கோடம்பாக்கத்தின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன் தனது பைக்கை ஸ்டாண்டினான் ஷங்கர். உலகமே நமது கதாநாயகன் சி.ஐ.டி. ஷங்கரைப் பற்றி அறியும் என்பதால் அவனை பற்றிய வர்ணனைகளை வெட்டிவிட்டு ஓவர் டு மாலினி. மாலு அலையஸ் மாலினி நமது கதாநாயகனின் அசிஸ்டண்ட். சேர்ந்து நான்கு மாதம் ஆகிறது. நீல ஜீன்ஸ் கால்சட்டையும் வெள்ளை சட்டையும் போட்டு குதிரை வால் கொண்டையில் அழகாக இருந்தாள். மேலும் அந்த... வேண்டாம். பேக் டு ஹீரோ.
ஷங்கர் அந்த குடியிருப்பை நோட்டமிட்டவனாக சிக்லெட்டை மெல்ல துவங்கினான். துப்பறியும் சிங்கம் ஷங்கருக்கு சிக்லெட் புத்துணர்வு தரும் என்பது உலகமறிந்த செய்தி. (கதாநாயகர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்பதால் நமது நாயகன் சிக்லெட்டுக்கு மாறிவிட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.).
"பாஸ். இந்த ஃப்ளாட்ஸ்லதானா ?"
"எஸ் மாலு. இந்த அசோசியேசன் செக்ரட்ரி நரேஷ் அய்யர்தான் கால் பண்ணியிருந்தார். ஒரு திருட்டு நடக்கிறதாவும் அதை கண்டு பிடிக்கணும்னும் சொன்னார்."
"வாவ். நான் உங்க கிட்ட சேர்ந்து இந்த நாலு மாசத்துல முதல் கேஸ். திருட்டா ? த்ரில்லிங்.".
"முதல்ல இந்த பகுதியை நோட்டம் விட்டுக்கிட்டு அப்புறம் உள்ளே போவோம். "
"பாஸ். இந்த நாலு மாசத்துல நீங்க எனக்கு சாலரியே கொடுத்ததில்லை. ஆஃப்டர் திஸ் கேசாவது....".
"யூ சில்லி. யூ ஆர் நாட் ஜஸ்ட் மை அசிஸ்டன்ட். ஆல்சோ மை லவர். உனக்கு எதுக்கு சாலரி."
"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்னோட அப்பா கிட்ட நீங்க பெரிய துப்பறியும் புலின்னு சொல்லி வெச்சிருக்கேன். எத்தனை கேஸ் கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு கேக்குறார். அட்லீஸ்ட் அச்சீவ் சம்திங் இன் திஸ் கேஸ் ஃபார் அவர் லவ் சேக்."
"ஓக்கே. ஓக்கே. குட் யூ ப்ளீஸ் கிவ் மி சம் எனர்ஜி பூஸ்ட்."
"ப்ச்" (சிக்லெட்டோடு இப்போது மாலுவின் முத்தமும் நமது நாயகனுக்கு புத்துணர்வு தருவது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். - ஆர்.)
இருவருமாக மாடியேறிச் சென்று "F" இலக்கமிட்ட வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினர்.
ஒரு சொட்டைத் தலையர் எட்டிப் பார்த்தார்.
"குட் மார்னிங். மிஸ்டர் ஐயர்."
"ஐ அம் நாட் ஐயர். ஐயம் ஐயங்கார்."
"வாட்?"
"நான் ஐயங்காராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்."
"என்ன எழவுடா இது" மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஷங்கர். "மிஸ்டர் நரேஷ் ஐயர்......"
"ஓ. அவரா. அவர் எதிர்ல F."
"ஆனா இதுதானே F".
"இது E. எழுத்தோட கால் உடைஞ்சிருச்சி." மாலு தலையிலடித்துக் கொண்டிருந்தாள்.
--------------
"கம் இன் மிஸ்டர் ஷங்கர். ஐ அம் நரேஷ் ஐயர். செக்ரட்ரி ஃபார் திஸ் ரெசிடென்சியல் அப்பாரட்மெண்ட்ஸ்."
நரேஷ் ஐயர் அவர்களை வரவேற்றார். "ப்ளீஸ் பீ சீட்டட்." அமர்ந்தார்கள்.
"மிஸ்டர் நரேஷ் இங்க திருட்டு போறதா சொல்லியிருந்தீங்க இல்லையா."
"எஸ்."
"ஐ அப்சர்வ்டு தி திங்ஸ் அரவுண்டு. ப்ராக்சிமிட்டி ஆஃப் அதர் பில்டிங்ஸ். யூ ஹவ் ஏ வாட்ச்மேன் அரவுண்ட் தி கிளாக். பட் ஸ்டில் திருட்டு போகுதுன்னா... ஐ திங்க் திருடன் பக்கத்து பில்டிங்ல இருந்து கயிறு மூலமா உங்க பில்டிங்குக்கு வந்து திருடியிருக்கலாம்."
"நோ. நோ. யூ ஆர் மிஸ்டேகன்."
"மே பி. ஐ ஜஸ்ட் சஜஸ்டட் எ பாசிபிலிட்டி. எங்க என்ன என்ன வேல்யபிள்ஸ் ஜிவல்லரீஸ் திருட்டு போச்சுன்னு சொல்றீங்களா."
"நான் உங்களை வரச்சொன்னது வேற ஒரு திருட்டுக்கு. தண்ணி திருட்டு."
"என்னது."
"எஸ். வாட்டர். யூ சீ. இந்த ஃப்ளாட்ஸ்க்காக டெய்லி ஒரு வாட்டர் லாரி ஃபுல்லா தண்ணி கொண்டு வந்து பேஸ்மண்ட் டேங்க் ஃபில் பண்றோம். அதுதான் திருட்டு போகுது."
"ஓ" (என்ன எழவுடா இது. திரும்பவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.).
"காலையில 6 ஓ க்ளாக் ஃபில் பண்ற வாட்டர் மதியம் 12 ஓ க்ளாக்குக்குள்ள காணாம போயிடுது. யூ ஹவ் டு இன்வஸ்டிகேட் திஸ்."
"தண்ணிதானே சார். இதுக்கு போய் இன்வஸ்டிகேஷன் எல்லாம்."
"நோ. நோ. யூ சீ. ஹவ் காஸ்ட்லி தி வாட்டர் ஈஸ். 500 ருப்பீஸ் ஃபார் ஒன் ட்ரிப் இன் லாரி. அண்டு ஐ அம் தி ஆன்சரபிள் செக்ரட்ரி."
"ஓக்கே. யாராவது அதிகமா யூஸ் பண்ணி காலியாகியிருக்கும்.".
"நோ. இட் ஈஸ் நாட் யூஸ்டு டு பி லைக் திஸ். லாஸ்ட் ஒன் வீக்காகத்தான் இப்படி ஆகுது."
"ஓக்கே சார். வீ வில் ஹவ் யுவர் கேஸ்". மாலு அறிவித்தாள்.
"மாலு" என்று துவங்கிய ஷங்கரை கண்களால் அடக்கினாள்.
"தாங்ஸ். ஹோப் யூ வில் ஃபைன்ட் இட் அவுட். எனக்கு ஆஃபிஸ் போகணும். ஐ வில் பி பேக் பை ஃபைவ் இன் த ஈவினிங்."
"ஓக்கே சார். வீ வில் ஹேங்க் அரவுண்ட் அண்டு வில் ஃபைன்ட் இட் ஃபார் யூ.".
அவர் கிளம்பி சென்றார்.
"ஓழுங்கா இந்த கேசையாவது கண்டுபிடிங்க." என்ற மாலுவை ஷங்கர் பரிதாபமாக பார்த்தான்.
---------------------
மாலை திரும்பிய நரேஷை மகிழ்ச்சியோடு வரவேற்றது நமது துப்பறியும் ஜோடி.
"சார். வீ ஹவ் ஃபைன்ட் இட் ஃபார் யூ.". ஷங்கர் அறிவித்தான்.
"ரியலி."
"இட் ஈஸ் யுவர் வாட்ச்மேன்."
"ஓ."
"வீ வாட்ச்டு. அந்த காவல்கார கிழவன் 11 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் தொட்டி தண்ணியையும் வெறும் மண் தரையில ஊற்றி காலி செஞ்சுட்டான்."
"அப்படியா."
"ஸீ. போட்டோ ஃப்ரூப். வீ ஹவ் டேக்கன் பிக்சர்ஸ் ஆஃப் ஹிம் இன் ஆக்சன்."
போட்டோக்களை நரேஷ் பார்த்தார்.
"பைத்தியக்காரத்தனமா இருக்கு. வெறும் தரையில தண்ணிய இறைச்சுக்கிட்டு."
"ஐ திங்க் ஹி மஸ்ட் பி எ சைக்கோ."
"முனுசாமி..."
அந்த காவல் கிழவன் பம்மியபடி வந்தான்.
"என்ன இது. நீ ஏன் தண்ணியை இப்படி வீணடிச்சு இருக்க."
"ஐயா செக்ரட்ரி அம்மாதான்..."
"அம்மாவா..."
"அம்மா உங்க கிட்ட சொல்லலீங்களா?"
"வாட் தி ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்." வெளியேயிருந்து உள்ளே நுழைந்த அவள் மிஸஸ் ஷீலா அய்யர் வைஃப் ஆஃப் மிஸ்டர் நரேஷ் ஐயர்.
"ஸீ திஸ் பிக்சர்ஸ் ஃபார் யுவர் செல்ஃப்." ஐயர் போட்டோக்களை அவளிடம் நீட்டினார்.
"எஸ். ஃபார் அவர் ரெசிடென்ஸ் உமென்ஸ் அசோஷியேசன் வீ நீட் எ பேட்மின்டன்ட் கோர்ட் வித் கிராஸ். நான்தான் முனுசாமியை லான்ல புல் வளரட்டும்னு தண்ணி விட சொன்னேன். வை யூ பிக்சர்டு இட்?"
"நத்திங்." நரேஷ் அய்யர் மென்று முழுங்கினார்.
"புல்ஷிட்." அவள் போய்விட்டாள்.
"சாரி. " நரேஷ் அய்யர் நமது ஜோடியிடம் மென்று முழுங்கினார்.
"ஆக்சுவலி எங்களுக்குள்ள பத்து நாளா சண்டை. நாங்க பேசிக்கிறது இல்லை. அதுல அவ எங்கிட்ட சொல்லாம விட்டுட்டா போல. ஐ அம் ரியலி சாரி."
"நோ பிராப்ளம் சார். இட் ஈஸ் ஆல் இன் த கேம்."
நமது ஜோடி சோகமாக வெளியேறியது.
"ஷங்கர் இனியும் இந்த துப்பறியற வேலை உங்களுக்கு தேவையா. ப்ளீஸ் ஜாயின் த பிசினஸ் ஆஃப் யுவர் டாட். அட்லீஸ்ட் ஃபார் அவர் லவ் சேக்."
"ஓக்கே". ஷங்கர் தலையாட்டினான்.
"தட் ஈஸ் நைஸ் ஆஃப் யூ."..... "ப்ச்ச்ச்" இன்னொரு முறை புத்துணர்வு கிடைத்தாலும் ஷங்கர் இனி எதையும் கண்டு பிடிக்கப்போவதில்லை.
(இவ்வாறாக அகில உலக புகழ்பெற்ற நமது கதாநாயகன் ஷங்கர் தனது துப்பறியும் தொழிலை விட்டு விட்டதால் இனி அவரது துப்பறியும் கதைகள் இடம் பெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.)
Wednesday, January 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
;))
-------------------------------------------------------------------------------------------------------------
:-)
நல்லா இருக்கு,
ராஜேஷ் குமார் கதைமாதிரி எழுதி இருக்கிங்க.
//கோடம்பாக்கத்தின் அந்த அடுக்கு குடியிருப்பின் முன் தனது பைக்கை ஸ்டாண்டினான் ஷங்கர்.//
அடுக்குமா இது ? எந்த அடுக்குமாடி ?
-------------------------------------------------------------------------------------------------------------
//"நான் ஐயங்காராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்."//
அவங்க வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், 'லாவண்யா' என்று பெயர் வைக்கச் சொல்ல்லுங்கோ.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
//(இவ்வாறாக அகில உலக புகழ்பெற்ற நமது கதாநாயகன் ஷங்கர் தனது துப்பறியும் தொழிலை விட்டு விட்டதால் இனி அவரது துப்பறியும் கதைகள் இடம் பெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.)//
ரொம்ப சந்தோஷமாப் படிச்சேன்!! (அட முழுக்கதையையும்தாங்க சொல்லறேன்!!)
-------------------------------------------------------------------------------------------------------------
கோபிநாத்
சிரிப்பை சிந்தி சென்றமைக்கு நன்றி.
-----
நன்றி கோவி. கண்ணன்.
அடுக்குமாடி என்று மாற்றிவிட்டேன்.
//அவங்க வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், 'லாவண்யா' என்று பெயர் வைக்கச் சொல்ல்லுங்கோ.//
ஏற்கனவே அவர் வீட்டில் அந்த பெயரில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கதைக்கு தேவையில்லாத பாத்திரமாதலால் வரவில்லை. :)
------------
கொத்தனார்...
முழுக்கதையையையும் சந்தோசமாக படித்ததற்கு நன்றி.
ஆனால் இனி துப்பறியும் கதைகள் கிடையாது என்று எழுதப்பட்ட வரிகளை எடுத்தாண்டு சந்தோசப்பட்டதின் பின்னுள்ள நுண்ணரசியல் என்ன :)))))
-------------------------------------------------------------------------------------------------------------
ஐயோ... இவ்வளவு நேரமா ஷங்கரை தான் தேடிகிட்டு இருக்கிறேன்!! நான் அவருக்கு ஒரு நல்ல கேஸ் குடுக்கலாம்னுதான். அதுக்குள்ளையும் VRS வாங்கிட்டாரா??
எங்கவீட்டு செப்டிக்டேங்குல எங்கையோ அடைச்சிருக்கு அதை கண்டுபிடிச்சு சொல்லனும் :-)
-------------------------------------------------------------------------------------------------------------
கருப்பன்.
சி.ஐ.டி. ஷங்கர் திரும்பி வந்தாலும் வரலாம். ஆனா திரும்பி வந்தா இந்த மாதிரி சாதாரண கேஸ் எல்லாம் எடுத்துக்க மாட்டார்னு நினைக்கிறேன்.
உலகப்புகழை அவ்வளவு சீக்கிரத்துல யாராச்சும் வேண்டாம்னு விட்டுடுவாங்களா என்ன :))
-------------------------------------------------------------------------------------------------------------
வேலையில்லாம ஈ ஓட்டுறதுக்கு பதிலா இந்தமாதிரி கேஸை எடுக்கலாம்ல!!??
-------------------------------------------------------------------------------------------------------------
//வேலையில்லாம ஈ ஓட்டுறதுக்கு பதிலா இந்தமாதிரி கேஸை எடுக்கலாம்ல!!??
//
ஈ ஓட்டுறதே பெரிய வேலைதானுங்க :)))
-------------------------------------------------------------------------------------------------------------
Typical அரை பிளேடு காமெடி.. :)))))))
ஒரு கதைக்குள்ள இவ்ளோ மெசேஜா
1. ஜாதி பத்தி பெருமிதம் அடையக் கூடாது (எல்லாரும் சமம்)
2. கணவன் மனைவி சண்டை போட்டு (10 நாளெல்லாம்) பேசாம இருக்க கூடாது
3. புகை உடல் நலத்திற்கு கேடு
4. தண்ணியை வீணாக்க கூடாது
5. லவ்வரையே அசிஸ்டென்டா வச்சுக்க (அது இல்லீங்க) கூடாது
6. அப்படியே வச்சிக்கிட்டாலும், எப்படியாவது சாலரி குடுத்துடனும்
7. தெரியாத தொழிலை பெருமைக்காக மட்டும் செய்யக் கூடாது
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி புபட்டியன்
இந்த காமெடி கதையில் இவ்வளவு மெசேஜ் இருக்கா. எனக்கே தெரியாம இதெல்லாம் எப்படி வந்தது. :)
சும்மா ஒண்ணு இரண்டுன்னு லிஸ்ட் போட்டு கண்டு பிடிச்சு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. :)
-------------------------------------------------------------------------------------------------------------
ROFL!
Really enjoyed reading it!!
:-D
-------------------------------------------------------------------------------------------------------------
//CVR said...
ROFL!
Really enjoyed reading it!!
:-D
//
நன்றி. சி.வீ.ஆர்.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
இஸ் இட் டமில் ஸ்டோரி or இங்கிலீஷ் கதை?
-------------------------------------------------------------------------------------------------------------
சரவணகுமார்..
//இஸ் இட் டமில் ஸ்டோரி or இங்கிலீஷ் கதை?//
திஸ் ஈஸ் எ தங்லீஷ் ஸ்டோரி ரிஃப்ளெக்டிங் த ட்ரூ டமிள்ல் அரவுண்ட் அஸ்.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர்...
எப்படி இப்படியெல்லாம்???
-------------------------------------------------------------------------------------------------------------
//வெட்டிப்பயல் said...
சூப்பர்...
எப்படி இப்படியெல்லாம்???
//
நன்றி வெட்டி.
காமெடியா எழுதி ரொம்ப நாளாச்சேன்னுதான். :))
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment