Wednesday, December 12, 2007

"நச்சு" பிடிச்ச கதை - ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அடல்ட்ஸ் ஒன்லி)"சேகர். ஒரு ஐடியா வேணும்." கேட்ட ராஜனை பார்த்தான் சேகர்.

"சொல்லு ராஜன். எதுக்கு ஐடியா வேணும்."

"ஒரு ஜாக்கெட் போட்ட ஃபிகரை பிராக்கெட் போடணும்".

"இவ்வளவுதானா. மேட்டர சொல்லு. "

"மேட்டர் அவ்வளவு ஈஸி இல்லை. பொண்ணு கல்யாணம் ஆனவ."

"இவன் வேற. கல்யாணம் ஆன பொண்ணை கவுக்கறதுதாண்டா ஈஸி. நான் எத்தனை பேரை கவுத்திருக்கேன் தெரியுமா."

"தெரியும். அதனாலதான் உன்கிட்ட ஐடியா கேட்கிறேன்."

"சரி. மேல சொல்லு."

"பொண்ணு நாம இருக்கிற ஏரியாதான்."

"நான் பார்த்து இருக்கனா."

"நீ இந்த ஏரியாவுக்கு குடிவந்து ஒரு வாரம்தான் ஆகுது. பார்த்து இருப்பன்னுதான் நினைக்கிறேன். புருசன் குடிகாரன். அவளுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவா இஷ்டம் இல்லைன்னு தெரியுது."

"மேட்டரு சுளுவாவும் போலதான் தெரியுது."

"பொண்ணு என்னை பாக்குற கண்ணுல ஏக்கம் தெரியுது. சிக்னல் கிடைக்குது. ஆனா எப்படி பிக்கப் பண்றதுன்னுதான் தெரியலை."

"பேசிப் பேசிதாண்டா மேட்டர முடிக்கணும். அந்த மாதிரி நான் எத்தனை மேட்டர் முடிச்சிருப்பேன் தெரியுமா."

"பேசிட்டேண்டா. வேலைக்கு ஆகலை. நீ எனக்கு புதுசா வாழ்க்கை தர்றதா இருந்தா சரி அப்படின்னு சொல்லுறா."

"வாழ்க்கை தரப்போறியா என்ன. தாகம் எடுக்குதுன்னா எவனாவது கிணறையே வாங்குவானா என்ன."

"அதேதாண்டா என் பிரச்சனை. தொடணும். ஆனா தொடரக்கூடாது."

"அவ்வளவுதான. வாழ்க்கை தரேன்னு சொல்லு. ஏன் கூட வா. உன்னை காலமெல்லாம் வச்சு காப்பாத்துறேன்னு கதை விடு. கிளப்பிக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு ஒரு வாரம் சுத்திட்டு கழட்டி விட்டுடு."

"ஐடியா நல்லாதான் இருக்கு. ஒர்க் அவுட் ஆகுமா."

"கரெக்டா காயை நகர்த்து. எல்லாம் கரெக்டா நடக்கும். இப்ப இன்னொரு ரவுண்டு ஊத்து." சேகர் சிரித்தான்.

"சியர்ஸ்" இருவரும் சிரித்தார்கள்.

--------------

காலையில் எழுந்த சேகர் அருகிலிருந்த கடிதத்தை படித்தான்.
"அன்பில்லாத கணவருக்கு,
உங்கள் குடிப்பழக்கத்தாலும் கெட்ட சகவாசங்களாலும் தவறான நடத்தையாலும் உங்களை மிகவும் வெறுக்கிறேன்.
உங்கள் நண்பர் ராஜன் நல்லவர். எனக்கு நல்ல வாழ்க்கை தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
அவரோடு நான் போகிறேன்.
இனி எந்த காலத்திலும் உங்கள் முகத்திலும் விழிக்க விரும்பாத
சரோஜா."

"அடப்பாவி ராஜன்" அலறினான் சேகர்.

(கதை நச்சென்று முடிந்து விட்டது என்று நினைப்பவர்கள் இத்தோடு முடித்துக் கொள்ளவும்)

-----------------------------

அவள் சென்று ஏழாவது நாள். எழுபதாவது முறையாக கடிதத்தை படித்த சேகர் மீண்டும் அழத் தொடங்கினான்.

(விட்டு சென்ற காதலி/மனைவியின் கடிதத்தை ஒருவன் படித்து அழுவதுதான் "நச்" முடிவென்று நினைப்பவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்.)


--------------------------

எட்டாவது நாள்.....
காலிங் பெல் அடித்தது...

கதவைத் திறந்தான் சேகர்.
சரோஜாவும் ராஜனும்.

"நீ... நீ.... நீங்க."


"என்னை மன்னிச்சிடுங்க. அந்த கடிதம், நான் காணாமல் போனது எல்லாம் நாடகம்" - சரோஜா.

"என்ன... என்ன.. சொல்றே நீ..."

"நீங்க ஒழுக்கக் கேடா இருக்கறதும் அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறதும் தப்புன்னு உங்களுக்கு புரிய வைக்கணும்னு நினைச்சேன்.
ராஜன் அண்ணா ஹெல்ப் பண்ணினார்."

"அண்ணனா."

"ஆமா. சேகர். உன்னை சொல்லித் திருத்த முடியலை. ஒரு ஷாக் ட்ரீட் மெண்ட் கொடுக்கணும்னு சரோஜா கொடுத்த ஐடியாதான் இது." - ராஜன்.

"அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிற உங்களுக்கு... உங்க வீட்டிலேயே இப்படின்னதும் தாங்க முடியலை இல்லையா. இப்பவாவது உணர்ந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
அதுக்காகத்தான் இந்த நாடகம்." - சரோஜா.

"இப்ப நான் புரிஞ்சிகிட்டேன். இனியும் தறிகெட்டு அலைய மாட்டேன்.
சரோஜா, என்னை மன்னிச்சிடு."

திருந்திய சேகரை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சரோஜாவும் ராஜனும்.


(அப்பாடா. கதை உண்மையிலேயே நச்சுன்னு முடிஞ்சிச்சின்னு சொல்லுறவங்க, பெண்ணியவாதிகள் துணிச்சலான சரோஜாவை பாராட்டிவிட்டு கதையை இத்துடன் முடித்துக் கொள்ளவும்.)


------------------------------

"ஹல்லோ சரோஜா."

"ஹலோ ராஜன். எப்படி இருக்கீங்க. நேர்ல பார்க்க முடியலை. போன் மட்டும் பண்ணறீங்க."

"எனக்கும் பார்க்கணும் போல இருக்கு."

"நேர்ல வாங்களேன். எனக்கும் பார்க்கணும். அந்த ஒரு வாரம். என் வாழ்க்கையில மறக்க முடியாத வாரம். அவரும் நம்பிட்டாரு.".

"ஹா... ஹா.. இப்ப அநியாயத்துக்கு நல்லவனாயிட்டான்."

"உங்களை இனி பார்க்க முடியாதா."

"சே. சே. அப்படியெல்லாம் இல்லை. நம்ம கதை ஒரு வாரத்துல முடிஞ்சிடுற சிறுகதையா என்ன. தொடர்கதை... தொடரலாம்."

அவள் சிரித்தாள். அவனும்.


(இந்த "நச்சு" முடிவு போதும் என்பவர்கள் கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும்.)

-----------------------------------------------------


அலறியடித்து எழுந்தான் சேகர்.
அத்தனையும் கனவா. "தான் ராஜனிடம் பேசியது. சரோஜாவின் கடிதம். அவள் திரும்பிவந்தது. தொலைபேசிப் பேச்சு" அத்தனையும் கனவா.
அருகில் தூங்கிக்கொண்டிருந்த சரோஜாவின் முகத்தைப் பார்த்தான். என் சரோஜா அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவும் கனவு.
நான்தான் தவறானவன்.
இனி இவளுக்கு ஒழுங்கானவனாக இருப்பேன் என்று முடிவெடுத்தான்.

(எப்படி எப்படியாவது கதையை எழுதி கடைசியில் அத்தனையும் கனவு என்று முடித்தால் இன்னொரு "நச்" சிறுகதை ரெடி...
எல்லாம் சேகரின் கனவு என்று சொல்லி விட்டதால் கதையை மேலும் வளர்க்க முடியாது என்பதால்... முற்றும்.)

--------------------------------------------------

32 comments:

said...

இந்த கதையில இத்தனை "நச்சு" இருக்கறதால இது சர்வேசரின் "நச்" சிறுகதை போட்டிக்கு. :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுக்கு அப்புறமும் ஒரு ராஜன் - சரோஜா ஃபோன் சீன் வரலாமே!
:))

இல்லைன்னா... எழுந்து ரோஸிக்கு சேகர் ஒரு ஃபோன் போடலாம்!

'நச்'சறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க!
எதுக்கு நிறுத்தணும்?
சும்மா தொடருங்க சாமி!
:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னய்யா.....
நச் நச் நச் நச்சுன்னு எழுதித்தள்ளிட்டீரு!!!!

பரிசு வாங்கறமாதிரி கனவு வந்துச்சா? :-)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆஹா மாட்டிக்கிட்டீங்களா? அவரு நச்சுன்னு ஒரு கதைதான் சொல்லி இருக்காரு. நீங்க ஒரே தலைப்பின் கீழ் இவ்வளவு கதை விட்டதால, சாரி சொன்னதால நீங்க டிஸ்குவாலிபைட்.

அப்பாடா ஒழிந்தான் துரோகி, இந்த மாதிரி எத்தனை அப்பாவிகளை பேக்கப் செய்யணுமோ தெரியலையே....-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப நல்லா இருக்குங்க!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜெப்ரீ ஆர்சர் நினைவுக்கு வருது! சுவையாக இருந்தது.
திவா-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
எப்படி எப்படியாவது கதையை எழுதி கடைசியில் அத்தனையும் கனவு என்று முடித்தால் இன்னொரு "நச்" சிறுகதை ரெடி...
//
இந்த டெக்னிக்ல நான் ரெண்டு கதை எழுதிட்டேன் அதனால இது செல்லாது செல்லாது

//
இலவசக்கொத்தனார் said...
ஆஹா மாட்டிக்கிட்டீங்களா? அவரு நச்சுன்னு ஒரு கதைதான் சொல்லி இருக்காரு. நீங்க ஒரே தலைப்பின் கீழ் இவ்வளவு கதை விட்டதால, சாரி சொன்னதால நீங்க டிஸ்குவாலிபைட்.

அப்பாடா ஒழிந்தான் துரோகி, இந்த மாதிரி எத்தனை அப்பாவிகளை பேக்கப் செய்யணுமோ தெரியலையே....
//

டபுள் ரிப்பீட்டேய்-------------------------------------------------------------------------------------------------------------
said...

LOL!:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//என் சரோஜா அப்படியெல்லாம் இல்லை.//
(ஆண்கள்)நீங்க என்னவேணாலும் கூத்தடீங்க, ஆனா மனைவியில மட்டும் 100% நம்பிக்கை வைச்சிடுறீங்க. அதெப்படி..?
சத்தியமா பெண்ணியவாதியில்லப்பா:-)
சும்மா சொல்லக் கூடாது, கதை சூப்பர்.
இருந்தாலும், " ஜாக்கெட் போட்ட ஃபிகரை பிராக்கெட் போடணும்". பொண்ணு கல்யாணம் ஆனவ." என்பதை முதல்ல வாசித்தப்போ
அடப் பாவிகளான்னு வாயில நல்லா வந்திதுது.. அப்பொறம் ஒகே ஆயிடுத்து.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட்ரா சக்கை.

இவ்ளோ நச்சா?

அடேங்கப்பா. நல்லா இழுத்திருக்கீங்க! :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நச்... நச்... நச்...
கலக்கல்ஸ்..!-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவு போல திரும்பி திரும்பி...கழுத்து சுழுக்கிக்கும்...

சும்மா நச்சுன்னு இருக்கு....வெற்றி பெற்ற கதை என்று அறிவிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை....-------------------------------------------------------------------------------------------------------------
said...

இத்தனை நச் வைத்ததுதான் பெரிய நச்ச்..பாராட்டுகள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏன்னு தெரியல அண்ணாச்சி!!
இத்தனை நச் இருந்தாலும்!! எனக்கு ஒரு திருப்பமும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒரு வேளை நச் வரப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பினால இருக்கலாம்!-------------------------------------------------------------------------------------------------------------
said...

கதை நச்சினுதான் இருக்கு எனக்கு ஒரு சந்தேகம் இந்த கதை உங்களுக்கு கனவுல வந்திச்சா இல்ல யோசிச்சிங்களா
வெற்றி பெற வாழ்த்துக்கள். கதைய படிச்சதும் ஊட்டிக்கு ஒரு டிரிப் அடிச்சமாதிரி இருந்துச்சி-------------------------------------------------------------------------------------------------------------
said...

நச்சு..நச்சுன்னு இருக்கு அரை பிளேடு!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு, ஒன்று இரண்டு மூன்று என நச்சை வைத்துக் கதை படித்ததால் -- உம்மை இனி நச்சினார்க்கு இனியர் என்றே உலகம் அறியட்டும்!

(கொத்தனார் பயம் உள்ளூற இருக்கறது உண்மைதான்:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுவரைக்கும் வந்ததுலேயே இது மட்டும்தான் நச்சுன்னு இருக்கு... பிற்குறிப்புகளை நீக்கிட்டு ஸ்ட்ரெய்ட்டா நஒக'வுக்கு அனுப்புங்க. பரிசு உங்களுக்கு தான். மிகவும் அருமையான பாக்கியராஜ் இஸ்டெயில் கதை... கலக்குய்யா..-------------------------------------------------------------------------------------------------------------
said...

VSK said...
//'நச்'சறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க!
எதுக்கு நிறுத்தணும்?
சும்மா தொடருங்க சாமி!
:)//

வி.எஸ்.கே. ஐயா... கொஞ்சம் தொடர்ந்து பார்ப்போம்.

எல்லாம் கனவுதான் என்று நிம்மதியான சேகர் அலுவலகம் கிளம்பினான். இன்று மதியம் லீவ் போட்டுவிட்டு ரோஸியை பார்க்க போக வேண்டும். வரச்சொல்லியிருக்கிறாள். நினைத்தபோதே சந்தோஷமாக இருந்தது சேகருக்கு.
அவன் அலுவலகம் போனதும் சரோஜா ராஜனுக்கு தொலைபேசினாள். "மதியம் வர முடியுமா."

அய்யய்யோ. கொடுமையா இருக்கு.
வேணாம் கடைசி "நச்சோடயே" கதை முடியட்டும்.
சரோஜாவும், ராஜனும் எப்போதுமே நல்லவர்கள்.
சேகரும் திருந்திவிட்டான். :))

-------------------------------------------------------------------------------------------------------------

துளசி கோபால் said...
//என்னய்யா.....
நச் நச் நச் நச்சுன்னு எழுதித்தள்ளிட்டீரு!!!!
பரிசு வாங்கறமாதிரி கனவு வந்துச்சா? :-)))//

நன்றி டீச்சர்.
கனவெல்லாம் வரலை. :))
உங்களை மாதிரி நாலுபேரு நச்சுனு இருக்குன்னு சொல்லுறதே பெரிய பரிசுதான்.

-------------------------------------------------------------------------------------------------------------

இலவசக்கொத்தனார் said...
//ஆஹா மாட்டிக்கிட்டீங்களா? அவரு நச்சுன்னு ஒரு கதைதான் சொல்லி இருக்காரு. நீங்க ஒரே தலைப்பின் கீழ் இவ்வளவு கதை விட்டதால, சாரி சொன்னதால நீங்க டிஸ்குவாலிபைட். //
கொத்தனார் ஒரே கதைதான். அங்கிட்டு இங்கிட்டு திரும்பி கடைசியா ஒரு வழியா முடியுது. :))

//இந்த மாதிரி எத்தனை அப்பாவிகளை பேக்கப் செய்யணுமோ தெரியலையே....//
இப்படி ஒரு விவகாரமான கதைய எழுதனதுக்கு அப்புறமும் நம்மளை நாடு "அப்பாவி"ன்னு நம்புதா :)))

இந்த அப்பாவிக்கு பரிசை பேக்கப் செய்ய பரிந்துரை செய்த உங்கள் மனசே மனசு :))


-------------------------------------------------------------------------------------------------------------

நாடோடி இலக்கியன் said...
//ரொம்ப நல்லா இருக்குங்க!!!//

நன்றி நாடோடி இலக்கியன். உங்க பெயரே ரொம்ப நல்லா இருக்கு. :))


-------------------------------------------------------------------------------------------------------------

drtv said...
//ஜெப்ரீ ஆர்சர் நினைவுக்கு வருது! சுவையாக இருந்தது.
திவா//

ஜெப்ரீ ஆர்ச்சர் ரேஞ்சா. ஆவ்.. ஆவ்.... கண்ணுல ஆனந்த கண்ணீரா வருதுங்க.
தாங்ஸ் திவா. :))


-------------------------------------------------------------------------------------------------------------

மங்களூர் சிவா said...

//இந்த டெக்னிக்ல நான் ரெண்டு கதை எழுதிட்டேன் அதனால இது செல்லாது செல்லாது//

ஒரே டெக்னிக்கில் இரண்டு கதைகள் இருந்தால் மூன்றாவது செல்லாது என்று விதிமுறை இல்லை :))

//
இந்த மாதிரி எத்தனை அப்பாவிகளை பேக்கப் செய்யணுமோ தெரியலையே....
//
//டபுள் ரிப்பீட்டேய்//

கொத்தனார் இந்த அப்பாவிக்கு பரிசை "பேக்கப்" செய்யணும்னு சொல்றாரு.
அவருக்கும் அதுக்கு டபுள் ரிப்பீட்டேய் சொன்ன உங்களுக்கும் ரொம்ப நன்றி :))


-------------------------------------------------------------------------------------------------------------

//Indrajit said...
LOL!:-)//

நன்றி இந்திரஜித். :))-------------------------------------------------------------------------------------------------------------

செல்லி said...

//
(ஆண்கள்)நீங்க என்னவேணாலும் கூத்தடீங்க, ஆனா மனைவியில மட்டும் 100% நம்பிக்கை வைச்சிடுறீங்க. அதெப்படி..?
சத்தியமா பெண்ணியவாதியில்லப்பா:-)//

நம்பிக்கைதாங்க வாழ்க்கை.
எவ்வளவுதான் உண்மையா இருந்தாலும் பெண்கள் ஆண்கள் மேல நம்பிக்கையே வைக்கிறதில்லை. சந்தேகப்படுறாங்களே. அது ஏங்க ?
சத்தியமா ஆணியக் கேள்வி இல்லைங்க. :))

//சும்மா சொல்லக் கூடாது, கதை சூப்பர்.
இருந்தாலும், " ஜாக்கெட் போட்ட ஃபிகரை பிராக்கெட் போடணும்". பொண்ணு கல்யாணம் ஆனவ." என்பதை முதல்ல வாசித்தப்போ
அடப் பாவிகளான்னு வாயில நல்லா வந்திதுது.. அப்பொறம் ஒகே ஆயிடுத்து.//

ரொம்ப நன்றிங்க.
நாயகன் மற்றும் அவனுடைய சகவாசங்கள் எப்படிப்பட்டவைன்னு சொல்லி புரிய வைக்க அந்த வரிகள் தேவைப்பட்டது :))


-------------------------------------------------------------------------------------------------------------

SurveySan said...
//அட்ரா சக்கை. இவ்ளோ நச்சா?
அடேங்கப்பா. நல்லா இழுத்திருக்கீங்க! :) //

நன்றி சர்வேசரே :))
கதைய ஒரே நேர்கோட்டுல கொண்டு போய் நச்சுனு முடிச்சா எப்படியாவது முடிவு எப்படி வரும்னு யூகிச்சிட முடியும்.
வளைச்சு வளைச்சு கதை சொல்லலாம்னுதான் :)))
இப்படி ஒரு போட்டியை அறிவித்து அனைவரையும் ஊக்குவித்து பல நல்ல கதைகளை வாசிக்க தந்த உங்களுக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

இது உங்க வகை "நச்சு" இல்ல தல....-------------------------------------------------------------------------------------------------------------
said...

நிமல்.

நன்றி.


-----------

TBCD ஐயா...

ரொம்ப நன்றி.
கதையை யாரும் யூகிக்க கூடாது நாலைஞ்சு திருப்பு திருப்பினேன். உங்களுக்கு பிடிச்சிருக்கிறதுல சந்தோஷம். :))


--------

பாசமலர் அவர்களே...

பாராட்டுக்கு மிக்க நன்றி. :)

--------

CVR

தலைப்பில "நச்" இனு சொல்லிட்டாலே படிக்கிற கதையில் ஏதோ திருப்பம் இருக்கும்ன்ற முன் முடிவோட படிக்கிறதால திருப்பம் எல்லாம் செயற்கையா தெரியறது இயற்கைதான் :)))


----------

நன்றி புரட்சித் தமிழன்..

கனவுல வந்த கதை இல்லை. நச் திருப்பங்கள் வரணும்னு கணக்கு போட்டு எழுதன கதை.

ஊட்டிக்கு போன மாதிரி திருப்பங்கள் இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

:)

----------------

நன்றி திவ்யா.

வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் :)


----------


பினாத்தல் சுரேஷ்...


"நச்சினார்க்கு இனியன்" தங்கள் வாயால் இந்தப் பட்டம் பெற்று தன்யனானேன். மிகவும் நன்றி.

(கொத்தனார் கதைய பாராட்டத்தான் செய்யறாரு. :) )

---------

இசை..

ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க சொன்னதே பரிசு வாங்குன மாதிரி இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இடைக்குறிப்புகளை நீக்கிட்டா ஒரே கதையா இருக்கும். சும்மா காமெடிக்காக போட்ட இடைக் குறிப்புக்ள. நீக்கிடலாம். :))

--------


கோபிநாத்...

ஆமாங்க. நச்சுனு ஒரு காமெடி கதை எழுதலாம்னுதான் பிளான் பண்ணினே். ஆனா காமெடியில வேண்டிய "நச்" கிடைக்காதுன்னு டிராக் மாறி இந்த கதை :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட...நச்சுன்னுதான் இருக்கு. நானும், அடல்ட்ஸ் ஒன்லி, ஜன்னல், கதவு, கல்யாணமான பெண் -- இதல்லாம் படிச்சதும், கொஞ்சம் அசுவராசியமா படிச்சேன்.

அசத்திட்டீங்க.. பேருக்கும் கதைக்கும் சம்பந்தமில்ல (உங்க பேர சொன்னேன்!)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜாக்கெட்டுக்கு பதில் கதைக்கு பெயர் கொ(ண்)டைக்கானல் என்று வைத்திருக்கலாம், ஏகப்பட்ட பெண்டு, வளைவு, திருப்பம், குப்புற விழுவறது, வழுவறது அம்புட்டும் இருக்கு.
:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

super-o-super...-------------------------------------------------------------------------------------------------------------
said...

::))))ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல கதை.. நச் கதியும் கூட.. ஆனா இத்தனை நச் தேவையா??-------------------------------------------------------------------------------------------------------------
said...

நச்சுன்னுதான் இருக்குங்க-------------------------------------------------------------------------------------------------------------
said...

wild thingsணு ஒரு ஆங்கிலப் படம் இருக்குது அதுல இதுபோல பல திருப்பங்கள் வந்துட்டே இருக்கும்.

நல்லாயிருந்துச்சு.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒங்க பேரு வேணா 'அரை பிளேடு'ன்னு இருக்கலாம், ஆனா ஒங்க Multiple 'நச்' சிறுகதை, 'முழுசா' சூப்பர் ... ண்ணா :)

பாராட்டுக்கள் !

சிறில் அலெக்ஸ் நீங்க எப்ப ஹாலிவுட்டுக்கு போகப் போறீங்கன்னு
மறைமுகமா கேட்கிறார் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா-------------------------------------------------------------------------------------------------------------
said...

எல்லாம் சரியான நச்சுகள். பாலச்சந்தர் கிட்ட சொன்னா இதை ஒரு படமா எடுத்துடுவார், ஆனால் அந்த கடைசி நச் நீங்கலாக;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!-------------------------------------------------------------------------------------------------------------
said...

டாப்-8க்கு வாழ்த்துக்கள்!

Click here to view results

8ல எனக்கு ரொம்ப புடிச்ச மூணுல ஒண்ணு உங்களது ;)-------------------------------------------------------------------------------------------------------------