Thursday, December 20, 2007

மாமு... மாமு... போலீஸ் மாமு....

நான் சென்னை சாலையெங்கும் பைக் ஓட்டி அலுவலகம் செல்ல ஆரம்பித்த புதிது.
எது ஒன் வே என்ன ஏது என்று தெரியாத புதிது.
காலை 8:45. பாண்டி பஜாரின் சந்து ஒன்றுக்குள் சென்று விட்டு மீண்டும் மெயின் ரோட்டை பிடித்து அலுவலகம் செல்ல திரும்பினேன்.
பிடிச்சாரு டிராபிக் போலீஸ்காரர்.
"நிறுத்து. நிறுத்து. இது ஒன் வே."
"சார். தெரியாது சார். போர்டு எதுவும் பார்க்கலையே." ஒன்வே போர்டு எதையும் நிஜமாகவே பார்க்கவில்லை நான்.
"போர்டு பார்க்கலைன்னா என்னா. இது ஒன்வேன்னு தெரியாதா."
"தெரியாது சார். நான் கொஞ்சம் புதுசு."
"சரி. சரி. ஐம்பது ரூபா கொடுத்துட்டு நகரு."
"ஃபைனா சார்.".
"ஆமா. கொடுத்துட்டு போயிட்டே இரு."
"சரி. சார். தர்றேன். ரிசிப்ட் கொடுப்பீங்களா."
"ரிசிப்டா..."
"ஆமா சார். நான் ஃபைன் கட்டுனதுக்கு ரிசிப்ட்."

அந்த டிராபிக் போலீஸ் என்னை வித்தியாசமாக பார்த்தார்.
"இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ்ல இருக்காரு. அவர்தான் ரிசிப்ட் கொடுக்க முடியும். அவர் வர நேரமாகும். நீ ஃபைன கொடுத்துட்டு நகரு."
"பரவாயில்லை சார். நான் இருந்து ரிசிப்ட் வாங்கிகிட்டே போறேன்." யோசித்தார்.
"சரி. கொஞ்சம் நில்லு."
கொஞ்ச நேரம் கழித்து வந்தார். வண்டியின் பின் ஏறிக்கொண்டார். "பனகல் பார்க் பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு விடு."

அந்த அலுவலகத்திற்கு வெளியே வண்டியை நிறுத்தி இருவருமாய் உள்ளே சென்றோம்.
இன்னொரு போலீஸ்காரரிடம் கொண்டு நிறுத்தினார்.
"என்னய்யா."
"சார். ஒன்வேயில வந்ததுக்காக பிடிச்சேன்."
"சரியா. இங்க ஏன் கூட்டி வந்த."
"ஒன்வேயில வந்ததுக்கு ஃபைன் கட்டணும்னு சொன்னேன். ரிசிப்டு கேக்கறாரு."
அவர் என்னை பார்த்தார்.
"என்ன நீங்க பிரஸ்ஸா."
"இல்லை சார். ஒன்வே. ஃபைன் கட்டுன்னு சார் சொன்னாரு. சரி ரிசிப்டு கொடுங்கன்னு கேட்டேன்."
"எங்க வேலை பார்க்கறீங்க."
சொன்னேன். மேற்கொண்டு என் அலுவலகம் எங்கே வீடு எங்கே என்ற விசாரணைகள்.
"இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்காரு. அவருதான் ரிசிப்டு தரணும். சரி. இந்த பேப்பருல உங்க அட்ரஸ் வண்டி நம்பர் எழுதுங்க."
அவர் கொடுத்த வெள்ளைத்தாளில் எனது முகவரியும் வண்டி எண்ணையும் எழுதினேன்.
"சரி பணத்தை கொடுத்துட்டு போங்க. ஈவினிங் இந்த பக்கமாதானே போவீங்க. வந்து ரிசிப்டை வாங்கிட்டு போங்க."
ஐம்பது ரூபாயை கொடுத்தேன். "தாங்ஸ் சார்."
நேரத்தை பார்த்தேன். 10:15.

அச்சோ. அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. அலுவலகம் சென்றதும் இருந்த ஆணிகளை பிடுங்கி கிளம்பும் போது இரவு 8:30.
இதற்கு மேல் எங்கே சென்று நான் ரிசிப்டு வாங்குவது. அப்புறம் அந்தப் பக்கம் நான் போகவே இல்லை.

இன்று வரை எனக்கு தெரியாத விஷயம். ஒன்வேயில் வந்தால் ஃபைன் இருக்கிறது என்றால் எவ்வளவு. அதற்கு ரிசிப்ட் உண்டா.
அப்படியானால் அதை தரும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது.

13 comments:

said...

நமக்குள்ளயும் "எவனோ ஒருவன்" இருந்தான்.

அடுத்த தடவை சிவப்பு சிக்னலை தாண்டிட்ட அப்படின்னு புடிச்ச போலீஸ்காரருக்கு அவர் "டீ குடிக்கிறதுக்காக" 20 ரூபாயை கொடுத்துட்டு போய்க்கிட்டே இருந்தேன். பின்ன மணி 9 ஆகப் போகுது... போன தடவையே டேமேஜர் ஏன் லேட்டுன்னு கேட்டார்.

இத்தனைக்கும் சிக்னல் மாறரதுக்கு மின்னாடிதான் தாண்டினேன். ஆர்க்யூ பண்ணி என்ன ஆகப் போகுது.

ஒரு பாவப்பட்ட போலீஸ்காரர் டீ குடிக்கிறதும், ஒரு அப்பாவி நேரத்தோட ஆஃபீஸ் போறதும்னு இரண்டு நல்ல விஷயம் நடக்கறப்ப எதுவுமே தப்பில்லை :))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

லஞ்சம் குடுக்கிறதைப் பார்த்த தெக்கியையே பின்னி எடுத்துட்டாங்க. குடுத்த உங்களை என்ன செய்யப் போறாங்களோ!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

;-))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொத்ஸ்..

என்ன சொல்ல. குற்றவாளிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். :))

கோபிநாத் ஸ்மைலிக்கு நன்றி :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நானும் பல முறை இந்த மாதிரி லஞ்சம் தந்துள்ளேன். ஒரு வித்தியாசமான லஞ்சம் என்ன தெரியுமா. மோட்டர் சைக்கிள் ஒட்டிக் கொண்டே சிகரட் பிடித்தற்கு. ஒரு சிக்னல் நிற்கும் போது சிகரட்டை பற்றவைத்தேன் எதிரில் ஒரு போலீஸ்காரர் அதுவும் சார்ஜண்ட் பிடித்து 50 ரூபாய் பெற்றுக் கொண்டு ரசீதும் தந்தார். நான் புகைத்த சிகரட்டிலே அதுதான் மிக விலை உயர்ந்தது :)

கை நீட்டி லஞ்சம் வாங்கும் போலீஸ் காரர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இருக்காதா?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சத்தியமா எனக்கும் தெரியாது அண்ணா :)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

காலேஜ் படிக்கும்போது ரெண்டு ரூவா அஞ்சு ரூவா கொடுத்த கதையெல்லாம் இருக்கு..



//இன்று வரை எனக்கு தெரியாத விஷயம். ஒன்வேயில் வந்தால் ஃபைன் இருக்கிறது என்றால் எவ்வளவு. அதற்கு ரிசிப்ட் உண்டா.
அப்படியானால் அதை தரும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது.//

எனக்குத் தெரிஞ்சு சார்ஜண்டே ரிசிப்ட் தரலாம்ங்க. பணத்தை அவர்ட்டயும் கட்டலாம்..இல்ல மூனு மாசத்துக்குள்ள கோர்ட் கிளார்க்ட்ட ரிசிப்ட காட்டி கட்டலாம்னு நினைக்கறேன்..எனக்கும் சரியா தெரியல...ஆனா நம்மாளுங்க அதுக்கெல்லாம் சோம்பல் பட்டுக்கிட்டு கேக்கறதை கொடுத்துட்டு போயிடறாங்களே!

ஒன் - வேல போனா 100 ரூபாய்ன்னு இந்த சைட் சொல்லுது

http://www.indiandrivingschools.com/traffic-offences-and-penalties.html


நாம இந்த விதிகளையெலாம் லைசென்ஸ் எடுக்கும்போதோ அதுக்கப்புறமோ ஒழுங்கா கத்துக்கிட்டோம்னா இந்தளவு இருக்காதோ?? :(



இப்ப மெட்ராஸ்ல ஒன்வேல போறதோ,லைசென்ஸ், ஆர்சி, இன்ஷூரன்ஸ் இல்லாமா போறதோ தப்பே இல்ல..ஹெல்மெட் போடாம போறவனைத் தான் மொதல்ல புடிக்கறாங்க..அவன்கிட்ட தான் மேற்கொண்டு விசாரணை எல்லாம்...அதாவது ஹெல்மெட் போட்டுக்கிட்டீங்கன்னா டாகுமெண்ட் எதுவுமே இல்லன்னாலும் மாட்டறதுக்கான வாய்ப்பு குறைவு.


சில சிக்னல்ல, முக்கியமான(கலெக்ஷ்ன் தேறும்) சாலைகள்ல நிக்கறதுக்கு அவங்களுக்குள்ளயே ஏலம்,ரவுண்ட் ராபின் சிஸ்டம்லாம் உண்டாமே?





//கை நீட்டி லஞ்சம் வாங்கும் போலீஸ் காரர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இருக்காதா?//

அண்ணாச்சி..இதுக்கு அவங்க ஒரு விளக்கம் வச்சிருக்காங்க...என் போலீஸ்கார சித்தப்பு சொல்றது "நாங்க இப்படி காசு வாங்கலைனா உங்களுக்கு பயமிருக்காது..ஒரு முறை காசு கொடுத்தா எதுக்கு திரும்ப திரும்ப இவங்களுக்கு கொடுக்கனும்னு எல்லாம் ஒழுங்கா இருப்ப்பீங்க"..இது எப்படி இருக்கு? :)))



அவங்களை விடுங்க...ரோட்ல வண்டி ஓட்டறவன் அவன் பங்குக்கு ஒழுங்கா இருக்கானா? இது போலீஸ் கதைய விட மோசமான நிலைமைல தான் இருக்கு :(



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு, ஒன்வேயில் செல்வது நமது உரிமை. செல்லவும். :)))

பணம் கேட்பது அவரது உரிமை, கேட்பதைக் கொடுக்கவும்.

ரிசப்ட் கேட்பது உங்கள் உரிமை கேட்பது, கேட்கவும்.

ரிசபட் தராமல் இருப்பது அவர்கள் உரிமை, ஏற்கவும்.

இத்தனை உரிமைகள் உள்ள ஒரே நாடு இந்தியா.

ஒருமுறை நான் ஒன்வேயில் மாட்டிக்கொண்டபோது, [பார்த்தாலே தெரியுதுபா, நீ ஊருக்கு புத்சா, சரி சரி ஐம்பது கொடு] ஐம்பது ரூபாய் இல்லை என்றேன். இருக்கிறதைக் கொடு என்றார்கள், 17 ரூபாய் கொடுத்தேன்!!! தமிழ்நாட்டுல இதெல்லாம் சகஜம்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு..
ஒன் - வேல போனா 100 ரூபாய்ன்னா நீங்க ஃபைன் கட்டுவீங்களா.. இல்ல 50 ரூபா லஞ்சம் கொடுப்பிங்களா.. மனச தொட்டு சொல்லுங்க..

இதனால தான் லஞ்சம் தலை விரிச்சு ஆடுது...


//போலீஸ்கார சித்தப்பு சொல்றது "நாங்க இப்படி காசு வாங்கலைனா உங்களுக்கு பயமிருக்காது..ஒரு முறை காசு கொடுத்தா எதுக்கு திரும்ப திரும்ப இவங்களுக்கு கொடுக்கனும்னு எல்லாம் ஒழுங்கா இருப்ப்பீங்க"..//

100 ரூபாய் கட்டினாலும் பயம் இருக்கும்..
government'க்கும் காசு சேரும்..

(பிறகு அது அரசியல்வாதிங்க காசு..
அது வேற கதை... :))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இப்பொழுது கடந்த ஓராண்டாக சென்னையில் ட்ராபிக் போலீசாரின் கைநீட்டலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.... மருதமலை படத்தில் வடிவேலு மார்க்கெட்டில் சென்று லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதோடு ஒப்பிட்டு காட்சியாக்கப் பட்டிருக்கும்..... அதற்கும் இவர்களின் செயலுக்கும் பெரிய வித்தியாசமே இல்லை.

ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் திருவான்மியூரின் முதல் சிக்னலில் ஒன்வே என்று தெரியாமல் அவசரத்தில் திரும்பிய என் நண்பனிடம் போலீசார் கூறிய வார்த்தைகள்
"சாப்ட்வேர் வேலையா? 20 வயசுலயே 20,000 சம்பளம் வாங்குறேல்ல.... ஒரு 500 ரூவா குடுத்துட்டுப் போ... ஒன்னும் தப்பில்ல"

கடைசியில் 150 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் விட்டார்கள்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒன் வே-ய விடுங்க. மவுண்ட் ரோட 4 வழிப்பாதையா ஆக்கினப்போ... அநியாயம் பண்ணுவாங்க. எந்த வழியாக இரட்டை சக்கர வாகனத்தில் போனாலும் பிடிப்பாங்க. எதுக்குன்னு காரணம் எல்லாம் கிடையாது.

ஒரு முறை ஸ்பென்ஸர் பக்கதுல பிடித்தப்போ என்னிடம் பணம் இல்லை. சில்லரையாக 6 ரூபாய் இருந்தது. அதை வாங்கிக் கொண்டுதான் அந்த போலீஸ்காரர் விட்டார்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல காலம். உங்க பேரையும் வண்டி நம்பரையும் வச்சி எதுவும் தீவிரவாத கேஸுல புக் பண்ணாம விட்டாங்களே...அந்த நல்ல போலீஸ்காரங்க மனசுக்கு 50 ரூவா குடுத்ததுல தப்பே இல்ல.

மறுநாள் பேப்பர் தலைப்பு செய்தியில் "தில்லி செங்கோட்டையில் குண்டு வைத்து விட்டு பனகல் பார்க் ஒன்வேயில் பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற அரை பிளேடு என்ற தீவிரவாதி கைது"ன்னு நியூஸ் வந்துச்சின்னா நல்லாவா இருக்கும்?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்மக்களே,
எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன், பாத்துட்டு எது நியாயம், எது அநியாயமுன்னு நீங்களே சொல்லுங்க...

ஒரு நாள் நான் என் வண்டியில கிண்டி (அய்! எதுகை மோனை) பக்கம் போயிட்ருந்தேன். அப்போ ஒரு ஒன் வே போர்டைப் பார்த்தேன். அதுக்கப்பால நம்ம ட்ராஃபிக் போலீஸ் நிக்கறதயும் பாத்தேன். சரி, வண்டிய ஓட்டிகிட்டு ஒன்வேயில போனா தானே தப்பு, உருட்டிகினே போனா என்ன அப்டீன்னு ஒரு ஐன்ஸ்டீன் கணக்கா யோசிச்சு வண்டிய ஆஃப் பண்ணி உருட்ட ஆரம்பிச்சேன். என்னைப் புடிச்ச போலீஸ், என்னா சார், ஓட்டினா மட்டும் இல்ல, உருட்டினாக் கூட அபராதம் தான்னு சொல்லி, எல்லா டாகுமண்டும் இருந்த போதும், 50 ரூபா வாங்கினார். மேற்கொண்டு, 'நீங்க இப்படி குடுத்துட்டு நாளைக்கு இந்தப் பக்கமா வந்தீங்கனா நாங்களே ஒரு சல்யூட் அடிப்போம்' என்றார். நான் வந்த வேலையை முடித்து விட்டு சரியான பாதையில் திரும்பிப் போகும் போது, கொடுத்த வாக்கைத் தவற விடாத அவர் ஒரு சலாம் அடித்தார் எனக்கு. ப்ரண்ட்லியாகத்தான்!

இதுக்கென்ன சொல்றீங்க?!



-------------------------------------------------------------------------------------------------------------