சிறைச்சாலை மற்றும் அலுவலகம். ஒரு ஒப்பீடு.
ஜெயில் என்பது பெரும்பாலும் 8 x 10 அடியாவது உள்ள அறை.
அலுவலகம் என்பது 6 x 8 அடி மட்டுமே உள்ள க்யூபிக்கிள். (தடுப்பு)
ஜெயிலில் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும்.
ஆஃபீசில் ஒரே ஒரு உணவு இடைவேளை. அந்த உணவுக்கும் நாம்தான் காசு தரவேண்டும்.
ஜெயிலில் நன்னடத்தைக்கு ஜெயில் காலம் குறைக்கப்படும்.
ஆஃபீசில் நன்னடத்தைக்கு அதிக வேலைநேரம் கிடைக்கும்.
ஜெயிலில் காவலாளிகள் நமக்காக கதவுகளை திறப்பர். பூட்டுவர்.
ஆஃபீசில் கழுத்தில் ஒரு அட்டையை தொங்க விட்டுக்கொண்டு கதவுகளை நாம்தான் திறக்கவேண்டும்.
ஜெயிலில் டிவி பார்க்கலாம். விளையாடலாம்.
ஆஃபீசில் டிவி பார்த்தாலோ விளையாடினாலோ வெளியேற்றப்படுவோம்.
சிறையில் ஒவ்வொரு செல்லிலும் தனிக் கழிப்பிட வசதி.
ஆஃபீசில் பொதுகழிப்பிடம்தான்.
சிறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நம்மை பார்க்க வரலாம்.
அலுவலகத்தில் குடும்பத்தினரோ நண்பர்களோ நம்மை வந்து பார்க்கமுடியாது.
சிறையில் நமக்கு ஆகும் செலவுகளை வரிகட்டுவோர் ஏற்றுக் கொள்வர்.
அலுவலகத்தில் அலுவலகம் செல்ல ஆகும் அனைத்து செலவையும் நாமே ஏற்பதோடு, யாரோ சிறையில் அனுபவிப்பதற்காக நாம் வரியும் கட்டுகிறோம்.
சிறையில் நமக்கு எது நடந்தாலும் கேள்வி கேட்க மனித உரிமைக் குழுக்கள் இருக்கின்றன.
அலுவலகத்தில் 14 மணிநேரம் உழைத்தாலும் கேள்வி கேட்க யாரும் கிடையாது.
சிறையில் "பார்" கம்பிகளுக்கு உள்ளிருந்து கொண்டு எப்போது வெளியே போவோம் என்று யோசிப்போம்.
அலுவலகத்தில் பெரும்பாலான நேரம் "பாருக்குள்" செல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்போம்.
சிறையில் சாடிச மனப்பான்மை உள்ள வார்டன்கள் இருப்பார்கள்.
அலுவலகத்திலும் இது போல சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு டேமேஜர், சாரி மேனேஜர் என்று பெயர். :)))
முடிவு செய்யுங்கள். எது சிறந்தது. அலுவலகமா? சிறைச்சாலையா ?
Thursday, November 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//
நல்ல ஒப்பீடு.
//
இரட்டை ஆயுள் தண்டனைகள் தவிர்த்து சிறையில் அதிகமாக 14 ஆண்டுகள், ஆனால் அலுவலகத்தில் 58 வயதுவரை !
-------------------------------------------------------------------------------------------------------------
//இரட்டை ஆயுள் தண்டனைகள் தவிர்த்து சிறையில் அதிகமாக 14 ஆண்டுகள், ஆனால் அலுவலகத்தில் 58 வயதுவரை !//
அட ஆமாமில்லை.
ஆனா இதை விட மோசமான இன்னொரு சிறை இருக்கு. கல்யாண பந்தம். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் :)))
நன்றி கோவி.கண்ணன்.
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment