Friday, February 16, 2007

மாவாட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம்.

மாவாட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம்.


விடுநர்

அரைபிளேடு
ஆறாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி.

பெறுநர்

ஆட்சித்தலைவர்
மாவட்டம்
தமிழ்நாடு.


ஐயா
பொருள்: மாவாட்ட வேண்டி விண்ணப்பம்.

எங்கள் ஊரில் அரிசியும் உளுந்தும் ஊறப்போட்டு வைத்திருக்கிறோம்.
ஆனால் மாவாட்டும் வசதிகள் இல்லாததால் மாவாட்ட வில்லை.
தாங்கள் தயை கூர்ந்து எங்கள் கிராமத்திற்கு வந்து மாவாட்டி தர வேண்டுகிறேன்.


அன்புடன்
அரைபிளேடு.

தேதி: 23-12-1987.

----------------------------------------

மேற்கண்டது நான் ஆறாம் வகுப்பு அரைப்பரீட்சைக்கு தமிழ்த் தாளில் எழுதிய கடிதம்.

எனது தமிழையா விடைத்தாளை தரும் போது வினவினார். "என்னடா இது".

"சார். கொஸ்டின் பேப்பர்ல இருந்த கேள்விக்கு தான் சார் நான் பதில் எழுதினேன்".

"சரி. கொஸ்டின் பேப்பர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததால இதுக்கு போனா போதுன்னு மார்க் போட்டுருக்கேன். ஒழிஞ்சி போ."

அப்பாடா தப்பிச்சேன்.

கொஸ்டின் பேப்பர்ல என்ன தப்பா? தலைப்பை திரும்பவும் படிக்கவும்.

32 comments:

said...

இப்பத்தான் நான் ஒரு லெட்டர் எழுதினேன்.. அடுத்து நீங்களா...

ஆனா இது படு ஜோராக்கீது!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைப்ளேடு ஆறாங்கிளாஸ்ல பென்சில் சீவத்தான் ப்ளேடு யூஸ்பண்ணுவாங்க நீரென்னாண்ணா கழுத்தையே சீவியிருக்கீரே.

:))

கொஞ்ச நாளா ஆளக்காணோம்.. எங்கையாவது 'அறு'வடையா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

தலை அந்த வயசுலேயே பின்னி பெடல் எடுக்க ஆரம்பிச்சிடிங்க போல. இதைத் தான் விளையும் பயிர் முளையில் தெரியும் அப்படின்னு சொல்லுவாங்களா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

so u r 30+-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்ன பிளேடு ரொம்ப நாளைக்கப்புறம் மறு விஜயமா???

வரும்போதே கொசுவத்திய சுத்தவிட்டு காமெடி பண்ணிக்கிட்டு வந்திருக்கீங்க....-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)))

முதல் தடவை ஒழுங்காகத்தான் படித்தேன். உங்க கண்ணே கண்ணு!-------------------------------------------------------------------------------------------------------------
said...

super...
Welcome அரை பிளேடு-------------------------------------------------------------------------------------------------------------
said...

ROTFL...இன்னைக்கு தான் நினைச்சிட்டு இருந்தேன்...அரைபிளேடு அரைபிளேடுனு ஒரு மானஸ்தர் இருந்தாரே ஆளயே கானோம்னு...வந்துட்டீங்க...உங்களுக்குஆயுசு அறுநூறு :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடிங்கொன்னியான்...

உங்க முதுகில மாவாட்டாம விட்டாரே, உங்க வாத்தி!

:-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடிங்கொன்னியான்...

உங்க முதுகில மாவாட்டாம விட்டாரே, உங்க வாத்தி!

:-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹா..ஹா..கலக்கல் கடுதாசி தலைவா:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆறாவதுலேயேவா ? மக்கா நீ பிறவி ப்ளேடுடா...

செந்தழல் ரவி-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெட்டி
உங்க லட்டரை படிச்சேன். லீவு முடிஞ்சி போச்சா :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சிறில்

அறுவடையெல்லாம் இல்லீங்க. வீட்டம்மா வந்துட்டாங்க. எழுத்துக்கு தடையுத்தரவு அமலில் இருக்கு.

இதோ ரகசியமா எழுதுறேன். முன்ன மாதிரி தீவிரம் இல்ல :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தோஷ்.

ஆமாங்க நமக்கு அப்பவே ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்திதான். நம்ம வாத்தியார்ங்களுக்கு நம்ம அறிவு மேல பொறாமை.

அதானால முட்டி போடறது. கிரவுண்ட சுத்தி ஓடறது. கையில பிரம்பால அடிக்கிறது. பெஞ்சில ஏறி நிக்கறது. இம்போசிசன் எழுதறது எல்லாம் உண்டு. :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி நாம 30 + இல்ல.

27 தான் ஆவுது. நாம ஆறாங்கிளாஸ் வர்ரதுக்கு மின்னாடி மூணு தடவ டபுள் பிரமோஷனாக்கும் :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி...

ஆமாங்க. இந்த பக்கம் எழுதாம கிட்டதட்ட ஒரு முக்கால் மாசம் ஆகுது.

இனி அப்பப்ப எப்படியாவது எட்டி பார்த்துடறேன். அப்புறமா உங்க காதல் கவிதைகள் படிச்சேன். நல்லா இருந்தது. :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி பாஸ்டன் பாலா.

உங்க தமிழ் மாதிரி வினாத்தாள் படிச்சது நியாபகம் வருது. எல்லாரும் உங்கள மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம கொஸ்டின் பேப்பர் செட் பண்ணுவாங்களா என்ன :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி நெல்லைகாந்த்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப நன்றி ஸ்யாம்...

யப்பா அறுநூறு வருசமா...
வேண்டாம்டா சாமி...

"எத்தனையோ பிறவி பெற்று
அனுபவிக்கும் கொடுமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று
அத்தனையும் அனுபவித்துவிட்டேன்"
(திரைப்பாடல் வரி மாற்றப்பட்டுள்ளது)

அறுபது போதும். அறுநூறு அதிகம் :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க பொட்டிக்கடை

வாத்தியாரு முதுகுல மாவாட்டலை. பொதுவாகவே தமிழ் வாத்தியாருங்க ரொம்ப நல்லவங்க. அப்பாவிங்க. அடிக்க மாட்டாங்க :))

(கணக்கு வாத்தியார்கிட்ட இந்த மாதிரி பருப்பு எல்லாம் வேகாது. கிள்ளி விட்டுடுவாரு. ஒரு வாரத்துக்கு வலிக்கும். கணக்கு வாத்தியார்ங்களே மோசம்.)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி செல்வன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க செந்தழலாரே..

ஆறாவது படிக்கிற அறியாத வயசு ஓடற பாம்பை பிடிக்கற வயசுங்க. அப்ப எல்லாம் நான் ஷார்ப்பான பிளேடு. இப்பதான் தேஞ்சி மொக்கை பிளேடு ஆயிட்டேன். அதுவும் கல்யாணம் ஆனப்புறம். இப்ப எல்லாம் சமஉரிமைக்கு போராடவே நமக்கு சமயம் சரியா இருக்கு :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

இப்படி கூட யோசிப்பாங்களா? நல்லா சிரிக்க வச்ச லட்டர்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு அண்ணே,

கம் பேக் பதிவு சூப்பர்ண்ணே..... :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

/**********************************
கணக்கு வாத்தியார்கிட்ட இந்த மாதிரி பருப்பு எல்லாம் வேகாது. கிள்ளி விட்டுடுவாரு. ஒரு வாரத்துக்கு வலிக்கும். கணக்கு வாத்தியார்ங்களே மோசம்.
**********************************/

உங்களுக்கும் நம்மள மாதிரி கணக்கு வராது போலிருக்கே,

லெட்டர் நல்லா இருக்கு,
ஆறாப்புல நடந்த இதே மாதிரி ஒரு லெட்டர் விஷயம் ஞாபகம் வருது பதிவா போட முயற்சி பண்றேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஓ.. இவ்வளவு நாட்கள் கழிச்சு வந்ததால வெட்டி மாதிரி லீவ் லெட்டரோ ன்னு பார்த்தே அரை பிளேடு..


மாவாட்டக் கடிதமா.. அதுவும் கேள்விதாளிலே அப்படி இருந்ததா..

உங்க ஞானத்தை என்னன்னு சொல்றது பிளேடு..

வெல்கம் பேக்!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி பத்மா அர்விந்ந் அவர்களே.

தாங்ஸ் ராம்.

நன்றி வெங்கட்ராமன். உங்கள் லட்டர் அனுபவத்தை படிக்க காத்திருக்கிறேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கார்த்திகேயன்.

நாம எப்பவுமே கொஸ்டின் பேப்பர்ல என்ன கேட்டிருக்கோ அதுக்கு நியாயமா பதில் எழுதற ஆளு :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

எல்லாரும் சொல்வதைப் போல் சொல்ல வேண்டுமானால் - பல நாட்களாக உம்மைக் காணாமல் 'மாவாட்டத்தில்' இருந்த எமக்கு மருந்தாக வந்தது இந்தப் பதிவு!"

:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

kaditham superanne!!!

thodarnthu intha maathiri nalla kadithangal ezhuthavum-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொத்தனார் அவர்களே..

மா+ வாட்டம். = மாவாட்டம்.

உங்கள் தமிழே தமிழ்.-------------------------------------------------------------------------------------------------------------