Friday, January 05, 2007

ஆ. ஏ. அ. ஆனான் 6 - பியூட்டி பார்லர்கள்

பியூட்டி பார்லர்கள் - அடிமடையனாக்கும் தொழிற்சாலைகள்

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு.
பெண்கள்தான் ஆண்களைவிட அழகு அப்படின்னு சொல்லிக்கறாங்களே.
அப்புறம் நாட்டுல எதுக்கு பெண்களுக்கு மட்டும் இத்தினி பியூட்டி பார்லர் அப்பிடின்னு.

இன்னா இன்னா பண்றாங்கப்பா இதுல...
ஃபேசியல்.. அதுலயே ஏகப்பட்ட டைப்பு...

ஹெர்பல்.. ஆயூர்வேதிக் அது இதுன்னு போயி.. மட் பேக்கு.. இப்ப சாக்கலேட் ஃபேசியல் வரிக்கும் வந்துருக்குது.
சாக்கலேட்டு தின்பாங்க சரி. அதையுமா தூக்கி மூஞ்சில பூசிப்பாங்க.

அப்புறம் ஹேர் கலரிங் இன்னா ஹேர் ஸ்டைலிங் இன்னா... இன்னும் நமக்கு தெரியாத இன்னான்னமோ சமாச்சாரம் எல்லாம் இருக்கு இந்த பியூட்டி பார்லர்ல.

பெண்களோட லட்சியமே ஆணை அடிமையாக்கி வேலை வாங்கணும்ன்றதுதான்.

ஆண அடிமையாக்கி அடிமடையனாக்கணும்னா அதுக்கு ரொம்ப முக்கியமான ஆயுதம் அப்பிடின்னு அவங்க நினைக்கறது அவங்க அழகை (!!).

இப்படி இல்லாத ஒண்ண இருக்கறதா காட்டறதுக்கு அவங்க இன்னா இன்னா பண்றாங்க.

ஆரம்ப காலத்துல இருந்தே மஞ்சளு மருதாணி வெள்ளரிக்காய் அப்படின்னு இன்னா இன்னாத்தையோ பூசிக்கினு கீறாங்கோ.
கழுதை பாலுல குளிச்சவங்கள பத்தியெல்லாம் நாமதான் படிச்சி கீறமே.
இப்ப பெண்கள் ரொம்ப முன்னேறி தெருக்கு இரண்டு பியூட்டி பார்லரு.

சரி இத எல்லாம் ஒரு ஆணை கல்யாணம் பண்றதுக்காக மட்டும்தான் பண்றாங்களான்னு பார்த்தா இல்ல.

கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் ப்யூட்டி பார்லர் போறாங்க.

இத்தையெல்லாம் இன்னாமோ ஆண்கள் செய்யி அப்பிடின்னு சொல்ற மாதிரியும் அதனாலதான் செய்யற மாதிரியும் ஃபிலிம் காட்டுவாங்கோ.

இரண்டு வாரத்துக்கு ஒரு தபா இது தேவையான்னு புலம்பிக்கினே 1000 ரூபா தர்ற ஆண்கள் எத்தினி பேர நாம பார்த்துக்கீறோம்.

இத்தோட முடிஞ்சிடுதான்னு பார்த்தா முடிஞ்சிடுதா. லிப்ஸ்டிக், ஃபேஸ்க்கு போடுற பேஸ், ஐ புரோ, ஸ்னோ, ஃபேர் அண்டு லவ்லி, வெரைட்டி வெரைட்டியா பெளடரு, நெயில் பாலீஷ், மருதாணி, ஹேர் கலரிங்கு இன்னும் நம்ம வாயில கூட நுழையாத ஐட்டம் எத்தினியோ.

டிரஸ்ஸ எடுத்துக்கங்க எத்தினி வெரைட்டி. புட்டு புடவையா வாங்கி அடுக்கறதுல இருந்து சல்வார்ல இருந்து... இப்ப ஜீன்ஸ் பேண்டுல இருந்து டீஷர்ட் வரிக்கும். வாங்கி கொடுத்தே ஓட்டாண்டியா போற ஆம்பிளைங்க எத்தினி பேரு.

நாம இப்படியெல்லாம் சொன்னம்னா எங்களை படிக்க வைங்க. வேலைக்கு அனுப்புங்க. நீ ஒண்ணும் வாங்கி தரவேணா நாங்களே வாங்கிக்குவோம் அப்பிடின்னு யாராச்சும் வந்து பெண்ணுரிம குரல்ல சொன்னாலும் சொல்வாங்க. நமக்கு எதுக்கு வம்பு.

நம்ப கவலையெல்லாம் இதனால பாதிக்கப்படுற அப்பாவி ஆண்களை பத்திதான்.

பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்குற ஒருத்தன் ப்யூட்டிக்கே இரண்டாயிரம் ரூபா செலவு பண்ணி தேயறானே. அவன நினைச்சா நமக்கு பரிதாபமா இருக்கு.

ஏன்னு கேட்டுடக் கூடாது. வாங்கி கொடுக்க உனக்கு துப்பில்லை. எங்க அப்பாவ சொல்லணும் தேடி புடிச்சி உன்கிட்ட போய் என்னை கொடுத்தாரு பாருன்னு டயலாக்கு வேற. நம்பாளு பரிதாபமா முழிப்பான்.

அவனும் நல்ல விதமா சொல்லி பார்ப்பமேன்னு "நீ எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு அழகா தெரியற. நீ மேக்கப் போடாம நின்னினாலே உலக அழகியெல்லாம் உங்கிட்ட பிச்சை வாங்கணும்". அப்படின்னு டயலாக்கா விட்டு பார்க்கறான். கேக்கறாங்களா இன்னா. அப்படியும் பியூட்டி பார்லரு போறாங்களே. அவனும் தன்னோட தேவையெல்லாம் விட்டுக் கொடுத்து கஸ்டப்பட்டு சம்பாரிச்ச காசு எல்லாம் முகத்துல மட் பேக்கா (மண் பூச்சு) மாறி மக்கி போறத பார்த்துக்கிட்டு சும்மா இருக்கான்.

இவனையெல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலியா. இந்த ஆண் அடிமடையனாகி அடிமையானது உங்க யார் கண்ணுக்கும் தெரியலியா.

இந்த மாதிரி அப்பாவிங்களுக்கு குரல் கொடுக்க நாட்டுல ஒரு ஆணுரிமை அமைப்பு கூட இல்லியே.

அவன பாருங்க. மிஞ்சி போனா ஒரு பேண்ட் சட்டை. ஒரு சீப்பு பெளடரு. அவ்வளவுதான். அந்த அம்மணி குறைந்த பட்சம் அரைமணி நேரம் அலங்காரம் பண்ணி அழகாகுது. இவன் சிம்பிளா இரண்டு நிமிஷத்துல அழகாகுறான்.

இந்த ஆணை இப்படி அடிமடையனாக்கி வெச்சுட்டு எனக்கு சுதந்திரமே இல்ல. ஒரு மாயாஜால் உண்டா ஒரு கேண்டில் லைட்டு டின்னர் உண்டா அப்படின்னு சுதந்திரம் இல்லாம கஷ்டப்படுற பெண்கள என்ன சொல்றது.

யோசிச்சு பாருங்க. நாட்டுல யார் சுதந்திரம் இல்லாம இருக்காங்க. வேண்டியது பெண் விடுதலையா. ஆண் விடுதலையா.


11 comments:

said...

பிளாக்கரோட டெக்னிகல் பிரச்சனையில இந்த பதிவு மாட்டிக்கிச்சி... இப்பதான் எப்படியோ வெளிய வந்து இருக்கு..

பிளாக்கர்ல கூட யாராச்சும் ஆணுரிமைக்குரல நசுக்க முயற்சி பண்றாங்களா என்ன...

யப்பா ஒரு வழியா வெளிய வந்திருச்சி..

படிச்சி கருத்தோ கண்டனமோ சொல்லுங்க இனிய இணைய தமிழ் மக்களே...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னும் ஏதோ பிரச்சனை இருக்குதா... பழைய பிளாக்கர் இப்படி பிரச்சனை பண்ணுதே... எங்கியாச்சும் html tag ல தப்பு பண்ணிட்டமோ..

பதிவு டெஸ்டிங்... 1..2..3...

ஹல்லோ.. ஹல்லோ.. மக்களே பதிவு தெரியுதா ?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நாம இப்படியெல்லாம் சொன்னம்னா எங்களை படிக்க வைங்க. வேலைக்கு அனுப்புங்க. நீ ஒண்ணும் வாங்கி தரவேணா நாங்களே வாங்கிக்குவோம் அப்பிடின்னு யாராச்சும் வந்து பெண்ணுரிம குரல்ல சொன்னாலும் சொல்வாங்க. //
சுலப மற்றும் நீங்களே குறிப்பட்டது போன்ற ஆணிவேரான தீர்வை நீங்களே சொல்லிவிட்டதால்...,

* பெண்களுக்கான ப்யூட்டி பார்லருக்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே நம்மூரில் இருப்பது ஆண்களுக்கான சலூன் என்பதையும்,

* இன்றைக்கு "மேக்கப் போடாம நின்னினாலே உலக அழகியெல்லாம் உங்கிட்ட பிச்சை வாங்கணும்" என்று சொல்லும் ஆண்கள், தான் இறந்தபின் தன் மனைவி(கள்) யார் கண்ணுக்கும் அழகாக தெரிந்துவிடக் கூடாதே என்று ஏற்படுத்திய சாதாரண பெண்களுக்கான முதல் ப்யூட்டி பார்லர் - விதவைகளுக்கு தலைச் சவரம் செய்வது என்பதையும்,

* ஹேர் கலரிங், ஹேர் ஸ்டைலிங் போன்ற இன்னும் நீங்கள் குறிப்பிடாத பல பெயர்களையும் முதன் முதலில் என் ஆண் நண்பனொருவனின் தலைமுடி தினமொரு நிறம் கொள்வதைப் பார்த்து மட்டுமே தெரிந்து கொண்ட அப்பாவிப் பொன்ஸான நான், பதிவு செய்து கொண்டு விடைபெறுகிறேன்...

உங்களின் இந்தப் பதிவுக்குத் தான் என்று நினைக்கிறேன், ஆதிரை ஒரு பின்னூட்டம் இங்கு இட முடியாமல் தன் தளத்தில் இட்டிருக்கிறார். அதில் சில பகுதிகள் இப்போ தான் தெளிவாக புரிந்தது..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒரு முடிவோடத்தான் கெளம்பியிருக்க நீ...எனக்கு வேற கண்ணாலம் பண்ணப் போறதா வூட்ல சொல்லிகிறாங்க... ரொம்ப கிலியாக் கீதுபா..

ஆமா உனக்கு கண்ணாலம் ஆயிட்ச்சாப்பா ?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா தெரியுதுபா..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பெண்கள்தான் ஆண்களைவிட அழகு அப்படின்னு சொல்லிக்கறாங்களே.
அப்புறம் நாட்டுல எதுக்கு பெண்களுக்கு மட்டும் இத்தினி பியூட்டி பார்லர் அப்பிடின்னு.//

அடடா... என்ன ஒரு R&D!!

தொடரட்டும் உம் பணி!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி பொன்ஸ் அவர்களே...

//ஆண்களுக்கான சலூன் //

பிளேடு மேட்டரா இருக்கே.. 25 ரூபா கட்டிங்கும் 5 ரூபா ஷேவிங்கும் எங்க. 250 ரூபா ஃபேசியல் எங்க.

கட்டிங் ரொம்ப பேசிக் நெசசிட்டி.. அத போயி ஃபேசியல் கூட கம்பேரு பண்றீங்களே உங்களுக்கே நியாயமா தெரியுதா.


//விதவைகளுக்கு தலைச் சவரம்//
ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டுமே இருந்த இந்த கொடுமையான பழக்கம் இப்ப இல்லை.
இத செஞ்சி விட பத்து சுமங்கலி (!!) புண்ணியவதிங்கதான் கிளம்பி வருவாங்க அப்படின்றது உங்களுக்கு தெரியாதா.

//ஹேர் கலர் மாற்றும் ஆண் நண்பன்.//

பாவம் கண்டுக்காதீங்க. நாளைக்கே கல்யாணம் ஆகி அந்த நண்பரோட தலைமுடி அவர் மனைவி கையில மாட்டிக்கிச்சுனா அந்த முடியாவது கலர் மார்றதாவது.

ஆதிரை அவர்கள் பதிவை பொறுமையாய் படித்து பதில் சொல்கிறேன்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க மதுசூதனன்..

வெற்றிகரமான ஆண் என்பவன் தன் மனைவி செலவழிப்பதை விட அதிகம் சம்பாதிப்பவன்.
வெற்றிகரமான பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை தேடித் திருமணம் செய்பவள்.


வெற்றிகரமான ஆணாக நீங்கள் இருக்க வாழ்த்துக்கள்.

நமக்கு கல்யாணம் ஆயிருச்சிப்பா. அனுபவமா கொட்டறமே அதிலேயே தெரியலியா..

வருகைக்கு நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

k@rthik said...

//அடடா... என்ன ஒரு R&D!!
தொடரட்டும் உம் பணி!! //

நன்றி கார்த்திக் அவர்களே.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தம்பி சொன்னது இன்னான்னா...
//
அ.பி

நேத்திக்கே பின்னூட்டலாம்னு பாத்தா பொட்டியே தொறக்கல. ஏதோ செய்வினை செஞ்சிட்டாங்கன்னு நினைக்கிறேன். :))

ஏதோ உலகத்தில இல்லாத அளவுக்கு மேக்கப்ப அப்பிகிட்டு வருவாங்க இந்த பியூட்டி பார்லர் ஓனரம்மாக்கள். இவங்க முகத்தை பாக்கும்போதே தெரிஞ்சிடும் அவங்க பியூட்டி பார்லர் லட்சணம். ஏதாவது ஒரு தடை சட்டத்துல இவங்கள உள்ள தூக்கி போடணும்யா. தப்பை செய்யிறவன் விட தப்பு செய்ய தூண்டறவனுக்கும் ஒத்தாசை பண்றவனுக்கும் குடுக்கற மாதிரி.
//


வாங்க தம்பி.

டீவில வர்ற அழகு நிகழ்ச்சிகளை எப்பவாவது பார்த்து இருக்கீங்களா.
கொடுமையா இருக்கும்.

இந்த முகங்களை வேற ரொம்ப கிட்ட காண்பிச்சு பயமுறுத்துவாங்க.

இதுல பாதி ப்யூட்டி பார்லர் காரங்க எந்த அடிப்படை அறிவுமே இல்லாம ப்யூட்டி பார்லர் நடத்தறாங்கன்றதும். பெண்மணிகள் பலரும் தெரிஞ்சே ஏமாறறதும் நடக்குது.

இதையெல்லாம் முறைப்படுத்த சட்டம் இருக்கான்னு தெரியல. அழகு கலைப் பயிற்சி ஒண்ணு எடுத்தவங்கதான் இத செய்யணும் அப்படின்னு எதுவுமே இல்லன்றது இன்னொரு பெருங்கொடுமை.

அதுக்காக பணம் நூறாவும் ஆயிரமாவும் பறக்கறது இன்னொரு கொடுமை.

கருத்துக்கு நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னமோ சொல்றீங்க...எனக்கு சுதந்திரம் கிடைச்சா இத பத்தி நானும் கருத்து சொல்றேன்...இத பத்தி ஏதுனா சொல்ல போக இன்னைக்கு வெள்ளிக்கிழமை கிடைச்ச 3 பெக்கு கோட்டாவுக்கும் வேட்டு வெச்சுக்க நான் விரும்பல...வர்டா :-)



-------------------------------------------------------------------------------------------------------------