Thursday, January 11, 2007

ஆ. ஏ. அ. ஆனான் 7. - காதலாவது கருவாடாவது......


காதலாவது கருவாடாவது...

(கத்திரிக்காவுடன் காதலை கம்பேர் பண்ணி கத்திரிக்காவ கேவல படுத்த விரும்பல. எனக்கு கத்திரிக்கா ரொம்ப புடிக்கும்.)

தெரியாமதான் கேக்குறேன் இந்த காதல்ன்றது இன்னாபா ?

ஒரு பையனுக்கு ஒரு பொண்ணை புட்சி போச்சி.. இல்லை பொண்ணுக்கு பையனை புட்சி போச்சி (!!!).. அதுதான் காதல் ??????

காலேஜில பார்த்தா பொண்ணுக்காக, காதலுக்காக இன்னான்னா பண்றாங்கப்பா நம்ம பயலுவ....
கிஃப்டு வாங்குறது இன்னா... கார்டு வாங்குறது இன்னா..
உதவாத கண்ணாடி பொம்மைங்கள்ள ஐ லவ் யூ ன்னு எயுதிக்கீதுன்றதுக்காக காசு கொடுத்து வாங்குறது இன்னா..

சரி.. அத்த விடு...
பொண்ணுக்கு பர்த்டேயின்னா போன் பண்றீங்க சரி...
அதோட நாய்க்குட்டியோட பர்த்டேக்கு நடுராத்தரி பனிரெண்டு மணிக்கு போன் போட்டு "ஹாப்பி பர்த்டே டு பப்பி".. இன்னாங்கடா இது...?
போனோட அந்த பக்கம் வேற "சோ.. ச்வீட் ஆஃப் யூ..".
அப்புறம் கொஞ்சம் "லொள்.. லொள்"... நாய்க்குட்டியோட பேசற அளவுக்கு ஆயிடுது நிலைம...

இப்படித்தான் நம்மாளு ஒருத்தன்..

அந்த பொண்ணு கூட சேர்ந்து சுத்துறது இன்னா.. சினிமா போறது இன்னா..
காலேஜில அத்தனை பய பைக்கையும் கடன் வாங்கி உட்கார வச்சி சுத்துனது இன்னா..
தலை கோதுவாங்களாம்... மடியில படுத்துப்பாங்களாம்.
ஒரே ஐஸ்கிரீம ஒரே குச்சிய வெச்சு மாத்தி மாத்தி சாப்பிடுவாங்களாம்...

கேட்டா ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப் அப்படிம்பாங்களாம்.

கடசில இன்னா ஆச்சு அந்த பொண்ணு ஒழுங்கா படிச்சிருச்சி.. நம்ப ஆளு நல்லா படிக்கறவந்தான்னாலும் கொஞ்சம் கோட்டை வுட்டுட்டான்.

அந்த பொண்ணு நல்ல கம்பெனியில காம்பஸ்லயே பிளேஸ் ஆயிருச்சி.. நம்ப ஆளு கடைசி வரிக்கும் பிளேஸ் ஆகலை.
இவன இதுக்கு மேலயும் புடிச்சி தொங்குனா நம்ம ஃப்யூச்சர் அவ்வளவுதான் கால்குலேட் பண்ண அந்த ஃபிகர் இவனை கழட்டி விட்டுடுச்சி..

அவனோட நாலு வருட கனவு.. நாயா பேயா அலைஞ்சது.. உழைப்பு... உணர்வு எல்லாம் உடைஞ்சி நொறுங்கி போச்சி...

அவனால இத தாங்க முடியல... கடைசியில தொங்கிட்டான்...
போலீஸ் வந்துச்சி.. விசாரணை பண்ணிச்சு...

கடைசியல அடுத்த நாள் பேப்பருல... "வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை" அப்படின்னு வந்துச்சு...
இந்த பய எதுக்கு தொங்குனான்றது நமக்குதான் தெரியுமே...

நமக்குதான் மனசே ஒரு மாசத்துக்கு சரியில்லை...

அதனாலதான் சொல்லுறதே. படிக்கிற காலத்துல ஆண் சிங்கங்களே... காதல் தேவையா ?

இந்த பெண்களோட வலையில விழுந்து உங்க படிப்பையும் எதிர் காலத்தையும் தொலைக்கிறது சரியா?

நீ சிகரெட் தண்ணி அடிக்கிற. அது தப்புதான். போதைதான்.
ஆனா காதல் அதை விட மோசமான போதை.
அதனால மாறிடும் உன் வாழ்க்கை பாதை.

இன்னும் இன்னான்னமோ எயுதனும்னு நினைச்சேன்.. நம்ம தொங்கிய நண்பரோட நியாபகம் வந்திருச்சி...
மேற்கொண்டு எயுத முடியாம துக்கம் கைய கட்டிப் போடுது...
அப்பாலிக்கா பொறுமையா வந்து சொல்றேன்.---------------------------------------------

பிற்சேர்க்கை:

காதலிக்கறப்ப பொண்ணுங்க மெக்கானிக் முருகனா (காதல்) இருந்தாலும் பரவாயில்லை அப்படின்னு சொல்வாங்க.
கல்யாணம்னு வந்துட்டா சஞ்சய் ராமசாமியா(கஜினி) தேடுவாங்க.


***********

நமக்கு இந்த காதல் தெய்வீகமானது... மனசை பார்த்து வர்றது.. இதுல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க..
காதல் முழுக்க முழுக்க அழகையோ பணத்தையோ பார்த்து மட்டும்தான் வர்றது.
மனசை பார்த்து (!!!!!) வர்ற காதல் நூத்துல ஒண்ணு இருக்குமா ?

*************

11 comments:

said...

அரை... இருய்யா, கண்ணை தொட்ச்சிக்கிரேன். ஒண்ணு இல்லே ஆன்ந்த கண்ணீரூ. பொம்ப பசங்க இத்தினி விவரமானவுங்களா!
பின்ன இன்னா கர்மாந்தர்தரத்துக்கு பொம்பள புத்தி பின் புத்தி ன்னு பள மொளி சொல்லணும்?-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாய்க்குட்டி மேட்டர் காமெடி...-------------------------------------------------------------------------------------------------------------
said...

உஷாஜி.. வருகைக்கு நன்றி...

"பெண் புத்தி பின்புத்தி" அப்படின்றதுக்கு அர்த்தம் பெண்களுக்கு புத்தியில்லை அப்படின்றது இல்லை.
சொல்ல போனா ஆண்கள விட பெண்கள் பயங்கர புத்திசாலிங்க...
ஆனா அந்த புத்திய எதுக்கு யூஸ் பண்றாங்க அப்படின்னு பாக்கறப்பதான் பெண்புத்தி பின்புத்தியாயிடுது...
எக்சாம்பிளுக்கு டெய்லி அஞ்சி மணிநேரம் பத்து மெகாசீரியலு பார்த்தாலும் எந்த கதையில எந்த கேரக்டரு அப்படின்றதுல படு தெளிவா இருப்பாங்க..
எந்த ஆணாலயாவது இப்படி முடியுமா சொல்லுங்க...
பெண்கள் மட்டும் அவங்க மூளைய சரியான வழியில யூஸ் பண்ணாங்கன்னா நிறைய ஆண்கள் வீட்டுல உட்கார்ந்துட வேண்டியதுதான்..
நல்ல வேளை அவங்க எந்த காலத்துலயும் அப்படி பண்ணமாட்டாங்க..
அது வரிக்கும் ஆண்களுக்கு பிரச்சனை இல்லை.
பொண்ணுங்களும் நகைங்கள்ளயும் பட்டுபுடவையிலும் சந்தோஷமாயிடுவாங்க.
அதுக்காக ஆண்கள பிச்சி புடுங்கி நீங்க சொன்னா மாதிரி விவரமா இருப்பாங்க...

இந்த மாதிரியும் மேல சொன்னா மாதிரியும் அவங்க விவரமா இருக்கறததான் காலங்காலமா பின்புத்தின்னு சொல்லிக்னு இருக்காங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நானும் இந்த மாதிரி காலேஜ்ல பல கேஸ்களை பார்த்திருக்கேன்...

ஆனா அதே மாதிரி காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்குவேனு அப்பா, அம்மாகிட்ட சம்மதம் வாங்கற வரைக்கும் போராடி அதே பையனை கல்யாணம் பண்ணிருக்கறதையும் பார்த்திருக்கேன்...

பசங்களும் காதலிச்சி ஏமாத்தினதை பார்த்திருக்கேன்... அதனால ஜெனரலைஸ் பண்ணாதீங்க...

பொண்ணுங்க அப்பா, அம்மா பர்மிஷன் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தப்பு, அவுங்களுக்காக காதலிச்ச பையனை விட்டாலும் தப்பு...

பசங்க மட்டும் அப்பா, அம்மா பேச்சை கேக்காம திரிஞ்சா தப்பில்லை :-)

ஆனா படிக்கற காலத்துல படிப்புல கவனம் செலுத்தறதுதான் புத்திசாலித்தனம்...

ஷக்கலக்க பேபில வர மாதிரி "லைஃபுல ஜெயிச்சா லைஃபுல ஜெயிச்சா பொண்ணுங்க தேடி வரும்... ஓடி வரும்" ;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக வெட்டி..
காதல் கதையரசே...

நானும் இந்த மாதிரி காலேஜ்ல பல கேஸ்களை பார்த்திருக்கேன்...

அப்பாடா புரிஞ்சிச்சே உங்களுக்கு...

ஆனா அதே மாதிரி காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்குவேனு அப்பா, அம்மாகிட்ட சம்மதம் வாங்கற வரைக்கும் போராடி அதே பையனை கல்யாணம் பண்ணிருக்கறதையும் பார்த்திருக்கேன்...

பையன் லைஃப்ல ஜெயிச்சிருப்பான். பொண்ணு விவரம் இல்லை. சும்மா வருவாளா சுகுமாரி.

பசங்களும் காதலிச்சி ஏமாத்தினதை பார்த்திருக்கேன்... அதனால ஜெனரலைஸ் பண்ணாதீங்க...

பொண்ணு பயங்கர விவரம்ன்றத புரிஞ்சிக்னு பையன் பயந்து தப்பிக்க பார்த்திருப்பான். பாவப்பட்ட பையன்பா.. தப்பிக்க வுட்டுடலாம்...

பொண்ணுங்க அப்பா, அம்மா பர்மிஷன் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தப்பு,

பையன் கையில பென்ஸ் காரு இருந்தா அப்பாவாவது.. அம்மாவாவது.. பர்மிஷனாவது....

அவுங்களுக்காக காதலிச்ச பையனை விட்டாலும் தப்பு...

அதுக்காக தேறவே மாட்டான்னு தெளிவா தெரிஞ்ச ஒரு பையன் கூட காலமெல்லாம் குப்பை கொட்ட சொலறீங்களா என்ன... முடியாது.. முடியாது..
அப்பா அம்மா மேல பழிய போட்டுட்டு நைசா கழண்டுக்குவோம் இல்லை.

பசங்க மட்டும் அப்பா, அம்மா பேச்சை கேக்காம திரிஞ்சா தப்பில்லை :-)

இந்த காலத்துல அப்பா அம்மா பேச்சை கேக்கறது பசங்க மட்டும்தான் வெட்டி அவர்களே...
சரியான அம்மா கோண்டு.. எனக்கு டைவார்ஸ் வேணும்னு கேக்கற பொண்ணுங்க குறி வைக்கறது அப்பா அம்மா பேச்சை கேக்குற அப்பாவிங்களத்தான்.

ஆனா படிக்கற காலத்துல படிப்புல கவனம் செலுத்தறதுதான் புத்திசாலித்தனம்...

இது கரீக்டு...

ஷக்கலக்க பேபில வர மாதிரி "லைஃபுல ஜெயிச்சா லைஃபுல ஜெயிச்சா பொண்ணுங்க தேடி வரும்... ஓடி வரும்" ;)

யப்பா.. கடைசியா மேட்டரை கரெக்டா புரிஞ்சிகிட்டீங்களே... :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கத்திரிக்காவுடன் காதலை கம்பேர் பண்ணி கத்திரிக்காவ கேவல படுத்த விரும்பல. எனக்கு கத்திரிக்கா ரொம்ப புடிக்கும்//

அட.. இது வேறயா..-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கேட்டா ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப் அப்படிம்பாங்களாம்.//

எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்களே பிளேடு-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக ஜி..

//நாய்க்குட்டி மேட்டர் காமெடி...//

இது நிஜம்மாவே நடந்த மேட்டருங்கோ... :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக கார்த்திகேயன்..

//எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்களே பிளேடு//

உண்மை.. உண்மை காதலர்கள் உலகில் என்றும் இருக்கிறார்கள்... ஆனால் என்ன அவர்கள் எல்லாம் காதலில் வெற்றி பெற்றவர்கள் அல்ல...
அம்பிகாபதி, மஜ்னு, ரோமியோ, சலீம்.. லிஸ்ட் பெரிது...

உங்களுக்காக பிற்சேர்க்கையொன்று பதிவில்... :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//

பையன் கையில பென்ஸ் காரு இருந்தா அப்பாவாவது.. அம்மாவாவது.. பர்மிஷனாவது....


//

Very true "blade", very true.

- Unmai-------------------------------------------------------------------------------------------------------------
said...

//Very true "blade", very true.

- Unmai
//

உண்மையை கண்டுணர்ந்த அனானி அவர்களே நன்றி. :))-------------------------------------------------------------------------------------------------------------