Monday, January 22, 2007

ஆ. ஏ. அ. ஆனான் 8. - சமஉரிமைகளின் சகாப்தம் - நிறைவு..

"திருமணம் என்பது இரண்டு முதலாளிகள் இரண்டு அடிமைகள் ஆக மொத்தம் இரண்டு பேர்."

ஆக குடும்பம் என்ற அமைப்பு நன்றாக செயல்பட இரண்டு அடிமைகள் தேவைப்படுகிறார்கள்.
ஆணும் இங்கு அடிமையே.

"மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாக பிறக்கிறான். ஆனால் எங்கோ கண்ணுக்கு தெரியாத சங்கலிகளால் கட்டப்படுகிறான்".

அந்த சங்கிலிகள் ஆண் என்றால் பெண். பெண் என்றால் ஆண்.

பெண் மட்டும்தான் அடிமையாக இருக்கிறாள் என்றும் ஆண்கள் அனைவரும் சுதந்திர புருஷர்கள் என்றும் நிறுத்தப்பட்டுள்ள தவறான பிம்பத்தை உடைக்கவே இந்த கட்டுரைத் தொடர்.
நிறையவே எழுதும் எண்ணம் இருந்துது. ஆனால் பெண்களைப்போல் ஆண் அடிமைத்தளையிலிருந்து விடுபட விரும்புவதில்லை.
அவன் என்றும் பெண்ணின் அன்புச் சிறையில் அடிமையாக இருப்பதையே விரும்புகிறான்.

"தான் களைத்து வீடு திரும்பினால் தன்னை அன்போடு கவனித்துக்கொள்ள ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை செலுத்துகிறது.".
அவனுடைய வாழ்க்கை முறையே அந்த ஒருத்திக்காக சுழலத்துவங்குகிறது.

இன்று இருவரும் பணி செய்யும் சூழலில் இருவரும் களைத்து திரும்ப ஒருவரை ஒருவர் கவனிக்க இயலாத சூழலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆணோ பெண்ணோ அன்பிற்காக விட்டுக் கொடுப்பதுதான் வாழ்க்கை. அது அடிமைத்தளையாகாது.

தவளையும் எலியும் கயிறால் கட்டப்பட்ட கதையை படித்திருப்பீர்கள். தவளை தண்ணீருக்கு இழுக்க எலி தரைக்கு இழுத்ததாம். தவளைகள் தரையிலும் இருக்க பழக்கபட்டவை. தண்ணீருக்குள் இருக்க முடியாத எலிகள் மிக மிக பரிதாபமானவை. சமயத்தில் தவளைகள் கை ஓங்குகிறது. எலிகள் தண்ணீரில் மூச்சு திணருகின்றன. தண்ணீருக்கு போகாதே என்று எலி தவளையிடம் சொல்லவும் கூடாது. அதே போல் தண்ணீரில் மூழ்கு என்று எலியை தவளை நிர்ப்பந்திக்கவும் கூடாது. எத்துனைதான் சமவாய்ப்பு கொடுத்தாலும் எலிகள் தவளைகளாக முடியாது.. தவளைகள் எலிகளாக முடியாது. விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை இரண்டும் புரிந்து கொண்டால் பிரச்சனையில்லை.


"வார் ஆஃப் த செக்ஸஸ்" காலத்துக்கும் உள்ள பிரச்சனையே. ஒருவர் வெல்வது மற்றவர் தோற்பது என்பது தனிப்பட்ட நபர்களின் திறமையை பொறுத்ததாகவே உள்ளது. வீடு மதுரையா சிதம்பரமா என்ற சொற்றொடர் இதையே குறிக்கிறது.

வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தான் வேதாளத்தை அன்பால் வசப்படுத்தவேண்டும். அது ஆண் வேதாளமாக இருந்தாலும் சரி பெண் வேதாளமாக இருந்தாலும் சரி.

பெண் முன்னேற்றம் என்பது ஆண்களைப்போல் பெண்ணும் சுதந்திரமாக தனியாக இரண்டாம் ஆட்டம் பார்ப்பதோ.. அல்லது பெண்களுக்கும் பிரத்யேகமான ஃபில்டர் சிகரெட்டுகளோ.. அல்லது பார்ட்டிகளும் பார்களுமோ என்ற எண்ணம் நிச்சயமாக என்னால் ஒத்துக்கொள்ள முடியாதது. ஏனெனில் எனது குறுகிய மனப்பான்மை என்பதை நான் இங்கு ஒத்துக் கொள்கிறேன். இந்த எண்ணம் ஆணாதிக்க (!!!) எண்ணமோ என்னவோ நானறியேன்.

என்னைப் பொறுத்த வரையில் சமஉரிமை என்பது.. "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக" வாழ்தல். எனவே உரிமைகள் அதிகம் உள்ள ஆண்களே பெண்களுக்கு உரிமை தாருங்கள். அதே போல் உரிமை அதிகம் உள்ள பெண்களே ஆண்களுக்கு உரிமை தாருங்கள்.
அவ்வளவே !!!!

(முற்றும்)

-----------------------------------------

(இனி நமது ஆணுரிமைக்குரல் இங்கு கேட்காது என்பதை இக்கணத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
ஊரிலிருந்து வாழ்க்கைத் துணை திரும்பிவருவதால் நமது எழுத்து சுதந்திரம் தணிக்கைக்கு உட்படும்.
குடும்ப பாரம் காரணமாக பதிவுகள் போடும் வேகம் மட்டுப்படும்.
எனவே இனி இப்பக்கங்கள் சமஉரிமையை பேசாது இனி முடிந்த வரை ஜல்லியாகவே இருக்கும்.
ஜல்லிகள் துவங்கி விட்டன என்பதற்கு எனது முந்தைய பதிவே சான்று :) )

19 comments:

said...

சரியான முடிவு எடுத்திருக்கீங்க.. அப்புறம் பூரிக் கட்டைய யார் தடுக்குறது... :)) (இது பேர் ஸ்மைலி)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜி..
பூரிக்கட்டைகளுக்கு பயந்தவனில்லை நான்.

பூரிக்கட்டையை ஒளித்து வைக்கும் வித்தை தெரிந்த எனக்கு அதன் மீது பயம் ஏது :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

எப்படி பிளேடு சார் இந்த மாதிரி தத்துவத்தை எல்லாம் இவ்வளவு எளிமையாகச் சொல்கின்றீர்கள்?எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது.எல்லாம் ஆனந்த கண்ணீர்தான் சார்.
//என்னைப் பொறுத்த வரையில் சமஉரிமை என்பது.. "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக" வாழ்தல். எனவே உரிமைகள் அதிகம் உள்ள ஆண்களே பெண்களுக்கு உரிமை தாருங்கள். அதே போல் உரிமை அதிகம் உள்ள பெண்களே ஆண்களுக்கு உரிமை தாருங்கள்.
அவ்வளவே !!!!//
you are right about this. :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

1 சின்ன கருத்து வேறுபாடு..

உங்களது மனப்பான்மை குறுகியதா, இல்லை பெரியதா என்பது முக்கியம் அல்ல, நான் சொல்ல விரும்புவது இன்றைய பெண்கள் அனைவருக்கும் சுதந்திரம் என்பது நீங்கள் சொன்ன - சிகரெட்டுகளோ.. அல்லது பார்ட்டிகளும் பார்களுமோ மட்டும் அல்ல. வீட்டில் சம உரிமை என்பது, கருத்துக்கும், ஒரு முடிவு எடுக்கும் போது கலந்து பேச இடம் கொடுப்பதும் தான். இவை இரண்டும் பெறுவதற்கே நிறைய பெண்களால் முடிவதில்லை!-------------------------------------------------------------------------------------------------------------
said...

//"மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாக பிறக்கிறான். ஆனால் எங்கோ கண்ணுக்கு தெரியாத சங்கலிகளால் கட்டப்படுகிறான்".//

inga thaan nikkuraaru arai blade

senshe-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி துர்கா அவர்களே...

சமஉரிமை குறித்த நமது தெளிவான பார்வை தங்களுக்கும் இருப்பதில் மகிழ்ச்சியே.

தாங்ஸ் :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி தீக்ஷன்யா அவர்களே.

முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கு இல்லையா. காலம் பெருமளவு மாறிவிட்டது.

பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது எப்படி திருமணம் செய்வது போன்ற சிறிய முடிவுகளை பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

அடுத்த முதல்வர் யார் அடுத்த பிரதமர் யார் என்கிற மிகப் பெரிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது.

ஒரு சில இடத்தில் அந்த முடிவுகளை கூட எடுக்க முடியாதவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். எனவே நான் முன்னமே சொன்னது போல் உரிமைகள் அதிகம் இருப்பவர் குறைவாக இருப்பவருக்கு அளித்து முடிவெடுப்பதில் அவருக்கும் பங்கு அளிக்க வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி.

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சென்ஷி

திருமணங்களில் தாலி என்னும் புனிதமான கயிற்றை ஆண் கட்டுகிறான்.

கட்டுபவனே கட்டுறும் விந்தை இங்குதான் நிகழ்கிறது. அது அவனையும் சேர்த்தே கட்டி விடுகிறது.

குடும்பம் மனைவி என்ற பல சங்கிலிகள் பல தளங்களிலும் அவனை கட்டி விடுகின்றன. அந்த குடும்பத்திற்காக ஆயுசுக்கும் உழைத்தே அவன் சாகிறான். ஆணும் பரிதாபத்திற்கு உரியவனே.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//எனவே உரிமைகள் அதிகம் உள்ள ஆண்களே பெண்களுக்கு உரிமை தாருங்கள். அதே போல் உரிமை அதிகம் உள்ள பெண்களே ஆண்களுக்கு உரிமை தாருங்கள்//

நான் ரெண்டாவது ரகம்...உரிமைக்காக காத்து இருக்கிறேன் :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

hi araiblade
naa-------------------------------------------------------------------------------------------------------------
said...

hi araiblade
nalla padivugal...
naan pennaaga irunthalum ungaloda karuthukal anaithukum naan thalai saikiren...anaithum unmai...
rendu sidelayum thappum iruku rightum iruku.. ana ippo ellam pengal thaan adigama alumai seiyaranga... aduvum koranja ellam seriyagividum... ellorukum sama urimai kitta andavanai prarthipom-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு,
உங்க புது டெம்ப்ளேட் படா ஷோக்காக் கீதுபா.. குருபக்திய டீல்ல வுட்டுக்கினியா? ;)

//ஊரிலிருந்து வாழ்க்கைத் துணை திரும்பிவருவதால் நமது எழுத்து சுதந்திரம் தணிக்கைக்கு உட்படும்//
அடப்பாவமே. இனிமே ப்ரோபைல்ல கால் பிளேடு படம் தானா? ;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஷ்யாம்...

நாட்டாமைக்கே உரிம இல்லியா..
நாடு ரொம்பவே கெட்டு போயிருக்கு...

:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி டுபுக்கு டிசிப்பிள் அவர்களே..

உங்கள மாதிரி சமஉரிமை பார்வையாளர்கள் இருக்கறதாலதான் நாட்டுல இன்னும் மழை பெய்யுது..

ரொம்ப தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க பொன்ஸ்..

டெம்ப்ளேட்ட பாராட்டுனதுக்கு தாங்ஸ்.

குருநாதர் போட்டோ பார்த்து நிறைய பேரு கன்ஃப்யூஸ் ஆவுறாங்கோ. இன்னாபா இது பிளேடு முழுசா கீதேன்னு.

யோசிச்சு பார்த்தப்ப நம்ம குரு நம்ம மனசுலயே இருக்காரு. எனக்கு விளம்பரம் வேணாமின்னு அவரே வேற சொல்லிட்டாரு. அவ்வளவு தங்கமான மனுசன்.

அதனாலதான் நம்ம படம் :)))

வீட்டுக்கு நம்ம கதை தெரியாத வரிக்கும் ஃப்ரொபைல்ல அரைபிளேடு முழுசா இருக்குங்க. :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு
உங்க படைப்புக்கள தமிழோவியத்துல பாத்தேன் மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரெம்ப சார்ப்பாக்கீதுபா!-------------------------------------------------------------------------------------------------------------
said...

enna thala... veetamma vanthathula irunthu oru pathivaiyum kanoam.. unga posts ellathaiyum paditchitaangala enna? ;))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா இருந்துதுங்க அரைபிளேடு.

தவளை எலி உதாரணம் சூப்பர் :)))-------------------------------------------------------------------------------------------------------------