Sunday, January 07, 2007

பெண் புலிகளும் ஆண் பூனையும்

அது ஒரு காடு. அதில் ஏகப்பட்ட மிருகங்கள் இருந்தன.

நிறைய ஆண் பூனைகள் மற்றும் பெண் பூனைகள். மற்றும் பரவலான அளவில் பெண் புலிகள் மற்றும் ஆண் புலிகள்.

நமது கதை ஒரு ஆண் பூனையை பற்றியது.

அந்தக் காட்டில் ஒரு பெண் புலி. அந்த பெண் புலி தேடி பிடித்து இந்த ஆண் பூனையை திருமணம் செய்தது.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாக தெரிந்தது.

ஆனால் காலப்போக்கில் பெண் புலிக்கு ஆண் பூனையை பிடிக்காமல் போயிற்று.
ஆண் பூனையின் வாழ்க்கை முறை எளிமையாக இருந்தது. பாலுடன் இந்த பூனை திருப்தியடைந்தது. பெண் புலியையும் தன்னைப்போல் பால் மட்டும் குடிக்க சொல்லி ஆண் பூனை சொன்னது.

திருமணமான புது ஜோரில் மாமிசமாக வாங்கி கொடுத்த ஆண் பூனை இனி வாங்கி கொடுக்காது என்று அந்த பெண் புலிக்கு தெரிந்துவிட்டது. இது வெறும் பூனை மட்டுமே. இது தன்னைப் போல் எந்த காலத்திலும் புலியாக முடியாது என்பதையும் புரிந்து கொண்டது. பூனைக்கு கட்டுப்பட்டு காலமெல்லாம் புலியாகிய தன்னால் பால் குடித்துக் கொண்டிருக்க முடியாது என்று அது முடிவெடுத்தது.

புலி மெல்ல மெல்ல பூனையின் இயலாமையை குத்திக்காட்ட துவங்கியது.
பூனை ஆரம்பத்தில் கவலைப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருந்தது.
ஒரு கட்டத்தில் புலியின் தொடர்ந்த தொல்லை தாங்காமல் சத்தமிட்டது.
புலி பதிலுக்கு உறுமியது. புலியின் உறுமலுக்கு முன் தனது சத்தம் எடுபடாததை பார்த்த பூனை ஆத்திரம் அதிகமாகி புலியை தன் முன்னங்கால்களால் ஒரு முறை பிராண்டியது.

அவ்வளவுதான் இதற்கெனவே காத்திருந்தது போல் பெண் பூனை தன் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு தன் தாயார் வீட்டுக்கு கிளம்பியது.

தாயாராகிய பெண் புலி "பெண் பூனைகளின் உரிமைகளுக்காக" குரல் கொடுக்கும் "பெண்பூனைவாதி".

தன் மகளுக்கே இப்படி ஆனதும் அந்த புலியும் உறும ஆரம்பித்தது.

"எனக்கு அப்பவே தெரியும். ஆண் பூனை என்ற ஒன்று கிடையவே கிடையாது. கொடுமைக்கார ஆண் புலிகள் மட்டும்தான் இந்தக் காட்டில் இருக்கிறது. இந்த ஆண் புலி என் மகளை என்ன பாடு படுத்தியிருக்கிறது.".

காட்டின் பத்திரிகைகள் கொடுமைக்கார ஆண் புலியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதின.

"பெண்பூனைவாதிகள்" ஆன பெண் புலிகள் ஒன்றாக சேர்ந்து "ஆண் புலிக்கு" எதிராக குரல் கொடுத்தன.

"ஆண்புலி" செய்த கொடுமை காடு முழுதும் பரவ துவங்கியது.

காட்டில் இருந்த சில ஆண்புலிகள் நமது ஆண்பூனையை இழுத்து வந்து மன்றத்தில் நிறுத்தின.

"பெண்பூனைவாதிகள்" நிறைந்த சபையில் "ஆண் புலி" செய்த கொடுமைகளை பெண்புலி எடுத்து சொல்லியது.

"இந்த ஆண்புலி எவ்வளவு கொடுமையானது தெரியுமா. எனக்கு வேண்டியதை வேண்டியவாறு செய்யும் துப்பில்லாத புலி இது. தினமும் வீட்டுக்கு வந்து இந்த ஆண்புலி என்னை போட்டு அடிக்கும். இதன் நகங்கள் மிக கூரானவை. அதன் நகங்களை பாருங்கள்."

"ஆமாம். ஆமாம். கூரானவைதான்"

"அதன் கூரிய நகங்களால் என்னை தினமும் கிழித்து குதறும் இந்த ஆண் புலி."

"த்சொ. த்சொ.."
"ஐயோ பாவம் இந்த பெண் பூனை."
"அந்த ஆண்புலி நாசமாக போக.." பெண்பூனைவாதிகளான பெண்புலிகள் மற்றும் ஆண்புலிகளின் குரல்கள் ஒலித்தன.

நமது ஆண்பூனை குரலெழுப்பியது.

"பார்த்தீர்களா உங்கள் எதிரிலேயே எப்படி உறுமுகிறது இந்த ஆண்புலி".

"ஆமாம். ஆமாம். பார்த்தோம். இப்போதே இப்படி உறுமுகிறதே. தினமும் இதேபோல்தானே உறுமியிருக்கும்."

"நீங்களே பார்த்தீர்களல்லவா. இந்த ஆண்புலியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள். இந்த ஆண்புலிக்கு தக்க தண்டனை கொடுங்கள்."

ஆண்புலிகள் தீர்ப்பை வாசித்தன "பெண் பூனைக்கு ஆண்புலியிடம் இருந்து விடுதலை. பெண் பூனைக்கு வேண்டிய மாமிசத்தை ஆண்புலி ஆயுசுக்கும் தரவேண்டியது."

பெண்புலி உறுமியது. "அது பத்தாது. இந்த புலி எனக்கு செய்த கொடுமைக்கு இதை கூண்டில் அடைக்க வேண்டும்".

பெண்பூனைவாதிகள் "ஆமாம். அடைக்க வேண்டும்"

பெண்புலி "அது மட்டுமல்ல. இந்த புலியின் தோலை உரிக்க வேண்டும். அப்போதுதான் வேறு எந்த ஆண்புலியும் என்னைப் போன்ற பெண்பூனைகளிடம் வாலாட்டாது."

பெண்பூனைவாதிகள் "ஆமாம். ஆமாம். ஆண்புலியின் தோலை உரிக்க வேண்டும்."

கூண்டில் அடைபட்ட "ஆண்புலி" கடைசியாக ஒருமுறை உறுமியது.

"மியாவ்."

--------------------------------------------------------------------------------

14 comments:

said...

Is this story hints about Misuse of Section 498A?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி

498A சட்ட பிரிவு பெண்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நல்ல சட்டம். சில பெண்களால் தவறாக பயன்படுத்தப்படுவதாக படித்துள்ளேன்.

இந்த கதை எழுதும் போது 498A தவறாக பயன்படுத்தப் படுதல் பற்றி எதுவும் எண்ணவில்லை. இப்போது எனக்கே பொருத்தி பார்க்க தோன்றுகிறது.

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Something relevant from...

http://indianhusbands.blogspot.com/2005/08/498a-made-for-sita-but-surpanakhas-are.html

Extract:

In today’s modern world if
1. The boy is like Ram and the girl is like Sita (perfect)
2. The boy is like Rakshasha and the Girl is like
Surpanakha (perfect in another way)
3. The boy is like Rakshasha and the Girl is like Sita. (poor girl. still laws are there to save her)

4. The boy is like Ram and the girl is like Surpanakha. (Is there any law to save this boy?)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கதை சூப்பர்...மத்த படி நோ கமெண்ட்ஸ்...ஏன்னா நானும் ஒரு ஆன்புலி தானுங்கோ...மியாவ் :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னங்க ஆச்சு...உங்க நக்கல் நையாண்டி நல்லா இருக்கும்...அதே மாதிரி கண்டினியூ பண்ணுங்க...நமக்கு எதுக்கு இந்த மாதிரி சீரியஸ் பதிவுகள் எல்லாம்...இது என்னோட கர்த்து மட்டும் தானுங்கோ.... :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு என்னமா இப்படி பின்னுறே.. ஏப்பா ஆண்களின் விடிவெள்ளியே, ஆண்சுதந்திர பூனையே கலக்குறமா நீயீ.. அம்மணி பக்கத்துல இல்ல போல இந்த போடு போடுற.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்யாம்...

மியாவ்...

நம்ம பாஷையான புலி பாஷையில தாங்ஸ் சொல்லிக்னேனுங்க... :))

வாங்க சந்தோஷ்...

//ஏப்பா ஆண்களின் விடிவெள்ளியே, ஆண்சுதந்திர பூனையே கலக்குறமா நீயீ.. அம்மணி பக்கத்துல இல்ல போல இந்த போடு போடுற.//

விடிவெள்ளியா... நாம மினுக்காம் பூச்சிங்கோ...

கண்டுபுடிச்சிட்டீங்களே... அம்மணி இப்பத்திக்கு பக்கத்துல இல்ல...

அதனால நம்ம ஆணுரிம குரல் கொஞ்ச நாளைக்குத்தான்... அப்புறம் சமத்து புள்ளையா காமெடி மட்டும் பண்ணுவோம்..
:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்யாம்...

இது காமெடி கதைதாங்க...

கடசில பாருங்க... அந்த பாவப்பட்ட பூனையோட கதைய சொல்ல போயி..
அந்த பூனையோட சோகம் நம்மளையும் தாக்கி...
அந்த சோகத்துல நம்ம காமெடி கதை சீரியஸ் கதையாயிருச்சி...

லைஃப்ல எதுவுமே சீரியஸ் கடியாதுங்க...

சீரியஸ்ஸா காமெடியா அப்படின்றது நாம பாக்குற பார்வையில இருக்கு...

எக்சாம்பிளுக்கு எதிர் வூட்டுக்காரன் நடந்து போய் காவாயில வுழுந்து செத்தான்னா அது காமெடி.
நாம நகத்தை வெட்டறோம்னு கைய வெட்டிக்னோம்னு வெச்சிக்கங்க அது டிராஜிடி.... அவ்ளோதான்...

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என் சிங்கமே!

உன் குரல் ஒலித்து ஓங்கட்டும்!
எட்டுத்திக்கும் மியாவ் மியாவ் என்ற ஒலியே கேட்கிறது!

என்று நாம் கர்ஜிப்பது!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெல்கம் தம்பி...

தங்கள் ஆதரவு கர்ஜனை "மியாவ்.. மியாவ்" என்று என் காதில் தேன் போல் பாய்கிறதே....

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னோட மியாவையும் இதுல சேத்துக்குங்கப்பா..

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கர்ஜனைக்கு நன்றி சிறில்..

"மியாவ்" - தாங்ஸ்னு சொல்றேங்க... :))

-------------------------------------------------------------------------------------------------------------