Monday, February 25, 2008

கோணிக்குள் என்ன இருக்கிறது.

"தோ. பார்றா. ஒரு கோணி.".

"அண்ணாத்தை இந்த கோணிக்குள்ள இன்னா கீது."

"நல்ல கிரெளடு இருக்கிற செண்ட்ரல் ஸ்டேஷன்ல வாசல்ல இந்த கோணியை விட்டுட்டு யாரு போயிருப்பாங்க."

"ஏதாவது கிராமத்து டிக்கட் கோணியை வச்சுட்டு எங்கயாவது டீ சாப்பிட போயிருக்கும். வா அண்ணாத்தை நாம போவலாம்."

அந்த இரண்டு போர்ட்டர்களும் அங்கிருந்து அகன்றார்கள்.

செண்ட்ரல் ரயில்வே நிலையத்தின் மாலை நேரம். அந்த கோணி கவனிப்பாரற்றுக் கிடந்தது.

-----------

அரை மணி நேரம் கழித்து...

"அண்ணே இந்த கோணி இங்கயே இருக்கு பாருண்ணே."

"இத இங்க வச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலையே."

"திறந்து பார்ப்பமா அண்ணே."

"அட. இவனே ஏதாச்சும் ஏடா கூடமா இருக்கப் போதுடா."

அந்த சணல் கோணி ஏதாலோ நிறைந்து கட்டப்பட்டு துருத்தி கொண்டிருந்தது.

"போலீஸ்ல சொல்லுவமா.".

----------

"சார் இந்த கோணிதான். சார். பாம் ஏதாச்சும் இருக்குமா சார்"

"யாரும் கிட்ட போகாதீங்க. அலர்ட்."

"யோவ் கான்ஸ்டபிள். கிரவுட் இந்த பக்கம் வராம பாத்துக்கய்யா."

அதற்குள் மக்களுக்கு கோணியில் பாம் இருக்கும் செய்தி பரவியது. எல்லோரும் அதை ஒரு அச்சத்தோடு பார்த்தார்கள். கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணியை பார்ப்பதற்கு அதிக கிரவுட் சேர்ந்தது.

"சார். ஒரு வேளை அந்த கோணியில பாம் இல்லைன்னா."

"யோவ். இப்படி அனாமத்தா ஒரு கோணி. அதுவும் சரக்கு குடோன் பக்கத்துல கூட இல்லாம, இப்படி ஜனங்க நடமாடுற இடத்துல இப்படி தனியா இருக்குன்னா... ஏதாச்சும் இருக்கும்யா."

"யாராச்சும் தெரியாம போட்டிருந்தா. எவ்வளவு கிராமத்து ஆளுங்க கோணியோட வாராங்க போறாங்க."

"ஏன்யா இது பப்ளிக் ப்ளேஸ். இந்த இடத்துல இப்படி ஒரு கோணியை கொண்டாந்து போட்டுட்டு போயிருக்குன்னா கட்டாயம் அதுக்குள்ள விவகாரமா பாம் ஏதாவது இருக்கலாம்."

"ஆர்.பி.எஃப். பாம் ஸ்குவாடுக்கு சொல்லியாச்சு. சார்."

-------

மக்கள் பய பீதியோடு அந்த கோணியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கோணி. ஒரு அழுக்கு சணல் கோணி.

எல்லோரிடமும் அதைப் பற்றியே பேச்சு.

இரண்டொரு நிருபர்கள் எட்டி பார்த்தார்கள். செய்திகளை முந்தித் தரும் சேனல் ஒன்றும்.

செய்தி கசியத் துவங்கியது. பதட்டம் நிலவியது. சிலர் பயத்தில் ரயில் நிலையத்தை விட்டு ஓடத் துவங்கினர்.

மோப்ப நாய்கள் வந்தன.

மெட்டல் டிடக்டர்களோடு இருவர். மெட்டல் டிடக்டர் வைத்துப் பார்த்தனர்.

சுற்றியிருந்தவர்கள் நாடித் துடிப்பு எகிறியது. மெட்டல் டிடக்டரில் எதுவும் தெரியவில்லை.

அந்த போலீஸ்காரர் வேர்த்து வழியும் தன் நெற்றியை துடைத்துக் கொண்டு கோணியைத் திறந்தார் படு ஜாக்கிரதையாக.

"சார். எருமட்டை சார்,"

"என்னது."

"பசுஞ்சாண எருமட்டை சார்." அந்த கோணி முழுதும் எருமட்டைகள் வட்டவட்டமாக...

எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.

"ஒரு ஒண்ணுமில்லாத கோணியை இந்த அளவுக்கு பில்ட் அப் கொடுத்து விட்டீங்களேய்யா."

"கோணி. கோணிக்குள்ள காய்ஞ்சுகோன எருமட்டை சாணி. இந்த விஷயத்தை ஏணி வெச்சு ஏத்திவிட்டுட்டீங்களேய்யா."

"நான் அப்பவே சொன்னேன் இது ஒரு சாதாரண கோணிதான்னு."

"ஆமாய்யா இப்ப சொல்லுங்க. பப்ளிக் ப்ளேஸ்ல இதோ கோணி... அதோ கோணின்னு கிளப்பிவிட்டுட்டு.... எவனோ போணியாகாத கோணியை இங்க வந்து போட்டுட்டு போயிருக்கான்.. கண்டுக்காம போவீங்களா."

அங்கு சகஜநிலை திரும்பியது.

"செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல அதுவும் நிறைய பப்ளிக் நடமாடுற எடத்துல இந்த மாதிரி கோணியெல்லாம். இனிமே கோணியை ரயில்வே ஸ்டேஷன் மாதிரி பப்ளிக் பிளேஸ்ல கொண்டு வரவே தடை விதிக்கணும்." ஒருவர் கருத்து தெரிவித்தார். இன்னொருவர் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தார்.

18 comments:

said...

:-))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல டைமிங் காமெடி :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஐயோ...ஐயோ...

ஒரு கோணிக்கு இந்த பாடா..

****

எருவட்டை என்றச் சொல்லுவார்கள்..

அது வராட்டி/வறட்டி என்றுச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்கல்... As usual :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி துளசிகோபால், தமிழ்பிரியன், TBCD மற்றும் வெட்டிப்பயல்.

TBCD எருவட்டை/வராட்டி/வறட்டி எல்லாம் சரியே.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உச்சரிப்பு "எரமட்டை" என்பது.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:-))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

எழுத்துப்பிழை இல்லையே? கண்டிப்பாக "கோணி" தானே?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி..
எழுத்துப்பிழையோ கருத்துப்பிழையோ ஏதுமில்லை. ஒரு சணல் மூட்டை பற்றிய சிறுகதை. அவ்வளவே.
நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Innaame nallaa irummee...
Any Spelling mistake in your title.

I didn't expect this kind of Dung...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணியை பார்ப்பதற்கு அதிக கிரவுட் சேர்ந்தது.
//

இது அரை பிளேடு டச்... :)))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க புபட்டியன்

கோணியை கண்டுக்காம விட்டுருக்கலாம். தேவையில்லாம கண்டுக்கிட்டு இப்ப பாருங்க செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல கோணியே வரக்கூடாதுன்றாங்க.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அங்கதம்ணு சொல்றாங்களே இதானன அது?

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சிறில் அலெக்ஸ்

//அங்கதம்ணு சொல்றாங்களே இதானன அது?

:)//

அப்படித்தானுங்க நினைக்கிறேன் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல

சூப்பரு..;))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோபிநாத் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட நம்ம ஷங்கர் சும்மா தான இருக்காரு அவரை கோணிக்குள் நுழைக்க வேண்டியது தான... கோணி கேஸ்க்குள்னு சொல்ல வந்தேன்பா...

உண்மையில் எழுத்துப்பிழைகளை நீக்கிவிட்டுப்படித்ததில் வயிறு முட்ட சிரித்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... நல்ல வேளை ஆபிசில் இதை படிக்கவில்லை...!!

//
"தோ. பார்றா. ஒரு கோணி.".

"அண்ணாத்தை இந்த கோணிக்குள்ள இன்னா கீது."
//

இதுல இருக்கிற எழுத்துப்பிழையை நீக்கிட்டுப் படிச்சேன்... கெட்ட காமடி!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்..

//அட நம்ம ஷங்கர் சும்மா தான இருக்காரு அவரை கோணிக்குள் நுழைக்க வேண்டியது தான... கோணி கேஸ்க்குள்னு சொல்ல வந்தேன்பா...//

இந்த கதை நடந்தப்ப ஷங்கர் அமெரிக்கா போயிட்டாரு. அதனாலதான் இந்த கேஸ்ல எண்டரி கொடுக்கலை. :)

அப்புறமா கதையில எழுத்துப்பிழை எதுவும் இல்லைங்கோ. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
அப்புறமா கதையில எழுத்துப்பிழை எதுவும் இல்லைங்கோ. :)
//

இதை எங்க வீட்டுல கட்டைவிரலை சூப்பிக்கிட்டு தூங்கிட்டிறுக்குற 6 மாத பாப்பா கிட்ட சொல்லிப்பாத்தேன் நம்பவே மாட்டேன்கிறது...!!! நீ நம்பிட்டையா?? னு என்னை பார்த்து கேள்வி வேற(பாப்பா தூக்கத்துல இருந்ததால அடி உதையிலிருந்து தப்பிச்சேன்)!!

ச்சே!! இந்த நேரம் பார்த்தா ஷங்கர் அமேரிக்கா போகனும். :-(

ஷங்கரோடதை கோணிக்குள் நுழைத்திருந்தால் கதையில அனல் தெரித்திருக்கும்ல!!!

ஏய்... அ.பி... எதுக்குப்பா கல்லை எல்லாம் கையில எடுக்குற... நான் ஷங்கரோட அறிவை கோணி கேஸ்க்குள் நுழைப்பதை பத்தித்தான்பா பேசிக்கிட்டிருக்கிறேன்...!! இந்த பசங்களே இப்படித்தான் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடுறானுக :-))

-------------------------------------------------------------------------------------------------------------