"ஹாய். பாஸ். வாட்ஸ் அப்?" மாலு ஷங்கரை அழைத்த படியே உள்ளே நுழைந்தாள்.
"மாலு. நாம ரொம்ப ஆங்கிலம் பேசுறோமாம். இது தமிழ் கதையா ஆங்கில கதையான்னு வாசகர்கள் கேள்வி கேட்கிறாங்க. தமிழ்லயே பேசுறயா."
"அப்படியே ஆகட்டும். நாதா. தங்கள் சித்தம் என் பாக்கியம்."
"கொடுமையா இருக்கு. சாதாரணமாவே பேசு.".
"சரி. சரி. ஏதாவது புது கேஸ் வந்து இருக்கா."
"எதுவும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன்னா, நாம கேஸ் நம்ம கிட்ட வரணும்னு நினைக்கிறத விட கேஸை தேடி போறதுதான் பெட்டர்னு நினைக்கிறேன்."
"ஆமா யாரோ ஒரு கொத்தனார் கூட யாரோ லீனாவோ வீணாவோ, அவங்க ஜாக்கெட்டை காணலைன்னு சொல்லியிருந்தார். நாம அந்த கேஸை எடுத்துகிட்டா என்ன பாஸ்."
"இதெல்லாம் ஒரு கேசா. நாம துப்பறியறத ஒரு ஹாபியா ஒரு த்ரில்லுக்காக பண்றோம். அதை சமூகத்துக்கு பயன்படுற மாதிரி பண்ணா என்ன."
"புரியலையே பாஸ்."
"வீ ஆர் க்ரைம் ஃபைட்டர்ஸ். சட்டத்துக்கு தப்பி நடக்கிற காரியங்களை நாம கண்டிக்கனும். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரணும். அமைதியான குற்றங்களில்லாத ஒரு சமூகத்தை படைக்கணும்."
"பாஸ். சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசறீங்களே. இது காமெடி ஸ்டோரி. நியாபகம் இருக்கட்டும்."
"எனஃப் காமெடி. ஆல் ஐ நீட் ஈஸ் ஆக்சன். இன்னிக்கு இந்த சமூகத்தை செல்லரிச்சுக்கிட்டு இருக்க முக்கியமான பிரச்சனை ப்ளூ ஃபிலிம். அதை எடுக்கறவங்களை கண்டு பிடிச்சு சட்டத்து முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கிறோம். இந்த ஆப்பரேஷனுக்கு நான் வெச்சிருக்கிற பெயர் ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."
"வாவ். இண்ட்ரஸ்டிங். ஆனா அவங்களை எப்படி கண்டுபிடிப்பீங்க."
"இங்க பார்த்தியா. இது எல்லாம் ப்ளூ ஃபிலிம் சிடி டிவிடி. இதையெல்லாம் போட்டு பார்த்து...."
"ஓ. இவ்வளவு பில்ட் அப்பும் நீ ப்ளூ ஃபிலிம் பார்க்கறதுக்குத்தானா." கோபப்பட்டாள்.
"அச்சச்சோ. தப்பா புரிஞ்சிகிட்டியே. இதையெல்லாம் போட்டு பார்த்து அதுல வர்ற பங்களா. அதுல வர்ற இண்டீரியர் டிசைன் இதெல்லாம் நோட் பண்ணனும். அப்பதான் இதை எடுத்த பங்களா எதுன்னு தெரியும். நாமளும் ஈஸியா இதை எடுத்துடறவங்கள கண்டுபிடிச்சிடலாம்."
"பரவாயில்லையே ஐடியா நல்லா இருக்கே."
"நான் இந்த பத்து டிவிடியும் ஏற்கனவே பார்த்துட்டேன். இதுல வர்ற பங்களாவை பார்த்தா வளசரவாக்கம் பக்கத்துல இருக்க ஒரு பங்களா மாதிரியே இருக்கு. நாம அதை நோட்டம் விடறோம்."
"ஓ.."
"முதல்ல நீ அந்த பங்களாவுக்குள்ள போற. ஏதாவது ஏடாகூடமா இருந்தா இந்த விசிலை ஊது. அப்ப நான் கரெக்ட் டைமுக்கு வந்து உன்னை காப்பாத்துறேன். அவங்களை கையும் களவுமா பிடிக்கிறோம். இட் ஈஸ் ஆக்சன் டைம்."
"விளையாடறீங்களா. நான் ஒரு பொண்ணு ஏடா கூடமா ஏதாவது ஆயிட்டா."
"சரி. சரி. அப்படின்னா நானே பொம்பளை வேஷத்துல போறேன்.
-------------------------
"பாஸ். பொம்பளை வேஷத்தில அழகா இருக்கீங்க."
"சரி. சரி. நான் உள்ளே போறேன். எதாவதுன்னா விசில் அடிக்கிறேன். நீ போலீசுக்கு போன் போட்டு ரவுண்ட் அப் பண்ணிடு."
"விசிலெல்லாம் பழைய டெக்னிக் பாஸ்."
"அப்ப மொபைல் போன்ல மிஸ்டு கால் கொடுக்கறேன்."
"அப்பவும் மிஸ்டு கால்தானா. அல்பம் பாஸ் நீங்க."
"சரி. சரி" பெண்வேடத்திலிருந்த ஷங்கர் உள்ளே நுழைந்தான்.
"நீதான் ஷீலாவா. உனக்காகத்தான் வெயிட்டிங்." வரவேற்ற நபர் இளம் சொட்டையர். 45 வயது.
"நீங்க". பெண்மை கலந்த குரலில் ஷங்கர்.
"ஐ யம் டாக்டர் பிரகாஷ். இது பீட்டர். உன்னோட கோ ஆர்ட்டிஸ்ட்." பீட்டர் இளித்தான்.
எடுக்கிறது அந்தப்படம். இதுல இந்த தடியன் 'கோ ஆர்ட்டிஸ்ட்.'ஆ. மலையாளப்படங்களில் வருபவனை போல் இருந்தான் அவன்.
"நாம ஷாட்டுக்கு போலாமா ஷீலா."
"என்ன மாதிரி ஷாட்."
"ரேப் சீன். நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணட்டுமா." டாக்டர் பிரகாஷ் நெருங்க..
"சார்." இன்னொரு பெண் குரல் கேட்டது... "நான் ஷீலா." அவள் உள்ளே நுழைந்தாள்.
"அப்ப இது." ஷங்கர் ஆக்சன் டைம் என்பதை உணர்ந்து கொண்டான். கடமையாக ஒரு மிஸ்டு காலை தட்டிவிட்டவன் பாய்ந்தான்...
பிரகாஷின் தாடையில் ஒரு அடி இறங்கியது. அடியா அது இடி.
"ஹா. ஹா. என்னையாடா ரேப் பண்ணுவீங்க. நான் ஆம்பிளைடா." ஷங்கர் சிரித்தான்.
ஷீலா அலறி ஓடி பதுங்கினாள்.
சுதாரித்துக் கொண்ட பீட்டரும் பிரகாஷ்ம் நெருங்கி ஷங்கரை பிடித்தார்கள். கிட்டத்தட்ட ஷங்கர் இருவரிடமும் மாட்டிக் கொள்ள மாலு அதிரடியாக எண்டரி கொடுத்தாள்.
மாலு ஷங்கர் கூட்டணியின் அதிரடி தாக்குதலில் பீட்டரும் டாக்டரும் விழுந்தார்கள்.
"மாலு, நல்ல நேரத்தில வந்து என் கற்பை காப்பாத்தின."
கீழே விழுந்தவர்கள் மலங்க மலங்க பார்த்தார்கள்.
"என்ன பார்க்கறீங்க. நீங்க அந்த மாதிரி படம் எடுக்கறது எனக்கு எப்படி தெரியும்னா. துப்பறியும் சிங்கம் ஷங்கரை என்னன்னு நினைச்சீங்க." ஷங்கர் கர்ஜித்தான்.
"அந்த மாதிரி படமா." அடியின் வலியோடு டாக்டர் முனக.
"எஸ். நீங்க ரேப் சீன் எடுக்கறேன்னு சொன்னதை நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். மாலு போலீஸ்க்கு போன் போடு. இவன்களை பிடிச்சி கொடுக்கலாம்."
அப்போதுதான் அந்த ஆசாமி உள்ளே ஓடி வந்தான். "சார். டைரக்டர் சார்..."
இன்னொரு வில்லன். மாலுவும் ஷங்கரும் அலர்ட்டானார்கள். "யாருய்யா நீ.."
"நான் புரொடக்சன் மேனேஜர்."
"அடப்பாவிகளா. புரோடக்சன் மேனேஜர் வச்சு அந்த மாதிரி படம் எடுக்கற அளவுக்கு ஆயிடுச்சா."
"என்னய்யா சொல்றீங்க. அங்க மொத்த யூனிட்டும் டைரக்டருக்காக காத்துக்கிட்டு இருக்கு. "தங்கை" சீரியலுக்காக....."
"தங்கை சீரியலா... இரண்டு வருசமா ஓடுதே அந்த மெகாசீரியலா.... இந்த ஆளு ரேப் அது இதுன்னானே" ஷங்கர் குளறினான்.
"ஆமாய்யா. ஹீரோயினோட அஞ்சாவது தங்கச்சி பத்து வருஷம் ஹாஸ்டல்ல தங்கி படிச்சு பெரிய பொண்ணாகி அக்காவை பாக்க வருது. வர்ற வழியில வில்லன் மயக்கி கொண்டு போய் அவளை கற்பழிச்சிடுறான். அந்த ஷாட்டை இன்னைக்கு புது ஆர்டிஸ்ட்டை வெச்சி எடுக்கறோம்."
"யோவ் புரொடக்சன். அந்த ஆளுகிட்ட என்னய்யா கதை பேசிக்கிட்டு. முதல்ல என்னை தூக்குய்யா." டைரக்டர் பிரகாஷ்.
"நீங்க டாக்டர் பிரகாஷ்? டீவி சீரியல்..."
"ஏன்யா. டாக்டருக்கு படிச்சா டிவி சீரியல் டைரக்ட் பண்ண கூடாதா. யோவ். புரொடக்சன். போலீசுக்கு போன் போடுய்யா... இவங்களை...."
"போலீசா." ஷங்கர் மாலுவை பார்த்தான்.
மாலு ஷங்கரை பார்க்க இருவருமாக தப்பி வெளியே ஓடினர்.
ஷங்கர் பைக்கை ஸ்டார்செய்ய தப்பி வந்து சேர்ந்தார்கள்.
இந்த தடவை ஷங்கருக்கு மாலுவிடம் இருந்து தேவைக்கு அதிகமாகவே கிடைத்தது எனர்ஜி பூஸ்ட் கன்னத்தில்.
வீங்கிய கன்னத்தை தடவியபடி ஷங்கர் "இட் ஈஸ் ஆல் இன் த கேம்." என்றான் சோகமாக.
---------------------------
Wednesday, February 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
"பாஸ். ரொம்ப வலிக்குதா.."
"ஆமா. ரொம்ப....."
"சாரி. கோபத்தில அடிச்சிட்டேன்."
"பரவாயில்லை."
"நான் வேணும்னா ஒரு எனர்ஜி பூஸ்ட் கன்னத்தில தரட்டுமா.."
"வேண்டாம் இதுக்கு மேல கன்னம் தாங்காது... வேணும்னா ஒண்ணு பண்ணறியா."
"சொல்லுங்க...."
"பின்னூட்ட கயமை பண்ணிட்டு போறியா..."
-------------------------------------------------------------------------------------------------------------
"ஆமா. பாஸ். யாருமே பின்னூட்டம் போடலை."
'அதுதான் ரொம்ப வலிக்குது."
"பின்ன நீங்க செஞ்சிருக்கிற வேலைக்கு எல்லாரும் வந்து உங்களை பாராட்டுவாங்களாக்கும்."
"மாலு.. ப்ளீஸ்."
"சரி ரொம்ப அழாதீங்க. செஞ்சித் தொலைக்கிறேன்."
இப்படியாக இரண்டாவது முறையாக கயமை செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------
இதுக்கு வீணாவின் ஜாக்கெட்டையே தேடி இருக்கலாம்...
-------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு கயமைப் பண்ணவே தெரியலை....என் பதிவுப் படிச்சீங்களே..அப்பறமும்மா பின்னுட்டம் வரலை...(?!!) :D
-------------------------------------------------------------------------------------------------------------
"பாஸ். பார்த்தீங்களா. கொத்தனார் வந்து நாம ஜாக்கெட் கேசையே எடுத்து இருக்கலாம்னு சொல்லிட்டு போறாரு."
"ம்.ம்... நாம இப்ப இருக்கற நிலைமைக்கு ஜாக்கெட் ஊக்கு காணாம போச்சுன்னு யாராவது கேஸ் கொடுத்தா கூட எடுத்துக்கலாம்."
"ஆமா. பாஸ். என்னோட ஜாக்கெட் ஊக்கு கூட காணோம்."
"ஹி... ஹி... நான்தான் எடுத்து வெச்சிருக்கேன். இன்னைக்கு காதலர் தினம் இல்லையா. காதலன் படம் பிரபுதேவா மாதிரி... காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே..."
"ஓ... சோ ஸ்வீட் ஆஃப் யூ."
"ஹி... ஹி..."
"பாருங்க TBCD வந்து உங்களுக்கு கயமை பண்ணவே தெரியலைன்னு சொல்லிட்டு போறாரு."
"அவரு பதிவை இப்பதான் இரண்டாவது தடவையா திரும்ப போய் படிச்சுட்டு வந்தேன். மூணாவதா இருக்க ஸ்மைலி யாரு போட்டதுன்னு நினைக்கிறே."
"ஓ. அது நீங்கதானா அது. இரண்டு பின்னூட்டம் நான் போட்டா மூணாவதா ஒண்ணை சொல்லாம கொள்ளாம நீங்களே அனானியா போட்டுப்பீங்களா."
"அது மட்டுமில்லை. அப்புறம் 'நன்றி அனானி அவர்களே'ன்னு இன்னொரு பின்னூட்டம் போடுவோமில்லை. ஹி.. ஹி...."
-------------------------------------------------------------------------------------------------------------
வாசகர்களே...
இந்த பதிவின் கடவுச்சொல் ஷங்கருக்கும் மாலுவுக்கும் தெரியுமென்பதால் அவர்கள் பின்னூட்டப் பெட்டியை கைப்பற்றி ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்கள். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நண்பர் TBCDயார் தெரிவித்தது போல் எனக்கு கயமை செய்யவே வராது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-அன்புடன்
ஆசிரியர்
அரைபிளேடு.
-------------------------------------------------------------------------------------------------------------
ஏன்பா, 1/2 பிளேடு... சங்கர் கொஞ்ச நாளைக்கு முன்னால் VRS வாங்கிட்டதா கேள்விப்பட்டேன்!!
மீண்டும் களத்துல குதிச்சுட்டாரா...??
-------------------------------------------------------------------------------------------------------------
பாராட்டுறேன் உங்கள நிஜமாவே பாராட்டுறேன்,,, பின்னூட்ட கயமையை பப்ளிக்கா இரண்டாவது முறையாகவும் செஞ்சதுக்காக:)))
-------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் தவறிப் போயிடுச்சி...
:) ஏன் அனானியா வரனும்... என்றக் கேள்வி கேட்காமல் பின்னுட்டம் போட்டு விட்டேன்.
பின்னுட்டக் கயமை அனைவரும் அறிந்ததே.
அதை வைத்த அடுத்தவர்களை நோண்டுவது ஒரு சிலர் மட்டுமே..
இப்பச் சரியாப் போச்சா..
உங்க மணம் போல கயமை பண்ணுங்க..
யாரு கேள்வி கேட்கிறார்கள் என்று பார்க்கிறேன்.. :)
-------------------------------------------------------------------------------------------------------------
இதை முழு பிளேடானா நான் , அரை பிளேடை வைத்து, கால் பிளேடை காலி செய்தப் பின்பு போட்டப் பின்னுட்டம்.
-------------------------------------------------------------------------------------------------------------
கருப்பன் அவர்களே..
முழு நேர துப்பறியும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நமது உலகப் புகழ் சி.ஐ.டி. ஷங்கர் அவர்கள் பகுதி நேரமாக தன் துப்பறியும் சேவையை தொடர்கிறார்.
காண்க...
http://araiblade.blogspot.com/2008/01/blog-post_31.html
----------
வாருங்கள் குசும்பரே...
என் செய்வது.
ஒரு கயமையை கூட ஒளித்து மறைத்து செய்யும் வகை அறியாதவன் அய்யா நான்.
நான் செய்வது தவறு என்று என் மனசாட்சி சொன்னமையால் அதனை நேர்மையோடு ஒப்புக் கொண்டு விட்டேன். :)
-------
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி tbcd யாரே...
"மனம் போல் இடுக பின்னூட்டம் கயமையோடு..."
என்று தாங்கள் சொன்ன பின்னும்...
கேட்கவில்லையே பாழும் மனது. என் செய்வேன்..
மற்றவர்கள் கேட்பது இருக்கட்டும்.
இந்த அரைபிளேடை மனசாட்சி பிளேடு "கயமை செய்ய போயிற்றோ கயவனே.." என்று கேள்வி கேட்கிறதே ஐயனே.
இனி கயமையது யான் செய்யேன்.
இது உறுதி. (குறைந்த பட்சம் இப்பதிவிலாவது)
நன்றி.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
இங்கே முக்கால் பிளேடு என்று ஒருவர் வந்துள்ளாரே. யாரிவர்.
நிச்சயம் அரைபிளேடு ஆகிய நானில்லை. கயமையை கழட்டி எறிந்த நான் இப்பெயரில் ஈண்டு வரவில்லை என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்கிறேன்.
என்னிலும் கால் பங்கு மேம்பட்டவரான இவர் முழுமையாய் வந்து அரையை காலாக்க விரும்பினாலும், அல்லது அரிக்கால் பிளேடாக்க விரும்பினாலும்... ஈண்டு வந்த விருந்தினராதலின் இன்னாரை இன்முகம் காட்டி அன்புடன் வரவேற்கிறேன்.
நன்றி. தங்கள் வரவு நல்வரவாகுக முக்கால் பிளேடு ஐயனே.
-------------------------------------------------------------------------------------------------------------
கதையை விட உங்க பின்னூட்ட கயமைகள் நல்ல சுவையாக இருக்கின்றன....
வீணாவின் ஜாக்கெட்டை முதலில் தொலைத்தது வவ்வால் இல்லையா? கொத்தனார் கூட குறிப்பிட்டிருந்தாரே...
இருங்க... இருங்க... இப்ப வவ்வால் வந்து உங்களை பின்னு பின்னப் போறார் பாருங்க...
-------------------------------------------------------------------------------------------------------------
ஆனாலும் ஐகாரஸ் பிரகாஷை நீங்கள் இப்படி கிண்டல் செய்திருக்க கூடாது...பதிவை ஓப்பன் செய்து ஐகாரஸ் பிரகாஷ் பெயருக்கு அருகில் இருக்கும் லைனை பார்க்கவும்...
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி ஸ்ரீதர் நாராயணன்.
இத்துடன் கயமை களைந்தேன். (பதிவு ஏற்கனவே சூடாகி விட்டது. ஓவர் சூடு உடம்புக்கு ஆகாது) :)
ஒன்று மட்டும் தெரிகிறது. வீணாவின் ஜாக்கெட்டை தொலைத்தது வீணா இல்லை :)
-------------------------------------------------------------------------------------------------------------
செந்தழலாரே உங்க ஸ்கிரீன் ரெசலூயூசன் என்ன.
என்னுடைய ஸ்கிரீன் ரெசலூயூசன் கொஞ்சம் அதிகம். எனவே நீங்கள் சொல்ல வருவது திரையில் பிடிபடாவிட்டாலும் பொருளளவில் பிடிபட்டுவிட்டது.
உங்களுடையது 800 X 600 ஆக இருக்கவேண்டும். இந்த ரெசலூயூசன் வைத்திருக்கும் நீரே உமது பார்வைக்கு பொறுப்பு. நானல்ல :)
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த கேஸை கண்டுபிடித்துக் கொடுத்த ஷங்கரை நான் மனமார பாராட்டுகிறேன். இல்லைனா சீரியல்ல ரேப் சீன் வர்ரது எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்ல. இத்தன நாளா நான் சீரியலே பாக்காமைல இருந்திருக்கேன். நன்றி ஷங்கர் இன்னும் இது போன்ற பல கேஸ்களை எடுத்து உங்கள் மக்கள் சேவையை தொடருங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மணத்துல "கடந்த 7 நாட்களில் அதிக பின்னூட்டம் இட்டவர்கள்" லிஸ்ட்ல ஏன் உங்க பேரு அசையாம இருக்குதுனு இப்பதான தெரியுது!!
-------------------------------------------------------------------------------------------------------------
கருப்பன்
உலகெங்கும் சின்னத்திரையில் முதன்முதலாக கற்பழிப்பு காட்சி என்று அறிவிக்காத குறையாக ஒரு சீரியலில் கற்பழிப்பு காட்சி வந்தது. (பாலசந்தர் சீரியல் என்று நியாபகம்.).
அதன் பிறகு தாய்மார்கள் அனுதாபம் பெற சீரியல் டைரக்டர்கள் ரூம்போட்டு விதிவிதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
---
அப்புறமா நம்ம பதிவுல நாமே போடற பின்னூட்டத்தையெல்லாம் தமிழ்மண அதிக பின்னூட்டமிட்டவர்கள் பகுதி திரட்டுறதில்லை.
மற்றவர்கள் பதிவுகளில் இடப்பெற்ற மறுமொழிகளின் எண்ணிக்கையே அங்கு தெரிகிறது :)
-------------------------------------------------------------------------------------------------------------
Coool!!
really enjoyed reading this!
Rock on!! :-)
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி CVR :)
-------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு நரேன் - வைஜெயந்தி கதை படிச்ச மாதிரி இருக்கு..சூப்பர்..
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி ரசிகன். :)
-------------------------------------------------------------------------------------------------------------
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
என் வலைப்பூ மூன்றாம் கோணம் www.moonramkonam.blogspot.com
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment