Wednesday, November 21, 2007

மும்பை பெண்கள் அழகானவர்கள் !!!!

மும்பை பெண்கள் அழகானவர்கள்.
அவர்களுக்கு திறந்த மனது. எதையும் மறைக்கத் தெரியாது.
இந்த ஒரு வாரகாலத்தில் அலுவலக வேலையாய் மும்பையை சுற்றியதில் மும்பை பெண்களைப் பார்த்து வியந்து போனேன்.
எப்போது வேண்டுமானாலும் கழண்டு விழலாம் போல ஒரு ஜீன்ஸ். கவர்ச்சிகர வாசகங்கள் பொறித்த டாப்ஸ். இரண்டிற்கும் இடைப்பட்ட இடைப்பிரதேசத்தை காலியாக வைத்து மனதை காலிசெய்தார்கள்.
இன்றோடு அலுவலக வேலை முடிந்தது. சென்னை திரும்ப வேண்டும். சே..

தாதர் எக்ஸ்பிரஸ்ஸின் S7 கோச்சின் முன் நின்று கொண்டிருந்தேன் நான். வெளியே ஒட்டியிருந்த பெயர்ப்பட்டியலில் எனது சகபயணிகளை பார்க்க பார்வையை ஓட்டினேன்.
சென்னையிலிருந்து மும்பை வந்தபோது பெட்டிமுழுவதும் ஆண்கள். கடலை வாங்கி கொறித்துக்கொண்டு வந்தேன். இந்தமுறையாவது கடலை சாகுபடிக்கு வாய்ப்புகள் இருக்குமா.

53. நாராயண் ஸ்வாமி (ஆண் 27) - (நான்தான். 27 வயது நவநாகரீக இளைஞனின் பெயர் நாராயண் ஸ்வாமி. என்ன கொடுமை நாராயண்.)
54. ரங்காச்சாரி (ஆண் 55) - எவனாயிருந்தா எனக்கென்ன.
55. கோவிந்தன் (ஆண் 42) - இன்னொரு எவனாயிருந்தா எனக்கென்ன.
56. குமாரஸ்வாமி (ஆண் 46) - சே. நாட்டுல கொசுத்தொல்லை தாங்க முடியலைடா. மருந்தடிச்சு கொல்லுங்கப்பா.
57. பர்வதம்மாள் (பெண் 62) - பாட்டிங்க எல்லாம் மும்பையில இருந்து சென்னை போகணும்னு யாரு இங்க அழுதா.
58. அனுஷ்கா (பெண் 19) - வாவ் !!! ஜாக்பாட். அழகான பெயர். எனது அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள்.

அனுஷ்கா. எப்படி இருப்பாள் அந்த மும்பை தேவதை. பெட்டியில் ஏறி எனது இருக்கையை தேடினேன். மூன்று ஆண்கள் மட்டும் இருந்தார்கள். எங்கே அந்த பாட்டியும் பியூட்டியும்.

எனது சன்னலோர இருக்கையில் அமர்ந்து "ஸ்டார் டஸ்ட்" இதழை பிரித்தேன். அதோ அந்த பாட்டியும் பியூட்டியும். எனது அடிவயிற்றில் பறந்த பட்டாம் பூச்சிகள் சட்டென்று பாரதிராஜாவின் வெள்ளுடை தேவதைகளாக மாறி சுற்றி வருவதாக உணர்ந்தேன். அவள் அழகை.. என்ன சொல்வது. இந்த பெட்டியில் பயணிக்க இருப்பதன் மூலம் பிறவிப்பயன் அடையவிருப்பதாக உணர்ந்தேன்.

அவள் என் எதிர் சன்னலில் அமர்ந்தாள். என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். தொடர்ந்து "ஸ்டார் டஸ்ட்" படிப்பதாக காட்டிக்கொண்டேன்.

ரங்காச்சாரிதான் பேச்சை ஆரம்பித்தார். எங்கே போகிறீர்கள் என்று பாட்டியை கேட்டார்.

கதை ஆரம்பித்தது. பாட்டி சென்னையையே இதுவரை பார்க்காத தன் பேத்தியை சென்னைக்கு முதன்முறையாக அழைத்து செல்வதையும்.. பேத்தி படிக்கும் கல்லூரியின் கோடைவிடுமுறை காலம் என்பதையும் சொல்ல..

ரங்காச்சாரி தமது கவர்ண்மெண்ட உத்யோக விஷயமாக மும்பை வந்ததை சொல்ல... மற்ற இருவரும் பேச்சில் ஈடுபட அவர்களும் கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் என தெரியவந்தது. (சே. மீண்டும் கொசுத்தொல்லை).

அந்த பெண் வாயைத் திறக்கவில்லை. நானும்.. அவள் தன் கடைக்கண்ணால் என்னை அவ்வப்போது பார்ப்பது போன்ற உணர்வு. ரயில் ஆகாயத்தில் பறந்து செல்வது போல் உணர்ந்தேன்.

எப்படி இவளிடம் பேச்சை ஆரம்பிப்பது. தவறாக நினைப்பாளோ. சே. சே. மும்பை பார்ன் அண்டு பிராட் அப்.... பிராட் மைண்டட் பீப்பிள் யூ நோ. பேச ஆரம்பிக்க வேண்டியதுதான்.

ஸ்டார் டஸ்ட்டை மூடி வைத்தேன். பேச்சை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்.

"அங்கிள். அந்த மேகசினை தர்றீங்களா."

"என்னது".

"ஸ்டார் டஸ்ட். தர்றீங்களா. படிச்சிட்டு தர்றேன்."

கொடுத்தேன். மேலேறி எனது அப்பர் பர்த்தில் படுத்துக் கொண்டேன் "அங்கிளாம். அங்கிள்.".

ஆங். அப்புறம் என்ன சொல்ல வந்தேன்.
மும்பை பெண்கள் அழகானவர்கள்.
ஆனால் நாகரீகம் தெரியாதவர்கள்.

23 comments:

said...

//ஆங். அப்புறம் என்ன சொல்ல வந்தேன்.
மும்பை பெண்கள் அழகானவர்கள்.
ஆனால் நாகரீகம் தெரியாதவர்கள்./


இப்பிடிதான் முடிக்க போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... ஏன்னா எனக்கும் நிறையதடவை சேம் பிளட்... :(

பெங்களூரூலே இருந்து இப்பிடியெல்லாம் புலம்ப வேண்டியதாயிருக்கு... :(-------------------------------------------------------------------------------------------------------------
said...

நமக்கு கதையே வேற, தம்பின்னு சொல்லி மானத்தை வாங்கிடுவாங்க..-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
இராம்/Raam said...

இப்பிடிதான் முடிக்க போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... ஏன்னா எனக்கும் நிறையதடவை சேம் பிளட்... :(

பெங்களூரூலே இருந்து இப்பிடியெல்லாம் புலம்ப வேண்டியதாயிருக்கு... :(
//
//
ILA(a)இளா said...
நமக்கு கதையே வேற, தம்பின்னு சொல்லி மானத்தை வாங்கிடுவாங்க..
//
:-))))))))))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

இராம்/Raam said...
//இப்பிடிதான் முடிக்க போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... ஏன்னா எனக்கும் நிறையதடவை சேம் பிளட்... :(
பெங்களூரூலே இருந்து இப்பிடியெல்லாம் புலம்ப வேண்டியதாயிருக்கு... :(//


நம்ம அரசியல் பொது வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா :)))ILA(a)இளா said...
//நமக்கு கதையே வேற, தம்பின்னு சொல்லி மானத்தை வாங்கிடுவாங்க..//


அண்ணே. இளா அண்ணே..

மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா கேட்டு சொல்லுங்க.
உங்களுக்கே இது ஓவரா தெரியலை :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
இருந்தாலும் அங்கிள் ஓவர்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரெண்டு அங்கிள், ஒரு தம்பி - இன்னும் என்ன கதை எல்லாம் வரப் போகுதுன்னு பார்க்கலாம்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

மங்களூர் சிவா சிரிப்பை சிந்தி சென்றமைக்கு நன்றி :))

தம்பி said...
//அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
இருந்தாலும் அங்கிள் ஓவர்.//

என்ன செய்யறது தம்பி...
எனக்கு மூணு வயசா இருந்தப்ப என்னுடைய முப்பது வயசு மாமா ஒருத்தரை "தாத்தா" ன்னு கூப்பிட்டேனாம்.
அந்த பாவம்தான் என்னை மட்டும் இல்லை என் கதையில வர்ற காரெக்டர்களை கூட துரத்துது.
என்ன பரிகாரம்னே தெரியலை :)))


இலவசக்கொத்தனார் said...
//ரெண்டு அங்கிள், ஒரு தம்பி - இன்னும் என்ன கதை எல்லாம் வரப் போகுதுன்னு பார்க்கலாம்.//

ஆமா கொத்தனாரே. நீங்க எப்படி. மார்க்கண்டேயரோ :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

உண்மையை சொன்னா ரொம்ப பீலிங் விடுருங்களே.
ஒரு உண்மை தெரியுங்களா , மும்பை பொன்னுங்க ரொம்ப smart. அதான் முன்னாடியே உங்களை அங்கிள்ன்னு சொல்லி கடலை சாகுபடி செய்யிறதில் இருந்து எஸ்கேப் ஆகிடுச்சு-------------------------------------------------------------------------------------------------------------
said...

த்சு..த்சு...அங்கிள், நீங்க ரொம்பப் பாவம்..

நாங்கள்லாம் அந்தக் காலத்துல.... (யாருப்பா, அங்கே?? நான் பாய்ஸ் காலேஜுல படிச்சத இங்கே வந்து சம்பந்தம் இல்லாமே சொல்லிகிட்டு...நான்சென்ஸ்)-------------------------------------------------------------------------------------------------------------
said...

பாப்பா உண்மையைச்சொன்னதுக்கு என்னாபா இவ்வளோ மனத்தாங்கல்:-)))

இங்கே ஒரு 70 வயசு நம்மளை ஆ.....ண்ட்டீன்னு கூப்புட்டுச்சு:-))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)))....

//இலவசக்கொத்தனார் said...
ரெண்டு அங்கிள், ஒரு தம்பி - இன்னும் என்ன கதை எல்லாம் வரப் போகுதுன்னு பார்க்கலாம்.//

நான் எதுவும் சொல்லலப்பா :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

Anandha Loganathan said...
//உண்மையை சொன்னா ரொம்ப பீலிங் விடுருங்களே.
ஒரு உண்மை தெரியுங்களா , மும்பை பொன்னுங்க ரொம்ப smart. அதான் முன்னாடியே உங்களை அங்கிள்ன்னு சொல்லி கடலை சாகுபடி செய்யிறதில் இருந்து எஸ்கேப் ஆகிடுச்சு
//


உண்மையை யார் கேட்டார்கள்.

அந்த அட்டு மும்பை ஃபிகரை (சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்) ஆகா ஓகோ என்று அந்த ஆண் வர்ணிக்கவில்லையா.

பொய்தான் காதலின் அடிப்படை.

நீதான் இரண்டாவது கிளியோபாட்ரா என்று ஆண் சொல்வதும் அதை ஏற்றுக்கொண்டு (!) பெண் சிணுங்குவதும்....

உண்மையை யார் கேட்டார்கள் ???


நன்றி ஆனந்த லோகநாதன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

துளசி கோபால் said...
//பாப்பா உண்மையைச்சொன்னதுக்கு என்னாபா இவ்வளோ மனத்தாங்கல்:-)))
இங்கே ஒரு 70 வயசு நம்மளை ஆ.....ண்ட்டீன்னு கூப்புட்டுச்சு:-))))
//

வருக துளசி கோபால் அவர்களே..

70 வயசுக்கு ஆண்ட்டி என்றால் உங்களுக்கு வயசு என்ன ஒரு 95 இருக்குமா ?

ஜஸ்ட் ஃபார் ஜோக். :)))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

தஞ்சாவூரான் said...
//த்சு..த்சு...அங்கிள், நீங்க ரொம்பப் பாவம்..

நாங்கள்லாம் அந்தக் காலத்துல.... (யாருப்பா, அங்கே?? நான் பாய்ஸ் காலேஜுல படிச்சத இங்கே வந்து சம்பந்தம் இல்லாமே சொல்லிகிட்டு...நான்சென்ஸ்)
//

ஆமாங்க ரொம்ப பாவம் அந்த நாராயண்ஸ்வாமி. :)

நாங்கள்லாம் அந்தக் காலத்துல.... ஓ நீங்க தாத்தாவா :)))

பாய்ஸ் காலேஜா. அப்ப கேர்ள்ஸ் கிடையாதா. கஷ்டம்தான் :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நொந்து நூலாகி இருக்கிறீங்கள். :(:(-------------------------------------------------------------------------------------------------------------
said...

உண்மை கொஞ்சம் கசக்கவே செய்யும்:)))))))

/////"இப்பிடிதான் முடிக்க போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... ஏன்னா எனக்கும் நிறையதடவை சேம் பிளட்... :(

பெங்களூரூலே இருந்து இப்பிடியெல்லாம் புலம்ப வேண்டியதாயிருக்கு... :("////


உங்களையும் அங்கிள் என்றா கூப்பிடுறாங்க:) என்ன கொடுமை இது?-------------------------------------------------------------------------------------------------------------
said...

சேம் ப்ளட்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\குசும்பன் said...
உண்மை கொஞ்சம் கசக்கவே செய்யும்:)))))))\\\

என்னணே இப்படி பட்டுன்னு உங்க வயசை சொல்லிட்டிங்க :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

பொண்ணுங்க ரொம்ப உஷராத்தான் இருக்காங்க!

அண்ணா ன்னு கூப்பிடுறது போய். இப்போ அங்கிள் ன்னு கூப்பிடுறாங்களா,
இதுவும் நல்ல ஐடியாவா இருக்குதே!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நளாயினி said...
//நொந்து நூலாகி இருக்கிறீங்கள். :(:(//

ஆமாம் நளாயினி அவர்களே. கதாநாயகன் கொஞ்சம் நொந்து நூலாத்தான் போய் இருக்கிறான்.

:)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

குசும்பன் said...
//உண்மை கொஞ்சம் கசக்கவே செய்யும்:)))))))//

ஆம். குசும்பன் அவர்களே. இருந்தாலும் உண்மையையே பேசும் ஏற்றுக் கொள்ளும் மனம் மிகவும் அழகானது.
சத்ய மேவ ஜெயதே !!


சீனு said...
//சேம் ப்ளட்...//

சீனு உண்மை சொல்லும் உங்கள் மனம் மிகவும் அழகானது.

வாய் "மை"(லிப்ஸ்டிக்)யை விட வாய்மையே சிறந்தது. :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத் said...
\\குசும்பன் said...
உண்மை கொஞ்சம் கசக்கவே செய்யும்:)))))))\\\

//என்னணே இப்படி பட்டுன்னு உங்க வயசை சொல்லிட்டிங்க :)
//

கோபிநாத்.
உண்மை உலவும் உள்ளமே உள்ளத்தில் சிறந்த உள்ளம். அதில்தான் என்றும் இளமை துள்ளும் :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

Divya said...
//பொண்ணுங்க ரொம்ப உஷராத்தான் இருக்காங்க!

அண்ணா ன்னு கூப்பிடுறது போய். இப்போ அங்கிள் ன்னு கூப்பிடுறாங்களா,
இதுவும் நல்ல ஐடியாவா இருக்குதே!
//

அச்சச்சோ. நமக்கே தெரியாம நாம ஒரு ஐடியாவை சொல்லிக் கொடுத்துட்டமா. :))))-------------------------------------------------------------------------------------------------------------