Saturday, December 15, 2007

அவள் செத்தேயாக வேண்டும்

அவள் செத்தேயாக வேண்டும்.

ராஜேஷிற்கு தன் மனைவி ராதாவை கொன்றேயாக வேண்டும்.

"யோசி. யோசி.
இருக்கும் வெறியில் அவளை கத்தியால் பலமுறை குத்தி கண்ட துண்டமாக வெட்டி போட்டு கொலை செய்யலாம்.
வேண்டாம். என் கைகளுக்கு விலங்கு வருவதை நான் விரும்பவில்லை."

"யோசி. ராஜேஷ். கேஸ் அடுப்பு வெடிப்பது எல்லாம் பழைய டெக்னிக். உண்மையிலேயே அடுப்பு வெடித்தால் கூட வரதட்சணை கேஸ் என்று போலீஸ் முடிவு செய்துவிடுகிறது."

"அவள் வெளியே செல்லும் போது... ஒரு லாரி வைத்து மோதி ஆக்சிடெண்ட் என்று ஜோடித்து விடலாமா ?
வேண்டாம். நாளை விசாரணையில் லாரி டிரைவர் உளறிவிடக் கூடும்."

"அடியாள்கள் வைத்து கொலை செய்யலாம். ஆனால் நாளைக்கு அவர்களே நம்மை மீண்டும் பிளாக் மெயில் செய்தால்...."

"யோசி. பீ கிரியேடிவ். வேண்டியது ஒரு கொலையல்லாத கொலை."

"எத்தனை சினிமாக்கள்.... எத்தனையோ வழிகள் காட்டுகிறார்கள். ஆனால் எதுவும் வேலைக்காகாது...
ஆசையில் பிரகாஷ்ராஜ் ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து கொலை செய்வாரே... அந்த மாதிரி ஏதாவது."

"ரைட். இப்படி செய்தால் என்ன. அவள் தினமும் வழக்கமாய் சாப்பிடும் மாத்திரைகள்.
இந்த மாத்திரை எக்ஸ்பையர் ஆனா ரொம்ப டேஞ்சரஸ். உயிருக்கே கூட ஆபத்து என்று அவளுடைய மாத்திரையை பற்றி டாக்டர் சொன்னாரில்லையா...
எக்ஸ்பையர் ஆன மாத்திரைகளா மாற்றி வைத்தால்.
வாவ். கிரேட்.

எக்ஸ்பையர் ஆன மாத்திரை டப்பா ஒன்று இருக்கிறது.
மாற்றி வைத்தால்... தினமுமா எக்ஸ்பைரி டேட் பார்த்து விட்டு மாத்திரை சாப்பிடுவாள்.
நாளைக்கு போலீஸ் கேஸ் என்று வந்தால் எக்ஸ்பையரி ஆன மாத்திரை சாப்பிட்டதால் மரணம் என்று எளிதாக முடிந்துவிடும்.
அதுதான் சரி. ".

----------

"கிரேட் சார். வித்தியாசமா திங்க் பண்றீங்க. வில்லன் தன்னோட மனைவிய இந்த மாதிரி வித்தியாசமா கொல்றான்றது எடுபடும். பாருங்களேன் இந்த கான்செப்டுக்கே படம் நல்லா ஓடும்". புகழ் பெற்ற அந்த வில்லன் நடிகர் டைரக்டரை பாராட்டினார்.
"தாங்ஸ் சார்."
"ஸ்டார்ட் கேமரா."

"ராதா. நீ இன்னைக்கு மாத்திரை சாப்பிடலை."
"நல்ல வேளை நியாபகப் படுத்தினீங்க."
ராதா மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை விழுங்கினாள்.
அவன் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

9 comments:

said...

கதையெல்லாம் கொலைவெறியோட வருது.

கொஞ்ச நாளைக்கு கதை எழுதறதையே நிறுத்திட்டு கவிதை கட்டுரைன்னு எழுதணும். :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல,
படிக்க ஆரம்பிச்சவுடனே கெஸ் பண்ண முடிஞ்சிது :-(

முன்னாடி கொலை செய்யறதுக்கான ரீசன் பத்தியும் கொஞ்சம் யோசிக்கற மாதிரி இருந்திருந்தா நல்ல இருக்குமோ :-/-------------------------------------------------------------------------------------------------------------
said...

//

அரை பிளேடு said...
கதையெல்லாம் கொலைவெறியோட வருது.

//
நோ நோ கன்டின்யூ...-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுக்கு முந்தின கதையே போட்டிக்குப் பெட்டர்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

கதையை படிச்சிட்டு சிவாவை எப்பை கொல்லலாம் என்று திட்டம் தீட்டுகிறேன். என்ன திட்டம் என்று சொல்ல மாட்டேன்.
:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\ வெட்டிப்பயல் said...
தல,
படிக்க ஆரம்பிச்சவுடனே கெஸ் பண்ண முடிஞ்சிது :-(\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆஹா..இன்னிக்கு என்ன கொலை special ஆ? இப்போதான் கொலைக் கதை ஒண்ணு பதிவு போட்டுட்டு வந்தேன்..

உங்கள் கதை நச்னு இருக்கு.ஆனாலும் என் ஓட்டு இதற்கு முந்தைய உங்கள் கதைக்குதான்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வெட்டிப்பயல் பாலாஜி..

கெஸ் பண்ணக்கூடிய கதைதான். ரொம்ப சின்னதா ஒரு டெம்ளேட் கதையா எழுதலாம்னு :))

--------------

மங்களூர் சிவா...

நன்றி. வில் கண்டின்யூ. கொஞ்சம் கொலை இரத்தம் இல்லாத கதையா எழுதறேன் :))

-------------

கொத்தனார்ஜி...

இது போட்டிக்கு இல்லை. சும்மா :))

------

கோவி. கண்ணன்.

கொலை செய்ய திட்டம் தீட்டுகிறீர்களா. அச்சச்சோ. கொலைவெறி கதைகளை நிறுத்தணும். நல்லவங்களை கூட கொலைவெறி கதைகள் கொலைவெறியோட சிந்திக்க வைக்குதே :))

-------------

கோபிநாத்.

வருகைக்கும் ரிப்பீட்டிற்கும் நன்றி.


-----------

வருக பாசமலர் அவர்களே.

எல்லோரும் ஒரு கொலைவெறியோடதான் கதை எழுதறோம் போல :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

பரவாய் இல்ல...
நன்று..

(ஆஹா.. நல்ல idea'வா இருக்கே...
எனக்கொரு expired medicine பார்சல்..!!!! ஹி ஹி.. :))-------------------------------------------------------------------------------------------------------------