆண்களை சொல்லணும்னா பையன கொடுக்கறது. ஓக்கேவா)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தூயா. வருகைக்கு நன்றி.

நியாயாமான நேர்மையான நம்ம எழுத்துங்களுங்கு வந்த சோதனை இது. வீட்டுக்கு தெரியாம எழுத வேண்டியிருக்குது.

ஒரு ஆண் எப்ப வீட்டுக்கு பயப்படாம
சுதந்திரமான தன்னோட கருத்தை சொல்ல முடியுதோ, அப்பதான் உண்மையான சமஉரிம மலர்ந்ததா அர்த்தம்.

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------