Sunday, November 18, 2007

கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...

நல்ல மத்தியான நேரம். கோடம்பாக்கம் ரயில்நிலையம். கிளம்பவிருந்த ரயிலில் ஓடிவந்து ஏறினாள் அவள். மதியநேரம் காலியாக இருந்த அந்த ரயில் பெட்டியில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் இருந்தான்.

அவன் தன்னையே பார்ப்பதாக தோன்றியது அவளுக்கு. அவனது பார்வை பல இடங்களிலும் ஓடுவதாக உணர்ந்தாள். அமைதியாக ஒரு சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இளைஞனை பார்த்தாள். அவன் தொடர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். நல்ல உயரம். மாநிறம். பார்க்க நல்லவிதமாய்த் தோன்றினாலும் அவன் பார்வை சரியில்லை என்று நினைத்தாள்.

அவன் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

"எங்க படிக்கிறீங்க. கோடம்பாக்கம் மீனாட்சி லேடீஸ் காலேஜா."

"ஆமா. எப்படித் தெரியும்."

"கோடம்பாக்கம் ஸ்டேசன்ல ஏறியிருக்கீங்க. ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க. பக்கத்துல இருக்கிற பெண்கள் காலேஜ்னா மீனாட்சி காலேஜ்தான். அதை வெச்சுத்தான் கண்டுபிடிச்சேன்."

"ரயிலில ஏறுற பொண்ணுங்க எல்லாம் எந்த காலேஜ்னு கண்டு பிடிச்சு சொல்லுறதுதான் உங்க வேலையா."

"சே. சே. அப்படியில்லை. நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நான் ஒரு துப்பறியும் நிபுணன். உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் தெரியுமில்லையா. அந்த மாதிரி."

'ரியலி".

"எஸ். பவர் ஆஃப் டிடக்சன். சூழ்நிலைகள ஆராய்ஞ்சு கிடைக்கிற தடங்களை வெச்சு ஒருத்தரை பத்தி கரெக்டா சொல்லிடலாம். உதாரணத்துக்கு நீங்க கெமிஸ்ட்ரி ஃபைனல் இயர் படிக்கிறீங்க. கரெக்டா."

"கரெக்ட். என் புத்தகத்தை பார்த்து சொல்லியிருப்பீங்க."

"ஆமா. நீங்க தாம்பரம் போறீங்க. சரியா."

"எப்படி சொல்றீங்க."

"உங்க சீசன் டிக்கட்டை பார்த்தேன்."

"அவ்வளவு தூரத்துல இருந்து என் சீசன் டிக்கட்டை எப்படி படிக்க முடிஞ்சது."

"ஒரு துப்பறியும் நிபுணனுக்கு ரொம்ப தேவையானது பார்வைத் திறன். தட்ஸ் இட். இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் எக்சாம் முடிச்சிட்டு வர்றீங்க. கரெக்டா."

"அமேசிங். எப்படி கண்டுபிடிச்சீங்க."

"உங்க கிட்ட இருந்து வர்ற கந்தக அமிலத்தோட வாசனை. அது நீங்க கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து வர்றீங்கன்னு சொல்லுது. இது எக்சாம் டைம். காலேஜ் டைமுக்கு முன்னாடியே வீட்டுக்கு திரும்பறீங்கன்னா பிராக்டிகல் எக்சாமாத்தான் இருக்கணும்."

"வாவ்".

"உங்களுக்கு அப்பா மட்டும்தான் இருக்காரு. அம்மா கிடையாது. அப்பாவுக்கு கவர்ன்மெண்ட் வேலை. ஸ்கூல் போகிற ஒரு தம்பியோ இல்லை தங்கச்சியோ இருக்காங்க".

"தம்பியும் அப்பாவுந்தான் இருக்காங்க. அம்மா இல்லை. ஆனா எப்படி கண்டு பிடிச்சீங்க".

" உங்க வலது கையில இருக்கிற சூடு சமைக்கறப்ப வச்சிகிட்டதா இருக்கணும். எக்சாம் டைம்லயும் நீங்க சமைக்கறீங்கண்ணா... அப்புறம் உங்க கண்ணுல இருக்க அந்த சோகம். உங்க அம்மா சமீபத்திலதான் தவறியிருக்கணும்னு நினைக்கிறேன்."

"ஆமா." கொஞ்சம் சோகமானவள் "கவர்ண்மென்ட் வேலையில அப்பா, ஸ்கூல் போற தம்பி எல்லாம் எப்படி கரெக்டா சொன்னீங்க."

"நீங்க வெச்சிருக்கிற நோட் புக், பேனா இரண்டும் கவர்ண்மென்ட் ஆஃபீசுல பார்த்திருக்கேன். இதை நீங்க யூஸ் பண்றீங்கண்ணா.. அப்பா கவர்மெண்ட் வேலையில இருக்கணும்."

சிரித்தாள்.

"அப்புறம் உங்க இடது கைவிரல்கள்ல கண்ணு மூக்கு வச்சு பொம்மை வரைஞ்சிருக்கு. காலேஜ் போற பொண்ணு கையில இப்படி எதாவது இருக்குன்னா, இந்த மாதிரி வரைஞ்சிவிட ஸ்கூல் போகிற மாதிரி தம்பியோ தங்கச்சியோ இருக்கணும்.".

"வாவ். எல்லாமே கரெக்ட். நீங்க நிஜமாவே துப்பறியும் ஜீனியஸ்."

"தாங்ஸ்".

"உங்களைப் பத்தி நான் சொல்லவா. யூஸிங் த சேம் பவர் ஆஃப் டிடக்சன்".

"ரியலி. சொல்லுங்க பார்ப்போம்.".

"முதல்ல நீங்க ஒரு துப்பறியும் நிபுணர் இல்லை. இரண்டாவது நீங்க அசோக் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர். மூணாவது நீங்க எங்க அப்பா எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை".

"எப்படி கண்டுபிடிச்சீங்க. உங்க போட்டோவைதான் உங்க அப்பா கொடுத்தாரே தவிர என்னோட போட்டோவை நான் தரவேயில்லையே."

"அசோக் நகர் எஸ்.ஐ. அப்படின்னு அப்பா சொன்னதும் நான் என் ஃபிரண்ஸோட நேத்தே உங்களை நோட்டம் விட்டாச்சு. நீங்கதான் லேட்."

சிரித்தான். "உங்க அப்பா உன்னை பத்தி எல்லாமே சொன்னாரு. ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் கதைகள் உனக்கு பிடிக்கும்னு சொன்னார்".

"அதையெல்லாம் வச்சிக்கிட்டுதான் புதுசா கண்டுபிடிச்சா மாதிரி கதை விட்டீங்களாக்கும். நீங்க இன்னைக்கு காலையில இருந்து என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கிறது எனக்கு தெரியும்."

சிரித்தான் "உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா."

இவ்வளவு நேரம் படபடவென பேசிக் கொண்டிருந்தவளிடம் மெளனம். தலைகுனிந்தவாறு சொன்னாள் "பிடிச்சிருக்கு.."

அவன் சிரித்தான். அவளும். ரயில் இந்த காதல் நாடகத்தை பாராதது போல் ஓடிக்கொண்டிருந்தது.

27 comments:

said...

ரசிச்சேன். ரசிச்சேன். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பர்! நம்ம பசங்க பிட்டு போட இன்னும் ஒரு ஐடியா குடுத்துட்டீங்களே!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Amazing story!!!
wonderfully narrated!!

Kudos!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்கல் அண்ணாத்த :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//G.Ragavan said...
ரசிச்சேன். ரசிச்சேன். :)

//

ரசித்தமைக்கு நன்றி ராகவன்.

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆகா சூப்பர் கதை - அவனுக்கு அவள் சளைத்தவள் இல்ல - போலீஸ் உத்யோகம் - துப்பறியும் வேலை ரெண்டும் ஒண்ணு தான். கதை அழகாப் போய் அருமையா முடியுது

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவசக்கொத்தனார் said...
//சூப்பர்! நம்ம பசங்க பிட்டு போட இன்னும் ஒரு ஐடியா குடுத்துட்டீங்களே!!
//

நன்றி கொத்தனார்.

பிட்டு எங்க செட்டு ஆகுமோ அங்கதான் போடமுடியும். ஜஸ்ட்டு மிஸ் ஆனாலும் ரிவிட்டுதான். :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

CVR said...
//Amazing story!!!
wonderfully narrated!!

Kudos!!
//

தாங்ஸ் சி.வீ.ஆர். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்கல்ஸ் அரை பிளெடு..........ரொம்ப ரசித்தேன் உங்க கதையை,
சூப்பர்!! பாராட்டுக்கள்!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கப்பி பய said...
கலக்கல் அண்ணாத்த :))//

நன்றி கப்பி :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

cheena (சீனா) said...
//ஆகா சூப்பர் கதை - அவனுக்கு அவள் சளைத்தவள் இல்ல - போலீஸ் உத்யோகம் - துப்பறியும் வேலை ரெண்டும் ஒண்ணு தான். கதை அழகாப் போய் அருமையா முடியுது//

நன்றி சீனா.

முதல்ல இதெல்லாம் நீங்களா கண்டுபிடிக்கிற அளவுக்கு பெரிய துப்பறியும் நிபுணர் இல்லை நீங்க அப்படின்றதுதான் அந்த பெண் சொல்ல வந்தது.

மற்றபடி போலீஸ்காரர்கள் எல்லாம் துப்பறிய வேண்டியவர்களே. :)

கதையை பாராட்டியதற்கு தாங்ஸ். :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)))... attakaasam... puditchida vendiyathuthaan... Sherlock holmesaa ;))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பார்க்க நல்லவிதமாய்த் தோன்றினாலும் அவன் பார்வை சரியில்லை என்று நினைத்தாள்.//

இந்த ஒரு வரியைத் தவிர்த்துப் பார்த்தால், கதை சூப்பர்.

அதைச் சொல்லாமலேயே அவள் எழுந்து வேறிருக்கையில் அமர்ந்தாள் எனச் சொல்லியிருக்கலாம்.

அப்படியே, உங்க கிராப்பைப் பார்த்தாலே தெரியாதா நீங்க ஒரு போலீஸ்காரர்னு எனச் சொல்லி அவனையும் வியக்க வைத்திருக்கலாம்!

ரசிக்கும்படியான காதல் கதை!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//Divya said...
கலக்கல்ஸ் அரை பிளெடு..........ரொம்ப ரசித்தேன் உங்க கதையை,
சூப்பர்!! பாராட்டுக்கள்!!
//

நன்றி திவ்யா. காதல் கதையெழுதி நாளோச்சேன்னு எழுதியது. பாராட்டுக்கு நன்றி.

ஜி said...
//:)))... attakaasam... puditchida vendiyathuthaan... Sherlock holmesaa ;))
//

தாங்ஸ் ஜி..
புடிச்சிடலாம். ஆனா ஜாக்கிரதை. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்குறீங்களே - நாகூர் இஸ்மாயில்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல கதையை படிக்கும் போது ஒரு புன்னகை வருது...;))

சூப்பர் ;)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கதையும் கற்பனையும் ரொம்ப சூப்பர்.. சந்தோஷமான முடிவு ரொம்ப ரொம்ப சூப்பர்..

-------------------------------------------------------------------------------------------------------------
said...
This comment has been removed by a blog administrator.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

VSK said...

//பார்க்க நல்லவிதமாய்த் தோன்றினாலும் அவன் பார்வை சரியில்லை என்று நினைத்தாள்.//

இந்த ஒரு வரியைத் தவிர்த்துப் பார்த்தால், கதை சூப்பர்.

அதைச் சொல்லாமலேயே அவள் எழுந்து வேறிருக்கையில் அமர்ந்தாள் எனச் சொல்லியிருக்கலாம்.

அப்படியே, உங்க கிராப்பைப் பார்த்தாலே தெரியாதா நீங்க ஒரு போலீஸ்காரர்னு எனச் சொல்லி அவனையும் வியக்க வைத்திருக்கலாம்!

ரசிக்கும்படியான காதல் கதை!//

VSK...

அவளுக்கு அவனைத் தெரியவே தெரியாது அப்படின்ற பில்ட் அப்ப கொடுக்கத்தான் அந்த வரி :))

ரசித்தமைக்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

nagoreismail said...
//கலக்குறீங்களே - நாகூர் இஸ்மாயில்//

நன்றி நாகூர் இஸ்மாயில் அவர்களே.

கோபிநாத் said...
//தல கதையை படிக்கும் போது ஒரு புன்னகை வருது...;))

சூப்பர் ;)
//
தாங்ஸ் கோபி.

ரசிகன் said...
//கதையும் கற்பனையும் ரொம்ப சூப்பர்.. சந்தோஷமான முடிவு ரொம்ப ரொம்ப சூப்பர்..//

ரசிகன்.
ஒரு கதையை இதுக்கு மின்ன படு சீரியஸ்ஸா எழுதிட்டோம்னு ஃபீல் பண்ணி லைட்டா எழுதலாம்னு எழுதிய கதை :))
நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

;-) kalakkal

-------------------------------------------------------------------------------------------------------------
said...

WOW..... சூப்பருங்கண்ணா... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கானா பிரபா said...
;-) kalakkal
//

//
இராம்/Raam said...
WOW..... சூப்பருங்கண்ணா... :)
//

நன்றி கானா பிரபா மற்றும் இராம் :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல கதை சாரே.

ரொம்ப நன்னா இருந்தது.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அழகான நடை.. ரசிக்க வைக்கிறது.. :-) இப்போதான் சர்வேசனின் எழுதியதில் பிடித்தது பதிவிலிருந்து வந்து பாத்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,

//Vஸ்K...

அவளுக்கு அவனைத் தெரியவே தெரியாது அப்படின்ற பில்ட் அப்ப கொடுக்கத்தான் அந்த வரி :))// அப்படின்னா இந்த வரி \\அசோக் நகர் எஸ்.ஐ. அப்படின்னு அப்பா சொன்னதும் நான் என் ஃபிரண்ஸோட நேத்தே உங்களை நோட்டம் விட்டாச்சு. நீங்கதான் லேட்\\

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சர்வேசன்.

உங்க லிங்க் மூலமா நிறைய பேர் இந்த கதைய படிச்சிருக்காங்க. தாங்ஸ்.

----

நன்றி Bee'morgan.

-------

நக்கீரன்..

பேருக்கேத்த மாதிரி தப்பு கண்டுபிடிக்கறீங்களே. :)

அதுதான் சொல்லிட்டனே. அவளுக்கு அவனை தெரியும். அது தெரியாத மாதிரி கொடுக்கற பில்ட் அப். :))

-------------------------------------------------------------------------------------------------------------