Thursday, January 31, 2008

மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".

(வாசகர்களுடைய பேராதரவை பெற்ற உலகபுகழ் துப்பறியும் சிங்கம் சி.ஐ.டி. ஷங்கர் இனி துப்பறியமாட்டார் என்று அறிவித்திருந்தோம். இதை கண்டித்து வாசகர் கடிதங்கள் லட்சக்கணக்கில் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் ஒரு வாசகர் மீண்டும் ஷங்கருடைய துப்பறியும் கதைகள் வரவில்லையெனில் தீக்குளிப்பேன் என்று எழுதியிருந்தார். வாசகர்களுக்காக இதோ மீண்டும் வந்துவிட்டார் சி.ஐ.டி. ஷங்கர் - ஆசிரியர்.).

"என்ன இது.?" மாலு கோபத்துடன் செய்தித்தாளை வீசியெறிந்தாள்.

"உலகப்புகழ்பெற்ற சி.ஐ.டி. ஷங்கர் அவர்களின் துப்பறியும் நிறுவனம் புதிய இடத்திற்கு மாறியுள்ளது. முகவரி xxxxx. போன் xxxxx.". என்ற விளம்பரத்தை அவள் வட்டமிட்டிருந்தாள்.

அதே கோபத்தோடு ஷங்கரது கணினித்திரையை பார்த்தாள். "யோனி. முலை. ஆண்குறி." போன்ற வார்த்தைகள் கணினித்திரையெங்கும் இறைந்து கிடந்தன.

"ஆஃபீஸ்ல உட்கார்ந்து அந்த மாதிரி சைட் எல்லாம் வேற படிக்கறியா ?" மேலும் கோபமானாள்.

"அச்சச்சோ. இது தமிழ்மணம். தமிழ்பதிவு. இலக்கிய தமிழ். பின் நவீனத்துவம். எக்ஸ்பிரசனிசம். நீ தப்பா புரிஞ்சுகிட்ட...." குளறினான்.

"அந்த கண்றாவியை அப்புறம் வெச்சுக்கறேன். மொதல்ல இந்த கண்றாவிக்கு பதில் சொல்லு. துப்பறியும் வேலை வேண்டாம்னு சொன்னேன் இல்லையா ?".

"ஆமாம். ஆனா பாரு அப்பாவோட ட்ராவல் ஏஜென்சி போரடிக்குது. வாழ்க்கையில த்ரில் வேண்டாமா?"

"அதுக்காக.".

"பாரு பிசினசை நான் விடல. துப்பறியும் தொழில் பார்ட் டைம். ட்ராவல் ஏஜென்சியோட அட்ரஸ்தான் அதுக்கும் கொடுத்திருக்கேன்."

போன் அடித்தது. எடுத்தான்.

"ஷங்கர் டிடக்டிவ் ஏஜென்சி."

"எஸ்."

"சார். எங்க வீட்டு செப்டிக் டாங்க் அடைச்சிருச்சி. எங்க அடைச்சிருக்குன்னு துப்பறிஞ்சு சொல்றீங்களா."

"வையா. போனை." வைத்தான். "ஹி. ஹி. ராங் நம்பர்." அவளிடம் வழிந்தான். நல்ல வேளை போன்ல அவன் பேசுனதை அவ கேட்டிருக்க மாட்டா என்று சமாதானமானான்.

"மாலு. நான்தான் பார்ட் டைம்னு சொல்றனே. கன்சிடர் பண்ணேன். நீயும் வழக்கம் போல எனக்கு அசிஸ்டண்ட்டா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.".

பார்ட் டைம் என்பதில் அவள் சமாதானம் ஆனாள். "வேற வழி. பேயை காதலிச்சா முருங்கை மரம் ஏறித்தான் ஆகணும். இருந்து தொலைக்கிறேன்.".

"தாங்ஸ் மாலு." வழிந்தான்.

அப்போதுதான் அவன் வந்தான். வயது 35 இருக்கும்.

"சார் உள்ளே வரலாமா ?"

"நீங்க ?".

"நேனு எர்ரபள்ளி வெங்கடநாராயண ஸ்ரீனிவாச காந்திகிருஷ்ண ரெட்டி. நீங்கதானே தி ஃபேமஸ் டிடக்டிவ் ஷங்கர்."

"ஆமா. வாங்க ரெட்டி."

ரெட்டி நாற்காலியில் அமர்ந்தான்.

"சொல்லுங்க."

"சார். பெரிய மனசு பண்ணி என்னோட கேசை எடுத்துக்கணும்."

ஷங்கர் மாலுவை பார்த்து கண்சிமிட்டினான். பார்த்தாயா புது கேஸ் என்ற பெருமிதம் அதில் தெரிந்தது.

"கேசை சொல்லுங்க."

"என்ன சொல்ல சாரே. நான் ஒரு பாவப்பட்ட மனுச ஜன்மம். சினி இண்டஸ்ட்ரில கேட்டு பாருங்க. நேனு எந்த பெரிய ஃபைனான்சியர்னு எல்லாரும் சொல்லுவாங்க."

"அப்படியா. மேல சொல்லுங்க."

"உங்களுக்கு பப்பிஸ்ரீ தெரியுமில்லையா?"

"கவர்ச்சிக்கன்னி பப்பிஸ்ரீயை தெரியாதவன் தமிழனே இல்லை சார்.".

"அவளேதான். அவ என்னுடைய பொண்டாட்டி."

"ஓ."

"சீக்ரெட் மேரேஜ் சார். ஆந்திராவுலே விஜயவாடாவுல பெல்லி சேஸ்குன்னானு. ஒரு வருசம் ஆகுது. யாருக்கும் தெரியாது."

"இண்ட்ரஸ்டிங். பப்பிஸ்ரீக்கு கல்யாணம் ஆயிருச்சா."

"பாருங்க. எங்க மேரேஜ் நல்லாதான் போயிட்டிருந்தது. ஆனா பப்பிஸ்ரீக்கு திடீர்னு ஒரு பாய் ஃபிரெண்டு. அவன் கூட சுத்துறா. தப்பு பண்றா. சொன்னா கேக்குறதில்லை. நேனு எந்த பாதபட்குன்னானுன்னு மீக்கு தெள்ளிது சார்."

"புரியுது. இதுக்கு எங்க கிட்டே ஏன் வந்தீங்க."

"நான் அவளை விவாகரத்து செய்யணும். அதுக்கு எனக்கு அவ தப்பா நடக்கிறான்றதுக்கான ஃப்ருஃப் வேணும். நீங்கதான் எனக்கு ஹெல்ப் செய்யணும். "

ரெட்டி கதறி கதறி அழ ஆரம்பித்தான்.

"டேக் இட் ஈஸி ரெட்டி. உங்க கேசை நாங்க எடுத்துக்கறோம். உங்க மனைவியை நாங்க வாட்ச் பண்றோம். உங்களுக்கு வேண்டிய ஃப்ரூஃப் இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு கொடுக்குறோம்."

கதறி அழுத ரெட்டியை ஆறுதல் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

-----------------------------------------------

"மாலு என்னமோ சொன்னியே. இங்க பார்த்தியா ரெட்டி மொத்த பேமண்ட்டையும் கேஷாவே கொடுத்துட்டு போயிருக்கான். பிஃப்டி தவுசண்டு." ஷங்கர்.

"அவன் கேட்ட ஆதாரம் எல்லாம்." இது மாலு.

"இந்த ஷங்கரை யாருன்னு நினைச்சே. சும்மா ஒரு வாரமா பப்பிஸ்ரீயை வாட்ச் பண்ணினேன். அவளும் அவ பாய்ஃபிரண்டும் சோலா ஷெரட்டன்ல புக் பண்ணின ஓட்டல் ரூம்ல யாருக்கும் தெரியாம கேமராவை ஃபிக்ஸ் பண்ணினேன். தேவையான ஆதாரம் போட்டாவாவே கிடைச்சிருச்சி."

"ஓ."

"அந்த போட்டோவெல்லாம் நீ பார்க்கலையே. சும்மா கிளுகிளுப்பா இருந்தது. மூணு நாள் முன்னாடிதான் ரெட்டி எல்லாத்தையும் வாங்கிகிட்டு போனான். இன்நேரம் ரெட்டி அதை தன் வக்கீல் கிட்ட கொடுத்து இருப்பான். அவனோட கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிருக்கும். நம்ம கேஸ் கிராண்ட் சக்சஸ்"

"ப்ரில்லியண்ட். நான் ரிலேட்டிவ் மேரேஜ்காக போன இந்த ஒரு வாரத்துல நீ இவ்வளவையும் தனியாவே சாதிச்சு இருக்கியே". அவனுக்கு வேண்டிய புத்துணர்வு டபுள் டோசாக அவன் கன்னத்தில் கிடைத்தது.

"தட் ஈஸ் மை ஷங்கர்."

"இட் ஈஸ் ஆல் இன் த கேம்."

டெலிபோன் ஒலித்தது. "அடுத்த கிளையண்டா இருக்கும்" பெருமையாக ஷங்கர் போனை எடுத்தான்.

"ஹல்லோ. டிடக்டிவ் ஷங்கர் ஸ்பீக்கிங்."

"யோவ் உனக்கு அறிவிருக்கா ?" மறுமுனையில் கோபமான பெண்குரல்.

"மேடம். யார் நீங்க. ராங் நம்பர்னு நினைக்கிறேன்."

"கரெக்ட் நம்பர்தான். நான் பப்பிஸ்ரீ பேசுறேன். நீதானே ரெட்டிக்கு போட்டோ எடுத்து கொடுத்தது."

"ஆமா. உங்க கணவர் ரெட்டி உங்க நடத்தையில சந்தேகப்பட்டு ஆதாரம் கேட்டாரு.".

"கணவனா. அந்த ஆளு என்னோட மேனேஜரா இருந்தான். ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் வேலையை விட்டு துரத்தினேன். நான் கல்யாணம் பண்ணிக்க இருக்கிற என்னோட பாய் ஃபிரரெண்ட் கூட இருக்க போட்டோவை நீ அவனுக்கு எடுத்து கொடுத்திருக்கே."

"ஆ..."

"ஆமாய்யா. ரெட்டி அந்த போட்டோவை காண்பிச்சு வெளியிட்டுடுவேன்னு சொல்லி பிளாக் மெயில் பண்ணி அஞ்சு லட்சம் என்கிட்ட வாங்கிட்டான். சரி அஞ்சு லட்சத்தோட தொலையுதுன்னு கொடுத்து போட்டோவை வாங்கிட்டேன். அதுகூட விசிட்டிங் கார்ட்ல உன் அட்ரசும் போன் நம்பரும் இருந்தது."

"ஓ.."

"ஆனா அந்த ராஸ்கல் இன்டர்நெட்ல வேற படத்தை போட்டு விட்டுட்டான். என் மானமே போச்சு."

"சாரி. மேடம்."

"சாரி. என்னய்யா. சாரி. இன்னும் நாலு நாள்ல உனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பறேன்."

போனை வைத்துவிட்டாள். ஷங்கரும் மாலுவும் பேயறைந்தவர்கள் ஆனார்கள்.

-------

நான்கு நாட்கள் ஓடின. ஷங்கர் வக்கீல் நோட்டீஸ் வரும் என்று பயந்திருந்தான்.

அன்று டெலிபோன் மணியடித்தது.

"ஹல்லோ ஷங்கர். பப்பிஸ்ரீ இயர்."

"மேடம். நீங்க வக்கீல் நோட்டீஸ்னு..."

"பர்கெட் இட். இன்னைக்கு பேப்பர் பார்த்தியா.". அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தது.

சுருக்கமான செய்தி: புகைப்படத்தில் இருப்பது நானல்ல - பப்பிஸ்ரீ மறுப்பு. டூப்பாகவோ அல்லது ஒட்டு வேலையாகவோ இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். உடன் இருக்கும் நபர் யார் என்றே தெரியாது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

"உன் மேல கேஸ் போட்டா அந்த ஃபோட்டோவில இருக்கிறது நான்தான்னு நானே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்கும்னு வக்கீல் சொன்னார். நான் கேஸ் எதுவும் போடலை."

"தாங்ஸ் மேடம்."

"நான் தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்லணும் ஷங்கர். தமிழ்ல படமே இல்லாம மலையாளத்துல மட்டும் பண்ணிட்டு இருந்தேன். இந்த மேட்டர் வந்ததுல நாலு தமிழ் படம் புக் ஆகியிருக்கு."

"ஓ. கங்கிராட்ஸ் மேடம்.".

"நீங்களும் இதை பத்தி யாருகிட்டயும் மூச்சு விடாதீங்க. முக்கியமா என் பாய் ஃபிரெண்ட் பத்தி. நாங்க ஒரு இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்."

"வெரி நைஸ் ஆஃப் யூ மேடம். நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்."

"தாங்ஸ்" அவள் போனை வைத்து விட்டாள்.

"அப்பாடா" நிம்மதி பெருமூச்சு விட்டனர் மாலுவும் ஷங்கரும்.

(வாசகர்கள் சி.ஐ.டி. ஷங்கரின் இந்த சாகசத்தை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இனி ஷங்கரும் மாலுவும் அவ்வப்போது வந்து தங்கள் சாகசத்தை நிகழ்த்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். வாசகர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - ஆசிரியர்.)

9 comments:

said...

இது சாம்பு மாதிரி இல்லே இருக்கு. இருந்தாலும் யூகிக்க முடிஞ்சிருச்சு :). சே, ரொம்ப நாள் ஆச்சு இதுமாதிரி எல்லாம் படிச்சு.. நல்லா இருங்க Day-------------------------------------------------------------------------------------------------------------
said...

LOL!!
Rock on!! :-D-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடுத்தது என்ன வீணாவின் ஜாக்கெட் கேஸா? :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுவும் சூப்பர்...

//இலவசக்கொத்தனார் said...

அடுத்தது என்ன வீணாவின் ஜாக்கெட் கேஸா? :))//

கொத்ஸுக்கு எப்பவுமே வீணாவின் ஜாக்கெட் மேல ஒரு கண்ணு :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

எக்ஸலண்ட் மச்சி !!! கலக்கிப்புட்ட...இந்த சீரிஸ்ல நிறைய கலக்கி எழுதவும்....-------------------------------------------------------------------------------------------------------------
said...

மர்டர் கேஸ் எப்போ?-------------------------------------------------------------------------------------------------------------
said...

// ILA(a)இளா said...
இது சாம்பு மாதிரி இல்லே இருக்கு. இருந்தாலும் யூகிக்க முடிஞ்சிருச்சு :). சே, ரொம்ப நாள் ஆச்சு இதுமாதிரி எல்லாம் படிச்சு.. நல்லா இருங்க Day.//

நன்றி இளா. சாம்பு எல்லாம் ப்ரசண்ட் டேவில இருந்தா எப்படி இருக்கும். :)

---------

//CVR said...
LOL!!
Rock on!! :-D//

Thanks CVR.

-----------

// இலவசக்கொத்தனார் said...
அடுத்தது என்ன வீணாவின் ஜாக்கெட் கேஸா? :))//

வீணாவோட ஜாக்கெட்டை காணலையா. அடடா. அடுத்த கேஸ் கிடைச்சிருச்சே :)

---------------

// வெட்டிப்பயல் said...
இதுவும் சூப்பர்...

கொத்ஸுக்கு எப்பவுமே வீணாவின் ஜாக்கெட் மேல ஒரு கண்ணு :-)

//

நன்றி வெட்டி.

வீணா ஜாக்கெட் மேல ஒரு கண்ணு வெச்சிருந்தது கொத்தனாரா. கேஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சே. :)

---------

//செந்தழல் ரவி said...
எக்ஸலண்ட் மச்சி !!! கலக்கிப்புட்ட...இந்த சீரிஸ்ல நிறைய கலக்கி எழுதவும்....//

தாங்ஸ் செந்தழல் ரவி.
இந்த சீரிஸ் நிறையவே வரும். :)

------------

//PPattian : புபட்டியன் said...
மர்டர் கேஸ் எப்போ?//

புபட்டியன் இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க. வெயிட் அண்டு ஸீ. :)

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

மன்னிக்கனும் அ.பிளேடு அவர்களே, இந்த கேஸை நான் எப்படி மிஸ்பன்னேன்னு தெரியல. எப்படியோ இப்ப பாத்துட்டேன்ல!!!

சுபா-வோட செல்வா, முருகேசன் துப்பறியும் கதைகூட ரெம்ப ரெம்ப நல்லா இருக்கும். இப்ப சுரேஷூம், பாலாவும் அந்த அளவுக்கு எழுதுறதில்லை. பரவாயில்லை நீங்க இனி ட்ரை பண்னலாம்.

ஷங்கர் திரும்ப வந்ததுல எங்களுக்கு நிறைய சந்தோஷம். என்ன ஒரு சின்ன குறை, ஷங்கர் எடுத்த ஃபோட்டோக்களை கொஞ்சம் நடுவுல சொருகியிருந்தா கலக்கலாக இருந்திருக்கும். குறைந்த பட்சம் ரெட்டி இன்டர்நெட்டில் அப்லோடு பண்ணுன சுட்டியையாவது கொடுத்திருக்கலாம். ஹீ... ஹீ...-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹி.. ஹி.. நன்றி கருப்பன் அவர்களே.

இணையத்துல தேடி பாருங்க. எங்கயாச்சும் காசு கட்டி பாக்குற சைட்டுல பப்பிஸ்ரீ போட்டோ கிடைச்சாலும் கிடைக்கலாம். :)-------------------------------------------------------------------------------------------------------------