Tuesday, February 26, 2008

செல்போனில் பெண்ணை படம் பிடித்து

"ஏய். மிஸ்டர். என்னை எதுக்கு போட்டோ எடுத்தீங்க."

"நான் உங்களை போட்டோ எடுக்கலையே."

"பொய். ஒரு அழகான பொண்ணு தனியா போகக் கூடாதே. பின்னாடியே வந்து மொபைல்ல போட்டோ எடுக்கறது. பொறுக்கி."

"மிஸ். வார்த்தைய அளந்து பேசுங்க."

"உனக்கென்ன மரியாதை. கொண்டா அந்த மொபைலை."

அவனிடம் இருந்து அந்த மொபைலை அவள் பறித்தாள். புகைப்பட ஃபோல்டரை திறந்து முதல் படத்தை பார்த்தாள். அவளது படமேதான்.

"மிஸ்டர் இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க."

"நான் உங்களை எடுக்கணும்னு எடுக்கலை. நான் எடுத்த போட்டோவில நீங்க வந்தது தற்செயல்."

"என்ன கதை விடறீங்க."

"மிஸ். மத்த போட்டோக்களையும் பாருங்க. நான் இங்க இருக்கற ஒவ்வொரு புக் ஸ்டாலையும் படம் பிடிச்சிட்டு இருக்கேன். அந்த புக் ஸ்டாலை படம் பிடிச்சப்ப நீங்க அதுல வந்தது யதார்த்தமா வந்ததுதான்."

அவள் மத்த போட்டோக்களை பார்த்தாள். ஒவ்வொரு புத்தக நிலையத்தின் படமும் பதிவாகி இருந்தது. முல்லை பதிப்பகம், மருதம் பதிப்பகம் என..

"மிஸ். இந்த புக் ஃபேர்ல இருக்கிற ஸ்டால்களைத்தான் படம் பிடிச்சிட்டுருக்கேன். உங்களை இல்லை."

"ஆமா.. ஆனா இத்தனை புக் ஸ்டாலையும் படம்பிடிச்சு.. எதுக்கு."

"ஐ அம் ரைட்டிங் பிளாக். தமிழ்ல. இந்த புத்தகக் கண்காட்சியை பத்தி ஒரு ரைட் அப்புக்காக இந்த படங்களை எடுத்தேன்."

"ஓ. ஐ அம் சாரி."

"பரவாயில்லை. வேணுமின்னா நீங்க இருக்கற படத்தை டெலீட் பண்ணிட்டு மொபைலை கொடுங்க."

"இட். ஈஸ் ஓக்கே. இந்தாங்க."

"தாங்ஸ். மிஸ்."

"சத்தம் போட்டு உங்க கையில இருந்து மொபைலை எல்லாம் பிடுங்கி... ஐ அம் ரியல்லி சாரி."

"நோ பிராப்ளம்."

"இஃப் யூ டோண்ட் மைண்ட். நாம ஒரு காபி சாப்பிடலாமா."

முன்பின் தெரியாத தன்னை காபி சாப்பிட அழைக்கும் அவளது தைரியம் அவனுக்கு ஆச்சரியமளித்தது.

"ஓக்கே." இருவரும் அங்கிருந்த கேண்டீனுக்கு சென்றார்கள்.

"மிஸ் உங்க பெயர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா."

"அர்ச்சனா." சிரித்தாள்.

"என் பெயர்.." அவன் ஆரம்பித்தான்.

"கிள்ளி வளவன்." அவள் முடித்தாள்.

"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்."

"வளவன் நான் உங்க பதிவுகள் எல்லாம் படிக்கறதுண்டு. உங்க பதிவுல உங்க புகைப்படம் எல்லாம் பார்த்திருக்கேன்."

"ஓ.."

"நீங்க புக் ஸ்டாலைத்தான் படம் எடுக்கறீங்கன்னு எனக்கு தெரியும். சும்மா கலாய்ச்சேன்."

"நீங்க..."

"நான் உங்க ரசிகை. ஒரு வருடத்துக்கு மேல உங்க பதிவெல்லாம் படிக்கறேன். உங்க பதிவுல முதல் பின்னூட்டம் எப்பவுமே நான் தான் போடுவேன்."

"நீங்க... மாணிக்க மலர்."

"ஆமா. மாணிக்க மலர் அப்படின்ற பெயர்ல உங்களுக்கு பின்னூட்டம் போடுவது நான்தான். நாம மின்னஞ்சல் மூலமா ரொம்பவே பேசியிருக்கிறோம். உங்களைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும். என்னைப் பத்தி எல்லாமே உங்களுக்கும் தெரியும் என்னோட பெயரைத்தவிர.."

"வாவ். உங்களை இப்படி சந்திச்சது ஆச்சரியம்."

"எனக்கும். உங்களை இப்படி புத்தகக் கண்காட்சியில் பார்ப்போம்னு நினைக்கலை. சும்மா கலாய்ச்சேன். சாரி."

அவன் சிரித்தான்.

அவர்களுக்கு இடையே நீண்ட ஒரு மெளனம் நிலவியது.

அவள் அதை உடைத்தாள். "உங்க ரசனைகள் என்னுடைய ரசனைகள் எல்லாமே ஒத்துப் போகுது. எழுத்தையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கிறதா உணர்கிறேன்."

"நானும்." என்றான் அவன்.

அவர்கள் கண்கள் பேசிக்கொண்டிருந்தன.

"காதலை பின்னூட்டத்தில சொல்ல முடியாது. நேர்லதான் சொல்லணும்."

"அப்ப சொல்லிடலாமே."

காதல் அவர்கள் இருவருக்கும் இடையே கயமை செய்து விளையாட துவங்கியது.

28 comments:

said...

கலவரபூமியில் காதல் வாங்கிய கதை கற்பனை கதையென்பதை சொல்லவும் வேண்டுமோ :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

Cute!! :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஐயா அரைபிளேடு, கடைசி ரெண்டு கதைகள் ரொம்பவே சுமார்தான். போன கதையை எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. நமக்குத்தான் புரியலையோன்னு சும்மா இருந்துட்டேன். ஆனா இந்தக் கதையையும் படிச்ச உடனே சொல்லணுமுன்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.

உங்க கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கறேன்!! :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

'சுற்றுச்சூழலில்'....கொஞ்சம் குளிர்ச்சியை வரவழைச்சதுக்கு ஒரு நன்றி.:-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//உங்க கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கறேன்!! :)
//

எல்லாம் அந்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் வந்த வினை. அதான் இப்படி எதிர்பார்ப்பு ஏகத்துக்கு ஏறிகிடக்கு.

//காதல் அவர்கள் இருவருக்கும் இடையே கயமை செய்து விளையாட துவங்கியது.
//

பின்னூட்ட கயமைத்தனம் தெரியும். இது என்ன கயமையோ? :-))-------------------------------------------------------------------------------------------------------------
said...

;)))

\\அவள் அதை உடைத்தாள். "உங்க ரசனைகள் என்னுடைய ரசனைகள் எல்லாமே ஒத்துப் போகுது. எழுத்தையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கிறதா உணர்கிறேன்."\\

தல ஒரு டவுட்டு..ஒரே ரசனை இருந்தால் தான் காதல் பொங்குமா!?-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி CVR

----------

நன்றி இலவசக்கொத்தனார்..

ஒரு விமர்சகனா இந்தக் கதைய பத்தின என்னோட கருத்தும் உங்க கருத்தே :)

இப்பல்லாம் எனக்குள்ள இருக்கற விமர்சகனை கதைய படிக்கவே விடறதில்லை. கொஞ்சம் அந்த விமர்சகனுக்கு சுதந்திரம் கொடுத்தா போதும்னு நினைக்கிறேன். :)

-----------

நன்றி துளசிகோபால் அவர்களே..

சூடாக இருப்பவை யாவும் குளிர்ந்தே ஆக வேண்டும். :)

--------------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்ரீதர் நாராயணன்...

//எல்லாம் அந்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் வந்த வினை. அதான் இப்படி எதிர்பார்ப்பு ஏகத்துக்கு ஏறிகிடக்கு//

நன்றி. :)

//
பின்னூட்ட கயமைத்தனம் தெரியும். இது என்ன கயமையோ? :-))
//

காதல் என்பது மனிதகுலம் தோன்றியதும் முதலில் தோன்றிய கயமை.

இனி இவர்தான் வாழ்க்கைத்துணை / இந்தப் பிறவி எடுத்ததே இன்னாருக்காகத்தான் என்று சொல்லி சுதந்திரமான மனிதனை கட்டிப்போடுவது கயமையன்றி வேறு என்ன :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத்...

//தல ஒரு டவுட்டு..ஒரே ரசனை இருந்தால் தான் காதல் பொங்குமா!?
//

இந்த காதல் இருக்கே அது எதனால வருதுன்னு யாருக்குமே தெரியாது.

அது ஏன் வந்துச்சுன்னு சொல்லப்படுற காரணங்கள் யாவுமே உண்மையில் காரணங்கள் கிடையாது.

ஒத்த ரசனை அப்படின்றத விட பல சமயம் எதிர் ரசனைகள்தான் ஒன்றையொன்று ஈர்க்கும்.

North Pole attracts South pole.

North reflects North And south reflects South.

காரண காரியமின்றி வருவதுதான் காதல்.

ஆனால் காதலை வெளிப்படுத்த காரணம் தேவைப்படுகிறது இல்லையா :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அண்ணா, அது reflects இல்லை, repels!!

இதைச் சொன்னதுனால நான் அறிவுசீவியான்னு எல்லாம் கேட்கக்கூடாது. நான் சீவறது எல்லாம் இருக்கிற கொஞ்சம் முடியைத்தான்!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவசக்கொத்தனார் said...
//அண்ணா, அது reflects இல்லை, repels!!
//

கொத்தனார் நன்றி.

நான் +2 வரைக்கும் தமிழ் மீடியமா.

"வடதுருவம் வடதுருவத்தை விலக்கும்." அப்படின்னு தமிழ்ல படிச்சதை இங்லீபீஸ்ல எழுதி பீட்டர் உடலாம்னு பார்த்தா கப்னு வந்து புடிச்சிட்டீங்க :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹை... இப்படியெல்லாம் உண்மையிலேயே நடந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்??? :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ம்ம்.. கலக்குங்க!-------------------------------------------------------------------------------------------------------------
said...

Nee ara blade-a ara loose-a??-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

பொன்வண்டு

சும்மா ஒரு கற்பனை கதை அவ்வளவுதான். உண்மையில இப்படியெல்லாம் நடக்காது. :)

---------

நன்றி சின்னக்கவுண்டர்.

--------

அனானி..

நான் அரைபிளேடு. முழு loose. போதுமா :)

-------

சிரிப்பை சிந்தி சென்றதற்கு நன்றி வசந்தம் ரவி.

--------------------------------------------------------------------------------------------------------------------
said...

hhahahhahahaha-------------------------------------------------------------------------------------------------------------
said...

அல்ப ஆச ம்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

i love u முதல் பின்னூட்டமா சொல்ல முடியல-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெடிச்சிரிப்புக்கு நன்றி இளா :)

--------

மதி. "அல்ப ஆசை. ம்ம்ம்." என்று தானே சொல்ல வருகிறீர்கள். :)

பங்சுவேஷன் இல்லாட்டி வார்த்தைகள் பஞ்சராயிடுது. :)

-----------------------------------------------------------------------------------------------------------------
said...

மாணிக்க மலர்..

நீயா...

வந்துட்டியா ? நம்ப முடியலையேம்மா... நம்ப முடியலை.

இவ்வளவு லேட்டா வந்து "ஐ லவ் யூ" சொல்லுறியே.

ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடியே வந்து சொல்லியிருக்க கூடாதா.

ஏனா ?

அந்தக் கொடுமைய என் வாயாலே எப்படிம்மா சொல்லுவேன். எப்படி சொல்லுவேன்.

எனக்கு..
எனக்கு..
ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு.

உன்னை என்னால ஏத்துக்க முடியாது.
என்னை மன்னிச்சுடும்மா..
மன்னிச்சுடு.

இப்படிக்கு
கிள்ளி வளவன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\இந்த காதல் இருக்கே அது எதனால வருதுன்னு யாருக்குமே தெரியாது.

அது ஏன் வந்துச்சுன்னு சொல்லப்படுற காரணங்கள் யாவுமே உண்மையில் காரணங்கள் கிடையாது.

ஒத்த ரசனை அப்படின்றத விட பல சமயம் எதிர் ரசனைகள்தான் ஒன்றையொன்று ஈர்க்கும்.

North Pole attracts South pole.

North reflects North And south reflects South.

காரண காரியமின்றி வருவதுதான் காதல்.

ஆனால் காதலை வெளிப்படுத்த காரணம் தேவைப்படுகிறது இல்லையா :)\\


தல டவுட்டை கிலியர் பண்ணியதுக்கு ஒரு "ஒ" போட்டுகிறேன் :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடப்பாவமே காஃபி சாப்பிட கூப்பிட்ட ஒடனே பிரபோஸ் பண்ணனுமா?.. கதை நல்லாத்தானே போவுது..இன்னும் 2 இடுகைக்கு அப்புறம் பிரப்போசலை வைச்சுக்கலாமே :D-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏன்பா இந்த சினிமாகாரனுக தான் கண்டதும் காதல், கானாமல் காதல்லுனு நம்ம உசிர வாங்குறானுகனா நீயுமாப்பா??

கண்டிப்பா சூடான இடுகைல வந்திருக்கும்னு நினைக்கிறேன்... தலைப்பு அப்படி...!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரசிகன்

ஒரு வருடமா கடிதத்த தொடர்பில் மட்டுமே இருந்திருக்காங்க. இதுவே ரொம்ப லேட்.

உலகம் ஒரே நாள்ல காதல். மூணு மாசத்தில கல்யாணம். ஒரு வருடத்துல டைவர்ஸ்னு சும்மா வேகமா போயிட்டு இருக்கு. :)

//ரசிகன் said...
அடப்பாவமே காஃபி சாப்பிட கூப்பிட்ட ஒடனே பிரபோஸ் பண்ணனுமா?.. கதை நல்லாத்தானே போவுது..இன்னும் 2 இடுகைக்கு அப்புறம் பிரப்போசலை வைச்சுக்கலாமே :D
//

நன்றி.
:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்

//ஏன்பா இந்த சினிமாகாரனுக தான் கண்டதும் காதல், கானாமல் காதல்லுனு நம்ம உசிர வாங்குறானுகனா நீயுமாப்பா??

கண்டிப்பா சூடான இடுகைல வந்திருக்கும்னு நினைக்கிறேன்... தலைப்பு அப்படி...!!
//

என்ன பண்றது கருப்பன். காதலுடைய வேகம் ஒளி வேகத்தை விட அதிகம். பார்த்த மைக்ரோ செகண்டுலயே சமயத்துல காதல் வந்துடும்...

ஆமா. பதிவு நானே எதிர்பார்க்காத அளவுக்கு சூடாயிடுச்சு. இந்த மொக்கை காதல் கதை இவ்வளவு சூடாகும்னு நானே நினைக்கலை. தலைப்பிலதான் எல்லாமே இருக்குன்னு ப்ரூவ் ஆயிடுச்சு.

பதிவு எழுத யோசிக்கிறதை விட இதுக்கு மேல தலைப்பு வைக்க அதிக நேரம் யோசிக்கணும் போல :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

பதிவுலக காதலை மிக அழகான கற்பனையுடன் எழுதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள்!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆஹா.....முதல் பின்னூட்டம் போட்டா இப்படி எல்லாம் அர்த்தம் இருக்கா?? இம்புட்டு நாளா தெரியாம போச்சே!

கதை கலக்கல்ஸ் !!-------------------------------------------------------------------------------------------------------------