தோழி கவிதா அவர்களின் ஆண்கள் என்ற மிருகங்கள்......... பதிவுக்கு எனது எதிர் வினை.
முதலில் "ஆண்கள் என்ற மிருகங்கள்....." என்ற தங்கள் தலைப்பிற்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
"சில ஆண் மிருகங்கள்.." என்ற தலைப்பு மட்டுமே சரியானதாக இருக்க முடியும்.
ஆயிரத்தில் ஒரு ஆண் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த ஆண் குலத்தையே தாக்கும் தலைப்பு தங்களுடையது.
இப்படிப்பட்ட மிருகங்களை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் புலம்புவதாகவே உள்ளது உங்கள் கட்டுரை.
இந்த கேவலமானவர்களுக்கு மனதில் சுத்தமாக தைரியமே கிடையாது.
நீங்கள் திரும்பி "என்ன" என்று ஒரு கேள்வி கேட்டாலே தப்பான எண்ணம் கொண்டவனாக இருந்தால் ஓடி விடுவான்.
அதையும் மீறி நின்றால் அறையுங்கள்.
இத்தகு தைரியத்தை பெண்களுக்கு ஊட்ட தவறிய நமது சமூகமே குற்றவாளி.
ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து பேதம் வளர்த்த நமது சமூகம் குற்றவாளி.
ஆணும் பெண்ணும் இயல்பாக நட்பாக பேசி பழக முடிந்தால் இது எல்லாம் நடக்காது.
மும்பை போன்ற பெருநகரங்களில் ஆண் பெண் வித்தியாசம் பார்த்து பழகுவதில்லை. அதனால் மனித மனங்கள் இயல்பானவையாக இருக்கின்றன.
அங்கு பேருந்தில் நீங்கள் சொல்வது போல் எதுவும் நடப்பதுமில்லை.
நாம் என்ன செய்கிறோம் குடும்பங்களில் ஆண் பெண் நட்போடு பழகவே விடுவதில்லை. இது மாற்றுப் பாலரை குறித்த ஆசைகளை மனதில் வளர்க்கிறது. ஆண்/பெண்ணை அவ்வாறு வளர்த்த பெண்ணாகிய தாயும்/ஆணாகிய தந்தையும் ஒரு குற்றவாளியே.
இதனால்தான் ஆண்/பெண் இருவருக்குள்ளும் சில மிருகங்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு உருமிக்கொண்டிருக்கிறது.
சில நேரங்களில் இந்த மிருகங்கள் பெண்களிடமிருந்தும் உறுமுவதை பார்த்திருக்கிறேன்.
ஒரு பேருந்தில் அமைதியாக ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த என்னை "இங்க பாருடி சாமியாரு" என்று கை கொட்டி சிரித்த பத்து பெண்களின் சிரிப்பு எனது ஆயுளில் மறக்காது.
மற்றுமொரு முறை தொடர்ந்து என் தோளில் சாய்ந்த பெண்ணை "தயவு செய்து தள்ளி போகிறீர்களா." என்று நான் சொன்ன போது அவள் முறைத்த முறைப்பு இருக்கிறதே.
ஆணோ பெண்ணோ தவறு தவறுதான்.
ஆணும் பெண்ணும் மனதில் எந்த கள்ளமும் இல்லாமல் பழகும் நாள் நம் சமுதாயத்தில் என்று வரும்.
சென்னையில் மும்பை போல் பேருந்துகளில் பெண்களுக்கு என்று தனியிருக்கைகள் ஒதுக்கப்படாமல் ஆணும் பெண்ணும் சரிசமமாய் அமரும் காலம் என்று வரும் ?
----------------------------------------------------------------
பிற்சேர்க்கை:
நான்காண்டுகள் சென்னை பேருந்துகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தவன் நான்.
12B, 13, 1B, 18A, 18G, 5E, 23C, 21G, 49D, 70, 19B,C போன்றவற்றில் அதிக அளவில் பயணித்திருக்கிறேன்.
கூட்டம் மிகுதியான நேரம் கூட்டம் குறைவான நேரம் அனைத்திலும் பயணித்திருக்கிறேன்.
பீக் அவர்ஸ்ஸில் அனைத்து பகுதிகளிலும் பஸ்களில் புளிமூட்டைகள் போல் அடைபட்டு மக்கள் பயணிக்கிறார்கள்.
என்னை பொறுத்த அளவில் இது போன்ற நிகழ்வுகள் மிகக் மிக குறைவு. நான் கண்டது இல்லை. (பெண்கள் பகுதியில் அதிகம் நோக்காத என் தொலைநோக்கு குறைந்த பார்வையால் இதையெல்லாம் நான் பார்க்கவில்லையோ என்னவோ)
சென்னைக்கு வந்த புதிதில் 12B பேருந்தில் என் அனுபவம் ஒன்றை கூறி விடுகிறேன். கூட்டம் நிறைந்த பேருந்து.
நானும் என் நண்பனும் உள்ளே ஏறி சென்று விட்டோம்.
நிற்க முடியாத படி கூட்டம். 50 பேர் மட்டும் செல்ல வேண்டிய பேருந்தில் 120க்கும் மேற்பட்டோர் இருப்பர். ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறேன். உடன் எனது நண்பனும்.
அருகில் ஒரு பெண். அவள் மீது சாயக் கூடாது என்று என் நண்பன் கிட்டத்தட்ட என் மீது சாய்ந்து நின்றிருந்தான்.
வந்தது ஒரு வளைவு. வேகமாக பேருந்து திரும்பியதில் எனக்கு பின்னிருந்தவர் என் மீது சாய நான் நண்பன் மீத சாய நண்பன் எதிர் பாராத கணத்தில் அந்த பெண்மீது இடித்து விட்டான்.
அடுத்த கணமே சுதாரித்து கொண்டு... "சாரி" என்றான்.
"சாரியாம்.. சாரி.. வேணும்னே இடிக்கறதுக்கு வந்துட்டு.. நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல.".
நண்பனுக்கு அவமானமாகி விட்டது. கூட்டத்தை கிழித்துக் கொண்டு அடுத்த பேருந்து நிலையத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்பே அவன் இறங்க நானும் உடன் இறங்கினேன். அதற்குப்பிறகு செல்ல வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் சென்றோம்.
அதற்கு பிறகு பஸ் கூட்டமாக இருந்தால் நானும் சரி நண்பனும் சரி ஃபுட் போர்டு மட்டுமே.
ஒரு முறை ஃபுட் போர்டில் தொங்கு பவர்களை பிடிக்கும் காவலர்களிடமிருந்து தப்பித்தது தனிக் கதை.
------------------------------------------------------------------------
51 comments:
சபாஷ் அரை பிளேடு
-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு அவர்களே,
க்ரீம், மற்றும் பிரஷ், லோஷனோடு
அருமையான பதிவாகப் போட்டிருக்கிறீர்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஆண்குலக் காவலா.....
தலைப்பைப் பார்த்ததுமே தடுமாறித்தான் போனேன்...
எட்டிப் பார்த்தால், நல்லவங்கலெல்லாம் கெட்டவங்கள திருத்துங்கன்னு சொல்றாங்க....
நான் என்ன நெனக்கிறேனா, ஒரு அடென்ஷன் ஹைஜாக்கிற்க்காகத்தான் அப்டி ஒரு தலைப்பப் போட்டுருக்காங்கன்னு...
என்னுடைய கண்டனத்தையும் சேத்துக்கோங்க அரை...
-------------------------------------------------------------------------------------------------------------
சபாஷ்!!!
-------------------------------------------------------------------------------------------------------------
எதிர்படும் வழிகளில் என்மேல் படுவதைத் தவிர்த்த பெண்களைவிட நான் தவிர்த்த பெண்கள் பன்மடங்கு அதிகம்.
-------------------------------------------------------------------------------------------------------------
புத்தாண்டு வாழ்த்துக்கள்...நம்மல எல்லாம் நல்லவங்கனு சொல்லீருக்கீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:-)
-------------------------------------------------------------------------------------------------------------
அந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.
இதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ஆண்களை தவிர்க்க நினைக்கும் பெண்கள், தங்கள் எதிர்வினையை மென்மையாகவோ அல்லது காட்டமாக அல்லது அதிரடியாகவோ தங்கள் எதிர்ப்பைக் காட்டலாம். நிச்சயமாக பலன் இருக்கும். ஊசியால் குத்தும் முறையில் கூடுதலாக ஒரு பழி தீர்த்த உணர்வும் இருக்கும். சில மத்திய வயது மற்றும் முதிய ஆண்களிடம் இந்த அருவருக்கத்தக்க பழக்கம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த பதிவின் தலைப்பு மிகக் மிகக் கேவலமானது.
// படிக்கும் ஆண்கள் எல்லாம் “எப்படி நீங்கள் ஒட்டு மொத்தமாக ஆண்களை சாடலாம்ன்னு? என்னிடம் சண்டைக்கு வந்து நிற்காமல், அசிங்கம் செய்கிற மற்றவர்களை முடிந்தால் சரிப்படுத்த உங்கள் நேரத்தை செலவிடலாம்.//
நேரமிருப்பவர்கள் இப்படி கெக்கலி கொட்டலாம்.
// கவி, தலைப்பு சூப்பர். பார்த்ததும், இணைய ஆணிய தலைவர் பெயர் டாகல்னு ஞாபகம் வந்துடுச்சு :-)//
சொல்லவந்த செய்தியோ மிக முக்கியமானது. அதை சொன்ன விதமும் சரியாக இருக்கிறது. ஆனால் தலைப்பு மட்டும் வசைகளில் வடித்தெடுத்த வசை.
தந்தையும் ஆண் தனயனும் ஆண்
தம்பியும் ஆண் தன்பிள்ளையும் ஆண்
விந்தையாய் இம்மாக்களிடையே
வந்து பூக்குமா ஒரு பெண் மனிதம்!
-------------------------------------------------------------------------------------------------------------
புரிதலுக்கு நன்றி கால்கரி சிவா அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
யாருங்க அது ஃபுல் பிளேடு. எனி வே புரிதலுக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
அன்பு ஜி...
//ஆண்குலக் காவலா.....//
இது சற்று அதிகம்தான் :)
அட்டென்ஷனுக்காக என்றாலும் புழுதி வாரி தூற்றும் தலைப்பு. அதனால்தான் நாம் நமது கருத்துக்களையும் சொல்ல வேண்டியதானது. நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி வெட்டிப்பயல்
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி ஓகை அவர்களே..
//எதிர்படும் வழிகளில் என்மேல் படுவதைத் தவிர்த்த பெண்களைவிட நான் தவிர்த்த பெண்கள் பன்மடங்கு அதிகம்.//
அடியேனும் அஃதே.
-------------------------------------------------------------------------------------------------------------
வருக ஸ்யாம்.
நீண்ட நாட்களாய் காணவில்லை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாமெல்லாம் உண்மையிலேயே நல்லவங்க ஸ்யாம். சும்மா குறை சொன்னா நாம என்ன பண்றது சொல்லுங்க.
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பரே!
ஆத்திரப் படாமல் சிந்தித்தால் சிலர் அதிலும் கேவலம்.ஆனால் நிச்சயம் எல்லோருமல்ல. கவிதா அதைக் குறிப்பிட்டுள்ளார்.
யோகன் பாரிஸ்
-------------------------------------------------------------------------------------------------------------
ஓகை அவர்களே
//தந்தையும் ஆண் தனயனும் ஆண்
தம்பியும் ஆண் தன்பிள்ளையும் ஆண்
விந்தையாய் இம்மாக்களிடையே
வந்து பூக்குமா ஒரு பெண் மனிதம்!
//
நன்று சொன்னீர்கள். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்
ஆத்திரம் ஏதும் எனக்கு இல்லை.
கவிதா அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை விட மென்மையான வார்ததைகளையே நான் பயன் படுத்தி இருக்கிறேன்.
கண்டனம் என்பது மட்டுமே அதிகபட்சம் நான் பயன்படுத்திய கடினமான வார்த்தை.
அடி உதை குத்து என்று அந்த பக்கம் இருந்த வன்முறையால் பயந்தே நான் இந்தப் பக்கம் பயந்து ஒதுங்கி வந்துவிட்டேன்.
எவரையும் சொல்லித் திருத்த முடியும் என்பதுதான் எனது கட்சி.
நாவினால் சுடும் வடு அடி உதையை விட ஆழமானது. எவரையும் மாற்ற வல்லது.
இடிராஜாக்களான இழிபிறவிகளை அம்பலப்படுத்தி அவமானம் கொள்ள செய்வதே போதுமானது என்பது என் கருத்து.
அப்படியும் திருந்தாதவர்களுக்கு வேண்டுமானால் மேல் நடவடிக்கை எடுக்கலாம்.
எடுத்த எடுப்பில் அடி உதை என்பது வன்மத்தைதான் மனங்களில் ஊன்றும். மீண்டும் தவறுகள் செய்யத் தூண்டும்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
ஆஹா...அரை
சூப்பர்...
நானும் படிச்சேன் நம்ம "ஜி" சொல்லுறது மாதிரி தான் இருக்கு அவுங்க தலைப்பு...
-------------------------------------------------------------------------------------------------------------
//படிக்கும் ஆண்கள் எல்லாம் “எப்படி நீங்கள் ஒட்டு மொத்தமாக ஆண்களை சாடலாம்ன்னு? என்னிடம் சண்டைக்கு வந்து நிற்காமல், அசிங்கம் செய்கிற மற்றவர்களை முடிந்தால் சரிப்படுத்த உங்கள் நேரத்தை செலவிடலாம்.//
அரை பிளேடு மேலே உள்ள வரிகள் கவிதா அவர்களின் பக்கத்தில் இருப்பவை. அவர்கள் அனைத்து ஆண்களையும் சாடவில்லையே? தவறு செய்தவர்களை தானே சாடி உள்ளார். இந்த பதிவு தேவையற்றது என்று நான் எண்ணுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி கோபிநாத் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
நல்ல பார்வை ... நல்ல பதிவு
-------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர்ங்கண்ணா!!!!!
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி சந்தோஷ் அவர்களே.
நான் கவிதா அவர்களுடைய தலைப்புக்கு மட்டுமே சிறு கண்டனத்தை தெரிவித்திருக்கிறேன்.
அவர் குறிப்பிடும் நபர்கள் கேவலமானவர்கள் என்பதிலும் கண்டிக்க பட வேண்டும் என்பதிலும் பெரிதும் ஒத்து போகிறேன்.
அவருடைய கட்டுரை பெருமளவு பொதுமைப் படுத்துவதாக இருக்கிறது என்பது என் ஆதங்கம்.
எந்த ஒரு கருத்துக்கும் சிறு மாற்றுக் கருத்தாவது இருக்கும் என்ற அளவில்தான் எனது பதிவு.
எனது கருத்துக்களை மட்டும் இங்கு பதிகிறேன். இதனை தாங்களோ கவிதா அவர்களோ தனி நபர் தாக்குதலாய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
அவரது பதிவு மதக்கட்டுப்பாடுகள் பெண் அடிமைத்தனம் என்று குறிப்பிட்ட அதே எல்லையில் மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. புதிய கருத்துக்களோ பார்வைகளோ அதில் இல்லை.
இங்கு நான் குறைந்த அளவிலேனும் இந்த நிலை அடிப்படையிலேயே மாற என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். தவறு செய்தவனை அடித்தல் என்பதுதான் காலம் காலமாக ஒரே தீர்வு என்று என்ற நிலையில் இது மாற நாம் செய்ய வேண்டியது யாது என்பதை விவாதிப்பது இப்பதிவின் நோக்கம். அவரே சொல்லியுள்ளது போல மாற்றும் ஒரு சிறு முயற்சி. அடித்தல்ல அன்பால்.
இது எனது கருத்து தளம் மட்டுமே. இங்குள்ள எனது கருத்துக்களில் தவறு இருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
மிக்க நன்றிகள்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணை பெண்ணாக மதிக்கும் ஒரு சமூகத்தில் இது போன்ற கேவலங்கள் நிகழ வாய்ப்பில்லை. அப்படி ஒரு சமுதாயத்தை அமைக்கும் வழி முறைகள் என்ன என்று விவாதிப்பதே இப்பிரச்சனைக்கு தீர்வாகும்.
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி சுந்தர் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தேவ்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஆண்குலக் காவலா.....
நன்றி அரை பிளேடு,
அரை பிளேடா இருந்தாலும், நல்ல ஷார்ப்பா இருக்கீங்க
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி வெங்கட்ராமன் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
கவிதா அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.
--------------
நன்றி கவிதா அவர்களே
பர்ஸனலாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை.
ஆண்கள் என்று ஒட்டு மொத்தமாக தாங்கள் சொன்னதும், அனைவரும் அறிந்த பிரச்சனைக்கு அரத பழசான தீர்வுகளை மட்டுமே தாங்கள் அளித்ததும் மட்டுமே எதிர் வினைக்கு காரணம்.
எனது எதிர் வினையில் நிச்சயம் நக்கல் தொனி இல்லை.
தாங்கள் சொல்லும் பிரச்சனையில் நான் பெண்கள் பக்கமே. முரண்படவில்லை என்பதை தெளிவாக்கி விட்டேன்.
பெண்கள்/ஆண்கள் தங்கள் பார்வையை பெரிதாக்கி கொள்ள வேண்டும். எதையும் பேசுவதன் மூலம் தீர்க்க முடியும். தேவை பரஸ்பர புரிதல்கள் மட்டுமே என்று சொல்வது தவறா.
வன்மத்திற்கு வன்மம் பதிலாகாது.
தேவை புரிதல்கள் மட்டுமே.
புரிதல்கள் இல்லாத வரை இப்பிரச்சனைகள் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.
பிரச்சனைகளின் ஆணிவேரை புரிந்து கொள்ள முயலாது எத்துணை நாள் கிளைகளையே வெட்டிக் கொண்டிருப்பீர்கள்.
வெட்ட வெட்ட இவை துளிர்க்கும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.
தாங்கள் எனது கருத்துக்களை பர்சனலாக எடுத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். அதற்காக மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
அரைபிளேடு.
-------------------------------------------------------------------------------------------------------------
அரைபிளேடு,
//எனது கருத்துக்களில் தவறு இருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். //
என்று சொல்லி இருப்பதால்..
//பெண்ணை பெண்ணாக மதிக்கும் ஒரு சமூகத்தில் இது போன்ற கேவலங்கள் நிகழ வாய்ப்பில்லை.//
என்பதை
பெண்ணைச் சக மனுஷியாக(மனிதனாக) மதிக்கும்..
என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மற்றபடி கவிதா பதிவில் கல்வெட்டு சொல்லி இருக்கும் வழிமுறைகள் தான் இந்த பிரச்சனைக்குத் தீர்வு என்பது தான் என் எண்ணமும்...
-------------------------------------------------------------------------------------------------------------
i am aasath
Hi Measyahs of Male Genders ...
Did you against the Title of that Article?
If yes, that title has not enough to us.
1.We treat them as a COMMADITY till today.
2. If you accept the equivalence of them with us, why we didn't accept their growth in educatrion/employment, literature/social activty ....
3. Ok all of them whom to be the inner barrier of this problem CAN'T agaist their voice to the de-culturalised media, magazines, cinema, net, discothae, partys, get to gethers ... etc.
This activities has promoted by our MNCs or Imperialistic culture for their commadity moving ...
Why are you refuse and struggle against hem ...
-------------------------------------------------------------------------------------------------------------
Hi Half balde
I gone through Kvitha's post. She is having grudge about entire male rather than finiding the root cause for such events. As commented by many, there are gents also exploited by many females. I really appreciate about writeup for given solution than finding merely fault on all males.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி பொன்ஸ்.
ஒவ்வொருவரும் மற்றவரை சக மனிதனாக/மனுஷியாக நினைக்க ஆரம்பித்து விட்டால் பிரச்சனையே இருக்காது. இது எல்லா பிரச்சனைகளுக்குமே பொருந்தும்.
மிக்க நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
ஓகை , மற்றும் பிளேடு சாமிகளா ,
//எதிர்படும் வழிகளில் என்மேல் படுவதைத் தவிர்த்த பெண்களைவிட நான் தவிர்த்த பெண்கள் பன்மடங்கு அதிகம்.//
தாடிதாத்தா என்ன சொல்றாருன்னா
தன்னெஞ்சறிவது பொய்யற்க்க ........
-------------------------------------------------------------------------------------------------------------
அ.பி
நேத்திக்கே பின்னூட்டலாம்னு பாத்தா பொட்டியே தொறக்கல. ஏதோ செய்வினை செஞ்சிட்டாங்கன்னு நினைக்கிறேன். :))
ஏதோ உலகத்தில இல்லாத அளவுக்கு மேக்கப்ப அப்பிகிட்டு வருவாங்க இந்த பியூட்டி பார்லர் ஓனரம்மாக்கள். இவங்க முகத்தை பாக்கும்போதே தெரிஞ்சிடும் அவங்க பியூட்டி பார்லர் லட்சணம். ஏதாவது ஒரு தடை சட்டத்துல இவங்கள உள்ள தூக்கி போடணும்யா. தப்பை செய்யிறவன் விட தப்பு செய்ய தூண்டறவனுக்கும் ஒத்தாசை பண்றவனுக்கும் குடுக்கற மாதிரி.
-------------------------------------------------------------------------------------------------------------
சரியாச் சொன்னீங்க அரை:-)
http://internetbazaar.blogspot.com
-------------------------------------------------------------------------------------------------------------
அரை ப்ளேடு
என் பின்னூட்டம் இங்கே
http://ullal.blogspot.com/2007/01/blog-post.html
-------------------------------------------------------------------------------------------------------------
//எனது கருத்துக்களை மட்டும் இங்கு பதிகிறேன். இதனை தாங்களோ கவிதா அவர்களோ தனி நபர் தாக்குதலாய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.//
அண்ணா இதுல என் மீது தனிமனித தாக்குதல் நடத்த என்னங்கண்ணா இருக்குது. கவிதா அவங்க கருத்தை சொன்னாங்க நீங்க உங்க கருத்தை சொன்னீங்க நான் என்னோட கருத்தை சொன்னே அவ்வுளவு தான். :))
-------------------------------------------------------------------------------------------------------------
சந்தோஷ் said...
//அண்ணா இதுல என் மீது தனிமனித தாக்குதல் நடத்த என்னங்கண்ணா இருக்குது. கவிதா அவங்க கருத்தை சொன்னாங்க நீங்க உங்க கருத்தை சொன்னீங்க நான் என்னோட கருத்தை சொன்னே அவ்வுளவு தான். :)) //
புரிதலுக்கு மிக்க நன்றி சந்தோஷ் அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
வருக கரு.மூர்த்தி அவர்களே..
//தன்னெஞ்சறிவது பொய்யற்க்க ....//
இடிக்காமல் விலகி செல்வோம் என்று ஒரு ஆண் சொல்வானானால் அது பொய் என்கின்றீர்களா.
ஒரு பெண் அழகாக பாந்தமாக இருந்தால் எந்த ஆணும் ஒரு கணம் பார்க்கவே செய்வான். மிருகங்கள் மட்டுமே சென்று இடிக்கும்.
மற்றவர்கள் ஒரு பார்வையோடு கண்ணியத்தோடு நகர்ந்து விடுவார்கள்.
ஹிருத்திக் ரோஷனையும் ஆர்யாவையும் ரசிக்கும் பெண்கள் இல்லையா.
அழகை பார்ப்பது தவறு இல்லை. ஆபாச எண்ணங்கள் நடத்தைகள்தான் தவறு.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க தம்பி பியூட்டி பார்லர் பின்னூட்டப் பொட்டி மாறி வந்திட்டீங்க போல. அத அங்க பேசிப்போம். :))
-------------------------------------------------------------------------------------------------------------
அரைபிளேடு அவர்களே, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியாத, திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கும் கவிதா போன்றவர்களாலேயே இந்த சமூகம் இன்னும் 200 ஆண்டுகளுக்கு திருந்தாது. அவருடையா மகனையோ, அப்பாவையோ, கணவரையோ அவ்வாறு யாராவது பொது இடத்தில் தவறாக பொதுமைப்படுத்தி பேசினால் தெரியுமோ என்னவோ.
இவர்களே இந்த மாதிரி மிருகங்களை மிருகங்களாகவே இருக்க வைக்கின்றனர். தாங்களும், கல்வெட்டு அவர்களும் சமூக அக்கறையோடு எழுதி விளக்கம் கொடுத்தும் புரியாதவர்கள் எழுதி என்ன பயன்? பொதுப்படையாக எழுத ஆரம்பித்தபின் விமர்சனங்களை சந்திக்க தைரியம் வேண்டும். நான் நினைத்ததை, அனுபவித்ததைத் தான் எழுதினேன் என்று அடம் பிடித்தால், கவிதாவைப்போல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள் மட்டுமே இதனை ஆராவாரித்து வரவேற்க முடியும். இவர்கள் இந்த விதமான காழ்ப்புணர்ச்சியுடனேயே வாழ்நாள் முழுவதும் இருப்பார்கள்.
இவர்களால் இதுமாதிரியான கண்ணோட்டத்துடன் இப்படிபட்ட மிருகங்களையோ, வேறு விதமான மிருகங்களையோ தான் வளர்க்கமுடியுமே தவிர வேறு எந்த உபயோகமான எந்த செய்தியையும் கொடுக்கமுடியாது. இவர்களைக் கேட்டால் என் குடும்பத்தில் இவ்வாறு யாராவது செய்தால் நானே அவர்களை கொலை செய்திருப்பேன் என்றே சொல்வார்கள். அவர்களால் அதன் அடிப்படை காரணம் என்ன, ஏன் அப்படி செய்கிறார்கள், இனி வரும் காலத்தில் எப்படி நம் சந்ததியினரை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வராது. இது போன்று நான் நினைத்தேன் எழுதினேன் என்றால் பேசாமல் டயரி எழுதலாம். வயசான காலத்தில் எடுத்து படிக்க வசதியாக இருக்கும்.
அரைபிளேடு அவர்களே, இது போல வரிகளின் வீச்சில் பதிலடி கொடுத்தால தான் இவர்களுக்கு புரியும். சில சமூக சிந்தனைகளையும் சபையறிந்து தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
இதுவே என்னுடைய முதல் வைத்தள அறிமுகம், அதை இப்படி ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே என்று வருத்தம் தான். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது.
குறிப்பு: அரைபிளேடு அவர்களே, கவிதா இதனை அவருடைய பின்னூட்டத்தில் சேர்ப்பாரோ மாட்டாரோ என்ற எண்ணத்தில் தான் உங்கள் பின்னூட்டத்திலும் சேர்க்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி LFC Fan அவர்களே.
-------------------------------------------------------------------------------------------------------------
அனானியாக வந்த aasath
பெண்களை இத்துணை நாளாக வெறும் போகப்பொருளாய் பயன்படுத்தி அவர்களை கல்வி பெறவிடாமல் தடுத்திருக்கிறோம் என்கிறீர்கள்.
அதே நேரத்தில் இன்றை சீரழிவிற்கு MNC க்கள் காரணம் அதை ஏன் எதிர்த்து குரல் கொடுக்க வில்லை என்கிறீர்கள்.
ஆணோ பெண்ணோ நமது சமூகம் பெருமளவு முன்னேறியுள்ளது. நாம 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம்.
எங்காவது வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருக்க வேண்டிய நான் இன்று கணிணி முன் அமர்ந்திருக்கிறேன் என்றால் MNC க்களும் காரணம்.
அவை நமக்கு பொருளாதார சுயசார்பு கதவுகளை திறந்து விட்டுள்ளன. கட்டுப்பாடற்ற சுதந்திரம் உள்ளது.
இந்நிலையில் அவர் அவர்கள் வாழ்க்கை முறையை அவர் அவர்கள்தான் முடிவு செய்ய முடியும்.
எனது வாழ்க்கை எனது கொள்கை கோட்பாடுகளின் படி தெளிவாக இருக்கிறது.
பெண்ணோ ஆணோ MNC க்களால் கெட்டு போகிறார்கள். அதை ஏன் தட்டிக் கேட்பதில்லை என்பது தங்கள் வாதமானால் எந்த MNC யும் உங்களை கையை பிடித்து இழுத்து தவறு செய்ய வைப்பதில்லை என்பதே எனது பதில்.
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
//I gone through Kvitha's post. She is having grudge about entire male rather than finiding the root cause for such events. As commented by many, there are gents also exploited by many females. I really appreciate about writeup for given solution than finding merely fault on all males.//
புரிதல்களுக்கு நன்றி அனானி.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி இளங்கோ
புரிதல்களுக்கு மிக்க நன்றி.
பிரச்சனை இது என்று பொதுவில் வைத்த பிறகு அதற்கு யாரும் மாற்று பார்வையை கூட சொல்லக்கூடாது என்பதாய் அவர்கள் தொனி தொனித்தபோது எனக்கு சற்று வருத்தமாய்த்தான் இருந்தது.
கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டில் மட்டுமே இருக்கிறது என்ற சொல்பவர்களால் வெளிச்சத்தை உணர முடியுமா என்று தெரியவில்லை.
நமது கருத்துக்கள் மூலம் அவர்களுக்கு குறைந்த பட்ச புரிதலாவது ஏற்பட்டிருக்கும் என்பது என் நம்பிக்கை.
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு,
உங்களை இந்த எதிர்வினைப் பதிவு போட வைத்த பதிவின் தலைப்பு அப்படி இருப்பதாலேயே எல்லா ஆண்களும் அப்படி என்று படிப்போர் அனைவரும் எண்ண நேரிடும் என்றில்லை.
உண்மையில் இந்தக் கேவலமான வகையில் வக்கிரமாக பேருந்துகளில், கூட்டம் நிறைந்த பொது இடங்களில் இருபாலரும் அடுத்த எதிர் பாலரிடம் நடந்து கொள்ளும் விதம் நான் அறிந்த வகையில் தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது என்பது நானறிந்தவரை உண்மை.
பெண்களைத் தனி இருக்கைகள் அல்லது பேருந்தையே இருகூறாக்கி பெண்கள் முன்புறம் வலையிடப்பட்டு பிரிக்கப்படுவது என்பதெல்லாம் தமிழகத்தில் மட்டுமே.
பரஸ்பரம் ஆண்/பெண்ணோடு சாதரணமாகப் பேசினாலே காதல் என்று அவதூறு கதைகள் எழுவதும் தமிழகத்திலேயே அதிகம்.
இதர இந்தியாவில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடக்கின்றனதான். ஆனால் தினசரி வாழ்வில் தமிழகத்தில் இருப்பது மாதிரி அதீதமாகத் தனிமைப்படுத்தப்படுவது இல்லை.
இந்தச் சீர்கேட்டுக்கு ஒரு காரணி மட்டுமே காரணம் இல்லை. மிகையாக இல்லாத பகுத்தறிவையும், தரப்படாத சுயமரியாதையும் பேசி ஹிப்போக்ரஸியாக என இருக்கும் தலைமைகள் என ஆரம்பித்து, சினிமாச் சீரழிவு வீரம், (பெட் கட்டி ஆண்/பெண்ணை உரசுவது)
எனப்பலதும் இருக்கிறது.
சென்னையில் இந்தக் கேவலம் அதிகம் ஏனெனில் பகுத்தறிவு, சுயமரியாதை முப்பெரும் ஐம்பெரும் விழாக்கள் நடப்பது தலைநகரில் தானே. தலைமைகளின் சீழ்பிடித்த பொய்மைகள் தலைநகரில் தீவிரமாகத் தலைதூக்கியபடி திரிந்தலைவதில் வியப்பில்லை.
கேடான அரசியல் இயக்கங்களில் கீழான கொள்கை, தலைமைவழிபாடுகளுடன் மாணவரணியினர் குறிப்பாக நந்தனம்/பச்சையப்பா/தியாகராசர் கல்லூரி மாணவர்களது "பஸ் டே" நகர்வலத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை கண்ணியமான செயல்பாடுகள் சாம்பிளாக எடுத்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் மேலோங்கிக் காணப்படும் இந்தக் கலாச்சாரச் சீரழிவுக்கு மிகப் பிரதானமாக ஒரே ஒரு காரணம் சொல்லச்சொன்னால் பொய்மையான கொள்கைகளின்படி வழிகாட்டும் தலைமைகள்.
95% ஆண்கள் நல்லவரே. ஜி சொன்னது உண்மை. சீரழிந்த 5% ஆண்களில் இந்த அரசியல் இயக்கங்களின் தொடர்பு என்று எடுத்துப் பாருங்கள் 99% அரசியல் இயக்கங்களின் கொள்கை/தலைமை வழிபாட்டு (அ)சிங்கங்களாகவே இருப்பார்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------
போட்டுத்தாக்கு !!!!
12B லேயா ? சூப்பர்...அது நம்ம ரூட்டு தலை...!!!
-------------------------------------------------------------------------------------------------------------
ஹரிஹரன்
தாங்கள் சொல்லும் ஒரு சில கருத்துக்களுடன் உடன்பட்டாலும் அரசியல் காரணிகளால்தான் ஆண் பெண் பிரச்சனைகள் இங்கு அதிகம் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. சினிமா நுகர்வு சந்தை போன்ற பல பெரிய காரணிகளுக்கிடையே அது மிகச்சிறிய காரணியாகவே இருக்க முடியும் என்று எண்ணுகிறேன்.
மிகத்தாமதமாக தங்களுக்கு பதிலளித்தமைக்கு மன்னிக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஆகா செந்தழலாரும் 12B யா..
அது நமது ரூட்டு ஃபார் அல்மோஸ்ட் 2 இயர்ஸ்..
பட் இட் ஈஸ் ஒன்ஸ் அப்பான்ய டைம்.
வடபழனி டு தேனாம்பேட்டை சிக்னல்..
ம்ம்ம். கோல்டன் டேஸ்... :)
-------------------------------------------------------------------------------------------------------------
50 :-)
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி வெட்டி.. இது 51 :))
பின்னூட்டத்தில் பறந்து கொண்டிருந்த புதிய பிளாக்கர் பக்குகள் (பூச்சிகள்) பறந்து போய் விட்டன.
நன்றிகளுக்குரிய பதிவு...
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment