Tuesday, January 15, 2008

எயுதனதுல புட்சது

போன வருசத்துல நாம இன்னா எயுதிக்கிறமோ அதுல நமக்கு புட்சது இன்னான்னு சொல்லனுமாம்.

இப்படி ஒரு விளையாட்டு ஓடிக்கினுகீது. நண்பர் வெட்டியார் நம்மளையும் இதுல இயுத்து விட்டுட்டாரு.

பதிவுலகத்துல நாம இன்னா எயுதி சாதிச்சோம் அப்படின்னு நினைச்சி பார்த்தா நாம இன்னும் இங்க இருக்கறதே சாதனைதான்னு தோணுது.

இன்னா எயுதிக்கிறோம்னு திரும்பி பார்த்தா... கதை எயுதி இருக்கிறோம். கவிஜ எயுதி இருக்கோம். சர்ச்சைய கிளப்புற விஷயத்தை அப்பப்ப தொட்டு இருக்கோம்.
அப்புறம் இருக்கவே இருக்கு உப்புமா, ஜல்லி, மொக்கை எல்லாம். ரைட் சைடுல "ஏற்கனவே எயுதனது"ன்றதுக்கு அடியில எல்லாமே இருக்கு.

திரும்பி பார்த்தா குறுக்கால ஆறு மாசமா தலைமறைவா இருந்து கூட 64 பதிவு எயுதி இருக்கோம்ன்றது ஆச்சரியமாதான் இருக்கு.

இருந்தாலும் புட்சதா எதாவது ஒண்ணு சொல்லணுமாமே.

என்னான்ட ஒரு பிரச்சனை என்னன்னா ஒரு எழுத்தாளனா (!!) என்னோட பதிவு எல்லாமே எனக்கு பிடிக்கும். ஒரு விமர்சகனா என்னோட எந்த பதிவுமே எனக்கு பிடிக்காது.

சரி புட்சதா பதிவு சொல்லணும்னு வந்தாச்சு. முட்டைய ஒடைக்காம ஆம்லெட் போட முடியுமா என்ன.

எனக்கு காதல் கதைகள்லாம் பிடிக்காது. ஆனா நானே காதல் கதை எழுதி இருக்கேன்றது எனக்கே ஆச்சரியம்.
அந்த ஆச்சரியத்தையே இங்க சஜஸ்ட் பண்ணிடறேன்.
"கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்... "

புதிய பதிவர்கள் படித்திராத பட்சத்தில் எனது ஆல்டைம் ஃபேவரிட் காமெடி .கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை.

மேலும் நகைச்சுவைக்காக..
மும்பை பெண்கள் அழகானவர்கள் !!!! .
ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி .
அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்.

அப்பாலிக்கா என்ன... அடுத்து மத்தவங்களை ஆட்டத்துக்கு கூப்பிடணுமாம்.
தெரிஞ்சோ தெரியாமலோ அரைபிளேடு "ஆணியவாதி" அப்படின்னு ஒரு இமேஜ் பில்ட் அப் ஆயிடுச்சி.
அதை உடைக்க இந்த பொன்னான வாய்ப்பை பயன் படுத்திக்கலாம்.

ஆறு பெண் பதிவர்களை தங்கள் சிறந்த படைப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு பணிவோடு அழைக்கிறேன்.

1. ஷைலஜா. (http://shylajan.blogspot.com) - (2007 ல் இவர் அதிகம் எழுதவில்லை. இப்போது மீண்டும் அதிகம் எழுதுகிறார். கவிதை பக்கங்கள்.)
2. மை ஃபிரண்ட் (http://engineer2207.blogspot.com/) - (பதிவுகளை விட பின்னூட்டங்களில் இவரை அதிகம் படித்திருக்கிறேன். சிறந்த பதிவை படிக்க தர கோருகிறேன்)
3. காயத்ரி (http://gayatri8782.blogspot.com) - (கவிதாயினி. 76 கவிதைகள் இவரது பக்கத்தில் இருக்கிறது. எனக்கு கவிதை பயம். அதுவும் பெண் எழுதிய கவிதை என்றால் சுத்த அலர்ஜி. தங்களுடைய சிறந்த கவிதையை பகிர்ந்து எனது கவிதை பயத்தை போக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்.)
4. ப்ரியா வேங்கடகிருஷ்ணன் (http://tamilkkalvi.blogspot.com/) (இவர் நட்சத்திரமானதும்தான் முதல் தடவையாக வாசித்தேன். ஆச்சரியமூட்டும் தமிழார்வம். 2007 இல் அதிகம் எழுதவில்லை. தமிழை நிறைய எழுதவும் இதுவரை தான் எழுதியதை பகிர்ந்து கொள்ளவும் இவரை கேட்டுக்கொள்கிறேன்.)
5. தூயா. (http://thooya.blogspot.com) - (இவரது சமையல்கட்டு பக்கங்களை பார்த்து சில சமையல் குறிப்புகளை முயன்றுள்ளேன். பதிலுக்கு பதில் பழிவாங்குவதற்காக இப்போது அவரை பதிவெழுத அழைக்கிறேன்.)
6. செல்லி (http://pirakeshpathi.blogspot.com) - (வெரைட்டியான பதிவுகள். இலக்கிய இன்பம் தொடரை இவர் படங்களுடன் தந்தது நன்றாக இருந்தது.).

துவங்கிய சர்வேசருக்கும் அழைத்த வெட்டியாருக்கும் தொடர்ஓட்டத்திலுள்ள பதிவர்களுக்கும் நன்றிகள்.

14 comments:

said...

ஷெர்லாக் ஹோம்ஸ் நல்லா இருந்தது. ஆனா, இத விட வேற பலது நல்ல இருந்ததா ஞாபகம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சர்வேசன். பலதும் நல்லதாக இருப்பதால் அனைத்தும் கோப்புகளில் (archive) இருப்பதாக தெரிவித்து விட்டு வித்தியாசமாக இருப்பதை கொடுத்துள்ளேன்.

படிக்கப்படாமல் விடப்பட்ட ஒரு நல்ல கதையை முன்னால் கொண்டு வரலாமே என்றுதான். நீங்களும் முதல்தடவையாக இப்போதுதானே அதை வாசித்தீர்கள். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தரவுகளுக்கு நன்றி. என்னப்பத்தி தெரிஞ்சிக்க, பதிவெழுதி பின்னூட்டம் இல்லாம் மனசொடைஞ்சு இப்ப திருப்பி எழுத வந்திருக்கேன்.

நீங்க சொன்ன ஆளுங்க மாதிரி திறமை அதிகம் உள்ள ஒரு பீல்டை ச்சூஸ் பண்ணி அதிகமா எழுதினா பாப்புலாரிட்டி ஆயிடலாம்னு படுது.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சர்வேசன். நீங்கள் சொன்னதால் மேலும் சில நகைச்சுவை பதிவுகளின் தரவுகள். இதில் தாங்கள் சிலாகித்த "அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்" உம் அடக்கம்.
:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைப்ளேடு ! உங்க கல்யாணராமன் கதையை நான் ரசிச்சிப்படிச்சி இருக்கேன்...பின்னூட்டமிட்டேனா நினைவில்ல....ஆனா படிச்சேன்...
என்னையும் இந்த விளயாட்டுக்கு அழச்சிட்டீங்க...நான் இப்போதான் கொஞ்சம் தலை காட்டறேன்..பரவால்ல..நீங்க கேட்டுகிட்டதால நானும் என் வலைல இதுபத்தி எழுதறேன் நன்றி

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நவன். வருக. பின்னூட்டமில்லைன்னுல்லாம் வருத்தப் படக்கூடாது. பின்னூட்ட கயமை பத்தி உங்களுக்கு தெரியாதா !!!

நிறைய எழுதுங்க. அப்பப்பவந்து படிப்போம்ல. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ஷைலஜா.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல

நீங்க ஆட்டத்தை முடிச்சிட்டிங்களா! ;)

உங்களை கூப்பிடலாமுன்னு பார்த்தேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பர்...

எனக்கு ஆல் டைம் ஃபெவரைட் ஆண் ஏன் அரை மடையனானான் சீரிஸ் தான் ;)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

nandri araiblade !!

adhu sari.. enaku pidichadhu innoru blogspotla irundha adhaiyum sethu sollalaamaa??!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோபிநாத்.

நீங்க என்னை கூப்பிட போறீங்க அப்படின்னு டெலிபதில தெரிஞ்சு முன்னாடியே பதிவு போட்டுட்டேனோ :)))

----------

நன்றி வெட்டி..

நீங்க கூப்பிட்டாலும் கூப்பிட்டீங்க.. நாம என்னதான் எழுதியிருக்கோம்னு நாமளே திரும்பி பார்க்க ஒரு வாய்ப்பு.

"ஆண் ஏன் அடிமடையனானான்" ஒரு நல்ல சீரிஸ். நேரம் கிடைச்சா பார்ட் 2 போட்டுடுவோம் :)))

----

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ப்ரியா

நீங்க உங்க "தமிழ்க்கல்வி"யில் இருந்துதான் சொல்லனும்னு இல்லை. உங்க "ஆன்மிகம்"ல இருந்தோ இல்லை வேறு எங்காவது நீங்கள் எழுதிய சுட்டியோ கூட தரலாம்.

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஓகேகே.. நீங்கல்லாம் சொல்றதால பின்னூட்டத்துக்கு தவம் கிடப்பதை விட அதிக பதிவுகள் இடுவதற்கு முயற்சி செய்வது நல்லதுன்னு ஒத்துக்கறேன்.

சொன்னமதிரி ஆஜராவிடுங்கல்ல!

:-)

//பின்னூட்ட கயமை பத்தி உங்களுக்கு தெரியாதா !!!//

நல்லாத் தெரியும்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அத்தனை சுட்டிகளையும் கிளிக்கி ஒரு ரவுண்டு வந்துடறேன் - வாழ்த்துகள்

-------------------------------------------------------------------------------------------------------------