Friday, March 14, 2008

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

இந்த தமிழ்பரப்பில் பார்ப்பனீய உருவாக்கத்தாலும் கருத்தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, கட்டியமைக்கப்பட்ட அதிகார மையங்களை நோக்கி குரலெழுப்பி அவற்றை வென்று அதன் மீதேறி நின்று நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது அதிகாரங்களை சிதைத்த நாம், அந்த அதிகாரங்களை சிதைத்ததால் மற்றுமொரு அதிகார மையத்தை நிறுத்தி, அந்த அதிகாரத்தின் காரணமாக இதற்குமுன் அதிகாரத்தை நாம் கேள்வியெழுப்பியது சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகவே என்னும் அடிப்படையை மறந்து சமத்துவத்தை தொலைத்து ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிண்ணனியை கொண்டாட இனம் சார்ந்த ஆதிக்க பின்னணியை கட்டி நிறுத்தி வென்ற இடத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தொலைத்திருக்கிறோமா என்ற கேள்வி அந்த வாசிப்பின் மூலமாக நீண்டு, என்னுள் பொங்கி எழுந்த ஒரு தருணத்தில், இந்த சமூகத்தில் தனி மனிதனின் இருப்பும் சிறப்பும் பிறப்பு சார்ந்து அமைகிறது என்ற கட்டுகளை வெட்டியுடைத்த நாம் அதே கட்டுகளை அதே பிறப்பு சார்ந்து பிறரிடம் பிரயோகித்து நமது கொள்கை வழுவி தடம் புரண்டு அதிகார போதையேறி அரண்டது பேயாக கண்டது பாம்பாக, பார்ப்பது எல்லாம் பார்ப்பனீயமாக கண்ணுக்குள் திராவிட திரை மறைப்பதால் சாதீயங்களை ஒழிக்க வேண்டிய இடத்தில் அதனை ஒழிக்காது ஒழிந்து அடிப்படையில் சாதீயத்திற்கு எதிரான குரல் என்று எழுப்பப்படும் எமது குரல் சாதீய விழுமங்களையே மீண்டும் கட்டியெழுப்புவது குறித்ததான எமது கருத்துக்கள் குறித்ததான எமது விமர்சனங்களை நாமே மேற்கொள்ளவேண்டிய தருணங்களில் அதனை புறக்கணித்து புறந்தள்ளி புனிதங்களை பிட்டுப்போட்டு சிதைத்து புனித பிம்பங்களை புடைத்து சமூக புத்துணர்வு தந்து புதுயுகம் தரவேண்டிய கடமையே புறந்தள்ளி எமது கொள்கைகளுக்கு யாம் புனிதத்தன்மை கொடுத்து அந்த புதிய புனிதத் தன்மையில் மனிதருக்காய் போராட கிளம்பிய தருணங்கள் தொலைந்து இனம் சார்ந்த இருத்தலை இறுதிவடிவமைப்பதான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய தருணத்தில் அமைப்புகளை அதிகார மையங்களை எதிர்ப்பதே புரட்சியென்றும் அப்புரட்சியே சமூகத்தின் தேவையென்றும் களப்பணியாற்றி வந்த நாம் அந்தக் களப்பணியில் வென்று அந்த அதிகாரங்களையும் வென்றெடுத்தவர்களாக இருக்கும் தருணத்தில் புரட்சிகரமான போராளிகளான நாம் நமது போராட்டத்தில் என்றும் ஓய்வதில்லை என்பதால் அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் வேளையில் அப்போராட்டம் அதிகாரத்தை அடைந்தவர்களான எமது மீதே இருப்பதால் அதிகாரத்தை எதிர்ப்பது தன்னைத் தானே எதிர்ப்பதாகுமா என்ற எண்ண அலைகளை ஒரு போராளியாக கடந்து போராளியின் கடன் போராட்டம் மற்றும் போராட்டத்தை பதித்தலாகவே இருக்கவேண்டும் என்பதற்காக இக்கருத்தை இங்கு பதிவதன் அவசியத்தையும் இக்கருத்து பதிதல் கருத்துக் களத்தில் இலக்கிய வடிவம் பெற்று பின்நவீனத்துவ புனிதத்தை பெறுவது என்ற இலக்கிய அறிவு உடையவர்களாக காலத்தால் அழியாத இந்த இலக்கியங்களை எமது போராட்டத்தின் வலியை தன்மையை மக்கள் அறியக் கொடுப்பதற்காக மக்கள் கலைகளான கவிதைகள் பக்கம் கவனம் செலுத்தி புதுயுகம் காண புதுக்கவிதை படைத்து களப்பணி ஆற்றி வருங்கால் அப்பணியை எதிர்த்தும் எமது கருத்துக்களை மறுத்தும் வெறுத்தும் எழும் எதிர் கருத்துக்கள் மதிப்பேதும் கொடுத்து கவனிக்கப் படவேண்டியவையே அல்ல என்றாலும் குப்பைக் கூடைக்குள் போக வேண்டியவை என்றாலும் எதிர் கருத்துக்களை எதிர்ப்பவனே போராளி என்ற போராளிக்கான இலக்கணத்தை கைவிடாது எதிர்கருத்து கண்டவிடத்தில் எகிறி எம்கருத்துக்களை செலுத்தி எம் கருத்துக்களால் மட்டுமே மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட குமுதாயம் ஒன்றை அமைக்க முடியும் என்பதை இந்த குமுதாயத்திற்கு உணர்த்துவதற்காக கும்மிகளை பதிலுக்கு கும்மி அல்லது கும்பி இக்கும்முதலுக்கும் கும்புதலுக்கும் இலக்கிய வடிவம் பெற வேண்டி எம் மொழியின் வீச்சை குறித்தும் செறித்தும் பறித்தும் பயோனித்தும் மொழியை தன்வயப்படுத்துவதான ஒரு தோற்றத்தை கட்டமைப்பதற்காக தேவைப்படின் மொழியை சிதைத்தும் கதைத்தும் பதைத்தும் எழுதுவதும் இலக்கிய வடிவமே என்ற பின்நவீன அறிவு கொண்டும் மொழியும் பகுத்தே அறியப்படுவது என்பதும் பகுத்தறிவதே முதல் பொருள் என்னும் தன்மையால் யாவையும் பகுத்தும் வகுத்தும் கூட்டியும் கழித்தும் அறிந்து பதிந்து வரும் இக்கருத்துக்களை பகுத்தறிவோடு அணுகாது மதமென்னும் சாயம் கொண்டு அணுகி எம்மை இங்கு இழித்தும் பழித்தும் தோழர் உரைப்பது தகுமா என்ற சக தோழரின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக பகுத்தறிவும் கொள்கையும் கோட்பாடும் இணையும் இடம் எது என்பதை இணையத் தோழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பதிவின் தேவை மிக முக்கியம் என்பதாலேயே தொடர்ந்து அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி எதிர்ப்பின்னூட்டங்களை குப்பைக் கூடைக்கு தள்ளி எம் கருத்துக்களை யாம் பதிவதை எம்மிடம் பொருத்திப் பார்த்து எமது பின்னூட்டத்தை உமது அதிகார மையப் பார்வை கொண்டு புறந்தள்ளல் சரியா எனக்கேள்வி கேட்பது அதிகார மையத்திற்கு எதிரான குரலாகாது என்பதை உணர்ந்தே இருந்தாலும் எதிர்க்குரல் எழுப்பும் புல்லர்கள் தொலைந்து போன அதிகார மையங்களை மீண்டும் கட்டமைக்கும் குரூர எண்ணத்துடனேயே இக்கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதை நாம் அறியாமல் இல்லை என்பதும் இத்தகு கேள்விகளே அதிகாரத்தை யாம் பெற்ற பின்னும் போராளியாக தொடருவதற்கான நியாமான காரணங்களாக தொடருகின்றது என்ற நியாயத்தை நாம் தொடர்ந்து எமது பதிவுகளில் நிலை நிறுத்தியும் கட்டமைத்தும் தொடர்ந்து எழுதியும் தேவைப்படும் இடங்களில் பின்னூட்டம் இட்டும் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்பதை மீண்டும் மீள்பதிவு செய்து தொடர்ந்து தொடரும் எமது கருத்துக்கள் எம் மனதில் தொடர்ச்சியான அலைகளாக எமது போராட்டம் எமது இருப்பு எமது எழுத்தின் தேவை இதனால் நாட்டுக்கு ஏற்படும் சேவை இவற்றின் காரணமாகவே நாளொன்றுக்கு குறைந்தது மூன்று நான்கு பதிவுகளாவது இட்டு இந்த ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் மிக முக்கிய காரணமாகிறது என்பதை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் இந்த சமூகத்திற்காக சிந்திக்கும் எமது சிந்தனை இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்வதால் அந்த தொடர்ச்சியின் நீட்சியானது இந்தப் பதிவை போல் முற்றுப்பெறாதாக முற்றுப்புள்ளிகள் மறந்ததாக தொடர்ந்து போராட்டங்கள் பதிவுகள் பின்னூட்டங்கள் அவற்றால் அசைபடும் அதிகார மையங்கள் என எமது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை இவ்விடத்தில் எந்த பாசாங்கும் கும்மியும் இல்லாமல் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானாது இந்த அமைப்புகளை கேள்வி கேட்பதற்கான எமது கடமையே என்பதும் அதிகார மையங்களை எதிர்க்கும் போராளியான நான் எனது தொடர்ச்சியான எண்ணங்களை எனது அடுத்த பதிவுகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு............

18 comments:

said...

யாராச்சும் சோடா கொடுங்கப்பா.

மொக்கைப் பதிவராக இருப்பது போரடிக்கிறது. அதனால் போராளி ஆவது என்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால் போராட்டம் எது குறித்து என்று இன்னும் முடிவெடுக்கவில்லை.

ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பின்நவீன போராட்ட பதிவை எழுதியிருப்பதால் தங்களை பின்நவீனத்துவவாதிகள் என்றோ போராளிகள் என்றோ வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும் பதிவர்களை இந்த முதல் போராட்ட முயற்சியை வந்து வாழ்த்தியோ எதிர்த்தோ பின்னூட்டமிட கோருகிறேன்.

அப்படி இல்லையெனில் எனது முதல் போராட்டம் இத்தகு பதிவர்களை எதிர்த்தே இருக்கும் என்பதையும் இங்கு பதிகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா முயற்சி செய்திருக்கிங்க, அரைப்புள்ளி, கால்புள்ளி வைக்காமல் ஒரே வரியில் ஒரு பத்தி, ஒரு பக்கம் எழுதும் நடை கை கூடிவிட்டது... வாழ்த்துகள்.... பதிவின் பொருளுக்கு அல்ல பதிவின் நடைக்கு வாழ்த்துகள்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி குழலி.

//பதிவின் பொருளுக்கு அல்ல பதிவின் நடைக்கு வாழ்த்துகள்
//

இந்த பதிவின் பொருளுக்கு வாழ்த்து அல்ல என்று தாங்கள் சொல்லுவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஏதோ எழுதிவிட்டோம். இந்த பதிவில் என்ன பொருள் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் எனக்கு இதில் பொருள் இருக்கிறது என்று தாங்கள் சொல்வது மகிழ்ச்சியளிக்காதா என்ன.

எழுத்து நடையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு,

திராவிடீயம் என்பது எவ்வளவு கேவலமான கான்செப்ட் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி,திராவிடீய கோமணத்தை கிழித்து போட்டு காட்டி விட்டீர்கள்.எல்லா சாதி வெறி பிடித்த திராவிடிய வெறியர்களும் இனிமேல் தலை தொங்கப் போட்டுக் கொண்டு தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப் ப்ட்டிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்,
இன்னும் ரெண்டு அல்லது மூணு பாரா வாவது எழுதவும்.நடை மற்றும் பொருள் இரண்டும் சூப்பர்.

பாலா

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி பாலா (?!)

பார்ப்பனீயம் என்ற கான்சப்ட் இருக்கும் வரை திராவிடம் என்ற கான்செப்டும் இருக்கும்.

பார்ப்பனீயத்தை தாங்கி பிடிப்பவர்களை பார்ப்பனீய வெறியர்கள் என்று ஒத்துக் கொள்வீர்களானால் திராவிடத்தை தாங்கி பிடிப்பவர்களை திராவிட வெறியர்கள் என்று கொள்ளலாம்.

யாருடைய கோவணத்தையும் கிழிப்பதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல இது.

பார்ப்பனீயம்/திராவிடம் இரண்டில் எதையாவது தாங்கியோ தாக்கியோ எழுதவேண்டியதேவை எனக்கு இல்லை.

இது ஒரு நகைச்சுவை கும்மி பதிவு. அவ்வளவே.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பார்ப்பனீயம் என்ற கான்சப்ட் இருக்கும் வரை திராவிடம் என்ற கான்செப்டும் இருக்கும். //

அரைபிளேடு அய்யா,

நீங்க சொல்வது சரி;ஆனால் இதோட கான்ட்ராவும் உண்மை;ஆதாவது திராவிடீயம் என்ற தீமை இருக்கும் வரை பார்ப்பனீயம் என்ற கான்செப்டும் இருக்கும்.

அசுரன் அய்யா பார்ப்பனீயத்தின் கோவணத்தை கிழித்து விட்டதா கொஞ்சம் அல்ட்டலா சொல்லிக்கிட்டாரு;அதனால திராவிடீயத்தின் கோவணத்தை கிழித்த பெருமை உங்களுக்கு சேரட்டுமே.மறுப்பானேன்.அடக்கம் தேவை தான்;ஆனால் இந்த அளவுக்கா?

பாலா.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கடமை ;))

\\அரை பிளேடு said...
யாராச்சும் சோடா கொடுங்கப்பா.\\\

தல நீங்க தான் எங்களுக்கு சோடா கொடுக்கானும்...முடியல...அவ்வ்வ்வ்வ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நடை நல்லா இருக்குங்க. அட, நிசமாத்தான் :)

ரொம்பத் திருகித் திருகி எழுதியிருக்கீங்க. படிக்க முடியல :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத்...

//தல நீங்க தான் எங்களுக்கு சோடா கொடுக்கானும்...முடியல...அவ்வ்வ்வ்வ்//

பின்நவீனத்துவ போராளியா இருக்கணும்னா நிறைய சோடா தேவைப்படும் போல இருக்கு. நம்மால இது ஆவுற கதை இல்லைன்னு தோணுது :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

ரொம்ப திருகவெல்லாம் இல்லைங்க. அப்படியே அடிச்சு விட்டதுதான்.

படிக்க முடியலைன்னு சொல்றீங்கன்னா இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாத்தான் இருக்கணும்.

எழுதறப்ப கஷ்டமாயில்லை. எழுதி முடிச்சிட்டு படிச்சி பார்த்தா எனக்கே கஷ்டமா போயிருச்சி.

எலக்கிய தரமான எழுத்துன்னா சும்மாவா :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட்டகாசம் :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கமா போட்டு எழுதி காரியத்தையே கெடுத்துட்டீங்களே!! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி லக்கி :)

----------

கொத்தனார்

கமாக்கள் கடமைவீரர்கள் களைப்பாறும் கட்டில்கள். எனவே கணக்கில் வராது. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

////////படிக்க முடியலைன்னு சொல்றீங்கன்னா இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாத்தான் இருக்கணும்.

எழுதறப்ப கஷ்டமாயில்லை. எழுதி முடிச்சிட்டு படிச்சி பார்த்தா எனக்கே கஷ்டமா போயிருச்சி.

எலக்கிய தரமான எழுத்துன்னா சும்மாவா :)
//////////

கட்டுடைக்கப்பட்ட பின் நவீனத்துவத்துடனான,சாதீயக் குறியீடுகளும்,அதனின்று மீண்டெழுவனவாகவும் இருக்கின்ற மறுமலர்ச்சியையும்,சமூக அடாவடிகளை உடைத்தெடுக்கும் குறியீடுகளையும்,அவற்றை மீள்மறுப்புச் செய்யும் நுண்ணரசியலைச் சாடும் இவ்வகையான வேட்கைத் தெறிப்புகள்,களம் காணும் இலக்கியத் தரத்துடனான புத்தியல் நோக்கத்தின் கூறுபாடுகள்....
வாழ்த்துக்கள் தோழர் !!!!!!!!!!
(அப்பாபாஆஆஆஆஆ)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

யாராவது தமிழ்-டு-தமிழ் மொழி பெயர்ப்பாளர் இருக்காங்களா?...:-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இத்தகையப் பதிவுகளின் உள்ளடக்கப் பிரதிகளில் உறைந்திருக்கும் அங்கதங்களில் மறைந்திருக்கும், தூக்குப்பிடிக்கும்போது ஒன்றுக்குப் போன சிறுபிள்ளைத்தனங்களை கண்டுகொள்ளாமல் விடுவதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதைக் கண்டுகொண்டதனால் எழுந்தக் கண்டனங்களைக் கண்முன் கொண்டுவந்து காட்டிச் சென்று விட்ட கள்ளத்தனங்களின் உள்ளோடும்...

அட போங்கப்பா போரடிக்குது..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அரை பிளேடு said...

யாராச்சும் சோடா கொடுங்கப்பா.

மொக்கைப் பதிவராக இருப்பது போரடிக்கிறது. அதனால் போராளி ஆவது என்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால் போராட்டம் எது குறித்து என்று இன்னும் முடிவெடுக்கவில்லை//

ஒருக்கா நம்ம ஏரியாவுக்கு வந்துட்டு போங்க... ஐடியா கெடைக்கும் போராட... :P

-------------------------------------------------------------------------------------------------------------
said...

write paragraphs... pls. even i can't finish.. Elo mokkaiya irunthalum tamil naa padichiduvennu oru irumappula irunthen... udaciteenga blad...

-------------------------------------------------------------------------------------------------------------