Friday, October 26, 2007

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்.

காதலையும் காதல் பெரு கல்யாண வாழ்வையும் வாழ்த்திப்பாடிய அடிமைப் புலவர்களே... ஓதுங்குங்கள்... இதோ பட்டினத்தான் வருகிறான்...
பெண்ணைப் பெரும் பொருள் என்று கொண்டு வாழ்நாள் முழுதும் அவளுக்கு அடிமையாகி அல்லல் பெறும் மானிடர்காள்...
பெண்தான் வாழ்வின் பெரும் பொருளா ? வாழ்வின் பயனோ ? இவளின்றி இங்கு வாழ்வு இல்லையா...
இங்கு அடிமைப்பட்டவன் ஆண்.. பெண்ணடிமைப்பட்டாள் என்ற பொய்மையைக் காட்டி மேலும் மேலும் வதைக்கப் படுபவனும் ஆண்.
பெண்ணிடம் அழகு கண்டு பின்னலைந்து தன் வாழ்வு தொலைந்து, வாழ்வு முழுமையும் பின்னலைவதையே தொழிலாகக் கொண்டு, பின்னலைந்திடுவோன் எனப் பழியுமேற்று வாழும் வாழ்வுமோர் வாழ்வோ ?
பெண்ணின் பெரிதும் உண்டோ.... உண்டு... உணர்வீர்... உணர்வு கொள்வீர்...
இதோ பட்டினத்தான் சொல்வான்....


மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைந்துமுன் மெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையயைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும்

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு முத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும்

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும்

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யொழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்

இதற்கு பிறகு பட்டினத்தார் சொல்பவை சென்சாரில் காணாமல் போகின்றன....

மேலும் சில பாடல்களில் சொல்வார்...

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சி மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன்இ இறைவாஇ கச்சியேகம்பனே.

பெண்ணாகி வந்ததொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே.

பெண் மாயப்பிசாசம் என்பதை கண்டு சொன்னவன் பட்டினத்தான்.
பட்டு தெரிந்ததால் அவன் பட்டினத்தான்.
அவன் வார்த்தைகளின் உண்மை உணர்ந்தும் ஊமையாய் இருக்குமென் மனமே உன்னை என் செய்ய...

குழியில் விழும் அனைவராலும் வெளியேற முடிவதில்லை சில பட்டினத்தான்களைத் தவிர.

சேறு என்று தெரிந்தும் மூழ்கி சுகங்கண்டு அதிலேயே வாழும் எருமையின் வாழ்வோ நம் வாழ்வு. எருமையாய் இருப்பதால்தான் அனைத்துத் தாக்குதல்களையுந்தாங்கி பொறுமையாய் இருக்கிறோமோ.?

விளக்கில் விழும் விட்டில் பூச்சியின் வாழ்க்கைதான் ஆணின் வாழ்க்கை போலும். :)

3 comments:

said...

ஹ்ம்...!! ரொம்ப மன அழுத்தத்துல இருகீங்க போல.....

நம்ம கண்ணதாசன் ஈசியா இதையே தான், "கண்ணையும் படைத்து பெண்ணையும் படைத்தான் இறைவன் கொடியவனே'ன்னு பாடிட்டு போயிட்டார்.....cheer up!:):)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ராதா ஸ்ரீராம்.. :)

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி... கடைசி வரை யாரோன்னு பாடிய கண்ணதாசனுக்கு பட்டினத்தார்தானே இன்ஸ்பிரேஷன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வீக் எண்ட் புகைப்படங்கள் என்று ஜொள்ளி புகைப்படம் வெளியிடும் பதிவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

:)))))-------------------------------------------------------------------------------------------------------------