Monday, January 08, 2007

மெகாஆஆஆ லட்சுமி.....

நாமளும் எவ்ளோ நாளா மெகா சீரியல் பாக்குறோம். இந்த மாதிரி மெகா சீரியலுக்கு நம்மளால கத எயுத முடியாதா இன்னா...
நம்ம கிட்ட ஒரு சூப்பர் கத இருக்குதுப்பா... ஆல் காப்பி ரைட்ஸ் டு அரைபிளேடு...கத வேணும்ன்ற தயாரிப்பாளருங்க நம்மள கான்டாக்ட் பண்ண வேண்டியது..
இதோ கதைக்கான ட்ரயிலரு...

-------------------------------------------------

மெகாலட்சுமி தான் ஹீரோயின் பேரு...

டைட்டிலு சாங்கு...

ஓ... ஓஓஓ...
வீர லட்சுமி.. தைர்ய லட்சுமி..
தன லட்சுமி.. விஜய லட்சுமி..
........................(உட்காந்து லட்சுமிங்கள லிஸ்ட் போடுங்கப்பா).
நாட்டுல பல லட்சுமி..
எல்லா லட்சுமியும் சேர்ந்தவதான் இந்த லட்சுமி..
லட்சுமி.. லட்சுமி..
மெகா லட்சுமி...

பொறுமையின் மறுபெயர்
அன்பின் வடிவம்..
அவள்தான் லட்சுமி...
மெகா லட்சுமி..

ஓ... ஓஓஓ... (யானை புலி பூனை சிங்கம் சிறுத்தை எல்லாம் பாட்டுல குறுக்கால வுட்டுக்கோங்க..)

மெகா லட்சுமி... (இத ஒரு சின்ன குழந்தை அடித் தொண்டையில கத்தணும்).

---------------------------------

கதைய முதல் எபிசோட்ல ஆரம்பிக்கறப்ப ராமேசுவரம் கடல்ல ஆரம்பிக்றோம்.
கத கடல் மாதிரி பெருசுன்னு சிம்பாலிக்கா சொல்றோம்.

அங்கதான் நம்ம ஹீரோ குணசேகர் காசியில கங்கையில விழுந்துட்ட தன்னோட முதல் பொண்டாட்டி கங்காவுக்காக காரியமும், ஸ்ரீரங்கம் கோவில் குளத்துல வழுக்கி விழுந்து கோமாவுல இருக்கற இரண்டாவது பொண்டாட்டி காவேரிக்காக பிரார்த்தனையும் பண்ண வர்றாரு.

அவரு அங்க இருக்கறப்ப கடல்ல அடிச்சுக்னு வந்து கரை ஒதுங்கற ஒரு பொண்ணை காப்பாத்தறாரு...

அதுதான் நம்ம மெகாலட்சுமி..

கங்காவோட ஒரு பொண்ணு இரண்டு பையனுக்கும் காவேரியோட இரண்டு பொண்ணு ஒரு பையனுக்கும் லட்சுமிய புடிச்சுடுது.

எல்லாமா சேர்ந்து "சின்னம்மா" அப்பிடின்னு சொல்லி லட்சுமிய புடிச்சிக்கிறாங்க..

வேற வழியில்லாம குணசேகர் சின்னம்மா லட்சுமிய வீட்டுக்கு கூட்டிக்னு வர்றாரு. (இரண்டு வார கதை ஓவர்).

மதுரையில குணசேகர் பட்டுத்தறி ஓட்டி பட்டுப் புடவையா நெஞ்சி குடும்பத்தை காப்பாத்தறாரு...
சின்னம்மா புள்ளைங்கள நல்லா பார்த்துக்கறாங்க..

கங்காவோட பொண்ணுக்கு தலைவாரி விடறாங்க (ஒரு நாள் எபிசோட் ஓவர்)..

காவேரியோட இரண்டு பொண்ணுங்களுக்கு தலைவாரி விடறாங்க (இரண்டு நாள் எபிசோட் ஓவர்)..

கங்காவோட இரண்டு பையனுங்களுக்கு பாடம் சொல்றாங்க.. (இரண்டு நாள் ஓவர்..)

காவேரியோட பையன் காமேசு பாடம் கத்துக்க மாட்டேங்கறான்... "நீ சின்னம்மா... எங்கம்மா இல்லை..."..
"நானும் உன்னோட அம்மாதாண்டா..."....
"இல்லை... இல்லை"... இந்த பாசப்போராட்டம் இரண்டு வாரம் நடக்குது....
கடைசில காவேரியோட பையன் ஓடிப்போயிடறான்....
எல்லோரும் சோகமாயிடறாங்க... (இன்னொரு வாரம் ஓவர்).

இதுல பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு. அது பக்கத்து தெருல சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டற பையன காதலிக்குது. (இரண்டு வாரம் கேரண்டி)

எதிர் வீட்ல மாயா அப்படின்னு ஒரு பணக்கார பொண்ணு. அதுக்கு குணசேகர் மேல கண்ணு.
மெகாலட்சுமி வந்ததுனால அதோட லவ்வு நடக்காம போயிடுச்சி..

ஓரு கட்டத்துல பிள்ளைங்களுக்காக குணசேகர் மெகாலட்சுமிய கல்யாணம் பண்ணிடறாரு.

மாயா குணசேகர மடக்கி என்னையும் கல்யாணம் பண்ணு அப்படின்னு சொல்றா. குணசேகர் முடியாது அப்படின்னு சொல்லிடறாரு.
மாயா உடனே குணசேகரோட தம்பிய கல்யாணம் பண்ணி அதே வீட்டுக்கு வந்துடறா.
கூடவே மாயாவோட அம்மாவும்.
குணசேகர் தம்பி தனசேகர் அப்பாவி. அவன் மாயா கையில மாட்டிக்கிட்டு பயப்படறான். (நாலு மாச கதை ஓடிருச்சிப்பா..)

குணசேகருக்கு ஒரு அக்கா குமுதவல்லி...
அவங்களுக்கு பாவம் ஒரே ஒரு புருசன். ஆனா அவருக்கு மட்டும் இவங்களோட சேர்த்து இரண்டு பொண்டாட்டி.
சக்காளத்தி கொடும தாங்காம அக்கா தம்பி வீட்டுக்கு திரும்பி வர...
கொதித்து எழுந்த மெகாலட்சுமி சிங்கம் மாதிரி அவங்க புருஷன் செவுள்ளயே ஒண்ணு விட்டு அவங்கள சேர்த்து வைக்கறாங்க.
(ஒரு மாச கதை ஓடிருச்சிப்பா)..

(அப்பப்ப திடீர் திடீர்னு ப்ளாக் அண்டு வொயிட் நெகடிவ்ல.. டாங்கிங்க.. பேட்டில் ஃபீல்டு.. சோல்டர்ஸ்... சல்யூட் வெச்சிக்னு மார்ச் பண்ற ஆர்மி... மெகா லட்சுமியும் சல்யூட் பண்றாங்க. !!!!)

மாயா சதிமேல சதி பண்றாங்க. எல்லாத்தையும் மெகாலட்சுமி முறியடிக்கிறாங்க..

மெகாலட்சுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்குது... மாயாவுக்கு ஒரு ஆண்குழந்தை... (மேற்கொண்டு ஒரு இரண்டு மாசம் ஆயிருக்குமா?)

அக்கா குமுதவல்லிக்கு இரண்டு பசங்க..
குமரன். இவன் காலேஜ் படிக்கிறான். காலேஜ்ல ஒரு பொண்ணை லவ் பண்றான். (ஒரு வாரம் சீரியல்ல கடலை போடலாம்)
புனிதன் +2... இவன் கங்கா பொண்ணு புஷ்பா (பத்தாங் கிளாஸ்) லவ் பண்றான். (இரண்டு வாரம்பா..)

இந்த டைம்ல மதுரையில பட்டு நூல் கிடைக்காம தொழில் டல்லாயிடுது....
(நூல் கிடைக்காம சதி பண்றது மாயா... பட்டு நூல் வந்த பத்து லாரியையும் மடக்கி மொத்த நூலையும் தெப்ப குளத்துல கொட்டிடறாங்க..)
எல்லாருமா சேர்ந்து மதுரைய காலி பண்ணிட்டு மெட்றாஸ்க்கு கிளம்பறாங்க.....

ஒரு வருசத்துக்கான கத முடிஞ்சி போச்சிப்பா...
அடுத்த வருசத்துக்கான கதைய அப்பாலிக்கா மெட்றாஸ்ல வச்சி சொல்றேன்..... சரியா....

எங்க எல்லாருமா என் கூட சேர்ந்து அது வரிக்கும் ஒருக்கா கூவுங்க.... "மெகாஆஆ லட்சுமி...".

(கதையோட டி.ஆர்.பி. ரேட்டிங்க வச்சு (அதாவது உங்க ரெஸ்பான்ச வச்சு) இன்னம் ஒரு வருச கதை பாக்கியிருக்கா இல்ல இரண்டு வருச கதை பாக்கியிருக்கான்னு முடிவு செய்வோமுங்க.)

---------------------------------------------------

28 comments:

said...

பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....சூப்பர் மெகாஆஆஆஆ லட்சுமி.....

//இரண்டு வார கதை ஓவர்//

இத ரெண்டு மாசம் இழுக்கலாம்...ரெண்டு வாரத்துல முடிக்கறீங்களே :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெல்கம் ஸ்யாம்...

//இத ரெண்டு மாசம் இழுக்கலாம்...ரெண்டு வாரத்துல முடிக்கறீங்களே :-)
//

இன்னாதான் மெகா சீரியலா இருந்தாலும் ரொம்ப இழுத்தம்னா சனங்க பக்கத்து சானல்ல மெகா சீரியல் பார்க்க போயிடுவாங்க...
அதனால கொஞ்சம் வேகம் வேணும்...
எப்பப்ப எல்லாம் வேகம் குறையுதோ... அப்ப எல்லாம் ஒரு கேரக்டரை உள்ளாற இழுத்து விடணும்..
இதுல ஏகப்பட்ட மேட்டரு இருக்குங்கோ....

:))

கண்டுக்னு பாராட்டுனதுக்கு தாங்ஸ்.... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு எப்படி உங்களால மட்டும் இது எல்லாம் முடியுது. ஆனால் இம்மாம் பெரிய கதையை சீக்கிரமா முடிக்கிறீங்க. இதை வச்சி நாங்க ஒரு பத்து வருசம் ஓட்டுவோமுல்ல. நீங்க நாள் கணக்கை சொல்லுறீங்க.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//எப்பப்ப எல்லாம் வேகம் குறையுதோ... அப்ப எல்லாம் ஒரு கேரக்டரை உள்ளாற இழுத்து விடணும்..//

you can also kill some character on a friday episode

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//you can also kill some character on a friday episode//

கொல்ல கூடாது ஆனா கொல்றாமாதிரி பக்கத்துல கத்திய கொண்டு போய் அப்படியே freeze பண்ணிடனும்..அப்புறம் எதுவா இருந்தாலும் திங்கள் கிழமை தான் :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தோஷ்

தூர்தர்சனா இருந்தா இதே கதைய பத்து வருசம் ஓட்டலாங்க...
ஆனா தனியார் டிவி டி.ஆர்.பி. அப்படின்னு ஒண்ணு இருக்குதே...

கதைய இழுக்கணும் ஆனா இழுத்த மாதிரி தெரிய கூடாது..
அதுதான் இப்பிடி... :))

நம்மளால இப்படியெல்லாம் முடியுதுன்னு கண்டுக்ன உங்களுக்கு ஒரு தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அனானி...

//you can also kill some character on a friday episode //

ஏதாவது ஆர்ட்டிஸ்டு என்னாலதான் சீரியலே ஓடுதுன்னு சொல்லி காசு அதிகம் கேக்காத வரிக்கும் கேரக்டர் சாகாது..

இல்லாட்டி டகால்னு அந்த கேரக்டருக்கு போட்டோ போட்டு பொட்டுனு போயிட்டியே அப்படின்னு இரண்டு நாளு கதைய சோகமா ஓட்டிட மாட்டமா... :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்யாம்

//கொல்ல கூடாது ஆனா கொல்றாமாதிரி பக்கத்துல கத்திய கொண்டு போய் அப்படியே freeze பண்ணிடனும்..அப்புறம் எதுவா இருந்தாலும் திங்கள் கிழமை தான் :-)
//

கரெக்டா சொன்னீங்க...

அதே மாதிரி டெய்லி.. வில்லனோ வில்லியோ திட்டம் போடுவாங்க...

திட்டம் போட்டு முடிச்சதும் அவங்க மூஞ்சிய ஃபோகஸ் பண்ணி அவங்க மூஞ்சி மேலயே தொடரும் அப்படின்னு போடணும்..

அப்பதான் சனங்க டென்ஷனாயி அடுத்தநாள் என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு சோறு தண்ணிய கூட மறந்து டிவி பொட்டி மின்னாடி உட்காருவாங்க...

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

எப்டி...எப்டி...எப்டி.... எப்டி உம்மால மட்டும் இப்டி முடியுது...

மெகா லட்சுமின்ன உடனே நான் ஹீரோயினி பம்பர் லாட்டரில வேல செய்றப் பொண்ணோன்னு நெனச்சிட்டேன்...

அப்புறம் எடையில போலிஸ் ட்ரஸ் போட்டுக்கிட்டு ஒரு கேரக்டர் பேக் ரவுண்டல் பலத்த ஒரு மியுசிக்கப் போட்டுக்கிட்டு சம்பந்தமே இல்லாம ஆஜராகனும். (அதுல ஒரு 2 வாரம்)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அய்யா...எப்படி இதயெல்லாம்
சிரிச்சு..சிரிச்சு வாய்யெல்லாம் வலிக்குது...கலக்கிட்டீங்க...

\\குணசேகருக்கு ஒரு அக்கா குமுதவல்லி...
அவங்களுக்கு பாவம் ஒரே ஒரு புருசன். \\

சொம நக்கல்ஸ்...

இருந்தாலும் "சித்தி"யை கிழி கிழின்னு கிழிச்சிட்டிங்க...தொடருங்க

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி...

//எப்டி...எப்டி...எப்டி.... எப்டி உம்மால மட்டும் இப்டி முடியுது...
//

ஹி..ஹி... எவ்ளோ சீரியல் பார்த்து நொந்து இருப்போம்...

//அப்புறம் எடையில போலிஸ் ட்ரஸ் போட்டுக்கிட்டு ஒரு கேரக்டர் பேக் ரவுண்டல் பலத்த ஒரு மியுசிக்கப் போட்டுக்கிட்டு சம்பந்தமே இல்லாம ஆஜராகனும்
//

இது எதுக்குங்க. நம்ம ஹீரோயின் பேரு மெகாலட்சுமிதான். ஜெயலட்சுமி இல்லை..

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நீங்க பேசமா..சாப்டுவேருக்கு முழுக்கு போட்டுட்டு நம்ம கோடம்பாக்கம் வந்தீங்கன்னா.. நாட்டுல நிறைய பேர் சிரீயில் பார்த்து சிரிச்ச மாதிரியும் இருக்கும்..அழுத மாதிரியும் இருக்கும்.. சூப்பர்... வீட்டுல அம்மணிங்க யாரும் இல்ல போல.. உட்கார்ந்து நிதானமா சூப்பரா எழுதி இருக்கீங்க.. !! ... தொடருங்கள்.. சிரிக்க நாங்க ரெடி.. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிரிக்கறதா அழறதா ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத்..

என்னாது சித்தியை கிழிகிழின்னு கிழிச்சிருக்கனா ?

இது என்னோட சொந்த கதைங்க..

ஆல் காப்பி ரைட்ஸ் டு அரைபிளேடு ஒன்லி.

தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கவிதா...

இந்த கதை என்னோட நண்பர் ஒருத்தரு மெகா சீரியல் எடுக்க எங்கிட்ட வந்து கதை கேட்டப்ப எழுதினது..

கேட்டுட்டு சித்தி மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டாரு..

அப்பதான் சித்தி என்னோட கதையை உருவி மெகா சீரியல் எடுத்திருக்காங்க அப்படின்னு தெரிஞ்சுது.

அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.

இன்னும் நாலு அஞ்சி கதை வெச்சிக்கிட்டு அப்பாவி புரொடியூசரா யாராச்சும் மாட்டறாங்களான்னு தேடிக்கிட்டு இருக்கேன்...

கூடிய விரைவில் எதிர் பாருங்கள் சின்னதிரைகளில் அரைபிளேடு வழங்கும்.. மெகாஆஆஆஆ லட்சுமி.

தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹேய் அரைபிளேடு..சூப்பர்..நானும் இதேமாதிரி ஒண்ணு எழுதனும் நினைச்சிக்கிட்டு இருந்தேன்..அதுக்குள்ள நீங்க கலக்கீட்டிங்க!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மெகாஆஆஆஆ லட்சுமி.....

அப்பா...... என் பங்குக்கு சொல்லிட்டேனா.....

அதே மாதிரி Friday episode-ல ஒரு பொண்ணு அவ லவ்வர மீட் பண்ணி பேசிட்டு இருக்கா. அப்ப இன்னொரு சைடுல அந்த பொண்ணோட அப்பா வருவாரு.... இவுகளயும் அவுரயும் மாத்தி மாத்தி காமிச்சுக் கிட்டே இருக்கணும்.... அவர் பாத்துடுவாரான்னு எல்லாரும் சுவாரஸ்யமா பாக்கும்போது அந்த episode முடிஞ்சுடனும். அப்பதான் ஒரு த்ரில்லிங்கா இருக்கும்....

என்னப்பூ நாஞ்சொல்றது??? கரெக்டா???

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்ரீகாந்து..

//சிரிக்கறதா அழறதா ? //

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்.
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட சோக்கா கீதே! ஆமா எத்தனை டைரக்டருங்கோ இந்த மெகாலட்சுமிய எடுக்கறாங்க!

எத்தனி கண்ணு பாத்தாலும் க்ளிசரின் ஒண்ணுதான?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒலகம் சுத்துறத இப்பதான் பாக்குறேன்...
இல்ல என்னோட தல தான் சுத்துதா?

சன் டிவிக்கு எழுதிப் போடுங்க :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தனமுல்லை..

/************
ஹேய் அரைபிளேடு..சூப்பர்..நானும் இதேமாதிரி ஒண்ணு எழுதனும் நினைச்சிக்கிட்டு இருந்தேன்..அதுக்குள்ள நீங்க கலக்கீட்டிங்க!!
*************/

நீங்களும் எயுதுங்கோ... நாட்டுல ஒரே நேரத்துல ஒரு மெகா சீரியல் மட்டுமா ஓடுது.. நாலு சேனல்ல நாப்பது சீரியல் நாட்டு மக்களுக்கு சேவை செய்யறதுக்காக ஓடறதில்லை...

உங்க சேவை நாட்டுக்கு தேவை..
எயுதினீங்கன்னா நாமளும் வந்து படிப்பமில்லை...

ரொம்ப தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க இம்சை அரசி..

பொண்ணு லவ்வரு.. அப்பா..
அப்பா பாத்துடுவாரோன்னு பயப்படற பொண்ணு..

இது ரொம்ப ஓல்டுங்க.. இதுல த்ரில்லே இல்ல...

நான் சொல்றேன் பாருங்க...

பொண்ணு.. ஓல்டு லவ்வரு.. புருஷன்... புருஷன் பாத்துடுவானோன்னு பொண்ணு பயப்படும்.. பாக்கற நமக்கும் த்ரில்லு...

இது டெக்னிக்..

டெக்னிக் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய சீரியல் பார்க்கவும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லாதான் இருக்கு...இருந்தாலும் கத்துக்குட்டி அப்படீன்னு காட்டிடுறீங்களே....

"மெகாலட்சுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்குது... மாயாவுக்கு ஒரு ஆண்குழந்தை... (மேற்கொண்டு ஒரு இரண்டு மாசம் ஆயிருக்குமா?)""

எப்பிடியாபட்ட மேட்டர் இது ...ஒரு வருஷம் இழுத்தாதான்..இது சீரியல் அந்தஸ்துக்கே வரும்...மெகா என்றால் கஜ கர்ப்பம்தான்....கஜகர்பம்னா என்னான்னு கேக்குறவுங்களுக்ககு.... அடுத்த எபிசோடில் விளக்கம் தொடரும்......

மெகாலச்சுமி...இவள்தான்.......

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க தம்பி...

கரெக்டுங்கோ மெகா சீரியல்ன்றது கூட்டு முயற்சி... கதைய யாரு வோணும்னாலும் சொல்லலாம்... பின்னா இம்மாம் ஜவ்வா ஒரே ஆளாள இழுக்க முடியுமா என்னா..

கிளிசரின் நடிக்கறவங்களுக்குதான்..
நம்ம வூட்டு அம்மணிங்க ஒரிஜினலா கண்ணீர் வுட்டு அழறாங்க..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அருட்பெருங்கோ..

//ஒலகம் சுத்துறத இப்பதான் பாக்குறேன்...
இல்ல என்னோட தல தான் சுத்துதா?
சன் டிவிக்கு எழுதிப் போடுங்க :))) //

எல்லா காலத்துலயும் உலகம் சுத்திகிட்டுதாங்க இருக்கு.

உலகம் சுத்தறத நீங்க டீவில பாக்காம போயிட்டீங்களா என்ன ?

ராஜ்.. சன் எல்லா டிவியிலும் அப்பப்ப உலகம் சுத்தறத காட்டுவாங்களே...

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

// டெக்னிக் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய சீரியல் பார்க்கவும்.

//

எனக்கு சீரியல் பாக்கற பழக்கம் இல்லீங்ணா....

உங்க சீரியலதான் மொதல்ல பாக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

ஆரம்பிச்சோன்னே மறக்காம சொல்லி அனுப்புங்க :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க அனானி...

//"மெகாலட்சுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்குது... மாயாவுக்கு ஒரு ஆண்குழந்தை... (மேற்கொண்டு ஒரு இரண்டு மாசம் ஆயிருக்குமா?)""
எப்பிடியாபட்ட மேட்டர் இது ...ஒரு வருஷம் இழுத்தாதான்..இது சீரியல் அந்தஸ்துக்கே வரும்...மெகா என்றால் கஜ கர்ப்பம்தான்//

கஜகர்ப்பம் எல்லாம் கரீக்டுதாங்கோ...
ஆனா பாருங்க ஹீரோயின் வில்லிய வெச்சுத்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கே..
அவங்க வருசம் முழுக்க வயத்த தள்ளிக்கிட்டு இருக்க முடியுமா என்ன..
ஆனா ஹீரோயின் தங்கச்சி கன்ஃபார்ம்மா கஜகர்ப்பம்தான். (22 மாசம்) அப்பாலிக்கா கூட குறைபிரசவத்துலதான குழந்தை பொறக்கும்.

2 மாச கர்ப்பமா இல்லை 22 மாசகர்ப்பமா இத முடிவு பண்றது டாக்டரு இல்லை. டி.ஆர்.பி. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//எனக்கு சீரியல் பாக்கற பழக்கம் இல்லீங்ணா....//

சொல்லவே இல்ல..

-------------------------------------------------------------------------------------------------------------