பெண்கள் புகுந்த வீட்டுக்கு போய்த்தான் தீரவேண்டுமா.
பெண்கள் மாமியாரோடு வாழ்ந்துதான் தீர வேண்டுமா.
கணவனுக்காக தியாகம் செய்து பெண் வாழவேண்டுமா.
உப்புமாவை பெண்தான் கிண்ட வேண்டுமா. இது என்ன பெண் அடிமைத்தனம். ஆண் கிண்டினால் உப்புமா வராதா.
குடும்பம் என்ற அமைப்பிற்காக பெண் ஓடாய்த்தேய வேண்டுமா.
மாமியார் என்ற ராட்சசியிடம் பெண் ஏன் கஸ்டப்படவேணும். (மாமியார்ன்றவங்க பெண்தான்றத வசதியா மறந்துடுங்க. ப்ளீஸ்.)
ஒரு ஆணுக்கு மாமியார் வீட்டுக்கு போவது மானப்பிரச்சனைன்னா பொண்ணுக்கும் அது மானப்பிரச்சனைதான் இல்லையா.
ரொம்ப கரெக்ட். இன்னா பண்ணலாம்.
கல்யாணம் பண்ண கையோட ஆண் மானத்தோட தன்னோட வீட்ல மட்டும் வாழணும். அதே மாதிரி பெண்ணும் மானத்தோட தன்னோட வீட்ல வாழணும்.
இவங்க எதுக்கு ஒருத்தர் மானத்தை ஒருத்தர் விட்டுக்கொடுத்துட்டு அடுத்தவங்க வீட்ல போய் வாழணும்ன்றேன்.
கல்யாணம் பண்ண கையோட ஆணும் பெண்ணும் மானத்தோட தனித்தனியா வாழ்ந்துட்டா பிரச்சனை சால்வ்டு.
இல்லை சேர்ந்துதான் வாழணுமா. இன்னா பண்ணலாம்.
இந்த மாமியார்.. மாமனார் கொடுமை எல்லாம் பொண்ணுக்கு வரக்கூடாது.
பையன் கல்யாணம் ஆன கையோட "இந்தா நைனா. இந்தாம்மா. எதோ பெத்தீங்க. வளர்த்தீங்க. உங்க கடமை முடிஞ்சி போச்சி. செத்தீங்கன்னா செய்தி சொல்லுங்க. வந்து கொள்ளி போடறேன்"னு சொல்லிட்டு கிளம்பி வந்துடணும்.
அதே மாதிரி பொண்ணும் அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடணும்.
அப்பாலிக்கா மானப் பிரச்சனை இல்லாம இரண்டு பேரும் வாழலாம்.
அப்பாலிக்கா டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்.
ஆண் இருபதாயிரம் வாங்குறானா. பொண்ணு பத்தாயிரம் வாங்குதா. ஆண் ஒரு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு இரண்டு வேளை சமைக்க வேண்டியது.
பொண்ணு இருபதாயிரம் வாங்குது. பையன் பத்தாயிரம் வாங்குறானா. பையன் இரண்டு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு ஒரு வேளை சமைக்க வேண்டியது.
பையன் மட்டும்தான் வேலைக்கு போறான்னா பொண்ணு சமைக்க வேண்டியது.
பொண்ணு மட்டும்தான் வேலைக்கு போகுதுன்னா பையன் சமைக்க வேண்டியது.
ரிஜிஸ்டர் ஆஃபீசுல கையெழுத்து போடறதுக்கு மின்னாடியே இந்த அக்கரிமெண்டை கரீக்டா எழுதிக்கணும்.
சமத்துவத்தை கரீக்டா நிலை நாட்டணும் இல்லை.
இன்னாமோ சொல்றாங்களேப்பா. அன்பு, பாசம் அப்படின்னு இன்னான்னாமோ. அதெல்லாம் இன்னாத்துக்கு சொல்லு.
அன்பும் பாசமும் மட்டுமே இருந்துச்சின்னா அடுத்தவேளை சோறு வந்துடுமா இன்னா.
டப்புதான் எல்லாமே. இன்னான்ற.
குழந்தைங்களுக்கு கதைசொல்றதுக்காவது தாத்தா பாட்டி வோணும்னு கதையா விடுறீங்க.
டிவியை திருப்புனா நூறு சானல் வருது. இதுல சொல்லாத கதையா அவங்க சொல்ல போறாங்க.
கதை சொல்றதுக்காக இரண்டு கிழடு கட்டைங்கள வெச்சிக்கிட்டு வடிச்சுக் கொட்டிக்கினு இருக்க முடியாது. கரீட்டுதானே.
உலகம் எங்கியோ போய்க்கினு கீது. இன்னமும் "கூட்டு" குடும்பம் "பொறியல்" குடும்பம்ன்னு கிட்டு.
சின்ன குடும்பமா இருந்தா வசதியான "பீட்சா" குடும்பமா "கோக்" குடும்பமா இருக்கலாம் இல்லை.
புள்ள எல்லாம் பொறுமையா பெத்து போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டா போச்சு. வசதிதான் முக்கியம்.
சிந்தியுங்க. புருசன் பொண்டாட்டி இரண்டுபேரு மட்டும் சந்தோசமா இருக்கணும்னா அப்பா அம்மாவை அடிச்சு தொறத்தறது தப்பே இல்லை.
நம்ம வாழ்க்கை நம்ம சந்தோசந்தான் முக்கியம்.
அதைவிட பெண்ணுரிமை ரொம்ப ரொம்ப முக்கியம்.
பொண்ணுக்கு வாழ்க்கையில வரக்கூடாத பெரிய கஷ்டம் மாமியார் கஷ்டம். அதை அவங்களுக்கு கொடுத்துடாதீங்க.
யோசிங்க ஆண்களே. யோசிங்க.
பெண்ணுரிமைய கட்டிக் காப்பாத்த கிளம்பி வாங்க.
(பொண்ணு மாமியார் வூட்டுக்கு போவக்கூடாதுன்னு எயுதறதுதான் பெண்ணுரிமையாம்.
அடடா. நானும் ஒரு பெண்ணரிமை கட்டுரை எயுதிட்டேன்ல. :)))))
பின்குறிப்பு:
நாட்டுல நிறைய கல்யாணமாகாத ஆண்கள் இந்த ரேஞ்சுலதான் பெண்ணுரிமைய பத்தி எயுதி பதிவு போட்டுக்னு கீறாங்கோ.
இதெல்லாம் ஒரு வியாதி. அவ்வளவுதான்.
கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் பூடும்.
கல்யாணம் ஆயிருச்சின்னா இந்த மாதிரி பதிவு போடுவாங்கன்றீங்க.
ஒண்ணு பதிவு போடக்கூட சுதந்திரம் இல்லாம பதிவுலக விட்டு காணாம போய்டுவாங்க.
இல்லாட்டி எதாவது ஒரு மூலையா இருந்து வைஃபாலஜி, லைஃபாலஜின்னு கதறிக்னு இருப்பாங்க.
19 comments:
"கல்யாணம் ஆயிருச்சின்னா இந்த மாதிரி பதிவு போடுவாங்கன்றீங்க.
ஒண்ணு பதிவு போடக்கூட சுதந்திரம் இல்லாம பதிவுலக விட்டு காணாம போய்டுவாங்க.
இல்லாட்டி எதாவது ஒரு மூலையா இருந்து வைஃபாலஜி, லைஃபாலஜின்னு கதறிக்னு இருப்பாங்க. "
சரி இப்ப முடிவா என்ன சொல்லவாறீங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
"கொள்கைகள் ஏதுமில்லாதவன்."
ஓ இது வேறா. அட நான் இதைக்கவனிக்கவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
உங்க வீட்டுக்கு சமீபத்தில் தமிழ் சானல் கனெக்க்ஷன் வந்திருக்கு சரியா?
நிறைய சீரியல் தொடர்ச்சியா பார்க்க ஆரம்பிச்சிருக்கீங்க சரியா?
;)
-------------------------------------------------------------------------------------------------------------
வருக நளாயினி அவர்களே.
நமக்கு கொள்கைகள் ஏதுமில்லைதான். :))
சில பெண்ணியக் கட்டுரைகளை படித்த போது எந்த வித தெளிவும் சரியான வாதங்களும் இல்லாமல் அவை பெண்ணியம் பேசுவதான தோற்றம் கிடைத்தது.
பெண்ணியம் என்பது என்னவென்ற புரியாமல்தான் பெரும்பாலோர் பெண்ணியம் பேசுகிறோம் என்று நினைக்கிறேன்.
அதன் விளைவே இப்பதிவு.
என்னைப் பொறுத்த வரை ஒரு ஆணும் பெண்ணும் மனது ஒருமித்து தங்களுக்கு உள்ள கடமைகளை பொறுப்புகளை புரிந்து கொண்டு வாழ்வை தாமே எடுத்துச் செல்வதுதான் வாழ்க்கை. பொறுப்புகளை தூக்கிப்போட்டுவிட்டு சுதந்திரமாக இரு என்று சொல்வதை பெண்ணியம் என்று என்னால் பார்க்க முடியவில்லை.
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
//பெண்ணியம் என்பது என்னவென்ற புரியாமல்தான் பெரும்பாலோர் பெண்ணியம் பேசுகிறோம் என்று நினைக்கிறேன்.//
சொல்லுங்களேன்.பெண்ணியம்னா என்ன? பெண்ணியத்தின் உட்கூறுகள் என்ன? பெண்ணியத்தினடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்தான் என்ன? தலித் பெண்ணியம்னா என்ன? அவற்றில் தலித் இலக்கியங்களின் பங்கு என்ன? பெண்களின் உச்சகட்ட எல்லைகள்தான் என்ன?
சமையல் என்பது பெண்களுக்கு மட்டுமே என்று இருக்கும் நிலை சரியா தவறா? கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களிலும் மனைவியே ச்மைக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறதே அது தவறாய்த் தோண வில்லையா? அதையே ஆண்கள் கொஞம் ச்மையலில் உதவி செய்தாலே எதோ தியாகி ரேஞ்சுக்கு சமூகம் பேசுகிறதே அது யார் தவறு?
இன்னும் எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்லி எதுதான் உண்மையான பெண்ணியம் என்று நீங்கள்தான் ஒரு பதிவு போடுங்களேன். நாங்களும்தான் தெரிந்து கொள்கிறோம்.
http://blog.nandhaonline.com
-------------------------------------------------------------------------------------------------------------
கானா பிரபா said...
//உங்க வீட்டுக்கு சமீபத்தில் தமிழ் சானல் கனெக்க்ஷன் வந்திருக்கு சரியா?
நிறைய சீரியல் தொடர்ச்சியா பார்க்க ஆரம்பிச்சிருக்கீங்க சரியா?
;)//
சீரியல்கள் எல்லாம் நாம பார்க்குறது இல்லைங்க.
தமிழ்ப்பதிவுகள் நிறைய பெண்ணியம் பேசிக்கிட்டு வருது. அதையெல்லாம் படிச்ச பின்னாடி நமக்கு பெண்ணியம்னா இன்னான்னு புரிஞ்சுதோ அதைத்தான் இங்க சொல்லியிருக்கேன். :))
-------------------------------------------------------------------------------------------------------------
ஆஹா! கிளம்பிட்டாங்கய்யா!!!!!!!!!!!
-------------------------------------------------------------------------------------------------------------
நந்தா said...
//சமையல் என்பது பெண்களுக்கு மட்டுமே என்று இருக்கும் நிலை சரியா தவறா?//
கணவனுக்கு அலுவலக உத்யோகம் மனைவி வீட்டிலேயே என்ற அளவில் இது ஓரளவுக்கு சரி என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பெண்ணியம் காப்பதற்காக அலுவலகம் செல்லும் கணவன் தானே சமைத்து எடுத்து செல்வதோடு வீட்டிலிருக்கும் மனைவிக்கும் சமைத்து வைத்து விட்டு செல்ல வேண்டுமோ.
//கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களிலும் மனைவியே ச்மைக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறதே அது தவறாய்த் தோண வில்லையா?//
கணவன் மனைவி வேலைக்கு போகும் வீடுகளில் வீட்டில் இருக்கும் மாமியாரும் இருந்தால் 99 சதவீதம் அவர்கள்தான் சமைக்கிறார்கள். மாமியார் கட்டி கொடுத்தார் என்று சாப்பாட்டு டப்பாவை எடுத்து வரும் தோழிகளை தினமும் பாரக்கிறோமே.
அதே நேரத்தில் மாமியார் இல்லாத உடன் பணிபுரியும் தோழிகள் நம்மோடு அலுவலக கேண்டீனில்தானே அவர்களும் சாப்பிடுகிறார்கள். (அவரும் அவர் ஆஃபீஸ் கேண்டீன்ல சாப்பிட்டுப்பாரு.
)
இரவு உணவுக்கு நகரத்தின் நல்ல உணவு விடுதியில் இருவருமாக. பணம்தான் இருக்கிறேதே. :))
//அதையே ஆண்கள் கொஞம் ச்மையலில் உதவி செய்தாலே எதோ தியாகி ரேஞ்சுக்கு சமூகம் பேசுகிறதே அது யார் தவறு?
//
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க. நானுந்தான் காய்கறிவெட்டுறேன். பாத்திரமெல்லாம் கழுவுறேன். இத்தனைக்கும் வீட்டில் இருக்கும் மனைவி.
வீட்டுல நமக்கு தியாகி பட்டமெல்லாம் வேணாம். மனுசனா மதிச்சா போதாதா.
//
சொல்லுங்களேன்.பெண்ணியம்னா என்ன? பெண்ணியத்தின் உட்கூறுகள் என்ன? பெண்ணியத்தினடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்தான் என்ன? தலித் பெண்ணியம்னா என்ன? அவற்றில் தலித் இலக்கியங்களின் பங்கு என்ன? பெண்களின் உச்சகட்ட எல்லைகள்தான் என்ன?
//
அய்யோ. நமக்கு அம்புட்டெல்லாம் தெரியாதுங்க. ஏதோ வேலைக்கு போனமா. திரும்பி வந்தா வீட்டுலயே இருக்க வீட்டுக்காரம்மா சமைச்சதை சாப்பிட்டமா. (வெந்துச்சோ வேகலையோ இந்த மாதிரி ஒரு சாப்பாடு எங்கயுமே கிடைக்காதுன்னு சொன்னமா.)
சமைக்கலையா.. ரத்னா கஃபேவா இல்லை வசந்த பவனா இல்லை சரவணபவனா அப்படின்னு கேட்டு அவங்களை கூட்டிட்டு போனமா. இல்லை ஒரு பார்சல் வாங்கிட்டு வந்தமா அப்படின்னு இருந்தமா.
நாம அவங்களை விட சூப்ரா சமைச்சாலும் நம்மை சமைக்க விட மாட்டாங்க. ஏதாச்சும் குறை சொல்லுவாங்க. அவங்க கை நம்மை விட எப்பவுமே கொஞ்சம் மேல இருக்கணும் பாருங்க. கிச்சன் கேபினெட்டை விட்டுத் தராம இருந்தாதான் ஆட்சி நடத்த முடியும்னு அவங்களுக்கும் தெரியும்.
//
இன்னும் எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்லி எதுதான் உண்மையான பெண்ணியம் என்று நீங்கள்தான் ஒரு பதிவு போடுங்களேன். நாங்களும்தான் தெரிந்து கொள்கிறோம்.
//
நான் சொல்லியோ மத்தவங்க சொல்லியோ எல்லாம் பெண்ணியம்னா இன்னான்னு புரிஞ்சிடாதுங்க.
கல்யாணம் பண்ணாலே பெண்ணியம்னா என்னான்னு புரிஞ்சிடும். ஒருத்தங்க வந்து வாழ்க்கை முழுக்க பெண்ணியத்தை பத்தி டியூசன் எடுப்பாங்க. மண்டைய மண்டைய ஆட்ட வேண்டியதுதான்.
ஆமா. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.
பெண்ணியம் பேசறது வேற. நடைமுறைன்றது வேற. அதெல்லாம் சொன்னா புரியாது. பட்டாதான் புரியும்.
-------------------------------------------------------------------------------------------------------------
//இல்லாட்டி எதாவது ஒரு மூலையா இருந்து வைஃபாலஜி, லைஃபாலஜின்னு கதறிக்னு இருப்பாங்க//
என்னை வச்சு காமடி கீமடி பண்ணலையே??
-------------------------------------------------------------------------------------------------------------
//ஆமா. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.
பெண்ணியம் பேசறது வேற. நடைமுறைன்றது வேற. அதெல்லாம் சொன்னா புரியாது. பட்டாதான் புரியும்.//
இன்னும் ஆகலை. ஆனாலும் கேவலமான் மனிதனாய் நடந்து கொள்ள மாட்டேன். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எவரேனும் அப்படி நடந்து கொள்ள வில்லை என்பதற்காக எல்லாரும் அப்படி இருக்க மாட்டார்கள் அல்லவா??
என்னுடைய பல கேள்விகளிற்கு ஒரு வித நகைச்சுவையுடனேதான் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இவையாவும் பொதுமைப்படுத்தி சொல்ல முடியாது அல்லவா?
சென்னையிலேயே IT கம்பெனியில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து சமையலையும் முழு பொறுப்பெடுத்துக் கொள்ளும் பல பெண்களை எனக்குத் தெரியும்??? உங்கள் வீட்டில் ஓ.கே. மத்தவங்க வீட்டில இப்படி இருக்கிறதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க.
எனது உறவினர்களில் சில பெண்கள் அவங்க வீட்டிலிருந்து தன்னோட அப்பா அம்மாவுக்கு போன் பண்ண ரொம்ப யோசிப்பாங்க. மிஸ்டு கால் கொடுக்கிறேன்மா, நீங்களே பண்ணுங்க. போன வாரம்தான் என் மாமியார் நடு ஹால்ல நின்னுக்கிட்டு வர வர ஃபோன் பில்லு அதிகமாய்க்கிட்டே போகுது, நானும் பண்றதில்லை, யார்தான் பண்றாங்களோன்னு அவரு ஆஃபிஸ் போனதுக்கப்புறம் கத்தினாங்கன்னு சொல்லி வருத்தப்பட்ட பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யெஸ், சென்னையில ஒவ்வொரு பொண்ணும் செல்ஃபோனைக் கையில வெச்சுக்கிட்டு நடமாடிக்கிட்டு இருக்கிற அதே காலகட்டத்துலதான், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஒரு மூலையில் இருக்கிற ஊர்களில் இந்த நிலைமை இருக்கு.
நமக்கெல்லாம் (ஆண்களுக்கு) இந்த மாதிரி பிரச்சினைகள் வராது. அதனால் புரியாமலேயே போகலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------
பினாத்தல் சுரேஷ் said...
//என்னை வச்சு காமடி கீமடி பண்ணலையே??//
சுரேஷ்.
காமெடியெல்லாம் இல்லைங்க.
உங்கள் அந்த தொடரின் தீவிர ரசிகன் நான்.
அட நம்மைப்போலவே இதோ இன்னொரு சக அப்பாவி இருக்கிறாரே என்ற எண்ணம்தான்.
பெண்ணரிமை மற்றும் ஆணுரிமை குறித்த விவாதங்களின் மற்றொரு முகத்தை கொண்டு வரும் தொடரல்லவா அது.
அது காலத்தின் தேவை.
தொடர்க உங்கள் பணி. :)))
-------------------------------------------------------------------------------------------------------------
//இன்னும் ஆகலை. ஆனாலும் கேவலமான் மனிதனாய் நடந்து கொள்ள மாட்டேன். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எவரேனும் அப்படி நடந்து கொள்ள வில்லை என்பதற்காக எல்லாரும் அப்படி இருக்க மாட்டார்கள் அல்லவா??
//
நன்று நந்தா. உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் பாராட்டுக்கு உரியவை. தவறாக நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். மறுக்கவில்லை.
ஆனால் ஆண்கள் மட்டுமே தவறு செய்வதாய் தொடர்ந்த கட்டமைப்பின் அடிப்படையில் நின்றுதான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
தவறுகள் இரண்டு பக்கமும் நடக்கின்றன.
எனது ஒன்று விட்ட அக்காள் ஒருவர். ஆசிரியை. மாமாவிற்கு வேலை போய்விட்டது. இவள் அவரை மதிப்பதில்லை. ஒரு முறை இவள் அவரை விறகு கட்டையை கொண்டு நன்றாக அடித்துவிட்டாள்.
அடிகளோடு கட்டுப்போட்டுக்கொண்ட அந்த ஆணுக்கு பரிந்து பேச எந்த ஆணுரிமை அமைப்புகள் வரப்போகின்றன. கையாலாகாதவன் என்று இந்த சமூகம் அவரை கேலி பேச மட்டும்தானே செய்தது.
மாமியாரால் கொடுமை படுத்தப்படும் மருமகள்கள் என்று மட்டுமே பேசும் பெண்ணுரிமை வாதிகளுக்கு மருமகள்களால் கொடுமைப்படுத்தப்படும் மாமியார்கள் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை. மாமியார்கள் பெண் இல்லையா.
எனது சொந்த ஊர் சென்னை இல்லை. நான் பார்த்தவரை பெண்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் ஆண்கள்தான் அதிகம்.
நம்மிடம் இருக்கும் பிரச்சனை நம்மை சுற்றி இருப்பவர்களை பார்க்காமல் பத்திரிகை மற்றும் ஊடகங்களால் கட்டி அமைக்கப்பட்ட பிம்பங்களை பார்த்து அதற்கேற்றாற் போல் மட்டும் சிந்திப்பது. ஊடகங்கள் தரும் பெண்ணுரிமை குறித்த கருத்துக்களையே நாமும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இதனால் உண்மையான பிரச்சனைகளிலிருந்து வெளியே வெகுதூரம் வந்துவிட்டோம்.
//எனது உறவினர்களில் சில பெண்கள் அவங்க வீட்டிலிருந்து தன்னோட அப்பா அம்மாவுக்கு போன் பண்ண ரொம்ப யோசிப்பாங்க.//
எனது வீட்டில் நிலைமையே தலைகீழ். எனது மனைவி தினமும் தனது அம்மா மற்றும் வீட்டினருடன் பேசுவார். நான் வாரம் ஒருமுறை மட்டும். அவர் என்ன பேசுகிறார் என்பதை நான் கேட்கக்கூடாது. ஏனெனில் அது அவரது பர்சனல். ஆனால் நான் எனது தாய் தந்தையரிடம் என்ன பேசுகிறேன் என்பது முழுவதும் அவருக்கு தெரிந்தாக வேண்டும். இதுதான் எனக்கு கிடைத்த ஆணுரிமை. இருந்தாலும் அவரது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி என்று நான் நினைப்பதால் குறை சொல்ல ஏதுமில்லை. இதுவே தலைகீழாக இருந்தால் குறைசொல்லப் பட்டுக்கொண்டு நான் குற்றவாளியாக நின்றிருப்பேன்.
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 300 ரூபாய் போன் பில் என்பது 600 ரூபாயாக வரும்போது சில கேள்விகள் எழத்தான் செய்யும். இது எல்லாம் குடும்பத்தின் நிதிநிலை வசதி சார்ந்த பிரச்சனைகள். இதெல்லாம் பேசி சரிசெய்யப்பட வேண்டிய விஷயங்கள். இதற்காக மாமியாரை வீட்டு விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படிதான்.
அதற்காக நடு ஹாலில் நின்று மாமியார் கத்தினார் என்று சொன்னால் தவறு மாமியார் மீதுதான். பதிலுக்கு தாங்களும் நடு ஹாலில் நின்று கத்தி விட்டு வந்துதான் நமது 95 சதவீத சகோதரிகள் குறை சொல்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது. நாம் கவலைப்பட வேண்டியது அமைதியாக இருக்கும் மீதமுள்ள அந்த 5 சதவீத சகோதரிகளுக்குத்தான்.
பெண்கள் இயல்பாகவே ஒன்றுமில்லாத பிரச்சனைகளை பெரிது படுத்தும் இயல்புடையவர்கள். ஆண் பெரும்பாலும் அமைதியானவனாகவே இருக்கிறான்.
குடும்ப அமைப்புகளில் வரும் சின்ன சின்ன பிரச்சனைகளை அன்பால் தீர்ப்பதை விட்டு விட்டு பூதக் கண்ணாடி கொண்டு பிரச்சனையை பார்த்து குடும்ப அமைப்பையே சிதைப்பது தீர்வாகாது.
நீங்கள் கேட்டதால் சற்று சீரியஸ்ஸாகவே பதில்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
புதுகைத் தென்றல் said...
//ஆஹா! கிளம்பிட்டாங்கய்யா!!!!!!!!!!!
//
வாங்க புதுகைத் தென்றல்.
உங்க ஹஸ்பெண்டாலஜி வித்தியாசமாத்தான் இருக்கு.
எழுதுங்க. நாம என்ன தப்பு செய்யறோம்னு தெரிஞ்சா திருத்திக்கலாம் இல்லையா. :))
-------------------------------------------------------------------------------------------------------------
என்னதான் பெண்ணியம் நிறைய பேசினாலும் கடைசியில் தாய் மகள் என வருகிறபோது மகளை அதிகவனம் என்ற போர்வையுள் எனது தாய் என்னை கட்டுப்பாட்டோடு வளர்த்த மாதிரியே பெண் குழந்தைகளை ஒடுக்கவே தலைப்படுவர். இது தான் உண்மை. குடும்பத்துக்குள் புரிந்துணர்வு வந்தாலேயே இது சாத்தியம். இல்லையேல் ஒருவரை ஒருவர் மிதித்து வாழும் நிலைதான்.சுதந்திரம் என்ற போர்வையை நாம்தான் வரையறுக்கவேணும். அந்த சுதந்திரமும் ஒரு கட்டுக்குள் இருந்தால் தான் அழகிய வாழ்வு. இல்லையேல் அதுவே நம்மை பலிகொள்ளும்.
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் பதிவில் நகைச்சுவையணர்வு நன்றாய் இருந்தது...சிரிக்க & சிந்திக்க வைத்தது..
பெண்ணியம் என்பது தனிப்பட்ட நபரின் ப்ரச்னைதான்..கிராமங்களில் மட்டுமே சமுதயாப் ப்ரச்னையாகப் பார்க்க வேண்டிய நிலை தற்போது..
-------------------------------------------------------------------------------------------------------------
//பெண்கள் இயல்பாகவே ஒன்றுமில்லாத பிரச்சனைகளை பெரிது படுத்தும் இயல்புடையவர்கள். ஆண் பெரும்பாலும் அமைதியானவனாகவே இருக்கிறான்.//
இது போன்ற பொடுமைப்படுத்தல்களை நான் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை.
//ஆனால் ஆண்கள் மட்டுமே தவறு செய்வதாய் தொடர்ந்த கட்டமைப்பின் அடிப்படையில் நின்றுதான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம்.//
இல்லை நான் அப்படிச் சொல்ல வில்லை. பெண்ணடிமைத்தனத்தின் ஒட்டு மொத்த காரணிகளே ஆண்கள்தான் என்று ஒட்டு மொத்தமாய்ப் பழியைத் தூக்கிப் போட வில்லை. இன்றைய காலகட்டத்தில் அந்த காரணிகளாக ஒரு சில ஆண்களும், பெண்களே கூட மாமியார்களாகவும், நாத்தனார்களாகவும், மருமகள்களாகவும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் இதற்கான ஆரம்பம் இது போன்ற கட்டமைவுகளை ஏற்படுத்திய ஆண்களால்தான் தொடங்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பின்பு மெல்ல பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களின் மனதிலேயே உரமேற்றி இப்போது, நான் ஏன் இப்படி இருக்க வேண்டும்? என்று எதிர் கேள்வி கேட்கும் பெண்ணை திமிர் பிடித்த பெண்ணாக சக பெண்களே நினைக்குமளவிற்கு அடி மனதில் ஆழப் பத்தித்துள்ளனர்.
//மாமியாரால் கொடுமை படுத்தப்படும் மருமகள்கள் என்று மட்டுமே பேசும் பெண்ணுரிமை வாதிகளுக்கு மருமகள்களால் கொடுமைப்படுத்தப்படும் மாமியார்கள் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை. மாமியார்கள் பெண் இல்லையா.//
இங்கே யாருமே மருமகள்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லவில்லையே. ஆதிக்கம் செலுத்துபவர் எவராயிருப்பினும் தவறுதான். இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.
//நம்மிடம் இருக்கும் பிரச்சனை நம்மை சுற்றி இருப்பவர்களை பார்க்காமல் பத்திரிகை மற்றும் ஊடகங்களால் கட்டி அமைக்கப்பட்ட பிம்பங்களை பார்த்து அதற்கேற்றாற் போல் மட்டும் சிந்திப்பது. ஊடகங்கள் தரும் பெண்ணுரிமை குறித்த கருத்துக்களையே நாமும் பேசிக்கொண்டிருக்கிறோம்.//
மன்னியுங்கள்.உண்மையான பிரச்சினைகளின் அடிப்படையில் அலசுகின்ற பலரையும் நான் அறிவேன்.
//ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 300 ரூபாய் போன் பில் என்பது 600 ரூபாயாக வரும்போது சில கேள்விகள் எழத்தான் செய்யும். இது எல்லாம் குடும்பத்தின் நிதிநிலை வசதி சார்ந்த பிரச்சனைகள். இதெல்லாம் பேசி சரிசெய்யப்பட வேண்டிய விஷயங்கள். இதற்காக மாமியாரை வீட்டு விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படிதான்.//
ஹல்லோ. மாமியார்களை வீட்டைவிட்டே வெளியேற்றுவதுதான் பெண்ணியத்தின் குறிக்கோள்னு யாருங்க சொன்னாங்க உங்களுக்கு? அப்புறம் இந்த 600 ரூபாய் மேட்டருக்கு வர்றேன். ஆண்கள் எப்படி தன் அப்பா அம்மாவுடனேயே இருக்க வேண்டும், அவர்களது உடல் நலனிலும், அன்றாடம் நடப்பவற்றை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதே அளவு எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பாசங்களும், பெண்களுக்கும் இருக்கும்.
கல்யாணம் கட்டிக்கிட்டு ஊரை விட்டே கூட்டிட்டு வந்துட்டு, ஃபோன் செய்யக் கூட நிதி நிலைமை அது இதுன்னு பேசிட்டு இருக்கோம். நாம வசதியா நம்ம அப்பா அம்மா கூடதான இருக்கோம். நமக்கு எப்படி அந்த உணர்வுகள் புரியும்.
இங்கே வேலை விஷயமாய் வேறு ஊரிலேயே தங்கி இருக்க வேண்டும் எனும் போது மட்டுமே தனிக்குடித்தனத்தின் பொருட்டு அப்பா அம்மாவை பிரிந்து இருக்கிறார்கள் ஆண்கள். ஆனால் எல்லா பெண்களும் 20 வயதுக்கு மேல் தனது பிறந்த வீட்டில் தான் தங்கும் நாட்களை எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனது பதிவில் நான் எழுதி இருந்த வார்த்தைகள் இவை. "யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களைப் பொறுத்த வரை ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி" இதை மறுக்க முடியுமா???
இங்கே என்ன தெரியுமா பிரச்சினை? ஆண்கள் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து இருக்க ஒருக்காலும் ஒத்துக் கொள்வதில்லை. பெண்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் அடம் பிடித்தால் அப்புறம் என்ன ஆவது? புருஷனும், பொண்டாட்டியும், தனித் தனியே அவங்கவங்க வீட்டிலேயே வாழணுமா? லூசுத்தனமா இல்லை இருக்கு?அய்யோ அப்போ புருஷங்க கதி.....
இந்த Insecurity feeling தான் பலரை பெண்ணியவாதிகளை எதிரிகளாகவே பார்க்க தூண்டுகிறது. பெண்ணியம் சொல்ல வருவது ஒரு ஆணிற்கு தனது பெற்றோரின் மீது எந்தளவிற்கு உரிமைகளும், பாசமும் இருக்கிறதோ, அதே உரிமைகளும், பாசமும் தனது பெற்றோரின் மீது வைக்க ஒரு பெண்ணிற்கும் இருக்கிறது. தான் மட்டுமே குடும்பத்தில் மூத்தவனாக வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் ஒரு ஆணிற்கு தனது தம்பி தங்கையை படிக்க வைக்க வேண்டும் என்று எவ்வளவு பொறுப்புகள் இருக்கிறதோ, அதே பொறுப்புகள், அதே நிலையிலிருக்கும் ஒரு பெண்ணிற்கும் இருக்கிறது. இதைப்பற்றி பேசக்கூடாது என்கிறீர்களா?
இப்போ எல்லாம் அப்படி இல்லை, உலகம் மாறிக்கிட்டிருக்கு என்கிறீர்களா? இது எல்லாம் பத்தாது சார். மீறி விட்டுக் கொடுக்கும் ஆண்கள் தியாகியாகச் சித்தரிக்கப் படுவதுதான் கொடுமை.
http://blog.nandhaonline.com
-------------------------------------------------------------------------------------------------------------
//
இதெல்லாம் ஒரு வியாதி. அவ்வளவுதான்.
கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் பூடும்.
கல்யாணம் ஆயிருச்சின்னா இந்த மாதிரி பதிவு போடுவாங்கன்றீங்க.
ஒண்ணு பதிவு போடக்கூட சுதந்திரம் இல்லாம பதிவுலக விட்டு காணாம போய்டுவாங்க.
இல்லாட்டி எதாவது ஒரு மூலையா இருந்து வைஃபாலஜி, லைஃபாலஜின்னு கதறிக்னு இருப்பாங்க
//
:-))))))
-------------------------------------------------------------------------------------------------------------
//
ஆண்கள் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து இருக்க ஒருக்காலும் ஒத்துக் கொள்வதில்லை. பெண்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் அடம் பிடித்தால் அப்புறம் என்ன ஆவது?
//
அப்புறம் என்ன மயி**க்கு கல்யாணம் பண்ணிக்கிறாங்க ?
இந்த மாதிரி கொள்கை இருக்குறவங்க கல்யாணம்ங்க்கிற பந்தத்துக்கு வரக்கூடாது. அவங்களுக்கெல்லாம் லிவிங் டு கெதர் தான் சரிப்படும்.
புடிச்சிருக்கா இரு இல்லியா போய்கிட்டே இரு.
-------------------------------------------------------------------------------------------------------------
//
ஆண்கள் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து இருக்க ஒருக்காலும் ஒத்துக் கொள்வதில்லை. பெண்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் அடம் பிடித்தால் அப்புறம் என்ன ஆவது?
//
அப்புறம் என்ன மயி**க்கு கல்யாணம் பண்ணிக்கிறாங்க ?//
புரியலை யாரைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கிறீர்கள்? பெண்ணியவாதிகளைப் பார்த்தா???
ஏன் இவ்வளவு கோபம்??? விளக்குங்கள் பதில் சொல்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment