Thursday, January 18, 2007

காதல் தடவி கீசிய கவிஜைகள்..

(இந்த கவிதைகள் பேனாவால் எழுதப்பட்டவை அல்ல.
அரைபிளேடால் காதல் தடவி கீசப்பட்டவை.)

நீ தலைவாரினாய்
நட்சத்திரங்கள் சிதறின.
பொடுகு.

*****

எனது உயிர்
உனக்கே உனக்கு..
சொல்லிவிட்ட பின்பும்
ஏன் உயிர் எடுக்கிறாய்.

*****

சில்லறையை சிந்தியது
போல் சிரித்தாய்...
இந்த சிரிப்புக்காக
சிந்தப்பட்ட சில்லறைகளின்
கணக்கெழுதியபடி நான்.

*****

உயிர் பெற்று உலாவும்
சித்திரப்பாவை நீ.
கேலிச்சித்திரங்கள்
எனக்கு பிடித்தமானவை.

*****

நீ சமைத்த உணவு.
சாப்பிடும் போது
சிரித்தேன்.
ஏனென்றாய்.
துன்பம் வரும் வேளையில்
சிரிக்க சொன்ன வள்ளுவரை
நீ அறிய மாட்டாய்.

*****

வருத்தம் வரும்போது
உனது புகைப்படத்தை
பார்த்தால்
என் வருத்தம்
பறந்து ஓடும்.
உன்னை விட பெரிய
வருத்தம் என் வாழ்க்கையில்
வர வாய்ப்பேயில்லை.

*****

14 comments:

said...

சூப்பர் கவிதைகள்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பி,
படித்த போது சிரிக்க வைத்த நல்ல கவிதைகள்.

/* நீ சமைத்த உணவு.
சாப்பிடும் போது
சிரித்தேன்.
ஏனென்றாய்.
துன்பம் வரும் வேளையில்
சிரிக்க சொன்ன வள்ளுவரை
நீ அறிய மாட்டாய். */

என் அனுபவத்தை கவியாக்கியிருக்கிறீர்கள் போல இருக்கே!:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வழக்கம் போல் அருமை!!!

இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கு...
வெரைட்டி வேணும்...

ஆண் பெண் பிரச்சனைய விட்டு வெளிய வாங்க :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கண்ணே!
நீ அரபிளேடுபோல
ஒருபக்கம் வெட்டி வெட்டி நடக்கிறாய்
பாதிதான் ஷார்ப்பாயிருக்கிறாய்
இன்னொருபக்கம் வளைவு சுளிவுகளோடு
மொக்கையாயிருக்கிறாயே.

==========

உன்னை கண்னே என்றேன்
அடுத்த நாளே கண்னாடி போடவேண்டியிருந்தது

நிலவே என்றேன்
என் பெயர் அமாவாசை என்பதால்

உலகே என்றேன்
வேறு யாரையோ நீ சுற்றி வந்தாய்

மலரே என்றேன்
கள் உண்ண பாருக்கு அழைத்தாய்
===

அடடா செம இன்ஸ்பிரேசனுங்க உங்க கவுஜ..வெட்டிப்பய சொல்றமாதிரி வெரைட்டியா முயலுங்க.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி நாமக்கல் சிபி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வெற்றி

//என் அனுபவத்தை கவியாக்கியிருக்கிறீர்கள் போல இருக்கே//

உங்க அனுபவமுமா ?

அது சரி. ஆண்கள் எப்போதும் பெண்களின் சமையலுக்கு பரிசோதனை எலிகள் தானே. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக வெட்டி...

நன்றி....

உலகம் உள்ளவரை உயிர்த்திருக்கும் உயர்ந்த பொருள் காதல்.

காதலை சொல்லாதது கவிதையில்லை.
காதலை பாடாதவன் கவிஞனேயில்லை.

இந்த அரைபிளேடு கவிஞன்.

சரி.. சரி.. கவிதையை விட்டு வெளியே வந்து வெரைட்டி காட்டுவோம்.. :))

இருந்தாலும் கவிஜ அப்பப்ப எட்டி பார்க்கும்... :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்ம கவிஜைக்கு எதிர் கவிஜை போட்ட சிறில் அலெக்ஸ் வாழ்க...

கவிதை மழை பொழிந்த நீர் கவி மேகமே :)))

தங்களின் கவிஜைகளுக்கு நன்றி.. நன்றி.. நன்றி...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

/*
வருத்தம் வரும்போது
உனது புகைப்படத்தை
பார்த்தால்
என் வருத்தம்
பறந்து ஓடும்.
உன்னை விட பெரிய
வருத்தம் என் வாழ்க்கையில்
வர வாய்ப்பேயில்லை.
*/
அடங்கொய்யால ... மொத்தமாத்தான் கெளம்பீட்டீங்களா :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அரை பிளேடு said...

வருக வெட்டி...

நன்றி....

உலகம் உள்ளவரை உயிர்த்திருக்கும் உயர்ந்த பொருள் காதல்.

காதலை சொல்லாதது கவிதையில்லை.
காதலை பாடாதவன் கவிஞனேயில்லை.

இந்த அரைபிளேடு கவிஞன்.

சரி.. சரி.. கவிதையை விட்டு வெளியே வந்து வெரைட்டி காட்டுவோம்.. :))

இருந்தாலும் கவிஜ அப்பப்ப எட்டி பார்க்கும்... :))//

அ.பி,
இங்க நான் காதலை பற்றியோ கவிதையை பற்றியோ எதுவும் பேசவில்லை...

நீங்க ஒரு வட்டத்துல சிக்கிரீங்கனு பார்த்தேன்... அதுதான் வேணாம்னு சொன்னேன்...

கல்யாண ராமன் மாதிரி ஒரு நல்ல நாடக டைப் கதை கொடுங்க... இல்லை புதுசா எதாவது கொடுங்க...

ஒரே மாதிரி இருந்தா சரி இதை பத்திதானே எழுதியிருப்பார் பொறுமையா வந்து படிச்சிக்கலாம்னு தோணும்...

வாசகர் விருப்பம்...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்தான் இருக்கவேண்டும்.நீங்கள் இப்போது எழுதுவதுபோல எழுதினால் நல்லதே!பல துறையில் வெறும் புள்ளி மட்டும் வைப்பதைவிட,ஒரு துறையில் கோலம் போடத்தெரிந்த
வல்லவனாக(!) இருப்பதே சிறப்பு.
புள்ளி வைப்பதற்கு பலர் இருக்கிறார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அன்புள்ள வெட்டி

வாழ்க்கை ஒரு வட்டம்.
நாம எவ்வளவு தூரம் வேணும்னாலும் போகலாம். ஆனா அப்பவும் அந்த வட்டத்துக்குள்ளாறதான் இருப்போம்.
(அரைபிளேடு தத்துவம் ஆயிரத்தி ஒண்ணரை)

நாம அப்பப்ப கொஞ்சம் தூரம் கட்டாயம் போவோம். வட்டமும் கூடவே வளரும்.

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அனானி..

புள்ளி. கோலம். வட்டம்.

ஒரே ஒரு புள்ளியை சுற்றி வரையப்படுவது வட்டம்.

பல புள்ளிகளை சுற்றி வரையப்படுவது கோலம்.

வட்டம் வட்ட வடிவமானது.
கோலம் கோல வடிவமானது.
(அரைபிளேடு தத்துவம் ஆயிரத்தி இரண்டரை).

வட்டங்களும் கோலங்களும் அலுத்துவிட்டன.

இனி சதுரங்களையும் முக்கோணங்களையும் முயற்சிக்க இருக்கிறேன்.

அடிப்படைத்தேவை அதே கோலமாவு மற்றும் முழு ஜல்லி. அவை இருக்கும் வரை கவலையில்லை.

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆனா இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.

உங்க wife ரொம்ப பாவம்.

அவங்களுக்காக நாங்க கூட்டுப்பிரார்த்தனை செய்யறோம்....

-------------------------------------------------------------------------------------------------------------