Thursday, January 11, 2007

நான் யூத் இல்லியா ??????????நண்பர் ஒருவர் நம்மை யூத் இல்லையென்றும் அதனால்தான் காதலையும் காதல் கவிதைகளையும் நம்மால் உணர முடியவில்லை என்று சொல்லி விட்டார்...

அய்யகோ.. நான் இளைஞன் இல்லையா..

காதல் கவிதை எழுதித்தான் நான் இளைஞன் என்று நிரூபிக்க வேண்டுமா...
இதோ இளஞ்சிங்கம் சிலிர்த்து எழுந்து.. காதல் கவிதை படைக்கிறது...
காதல் கவிதைகளில் என் வாசம். சுவாசம். நேசம். பாசம்... எல்லாம்..
இனி இந்த பக்கம் முழுதும் காதல்.. காதல்.. காதல் மட்டும்.....


-------------


அன்பே அங்கே பார் அழகான எருமைகள்..
குதித்தாடும் குரங்குகள்...
அருமையான கழுதைகள்..
சுதந்திரமான காகங்கள்...
இயற்கை எத்துணை அழகானது..
உன்னைப் போலவே.

---------------

உன் கைவளையல்கள்
எத்தணை கெடுத்துவைத்தவை.
உன் கைகளிலேயே இருக்கின்றனவே (! ஆச்சர்யக் குறி..)

-------

உன் முகத்தை பார்க்கும் போது
என் பாட்டியின் நியாபகம்.
எனது பாட்டி போடும் சுண்ணாம்பு...

--------

தமில் படிக்க தெர்யாது..
என்று நீ சொன்ன கணங்கள்..
லண்டன் மகாராணியையே
காதலிப்பதாய் நான் உணர்ந்த கணங்கள்..

-------

மாயாஜாலில் நாம்..
அசினை நானும்..
சூர்யாவை நீயும்..
கண்டு ரசித்த கணங்கள்..
மரணம் வரை மறக்காது கண்மணியே...

--------

அழகான ராட்சசியே...
இதில் பாதி பொய்..
பாதி மெய்...
எந்த பாதி நீ என்று நான் சொல்ல வேண்டுமா?

--------

உனது குறும்புகள் எனக்கு
மிகப் பிடிக்கும்..
குறிப்பாக சர்வர்
பில் கொண்டு வரும்போதெல்லாம்
நீ காணாமல் போவது..

--------

உனக்காக எத்தனை முறை
வேண்டுமானாலும் இறப்பேன்..
மலைகளை நகர்த்துவேன்..
கடல்களை குடிப்பேன்...


ஹி..ஹி.....
பில் கட்டிய பிறகு
என்னிடம்வேறு காசு இல்லை..
பஸ்ஸிற்கு மூன்று ரூபாய் மட்டும்...
ஹி..ஹி.....

-----(காதல் பெருகி பண்டல்களாக நான் எழுதிய கவிதைகள் குவிந்து கிடக்கின்றன.. அந்த கவிதைகளை இனி அவ்வப்போது வலையேற்ற உள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.)..
நாமளும் கவிஞ்சர் ஆயிட்டமுல்ல.... :)))))60 comments:

said...

வாரே வா.. என்னே கிண்டல் தொனிக்கும் கவிதைகள்.. இன்னும் கவிதைகளா.. ஆவலோடு இருக்கிறோம் பிளேட்

இது தான் ரொம்ப பிடித்தது

//தமில் படிக்க தெர்யாது..
என்று நீ சொன்ன கணங்கள்..
லண்டன் மகாராணியையே
காதலிப்பதாய் நான் உணர்ந்த கணங்கள்..
//-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாரம் ஒரு பிரச்சனைய கைல எடுக்கறதுனு முடிவு பண்ணிட்டீங்க...

//நண்பர் ஒருவர் நம்மை யூத் இல்லையென்றும் அதனால்தான் காதலையும் காதல் கவிதைகளையும் நம்மால் உணர முடியவில்லை என்று சொல்லி விட்டார்...

அய்யகோ.. நான் இளைஞன் இல்லையா..//

என்னையா கேக்கறீங்க??? உண்மைய சொல்லலாமா???

சரி.. உங்க கவிதையே காட்டி கொடுக்குதே ;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏன்யா இந்த கொலவெறி? ஆஹா! இப்பவே உமக்கு இந்த நையாண்டினா, காலேஜ் படிக்கும்போது என்னல்லாம் பண்ணிருப்பீரூ?-------------------------------------------------------------------------------------------------------------
said...

எத்த*ணை* *கெ*டுத்துவைத்தவை ???

:-(-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆகா.. வாருங்கள் கார்த்திகேயன்..

எனது கவிதைகள் தங்களுக்கு பிடித்ததில் மெத்த மகிழ்ச்சி...

அப்பாடா அப்ப நாம யூத்துதான் :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வெட்டிப்பயல்

//வாரம் ஒரு பிரச்சனைய கைல எடுக்கறதுனு முடிவு பண்ணிட்டீங்க...//

அரைபிளேடு யூத்தா இல்லியா அப்படின்றது அவ்ளோ தலை போற பிரச்சனையா என்ன :))

//என்னையா கேக்கறீங்க??? உண்மைய சொல்லலாமா???//

நீங்கதான் அந்த நண்பர்னு நான் யாருகிட்டயும் சொல்லலை... நீங்களும் சொல்லிக்காதீங்க.. சரியா..

//சரி.. உங்க கவிதையே காட்டி கொடுக்குதே ;) //

அச்சச்சோ.. நம்ம வயசை கவிதையில எங்கயாச்சும் எயுதிட்டமா இன்ன...

யப்பா இல்லப்பா :))

அப்புறம் நம்ம இளம ததும்பும் கவிதைங்கள பத்தி நீங்க எதுவும் சொல்லலியே :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

சரியான "உள்குத்து" காதல் கவிதை...உங்களோட காதல் மழைல நனைஞ்சு ஒரே "ஜல்ப்பு" போங்க :)...

ஒரு சிறு திருத்தம்:

//எத்தணை கெடுத்துவைத்தவை.

எத்தனை கொடுத்துவைத்தவை.

Reps-'கணங்கள்'..தவிர்த்திருக்கலாமோ?

//என்று நீ சொன்ன கணங்கள்..
//கண்டு ரசித்த கணங்கள்..
காதலிப்பதாய் நான் உணர்ந்த கணங்கள்..

அது சரி, இத பார்த்துட்டு உங்க நண்பர் நீங்க 'ஒரு இளைஞன்' அப்டினு ஒத்துகிட்டாரா இல்லையா?

நா இன்னா சொல்றேன்னா... ப்ளேடு ஒரு கவிஞர்ர்ர்...இளைஞர்ர்ர்..வலைஞர்ர்ர்....
:)
நட்புடன்,
ராஜ்-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக லதா...

//எத்த*ணை* *கெ*டுத்துவைத்தவை ???
//


என்னங்க இது... நவீன கவிதைன்னா எயுத்து பிழை இருக்கும்ன்ற பேசிக் கிராமர் கூட தெரியாம இருக்கறீங்களே... ஆனா இங்க எயுத்து பிழை எதுவுமில்லீங்கோ..

அப்பாலிக்கா...

"கெடுத்துவைத்தவை" தான் கான்சப்டே...

பின்ன நாம இருக்க வேண்டிய கையில நாம இல்லாம அந்த வளையல் இருக்குன்னா கெடுத்து வெச்ச வளையல்தானே அது... :))

எனது காதலியை எனக்கு பதிலாக..
"எத்தி (ஏய்த்து) அணைத்து கெடுத்து வைத்த வளையல்கள்" என்பதுதான் பொருள்.

எத்தி + அணை = எத்தணை :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

hello youth, kavithai superuma...

Top 1
//
அழகான ராட்சசியே...
இதில் பாதி பொய்..
பாதி மெய்...
எந்த பாதி நீ என்று நான் சொல்ல வேண்டுமா?
//

Top 2

//
மாயாஜாலில் நாம்..
அசினை நானும்..
சூர்யாவை நீயும்..
கண்டு ரசித்த கணங்கள்..
மரணம் வரை மறக்காது கண்மணியே...
//


Top 3
//

தமில் படிக்க தெர்யாது..
என்று நீ சொன்ன கணங்கள்..
லண்டன் மகாராணியையே
காதலிப்பதாய் நான் உணர்ந்த கணங்கள்..
//-------------------------------------------------------------------------------------------------------------
said...

நானும் லதா போல தெர்யாது சொல்லிட்டேன்....நம்மள கொஞ்சம் மன்னிச்சிடுபா...
விரிவாக்கம் கேட்டு தமிழ் தாய்க்கு இந்நேரம் சிலிர்த்திருக்கும்...சந்தோஷத்தில தான்...:)

-ராஜ்-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ராஜாதி ராஜ்...

எனது பாட்டில் சொல் குற்றமா :))

//எத்தணை கெடுத்துவைத்தவை.

விளக்கத்தை மேலே பின்னூட்டத்தில் காணவும்.

கணங்கள் என்பதே சரி.. கனங்கள் என்றால் வெயிட்டுகள் என்று அர்த்தம் ஆகும் :))

காதல் மழையில் நனைந்த உங்களுக்கு மிக்க நன்றி...

//நா இன்னா சொல்றேன்னா... ப்ளேடு ஒரு கவிஞர்ர்ர்...இளைஞர்ர்ர்..வலைஞர்ர்ர்....//

எனது அருமை நண்பரே.. கேட்குதா.. :))

உங்க சர்ட்டிபிகேட்டுக்கு ரொம்ப ரொம்ப தாங்ஸ்ங்கோ.... :)))

அய்யா நாம யூத்துன்னு சொல்ல இன்னொருத்தரும் கீறாரு... :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

Blade,
U r mistaken I suppsose.
What I meant was the word "kaNangal" was repeated thrice in your so so romantic poem..
REPS = Repetitions
which could hav been avoided.. I know d diff btween weights and moments :)
Just wanted to clarify this. Thanks :)
-Raaj-------------------------------------------------------------------------------------------------------------
said...

ராஜாதி ராஜ்..

சாரி தலிவரே...

REPS - அப்படின்னா ரிப்பீட்டு அப்பிடின்னு தமிழ்ல அர்த்தமா ?

நமக்கு இங்லீபீஸ் அவ்ளவா தெரியாதுங்கோ...
தப்பா புரிஞ்சிக்கிட்டேன்...

தாங்ஸோ தாங்ஸ்ங்கோ... :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக நெல்லைகாந்து அவர்களே..

//hello youth, kavithai superuma...//

ஆகா... யூத்து.. ஆதரவு குரல்...
நன்றி.. நன்றி..

கவிதை சூப்பர் என்று சொன்னதற்கும் நன்றி..

ஒன்று இரண்டு மூன்று என்று எம் இளமைத் திருவிளையாடலை பாட்டியலிட்ட தாங்கள் எனது மனதில் நிறைந்தீர்கள்.

இதோ இந்த இளைஞனின் நன்றிகள் தங்களுக்கு காணிக்கைகள்.

:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி...

//ஏன்யா இந்த கொலவெறி? ஆஹா! இப்பவே உமக்கு இந்த நையாண்டினா, காலேஜ் படிக்கும்போது என்னல்லாம் பண்ணிருப்பீரூ?//

இது கொலைவெறி அல்ல ஜி.. அவர்களே...
கலைவெறி..
கவிதையாகிய கலையின் மீது நான் கொண்ட பற்று..

அப்பற்று காதலென்னும் சூல் கொண்டு கவிதை என்னும் மழையாக இளமை தேசத்தில் பொழிந்திருக்கிறது.. :))

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அழகான ராட்சசியே...
இதில் பாதி பொய்..
பாதி மெய்...
எந்த பாதி நீ என்று நான் சொல்ல வேண்டுமா?//

"இளங்கவிஞர்" அரை பிளேடு அவர்களே!
சொல்லத் தான் நினைக்கிறேன் ரேஞ்சுக்குக் கலக்கறீங்களே தலைவா!

//அய்யகோ.. நான் இளைஞன் இல்லையா//

யார் சொன்னது? பட்டம் கொடுத்தாகி விட்டது "இளங்கவிஞர்" என்று!-------------------------------------------------------------------------------------------------------------
said...

//// வெட்டிப்பயல் said...
வாரம் ஒரு பிரச்சனைய கைல எடுக்கறதுனு முடிவு பண்ணிட்டீங்க...//

ரிப்பீட்டு! :-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக கே.ஆர்.எஸ்.

//"இளங்கவிஞர்" அரை பிளேடு அவர்களே!
//

ஆகா.. ஆகா.. வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி... தன்யனானேன் ஸ்வாமி.. தன்யனானேன்.

இன்னொரு இளைஞரே தன் வாயால் என்னையும் இளங்கவிஞர் என்று சொல்லும் பேறு பெற யான் என்ன தவம் செய்தேனோ :)))

நன்றிகள் பல கண்ணபிரான் ரவிஷங்கர் அவர்களே.-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)))

கலக்கல் கவுஜைங்க தலீவா!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ராஜாதி ராஜ்

காதலியோடு இருந்த கணங்கள் யாவையும் ரசித்தமையால் கணங்கள் மிகுந்து கவிதை கனத்தது.

ரிப்பீட்டுகள் தவிர்க்கப்படலே நல்ல கவிதைக்கு அழகு.. அருமையான கருத்துக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அய்யா நீங்கள் யூத் தான் ஒத்துக்கொள்கின்றோம்!ஆனால் இப்படி எல்லாம் கவிதை எழுதி கண்ணீர் வர வைக்கதீர்!சிரித்து சிரித்து கண்ணீர் வருகின்றது!

//அன்பே அங்கே பார் அழகான எருமைகள்..
குதித்தாடும் குரங்குகள்...
அருமையான கழுதைகள்..
சுதந்திரமான காகங்கள்...
இயற்கை எத்துணை அழகானது..
உன்னைப் போலவே.//

உங்கள் காதலி எருமை,குரங்கு கழுதை,காகம் போல அழகாக இருப்பார்களா!!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அன்பே அங்கே பார் அழகான எருமைகள்..
குதித்தாடும் குரங்குகள்...
அருமையான கழுதைகள்..
சுதந்திரமான காகங்கள்...
இயற்கை எத்துணை அழகானது..
உன்னைப் போலவே.
//

தல, உங்க இளமை பொங்கி வழியரது மேலே உள்ளத படிச்சாலே தெரியுது.
உங்க வயசு இன்னா? ரசிகர் படையை கெஸ் பண்ண கேட்டு ஒரு சர்வே போட்ருவமா?

:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக கப்பி பய அவர்களே...

//கலக்கல் கவுஜைங்க தலீவா!!//

கப்பியார் பாராட்டும் கவிதைகள்..
தங்கள் கவனமும் கருத்தும், கவிஜை படைத்ததின் பயன் அடைந்தேன்..
:)))
வருகைக்கு நன்றி கப்பியாரே...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக துர்கா அவர்களே..

நம்மை யூத் என்று ஒத்துக்கொண்ட தங்களுக்கு மிக்க நன்றி.

//உங்கள் காதலி எருமை,குரங்கு கழுதை,காகம் போல அழகாக இருப்பார்களா!!!! //

இந்த உவமைகள் அழகிற்காக இல்லை.

என் காதலி..
எருமை போல் பொறுமையானவள்.
குரங்கு போல் குறும்பானவள்.
கழுதை போல் குடும்பபாரம் சுமப்பவள்.
காகம் போல் விருந்தோம்பும் பண்பு உள்ளவள்...

:)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

சர்வேசரா வரவேண்டும் ஸ்வாமி..

தங்கள் திருப்பாதம் படவும் எமது இளந்தமிழ் தங்கள் நாவில் தாண்டவமாடவும் எத்துணை தவம் அடியேன் செய்தேனோ..

பிறப்பு இறப்பில்லா பெரும்பொருளே.. என்றும் இளமை கொஞ்சும் வடிவழகே.. ஈசனே...

சகலர்க்கும் படியளந்து சொல்லும் சர்வேசனே எமது வயதளக்க வந்தாரெனில் வேண்டாம் என்று சொல்ல இச்சிறியேன் யார் ஐயா...

தங்கட்கு என் நன்றிகள்.

தங்கள் சித்தம் அடியேன் பாக்கியம்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஆகா.. ஆகா.. வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி... தன்யனானேன் ஸ்வாமி.. தன்யனானேன்.
//

//தங்கள் திருப்பாதம் படவும் எமது இளந்தமிழ் தங்கள் நாவில் தாண்டவமாடவும் எத்துணை தவம் அடியேன் செய்தேனோ//

ஆகா அரைபிளேடுவின் வாயில் இருந்து அழகுத் தமிழ் வரவைக்கணும்னா இது தான் வழியா? :-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

////ஆகா.. ஆகா.. வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி... தன்யனானேன் ஸ்வாமி.. தன்யனானேன்.
//

டமீள்ல பேசுங்கப்பா அரைபிளேடு!
தன்யானானேன் அப்பிடீன்னா இன்னா அர்த்தம் - தனியா வாங்கப் போனேன்ன்னு சொல்ல வறீயா? :-)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்கல் கவிதைகள்...சும்மா நச்சுன்னுயிருக்கு..
\\அழகான ராட்சசியே...
இதில் பாதி பொய்..
பாதி மெய்...
எந்த பாதி நீ என்று நான் சொல்ல வேண்டுமா?\\\

ஜயா..எப்படி இந்த மாதிரி எல்லாம் கலக்குறிங்க..-------------------------------------------------------------------------------------------------------------
said...

கே.ஆர்.எஸ்.

நாம யூத்தா இருந்தாலும் நடிகர் திலகம் சிவாஜி நடிச்ச விசுவாமித்திரர், திருவிளையாடல் மாதிரி படங்களை சன் டிவியில பார்த்து இருக்கறோம்...

அந்த இரண்டு டயலாக்கும் இந்த படங்கள்ள இருந்து உருவுனதுதான்.. :))

அது இல்லாம கே.ஆர்.எஸ். மாதிரி ஆளுங்க கூட எல்லாம் சேர்க்கை சகவாசம் வேற சரியில்லை... :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத் அவர்களே..

//கலக்கல் கவிதைகள்...சும்மா நச்சுன்னுயிருக்கு..//

தாங்ஸ்ங்கோ.. அப்பிடியே தமிழ்முரசு விளம்பரம் மாறியே சொல்றீங்கோ...

//ஜயா..எப்படி இந்த மாதிரி எல்லாம் கலக்குறிங்க.. //

இன்னாங்க இது.. நாம யூத்துன்னு திரும்பி திரும்பி சொல்லிக்னு இருக்கோம்.. வந்து ஐயா கிய்யான்னுகிட்டு...

இதெல்லாம் யூத்து கலக்கலுங்கோ... :))))

தாங்ஸ்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

க்கும் , நாலு கழுத வயசாயிடுச்சு, யுத்தா? ;-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

கே.ஆர்.எஸ். அவர்களே...

தன்யனானேன்... அப்படின்னா மிளகா தனியா அப்படின்னு எல்லாம் அர்த்தம் இல்லை...

நமக்கு தெரிஞ்சு தன்ய அப்படின்றது வடமொழி... மீனிங் தாங்ஸ்னு வரும்..

தன்யனானேன் ஸ்வாமி அப்படின்னா..
நன்றியுடையவனானேன் ஐயா அப்படின்னு அர்த்தம்.

:))))

அரைபிளேடு ஒரு யூத்தா இருந்துகிட்டு உன்னால மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் முடியுது.. என்னமோ போடா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக கானா பிரபா அவர்களே...

//க்கும் , நாலு கழுத வயசாயிடுச்சு, யுத்தா? ;-))//

அவ்வளவு வயசாயிடுச்சா உங்களுக்கு... சொல்லவேயில்லை..

:)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

rendu mokka blade adhuvum muzhu blade pottutu ara bladennu solli kalakiriye maamu... modhalla adha maathu... vayasa kattikudukkudu paaru....

pichchuva pakkiri-------------------------------------------------------------------------------------------------------------
said...

என் அன்பே..
உனக்கும் நிலவுக்கும்
ஆறு வித்தியாசம் கூட
இல்லாததால்தானோ

நான்
அமாவாசையன்று மட்டுமே
ஆனந்தமாய் இருக்கிறேன்..

இது என் கவுஜை. இதுவும் என் குருவின் ஏராளமான கவுஜைகளும் இங்கே கிடைக்கும்.

உங்கள் கவுஜைகளும் இதே சாயலில் இருப்பதால் கவி"மடச்" சிஷ்யன் ஆக விண்ணப்பிக்கலாம்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அனானிமஸ் பிச்சுவா பக்கிரி

அந்த போட்டோ நம்ம குருநாதர் போட்டோங்க... அடடா இந்த போட்டவ பார்த்துட்டுதான் எல்லாரும் நம்மள யூத்து இல்லை அப்படின்னிடறாங்களா... மாத்திட வேண்டியதுதான்...

நன்றிங்கோ...-------------------------------------------------------------------------------------------------------------
said...

Sundar said :

super , fantastic , Excellent ..-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க பெனாத்தலாரே...

கவிமடத்தலைவர் சாத்தான் குளத்தாரை தெரியாம நாம இங்க இருப்பமா ?

கவிமடத்துக்கு அப்ளிகேஷனை தட்டி வுட்டுடறோம்..

அப்பாலிக்கா உங்க கவித சூப்பரு.. :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//(காதல் பெருகி பண்டல்களாக நான் எழுதிய கவிதைகள் குவிந்து கிடக்கின்றன.. அந்த கவிதைகளை இனி அவ்வப்போது வலையேற்ற உள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.)..
நாமளும் கவிஞ்சர் ஆயிட்டமுல்ல.... :)))))//

ஐய்யய்யோஓஓ..!! ஒரு கவிதையே இப்படி இருக்கு.. மத்தது எல்லாம்?!!!
நீங்க நேத்திக்கு தான் பொறந்தீங்கன்னு நாங்க நம்புகிறோம் சரியா.. உங்களுக்கு காதலே வேணாங்க..!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி அனானியாக வந்த சுந்தர் அவர்களே...-------------------------------------------------------------------------------------------------------------
said...

//தமில் படிக்க தெர்யாது..
என்று நீ சொன்ன கணங்கள்..
லண்டன் மகாராணியையே
காதலிப்பதாய் நான் உணர்ந்த கணங்கள்..//

:))))))))

//மாயாஜாலில் நாம்..
அசினை நானும்..
சூர்யாவை நீயும்..
கண்டு ரசித்த கணங்கள்..
மரணம் வரை மறக்காது கண்மணியே...//
:)))))))))

நீங்கள் கவிஞர்தான் அரைபிளேடு !! :))))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அன்பே அங்கே பார் அழகான எருமைகள்..
குதித்தாடும் குரங்குகள்...
அருமையான கழுதைகள்..
சுதந்திரமான காகங்கள்...
இயற்கை எத்துணை அழகானது..
உன்னைப் போலவே.
//

இதெல்லாம் ரொம்ப ஓவரு.......

அது சரி. உங்க காதலி இது மாதிரி எத்தன கவிதை எழுதியிருக்காங்களோ??!!!! :))

(கண்டிப்பா அதை waste paper வாங்கறவன் சும்மா கூட வாங்கியிருந்திருக்க மாட்டான்)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கவிதா...

//ஐய்யய்யோஓஓ..!! ஒரு கவிதையே இப்படி இருக்கு.. மத்தது எல்லாம்?!!!
நீங்க நேத்திக்கு தான் பொறந்தீங்கன்னு நாங்க நம்புகிறோம் சரியா.. உங்களுக்கு காதலே வேணாங்க..!!!
//

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. :)))

நாம யூத்துங்க.. காதல் கவித எயுதாம இருக்க முடியுமா...

பாருங்க பேப்பர் பேனா இரண்டுத்தையும் எங்க பார்த்தாலும் கவிதையா எழுத ஆரம்பிச்சாச்சு...

கவிதாவே கவிதைக்கு எதிர்ப்பு தெரிவிச்சா எப்படிங்க... :)))

நாட்டுல நம்மள மாதிரி யூத்து எயுதுற கவிதையெல்லாம் கண்டுக்காதீங்க... :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்ப்பர் அரை பிளேடு. கலக்குறீங்க..

உங்க காதல்(கவிதைகள்) வாழ்க!

"உன் கொலுசும் என்னைப் போலவே
உன் செருப்புக்கு அருகேயே இருக்கின்றன."-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக நவீன் பிரகாஷ் அவர்களே..

//நீங்கள் கவிஞர்தான் அரைபிளேடு !! :))))))
//

ஆகா கவிஞர் ஒருவர் வாயால் கவிஞர் பட்டம்.

நன்றி. நன்றி. நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

kalakitinga Blade.-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு அண்ணாச்சி,
வயசான காலத்துல என்னாது இது சின்ன புள்ள மாதிரி :)).. இதை எல்லாம் எங்களை மாதிரி யூத்தான ஆளுங்க கிட்ட விடுங்க நாங்க பாத்துகுறோம்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//உனது குறும்புகள் எனக்கு
மிகப் பிடிக்கும்..
குறிப்பாக சர்வர்
பில் கொண்டு வரும்போதெல்லாம்
நீ காணாமல் போவது..//

யூத் சார்,
ரசிக்கும் படியா இருந்துச்சு உங்க காதல் கவிதை எல்லாம். கலக்கறீங்கோ.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க இம்சை அரசி...

//அது சரி. உங்க காதலி இது மாதிரி எத்தன கவிதை எழுதியிருக்காங்களோ??!!!! :))//

கவிதைய ஒழுங்கா படிக்கலையா நீங்க...
நம்ம காதலி லண்டன் மகாராணி... கவிதையெல்லாம் எழுத மாட்டாங்க.. முக்கியமா தமிழ்ல எயுதவே மாட்டாங்க :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சிறில் அலெக்ஸ்

//உங்க காதல்(கவிதைகள்) வாழ்க!//

நன்றி. நன்றி. நன்றி.

அப்பாலிக்கா உங்க கவிதையும் சூப்பரு... :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தோஷ்..

//வயசான காலத்துல என்னாது இது சின்ன புள்ள மாதிரி :)).. //

அண்ணா... நம்மளுக்கு அவ்ளோ வயசு ஆகலீங்கண்ணா... எயுத வந்து மிஞ்சி போனா இரண்டு மாசம் இருக்குமா...

இரண்டு மாச பச்சை புள்ளங்கன்னா நானு :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அந்த கவிதைகளை இனி அவ்வப்போது வலையேற்ற உள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்//

ஆண்டவா :-(((-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கைப்புள்ள...

//யூத் சார்,
ரசிக்கும் படியா இருந்துச்சு உங்க காதல் கவிதை எல்லாம். கலக்கறீங்கோ.
//

ஆகா.. யூத்து... தலையே சொல்லிட்டாரு... இதுக்கு மேல யாரு சொன்னா இன்னா சொல்லாட்டி இன்னா... நாம யூத்துதான் இல்லை :))))

தாங்ஸ் தலீவா...-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நாம யூத்துதான் இல்லை :))))//

அதான் இல்லைனு நீங்களே சொல்லீட்டீங்களே-------------------------------------------------------------------------------------------------------------
said...

/இந்த உவமைகள் அழகிற்காக இல்லை.

என் காதலி..
எருமை போல் பொறுமையானவள்.
குரங்கு போல் குறும்பானவள்.
கழுதை போல் குடும்பபாரம் சுமப்பவள்.
காகம் போல் விருந்தோம்பும் பண்பு உள்ளவள்.../

பிளேடு சார் உங்க கவிதை படிச்சு பயந்து போய் உங்கள யூத் என்று ஒத்துகிட்டேன்.
இப்போ நீங்க கொடுத்த கவிதை உரையை கேட்டவுடன் எனக்கு இன்னும் பயமா இருக்கு.எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுது.எல்லாரும் காதலியை கண்ணே அமுதே முத்தே என்று பொய் சொல்லி line விட்டால் நீங்கள் எருமை,கழுதை என்று கவிதை எழுதுகின்றீர்கள்!ரத்த கண்ணீர் எல்லாம் விட வைக்கதீங்க சார்! :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//தமில் படிக்க தெர்யாது..
என்று நீ சொன்ன கணங்கள்..
லண்டன் மகாராணியையே
காதலிப்பதாய் நான் உணர்ந்த கணங்கள்..//

Really superb ROFTL :)))))))))))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

உணமையான காதல் கவிதை! had a laugh!-------------------------------------------------------------------------------------------------------------
said...

//Really superb ROFTL :)))))))))))))//

நன்றி அனுசுயா அவர்களே :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பி,
/*அன்பே அங்கே பார் அழகான எருமைகள்..
குதித்தாடும் குரங்குகள்...
அருமையான கழுதைகள்..
சுதந்திரமான காகங்கள்...
இயற்கை எத்துணை அழகானது..
உன்னைப் போலவே. */

ஆகா! ஓகோ! அற்புதம்! பிரமாதம்! அருமை!

வள்ளவர்
கம்பர்
பாரதி
கண்ணதாசன்
பட்டுக்கோட்டை

எல்லாருமே உங்களிடம் தோற்றுவிட்டார்கள்.:)) என்னே ஒரு வர்ணனை! இப்படியான வர்ணனையை நான் இது வரை படித்ததில்லை.:)) படித்து வாய்விட்டுச் சிரித்தேன்.:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி முத்து மற்றும் வெற்றி.

நமது காதல் கவிதையை பாராட்டி நம்மை யூத்தாக ஒத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.. நமது யூத் ஃபுல்லான கவிதைகள் தொடரும் என்று அறிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன். நன்றி.. நன்றி.. நன்றி..-------------------------------------------------------------------------------------------------------------