Monday, February 04, 2008

எனது தற்கொலை பற்றிய தகவல்...

அன்புள்ள நட்புக்கு

இன்றைய தினம் நான் மரணிக்கவிருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்துணை பேருக்கு தனது மரணத்தை பிறருக்கு அறிவித்து விட்டு மரணிக்கும் பேறு கிடைக்கும் என்று தெரியவில்லை. சொல்லி விட்டு விடைபெறும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.

ஆம். நான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.

அதிர்ச்சி வேண்டாம். பிறப்பு போல் இறப்பும் இந்த புவியில் மிக சகஜமானதுதான்.

என்ன இறப்பை எல்லோரும் விரும்புவதில்லை. ஆனால் நான் விரும்புகிறேன்.

வாழ்வில் நான் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன். சுகங்கள் சோகங்கள் அனைத்தையும்.

சோகங்கள் வந்தபோதும் சில பற்றுக்கோடுகள் இருந்ததால் இதற்குமுன் எளிதில் அதை கடந்து வந்திருக்கிறேன்.

இந்த தருணத்தில் எனது பற்றுக்கோடுகள் அனைத்தும் உடைந்து விட்டதாய் உணருகிறேன்.

எனது வாழ்வின் மகிழ்ச்சிகள் தொலைந்து போயுள்ளன. எதுவுமே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.

எத்தருணத்தில் இது நிகழ்ந்தது என்பதை நான் அறிவேன். அது எனது வாழ்வின் சோகம்.

இன்று என்னைச் சுற்றி தனிமை மட்டும் மிஞ்சியிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் இருந்தாலும் தனிமையை மட்டுமே உணர்கிறேன். அது மிக கொடுமையாக இருக்கிறது.

இருத்தலின் இறத்தல் நன்று என்று உணர்கிறேன்.

இனி எதுவும் எனது முடிவை மாற்ற முடியாது என்ற நிலையில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.

இன்றைய தினம் மாலை 6 மணியளவில் இவ்வுலகை துறக்கிறேன். நான் யார் என்பதை அறிய முயல வேண்டாம். என் மரண செய்தி எட்டும் போது நான் யார் என்பது தெரிய வரும்.

சொல்லாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால்தான் இந்த மின்னஞ்சல்.

போகிறேன் எனது மரணத்தில் வாழ்வு முழுமையடைந்தது என்ற மகிழ்வுடன்.

---பெயர் தெரிவிக்க விரும்பாத நண்பன்.

----------------------------------------------------------------------------------


திகைப்படைந்திருந்த ஷங்கரை மாலு உலுப்பினாள். "என்னாச்சு".

"நீயே படி." படித்தவள் தானும் அதிர்ச்சியானாள். "இது.. இது..".

"யார்னு தெரியலை... மெயில் ஐடி abcdef1234@gmail.com. னு இருக்கு. இந்த மெயில் அனுப்பறதுக்காக புதுசா ஒரு மெயில் ஐடி திறந்திருக்கலாம். 'எனது தற்கொலை பற்றிய தகவல்' அப்படின்ற சப்ஜக்டோட வந்திருக்கு."

"மெயில் படிச்சு பார்த்தாலே அதிர்ச்சியாயிருக்கு. போகஸா இருக்குமா."

"இருக்கும். இருக்கணும். ஆனா படிச்சு பார்த்தா அப்படி தோணலை.".

"யாருன்னு கண்டுபிடிச்சு காப்பாத்த முடியாதா..."

"உலகத்தோட எந்த மூலையில இருந்தும் வந்திருக்கலாம். ஐ.பி. அட்ரசை வெச்சு கண்டு பிடிக்கலாம். மணி இப்ப மதியம் 3. நமக்கு இன்னும் மூணு மணிநேரம்தான் இருக்கு."

"to, cc யில இருக்க பெயர்களை வெச்சு. யார் யாருக்கெல்லாம் காமன் ஃபிரெண்டுன்னு பார்த்து கண்டுபிடிக்கலாமா."

"பார்த்துட்டேன். எல்லா மெயிலும் bcc யில போட்டு மெயில் அனுப்பியிருக்கணும்."

ஐ.பி. அட்ரசை கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். மின்னஞ்சல் எக்மோரில் இன்டர்னெட் மையத்திலிருந்து வந்ததாக தெரிந்தது.

அவர்கள் அந்த இணைய மையத்தை அடைந்த போது நேரம் 4:45.

"எக்ஸ்கியூஸ் மி. மதியம் இங்க இருந்து 2:30 மணிக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பினவரை பத்தி தெரிஞ்சுக்க முடியுமா."

"எத்தனையோ பேர் வர்றாங்க. போறாங்க. ஃபுளோட்டிங் பாப்புலேசன் இங்க அதிகம் சார். ஏதாவது அடையாளம் சொல்லுங்க."

"அந்த மெயில்ல நான் தற்கொலை செய்துக்க போகிறேன்னு இருந்தது."

"அந்த பைத்தியமா இருக்கும். மதியம் ஒரு பைத்தியம் சார். பார்த்தா பைத்தியம்னே தெரியாது. பிரெளஸ் செஞ்சிட்டிருந்தது. கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில இருந்து வந்து பிடிச்சுட்டு போனாங்க."

"தாங்ஸ்." அங்கிருந்து கிளம்பினார்கள்.

"ஒரு வேளை அந்த பைத்தியம்தான் மெயில் அனுப்பியிருக்குமோ." மாலு.

"அப்படித்தான் தோணுது. ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சுடலாம்."


-----------------

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை.

தலைமை மருத்துவரின் முன் அமர்ந்திருந்தனர் மாலுவும் ஷங்கரும்.

"மிஸ்டர் ஷங்கர். உங்களுக்கு வந்த மெயிலை அனுப்பியது கதிரேசனேதான்."

"கதிரேசன்."

"எஸ். அவர் இங்க இருக்க ஒரு பைத்தியம். மதியம் தப்பிப்போய் இன்டர்நெட்ல இருந்து மெயில் அனுப்பியிருக்காரு. எனக்கும் மெயில் வந்து இருக்கு."

"ஓ."

"கவலைப்படாதீங்க அவரைப் பிடிச்சிட்டோம். இனி பயமில்லை."

"தாங்ஸ் டாக்டர். ஆனா அவர் ஏன் இப்படி."

"அவர் ஒரு மென்பொறியாளர். டைவர்ஸீ. அவரது மனைவி பிரிஞ்சு போனது அவரை பெரிய அளவுல பாதிச்சு, அந்த அதிர்ச்சிகளால அவரது மனநிலை பாதிச்சுருக்கு. தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்து மத்தவங்க காப்பாத்தியிருக்காங்க. ஒரு கட்டத்துல பேசறதையே நிறுத்தி மரம் மாதிரி ஆயிட்டார். அவரால யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனா பேசுறதை நிறுத்தி தன்னையே மறந்திட்ட அவரை குணப்படுத்தறதுக்காக உறவினர்களும் நண்பர்களுமா இங்க சேர்த்திருக்காங்க. அவரோட ரெக்கார்ட்ஸ் படி இன்னைக்கு அவரோட திருமண நாள். தப்பிச்சு போனவரை கஷ்டப்பட்டு கொண்டு வந்து செடடிவ் கொடுத்து படுக்க வெச்சிருக்கோம். இனி பிரச்சனையில்லை."

"எனக்கு எப்படி அவர்கிட்ட இருந்து மெயில்."

"எங்க ரெக்கார்ட்ஸ் படி அவருக்கு துப்பறியும் கதைகள், நாவல்கள் பிடிக்கும். உங்க கதைகளை அவர் படிச்சிருக்கலாம்."

"நல்லது டாக்டர். ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹிம்."

தடால் என்ற சத்தம் கேட்டது. கூச்சல் குழப்பங்கள். மூவருமாக வெளியே எட்டி பார்த்தனர்.

"டாக்டர். கதிரேசன் ஐந்தாவது மாடியில இருந்து குதிச்சிட்டார்." நர்ஸ் அலறினாள்.

மூவரும் கீழிறங்கி ஓடினார்கள்.

அங்கு கதிரேசன் இரத்த வெள்ளத்தின் நடுவே பிணமாக.....

ஷங்கர் தனது வாட்சை பார்த்தான். நேரம் மாலை 6:00.


--------------------------

19 comments:

said...

ஷங்கர், மாலு சீரிஸ்ல கொஞ்சம் சீரியசா ஒரு கதைய ட்ரை பண்ணுவோம்னு பார்த்தா படு சீரியஸ்ஸா வந்திருச்சு.

இனி இந்த சீரியஸ்ஸை வழக்கம் போல லைட்டாவே தொடர்வோம்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தமிழ்மணத்தில் தலைப்பை பார்த்துட்டு பதற்றத்தோடு வந்தேன். பதிவை படிச்சிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன். கூடவே கொஞ்சம் வருத்தமும் தான். (கொஞ்ச காலத்துக்கு நண்பர்களிடம் பேசுறதுக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயம் கிடைச்சிருக்கும். அது கெட்டு போயிடுச்சே......ச்சும்மா தமாஷ்!!!)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நான் தான் ஏதாவது ட்விஸ்டை மிஸ் பண்ணிட்டேனா? நிஜமாகவே 2-3 முறை படிச்சு பாத்தேனே...-------------------------------------------------------------------------------------------------------------
said...

Neat!!! :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சாய் ராம்.

சீரியசான கதைன்றதாலதான் இந்த தலைப்பு.

அப்புறமா நீங்க வருத்தமெல்லாம் படவேண்டாம். நீங்க உங்க நண்பர்கள் கிட்ட பேசறதுக்கு சுவாரசியமான அந்த விஷயம் கிடைக்கிறதுக்கு இன்னும் ஒரு ஐம்பது வருசம் ஆகும். :)

--------------

ஸ்ரீதர் நாராயணன்...

கதையில ட்விஸ்ட் எதுவுமில்லைங்க. ஒரு கடிதம். ஒரு தற்கொலை.

தற்கொலை கதையில் வந்தால் கூட வருத்தமாயிருக்கிறது. ஆனால் கதைதானே.

------------------------------------------------------------------------------------------------------------------------------
said...

:(

ஒண்ணும் புரியலை....-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\ஷங்கர், மாலு சீரிஸ்ல கொஞ்சம் சீரியசா ஒரு கதைய ட்ரை பண்ணுவோம்னு பார்த்தா படு சீரியஸ்ஸா வந்திருச்சு.

இனி இந்த சீரியஸ்ஸை வழக்கம் போல லைட்டாவே தொடர்வோம்.\\

தல

நல்ல வேலை பின்னூட்டம் போட்டிங்க..;)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

கதையா????

அப்பச் சரி:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//CVR said...
Neat!!! :-)//

நன்றி CVR.

------------

//இலவசக்கொத்தனார் said...
:(

ஒண்ணும் புரியலை....//


கொத்தனார் நீங்க நச்சுனு எழுதின கதையில ஒருத்தன் வெறுமனே கடிதத்தை படிச்சு அழறான்.

இவன் மொத்த சத்தத்தையும் மொத்தமா தொலைச்சுட்டு குதிச்சுடறான். அவ்வளவுதான்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத் said...
//தல

நல்ல வேலை பின்னூட்டம் போட்டிங்க..;)))//

ஆமாங்க கோபிநாத். கதையை எழுதிட்டு திரும்பி படிச்சு பார்த்தா ஒரு பின்குறிப்பு போட்டே ஆகணும்னு தோணுச்சு. :))


-------------

துளசி கோபால் said...
//கதையா????

அப்பச் சரி:-)
//

வாங்க டீச்சர். கதைதான் :)

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------
said...

கதிரேசனை காப்பாற்றி இருக்க கூடாதா ?-------------------------------------------------------------------------------------------------------------
said...

கதிரேசனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும், அவரைக் காப்பாற்றாத சங்கருக்கு எனது கடும் கண்டனங்கள். இது போன்ற செய்திகளை பதிவர்களுக்கு கொணரும் உமது சேவை தொடரட்டும்..

அப்புறம் கதையில் ட்விஸ்ட் இல்லை என்பது உண்மைதான்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி..
ம்.. என்ன பண்றது. நாட்டுல நிறைய கதிரேசன்கள் இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

-----------

வாங்க புபட்டியன்..

அனுதாபத்துக்கு நன்றி. கண்டுபிடித்தும் கதிரேசனை காப்பாற்ற முடியாத குற்ற உணர்வு ஷங்கருக்கு இருக்கலாம்.

சேவை தொடர வாழ்த்தியமைக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தாங்கள் கேட்டதற்கிணங்க எனக்குப் பிடித்த என் பதிவுகள் போட்டிருக்கிறேன்.
நன்றி-------------------------------------------------------------------------------------------------------------
said...

அங்கை வெட்டி இங்கை வெட்டி கடைசியில தன்னையே வெட்டத்துணிஞ்சாரு அரைபிளேடு:-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லாயிருக்கு.... :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

பதிவுக்கு நன்றி செல்லி அவர்களே.

பிறந்தநாள் வாழ்த்தா... அதுக்கு நாள் இருக்கு. எங்கேயும் நான் என்னுடைய பிறந்த நாளை சொன்னதேயில்லையே :)

வெட்டிக்க எல்லாம் இல்லைங்க. கதைதான் :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பிறந்தநாள் வாழ்த்தா... அதுக்கு நாள் இருக்கு. எங்கேயும் நான் என்னுடைய பிறந்த நாளை சொன்னதேயில்லையே :)//

அச்சச்சோ! துளசிக்கு எழுத வேண்டியதை இங்கே எழுதிட்டேனே,..........!

அரைபிளேடின் கதைகள் வெட்ட வெட்ட பளிச்சிடும் கதைகள்.ஆரம்பத்தில அடப் பாவமே என்று பாத்தா கதையா?,,,,,,,,,
அருமை!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லாயிருக்கு மாமே...-------------------------------------------------------------------------------------------------------------