Thursday, January 18, 2007

மெகாஆஆஆஆஆ செல்வ அன்ன லட்சுமி... நிறைவு பகுதி.

"அன்ன லட்சுமி"... குரல் கேட்டு திரும்பினாள் மெகாலட்சுமி.
"அம்மா அன்ன லட்சுமி. என்னை தெரியலியாம்மா ?"

"அம்மா. அன்ன லட்சுமி. எக்சிபிஷன்ல அப்பா அம்மாவை தொலைச்சுட்டு அழுதுகிட்டு இருந்த பதினைஞ்சி வயசு சின்னப் பொண்ணான உன்னை எடுத்து கல்யாணம் பண்ணி கொடுத்த இந்த அண்ணனை எப்படியம்மா மறந்த ?"

"அண்ணே..." ஆமாம். மெகாலட்சுமியோட அண்ணன் கிடைத்துவிட்டார்.

பக்கத்தில் படு குழப்பத்தோடு கே.கே.

சின்ன ஃப்ளாஷ் பேக்....

மெகா லட்சுமி செல்வ லட்சுமியாய் பர்மாவில் பிறந்து கனகாம்பரத்தோடு படித்து பதினைந்து வயதில் எக்சிபிஷனில் காணாமல் போய்...

பூர்ண சுந்தரம்தான் செல்வ லட்சுமியை தங்கையாய் தத்தெடுத்து வளர்த்தார்.

மூணு அண்ணன்கள் நாலு அண்ணிகள் நடுவில் செல்வ லட்சுமி அன்ன லட்சுமி என்று பெயரிடப்பட்டு செல்ல லட்சுமியாய் வளர்ந்தாள்.

அமெரிக்க டாக்டருக்கு கல்யாணம் செய்து வைத்தார் பூர்ண சுந்தரம்.

"அவன் உன்னை அமெரிக்காவுல ஏமாத்தி தனியா விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு கேள்விப்பட்டம்மா... அப்புறம் நீ என்ன ஆன ஏது ஆனன்னே தெரியலம்மா".

(பிளாஷ்பேக்)..

அமெரிக்காவில் அன்ன லட்சுமி மேல் படிப்பு படித்து பெரிய ஆளாகிறார்.

இதற்கு முன் நெகடிவ்வாக வந்த டாங்கிங்க.. பேட்டில் ஃபீல்டு.. சோல்டர்ஸ்... இப்போது கலரில்.

ஆம். அன்ன லட்சுமி வளைகுடா யுத்தத்தின் போது சீனியர் புஷ்ஷின் அரசியல் ஆலோகர்... !!!!!!

சதாமின் சதியால் பிறது அரபிக்கடலில் எறியப்பட்டு இராமேஸ்வரத்தில் கரை ஒதுங்குகிறார்.

அதற்கு பின் அவர் குணசேகரின் குடும்ப விளக்கான கதையையும்... கே.கே. வின் நைட் லாம்பான கதையையும் நாமறிவோம்.

(பின்தொடர்ந்த சதுர வட்டை சதீஷ் அமெரிக்க அதிகாரி. லட்சுமியின் பாதுகாப்புக்கு அனுப்பப் பட்டவர்).

இப்போது அண்ணன் அண்ணி அவர்களுடைய ஒரே பையன் கீரிப்பிள்ளை சித்தன் மற்றும் அவனுடைய கீரிப்பிள்ளை எல்லாம் இப்போது மெகாலட்சுமி வீட்டில். மெகாஆஆ குடும்பம்.

பத்து ஆண்டுகள் பறக்கின்றன.

இதற்கு இடையில் முப்பது கல்யாணங்கள். அறுபது விவாகரத்துக்கள். பத்து சாவு. ஒண்ணு கூட இயற்கையான சாவு இல்லை. இதுல இரண்டு தற்கொலை. எட்டு கொலை.

தீவிரவாதியான காவேரி மகன் காமேசு லட்சுமியால் திருந்தி லட்சுமியின் அண்ணன் மகளை மணந்து விவாகரத்து செய்து போலீசால் சுடப்பட்டு சாகிறான். (ஒரு வில்லன் ஓவர்).

மாயாவின் அம்மா லட்சுமிக்கு வைத்த விஷத்தை தானே சாப்பிட்டு சாகிறார். (சைடு வில்லி கோவிந்தா)

சந்தன கருப்பு சந்தனம் கடத்தும் போது லட்சுமியால் கண்டுபிடிக்கப்பட்டு சந்தனக்கட்டையும் கையுமாக போலீசால் கைது செய்யப்படுகிறார். (இன்னொரு வில்லன் அவுட்)

பர்மா சின்னம்மாவை பர்மா அப்பா அடித்து திருத்துகிறார். மாப்பிள்ளையும் மனம் திருந்துகிறார். (திருந்திய வில்லர்கள் வாழ்க)

சதிமேல் சதி செய்த மாயாதான் தனசேகரை கொன்றாள் என்பதை லட்சுமி கண்டுபிடிக்க போலீஸ் மாயாவை கைது செய்கிறது.

மாயா தன் மகனை பிரிய நேர கண்கலங்குகிறாள்.
"அம்மா நான் உன் மகனே இல்லை. நான் லட்சுமியம்மாவோட மகன். இப்ப அவங்க மகளா இருக்க தங்கச்சிதான் உங்க மகள். உங்க இரண்டு பேரையும் திருத்தணும்னு நானும் தங்கச்சியும் சின்ன வயசுல நீங்க பிரசவ மயக்கத்துல இருக்கப்பவே மாறிட்டோம்."

அவர்கள் இருவரின் தியாகத்தை புரிந்து லட்சுமி நெகிழ்கிறார்.

பர்மா அப்பா மாயாவுக்கு கைவிலங்கு மாட்டும் போது கையிலிருந்த மச்சத்தை பார்த்து அதிர்ச்சியாகிறார்.
"லட்சுமி அது மட்டுமில்லைம்மா. மாயா உன் தங்கச்சிம்மா. உங்க சின்னம்மாக்கும் சின்னதா இருக்கற ஒரு அம்மாவுக்கு பிறந்தவதான் மாயா. அவதான் தொலைஞ்சி போயி இப்பதான் கிடைச்சிருக்கா"

"என்ன மாயா என் சொந்த தங்கச்சியா. தங்கச்சி என் மேல கோபப் படாதம்மா உங்கிட்ட இருந்து குணசேகர காப்பாத்ததான் நான் அவரை கல்யாணம் பண்ணேன். அதே மாதிரி உங்கிட்ட இருந்து கே.கே. வையும் கனகாம்பரத்தையும் காப்பாத்ததான் நான் கே.கே.வையும் கல்யாணம் பண்ணேன்".

"செல்வ லட்சுமி" தழு தழுப்பான குரல். திரும்பி பார்த்தால் கனகாம்பரம். வாழைப்பழம் விழுங்கி கோமாவில் இருந்த கனகாம்பரத்துக்கு நினைவு திரும்பி விட்டது. "எனக்காகத்தான் நீ என் புருஷனை கல்யாணம் பண்ணி தியாகம் பண்ணேன்னு புரிஞ்சிகிட்டேன். என்னை மன்னிச்சுடு".

கே.கே. விழித்து கொண்டு நிற்க இமய மலையிலிரந்து திரும்பிய குணசேகரும் பக்கத்தில்.
அமெரிக்க மனைவியால் அடித்து துரத்தப்பட்ட லட்சுமியின் அமெரிக்க டாக்டர் கணவர் மன்னிக்க சொல்லி லட்சுமி காலில் வந்து விழுகிறார். லட்சுமி டாக்டர் கணவனை மன்னிக்கிறார்.

கே.கே., குணசேகர், டாக்டர், ஒண்பதாவது படிக்கறப்ப காதலிச்ச ஒலகநாதன். லட்சுமி யாருக்கு?

மற்ற மூவருக்கும் ஏற்கனவே சான்ஸ் கொடுத்து விட்டதால் ஒலகநாதனுடன் தான் இனி தன் வாழ்க்கை என்று புரட்சிகர முடிவெடுக்கிறார் மெகா செல்வ அன்ன லட்சுமி.

கே.கே. வையும் கனகாம்பரத்தையும் சேர்த்து வைக்கிறார் லட்சுமி. (பார்த்து திருந்தி திருந்திய வில்லன்களின் லிஸ்ட்டில் இணைகிறார்கள் கே..கே. மற்றும் கனகாம்பரத்தின் அண்ணன்கள்)

குணசேகர் மீண்டும் இமய மலைக்கு கிளம்புகிறார்.

டாக்டர் உகாண்டாவுக்கு பிராக்டீஸ்க்கு கிளம்புகிறார்.

அனைவரின் பிரச்சனையும் தீர்ந்து விட புது உலகம் காண ஒலகநாதனுடன் கிளம்புகிறார் புதுமைப்பெண் மெகா செல்வ அன்ன லட்சுமி.

(முற்றும்)

6 comments:

said...

//சதாமின் சதியால் பிறது அரபிக்கடலில் எறியப்பட்டு இராமேஸ்வரத்தில் கரை ஒதுங்குகிறார்.

அதற்கு பின் அவர் குணசேகரின் குடும்ப விளக்கான கதையையும்... கே.கே. வின் நைட் லாம்பான கதையையும் நாமறிவோம். //

இதெல்லாம் கொஞ்சம் ஒவர் !!

//இதற்கு இடையில் முப்பது கல்யாணங்கள். அறுபது விவாகரத்துக்கள். பத்து சாவு. ஒண்ணு கூட இயற்கையான சாவு இல்லை. இதுல இரண்டு தற்கொலை. எட்டு கொலை.//

ஒரு ஊருல நடக்கிறத இதுல சொல்லிக்கீற-------------------------------------------------------------------------------------------------------------
said...

முற்றும்...போடும் போதே அடுத்த சீரியல் பார்க்க விளம்பரமும் போட்டுறனும்... :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க பாபு...

மெகா சீரியல் எல்லாம் டீவியில் பார்க்கறதே இல்லியா..

அதனாலதான் இது உங்களுக்கு ஓவரா தெரியுது. இதே ரேஞ்சுல டெய்லி 20ல இருந்து 30 சீரியல் ஓடுதுங்க டீவியில.


//ஒரு ஊருல நடக்கிறத இதுல சொல்லிக்கீற //

ஒரு மெகா சீரியல் அப்படின்றது 30 வருட கதைய 3 வருசத்துல சொல்றது. அதுல கதா பாத்திரம் அதிகமாக அதிகமாக.. கல்யாணம்.. விவாகரத்து. சாவு எல்லம் சகஜமுங்கோ .. :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்யாம்..

//முற்றும்...போடும் போதே அடுத்த சீரியல் பார்க்க விளம்பரமும் போட்டுறனும்//

இதுக்கு மேல மக்களை கொடுமைப்படுத்தற ஐடியா எனக்கு இல்லீங்க... நான் அகிம்சாவாதி.

:))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\(முற்றும்)\\

நன்றி சாமி...ரொம்ப நன்றி...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத்...

\\(முற்றும்)\\

//நன்றி சாமி...ரொம்ப நன்றி... //

யானைய புடிச்சி பானையில போட்டுட்ட ஃபீலிங் நமக்கும்...

தாங்ஸ்...-------------------------------------------------------------------------------------------------------------