Friday, February 22, 2008

மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது

மனு தர்மம். மனு நீதி அப்படின்னு நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கோம். அது என்னன்னு தெரியாம இருந்தது.

மனு நீதியோட ஆங்கில ஆக்கம் இணையத்துல படிக்க கிடைச்சது.

படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. அதர்மமா தெரியுது.

உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.

அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம்.
அப்பாலிக்கா அந்த முட்டை உடைஞ்சு அவர் வெளிய வர மேல் பகுதி சொர்க்கமாவும், கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம். அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம்.
நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம்.
அப்புறம் பஞ்சபூதங்கள், காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.

பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய், கை, தொடை, கால் இதிலிருந்து படைச்சாராம். (கதையா இருக்கே ?)

அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர் எல்லாரையும் படைச்சாராம்.

அப்புறம் யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள் (யார் இவங்க?), கந்தர்வர்கள், அப்சரசுகள், நாகர்கள் எல்லாரையும் படைச்சாராம்.
கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.

கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பத்தி அப்புறம் குறிப்பு இருக்கு.

பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல்.
ஷத்ரியனோட தொழில் ஜனங்களை காத்தல், பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
வைசியன் தொழில் கால்நடை பராமரிப்பு, வாணிகம், உழவு, பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
இவங்க மூணு பேருமே பூணூல் தரிக்கலாம். முறையே பருத்தி, சணல், மற்றவை.

சூத்திரனுக்கு தொழில் ஒண்ணே ஒண்ணுதான். இவங்க மூணு பேருக்கும் சேவை செய்தல். அவன் வேதம் படிக்க கூடாது.

ஏன்னா தொப்புளுக்கு மேல இருக்கற பகுதி புனிதம். சுயம்புவான கடவுளுக்கு அதுல இருந்து பிறந்தவங்க புனிதம். அதுவும் புனிதமான வாயில இருந்து பிறந்தவங்க இன்னும் புனிதம். (வாட் ஈஸ் திஸ். மிஸ்டர் மனு.)

பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு. அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.
பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தைகுறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
அதே போல் இரண்டாவது பெயர் (குடும்பபெயர்) முறையே மகிழ்ச்சி, பாதுகாப்பு, செல்வத்தை குறிக்க சூத்திரனுக்கு மட்டும் அவனது தொழிலை குறிக்க வேண்டுமாம்.

பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும்.
அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.

பிராமணண் கடும் விரதமேற்று குறைந்தது 9 ஆண்டுகளாவது வேதம் பயில வேண்டும். குறைந்தது ஒரு வேதத்தையாவது.

பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.

அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.

பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.

சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.

ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது. அடடே என்று பார்த்தால் அது அபராதத் தொகையாக இருக்கிறது.

சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.

பெண்களை இன்னும் சிறப்பாக வைத்திருக்கிறது மனுதர்மம்.
அவர்கள் வேதம் கற்கக்கூடாது. இயற்கையாகவே பெண் அலையாயும் மனம் உடையவள். அவர்கள் காவலில் வைக்கப்படவேண்டியவர்கள்.

மொத்தம் ஒரு பன்னிரண்டு சேப்டர் இருக்கு. நாலு சேப்டர் படிச்சேன். இதுக்கு மேலயும் இந்த குப்பையை படிக்க முடியாதுன்னு விட்டாச்சு.

மனுவோட இந்த தர்மம் தோன்றிய புண்ணிய பூமி பிரம்மவார்த்தா. மனுவே சொல்வது போல அது சரஸ்வதி நதிக்கும் திருஷ்டாவதி நதிக்கும் இடைப்பட்ட பகுதி.

நிலைநாட்டப்பட்ட பகுதி ஆர்யவார்த்தா இமயத்தில இருந்து விந்தியம் வரைக்கும்.

அதுக்கு கீழே இருப்பது மிலேச்சர்களின் பூமியாம்.
நல்லது. இந்த மிலேச்சர்களின் பூமிக்கு நிச்சயம் மனு ஸ்மிருதி தேவையில்லை.

Reference: The Laws of Manu
George Bühler, translated 1886.

22 comments:

said...

CHAPTER II.

22. But (the tract) between those two mountains (just mentioned), which (extends) as far as the eastern and the western oceans, the wise call Aryavarta (the country of the Aryans).

23. That land where the black antelope naturally roams, one must know to be fit for the performance of sacrifices; (the tract) different from that (is) the country of the Mlekkhas (barbarians).

CHAPTER VIII.

22. That kingdom where Sudras are very numerous, which is infested by atheists and destitute of twice-born (inhabitants), soon entirely perishes, afflicted by famine and disease.

267. A Kshatriya, having defamed a Brahmana, shall be fined one hundred (panas); a Vaisya one hundred and fifty or two hundred; a Sudra shall suffer corporal punishment.

270. A once-born man (a Sudra), who insults a twice-born man with gross invective, shall have his tongue cut out; for he is of low origin.

271. If he mentions the names and castes (gati) of the (twice-born) with contumely, an iron nail, ten fingers long, shall be thrust red-hot into his mouth.

272. If he arrogantly teaches Brahmanas their duty, the king shall cause hot oil to be poured into his mouth and into his ears.

413. But a Sudra, whether bought or unbought, he may compel to do servile work; for he was created by the Self-existent (Svayambhu) to be the slave of a Brahmana.

414. A Sudra, though emancipated by his master, is not released from servitude; since that is innate in him, who can set him free from it?

415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.

416. A wife, a son, and a slave, these three are declared to have no property; the wealth which they earn is (acquired) for him to whom they belong.

417. A Brahmana may confidently seize the goods of (his) Sudra (slave); for, as that (slave) can have no property, his master may take his possessions.

CHAPTER IX.

3. Her father protects (her) in childhood, her husband protects (her) in youth, and her sons protect (her) in old age; a woman is never fit for independence.

பக்கம் பக்கமா இருக்கு. மனு ஸ்மிருதியில் சில தவறான விஷயங்கள் இடைச்செருகலா இருக்குன்னு படிச்சேன்.

என்னமோ நல்ல விஷயங்கள்தான் அங்கே அங்கே இடைச்செருகலா இருக்கிற மாதிரி தெரியுது.

:)

ஒரு வேளை மனு ஸ்மிருதி உண்மையிலேயே வேறயா இருந்து இந்த இங்லீஷ் பதிப்பு தப்போ என்னவோ.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லதை மத்திரம் எடுத்துக்கலாமே:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அதுக்கு கீழே இருப்பது மிலேச்சர்களின் பூமியாம்.
நல்லது. இந்த மிலேச்சர்களின் பூமிக்கு நிச்சயம் மனு ஸ்மிருதி தேவையில்லை.//

ரிப்பீட்டேய்....
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

எது நல்லது என்று எதைச் சொல்லுறீங்கோ..

அதைச் சொல்லிடுங்கோ...

மற்றவர்களும் தெரிந்துக் கொள்வார்கள்.

//என்னமோ நல்ல விஷயங்கள்தான் அங்கே அங்கே இடைச்செருகலா இருக்கிற மாதிரி தெரியுது//

//வல்லிசிம்ஹன் said...

நல்லதை மத்திரம் எடுத்துக்கலாமே:)//

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வல்லிசிம்மன்.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் ஒரு காலகட்டத்தில் தங்கள் இனப்பிரிவுகளுக்கு இடையே வைத்திருந்த சட்ட திட்டங்களாகவே மனு நீதி காண்கிறது. அது எப்படி ஒரு மத நூலாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.

சற்றும் பொருந்தாத காலத்துக்கு ஒவ்வாத சட்ட நூலாகவே காண்கிறது. அதிலும் வர்ணபேதங்கள் அதைக்கற்பிப்பதையும் அதை மட்டுமே பேசவும் செய்கிறது நூல்.

அது எந்த கடவுளையும் புகழவில்லை. இலக்கியமாகவும் தெரியவில்லை.

Just a Barbaric Law book.

நல்ல விஷயங்களை மறுவாசிப்பில் தேடுகிறேன். மைக்ராஸ்கோப்பில் வைத்து பார்த்தால் நல்ல விஷயங்கள் தெரியும் என்று நினைக்கிறேன்.

அல்லது என்பார்வைக் கோளாறாகவும் இருக்கலாம்.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோவி.கண்ணன்.

---

டிபிசிடி அவர்களே படித்தவரை நல்ல விஷயங்கள் அதிகம் கண்ணில் படவில்லை. படிக்காத சேப்டர்களில் ஏதேனும் நல்ல விஷயங்கள் இருக்கலாமோ :)

மாணவப் பருவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியாக சொல்லும் சில கட்டுப்பாடுகள் நல்லவையாய்த் தெரிந்தன. ஆனால் அவை கூட தற்காலத்திற்கு பொருந்தி வராதவை. :)

சமூகம் சட்டம் என்று பேசும் போது ஒவ்வொருவருக்கும் நூல் வைத்துள்ள அளவுகோல்கள்.. "சட்டம் என்பது யாவருக்கும் பொது" என்ற அடிப்படையை கேள்வி கேட்கிறது.

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மனு,வேதங்கள் உண்மையான மொழி பெயர்ப்புக்களுடன் படிக்க ஆரம்பித்து விட்டோம்.இனி அரசர் ஆடையுடன் இல்லை,அம்மணமாகத்தான் இருக்கிறார் என்ற உண்மை உலகறியத் தெரியப் போகிறது.
இந்த மனுவை படிக்கும் பெண்கள் இந்துத்துவ வாதிகளின் முகத்தில் காரித்துப்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
கீதையில் வரும் பெண் இழிவுகளைப் பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்.
ராமனைத் தெரிந்து கொள்ள அசுவமேத யாகம் பற்றிய உண்மையான் மொழி பெயர்ப்பைப்
படிக்க வேண்டும்.அசிங்கத்தின் சிகரங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி தமிழன்.

பொய்மை சாத்திரங்கள் அறியா மொழியில் மந்திரமென்று கூறி மறைபொருளாய் இருந்த காலம் போனது.
பொருளறியுங்கால் அவை இழிந்து பல்லிளி்க்கின்றன.

மறை பொருளாய் இருப்பதுதான் வேத மறை போலும்.

படித்து பார்த்து மரை கழண்டதுதான் மிச்சம் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆங்கில பதிப்பை படித்து முடித்தாயிற்று.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்."
என்ற உயர்ந்த கருத்து இந்நூலில் எங்கும் இல்லை.

ஒப்ப முடியவில்லை.

தமிழ்க்கடவுள் முருகனை இறைவனாக கொள்ளும் என்னை இந்த நூல் நாத்திகனாய் மாற்றிவிடும் போல் உள்ளது.

நான் படித்த நாத்திக நூல்களும் செய்யாத சாதனை இது.

ஆத்திகனாய் தொடர சமஸ்கிருத நூல்களின் பொருளை தேடி உணராமல் இருத்தலே நலம் போலும்.

அல்லன விலக்கி நல்லன நாடுதலே நலம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

உங்களோட பதிவுப் படி உலகம் இருட்ட இருந்து அதுல இருந்து (ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம்)

என்னோட நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைசிடிச்சி......

என்ன முழிக்கிறீங்க !
வேற ஒண்ணும் இல்லை
முட்டைல இருந்து கோழி வந்துச்சா
இல்ல
கோழில இருந்து முட்டை வந்துச்சான்னு தான்...........
இப்போ முட்டைல இருந்து கோழி மட்டும் இல்ல உலகமும் வரும்னு தெரிஞ்சுப் போச்சி.

ஐய்ய்யோ !ஐய்ய்யோ !

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இறை அடிமை அவர்களே

முட்டையிலிருந்து தோன்றியதுதான் உலகம்.
-----------

துவக்கத்தில் அடர்த்தியான கோளமாக இருந்த பிரபஞ்சம் வெடித்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

- பிக் பாங் தியரி.

அறிவியல் படி கோள்கள் விண்மீன்கள் யாவும் உருண்டை வடிவின. அவற்றின் பாதைகள் முட்டை வடிவ நீள் வட்ட பாதைகள்.

-----------
உலகின் முதல் உயிரினம், ஒரு செல் உயிரினம். முட்டைவடிவில் தோன்றியது. அது முட்டை வடிவ நியூக்ளியஸை கொண்டிருந்தது. செல் பிரிதல் நிகழ்வில் அது பல்கிப் பெருகி பல செல் உயிரினங்களாக பரிணமித்தது.

- பரிணாம அறிவியல்.
(Evolution Theory)

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நான் மனு ஸ்மிரிதி படித்தது கிடையாது.
மூத்தோர்,பெரியவர் வார்த்தைகளை மதிக்க வேண்டும்.

பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
குழந்தைகள் காப்பாற்றப்படவேண்டும்.
இவ்வளவுதான். இந்த கருத்துகள் எங்கே இருந்தாலும் அதை மதிப்பதில் தவறில்லை என்றே சொன்னேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வல்லி சிம்ஹன்.

"எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு."

அல்லவை விடுத்து நல்லவை ஏற்பது அறிவு.

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒரிஜினல் மனு ஸ்மிர்தி யை படிக்க டவுன் லோடு செய்ய இங்கே அழுத்துங்க

http://www.esnips.com/web/anuradha202000?docsPage=1#files

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி "Anonymous Avargale" for the link.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.
//

அடிச்சு சொல்லுறேன் கண்டிப்பா கோழியும், முயலும்தான் முதல்ல படைக்கப்பட்டிருக்கும்... அது தான் ரெம்ப டேஸ்டா இருக்கு... ஹீ... ஹீ...

//
பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.
//
என்னது நாட்டுக்கோழி சாப்பிடக்கூடாதா... அப்ப அந்த காலத்திலயே பிராய்லர் கோழி இருந்துச்சா... இருந்தாலும் இவய்ங்கெல்லாம் பாவமப்பா நட்டுக்கோழி சாப்பிடாம உசிரோட இருக்குறது நடக்குற காரியமா???

-------------------------------------------------------------------------------------------------------------
said...
This comment has been removed by the author.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

முழு மனுஸ்மிருதியையும் சென்னைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடுங்களேன், ஒரு இலக்கியமாகவும் ஆகிப்போகும்! அதையே கானாப் பாட்டாகவும் ஒலிப்பதியலாம். பிச்சுக்கிட்டு போவும்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

படிக்க படிக்க இப்படியும் இருக்கா மனு ஸ்மிருதி யில் என்று தோனுகிறது ஐய்யா? என்னுடைய இந்து நண்பர் இது எல்லாம் சும்மா எழுதுகிறார்கள் என்று சொல்கிறார். அவருக்கு என்ன சொல்லி புரிய வைப்பது?

அசலம் ஒன்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்

//அடிச்சு சொல்லுறேன் கண்டிப்பா கோழியும், முயலும்தான் முதல்ல படைக்கப்பட்டிருக்கும்... அது தான் ரெம்ப டேஸ்டா இருக்கு... ஹீ... ஹீ...
//

என்ன என்னவெல்லாம் படைக்கலாம்ன்றது வேதத்தில இருக்கு. ஸ்மிருதி வேதப்படி நடக்கணும்னு சொல்லுது.

அப்புறம் நாட்டுக்கோழின்னு சொன்னா கண்டதையும் சாப்பிட்டு வளர்கிற கோழி. அசுத்தங்களை உண்ணாத நல்ல கோழியே பலியிட சிறந்தது.

பிராய்லர் கோழியா...

சிக்கன் 65 இருந்துச்சான்னு கேட்பீங்க போல.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சுந்தரவடிவேல்

//முழு மனுஸ்மிருதியையும் சென்னைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடுங்களேன், ஒரு இலக்கியமாகவும் ஆகிப்போகும்! அதையே கானாப் பாட்டாகவும் ஒலிப்பதியலாம். பிச்சுக்கிட்டு போவும்!
//

தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டிய நல்ல நூல்கள் எவ்வளவோ இருக்கின்றன. மனு ஸ்மிருதி எல்லாம் தமிழில் தேவையற்றது.

அதிலுள்ள உண்மையான அர்த்தங்கள் தெரிந்ததால்தான் சனாதனவாதிகளே அதை மொழி பெயர்த்து தமிழில் வெளியிடவில்லை.

பொருள் புரியாதவையெல்லாம் புனிதமாகி விடுகின்றன. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.

-------------------------------------------------------------------------------------------------------------